: மத்திய
கிழக்கு :
ஈராக்
Political lessons of the war in Iraq
ஈராக்கில் போர் தொடர்பான அரசியல் படிப்பினைகள்
Statement of the World Socialist Web Site
Editorial Board
11 April 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
பின்வருவது இந்த வார முடிவில் ஐரோப்பா முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்
போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு வரும் உலக சோசலிச வலைதள ஆசிரியர் குழுவின் அறிக்கையின்
தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். அது உலக சோசலிச வலைதளத்தில் ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் பிடிஎப் கோப்பாக
போடப்பட்டிருக்கிறது.
பாக்தாத் மீது முதல் குண்டு விழுந்து மூன்று வாரங்களின் பின்னர், ஈராக் மீது தொடுக்கப்பட்ட
போர், வரலாற்று பரிமாணத்தின் குற்றவியல் நிறுவனம் என்பதில் இனியும் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது.
ஆயுத்தளவாடத்திலும் சுடு திறனிலும் அத்தகைய பெரும் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு
போர் நடைபெறுவது அருமையாக இருக்கிறது. ஒரு புறம் நவீன உயர்- தொழில் நுட்ப ஆயுதத்துடன் ஆயுதபாணி ஆக்கப்பட்ட
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் வானில் சர்ச்சைக்கிடமற்ற மேலாதிக்கத்தில் தங்கி இருக்கக்கூடியாதாக இருந்தனர்.
மறுபுறம் 1960களின் காலத்திற்கு பின்னால் திரும்பும் டாங்கிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் பழைய கால ஆயுதங்கள்
தரிக்கப்பெற்ற ஈராக் வீரர்கள். ஆக்கிரமிப்பின் பலியான ஈராக்கிய இராணுவ மற்றும் சிவிலியன்களின் நம்பத்தகுந்த
எண்ணிக்கை விபரங்களை இன்னும் ஒருவரும் வழங்கவில்லை, ஆனால் அவைகள் பத்தாயிரக் கணக்கில் இருக்கும் என்பதில்
ஐயம் இருக்க முடியாது. ஈராக்கில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது ஒரு போர் என்பதைவிட ஒரு படுகொலை ஆகும்.
இப்போரை தொடங்குவதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் முற்றிலும் ஆதாரமற்றது என
நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈராக் அதன் அண்டை அயலாரையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துகிறது என கூறப்படும் "பேரழிவுகர
ஆயுதங்கள்" பற்றிய மிகச்சிறு அடையாளம் கூட இல்லை. போரில் ஈராக் அரசாங்கம் ஒவ்வொன்றையும் இழக்க
இருக்கையில், அத்தகைய ஆயுதங்களை வைத்திருந்தால் முதலில் அதைப் பயன்படுத்தி இருக்கலாம்.
ஈராக் மக்களுக்கு "ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும்" கொண்டு வருவதற்கு போர்
நடத்தப்படுவதாகக் கூறப்படும் கூற்றானது, நேசப் படைகளின் திடீர் குண்டு வீச்சுக்களால் உடல்கள் துண்டு துண்டாக
வெடித்துச் சிதறியது தொடர்பான படங்களால், அல்-ஜசீரா அலுவலகம் போன்ற சுதந்திரமான செய்தி ஊடகங்களை
திட்டமிட்டே இலக்காக வைத்தலால், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக போருக்குப் பின்னர் அந்நாட்டை இராணுவ
ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்காக வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
"ஈராக் இடைக்கால நிர்வாகம்" குவைத்தில் ஆடம்பர மாளிகையில் அழைப்பிற்காக
காத்துக் கொண்டிருக்கின்றது. அது அமெரிக்க பெரு முதலாளிகள் மற்றும் ஈராக்கிற்கு எதிரான ஒரு போரை வருடக்கணக்காக
கோரிவந்த பென்டகனை சுற்றிய நவீன -பழமைவாத வட்டாரங்களுடனும் நெருங்கிய தொடர்புகளை உடைய கிட்டத்தட்ட
சிறப்பாகாக உயர் அந்தஸ்திலுள்ள அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளைக் கொண்டிருக்கிறது.
பாதுகாப்பு செயலாளர் ரொனால்ட் ரம்ஸ்பீல்ட், அவரது துணை செயலாளர் போல் வொல்போவிட்ஸ் மற்றும் பென்டகன்
ஆலோசகர் ரிச்சார்ட் பேர்லே ஆகியோர் இஸ்ரேலில் உள்ள வலதுசாரி லிக்குட் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை
அனுபவித்து வருகின்றனர் மற்றும் அரபு உலகம் முழுவதும் வெறுக்கப்பட்டு வருகின்றனர்.
இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் மற்றும் அமெரிக்க உயர் தளபதி டோமி
பிராங்ஸ்-க்கு (Tommy Franks) நேரடியாகக்
கீழ்ப்படிந்து இருக்கும் முன்னாள் தளபதி ஜே கார்னர், ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் பாலஸ்தீனியர்களை அது
நடத்துகின்றவிதத்தில் அளவுக்கு அதிகமாய் கட்டுப்பாடாக இருக்கின்றதற்காக விமர்சித்திருந்தார். ஆக்கிரமிக்கப்பட்ட
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவக் கொள்கை பற்றி அளவுக்கதிகமாக கட்டுப்பாடுடையது என விமர்சித்திருந்தால்,
ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கில் மக்களுக்காக எதை அவர் சேமித்து வைத்திருக்கிறார் என்பதை ஒருவர் கற்பனை செய்து
பார்க்க முடியும்.
இடைக்கால நிர்வாகத்திற்கான மிகவும் முக்கியமான பணி, ஈராக் எண்ணெய் நடவடிக்கையால்
வரும் நிதியால் செலவழிக்கப்படும், இலாபகரமான ஒப்பந்தங்களை வழங்குவது, அழிவுற்ற நாட்டை மீளக் கட்டி
எழுப்புதல் மற்றும் எண்ணெய் தொழிற்துறையை தனியார்மயமாக்குதல் ஆகும். ஈராக்கின் எண்ணெய் உற்பத்திக்கு பொறுப்பாக
வைக்கப்பட இருப்பவர் முன்னாள் ஷெல் மேலாளர் பிலிப் கரோல்
(Former Shell manager Philip Carroll) ஆவார். அவரது நியமனமே நாட்டின் எண்ணெய்
வளத்திலிருந்து ஈராக் மக்கள் பயனடைவர் என்ற கூற்றை கேலிக்கூத்தாக்குகின்றது.
அத்தகைய அபிவிருத்திகள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, ஏழைநாட்டை, மற்றும் நீண்ட
காலத்தில் முழு பிராந்தியத்தையும் சூறையாடுவதையும் கீழ்ப்படுத்துவதையும் நோக்கங்கொண்ட பழைய காலனித்துவ
போரைவிட குறைவான எதுவும் இல்லை என்ற உண்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றன. ஈராக் பக்கத்திலிருந்து எந்தவிதமான
அச்சுறுத்தல் பற்றிய குறிகாட்டல் இல்லாதபோதும் அது தொடுக்கப்பட்டது. போரானது பின்னர் பொய்மைப்படுத்தப்பட்ட
ஆதாரம் மற்றும் சூழ்ச்சி மிக்க சாக்குப்போக்குகள் இவற்றுடன் நியாயப்படுத்தப்பட்டது. அது சர்வதேச சட்டத்தை
மீறுகின்ற ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகும்.
போருக்கான பொறுப்பை பகிர்ந்துகொள்ளும் ஐரோப்பிய அரசாங்கங்கள்
ஐரோப்பிய அரசாங்கங்கள் குறிப்பாக பிரான்சும் ஜேர்மனியும் இந்த பேரழிவுகர குற்றத்திற்கான
பொறுப்பை பகிர்ந்துகொள்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் அவை போரை நிராகரித்த போதிலும், நடைமுறையில்
அமெரிக்க-பிரிட்டிஷ் போர் முயற்சிகளுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரித்துள்ளன.
ஜேர்மன் அரசாங்கம் ஜேர்மன் வான் பகுதியில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்விமானங்கள்
பயன்படுத்துவதிலிருந்து தடைசெய்ய மறுத்துவிட்டது மற்றும் போரை நிறைவேற்றுவதற்காக ஜேர்மன் மண்ணிலுள்ள நேச
தளங்களை (Allied bases) பயன்படுத்த அனுமதித்திருக்கிறது.
அவை வெளிப்படையாக ஜேர்மன் அரசியற்சட்டத்திற்கு முரணானதாக இருப்பினும் அத்தகைய சலுகைகளை அவர் செய்துள்ளனர்.
ஜேர்மன் அரசியற் சட்டம் ஆக்கிரமிப்புப் போரை மேற்கொள்ளுதல் மற்றும் அதற்கான தயாரிப்புக்கு எந்த ஆதரவும்
விசாரணைக்குரிய குற்றம் என்று கருதுகின்றது. அரசியற் சட்டத்தில் காணப்படும் வார்த்தைகளில், ஆக்கிரமிப்புப்
போரை நிறைவைற்றுதற்காக ஜேர்மன் எல்லைப்பகுதிகளை அனுமதிப்பது சட்டவிரோதமாகும். எடுத்துக்காட்டாக,
1973ல், இஸ்ரேல் மற்றும் அதன் அரபு அயலார்களுக்கு இடையிலான யோம் கிப்புர் (Yom
Kippur) போரின்பொழுது ஜேர்மன் வசதிவாய்ப்புக்களைப் பயன்படுத்துவதை, வில்லி பிராண்ட் அரசாங்கம்
தடுத்தபொழுது, அது அரசியற் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அப்படிச்செய்தது. பிரெமன் துறைமுகத்தில்
(Bremerhaven) அமெரிக்க போர் தளவாடங்களை
ஏற்ற முயன்ற மூன்று இஸ்ரேலிய சரக்குக் கப்பல்கள் ஜேர்மன் எல்லைப்புற நீர்ப்பகுதிகளில் இருந்து அகலுமாறு
உத்தரவிடப்பட்டது.
ஜேர்மன் வான்பகுதியைப் பயன்படுத்தலை மற்றும் ஜேர்மன் மண்ணில் தளங்களைப் பயன்படுத்தலை
அனுமதி மறுத்தல் அமெரிக்க போர் எந்திரத்திற்கு கணிசமான அளவு கஷ்டங்களை உருவாக்கி இருந்திருக்கும்- மற்றும்
அமெரிக்காவிற்கு உள்ளேயே போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு சக்திமிக்க ஊக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பதில்
ஐயம் இருக்க முடியாது.
போர் தொடங்கியதன் பின்னர் இருந்து, பாரிஸ் மற்றும் பேர்லின் தங்களின் வாயளவிலான
ஆட்சேபனைகளை கைவிட்டுவிட்டனர் மற்றும் புஷ் நிர்வாகத்தால் தெளிவாகக் கூறப்பட்டவாறு போரின் நோக்கங்களுக்கு
அங்கீகாரம் அளித்தனர், பாக்தாதில் "ஆட்சி மாற்றத்திற்கு" ஆதரவளித்தனர் --அவர்களின் முந்தைய, போர் ஐக்கியநாடுகள்
சபையின் சாசனத்தை அத்துமீறல் என அவர்களின் முந்தைய கண்டித்தல்கள் இருப்பினும் இதைச் செய்தனர்.
பேர்லினில், ஜேர்மன் வெளிவிகார அமைச்சர் ஜோச்கா பிஷ்சர் (Joschka
Fischer) அவரது பிரிட்டிஷ் சரிநிகர் அலுவலர், ஜாக் ஸ்ட்ரோ (Jack
Straw) இடம் பின்வருமாறு குறிப்பிட்டார்: "ஆட்சி எவ்வளவு விரைவில் சாத்தியமோ அவ்வளவு விரைவில்
பொறிந்து விடும் என நாம் நம்புகிறோம்." அடுத்தநாள் உத்தியோக ரீதியான ஒரு அறிக்கையில் அதிபர் ஷ்ரோடர்,
"சர்வாதிகாரத்தை வெல்வதுடன், ஈராக் மக்கள் எவ்வளவு விரைவாகவோ அவ்வளவு விரைவில் அமைதி, சுதந்திரம்
மற்றும் சுயநிர்ணயம் பற்றிய ஒரு வாழ்க்கைக்கான அவர்களது நம்பிக்கைக்ளைப் பெறக்கூடியவர்களாக இருப்பார்கள்"
என்ற அவரது ஆவலை வெளிப்படுத்தினார். இந்த அறிக்கை அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு பிரமுகரின்
அங்கீகாரத்தையும் வெல்வதற்கு கணிப்பிடப்பட்ட ஒரு அறிக்கை ஆகும்.
பிரெஞ்சு தலைமையின் பங்கைப் பொறுத்தவரை, அரசின் தலைமை பிரிட்டிஷ் ராணிக்கு
விடுத்த கடிதத்தில் சண்டையிடும் நேசப்படை துருப்புக்களுடன் தனது ஐக்கியத்தை வெளிப்படுத்தியது. அக்கடிதத்தில், ஜனாதிபதி
ஜாக் சிராக் பிரான்சில் உள்ள பிரிட்டிஷ் போர்வீரர் கல்லறைத் திடலை சேதப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தார்.
"உங்களது படைவீரர்கள் எல்லாம் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில், பிரெஞ்சு மக்களது சிந்தனைகள் எல்லாம்
இயல்பாகவே அவர்களுடன்தான் உள்ளது என்பதை என்னைக் கூற அனுமதிக்கவும்."
பேர்லின் மற்றும் பாரிஸைப் பொறுத்தவரையில், நேட்டோவில் அமெரிக்காவுடனான
அவர்களின் இராணுவக் கூட்டு, அவர்களின் கூட்டுப் பொருளாதார உறவுகள் --சுருங்கக் கூறின், அவர்களின் வெளிவிவகாரக்
கொள்கை நலன்கள்-- அத்தகைய பிரச்சினைகள் சர்வதேச சட்டம் மற்றும் ஈராக் மக்களின் தலைவிதி என்பதையும்
விட மிக முக்கியமானவையாக இருந்தன. ஷ்ரோடர், அவரது அரசாங்க அறிக்கையில் கூறியவாறு: "ஈராக் மீது இப்பொழுது
போரைத் தொடுத்துக் கொண்டிருக்கும் அரசுகள், கூட்டணி பங்காளர்கள் மற்றும் நட்பு நாடுகள் என்பதை நாம் மறந்துவிடக்
கூடாது."
அமெரிக்க அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புப் போக்கிற்கு ஷ்ரோடர் மற்றும் சிராக்கால் எடுக்கப்பட்ட
நிலைப்பாடு, அடோல்ப் ஹிட்லரின் விரிவாக்க குறிக்கோள்களை நோக்கிய 1930களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சாந்தப்படுத்தும்
கொள்கையை நினைவுபடுத்திக் காட்டுகின்றது. பிரிட்டிஷ் பிரதமர், நெவில்லே சாம்பர்லேன் (Neville
Chamberlain), ஜேர்மன் ரெய்ன்லாண்ட் (Rhineland)
மற்றும் ஆஸ்திரியாவை ஜேர்மனி ஆக்கிரமித்தல், பின்னர் சுடெட்டன்லாண்ட் (Sudetenland)
மற்றும் செக்கோஸ்லோவேகியாவை இணைத்துக் கொள்ளல் சம்பந்தமான சலுகைகளும் சமரசமும் இணைந்த
ஒரு சேர்க்கை, ஜேர்மன் சர்வாதிகாரியைக் கட்டுப்படுத்த போதுமானவை என்று சிந்தித்தார். உண்மையில், அத்தகைய
சலுகைகள் உலக வல்லரசு மற்றும் உலகை வென்று கைப்பற்றல் பற்றிய ஹிட்லரின் மாயைகளை ஊக்கப்படுத்தவே சேவை
செய்தன.
வெள்ளை மாளிகையில் மேலாதிக்கம் செய்யும் வலதுசாரி கும்பலானது முன்னணி ஐரோப்பிய
அரசாங்கங்களின் சமரச நிலைப்பாட்டுக்கு அதேபாணியில் பதில் அளித்துள்ளது. ஏற்கனவே சிரியா, ஈரான் மற்றும் வடகொரியாவிற்கு
மற்றும் பகைவர்களின் பட்டியலுக்கு புதிய அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளதில், ஐரோப்பா தன்னும் உட்பட --அவை
தேவைப்படும்பொழுது நீட்டிக்கப்பட முடியும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தி உள்ளது.
வெளிப்படையாக நன்கு மூடிமறைக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒன்றில், கடந்த செவ்வாய்
அன்று பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் உடன் சேர்ந்து நடத்திய கூட்டு செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி புஷ்
அறிவித்தார்: "ஐயத்திற்கு இடம் இல்லாத வகையில், நான் என்ன சொல்கிறேன் என்பதை அர்த்தப்படுத்துகிறேனா
இல்லையா என்பது பற்றி இங்கு ஐரோப்பாவில் சில ஐயுறவாதம் இருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என்பதை சதாம்
ஹூசேன் நன்கு அறிந்துள்ளார்."
வெள்ளை மாளிகை சர்வதேச விதிமுறைகளை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினது
முடிவுகளை அலட்சியப்படுத்த முடிந்திருப்பதுடன் இயலமைதி கொள்ளல், ஈராக்கின் தலைவிதியை தீர்மானிக்க அகந்தையுடன்
ஆரம்பித்திருப்பது மற்றும் அதன் நெருங்கிய வர்த்தக கூட்டாளிகள் மத்தியில் நாட்டின் வளங்களைப் பிரிப்பது இவை அந்த
ஆட்சியை உலக மேலாதிக்கத்தை நோக்கிய அதன் அபிலாஷைகளை ஊக்கப்படுத்துவதற்கு மட்டுமே சேவை செய்தது.
ஐரோப்பிய அரசாங்கங்கள் போருக்குப் பின்னர் ஒரு வகை இயல்புநிலை
திரும்புதலுக்கான நம்பிக்கையை வைத்திருக்கும் அதேவேளை, அதற்கு நேர்மாறான ஒன்று இடம்பெறப் போகிறது. ஈராக்
மீதான போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்கையை அவாபெருக்க செய்ய மட்டுமே சேவை செய்திருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
போரின் போக்கிலிருந்து ஒரு படிப்பனை பெற வேண்டுமாயின், அது நிலவும் நிறுவனங்கள்
--அரசாங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள்-- எந்தவித மாற்றையும் வழங்குவதற்கு அப்பட்டமான இயலாமை ஆகும்.
அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளில் இருந்து கட்சிகளும் அரசாங்கங்களும் எந்த முடிவும்
பெறவேண்டுமானால் அந்த மட்டத்துக்கு, அது அவர்களின் சொந்த இராணுவமய வேலைத்திட்டத்தை வேகப்படுத்துதல்
மற்றும் பெரும் அதிகார அரசியல் பற்றிய அவர்களின் பின்பற்றலை அதிகரித்தல் ஆகும்.
எடுத்துக்காட்டாக, அதிபர் ஷ்ரோடர் ஈராக் போர் மீதான அவரது அரசாங்கத்தின்
அறிக்கையை பின்வரும் குறிப்புடன் முடித்தார்: "நாம் எமது சொந்த இராணுவ திறமைகளை அக்கறையுடன் மீள
எண்ணிப்பார்க்க வேண்டும்." மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் பிஷ்சர் அறிவித்தார்: "நாம் நமது
இராணுவ ஆற்றலை பலப்படுத்த வேண்டும் என்றால்தான் இந்தக் கோளத்தில் எம்மை சீரியசாக எடுத்துக் கொள்வர்."
ஜேர்மன் கட்சிகளின் ஒளிக் கற்றைகளுக்குள்ளே, எல்லாவற்றுக்கும் மேலாக, முன்னாள்
அமைதிவாத கட்சியான பசுமைக் கட்சி ஐரோப்பிய ஆயுதமயமாக்கலின் மிக விடாப்பிடியான கோட்பாட்டு பரவுரைஞராக
ஆகி இருக்கிறது. அதன் புதிய கொள்கைப்படி, இராணுவ பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒத்துழைப்பிற்கான மிகவும் விவாதிக்கப்பட்ட
திட்டம் ஒரு யதார்த்திற்குள் திரும்ப இருக்கிறது, மற்றும் 60,000 பலமான ஐரோப்பிய தலையீட்டு படையை அமைப்பதற்கான
1999 முடிவு எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு விரைவில் அடையப்பட இருக்கிறது.
இந்த முன்மொழிவு பாரிசில் முழு ஆதரவை பெற்று வருகிறது மற்றும் லண்டனில் உடன்பாட்டிற்கான
அறிகுறிகளை சந்தித்து வருகின்றது. தனது சொந்த அரசியல் எதிர்காலத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு மற்றும் ஈராக்
போருக்கு ஆதரவுதருவதுடன் இணைத்துக் கொண்ட டோனி பிளேயர், அவரது அட்லாண்டிக் கடந்த பெரியண்ணாவை அரவணைத்துக்கொள்வதை
இழப்பதற்கான ஒரு வாய்ப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அத்தகைய இராணுவமயமாக்கல் போக்கு அழிவில்தான் போய் முடியும். அது மறு ஆயுத
மயமாக்கலுக்கான பந்தயத்தை இயக்க தொடங்கியுள்ளது. அது உழைக்கும் மக்கள் மற்றும் சமூக ரீதியாய் முன்னேற்றம்
பெறாதவர்களின் செலவில் நிதியூட்டப்படும். அத்தகைய கொள்கையின் தர்க்கம் தவிர்க்க முடியாதபடி உக்கிரப்படுத்தப்பட்ட
இராணுவ மோதலுக்கு மற்றும் மூன்றாம் உலக யுத்தத்தின் சாத்தியத்திற்கு வழிவகுக்கும்.
இந்த ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான ஒரே வழி, நிலவும் கட்சிகள் மற்றும் அரசியல்
நிறுவனங்களில் இருந்து முற்றிலும் சுதந்திரமாக ஒரு புதிய அரசியல் இயக்கத்தைக் கட்டுவதன் மூலம்தான்.
அமெரிக்கா உள்ளேயும் இடம்பெற்ற சக்திமிக்க எதிர்ப்புக்கள் உள்பட, பெப்ரவரி 15
மற்றும் 16-ன் பெரும் சர்வதேச போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அத்தகைய ஒரு புதிய அரசியல் இயக்கம் நிலவுவதற்கான
அடிப்படையைக் காட்டுகிறது. ஆர்ப்பாட்டங்கள் வரலாற்றில் என்றுமில்லா அளவு பெரிதானவை மற்றும் போருக்கு எதிரான
பரந்த மக்களின் வெளிப்பாடாகும். கோடிக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
ஆயினும், எதிர்ப்பு மட்டுமே போதுமானதல்ல. இவ்வியக்கத்திற்கு ஒரு அரசியல்
நோக்குநிலை மற்றும் முன்னோக்கு தேவைப்படுகின்றது. அது பழைய அரசியல் அமைப்புக்களின் தோல்வியிடமிருந்து
படிப்பினைகளைப் பெறவிருக்கிறது.
இறுதி ஆய்வில், தற்போதைய போர் உலக முதலாளித்துவ அமைப்பின் மையத்தில் உள்ள
தீர்க்க முடியாத முரண்பாடுகளின் உற்பத்தி ஆகும். நவீன உற்பத்தியின் பூகோளத் தன்மை போட்டியிடும் தேசிய அரசுகள்
மற்றும் உற்பத்திச் சாதனங்களின் தனிச்சொத்துடைமை இவற்றுடன் இனியும் பொருந்திப்போக முடியாது.
1914ல் மற்றும் 1939ல் ஜேர்மனி, ஒரு மிகப் பலம் வாய்ந்த ஐரோப்பிய
பொருளாதார அரசு ஆக, இந்த முரண்பாடுகளை தீர்க்க, ஐரோப்பாவை தனது சொந்த மேலாதிக்கத்தின் கீழ் மறு
ஒழுங்கமைக்க விழைந்தது. அது தோல்வி அடைந்தது. இன்றோ, ஐக்கிய அமெரிக்க அரசுகள், மிக சக்திவாய்ந்த
பொருளாதாரம் என்ற வகையில், அதே பணியை எடுத்துக்கொண்டிருக்கிறது -- உலக அளவில் மட்டும்தான். ஈராக்கை
இராணுவ ரீதியாக கீழ்ப்படுத்தலானது, அமெரிக்க பெரு முதலாளிகளது நலன்களில் உலகை மறு ஒழுங்கமைப்பதை
நோக்கிய முதல் அடி எடுப்பாக இருக்கிறது. இந்த முயற்சியும் கூட தோல்விக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய அமெரிக்காவிற்கும் 1939 ஜேர்மனிக்கும் இடையில் ஒரு இணையை வரைவதில்
தயங்கும் எவரும் ஜேர்மனி ஆனது முதலாம் உலக யுத்தத்தில் பின்பற்றிய அதே நோக்கங்களை பரந்த அளவில் இரண்டாம்
உலக யுத்தத்தில் பின்பற்றியது என்பதை மறக்கக் கூடாது. இரண்டாம் வில்ஹெல்ம் (Wilhelm
II) முடியாட்சிக்கும் நாஜிக்கள் கீழான ஜேர்மனிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன,
ஆனால் அவை இரண்டும் அதே பிற்போக்கு வட்டாரங்களின் --நிதி மூலதனம், பெரிய தொழில்துறையினரின் அக்கறைகளை
மற்றும் அரசிலும் இராணுவத்திலும் உள்ள அதி வலதுசாரி சக்திகள்-- நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தன.
தற்போதைய அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க சமுதாயத்தின் மிகப் பிற்போக்கு தட்டினர்
--நவீன பழமைவாதிகள் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாத தட்டினர்கள் இவர்களுடன் சேர்ந்து, கடந்த 20 ஆண்டுகளின்
பங்குச் சந்தைப் பூரிப்பின் பொழுது பெரும் செல்வத்தையும் செல்வாக்கையும் ஈட்டிக் கொண்ட குற்றவாளி நபர்கள்--
இவர்கள் மீது தன்னை தளப்படுத்தி இருக்கிறது. புஷ் கும்பலானது திருடப்பட்ட தேர்தல் மற்றும் அமெரிக்காவிலேயே
ஜனநாயக உரிமைகளை மிதித்துதள்ளியதன் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்தது.
1939ல் ஹிட்லர் விஷயம் போல, 2003ல் புஷ் அமெரிக்க சமுதாயத்திற்குள்ளே உள்ள
பெரும் முரண்பாடுகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு வழிமுறையாக போரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது
மற்றும் உள்நாட்டில் அதிகரித்துவரும் சமூகப் பதட்டங்களை வெளியில் இராணுவவாதமாக முன்னிலைப்படுத்துவதை
நாடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் சமூக துருவ முனைப்படல் தள்ளாடும் வடிவங்களை எடுத்துள்ளன, மிக செல்வம்
படைத்த ஒரு மெல்லிய தட்டினர் வாழ்க்கை மென்மேலும் நிலையற்றதாகி வருகின்ற பரந்த மக்களுடன்
மோதிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த அபிவிருத்திகளுக்கு பழைய சீர்திருத்தவாத அமைப்புக்களிடம் விடை இல்லை. அவைகள்தாமே
வர்த்தகர் நலன்களுடன் மற்றும் தேசிய அரசைப் பாதுகாத்தல் மற்றும் இலாப அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையதாக
இருக்கிறது. புஷ்-ஐ சுற்றி இருக்கும் கும்பல் முதன்மைநிலை அடைந்தது, குறிப்பாக, அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரின்
திவால் நிலையை விளக்கிக் காட்டுகிறது. ஆனால் ஐரோப்பாவில், சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் முன்னாள்
கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட அழுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை அணுகுவதில் வழங்குதற்கு அவற்றிடம் ஒன்றும்
இல்லை என்று காட்டி இருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை வலதுபக்கம் வழுவாது நகர்ந்து கொண்டிருக்கின்றன.
ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமானது, பரந்த உழைக்கும் மக்களை
அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேச, சுதந்திரமான மற்றும் சோசலிச இயக்கமாக கட்டாயம் இருக்க
வேண்டும். அது போர் பற்றிய பிரச்சினையை எரிந்து கொண்டிருக்கும் சமூகப் பிரச்சினைகளுடன் கட்டாயம் ஐக்கியப்படுத்த
வேண்டும்.
உலக சோசலிச வலைதளமானது அத்தகைய இயக்கத்தைக் கட்டும் மற்றும் தேவையான
அரசியல் நோக்குநிலையை வழங்கும் பணியை தனக்கு அமைத்துக் கொண்டிருக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழு மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளினால் உருவாக்கப்பட்ட அது, உலக அபிவிருத்திகள் பற்றிய
நாளாந்த ஆய்வுகளை வழங்குகிறது மற்றும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத் திட்டத்தை அபிவிருத்தி
செய்ய போராடுகின்றது. போர் எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொண்ட அனைவரையும் உலக சோசலிச வலைத்தளத்தைப்
படிக்குமாறும், ஆசிரியர் குழுவிடம் தொடர்பு கொள்ளுமாறும், அதன் கட்டுரைகளையும் அறிக்கைகளையும்
விநியோகிக்குமாறும் மற்றும் தங்களின் சொந்த கட்டுரைகளையும் கருத்துரைகளையும் அனுப்புமாறும் அழைக்கின்றோம்.
சமூக சமத்துவம், ஜனநாயக உரிமைகள், அமைதிக்கான போராட்டம் மற்றும் ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்கான
போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைவரையும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும்
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய பரந்த சோசலிச இயக்கத்தைக் கட்டுவதில் உதவுமாறும் மேலும் நாம்
அழைக்கின்றோம்.
See Also:
சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய
சர்வதேச மாநாடு
கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்
உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின்
சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு
ஈராக்கிற்கு
எதிரான அமெரிக்க போர்: வரலாற்று பிரச்சனைகள்
Top of page
|