World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : கிழக்கு தீமோர்

Indonesian court acquits military of East Timor atrocities

இந்தோனேசிய நீதிமன்றம் கிழக்கு தீமோரில் இராணுவத்தின் அட்டூழியங்களை மன்னித்துள்ளது
By Peter Symonds
29 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சுதந்திரத்திற்கு வாக்களிக்கப்பட்டதற்கு முன்னரும் அதை தொடர்ந்தும் 1999ல் கிழக்கு தீமோரில் நடந்த கொலைகள் சம்பந்தமாக, இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்றின் முதல் விசாரனையின் வெளிப்பாடு ஓர் நாடகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபையின் தகவல்களின்படி, இந்தோனேசிய ஆயுதப்படைகளின் பின்னனியுடன் இந்தோனேசியாவிற்கு சார்பான ஆயுதம் தாங்கிய குழுவினர் சுதந்திரத்திற்கு சார்பானவர்ளை கொடுமைப்படுத்தியதுடன் பயமுறுத்தும் ஓர் நோக்குடன் குறைந்தது 1000 கிழக்கு தீமோரியர்களை கொலை செய்துள்ளார்கள்.

ஆகஸ்ட் 14ல் கிழக்கு தீமோரின் முன்னய இந்தோனேசிய ஆட்சியாளரான Abilio Soares, தனது கட்டுப்பாட்டின் கீழ் நான்கு சம்பவங்களில் 100 க்கு மேலான மக்களின் கொலைகளை தடைசெய்ய தவறியதையிட்டு குற்றம் சுமத்தப்ட்டார். இந்தோனேசிய சட்டத்தின் கீழ் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்களிற்கு சட்டப்படி குறைந்தது 10 வருடங்கள் என இருந்த போதிலும், இவருக்கு தனியே மூன்று வருட சிறைத்தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாள், இத்த மனித உரிமைகளுக்கென அமைக்கப்பட்ட அதே நீதிமன்றம் முன்னய கிழக்கு தீமோரிய பொலீஸ் ஆணையாளரான Timbul Silaen உம், ஐந்து நடுத்தர அந்தஸ்திலுள்ள அதிகாரிகளான அவரது ஐந்து சக-பிரதிவாதிகளுக்கும் எதிராகவும் இருந்த எல்லா குற்றங்களையும் நீக்கியுள்ளது. இவர்கள் செப்டம்பர் 6,1999 சுயாய் (Suai) என்ற நகரத்திலுள்ள தேவாலயத்தில் மூன்று றோமன் கத்தோலிக்க குருமார்கள் உட்பட 27 சாதாரண மக்களை படுகொலை செய்தவர்களாவர். Timbul Silaen அல்லது மற்றயவர்களோ சுயாய் கொலையில் தொடர்பு பட்டுள்ளதாக எதுவித தடயங்களும் கண்டுபிடிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவிற்குள்ளும் சர்வதேச ரீதியாகவும் மனித உரிமைகள் குழுவினர் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மத்தியிலும் இந்த தீர்ப்புகள் ஓர் எதிர்ப்பை எழுப்பியுள்ளது. மனித உரிமைகள் சங்கத்துடனும் இந்தோனேசிய சட்ட உதவிக்குமான சட்டத்தரணியான Hendardi, Abilio Soares மீதான தீர்ப்பை விமர்சித்து கூறுகையில்: "இப்படி கடினமற்ற தீர்ப்புகள் வழங்குதல் மூலம் நீதவான்கள் சட்டத்தை அலட்சியப்படுத்தியுள்ளார்கள்". சர்வதேச மன்னிப்பு குழு (Amnesty) தனது ஓர் அறிக்கையில் "இந்த விசாரணகளில் சரியான பற்றாகுறைகளுடன், சர்வதேச தரத்துடன் உடன்பாடாக அமையவில்லை எனவும், உண்மையையோ அல்லது நீதியையோ வழக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

1999ல் கிழக்கு தீமோரில் கெடுபிடிகளுக்கு பொறுப்பாகவுள்ளவர்களை தண்டனை வழங்குவதற்கு ஓர் சர்வதேச நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதாக ஐ.நா. பாதுகாப்பு சபை பயமுறுத்திய பின்னரே, கடந்த வருடம் ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்திரி ஆல் இந்த மனித உரிமைகளுக்கென அமைக்கப்பட்ட நீதிமன்றம் தனியே நிறுவப்பட்டது. தொடக்கத்திலிருந்தே, இந்த நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டதுடன் கிழக்கு தீமோரிலுள்ள 13 மாவட்டங்களில் தனியே மூன்று மாவட்டஙகளில் குறிப்பிட்ட விசாரணைகளை ஏப்பிரலிலும் செப்டம்பரிலும் கையாண்டார்கள். மொத்தமாக, 18 நிர்வாக மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனையளிக்கப்பட்டது. ஆனால் பிரதிவாதிகளில் எந்தவித இராணுவ உயர் தலைமைகளையும் சேர்த்துக்கொள்ளவில்லை.

தொடக்கத்தில் இருந்தே நீதிமன்றம் இராணுவத்திற்கு சார்பாகவிருந்தது. அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமைகள் அவதானிப்பு குழுவின் கருத்தின் படி "பலராலும் அறியப்படாத 12 கல்விக்கழக அங்கத்தினர் நியமிக்கப்பட்டனர்.... இவர்களில் குறிப்பிட்ட சிலர் உயர் மட்ட இராணுவ அதிகாரிகளுடன் சம்பந்தபட்டவர்களாவர்கள். தனியே ஒரேயொரு நீதிபதி மட்டுமே குறிப்பாக சர்வதேச மனித உரிமைகளில் தேர்ச்சியடைந்தவர் என நம்பப்படுவதுடன், இவரும் இராணுவத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்களில் ஒருவராவர்."

ஆரம்பத்திலிருந்தே இராணுவம் தனது கருத்தை தெளிவாக்கியுள்ளது. விசாரணையின் முதல் நாளிலேயே,அப்போதைய இந்தோனேசிய தேசிய இராணுவத்தின் (TNI) படைத்தளபதியான Widodo Adiscipto உட்பட ஒரு தொகை உயர் மட்ட அதிகாரிகளும் இராணுவ படைகளின் அதிகாரியான Endiatono Sutarto நீதிமன்றத்தில் சமூகமளித்து "உளவியல்ரீதியான ஆதரவை" விசாரணைக்கு வழங்குவதாக காட்டினர். சாட்சியளிப்பவரிகளை, வழக்கு விசாரிப்பவர்கள், அத்துடன் நீதிபதிகளை பயமுறுத்தும் நோக்குடன் நீதிமன்ற அறையில் இராணுவம் தனது பலத்தை காட்டியது. தங்களுடைய பாதுகாப்பிற்கு பயந்து, ஒரு தொகை சாட்சிகள் சாதாரணமாக நீதிமன்றத்தில் தோன்ற மறுத்து விட்டனர்.

இங்கே, கிடைத்த சாட்சிகளை அல்லது குறுக்கு விசாரணையை தகுந்த முறையில் செய்ய தவறியதையிட்டு பரத்தளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச மன்னிப்பு குழு இது தொடர்பாக குறிப்பிடுகையில்: "முக்கிய சாட்சிகளென கருதப்பட்டு இந்தோனேசிய பாதுகாப்பு படையில் பாரதுரமான குற்றங்கள் புரிந்தவர்கள் நீதிமன்றத்தில் சமூகமளிக்கவில்லை. இப்படியான ஆதாரங்கள் கிழக்கு தீமோரின் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான இந்தோனேசியாவினது சொந்த ஆணைக்குழுவினதும், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழுவினதும் மற்றும், கிழக்கு தீமோரில் மோசமான குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் குழுவினதும் விஷேட விசாரணைகளால் உறுதிப்படுத்தப்பட்டவை" என்றது.

Soares மீதான தீர்ப்பை விமர்சிக்கையில் மனித உரிமைகள் அவதானிப்பு அதிகாரியான Sidney Jones ''கிட்டத்தட்ட ஒரு சாட்சிகளையுமே அரசதரப்பு வழக்கு தொடுனர் முன்வைக்காததும், குற்றவாளியில்லை என தீர்ப்பளிப்பது நீதியை கூடியளவு பரிகாசிப்பது போலவாகும்'' என குறிப்பிட்டார். வேறு சொல்லில் கூறுவதாயின் Soares இன் மீதான குற்றவாளி என தீர்ப்பளிப்பதற்கான தீர்மானமும் பொலிசாரையும் இராணுவத்தினரையும் விடுதலை செய்ததும், அரசியல் காரணங்களேயன்றி சட்டவரையறைகளால் அல்ல.

அரசியல் விளைவுகள்

கிழக்கு தீமோரின் கெடுபிடிகளில் நேரடியாக ஈடுபட்ட இந்தோனேசிய தேசிய இராணுவத்தின் அதிகாரிகளுக்கு போலியான தீர்ப்பை கூட நீதிமன்றம் கொடுக்க தவறியதானது, 1998ல் சுகாட்டோ வெளியே தள்ளப்பட்டதில் தற்பாதுகாப்பிற்கு தள்ளப்பட்ட இராணுவம் தனது அரசியல் நிலையை திரும்பவும் நிலை நிறுத்தியுள்ளது என்பது மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தீர்க்ககரமானது, ஏனெனில் இவர்களின் இப்படியான தீர்ப்பானது, ஐக்கிய நாடுகள் சபை கிழக்கு தீமோரில் தனது சொந்த நீதிமன்றத்தை அமைப்புத் தொடர்பான மீண்டும் குரல்கொடுக்கு ஆரம்பித்துவிடும் என்பதை இது முன்கூட்டியே அனுமானித்துள்ளது. இந்த நடவடிக்கையையே இந்தோனேசிய நீதிமன்றம் தவிர்க்க விரும்பியது. கிழக்கு தீமோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவரான Ian Martin, ஜக்கார்த்தாவின் சட்ட நடவடிக்கைகள் "யதார்த்தத்தை மாற்றியுள்ளதாகவும்", மற்றும் இதனை ''சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்'' நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என கூறியுள்ளார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரான Mary Robinson, குறிப்பாக சுயாய் இல் படுகொலைகள் நடந்த இடத்திற்கு கடந்தவார இறுதியில் விஜயம் செய்ததுடன், முன்னாள் இந்தோனேசிய மாநிலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் படி சர்வதேச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

கிழக்கு தீமோரில் உத்தியோகபூர்வமான பிரதிபலிப்பு பிளவுபட்ட நிலையில் உள்ளது. Soares க்கு வழங்கப்பட்ட குறைந்த தண்டனைக்கு பொறுப்பானவருமான ஜனாதிபதி Xanana Gusmao, ஜக்காட்டாவுடன் திரும்பவும் தொடர்புகளை ஏற்படுத்தவும் "சமாதானத்திற்காக" அழைப்பு விடுத்துள்ளார். இரத்தக்களரிக்கு இராணுவம் காரணமல்ல ஆளுனர்தான் பொறுப்பு என விவாதித்த Gusmao நீதிமன்றத்திற்கு கருணை காட்டும்படி அழைத்து சம்பிரதாயப்படி மனுத்தாக்கல் செய்துள்ளார். விசாரணையின் மேல் பரந்த மட்டத்தில் ஆத்திரம் உருவாகியிருப்பதை அவதானித்த பாராளுமன்றத்திலுள்ள மற்றைய அங்கத்தவர்கள் ஐ.நாடுகளின் விசாரணைக் குழுவிற்கு அழைப்பு விடுத்தனர்.

ஜகார்த்தா இவ்விமர்சனங்களை பரந்தளவில் அலட்சியம் செய்தது. கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் 6 பொலிசாரும் இராணுவ அதிகாரிகளும் குற்றமற்றவர்களென தீர்ப்பு வழங்குமாறு அரசாங்க வழக்குதொடுனர் அலுவலக வக்கீல் மனுச் செய்துள்ளார். எப்படியிருந்தாலும் வழக்கின் பலவீனத்தால் எந்த மனுத்தாக்கலுமே வரையறுக்கப்பட்ட வெற்றியையே பெற முடியும். மிகுதியாக உள்ள எல்லா வழக்குகளுமே இப்படியான வடிவத்தில் தொடர வாய்ப்புண்டு. சர்வதேச மனித உரிமைகள் குழு அவதானித்தது போல" வழங்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் இவ் வழக்குகளில் ஆரம்ப நிலையில் உள்ள சட்ட நடவடிக்கைகளும் இதே போல செல்லுபடியாகாமல் போய்விடும்".

இந்தோனேசிய ஆளும் வட்டங்களுக்கிடையே உள்ள நம்பிக்கைக்கு ஓர் காரணம் வாஷிங்டனின் அமைதியான தன்மையாகும். தனது "பயங்கரவாதத்திற்கு மேலான பூகோளப் போர்" என்ற போர்வையின் கீழ், புஷ் நிர்வாகம் மிகவும் நெருக்கமாக இந்தோனேசிய தேசிய இராணுவத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய நிலையங்களை பலப்படுத்துவதன் ஓர் திட்டத்தின் பகுதியாக முனைந்து கொண்டிருக்கிறது.1999ல் கிழக்கு தீமோரில் நடந்த கொடுமைகளை தொடர்ந்து, அந்த செயல்களுக்கு பொறுப்பானவர்களை விசாரணைக்கு கொண்டு வரும் வரை அமெரிக்கா காங்கிரஸ் நிதி வழங்குதலையோ அல்லது இந்தோனேசிய இராணுவத்திற்கான வேறு உதவியையோ தடை செய்திருந்தது. இவ்விசாரணைகள், தடையை விலக்குவதற்கான ஜகாட்டாவின் ஒரு ஊடகம் என கருதப்படுகின்றது.

கடந்த கிழமை அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளரான Philip Reeker விசாரனைகள் முடிவுகளுக்கு ஓர் மென்மையான விமர்சனத்தை வைத்தார். "குறிப்பிட்ட தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்காது, எவ்வாறாயினும் தீர்ப்பு வழங்குபவர்கள் இவ்வழக்குகளில் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து அவர்களுக்கு கிடைத்த வழங்களை முழுமையாக பாவிக்கவில்லை என அமெரிக்கா ஏமாற்றமடைந்தது'' எனவும், அமெரிக்கா இந்தோனேசிய நீதிமன்றத்தின் உருவாக்கத்தை வரவேற்பதுடன், இந்தோனேசியாவுடன் இணைந்து அதனது இராணுவத்துடனும் நெருங்கிய உறவை கட்டி வளக்க அர்ப்பணித்துள்ளது'' என அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு விசாரணைக் குழு நிறுவுவதற்கு உறுதுணையாக இருப்பது பற்றியோ அல்லது, இந்தோனேசிய அரசாங்கத்தை மிகுதியாகவுள்ள வழக்குகளை மிகவும் பயனுள்ள முறையில் தீர்ப்பு வழங்குவதற்கு நிச்சயப்படுத்தவது பற்றியோ அவர் எந்தவித பிரேரணைகளையும் வைக்கவில்லை.

அமெரிக்க -இந்தோனேசிய இராணுவகூட்டின் மிகுதியாகவுள்ள தடைகள் எடுக்கப்படும் என புஷ் நிர்வாகம் மிகவும் ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க அரசின் செயலாளரான கொலின் பெளல் ஆகஸ்ட் தொடக்கத்தில் ஜகாட்டாவிற்கு விஜயம் செய்ததுடன் இரண்டு வருடத்திற்கு மேல், குறைந்தது 50 மில்லியன் டொலர்களை பரந்தளவில் பயங்கரவாதத்திற் கெதிரான திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு அமெரிக்கா உதவுவதாக அறிவித்தார். இதில் கூடிய பகுதி நிதி பொலிசாருக்கு கொடுக்கப்படும், காங்கிரசால் இடப்பட்ட தடையை தவிர்ப்பதன் திட்டமாக புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து ஆனால் 4 மில்லியன் டொலர் நேரடியாக இராணுவத்தை சென்றடையும். பெளலினுடைய விஜயத்திற்கு முன்னர், அமெரிக்க நிதிவழங்கும் கமிட்டியானது, இந்தோனேசிய இராணுவத்திற்கு பயிற்சி வழங்குவதற்கான தடையை அகற்றுவதற்கு வாக்களித்தது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கிழக்கு தீமோரில் சர்வதேச விசாரணக் குழுவை நிறுவுவதற்கான எந்த முயற்சிக்கும் புஷ் நிர்வாகத்தினுடைய ஆதரவு தேவை. இறுதியில் இப்படியான ஓர் அமைப்பு நிறுவப்பட்டாலும், அதன் அமைப்பும், வழிமுறைகளும் ஜகார்த்தாவின் நீதிமன்றம் போன்று அதன் அரசியல் தேவைக்கானதாகவே இருக்கும். கிழக்கு தீமோரிலோ அல்லது இந்தோனேசியாவில் வேறு எங்காவதோ இந்தோனேசிய தேசிய இராணுவத்தினுடைய மூர்க்கத்தனமான குற்றங்களை முழுதானதும் விளக்கமானதுமான விசாரணை நடாத்த எந்தவொரு பெரிய சக்திகளுமே விரும்பவில்லை. ஏனெனில் இது தங்களுடைய சொந்த ஈடுபாட்டைப் பற்றி அதிகமான கேள்விகள் எழும்பலாம் என்பதாலாகும்.

அண்ணளவாக அரை மில்லியன் மக்களின் கொலைக்கு வழி விட்டதும், சுகாட்டோ அதிகார ஆட்சியை பதவியில் அமர்த்துவதற்கு காரணமான 1965-66 இராணுவப் புரட்சிக்கு முக்கியமாக வாஷிங்டன் பொறுப்பாக இருந்தது. அமெரிக்க நிர்வாகம் மூன்று சகாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக சுகாட்டோவை தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய திறவு கோலாக வைத்திருந்ததுடன், சகல இராணுவ கொடூரங்கள் தொடர்பாகவும் கண்மூடித்தனமாகவிருந்தது. 1975இன் முன் போத்துகீசருடைய காலனியாகவிருந்த கிழக்கு தீமோரின் பிரச்சனையில், கிட்டத்தட்ட 200,000 உயிர்கள் 25 வருடங்களுக்கு மேலாக இழப்பதற்கு வழிகோலிய இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்பிற்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான Ford இன் நிர்வாகம் மறைமுகமுகமான ஆதரவை வழங்கியிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அவதானமான முடிவுகள் எப்படியிருந்தாலும், அதன் ஆசீர்வாதத்தின் கீழ் அமைக்கப்படும் சர்வதேச விசாரணை குழுவின் தலைமையின் கிழக்கு தீமோரிய மக்கள் உண்மையான நீதியை அடையமுடியாது.

See Also :

கிழக்கு தீமோரின் ''சுதந்திரம்'': நப்பாசையும் யதார்த்தமும்

Top of page