World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Air Force Officer Disciplined for Saying Bush Allowed Sept. 11 Attacks.
Hijacker Attended US Military School

செப்டம்பர்11 தாக்குதல்களை புஷ் அனுமதித்தார் எனக் கூறிய விமானப்படை அதிகாரி மீது நடவடிக்கை

விமானக் கடத்தல்காரர் அமெரிக்க இராணுவ பள்ளியில் பயிற்சி

By Jerry Isaacs
21 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

கலிஃபோர்னியாவில் ஒரு அமெரிக்க விமானப்படை அதிகாரி, சமீபத்தில் அதிபர் புஷ் வேண்டுமென்றே தனக்கு தெரிந்திருந்தும் செப்டம்பர்11 தாக்குதல்கள் நடைபெற அனுமதித்தார் எனக் குற்றம் சாட்டினார். இந்த அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. Lt. Col. Steve Butler பத்திரிகை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் சர்ச்சைக்குரியது. அக் கடிதத்தில் அவர், புஷ் அமெரிக்க மக்களை எச்சரிக்கை செய்யவில்லை ஏனென்றால் அவருக்கு "பயங்கரவாதம் மீதான போர் தேவை" யாக இருந்தது என்பதை வலியுறுத்தினார். இந்த சர்ச்சை செய்தி ஊடகத்தில் வேண்டா வெறுப்புடன் செய்தி உள்ளடக்கல் கொடுக்கப்பட்டது.

இருப்பினும், எங்கும் பத்திரிகைகள் கண்டுகொள்ளாத உண்மை என்னவென்றால் பட்லர் (Butler) தன் சொந்த கருத்தை மட்டும் வெளியிடவில்லை என்பதாகும். உலக வர்த்தக மையத்தை அழித்த பென்டகனைப் பாதித்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு முந்திய காலத்தில், அமெரிக்க இராணுவத்திற்கும் விமானக் கடத்தல்காரர்களுக்கும் உள்ள தொடர்பை நேரடியாக தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவர் இருந்தார்.

Monterey Country Herald என்ற பத்திரிகை ஆசிரியருக்கு Lieutenant Colonel Butler ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் "Bushக்கு வரப்போகும் தாக்குதல்களை பற்றி முன் கூட்டியே தெரிந்திருந்தது" என குற்றம் சாட்டியுள்ளார். கலிஃபோர்னியா, மோன்டெரியில் உள்ள பாதுகாப்பு மொழியியல் நிறுவனத்தில் (Defense Language Institute) பட்லர் மாணவர்கள் பற்றிய விவகாரத்திற்கு துணை வேந்தராக இருந்தார். இந்த அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் 1990களில் விமானக் கடத்தல்காரர்களில் ஒருவரோ அல்லது அதிகமானவர்களோ படித்தார்கள் என கூறப்படுகிறது.

May 26 அன்று பட்லர், Herald பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தில், புஷ் ஆதரவாளர்களுக்கு பின்வருமாறு பதில் எழுதினார். அவர்கள் செப்டம்பர் 11 சம்பவங்களை அமெரிக்க பார்லிமெண்ட் புலன் விசாரணை செய்வதை எதிர்த்து அந்த பத்திரிகைக்கு எழுதியிருந்தனர். அவர் எழுதியதாவது: ஜனாதிபதி புஷ்க்கு அமெரிக்காவின்மேல் நடக்க இருக்கும் தாக்குதல்களை பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தது. புஷ் அமெரிக்க மக்களை எச்சரிக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்தப்போகும் போர் அவருக்கு தேவையாக இருந்தது. புஷ்ஷின் தந்தைக்கு சதாம் தேவைப்பட்டார். அதேபோல இப்பொழுது புஷ்ஷூக்கு ஒசாமா தேவை. அவரது ஆட்சி வெற்றிகரமாக அமையவில்லை. புஷ் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒரு பழமைவாத அமெரிக்க உச்சநீதி மன்றம் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபராக நியமித்தது. அமெரிக்க பொருளாதார நிலைமை வழக்கமான குடியரசுக் கட்சியினர் குழிபறிப்புக்குள் வழுக்கிச்சென்றது மற்றும் அவருக்கு தனது பதவியைத் தக்கவைப்பதற்கு வேறு ஏதாயினும் தேவைப்பட்டது.... இது ஒருவகை கோமாளித்தனமாகும். அமெரிக்க அதிபர் அரசியல் ஆதாயத்திற்காக தனக்கு தெரிந்ததை அமெரிக்க மக்களிடம் தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கதும் மிகவும் இழிவானதும் ஆகும்."

பட்லர் எழுதிய கடிதம், 24 வருட அனுபவமுள்ள விமானப்படை அதிகாரிக்கு எதிரான உடனடியான பதில் தாக்குதலைத் தூண்டிவிட்டது. அவர் மோன்டெரியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இராணுவ சட்ட பிரிவு 88 கீழ் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவார் என பயமுறுத்தப்பட்டார். இச் சட்டம், அதிகாரிகள் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து "கீழ்த்தரமான" வார்த்தைகள் வெளிப்படையாக உபயோகப்படுத்துவதைத் தடை செய்கிறது.

சென்ற வாரம் அமெரிக்க விமானப்படை, பட்லர் வழக்கை விசாரித்து முடித்துவிட்டது என அறிவித்தது. அது பட்லர் "சட்ட விதிமுறையல்லாத தண்டனை" அனுபவிப்பார் என கூறிற்று. ஒரு அபராதமோ கண்டனக் கடிதமோ அவருக்கு வழங்கப்படும். இன்னும் சொல்லப்போனால் கடுமையான தண்டனை அளிக்கப்படமாட்டாது. ஆனால் பட்லர் இந்த தண்டனையை ஏற்க மறுத்தால் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அவர் இராணுவ நீதிமன்றத்தின் தண்டனையை அனுபவிக்க நேரும்.

பட்லர் விவகாரம், பென்டகனுக்கும் புஷ் நிர்வாகத்திற்கும் குறிப்பாக புறத்தூண்டுதலுக்குரிய ஒன்றாகும். புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11 நிகழ்ச்சிகளை, இராணுவவாதம் மற்றும் அடக்கு முறைகள் இவற்றின் அதிபிற்போக்கு வேலைத் திட்டத்தைத் திணிக்க ஒரு விலைமதிப்பற்ற வாயப்பு என பலர் நம்புகின்ற அதேவேளை, பட்லர் வேறுவிதமாக நம்புகிறார். அவரது இராணுவ பொறுப்பு விமானக் கடத்தல்காரர்களில் ஒருவருடனாவது தொடர்புகொள்ளுமாறு செய்தது.

செப்டம்பர்11க்கு சில காலத்திற்கு பின்னர் பல அமெரிக்க பத்திரிகைகள் சயீத் அல்காம்தி பற்றி சுட்டிக்காட்டின. மேற்கு பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கிய United Airlines விமானம் 93-ஐ கடத்தியதில் பங்கேற்றிருந்தார் மேலும் இவர் அமெரிக்க இராணுவத்தின் முக்கிய வெளிநாட்டு மொழிக் கல்லூரியான Defence Language Institute-ல் படித்தார் என்றும் செய்திகள் கூறின. பட்லர் அங்கு மாணவர்களை மேற்பார்வை செய்யும் முன்னணி அதிகாரியாக (துறை முதல்வராக) பணி புரிந்தார்.

41 வயதான அல்காம்தி சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். குழுத் தலைவர் மொகம்மது அட்டா உட்பட பல விமான கடத்தல்காரர்களில் ஒருவர். செப்டம்பர் 15-17 முதல் வாஷிங்டன் போஸ்ட், நியூயோர்க் டைம்ஸ், நியூஸ் வீக் மற்றும் பல செய்தித்தாள்களில் வெளியான தொடரான பல கட்டுரைகளின் படி, மொகம்மது அட்டா அமெரிக்க இராணுவத் தளங்களில் பயிற்சி பெற்றவர் என கூறப்படுகின்றது.

செப்டம்பர் 15 அன்று நியூஸ் வீக்: "அமெரிக்க இராணுவம் FBI-க்கு அளித்துள்ள தகவலின்படி செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பங்கேற்ற விமானக் கடத்தல்காரர்கள் என கூறப்படுபவர்களில் ஐவர் 1990-களில் பாதுகாப்பான அமெரிக்க இராணுவ தளங்களில் பயிற்சி பெற்றனர்." எனக் கூறிற்று

அவ் இதழ் சயீத் அல்காம்தி, புளோரிடா, பென்சாகோலாவில் உள்ள, "அமெரிக்க கடற்படையின் தொட்டில்" என அழைக்கப்படும் கடற்படை விமானத் தளத்தில், விமான ஓட்டும் பயிற்சி பெற்ற மூவருள் ஒருவர் எனக் கூறியது. இது வெளிநாட்டு மாணவர்களுக்கு விமானம் ஓட்டும் பயிற்சியை கவனித்து வருகிறது. இவ்விதழ் "ஒரு பென்டகன் உயர் அதிகாரியை" அதன் ஆதாரமாக மேற்கோள்காட்டி, மேலும் இரண்டு சவூதி அரேபிய முன்னாள் விமானப்படை விமான ஓட்டிகள் அமெரிக்கா வந்து அத்தகைய பயிற்சி பெற்றனர் என்றும் கூறியது. ஒருவர் அலபாமாவில், மோன்டிகோமரியில் உள்ள வான் போர் கல்லூரியில் தந்திரோபாய இராணுவப் பயிற்சி பெற்றார். இன்னொருவர் டெக்சாஸில், சான் அன்டோனியோவில் உள்ள லாக்லாண்ட் விமானப்படை தளத்தில் மொழிப் பயிற்சி பெற்றார்.

அடுத்த சில நாட்களில், மற்றும் பல செய்திதாள்களில் பல விவரமான தகவல்கள் வெளியாயின. செப்டம்பர் 16 அன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியான கட்டுரை, பின்வருமாறு செய்தி வெளியிட்டது: "விமானக் கடத்தல்காரர்கள் என அடையாளம் கண்டறியப்பட்ட மூவர், செவ்வாய்கிழமை தாக்குதலில் பங்கேற்றிருந்தனர் என அமெரிக்க இராணுவ பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அதே பெயர்களை உடையவர்கள் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறினர். Mohamed Atta, Abdul Aziz-Al-Omari, Saeed Alghamdi என்னும் மூவரே அவர்கள் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.

திரு. அட்டா அலபாமாவில் உள்ள மாக்ஸ்வெல் விமான தளத்தில் உள்ள சர்வதேச அதிகாரிகள் பள்ளிக்கு சென்றிருந்தார்; திரு.அல் ஒமாரி டெக்சாஸில், புரூக்ஸ் விமானப்படை தளத்தில் உள்ள வான்வெளி மருத்துவப் பள்ளிக்கு சென்றிருந்தார்; மற்றும் திரு. அல்காம்தி கலிஃபோர்னியாவில், மோன்டெரியில் உள்ள பாதுகாப்பு மொழி நிறுவனத்திற்கு சென்றிருந்தார் என்று பாதுகாப்புத்துறை கூறியது.

Knight Ridder செய்தி நிறுவனமும் கூட சயீத் அல்காம்தி மோன்டெரியில் உள்ள பாதுகாப்பு மொழி நிலையத்தில் இருந்திருக்கிறார் என செய்தி அறிவித்தது. அமெரிக்க விமானப் படையை மேற்கோள்காட்டி, அசோசியட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட விமானக் கடத்தல்காரர்கள் அந்த நிலையத்தில் மொழிப்பயிற்சி பெற்றிருக்கலாம் என்று கூறுகிறது.

அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் அமெரிக்க இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பை பற்றி மேலும் ஆய்வு நடைபெறுவதை தடை செய்வதற்காக ஒரு மேலோட்டமான அறிக்கையை வெளியிட்ட பின்னர், செய்தி ஊடகம் இந்தப் பிரச்சினையை கிடப்பில் போட்டது. சந்தேகத்திற்குரிய சில விமானக் கடத்தல்காரர்களின் பெயர்கள் "அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு மாணவர்களின் பெயர்கள் போலவே இருந்தன" என்பதை ஒப்புக்கொள்கின்றன. ஆனால் பிறந்த தேதிகள், பெயர் உச்சரிப்புகள் முதலியவை வேறுபடுகின்றன, அது "ஒருவேளை நாம் அதே ஆட்களைப் பற்றிப் பேசாதும் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது" என்று அறிக்கை கூறியது. ஊர்ஜிதப்படுத்தாமலேயே, விமானக் கடத்தல்காரர்கள் அமெரிக்க இராணுவத் தளங்களில் பயிற்சி பெற்ற மற்ற வெளிநாட்டவர்களின் அடையாளங்களை திருடியிருக்கலாம் என இந்த அறிக்கை கூறுகின்றது.

இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. அமெரிக்க விமானப்படை விமானக் கடத்தல்காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பொருந்துகின்ற பெயர்களை உடைய தனிநபர்களது வயதுகள், நாடுகள் மற்ற தகவல்களை வெளியிட மறுத்துவிட்டது. இதனால் இவர்கள் அவர்கள் இல்லை என்ற கூற்றை சரிபார்ப்பதை உண்மையில் இயலாததாக்கியது.

Attorney General John Ashcroft-ம் FBI-ம் எந்த தகவலையும் வெளிப்படுத்த மறுத்துவிட்டனர். புளோரிடா செனெட்டர் பில் நெல்சன், நீதித்துறையை விமானக் கடத்தல்காரர்கள் பென்சாகோலா இராணுவத் தளத்தில் பயிற்சி பெற்றார்களா என்று வினவினார். செனட்டரின் பிரதிநிதியின்படி, நீதித்துறை இந்த கேள்விக்கு எந்தவித உறுதியான பதிலும் அளிக்கவில்லை. FBI "சிக்கலான கடினமான ஒன்றின் வழியாக பிரச்சனையைக் கையாள" அதனால் முடியும் வரைக்கும் அது பதிலிறுக்க முடியாது என்று கூறிவிட்டது.

அமெரிக்க இராணுவத் தளங்களில், விமானக் கடத்தல்காரர்கள் இத்தகைய பயிற்சி பெற அமெரிக்க அரசாங்கத்துடன் சுமுகமான உறவு கொண்டிருக்கும் அரபு அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டும். நியூஸ் வீக் இதழுக்கு பென்சாகோலா விமானத் தளத்தில் பணிபுரிந்த ஒரு முன்னாள் கடற்படை பைலட் கூறியதாவது, "தான் அங்கு பணிபுரிந்த ஆண்டுகளில் பிறநாட்டவருக்கு பயிற்சி எப்பொழுதும் அளிக்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஈரானியர்கள் பயிற்சி பெற்றனர். ஷா அதிகாரத்தில் இருந்தார். அமெரிக்காவுடன் நட்புறவை யார் யார் கொண்டுள்ளனரோ, அந்த நாடுகளின் விமான ஓட்டிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தோம்" என்றார் இவர்.

அமெரிக்க இரணுவ அதிகாரிகள், அமெரிக்கா சவூதி அரேபியாவுடன் நெடுநாளைய ஒப்பந்தம் ஒன்றை செய்துக்கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இதன்படி அரேபிய தேசீய பாதுகாப்பு படையின் விமான ஓட்டிகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும். இவர்கள், செளதி அரேபியாவால் பணம் செலுத்தப்படும் வேலைத்திட்டங்களில், பல இராணுவ, கப்பல் படை தளங்களில், விமான போர் முறை மற்றும் யுத்த பயிற்சிகள் பெறுகின்றனர். விமானக் கடத்தல்காரர்கள் 19-ல் 15 பேர் சவூதி அரேபியாவை சார்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

அதன் வலைதளத்தின்படி, மோன்டெரியில் 1946-ல் பாதுகாப்பு மொழி நிறுவன வெளிநாட்டு மொழி கல்விமையம் (Defense Language Institute Foreign Language Centre) இராணுவ உளவுச் சேவை மொழிப் பள்ளி (Military Intelligense Service Language School) என நிறுவப்பட்டது. இது "தேசிய பாதுகாப்பு நலன்களுக்கும் பூகோள செயல்பாட்டுத் தேவைகளுக்கும்" ஆதரவு அளிக்கும் பாதுகாப்பு துறைக்கு, மற்ற அரசாங்க முகவாண்மைகளுக்கும் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் வெளிநாட்டு மொழிகளில் சேவை செய்கிறது.

மாணவர்களின் துணைவேந்தராகப் பணியாற்றிய பட்லர் மாணவர்களுடன் அதிக தொடர்பு வைத்திருந்தார். இவ்வாறு இந்த மொழிப் பள்ளியில் குடிமக்கள் பணியாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், அரசுப் பணியாளர்களின் தேசியக் கூட்டமைப்பு லோக்கல் 1690 என்ற சங்கத்தின் தலைவரும் பட்லரின் நெருங்கிய நண்பருமான அதிகாரி Pete Ransdazzo என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்.

பட்லர் மாணவர்களுடன் சாப்பிடுவார். அவர்களுடைய வகுப்பறைகளில் அமருவார். அவர் மாணவர்களின் நலன் மீது அதிக அக்கறை செலுத்தினார் என்று Randazzo, Herald பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். வளைகுடா போரின்போது Butler B-52 போர் விமானத்தை செலுத்தினார். 1990-91 ஈராக்கிற்கெதிரான போரின் பொழுது அமெரிக்கா- செளதி அரேபிய உறவுகள் நெருக்கமாயிருந்தன, செளதி அரேபியாவின் இராணுவ செயல்பாடுகளை அவர் அறிந்திருந்தார்.

1990களில், பல இராணுவ அதிகாரிகள், ஜனாதிபதி கிளிண்டனை பகிரங்கமாக கண்டனம் செய்ததற்காக இராணுவ சட்டம் பிரிவு 88 கீழ் தண்டிக்கப்பட்டனர். இதில் ஒரு அமெரிக்க விமானத் தளபதி, கிளின்டனை "கஞ்சா சாப்பிடும், இராணுவப் பணியைத் தட்டிக் கழிக்கும், பெண் பித்தர்" என 250 பேர் முன்னிலையில் ஒரு பரிசளிப்பு விழாவில் விமர்சித்தார்.

பட்லர் கூற்றினால் பென்டகன் சிக்கலான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. பட்லருக்கு செப்டம்பர் 11 நிகழ்வுகளின் பின்னணி, அமெரிக்க இராணுவ உளவுத்துறை ஈடுபாடு பற்றி அதிகமாக தெரிந்துள்ளது. தான் ஓய்வு பெறும்போது, உண்மையைக் கூறும் வாய்ப்பை எடுத்துக் கொண்டார்.

See Also:

செப்டம்பர் 11 விசாரணையிலிருந்து தப்பி ஓட வெள்ளை மாளிகை ஆத்திரமூட்டலை பயன்படுத்துகிறது

சதியும் மூடி மறைப்பும்: புஷ் நிர்வாகமும் செப்டம்பர் 11ம்

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?

சர்வாதிகாரத்தின் நிழல்: செப்டம்பர் 11க்குப் பின்னர் புஷ் இரகசிய அரசாங்கத்தை நிறுவினார்

புஷ் நிர்வாகத்துக்கு ஏன் யுத்தம் அவசியமாகியுள்ளது?

நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்

Top of page