World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை உ.சோ.வ.த/சோ.ச.க ஈராக் மீதான அமெரிக்க யுத்தத்துக்கு எதிராக கொழும்பில் பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன 28 March 2003 ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு உலக வரலாற்றில் ஒரு மாற்றமுடியாத திருப்புமுனையாகும். வாஷிங்டன் மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் தனது பரந்த குறிக்கோள்களின் ஒரு பகுதியாக ஈராக் மற்றும் அதன் எண்ணெய் வளங்கள் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஒரு சூறையாடும் ஏகாதிபத்திய யுத்தத்தில் இறங்கியுள்ளது. ஐ.நா. வை புறக்கணிப்பதற்கான புஷ் நிர்வாகத்தின் முடிவானது இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட அனைத்துலக உறவுகளின் முழு அமைப்பையும் விளைபயனோடு சிதறடித்துள்ளது. ஈராக் மீதான யுத்தமானது, அமெரிக்காவை அதன் பெரும் வல்லரசு எதிரிகளுடன் மோதச் செய்யும் மற்றும் மனித குலத்தை மூன்றாவது உலக யுத்தத்துக்குள் மூழ்கச் செய்யும் பூகோள ஆதிக்கத்தை நோக்கிய ஒரு அஜாக்கிரதையான திருப்பத்தின் ஆரம்பம் மட்டுமேயாகும். தற்போதைய யுத்தமானது நீண்டதும் ஆழமாகவும் வேரூன்றியுள்ள நெருக்கடியின் உச்சக்கட்டமாகும். இது தசாப்தகாலங்களாக முதிர்ச்சியடைந்து வந்துள்ளதோடு அதன் மிகவும் தீவிரமான வெளிப்பாடுகளை உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் காண்கின்றது. இதற்கான காரணங்களை முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயேயான அடிப்படை முரண்பாடுகளில் கண்டுகொள்ள வேண்டும். அதாவது, உற்பத்தியின் பூகோளமயமாக்கலுக்கும் காலங்கடந்த தேசிய அரச அமைப்புக்கும், உற்பத்தி வழிவகைகள் மற்றும் இலாப முறையின் உடைமையுரிமையால் பொருளாதார வாழ்க்கைக்கு விலங்கிடப்படுவதற்கும் இடையிலானவையாகும். பெப்பிரவரி 14-16 ம் திகதிகளில் உலகம் பூராவும் மில்லியன் கணக்கானவர்களாலான ஆர்ப்பாட்டங்களில் தனது முன்னிலையை அறிவித்த சக்தி வாய்ந்த பூகோள யுத்த எதிர்ப்பு இயக்கம், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அனைத்துலக ஐக்கியத்தின் ஊடான தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்டவர்களினதும் கடும் முயற்சியை வெளிக்காட்டியது. ஆனால் கண்டனங்கள் மாத்திரம் போதாது. தேவை எதுவென்றால், இராணுவவாதம் மற்றும் யுத்தத்தின் -முதலாளித்துவ அமைப்பையே- மூலவேர்களை மாற்றுகின்ற மூலோபாயமேயாகும். இது, இந்தியத் துணைக்கண்டம் பூராவும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள சமூக அசமத்துவம், வறுமை மற்றும் வேலையின்மையை தூக்கிவீசுவதற்கான போராட்டத்துடன் யுத்தத்துக்கு எதிரான போராட்டத்தையும் ஐக்கியப்படுத்தும், அனைத்துலக தொழிலாள வர்க்கத்தையும் சோசலிச வேலைத்திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு இயக்கத்தை வேண்டிநிற்கின்றது. இந்த விடயங்களை கலந்துரையாடுவதற்காக, உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் கொழும்பில் இடம்பெறவிருக்கும் பொதுக் கூட்டத்திற்கு, ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தை எதிர்க்கும் அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றது. ஏப்பிரல் 7, திங்கள், பி.ப. 4 மணி. பொது நூலக கேட்போர் கூடம் கொழும்பு 7. |