WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
Cheney's brief for war: a mass of lies and
historical falsifications
செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்
By David Walsh and Barry Grey
2 September 2002
Back to screen version
கடந்த வாரம் இரு நிகழ்ச்சிகளில் அமெரிக்க உதவி ஜனாதிபதி டிக் செனி பேசியது, அமெரிக்காவை
ஈராக்குடன் போரில் முன்னோக்கிச் செலுத்துவதற்கு புஷ் நிர்வாகத்தால் ஆன அரசியல் தாக்குதலைத் திறந்து விட்டிருக்கிறது.
உண்மையில் ஒத்ததாக இருந்த இரு பேச்சுக்களும், நிர்வாகத்தின் போர் திட்டங்களுக்காக ஆளும் வட்டாரத்துக்குள்ளே
ஆதரவைத் திரட்டுவதை விடவும் அமெரிக்க பொதுமக்களுக்கு "நியாயப்படுத்திக் காட்டுவதை" குறைவாகச் செய்யும்
நோக்கத்தைக் கொண்டிருந்தன.
சதாம் ஹூசைனைக் கவிழ்த்துவிட்டு கைப்பொம்மை ஆட்சியை நிறுவும் நோக்கத்திற்காக
வருகின்ற வாரங்களில் அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்கான திட்டங்கள் மீதாக, கடந்த பல வாரங்களாக புஷ் நிர்வாகம்
தன்னும் உட்பட, அரசியல் தட்டுக்குள்ளே மூர்க்கமான மோதல் பொங்கி எழுந்திருக்கிறது.
முதலாவது புஷ் நிர்வாகத்தில் (1983-93) முக்கிய பிரமுகர்களாக இருந்தவர்கள் தற்போதைய
அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கான திட்டங்களை வெளிப்படையாக எதிர்த்திருக்கின்றனர். முன்னாள் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் பிரெண்ட் ஸ்கெளகிராப்ட், ஈராக்குடனான உடனடியான மோதல் அப்பிராந்தியத்தை சீர்குலைக்க
முடியும் மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான போரை" கீழறுத்துவிடும் என இம்மாதத் தொடக்கத்தில் விவாதித்தார்.
பாக்தாத் ஆட்சியானது உடனடி அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லாமை புதிய
போருக்கான ஆதரவில் சர்வதேச ஒத்துழைப்பை அணிதிரட்டுவதைத் தடுத்துவிடும் என அவர் மேலும் கருத்துரைத்தார்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் புளோரிடாவில் வாக்குகளை எண்ணுவதைத் தடுக்க புஷ் பிரச்சாரத்தை
வழிநடத்தியவரான, முன்னாள் அரசு செயலாளர் ஜேம்ஸ் பேக்கர், ஆகஸ்டு 25 அன்று நியூயோர்க் டைம்ஸ்-ல்
வெளியிடப்பட்ட கருத்துப் பகுதியில், தற்போதைய நிர்வாகம் ஈராக்கில் "ஆட்சி மாற்றம்" தொடர்பாக "சரியான
வழியில்" போகவில்லை என்று விவாதித்தார். பேக்கர், புஷ்-ஐ ஐக்கிய நாடுகள் அவைக்குப் போகுமாறும் "எந்தவித
விதிவிலக்கும் இன்றி, எந்த நேரமும், எங்கும் தலையீட்டு சோதனைகள் நடத்துவதற்கு" ஈராக் கீழ்ப்படிந்து போவதை
தேவையானதாக்கும் தீர்மானப் பந்திக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஈராக் அத்தகைய தீர்மானத்தை
ஏற்க மறுக்குமானால், அல்லது எந்த வகையிலும் அதன் நடைமுறைப்படுத்தலை எதிர்க்குமானால், அமெரிக்கா "தார்மீக
உயர் நெறியின் அடித்தளத்தை ஆக்கிரமிக்கலாம்" மற்றும் சர்வதேச ஆதரவுடன் போருக்கு போகமுடியும் என பேக்கர்
விவாதித்தார்.
செனி, அவரது உரையில் இந்த விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்தார். அவர்
அரசியல் நிறுவனத்திற்குள் உள்ள மிகவும் ஈவிரக்கமற்ற மற்றும் இராணுவ ரீதியான பிரிவினருக்காகப் பேசுகிறார், அது
--பலாத்காரத்தின் மூலம்-- உலகின் புதிய பிரிவுகளைத் திணிப்பதற்கு அமெரிக்க இராணுவ மேலாளுமையைப் பயன்படுத்துவதற்கு
விரும்புகிறது, அதில் அமெரிக்கா பூகோள மேலாதிக்கப் பாத்திரத்தினை ஆக்கிரமித்துக் கொள்கிறது.
ஈராக்கிற்கு எதிராக முன்னதே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் போருக்கானதாகச் செய்வது,
ஜனாதிபதி புஷ்ஷை விடவும் செனியிடம் விடப்பட்டது என்ற உண்மை, நிர்வாகத்திற்குள்ளே உள்ள சக்திகளின் உண்மையான உறவை
கோடிட்டுக் காட்டுகிறது. முன்நின்று செயல்படுவது செனிதான். புஷ் முன்னணியில் நிற்பவரை விட சற்று அதிகமாய், பெயரளவில்
அவரின் கீழ் வேலைசெய்பவர்களிடம் கூட தன் நடத்தையால் எளிதில் அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டார்.
செனி எதிராகப் பேசிய விமர்சகர்கள் ஈராக்கிற்கெதிரான அமெரிக்க ஆக்கிரமிப்பை
கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை; இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மத்தியில் கிழக்கில் உள்ள எல்லைப் புறங்கள்
மற்றும் வளங்களில் அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவாக்குவதை ஏதோ வகையில் இன்னும் எச்சரிக்கையுடன் அணுகுகின்றனர்.
இந்த சக்திகள் செனி பிரிவினர் அமெரிக்காவை போதுமான அளவு இராணுவத் தயாரிப்பின்றி அல்லது ராஜதந்திர தயாரிப்பின்றி,
அமெரிக்காவில் போதுமான அளவு பொதுமக்கள் கருத்தைத் தயாரிக்காமல், அமெரிக்காவை எச்சரிக்கை உணர்வின்றி
போருக்குள் தள்ளுவது பற்றிக் கவலைப்படுகின்றனர், மற்றும் அந்த வகையில் அது தேவையற்ற வகையில்
ஐரோப்பாவிலிருந்து அந்நியப்பட வைக்கும், அரபு முதலாளித்துவ ஆட்சிகளைக் கீழறுக்கும் மற்றும் சர்வதேச
பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை கணக்கிட முடியாத விளைபயன்களுடன் சீர்குலைக்கும் என்று கவலைப்படுகின்றனர்.
செனி உரையாற்றியதற்கான நிகழ்விடங்கள் --ஆகஸ்ட் 26 அன்று, டெனெஸியில் உள்ள நாஷ்வில்லேயில்,
வெளிநாட்டுப் போர்களில் பங்கேற்று ஓய்வு பெற்றவர்களின் தேசிய மாநாடு மற்றும் மூன்று நாட்கள் கழித்து,
டெக்சாஸ், சான் அன்டனியோவில் கொரியப் போரில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற இராணுவத்தினர் ஒன்று கூடல்-- அவற்றின்
சொந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய பார்வையாளருக்கு உத்தரவாதம்
அளிப்பதற்கு அப்பால், போரில் இருந்து ஓய்வுபெற்றவர் குழுக்களைத் தேர்ந்தெடுத்தது, கணிசமான அளவு சேதத்தைத்
தவிர்க்க முடியாததாக ஆக்கும் ஆழமான தாக்குதலுக்கும் ஈராக் மீதான நீடித்த ஆக்கிரமிப்புக்கும் இராணுவத்தினுள்ளே உள்ள
எதிர்ப்பை முதலில் வென்று வருவதற்கான நிர்வாகத்தின் மூலோபாயத்தைப் பிரதிபலிக்கிறது.
அதற்கு அப்பால், ஆதரவுக்காக இராணுவத்தின் பக்கம் திரும்புவதன் மூலம் பொது மக்கள்
தொடர்பு பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கான அதன் இயல்பில் முற்றிலும் அது இருக்கிறது. அவரது சொந்த கட்சிக்குள்ளே,
அதேபோல புஷ் மந்திரிசபையில் உள்ள, வளைகுடாவில் ஒருதலைப் பட்சமான போர் குறித்து முன்எச்சரிக்கையாய்
இருக்கும் நபர்கள் உட்பட, காங்கிரஸ், அரசுத்துறை மற்றும் வெளிவிவகாரக் கொள்கை நிறுவனம் இவற்றில் உள்ள
விமர்சகர்களுக்கு எதிரான ஒரு எதிர் எடையாக செனி மிகவும் நனவுடன் இராணுவத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றார்.
பேச்சுக்கள் பொதுவில் செய்தி ஊடகத்தால், அதன் முன்னாளைய தாராண்மை பிரிவு உள்ளிட்ட
அவற்றால் புகழப்பட்டன. அவை அரசியல் பரிவர்த்தனைக்கு அளிக்கப்பட்ட சிரத்தை மிகுந்த பங்களிப்பாக நடத்தப்பட்டன.
எடுத்துக்காட்டாக, வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியத் தலையங்கம் (ஆகஸ்ட் 27), "சதாம் ஹூசைனின் ஆட்சியால்
முன்வைக்கப்படும் ஆபத்து மற்றும் அதற்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கான காரணங்கள் பற்றிய புஷ் நிர்வாகத்தின்
மிகப்பரவலான மற்றும் சக்திமிக்க அறிக்கை" என செனியின் முதல் பேச்சைக் குறிப்பிட்டது, மற்றும் செனியை அவரது
போரைத் தூண்டும் செய்தியை வழங்குதலில் "எளிதில் உணர்ச்சி வசப்படுகின்ற மற்றும் தூண்டி இயக்கக்கூடியவர்" என
விவரித்தது.
உண்மையில், செனியின் குறிப்புக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்கள்
மற்றும் பொய்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
ஈராக்கிற்கு எதிரான போருக்காக தக்க ஆதாரமாகத் தன் கூற்றை வைக்கும் விதத்தில்,
ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் முன்மொழியப்பட்ட ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆகியன முடிவில்லாத திறந்த மோதலின்
ஆரம்ப சுடுதல்களாக இருந்தன என்று வலியுறுத்துவதன் மூலம் செனி ஆரம்பித்தார். "ஆனால் செயலாளர் (பாதுகாப்பு)
ரம்ஸ் பெல்ட் வைக்குமாப்போல், நாம் இந்தப் போரின் தொடக்கத்திற்கு அதன் முடிவை விடவும் இன்னும் நெருக்கமாக
இருக்கிறோம்" என்று அவர் நாஷ்வில்லேக்கு வருகை தந்தோரிடம் கூறினார். ஐக்கிய அமெரிக்க அரசுகள் போராட்ட
ஆண்டுகளில் நுழைந்துள்ளது --"புதிய வகையிலான எதிரிக்கு எதிரான புதிய வகையிலான போரில் நுழைந்துள்ளது." அமெரிக்காவால்
உடைமையாகக் கொள்ளப்பட்டிருக்கும் இராணுவ சாதகநிலைமைகளை விவரிப்பதற்கு "எதிர்காலப் பிரச்சாரத்தில் மட்டும்
அது மிகவும் சக்திமிக்கதாக இருக்கும்" என கூறிச்சென்றார்.
இந்த மோதலின் புவியியல் வரையறைகளின் அர்த்தத்தில், "அங்கு பயங்கரவாத நிழல்
உலகம் இருக்கிறது, 60 நாடுகளுக்கும் மேலான நாடுகளின் மத்தியில் பரவியுள்ளது" என செனி வலியுறுத்தினார். ஐக்கிய
நாடுகள் அவையில் 189 உறுப்பினர்கள் உள்ளனர்; செனியின் படி, ஆகையால், உலகில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு
இந்த "பயங்கரவாத நிழல் உலகத்துக்கு" இல்லமாக இருக்கின்றது மற்றும் அமெரிக்கத் தலையீட்டின் சட்டப்பூர்வமான இலக்கு
என்பது மெய்யெனக் கொள்ளத்தக்கது.
செனியின் செய்தி தவறில்லாதது: அமெரிக்க மக்கள் தொடர்ச்சியான போரின் தசாப்தங்களுக்கு
கட்டாயம் பழக்கம் பெறுவர்.
இந்த இரத்தவெறி முன்னோக்கை நியாயப்படுத்துதற்கு, செப்டம்பர் 11க்குப் பின்னர் புஷ்
நிர்வாகத்தால் ஆதரவு காட்டப்பட்ட தந்திரோபாயத்தை, அதாவது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் விதைத்தலை
நாடினார். அவர் பின்வருமாறு பிரகடனம் செய்தார், "9/11
மற்றும் அதற்குப் பிறகு இந்த நாடு ஆபத்துக்கு, பூகோள பயங்கரவாத வலைப் பின்னலின் உண்மையான குறிக்கோள்களுக்கு
மற்றும் நமக்கு எதிராக பேரழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்துதற்கு தயங்காத உறுதியான பகைவர்களால் நாடப்பட்டிருக்கும்
பரந்த அழிவுகரமான ஆயுதங்கள் என்ற யதார்த்தத்திற்கு விழிப்படைந்தது."
அத்தகைய பண்பிட்டுக்காட்டல்கள் அமெரிக்க மத்தியில் கவலைப்படும் நிரந்தரமான நிலையை
உருவாக்க நோக்கம் கொண்டிருக்கின்றன. இது பல நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. வர இருக்கும் அழிவுக்கு எதிராக
மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பாளர்களாக அரசாங்கத்தை, இராணுவ மற்றும் உளவு நிறுவனத்தை முன்வைக்கும் முயற்சிக்கு
அது முண்டு கொடுக்கிறது, இவ்வாறு ஜனநாயக உரிமைகளின் சாரத்தை எடுத்துவிடுகிறது மற்றும் எதேச்சாதிகார நடவடிக்கைகளைத்
திணிக்கிறது.
மேலும், இந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் மொழியானது, செப்டம்பர் 11 தாக்குதல்களின்
எந்தவிதமான அறிவுபூர்வமான மதிப்பீட்டையும் அவற்றை புலன்விசாரணை செய்யும் எந்த முயற்சியையும் கீழறுப்பதற்கு
கணிப்பிடப்பட்டது. புஷ் நிர்வாகமானது பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணையை கடுமைதணியாது எதிர்த்திருக்கிறது
ஏனென்றால் அது மறைப்பதற்கு நிறைய வைத்திருக்கிறது. அக்கறை கூடிய விசாரணையானது, குறைந்த பட்சம், அரசாங்கம்
குற்றத்தனமான அலட்சியம் செய்யும் மற்றும் மிகப் பெரும்பாலும் உளவு மற்றும் பாதுகாப்பு முகவாண்மைகளை கடமையிலிருந்து
வேண்டுமென்றே விலகவைத்த குற்றம் செய்தது என்று எடுத்துக்காட்டும். அது புஷ் நிர்வாகமானது, முன்னரே நன்கு பெறப்பட்ட
போர்த்திட்டங்களைத் திணிப்பதற்கு, செப்டம்பர் 11 சம்பவங்களைப் பற்றிக் கொண்டது என்பதை நிறுவும்.
கடந்த வாரப் பேச்சுக்களில், செனி அவரது பீதியூட்டும் பேச்சை அபத்தத்தின் உச்சிக்கு
எடுத்துச் சென்று, சூறையாடப்பட்ட மற்றும் ஏழ்மை நிறைந்த ஈராக்கை ஜப்பானிய பேரரசுக்கும் நாஜி ஜேர்மனிக்கும்
ஒப்பிட்டு மேலும் புதிய பேர்ள் துறைமுகம் பற்றி எச்சரித்தார்.
ஈராக்கிற்கு எதிரான போருக்கான செனியின் விவரத்தின் சாரம் பல வாத மூலக் கூறுகளை
அடிப்படையாகக் கொண்டிருந்தது, அவற்றில் ஒன்று கூட ஆய்வின் முன் நிற்கவில்லை.
"எதிரியைத் தாக்குக்காட்டி தடுத்து வைத்திருக்கும் சூழ்ச்சி நயத்திற்கு" பதிலாக முன்னரே
தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் போர்
கடந்த ஜூன் மாதம் அவரது மேற்கு முனைப் பேச்சில் புஷ்-ஆல் முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாட்டை
திரும்பக் கூறும்விதமாக, செனி புதிய உலக நிலைமைகளில் "பழைய பாதுகாப்பு கோட்பாடுகள் பொருந்தாது" என்ற
கருத்தை நாட்டில் வலியுறுத்திக் கூறினார். "குளிர் யுத்த நாட்களில் அச்சமூட்டி செயலூக்கம் கெடச்செய்யும் மற்றும் எதிரியைத்
தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயம் ஆகிய மூலோபாயங்களுடன் நம்மால் அச்சுறுத்தலை சமாளிக்க முடிந்தது"
என்று உதவி ஜனாதிபதி குறிப்பிட்டார். சர்வாதிகாரிகள் பேரழிவுகரமான ஆயுதங்களைப் பெற்று, அவற்றைப் பேரழிவுகரமான
சேதங்களை ஏற்படுத்த விரும்பும், பயங்கரவாதிகளுடன் பங்கிட்டுக் கொள்ள தயாரிப்பு செய்திருக்கின்ற பொழுது, ஆனால்
தாங்கள் பாதுகாப்பதற்கு நாடு இல்லாத பகைவர்களை அச்ச மூட்டி செயலூக்கங்கெடச் செய்வது மிகக் கடினமாக இருக்கிறது,
மேலும் எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயம் சாத்தியமில்லை."
நிரூபிக்கப்படாத மற்றும் ஊழிக்காலப் பேரழிவு பற்றிய வலியுறுத்திக் கூறல்கள் ஒரு புறமாக
இருக்கட்டும், செனியின் விவாதம் தொடரான non
sequiturs ஆகும். அமெரிக்கா, உயர்ந்த அளவில் வளர்ச்சி
அடைந்த சமூகத்தால், சோவியத் ஒன்றியத்தால் மோதலை எதிர் கொண்ட பொழுது -- அது ஒவ்வொரு பிரதான அமெரிக்க
நகரங்களையும் இலக்குக்குக்கொண்ட ஆயிரக்கணக்கான அணு ஆயுத ஏவுகணைகளைக் கொண்டிருந்தது-- எதிர் கொண்ட அச்சுறுத்தல்,
இன்று அது கொரில்லா அணிகளால் எதிர் கொள்ளப்படுவதைவிடக் குறைந்த அச்சுறுத்தலையே எதிர் கொண்டது என்ற
கருத்து, தர்க்க ரீதியான மற்றும் பொது அறிவை நோக்குகையில் அவ் ஒப்பீடு மறுத்துக் கூறுகிறது.
மேலும், முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் போர் புதிய உலக சூழ்நிலையால் அறிவுறுத்தப்படும்
புதிய கோட்பாடு என்ற கூற்று, இந்தக் கொள்கையை பாதுகாப்பு நடவடிக்கையாக முன்வைக்கும் முயற்சி என்ற கூற்று
பொய்யானது. யதார்த்தத்தில், "புஷ் கோட்பாடு" குளிர் யுத்த காலகட்டத்தில் அமெரிக்க ஆளும் தட்டின் மிக வலதுசாரி
மற்றும் போர் வெறிகொண்ட பிரிவால் முன்னெடுக்கப்பட்ட "பின்நோக்கி சுருட்டல்" மூலோபாயத்தை புதுப்பிப்பதாகும்.
"பின்நோக்கி சுருட்டல்" -க்கு வக்காலத்து வாங்கியவர்கள், சோவியத் செல்வாக்கை "எதிரியைத் தாக்குக் காட்டி தடுத்து
வைத்திருக்கும் சூழ்ச்சி நயம்" பற்றிய மேலாதிக்கக் கொள்கையை நிராகரித்தனர். அவர்கள் சோவியத் சோசலிச குடியரசுகளின்
ஒன்றியத்தை சீர்குலைக்கவும் மற்றும் அதனைத் தனிமைப்படுத்தவும் சோவியத் ஆதரவு அரசுகளைத் தூக்கி எறியவும் இராணுவ
அழுத்தத்தை, பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியை உக்கிரமாகப் பயன்படுத்தலை அவர்கள் முன்னெடுத்தனர். இப்பொழுது
"பின் நோக்கி சுருட்டலின்" விடாப்பிடியர்களின் சித்தாந்த வாரிசுகள் அரசியல் மற்றும் இராணுவ அமைப்பில் மேலாதிக்க
சக்தியாக ஆகி இருக்கின்றன.
ஈராக்கிற்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ எதிரான "முன்னரே தாக்கித் தனதாக்கிக்
கொள்ளும்" போர் பயங்கரவாதத்தின் வளர்ச்சியால் அமெரிக்கா மீது திணிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இயல்நிகழ்ச்சி
இந்த உலகத்தில் புதிது என்பது அரிதானது. இன்னும் சொல்லப்போனால், சோவியத் ஒன்றியத்தின் பொரிவானது, அமெரிக்காவுக்கு
எண்ணெய் சேர்ம இருப்புக்களையும் ஏனைய முக்கிய வளங்களையும் கட்டுப்படுத்தும் பிடியை இறுக்குவதற்கு,
முழுப்புவிக்கோளம் முழுவதும் அமெரிக்க மேலாதிக்கத்தைத் திணிப்பதற்கும், அதனைப் பொறுத்தவரை அதன் இராணுவ மேலாளுமையைப்
பயன்படுத்திக் கொள்வதற்கான, "வாய்ப்புக்கான பலகணி" ஒன்றை அமெரிக்கா பெற்றிருப்பதாகப் பார்க்கப்பட்டது.
ஈராக்கும் "பேரழிவுகரமான ஆயுதங்களும்"
உதவி ஜனாதிபதி தனது பேச்சில் ஈராக்கில் ஹூசைன் ஆட்சி இரசாயன ஆயுதங்களையும்
உயிரி ஆயுதங்களையும் உடைமையாகக் கொண்டிருப்பதாகவும் மேலும் அது அணு குண்டை அபிவிருத்தி செய்வதின் விளிம்பில்
இருக்கின்றது எனவும் குற்றம் சாட்டினார்.
செனி அறிவித்தார், "சாதாரணமாகச் சொன்னால், இப்பொழுது சதாம் ஹூசைன் பரந்த
பேரழிவுகரமான ஆயுதங்களைக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை; எமது நண்பர்களுக்கு எதிராகப் பயன்படுத்த,
எமது கூட்டாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த, மற்றும் எமக்கு எதிராகப் பயன்படுத்த அவற்றை அவர் குவிக்கப் போகிறார்
என்பதில் ஐயமில்லை. அவரது வம்புக்கு இழுக்கும் பிராந்திய குறிக்கோள்கள் அவரது அண்டை அயலாருடன் எதிர்கால
மோதலுக்கு அவரை இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை..."
செனி எந்தவிதமான உண்மை ஆதாரங்கள் எதுவுமின்றி அப்பட்டமான குற்றச் சாட்டுக்களை
வீசுகிறார் என்ற உண்மையை இருட்டடிப்பு செய்ய, "ஐயம் இல்லை" என்ற சொற்றொடரைத் திரும்பத் திரும்பக் கூறிக்
கொண்டு, சொற்சிலம்பமாடும் தந்திரத்தை நாடுகிறார். ஐயத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறதென்றால், இந்தக்
குற்றச்சாட்டுகளுக்கு சான்று எதுவுமில்லை என்பதுதான்-- குறைந்த பட்சம் அமெரிக்க அரசாங்கத்தால் ஒன்று
கூட முன்வைக்கப்படவில்லை.
செனி, அவரது நாஷ்வில்லே பேச்சில் மேற்கோள் காட்டிய ஈராக்கிய நம்பிக்கைத் துரோகத்தின்
"ஒரு எடுத்துக்காட்டு" விரைவிலேயே பொய் என்று அம்பலமானது. "1995 வசந்தத்தின் பொழுது,"
[UNSCOM ஆயுத]
பரிசோதகர்கள், இரசாயன ஆயுதங்களையும் நீண்ட தூர (Ballistic
missiles) ஏவுகணைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான சதாம்
ஹூசைனின் திட்டங்கள் கணக்கெடுக்கப்பட்டன மற்றும் மூடப்பட்டன என்று பிரகடனம் செய்யும் விளிம்பில் உண்மையில் இருந்தனர்"
என்று உதவி ஜனாதிபதி கூறினார். பின்னர் சதாம் ஹூசைனின் மருமகன் திடீரென பக்கம்மாறி தகவல்களைப் பரிமாறத்
தொடங்கினார். சிலநாட்களுக்குள் பரிசோதகர்கள் ஈராக்கிய கோழிப் பண்ணைக்கு சென்றனர். அங்கு பத்திரங்கள்
நிரம்பிய பெட்டிகள் மற்றும் ஈராக்கின் மிக இரகசியமான ஆயுதங்கள் சம்பந்தமான நிறைய ஆதாரங்கள் அங்கு மறைத்து
வைக்கப்பட்டிருந்தன." என்றார்.
இரண்டு நாட்களின் பின்னர், பகிரங்க ஒலிபரப்பு சேவையின் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியில்,
முன்னாள் ஐ.நா ஆயுத பரிசோதகர்களின் தலைவர் ஸ்காட் ரிட்டர், செனி பாணி சம்பவங்களை மறுதலித்தார், "வரலாற்றைத்
திருத்துகிறார்" என அவரைக் குற்றம் சாட்டினார். அந்நேர்காணலில் ரிட்டர் கூறியாதாவது, "உதவி ஜனாதிபதி அமெரிக்க
மக்களுக்கு கூறியது பொய் கூறுவதற்கு ஒப்பானது. சதாம் ஹூசைன் மருமகன் ஹூசைன் கமால், விட்டோடும் பொழுது
அவரது ஆணையின் கீழ் அனைத்து ஆயுத வேலைத்திட்டங்களும் அழிக்கப்பட்டன என்று தெளிவாகக் கூறி இருந்ததை சி.ஐ.ஏ
நன்கு அறியும். இது உண்மை. நாம் பத்திரமிடுவதற்கு அவர் இட்டுச் செல்லவில்லை. ஈராக் அரசாங்கம் பத்திரமிட்டது."
அவரது சான் அன்டனியோ பேச்சைத் தொடர்ந்து மறுநாள், செனி, கோழிப் பண்ணை பற்றிய
செய்தித்துணுக்கை கைவிட்டார். செய்தி ஊடகத்தில் உள்ள எவரும் அதனைக் கண்டு கொள்ளவில்லை, அல்லது மெய்யெனக்
கொள்ளத்தக்கவாறு கவனிக்கவில்லை. அந்தப் பொய் அதன் நோக்கத்தை நிறைவேற்றியது.
சதாம் ஹூசைனும் இராசாயன ஆயுதங்களும்
அமெரிக்க அதிகாரிகளுடனான வழக்கத்தைப் போல, செனி சாதாம் ஹூசைனை ஒரு பூதமாக
உருப்படுத்திக்காட்டுதற்கு தனது பேச்சில் முயற்சி செய்தார், அதேவேளை 1980களின் பெரும்பகுதி முழுவதும் ஈராக்கிய
தலைவர் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்தார், மேலும் ஈரானுடன் ஆன ஈராக்கின் போரில் (1981-88) வாஷிங்டன்
ஈராக்கிற்கு ஆதரவளித்தது என்ற உண்மையை அலட்சியம் செய்து விடுகிறார். அமெரிக்க நலனில் சிக்கிய சி.ஐ.ஏ அடிவருடிகளுள்
அல்லது முந்தைய கூட்டாளிகளின் நீண்ட வரிசையில் ஒருவராக மற்றும் சர்வதேச ரீதியாக தொடக்கூடாதவராக மாற்றப்பட்டு
இருக்கிறவர்களுள் ஒருவராக ஹூசைன் இருக்கிறார். இந்தப் பட்டியலில் பனாமாவின் மானுவெல் நோரிகா, சேர்பியாவின்
ஸ்லோபோடன் மிலோசெவிக், சோமாலியாவின் மொகம்மது பரா அய்டிட் மற்றும் 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத்
துருப்புக்களுக்கு எதிராக முஜாஹைதீன்கள் போரிட்டபொழுது, அமெரிக்காவால் ஆயுதம் மற்றும் நிதியளிக்கப்பட்ட இஸ்லாமிய
அடிப்படைவாதிகளுள் ஒருவரான ஒசாமா பின் லேடன் ஆகியோர் உள்ளடங்குவர்.
1980களின் இறுதியில் சதாம் ஹூசைன் ஈரானிய படைகளுக்கு எதிராக மற்றும் குர்துகளுக்கு
எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அவர் அமெரிக்காவின் அறிதலோடு மற்றும்
மறைமுக ஆசீர்வாதத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அண்மைய நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை (ஆகஸ்ட்
18), "ஈரான்-ஈராக் போரின் பொழுது தீர்க்கமான சண்டையில் ஈராக்கிய கொமாண்டர்கள் இரசாயன ஆயுதங்களைப்
பயன்படுத்துவர் என்பதை அமெரிக்க உளவு முகவாண்மைகள் அறிந்திருந்தன" மற்றும் அவற்றை தடுப்பதற்கு ஏதும் செய்யவில்லை
என சுட்டிக் காட்டியது. அந்நேரம் மூத்த பாதுகாப்புத்துறை உளவு அதிகாரியாக இருந்த, கேர்னல். வால்ட்ர். பி.
லாங் என்பவர், டைம்ஸ் இடம், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஈரானிடம் "ஈராக் இழந்து விடக்கூடாது
என்பதை உத்தரவாதம் செய்யும் ஆற்றொணா நிலையில் இருந்தனர்" என கூறினார். "ஈராக்கியர்களால் யுத்தக் களத்தில்
வாயுவைப் பயன்படுத்தல் ஆழமான மூலோபாய அக்கறையின் விஷயமாக இருக்கவில்லை", என லாங் கூறினார்.
ஈரானுடனான ஈராக்கின் போரில், அமெரிக்கா ஆதரித்தது ஏனென்றால் அமெரிக்க ஆளும்
தட்டு ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என உணர்ந்தது. போர் முடிந்தது ஈரான்
பலவீனம் அடைந்ததும், வாஷிங்டன் பாக்தாதில் உள்ள மதச்சார்பற்ற தேசியவாத ஆட்சி எண்ணெய் வளம் மிக்க இப்பிராந்தியத்தில்
ஒரு சக்தியாகத் தோன்றும் முன்னேற்றத்தை இட்டு எச்சரிக்கை அடைந்தது. அமெரிக்க அதிகாரிகள் ஈராக்குடன் ஒரு
போரை நிகழ்த்துவதற்கு ஒரு சாக்குப் போக்கை உருவாக்குவதில் அவர்களின் கவனத்தைத் திருப்பினர், அவர்கள் ஆகஸ்ட்
2, 1990ல் குவைத் மீதான ஈராக் ஆட்சியின் ஆக்கிரமிப்பில் அதனைக் கண்டனர்.
அது முறையே, ஈராக்கிற்கான அமெரிக்கத் தூதர் ஏப்ரல் கிளாஸ்பி
(April Glaspie)
ஜூலை 25 அன்று ஹூசைனுடன் நடத்திய கலந்துரையாடலில், "அரபு-அரபு மோதல்களில் எங்களுக்கு கருத்து ஒன்றும் கிடையாது"
எனக் கூறிக்கொண்டு, ஈராக்கிய நடவடிக்கைக்கான, ராஜிய மொழியில் உண்மையான பச்சை விளக்கைக் கொடுத்திருந்தார்.
மேலும் கூட, அப்போதைய கூட்டுத்தளபதிகளின் தளபதி கொலின்பாவெல் ஆணையின் பேரில், குவைத் மீதான ஆக்கிரமிப்புக்கு
பல மாதங்கள் முன்னதாக ஈராக்கை இலக்கு வைத்து பாரசீக வளைகுடாவில் பெரும் அமெரிக்கத் தலையீட்டிற்கான திட்டங்களை
General Norman Schwarzkopf-
வரைந்தார். 1990 ஜூன் அளவில்,
Schwarzkopf ஈராக்கிய
கவசவண்டி படைப்பிரிவுகளுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்களை போரிட நிறுத்தி, ஏற்கனவே
போர்விளையாட்டுக்களை நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த்ராக்ஸை உயிரி ஆயுதமாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை சதாம்
ஹூசைன் தொடங்க அமெரிக்கா அவருக்கு உதவியது என்ற குறிகாட்டல் கூட அங்கு இருக்கின்றன. பழமைவாத பிரெஞ்சு செய்தித்தாளான
லு பிகாரோ, 1998ல், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளும் ஈராக்கிற்கு 1980களின் மத்தியில்
அந்த்ராக்ஸ் பேசில்லஸ் மரபுக்கூறுகளை ஈராக்கிற்கு அளித்தன என்று செய்தி வெளியிட்டது, பின்னர் ஹூசைன் ஆட்சி 1985
தொடக்கத்தில் இரகசிய உயிரி ஆயுத வேலைத் திட்டங்களை ஆரம்பித்திருந்தது. மேரிலாண்டில், ரோக்வில் என்னும் இடத்தில்
உள்ள American Type Culture Collection-ல்
உள்ள ஆய்வாளர்கள் இந்த அறிக்கையை உறுதிப்படுத்துகின்றனர்.
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா "விடுதலை செய்தல்"
ஈராக்கை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் நோக்கங்கள் ஒருங்கே தன்னலமில்லாத மற்றும்
மனிதாபிமானது என்பதற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் போரை ஆதாரமாக செனி மேற்கோள் காட்டினார்.
அவர், "அமெரிக்கா வெற்றிகொள்வதற்கு செயல்படவில்லை மாறாக விடுவிக்க செயல்படுகிறது என்பதை ஆப்கானிஸ்தானில்
இன்று உலகம் பார்த்திருக்கிறது" என பிரகடனம் செய்தார்.
அத்தகைய அறிக்கை நகைப்பிற்கிடமானது, அதன் விளைபயன்கள் அந்த அளவு கெடுநோக்குடையதாக
இல்லாதிருந்தால் செனி பேசினாலும் கூட, ஆப்கானிஸ்தானில் பயங்கரமான போர்க்குற்றங்களை ஆதாரப்படுத்தும் திரைப்பட
மற்றும் பத்திரிகை அறிக்கைகள் வெளிவருதல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க இராணுவப் படைகள் மற்றும்
அரசியல் தலைவர்கள், சிறைப் பிடிக்கப்பட்ட தலிபான் படைவீரர்கள், ஆயிரக் கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக் கணக்கானவர்களை
படுகொலை செய்ததில் சிக்கி இருக்கிறார்கள். ஜெனிவா விதிமுறைகளை மீறும் விதமாக இன்னும் நூறுபேர்கள் அமெரிக்காவால்
காலவரையற்று சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்க ஏவுகணைகள் மற்றும் வெடி குண்டுகளால் பல்லாயிரக்கான
ஆப்கான் குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறதை இதில் சொல்லத் தேவையில்லை.
மக்களின் மீதான போட்டி யுத்தப் பிரபுக்களின் பிடியைப் பலவீனமாக்க எதனையும் செய்யாத
அதேவேளை, அமெரிக்க தலையீடு நாட்டை மிக ஆற்றொணா வறுமை நிலையிலும் அராஜகத்திலும் கூட மூழ்கடித்துள்ளது.
ஹமீது கர்சாயின் கைப்பொம்மை ஆட்சி, அதன் முன்னணி உறுப்பினர்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கட்டாயம் பாதுகாக்கப்படும்
நிலை மற்றும் ஒழித்துக் கட்டப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக காபூலுக்கு வெளியே பயணம் செய்வது அரிதாக
இருக்கின்ற அளவுக்கு இழிவாக இருக்கிறது.
மேலும், ஈராக்கிற்கு எதிராக அமெரிக்க போர்த்திட்டங்கள் அனைத்து முக்கிய நகர்ப்புற
மையங்களிலும் குண்டுகளை ஒருமுகப்படுத்தி வீச அழைக்கிறது என்பதையும் அமெரிக்க இராணுவ திட்டமிடலாளர்கள் இராண்டாவது
வளைகுடாப் போரில் ஈராக்கிய பொதுமக்களின் சேதங்கள் முதலாவது வளைகுடாப்போரில் ஏற்பட்டதை விட மேலும் கூடியதாக
இருக்கும் என்பதையும் செனி நன்கு அறிவார்.
உடனடி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, செனியின் பேச்சுக்களின் மிக முக்கியமான அம்சம்,
ஈராக்கிற்கு எதிரான போரில் இறங்குவதற்கு முன்னர் புஷ் நிர்வாகம் சட்ட ரீதியான ஒரு மூடிமறைப்பைப் பெறும் விதமாக
ஐ.நா சபையிடம் முதலில் போகவேண்டும் என்ற, பல்வேறு ஐரோப்பிய தலைவர்கள் உள்பட, ஜேம்ஸ் பேக்கர் மற்றும்
ஏனையோரின் வலியுறுத்தல்களைப் பற்றிய அவரின் நிராகரிப்பாக இருந்தது. பல்வேறு பத்திரிகைச் செய்திகளின்படி, ஐ.நா
ஆயுத பரிசோதகர்களைப் பற்றிய விஷயத்தை போருக்கான சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதா இல்லையா என்ற
தந்திரோபாய விஷயம் புஷ் நிர்வாகத்தைத் தொடர்ந்து பிளவுபடுத்தி வருகிறது.
இந்தப் பிரச்சினை தொடர்பானதில், பேக்கரின் ஆலோசனையைப் பொறுத்தவரை மறைக்கப்படாத
ஏளனத்துடன் செனி பேசினார். அவர் கூறினார், "ஆயுதப் பரிசோதகர்கள் திரும்பிவரல் ஐ.நா தீர்மானங்களுக்கு அவரது
கீழ்ப்படிதல் என்னவாக இருந்தாலும் உத்தரவாதத்தை வழங்காது."
செனி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகியோரைச் சுற்றிய
புஷ் நிர்வாகத்தின் பிரிவு ஐ.நா சூழ்ச்சித் திட்டத்திற்கு குரோதமாக உள்ளது ஏனெனில் அது அமெரிக்கா அதன் இராணுவ
நடவடிக்கைகளை மற்றும் இராஜதந்திரத்தை எந்த சர்வதேச அமைப்பினாலும் அல்லது சட்ட விதிமுறைகளினாலும்
கட்டுண்டிருக்க விடாது என்ற கொள்கையை நிலைநாட்ட விரும்புகிறது.
அமெரிக்க செய்தி ஊடகத்தின்படி, செனியின் பேச்சு ஈராக்குடனான போர் மீதான பகிரங்க
"விவாதத்துக்கு" பங்களிப்பாக இருந்தது. அத்தகைய வாய்ச்சவடாலுக்கு எந்தவிதமான சாதக உள்ளடக்கத்தை சாட்டி
உரைப்பது, அல்லது அது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான ஜனநாயக ரீதியான "விட்டுக் கொடுத்தலை"
பிரதிநிதித்துவப்படுத்துகிறது என கூறுவது, மொதுமக்களுக்கு ஒரு அவமானமாகும். யதார்த்தத்தில், அமெரிக்க மக்கள்
முற்றிலுமாக கலந்தாலோசிக்கப்படவில்லை. ஈராக்குடனான போர் இராணுவத்துடனும் மற்றும் ஜனநாயக விரோத மற்றும்
மோசடி வழிமுறைகள் மூலம் ஒருவரை அதிகாரத்துக் கொண்டு வந்த அதி வலதுசாரிகளுடனும் மிக நெருக்கமாகத் தொடர்பு
கொண்ட அரசியல் கும்பலால் மக்கள் மீது திணிக்கப்பட இருக்கிறது. அது ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்தவிதமான
அக்கறை கொண்ட எதிர்ப்பையும் எதிர்கொள்ளாது அல்லது தாராண்மை அமைப்பைப் பொறுத்தவரை என்ன போய்க்
கொண்டிருக்கிறது என்பதை அது அறியும்.
போர் வெறியானது இரண்டு அடிப்படை காரணிகளால் இயக்கப்படுகின்றது. முதலாவதாக,
ஈராக்கிலும் மத்திய கிழக்கு முழுமையிலும் உள்ள, உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் வாயு வளங்கள் சிலவற்றைக்
கட்டுப்படுத்துவதை உறுதிப்படுத்த விழைகிறது. ஈராக்குடனான போர் இந்தப் பிராந்தியத்தில் சட்டப்படி எவ்வாறாயினும்
மெய்நடப்பில் அமெரிக்க காப்பாட்சிப் பிரதேசத்தை ஏற்படுத்துவதை நோக்கிய முதலாவது அடி எடுப்பாக மட்டுமே
இருக்கும்.
அதேநேரத்தில் அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்பானது உள்நாட்டில் அதன் கேடு
விளைவிக்கும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு --அது தீர்வு எதுவும் வைத்திராத நெருக்கடிக்கு-- ஆளும் தட்டினால்
விடுக்கப்பட்ட பதிலாக இருக்கிறது. "பயங்கரவாதம் மீதான போர்" முன்னென்றுமில்லாத அளவு கார்ப்பொரேட் குற்றத்தன்மைகளால்
கூட்டப்பட்டிருக்கும், பொருளாதார பின்னிறக்கத்தின் விளைபயன்களிலிருந்து திசைதிருப்பலாக சேவைசெய்வதை அர்த்தப்படுத்துகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க சமூகத்தின் கடும் முரண்பாடுகள் பரந்த மக்கள் தட்டினரிடமிருந்து செல்வந்தத்தட்டைப்
பிரிக்கும் பெரும் பிளவு, போர் ஓட்டத்தை எரிபொருளிட்டு இயக்குகிறது மற்றும் அதற்கு குறிப்பாக வன்முறைத் தன்மையை
உரித்தாக்குகிறது.
|