WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Against political censorship and bureaucratic caprice
An open letter from the WSWS Editorial Board to the Attac
movement in Berlin
அரசியல் தணிக்கை மற்றும் அதிகாரத்துவ பச்சோந்தித்தனத்துக்கு
எதிராக
பேர்லின் நகரின் அட்டாக் இயக்கத்திற்கு உலக சோசலிச வலைதள ஆசிரியர் குழுவின் பகிரங்க
கடிதம்
By the Editorial Board
26 March 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
அன்புள்ள ஜான் சீவர்ஸ் (Jan
Sievers ) மற்றும் பேர்லின் அட்டாக் உறுப்பினர்களே!
சென்ற வியாழக்கிழமை 20 மார்ச் 2003 சுதந்திரத்தின் அச்சு (Axis
of Freedom) என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பை சேர்ந்த பெரும்பாலான
உறுப்பினர்கள் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர்குழு உறுப்பினர் 22 மார்ச் 2003- சனிக்கிழமையன்று
திட்டமிடப்பட்டிருந்த பேர்லின் போர் எதிர்ப்பு பேரணியில், உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று இணக்கம்
தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தில் போர் தொடர்புடைய கேள்விகளுடன் சமுதாய பிரச்சனைகளின் முக்கியத்துவத்தையும்
உரையானது கொண்டிருக்கலாம் என இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆயத்தக்கூட்ட நிகழ்ச்சி குறிப்பில் அந்த முடிவு குறித்து குறித்துவைக்கப்பட்டது.
இந்த முடிவிற்கு ஏற்ப மார்ச் 22 திகதி பேரணி ஆரம்பத்தில் "போருக்கு எதிரான பாடசாலை
மாணவர்கள்" சார்பாக ஒரு பிரதிநிதி முதலாவதாகவும், wsws
ஆசிரியர்குழு பிரதிநிதியாக உல்ரிச் ரிப்பர்ட் இரண்டாவது பேச்சாளராக உரையாற்றுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக பசுமைக் கட்சி துணைத்தலைவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஸ்டோபல (Hans-Christian
Ströbele) உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உரைகள் ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேர்லின் அட்டாக் அமைப்பிலிருந்து
கார்ல் பிரடரிக் வாஸ்முத் (Carl-Friedrich Waßmuth)
மற்றும் ஜான் சீவர்ஸ் (Jan Sievers) ஆகியோர்,
உல்ரிச் ரிப்பர்ட் பேசக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள். மற்றும் நீங்கள் இருவரும் அவரை அந்தக் கூட்டத்தில் உரையாற்றுவதை
தடுத்தீர்கள். பேரணியில் விநியோகிக்கப்பட்ட wsws
அறிக்கை பிரதிகளில் கூறியுள்ள அரசியல் கண்ணோட்டம் அட்டாக்கின் கண்ணோட்டத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்று
காரணம் காட்டி இந்த நடவடிக்கையை நீங்கள் நியாயப்படுத்தி இருக்கிறீர்கள்.
குறிப்பாக, wsws
இன் அறிக்கை ஈராக்கில் தற்போது அமெரிக்கா நடத்திவரும் போரை 1939 ஆண்டு போலந்தில் நாஜிக்கள் நடத்திய
போருடன் ஒப்பிட்டு "பொறுப்பற்ற செயல்" என்று வர்ணித்து இருக்கிறது. இந்த கருத்து "முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டது"
என்று வாஸ்முத் கூறினார். இதே கருத்து பேரணியில் தெரிவிக்கப்பட்டால் அந்தக்கருத்து அட்டாக் இயக்கத்திற்கு தீங்கு
விளைப்பது மட்டுமல்ல "அமெரிக்காவிற்கும் முற்றிலும் தவறான ஒரு சமிக்ஞையை அனுப்பிவிடும்" என்று வாஸ்முத் கூறியுள்ளார்.
அங்கு இருந்த சுதந்திரத்தின் அச்சு இயக்கத்தை சேர்ந்த பல உறுப்பினர்கள் ரிப்பேர்ட்
உரையாற்றுவதற்கு ஜனநாயக அடிப்படையில் உடன்பாடு காணப்பட்டதாகவும் அந்த உடன்பாட்டை ஏதோ இரண்டு
அல்லது மூன்று நபர்கள் இரத்து செய்யதுவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்கள் ஆனால் வாஸ்முத்தும் திரு.சீவர்ஸ்சும்
அந்த உரைக்கு தடைவிதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினீர்கள்.
wsws ஆசிரியர் குழு இந்த அப்பட்டமான
அரசியல் தணிக்கையின் மோசமான செயலையும், அதிகாரத்துவத்தின் பச்சோந்தித்தனத்தையும் நிராகரிப்பதுடன் ஜான்ஸ்
சீவர்ஸ் மற்றும் கார்ல் பெட்ரிக் வாஸ்முத் ஆகியோரின் ஜனநாயகத்திற்கு முரணான ஏற்றுக்கொள்ளமுடியாத நடவடிக்கை
சம்பந்தமாக பேர்லின் அட்டாக் அமைப்பிலிருந்து இதற்கான விளக்கத்தை கோருகிறோம்.
நாங்கள் இப்போது இந்தக் கேள்வியை உங்கள் முன்வைக்கிறோம்: 1930 ம் ஆண்டு
செப்டம்பர் மாதம் ஹிட்லர் ஆட்சி போலந்துமீது படையெடுப்பதைப் பற்றி ஒரு குறிப்பை அடிப்படை ஜனநாயக
கொள்கைகளையும் மரபுகளையும் மீறும் அளவு நீங்கள் இவ்வளவு கடுமையான அளவுக்கு நிராகரிப்பது ஏன்?
பொதுக்கூட்ட மேடையில் நீங்கள் இந்தக்கருத்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு முழு சாதகமான
நிலைமைகளும் இருந்தது. அதற்கு பதிலாக, அந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட 40 ஆயிரம் மக்களும் எந்த கருத்தை
கேட்கவேண்டும்? அல்லது கேட்கக்கூடாதா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை நீங்களே எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்,
ஏன்? அதற்கான அடிப்படை என்ன?
அந்த பேரணியில் கலந்து கொண்ட மக்களே அந்தக்கருத்தைப் பற்றி முடிவு செய்துகொள்ள
விடுவதற்கு நீங்கள் முன்வராதது ஏன்? ஜேர்மன் ஜனநாயக குடியரசில்
(GDR)
ஸ்ராலினிசத்தின் முடிவின் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற அரசியல் தணிக்கை முறைகள் பிரன்டன்பேர்க் வாயிலில் (Brandenburg
Gate) முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாதது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரு நாடுகளாலும் ஈராக்கில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு
சர்வதேச சட்டத்தை மீறுகின்ற தெளிவான செயல் என்பதை உலக முன்னணி சர்வதேச சட்டநிபுணர்கள் தெரிவிக்கத்
தயங்கவில்லை. உதாரணமாக, ஜெனிவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நீதிபதிகள் குழு
(International Commission of Jurists -ICJ)
இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் போது ஐ.நா பாதுகாப்பு
சபையின் சம்மதம் பெறாமல் அதன் கட்டளை இல்லாமல் போர் தொடுப்பது அப்பட்டமான மீறல் என அது ஏற்கனவே
தடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த அரசு மற்றும் சர்வதேச சட்டங்களுக்குமான நிபுணரான
Dietrich Murswiek (Freiburg),
ஜேர்மன் நாட்டு பத்திரிகை
Süddeutsche Zeitung
இல் கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார். "ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி
இல்லாமல் புஷ் நிர்வாகம் போருக்குச் சென்றிருப்பது சம்பந்தமாக சர்வதேச சட்டத்தில் 'தெளிவற்ற ஒரு பகுதியாக'
இருப்பதாக பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கும் கருத்துக்கள் தவறானது. ஐ.நா பாதுகாப்பு சபையில் போருக்கு
அனுமதி வழங்கும் புதிய தீர்மானம் திட்டவட்டமாக நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் ஈராக் மீதான போர் தடை
விதிக்கப்பட்ட ஆக்கிரமிப்புப்போராக கருதப்படும். நடைமுறையில் உள்ள சர்வதேச சட்டப்படி அது ஒரு குற்றவியல்
நடவடிக்கையாகும்."
பாக்தாத் நகரில் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
மற்றும் இதர நகரங்களிலும் இதே போன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது ஈராக் விமானப்படை
ஏறத்தாழ முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே இப்படிப்பட்ட தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பது போர்
தொடர்பான ஒரு குற்றவியல் நடவடிக்கைதான். அமெரிக்கா தற்போது மேற்கொண்டுள்ள "அதிர்ச்சியடையச் செய்து
அச்சுறுத்தல்" மூலோபாயம் நேரடியாக Blitzkrieg
தந்திரோபாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த தந்திரோபாயம் ஜேர்மன் இராணுவத்தால் முதலாவது உலகப்போரில்
அபிவிருத்தி செய்யப்பட்டது. பின்னர் இது நாஜிகளால் ஸ்பெயின் நாட்டு உள்நாட்டு போரில் சோதித்துப் பார்க்கப்பட்டதுடன்
மற்றும் இரண்டாம் உலகப்போரில் திட்டமிட்டு அதே பாணியில் மேற்கொள்ளப்பட்டது.
ஈராக்கின் எதிர்ப்பு காரணமாக இத்தாக்குதல் ஈராக் இராணுவத்துடன் மட்டும்
மட்டுப்படுத்தப்படாது பரந்த மக்களையும் சூழ்ந்துள்ளது. எனவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் இதைவிட
கொடுமையான பயங்கர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை எதிர்பார்க்கலாம்.
1939ன் நிகழ்வுகளுடன் இதனை ஒப்பிட்டு நாங்கள் மட்டுமே கருத்துக் கூறவில்லை. அமெரிக்காவின்
முன்னணி பத்திரிகை கட்டுரையாளர் ஜிம்மி பிரஸ்லின் (Jimmy
Breslin) கூட இதே கருத்தை கூறியிருக்கிறார். ஈராக் மீது
போர் பிரகடனத்தை புஷ் வெளியிட்டு உரையாற்றிய பின்னர், நியூஸ் டே (Newsday)
பத்திரிகையில் (மார்ச் 20-ஆம் தேதி) பிரஸ்லின் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் 1939ல் செப்டம்பர் முதல்
தேதி போலந்து மீது படையெடுக்கப்போவதாக சர்வாதிகாரி ஹிட்லர் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலிருந்து
விரிவான மேற்கோளை பிரஸ்லின் எடுத்துக் காட்டியிருக்கிறார். அதைப் பற்றி பிரஸ்லின் விமர்சனம் எழுதியுள்ளார்: "இப்போது
நாமும் இங்கு கேட்பது அந்த இருண்ட மேகத்தை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. அமெரிக்க வரலாற்றிலேயே
முதல் நடவையாக நாம் வெறுத்த ஒன்று இப்போது நடக்கிறது. நாம் இன்னொரு நாட்டின் மீது இப்போது படையெடுத்திருக்கிறோம்"
என்று இவர் எழுதியுள்ளார்.
பிரஸ்லின் அவரது ஒப்பீட்டை பின்வரும் வார்த்தைகளுடன் முடிக்கிறார்: "அந்த இரவில்
ஹிட்லர் இதே வறண்ட கற்பனை செய்யமுடியாத வெறும் சொற்களை பயன்படுத்தி ஒரு உலகப்போரை ஆரம்பித்தார்.
அந்தப் போர் 6 கோடி மக்களை கொன்று குவித்தது. அதற்கு பின்னர் போரில் இறந்தவர்களை கணக்கெடுப்பதையே
விட்டுவிட்டார்கள். நேற்றிரவு ஜோர்ஜ் w
புஷ் தனது உரையின் சொல்லுக்கு சொல் அதே வறண்ட பொருளற்ற உப்புசப்பில்லாத
வார்த்தைகளை கூறி தனது நாட்டிற்காக ஒரு போரை ஆரம்பித்துவிட்டார். இது இன்னொரு உலகப் போராக இது
முற்றிவிடக் கூடாது என்று நாம் வானத்தை நோக்கி இறைவனிடம் மன்றாடிக் கேட்க வேண்டும்."
அமெரிக்காவில் மிக அதிகமாக விற்பனையாகிற ஒரு பத்திரிகையான நியூஸ் டே
பத்திரிகையில் வந்திருக்கிற ஒரு கருத்தை பேர்லினில் ஏன் கூற முடியாது? இப்போது கார்ல் பிரடரிக் வாஸ்முத் அந்த
"ஒப்பீடு அமெரிக்காவிற்கு தவறான சமிக்ஞையைக் கொடுத்துவிடும்" என்று கூறுகின்றார்.
அவர் குறிப்பிடுவது யாரை? என ஒருவர் கட்டாயம் கேட்க நிர்பந்திக்கப்படுவார்.
அத்தகைய ஒப்பீட்டு நோக்கு அமெரிக்காவில் போரை எதிர்க்கிற மிகப்பெரும்பாலோருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.
சென்ற சனிக்கிழமை அன்று நியூயோர்க் சாலைகளில் ஆர்பாட்டங்கள் நடத்திய மக்கள் "ஹிட்லர் புஷ் இருவரும் ஒன்றே!
பெயர்தான் வித்தியாசம்!" என முழுக்கமிட்டார்கள்:
இதனால் தாக்கப்படுபவர்கள் வெள்ளை மாளிகையிலும் மற்றும் அமெரிக்க இராணுவ தலமையகமான
பென்டகனில் அமர்ந்திருப்பவர்கள்தான் அவர்களை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
ஜேர்மன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கருதிப்பார்க்கும் போது மட்டுமே வாஸ்முத்தின்
கருத்துக்கள் பொருளுள்ளவை. அத்தகய வரலாற்று ஒப்பீடுகளை அது அதிகம் உணரக்கூடியது என்பது நன்கு தெரிந்ததே.
ஜேர்மனியின் நீதித்துறை அமைச்சர் ஹொர்தா டொய்பிளின்-ஹெமலின் (Herta
Däubler-Gmelin), புஷ் மற்றும் ஹிட்லரை சரியாக ஒப்பிட்டு
கருத்து தெரிவித்தபொழுது அவர் உடனடியாக பதவியிலிருந்து விலகுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டார்.
புஷ் நிர்வாகத்தோடு ஏற்கனவே ஜேர்மனிக்கு உறவுகள் சீராக இல்லாத நிலையில், ஜேர்மன்
அரசாங்கம் மேலும் கொந்தளிப்பை உருவாக்கி விட விரும்பவில்லை. ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்காவிற்கு
ஆதரவாக வாக்களிக்க ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கம் மறுத்துவிட்டது.
ஆனால் உண்மையாக போரை எதிர்க்க அது தயாராக இல்லை.
அதனால்தான் ஜேர்மன் வான்வெளியை அமெரிக்க விமானப்படைகள் பயன்படுத்திக்
கொள்ள அனுமதிக்கிறது மற்றும் ஜேர்மனியின் அமெரிக்க விமான தளங்களிலிருந்து அமெரிக்க இராணுவம் செயல்படுவதை
அனுமதித்திருக்கிறது. இதனால்தான் போர்ப்பிரகடனம் சட்டவிரோதமானது என்பதை பகிரங்கமாக அறிவிப்பதை திட்டமிட்டு
தவிர்த்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகத்தான் குவைத் நாட்டில் ஜேர்மன் நாட்டின் ஃபொக்ஸ் ரக (Fuchs)
டாங்கிகள் இயங்குவதற்கு தொடர்ந்து அனுமதிக்கிறது. பிடிபட்ட பகுதிகளில் அவாக்ஸ் ரக உளவு விமானங்களில் ஜேர்மன்
போர்வீரர்கள் ரோந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஆப்கானிஸ்தானில்
அமெரிக்க இராணுவத்தின் சுமையை குறைக்க முன்வந்திருப்பதுடன் மற்றும் ஜேர்மனியிலுள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு
பாதுகாப்பு வழங்கிவருகிறது.
அமெரிக்காவுடன் ஆன மோதலில் ஏற்படுகின்ற வெளிவிவகாரக் கொள்கையின் பாதிப்பை
குறைப்பதற்காக இவ்வாறு அமெரிக்க போர் முயற்சிகளுக்கு ஆதரவு தருவது அவசியம் என்று கூறியது மூலம், பசுமைக்
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் அமெரிக்காவின் போர் முயற்சிக்கு ஒத்துழைப்பு
தருவதை நியாயப்படுத்தி இருக்கிறது. ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையின் உயிர்நாடி தூண்கள் என்று கருதப்படும்
அட்லாண்டிக்கிற்கு இடையிலான உறவுகள் மற்றும் நேட்டோவில் எந்தவிதமான பாதிப்பு அல்லது விரிசல் ஏற்பட்டாலும்
அது ஜேர்மன் "அரசாங்கத்தை பலவீனமாக்குதற்கு வழி வகுத்து விடும்" என்று பசுமைக் கட்சி கருதுகிறது.
அமெரிக்க அரசாங்கத்திற்கு தவறான சமிக்ஞையை ஒருவர் அனுப்புதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது
என்ற வாஸ்மித்தின் வாதத்தை ஜேர்மன் நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவானது என்றே கருதிக்கொள்ள
முடியும். பசுமைக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஸ்டோபில அந்தப் பேரணியில் பேசுவதற்கு
அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் உலி ரிப்பர்ட் உரையாற்றினால் அது வாஷிங்டனுக்கு "தவறான சமிக்ஞையை
கொடுத்துவிடும்" என்பதால் உலி ரிப்பர்ட் தடுக்கப்பட்டார்.
வாஸ்முத் அவரது கருத்துக்களை கூறுவதற்கு முற்றிலும் உரிமைப்பட்டவர் அதை நாம் மறுக்கவில்லை.
ஈராக்கிற்கு எதிரான போர் நடவடிக்கைகளில் அமெரிக்க இராணுவம் ஜேர்மன் நாட்டின் சாலை வழித்தடங்களையோ
விமான வழித்தடங்களையோ பயன்படுத்திக் கொள்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று திட்டவட்டமாக கோரிக்கை விடுப்பதற்காக
சனிக்கிழமை நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் தனது கருத்தை திணிப்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை.
எனவே ரிப்பர்ட் உரையாற்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமைதி இயக்கத்தை ஜேர்மன்
அரசாங்கத்தின் நலனுக்கு கீழ்ப்படுத்த எடுத்த முயற்சி என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இது மிக ஆபத்தான அடி
எடுப்பு. அமைதி இயக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால் அந்த இயக்கத்தினுள் அரசாங்கம் தனது செயல்பாட்டின்படி கையாளுதற்கு
எந்தவிதமான இடமும் கொடுக்கக்கூடாது மாறாக ஷ்ரோடர், பிஸ்ஸர் மற்றும் அவரது கூட்டாளிகள் கொள்கைகளை
அமைதி இயக்கம் தீவிரமாக எதிர்த்தாக வேண்டும்.
எவ்வாறாயினும், எந்த அரசியல் நிலைப்பாடும் நசுக்கப்படாமல் அமைதி இயக்கத்தின்
எதிர்கால அரசியல் திசைவழி மீதான நியாயமான ஜனநாயக ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் இதற்கு தேவைப்படுகிறது.
அரசியல் தணிக்கையை அல்லது அதிகாரத்துவ வழிமுறைகளை கடைபிடிப்பவர்களுக்கு இது போன்ற சமாதான இயக்கங்களில்
இடமில்லை.
அதை நாம் திரும்பவும் வலியுறுத்திக் கூறுகிறோம். இது இங்கு தவறான விளக்கத்தின்
அல்லது அமைப்பு ரீதியான பிழை அல்லது பரந்த இயக்கத்தின் அழுத்தங்களின் கீழ் செய்யப்பட்ட தவறான முடிவு பற்றிய
பிரச்சினை அல்ல. wsws
ஆசிரியர் குழு பிரதிநிதி பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தது தெளிவான அரசியல் அடிப்படையில்தான்.
இதை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே இந்தப் பிரச்சனையில் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் மற்றும்
உங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என நாங்கள் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் நன்றியுள்ள,
உலி ரிப்பர்ட் மற்றும் பீட்டர் சுவார்ட்ஸ்-wsws
ஆசிரியர் குழு சார்பில்.
See Also :
வழங்க முடியாது போன உரை - உலக சோசலிச வலைதள பேச்சாளர் பேர்லின் பேரணியில்
கூற திட்டமிட்டிருந்தது என்ன?
Top of page
|