World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐ.நா

What really happened to the League of Nations

சர்வதேச சங்கத்திற்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது

By David North
20 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க இதழியலை உட்கூறாகக் கொண்டிருக்கும் அறிவு ஜீவித மற்றும் ஒழுக்க ரீதியானவற்றுக்கு தரிசாய்ப்போன நிலத்தில், செய்தித்தாள் பத்தியாளர் குழுவால், பண்டிதர்கள் என்று கூட பெயர்பெற்றவர்களால் குடியிருப்பது போன்ற ஒரு பகுதி, அந்த வட்டாரத்தில் வேறு இல்லை. அவன் அல்லது அவளது குறிப்பிட்ட பணி என்னவெனில் பொதுமக்கள் கருத்தை மழுங்கடிக்க, தவறாக வழிநடத்த மற்றும் தூண்டி விட தேவையான அளவு சிடுமூஞ்சித்தனம், ஏமாற்று, துதிபாடல் மற்றும் பேரினவாதம் ஆகியவற்றை நாள்தோறும் நிர்வகித்து வருவதாகும்.

உளவுத்துறை முகவாண்மைகளில் அவர்கள் இரகசியங்கள் மற்றும் நெருங்கிய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் அரசியல் மற்றும் கார்ப்பொரேட் இடைத்தட்டுக்களில் உள்ள எண்ணற்ற ஆதரவாளர் மற்றும் நண்பர்களுடன், இந்தத் தனிநபர்கள் ஆளும் தட்டின் நீண்ட நலன்களை கொள்கைப் பிரச்சாரத்தின் பொருத்தமான வடிவங்களாக மொழிபெயர்க்கின்றனர். அங்கு-- ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி உட்பட, புஷ் நிர்வாகத்தில் உள்ள முன்னணி நபர்களின் நிதி பேர மோசடிகளை (அவர் அவர்களை குற்றம்புரிவோர் என்று முத்திரை குத்துவதினின்று தவிர்க்கிறார்) அம்பலப்படுத்துவதில் தனிப்பட்ட துணிவின் கருத்துப்பாய்ச்சலைக் காட்டிய மற்றும் ஒரு சில பத்திகளை அர்ப்பணிக்காத, நியூயோர்க் டைம்ஸ்-ன் போல் க்ருக்மன் போன்ற --ஒரு சில விதிவிலக்கானவர்கள் இருக்கின்றனர். ஆனால் க்ருக்மன் குறிப்பிடத்தக்கவர் ஏனெனில் அவரைப்போன்றோர் அங்கு அரிதாவர். பெரும்பாலான பகுதியைப் பொறுத்தவரை, அமெரிக்க செய்தித்தாள்களின் பத்திகள் பிற்போக்கு மற்றும் பழிபாவங்களுக்கு அஞ்சாத கயவர்களால் எழுதப்படுகின்றன.

இந்த அவதானிப்பிற்கான சம்பவம் நேற்றைய வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிடப்பட்ட, அமெரிக்க இதழியல் துறையில் உள்ள, மிக வேண்டாச் சுவையுள்ள நபர்களுள் ஒருவரான, ஜோர்ஜ். எப்.வில்- ஆல் எழுதப்பட்ட ஒரு பந்தி ஆகும். கிட்டத்தட்ட கால்நூற்றாண்டாக, வில் தன்னை உயர் நோக்கத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டார், அவர் அதில் ஒருபோதும் ஊசலாடவில்லை: செல்வந்தர்களின் நலன்களைக் காப்பதில். அவர்களின் சார்பில் அவர் அளித்துவரும் சேவைக்கு பெரிய அளவில் வெகுமதி அளிக்கப்பட்டது, அதற்காக திரு. வில் தாமே மிகப் பெரிய செல்வந்தர் ஆனார்.

இப்பொழுது ஜோர்ஜ் வில்லின் பத்தியை சுருங்கப் பார்ப்போம், இது பிற்போக்குப் பண்டிதர்களின் புகழ்பெற்ற கவன ஈர்ப்புத் தந்திரங்களுள் ஒன்றின் எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது-- அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த வரலாற்று ஒப்புமைகளை தவறாகப் பயன்படுத்தலாகும். உலக சோசலிச வலைத் தளத்தில் அண்மைய கட்டுரை, மூனிச்சில் ஹிட்லருடன் மிகவும் ஒத்ததான அரசியல் நடத்தை அமெரிக்க ஏகாதிபத்திய தலைவர்களால் எடுத்துக்காட்டப்பட்ட போதிலும், "ஆக்கிரமிப்பாளி" சதாம் ஹூசைனுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கான ஒரு வாதமாக, 1938ல் மூனிச்சில் ஹிட்லருக்கு பிரிட்டனும் பிரான்சும் சரணாகதி அடைந்ததை அரசாங்கமும் பத்திரிக்கைகளும் ஒரே படித்தான அளவில் வணங்கிப் போற்றியதைப் பற்றிக் குறிப்பிட்டது. [பார்க்க: புஷ் நிர்வாகம் போரை விரும்புகிறது]

கடந்த வாரத்தின்பொழுது, ஒரு புதிய வரலாற்று ஒப்புமை பத்திரிகைகளில் ஊக்கி விடப்பட்டது-- அது சர்வதேச சங்கம் (League of Nations) பற்றியது. இந்தக் கருத்தானது அது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை முன்னர் பேசிய பேச்சில் ஜனாதிபதி புஷ்-ஆல் அது தொழுது வரவேற்கப்பட்ட பொழுது, அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றது. ஐக்கியநாடுகள் சபையானது ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரின் பின்னால் நிற்காவிட்டால் சர்வதேச சங்கம் போல ஐ.நா தோல்வியுறும் என புஷ் எச்சரித்தார். இந்த துணிபுரையை அவரது ஒப்புமைக்கான விரிவான ஆதாரத்தைக் கொண்டு ஆதரிக்க அவர் முயற்சிக்கவில்லை.

தவிர்க்க முடியாமல், மிகவும் மரியாதைக்குரிய வரலாற்று மாணவர் --ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஜனாதிபதி-- எதைக் கூறிக் கொண்டிருந்தார் என்பதைப் பற்றி விளக்குவதை திருவாளர். வில் தானே எடுத்துக் கொண்டார்.

"ஈராக்கில், ஐக்கிய நாடுகள் சபையானது அதன் அபிசீனியாவை சந்தித்துக் கொண்டிருக்கிறது" என திருவாளர். வில் தலைமைக் குருமாராக போதித்தார். "முசோலினியின் இத்தாலி எத்தியோப்பியாவை ஆக்கிரமித்த பொழுது, மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் முன்னோடியான, சர்வதேச சங்கம் சர்வதேச ஒழுங்கின் கருவியாக ஆண்மையற்றதாக நிரூபிக்கப்பட இருந்த பொழுது,1935ல் எத்தியோப்பியா அவ்வாறுதான் அழைக்கப்பட்டது."

திருவாளர் வில் செயல் முடிக்க பெரும்திரளான ஆய்வாளர்களின் அணி அவரது பத்திகளை எழுதுதற்கு உதவும். ஆனால் அவர்கள் சர்வதேச சங்கம் பற்றியதில் இருந்து அவரை விலகி இருக்குமாறு ஆலோசனை கூறி இருந்திருப்பார்களாயின் அவர்கள் இன்னும் சிறப்பாக சேவை செய்திருக்க முடியும். உண்மைகள் பற்றியதில் முறையான கவனத்துடன் மற்றும் முறையான வரலாற்று உள்ளடக்கத்துடன், அக்கறையுடன் ஆய்வு செய்யும் பொழுது, 1935 சம்பவங்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு எதிராகப் பேசுகின்றன.

முதலாவதாக, ஐக்கிய அமெரிக்க அரசுகள் சர்வதேச சங்கத்தில் ஒருபோதும் இணையவில்லை என்பது நினைவு கூரப்பட வேண்டும். அச்சங்கத்தினை அமைப்பதற்கு பிரதான நோக்கங் கொண்டவர்களுள் ஜனாதிபதி உட்ரோவில்சன் ஒருவராக இருந்த பொழுதும், அமெரிக்க செனெட் அதன் உருவாக்கத்திற்கு வழிவகுத்த உடன்படிக்கையை நிராகரித்தது.

சங்கத்தின் அரசியல் அடித்தளத்தின் அடிப்படை பலவீனங்களில் ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அது ஏகாதிபத்திய உலக அமைப்பின் யதார்த்தங்களில் உள்ளார்ந்து உள்ளது: பெரும் முதலாளித்துவ அரசுகளின் மேலாதிக்கம் செய்யும் தேசிய நலன்களை அவை என்னதான் கருதி இருந்தாலும் சர்வதேச கருத்தொருமைப்பாட்டுக்கு அவற்றை கீழ்ப்படியச்செய்வதற்கு வற்புறுத்தும் சக்திமிக்க எந்தவிதமான வழிமுறைகளும் இல்லாமை.

1929ல் வோல்ஸ்ட்ரீட் பொறிந்து போனதுடன் ஆரம்பமான உலகப் பொருளாதார நெருக்கடியின் பொழுது, சர்வதேச சங்கமானது பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலான தீர்க்கமுடியாத மோதல்களால் சிதறுண்டு போனது. 1931ல் பயங்கரவாத சம்பவம் (தெற்கு மஞ்சூரிய இரயில்வே இருப்புப்பாதையின் ஒரு பகுதி அழிதல்) என்று அழைக்கப்படுவது மஞ்சூரியாவைக் கைப்பற்றுவதற்கான சாக்குப் போக்காக ஜப்பானிய இராணுவத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட பொழுது, சீனா பிரச்சினையில் தலையிடுமாறு சர்வதேச சங்கத்தை அழைத்தது, ஆனால் ஜப்பானியர்கள் --சீனா உடன்படிக்கை விதிமுறைகளை மீறி இருந்தது என பொய்யாகக் கூறிக் கொண்டு-- அனைத்து சமரசங்களையும் நிராகரித்தனர்.

ஏனைய பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகளான, குறிப்பாக பிரிட்டனும் பிரான்சும் (சங்கத்துடன் பகுதியாக இல்லாதபோதும், ஐக்கிய அமெரிக்க அரசுகளும் கூட) இந்தக் கட்டத்தில் ஏகாதிபத்திய ஜப்பானுடன் மோதுவது உசிதமானதுதானா என்பதை அதனுடன் எண்ணிப் பார்க்கவில்லை. போட்டி வல்லரசுகளின் நலன்கள் நேரடியாகப் பாதிக்கப்படாமல் இருக்கும் அந்த மட்டத்திற்கு அது போருக்குப் போகவிரும்பியது, சங்கமானது இன்னொரு பிரதான ஏகாதிபத்திய நாடு ஒரு பலவீனமான, அரைக் காலனித்துவ நாட்டுடன் அதன் வழியில் செல்வதிலிருந்து தடுக்க தயாரிப்பு செய்யவில்லை.1

இப்பொழுது எத்தியோப்பியாவுக்கு 1935ல் அந்த ஆபிரிக்க நாடு இத்தாலியால் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டது, அந்த தசாப்தத்தின் முடிவில் முழு அளவிலான போர் வெடிப்பதற்கான சூழ்நிலைகளைத் தயாரித்த ஏகாதிபத்திய போலிநடிப்பு மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் மற்றொரு எடுத்துக்காட்டாகும். இராணுவ புகழ்பாடும் கானல்நீர் காட்சியுடன், நெருக்கடி பீடித்த ஆட்சிக்கு புது வலு அளிக்கும் நோக்கத்திற்காக இத்தாலிய ஆக்கிரமிப்புக்கு முசோலினி ஆணையிட்டார், அது திரைக்குப் பின்னால் பிரிட்டன் மற்றும் பிரான்சின் தடைச்சொல்லின்றி உடன்படல் இல்லாமல் சாத்தியமாக இருந்திருக்காது. பேர்லினில் உள்ள நாஜி ஆட்சியின் இன்னும் கூடிய அச்சுறுத்தும் ஏகாதிபத்திய குறிக்கோள்களுக்கு எதிராக முசோலினியின் ஆதரவை வென்றெடுக்க இன்னும் நம்பிக்கை கொண்டு, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் கிழக்கு ஆபிரிக்காவில் முசோலினியின் குறிக்கோள்களுக்கு அமைதியாய் ஊக்கம் கொடுத்தன. பிரிட்டனும் பிரான்சும் அபிசீனியாவை படிப்படியாக இத்தாலிய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாற்றுவதை ஆட்சேபிக்காது என்ற தெளிவான குறிகாட்டல்கள் முசோலினிக்கு கொடுப்பட்டது.

ஆனால் முசோலினி ஒரு இராணுவ வெற்றியை விரும்பினார், மற்றும் அவரது ஆக்கிரமிப்பு பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடனான அவரது உறவுகளில் சிரமங்களை வைத்தது --அது சர்வாதிகாரியின் எல்லைப்புற நோக்கங்களுக்கு ஆட்சேபனையை வழங்கவில்லை, மாறாக அவற்றை அடைவதற்கு அவர் பயன்படுத்திய வழிமுறைகளுக்கு ஆட்சேபம் எழுப்பின. இத்தாலி, அதன் பகுதிக்கு, "இந்தப் பிரச்சினை உயிராதார நலன்களைப் பாதிப்பதால் மற்றும் இத்தாலிய பாதுகாப்பு மற்றும் நாகரிகத்திற்கு முதனிலை முக்கியத்துவம் கொண்டிருப்பதால்", எத்தியோப்பியாவில் பொருத்தமானதாக அது பார்க்கும் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அதற்கு உரிமை கொண்டிருந்ததாக அது வலியுறுத்தியது.

இத்தாலியின் ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாய் இருந்த தங்களின் பாத்திரத்தை மூடிமறைப்பதற்கு ஆர்வத்துடன், பிரிட்டனும் பிரான்சும் எத்தியோப்பியாவில் ஆக்கிரமிப்பைப் பற்றி சர்வதேச சங்கத்தால் அர்த்தமற்ற வகையில் கண்டனங்களை குழுஇசைத்தன. ஆனால் இந்த பயனற்ற கண்டனத்தை செயலாக்குவதற்கு ஒன்றும் செய்யப்படவில்லை, ஏனென்றால் பிரதான ஏகாதிபத்திய வல்லரசுகள் ஒன்று கூட எத்தியோப்பியாவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் எந்த உண்மையான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. அதன் தலைவர், பேரரசர் ஹைலே செலாஸி, அதற்கு வேண்டும்போது நிதி, தொழில் மற்றும் தொழில்நுட்பம் கிடைக்கக்கூடிய, மிகவும் மரணத்தை வழங்கும் ஆயுதங்களை அளவில்லா வகையில் பெறுவதைச் சாத்தியமாக்கும், நாற்பத்திரண்டு மில்லியனுக்கும் மேலான குடிமக்களைக் கொண்டு நடத்தும் அரசாங்கத்திற்கும், மற்றொரு பக்கம் ஆயுதங்கள் இல்லாத, வளங்கள் இல்லாத..... பன்னிரண்டு மில்லியன் மக்களைக் கொண்டுள்ள சிறிய நாட்டிற்கும் இடையிலான சமனற்ற போராட்டத்தில்" ஆதரவு வேண்டி சர்வதேச சங்கத்திற்கு பரிதாபகரமாக வேண்டுகோள் விடுத்தார்.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு எளிதில் வளைந்துபோகும் கருவியான, சர்வதேச சங்கம் எத்தியோப்பியாவுக்கு அடிப்படை ரீதியாக ஒன்றும் உதவவில்லை. அது அனுமதித்த மிக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகள், முசோலினியின் இராணுவ எந்திரம் தங்கி இருக்கும் இத்தாலிக்கு எண்ணெய் ஏற்றுமதிகளைத் தடைசெய்வதை உள்ளடக்கவில்லை. மற்றும் இத்தாலிய எண்ணெய்க்குப் பிரதான வழங்குநராக இருந்தது யார்? ஐக்கிய அமெரிக்க அரசுகளைத் தவிர வேறு ஒருவரும் இல்லை, அது எத்தியோப்பியப் போரின்பொழுது இத்தாலிக்கு அதன் எண்ணெய் ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்கியது.2

சர்வதேச சங்கம் பலவீனமான மற்றும் குறை வளர்ச்சி நாடுகள் சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்பட மறுத்தலால் "தோல்வி" அடையவில்லை. இன்னும் சொல்லப்போனால், பிரதான ஏகாதிபத்திய அரசுகள் தங்கள் நலன்களை முன்னெடுப்பதில் வன்முறையைக் கைவிடுவதற்கு நிர்பந்திக்கக்கூடிய வழிமுறைகள் எதுவும் இல்லாமை நிலவியதன் காரணமாக ஆகும்.

1935 சம்பவங்களில் இருந்து ஒரு ஒப்புமை பெறப்படுமாயின், எத்தியோப்பியாவின் பாத்திரம் ஈராக்கால் வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். அந்த இத்தாலியின் பாத்திரம் ஐக்கிய அமெரிக்க அரசுகளால் வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து மற்றும் பிரான்சின் பாத்திரங்கள்.... மற்றுமெல்லாம் இங்கிலாந்து மற்றும் பிரான்சால் வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

திருவாளர். வில் இதுதான் இன்றைக்கான உங்களது வரலாற்றுப்பாடம்.

குறிப்புகள்:

அமெரிக்க வரலாற்றாசிரியர் வில்லியம் கெய்லர் மஞ்சூரியா மீதான ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு ஏகாதிபத்திய பதிலின் ஒரு சுருக்கமான விவரத்தைத் தருகிறார். அவர் எழுதுகிறார், அமெரிக்க அரசுத்துறை "சீனாவுடனான அமெரிக்க வணிகத்தை மற்றும் கோமிண்டாங் கட்டுப்பாட்டில் உள்ள சீனாவின் மதிப்புமிக்க எஞ்சிய பகுதியில் முதலீட்டை பின்வாங்கச்செய்தலைத் தொடர்ந்தது. 1930களின் எஞ்சிய பகுதி முழுவதும் ஜப்பானுக்கான மூலோபாயப் பொருட்களின் அமெரிக்க ஏற்றுமதிகளை குறையாது தொடர்ந்தது. "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நடத்தை கொஞ்சமும் கீழானதல்ல. "பிரிட்டன் அதன் தேசிய நலன்களுக்கு குறிப்பிட்ட முக்கியத்துவம் இல்லாத இடத்திலிருந்து அதனை இடம்பெயரச் செய்வதை நாடியதன் மூலம் எதிர்த்துப்போராடும் ஆபத்து நேர்வுடைய ஜப்பானுடன் குறைந்த அளவு மனப்பற்றைக் கூட காட்டியது. லண்டனில் உள்ள சில அதிகாரிகள் கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலிருந்து ஒரு பயனுள்ள திசைதிருப்பலாக வடக்கு சீனாவில் டோக்கியோவின் அதிகரிக்கும் இராணுவத் தலையீட்டை வரவேற்கக் கூடச் செய்தனர். கிழக்கு ஆசியா ஹாங்காங்கிலிருந்து தெற்காக சிங்கப்பூர் வரை விரிந்து கிடக்கும் பகுதி ஆகும்-- அது பிரிட்டனின் பொருளாதர மற்றும் மூலோபாய அடித்தளத்தில் கணிசமான அளவு அக்கறைக்குரியதாக இருந்தது. மஞ்சூரிய நிகழ்ச்சி முழுவதும் கிழக்கு ஆசியா மீதான பிரிட்டனின் கொள்கையானது, ஆங்கிலோ --ஜப்பானிய வர்த்தக மற்றும் மூலோபாய நலன்களின் செல்வாக்கு மண்டலங்களுக்குள் முழு பிராந்தியத்தின் பரஸ்பர திருப்திப்படுத்தும் பகுதிகளை அடைவதற்கான குறிக்கோளால் மேலாதிக்கம் செய்யப்பட்டது." [The Twentieth Century World: An International History (New York and Oxford, 1966), p. 233.

2.கெய்லர், பக்கம் 151

See Also:

புஷ் நிர்வாகம் போரை விரும்புகிறது

ஐ.நா சபையில் புஷ்: உலகத்துக்கு வாஷிங்டனின் போருக்கான இறுதி எச்சரிக்கை

Top of page