Is the US economy heading into deflation?
அமெரிக்கப் பொருளாதாரம் பணச்சுருக்கத்தை நோக்கி முன்னேறுகின்றதா?
By Nick Beams
29 August 2002
Back to screen version
கடந்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவுக்குச் சென்றபொழுது, விரைந்த
V வடிவ
பொருளாதார மீட்சிக்கான காட்சியுடன் உடன்பாடில்லாதவர்கள் மத்தியில் ஆரம்பக் கவலை, அந்த பின்னடைவு ஏதோ
நீண்டகாலத்திற்கு இருக்கும், அல்லது பொருளாதார மீட்சி நிகழ்ந்தால் கூட, பொருளாதாரமானது விரைவாக மீண்டும்
திரும்ப சறுக்கிச்செல்லும் -- "இரட்டை மூழ்குதல்" என அழைக்கப்படுவதை உதயமாக வைக்கும் என்பதாக இருந்தது.
அண்மைய காலகட்டத்தில், இந்தக் கணிப்புக்கள் இன்னும் அக்கறை கொண்ட கவலைக்கு வழிவிட்டிருந்தது:
அமெரிக்கப் பொருளாதாரம் ஏற்கனவே பணச்சுருக்க காலகட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது, அது 1990களின் ஆரம்பத்தில்
நிலம் சொத்து குமிழி மற்றும் அதன் பங்குச்சந்தை பொறிவினை அடுத்து ஜப்பானால் அனுபவிக்கப்பட்டது போன்றதல்ல.
இந்த அச்சங்கள் பின்னடைவின் இயல்பால் எரியூட்டப்பட்டிருக்கின்றன, இப்பின்னடைவு
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் உள்ள ஏனையவற்றிலிருந்து கணிசமான அளவு வேறுபடுகின்றது. முந்தைய பின்னடைவுகள்
நுகர்வோர் செலவினத்தில் வெட்டுக்களால் புறப்பட்டன, அது பொதுவில் வர்த்தக முதலீட்டில் வெட்டுக்களைத் தொடர்ந்து,
மத்திய ரிசர்வ் வாரியத்தால் திணிக்கப்பட்ட இறுக்கமான பணக்கொள்கையால் தொடங்கி வைக்கப்பட்டது. அத்தகைய
பின்னடைவுகளிலிருந்து பொருளாதாரப் புத்துயிர்ப்பு அதிகரித்த நுகர்வோர் செலவினத்தால் உற்பத்தி செய்யப்பட்டது, அது
இறுதியில் உற்பத்தியையும் முதலீட்டையும் தூண்டிவிட்டது.
இந்தக் காட்சிக்கு கடும் மாறுபாடாக, (ஆண்டின்) முக்கால் பகுதிக்கு மேலாக நீடித்த,
2001 பொருளாதாரப் பின்னடைவின் பொழுது, முன்னர் நினைத்ததுபோல இல்லாமல், நுகர்வோர் செலவு வீழ்ச்சி அடையவில்லை
மற்றும் அது தொடர்ந்தும் உயர்ந்திருந்தது. அதற்கு முக்கிய காரணி வர்த்தக முதலீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியாக இருந்தது.
2001-ன் முதல் மூன்று கால்பகுதிகளில், 57.2 பில்லியன் டாலர்கள் உண்மையான மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சியுடன் ஒப்பிடும்பொழுது, அதேகால கட்டத்தில் உண்மையான வர்த்தக மூலதன செலவில்
சரிவானது 88.2 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது.
இந்தப் புள்ளிவிரங்கள் தெளிவாக்குவது என்னவெனில், பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நுகர்வோர்
செலவினத்தால் தக்கவைக்கப்படுகிறது என்பதாகும். இருப்பினும், இது எதிர்காலத்திற்கான பிரச்சினையைத் தோற்றுவிக்கிறது.
நுகர்வோர் மட்டங்கள் ஏற்கனவே உயர்ந்திருந்தால் --கடன் மட்டங்கள் அதிகரிப்பால் தக்கவைக்கப்பட்டிருந்தால்--
அவை இன்னும் மேலதிகமாய் உயர்த்தப்பட முடியாது மற்றும் முதலீட்டிற்கான, அதிகரித்த இலாபத்தின் வளத்தையும் ஒரு
தூண்டுதலையும் அது வழங்க முடியாது.
விற்பனை தொடர்ந்து ஒப்பீட்டளவில் ஒரேமாதிரி மந்தமாக இருக்கும் இடத்தில், அதிகரித்த
இலாபத்திற்கான ஒரே வழி அடக்கச்செலவை வெட்டுவது என்று இது அர்த்ப்படுத்துகிறது. ஆனால், அடக்கச்செலவை
வெட்டுகையில், குறிப்பாக வேலைகளை வெட்டல், குறுகியகாலத்திற்கு ஒரு தனிப்பட்ட கம்பெனிக்கு இலாபங்களை அதிகரிக்கச்
செய்யலாம், அது பொருளாதாரம் ஒட்டு மொத்தமானதின் பிரச்சினைகளைக் கிளறிவிடுகிறது. இது ஏனென்றால் அதிகரிக்கும்
வேலையின்மை நுகர்வோர் செலவினத்தைக் குறைப்பதற்கு வழிவகுக்கிறது, இலாபங்களின் மேலான அழுத்தத்தைக் கூட்டுகிறது
மற்றும் மேலதிக அடக்கச்செலவு வெட்டை இன்றியமையாததாக்குகிறது. திரும்பத்திரும்ப ஒரே இடத்திற்கு வந்து நேரும்
நச்சுச் சூழலை இயக்கும் ஆபத்து அங்கு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளின் ஆய்வு கடந்த திங்கட்கிழமை நியூயோர்க் டைம்ஸில் வந்த
கட்டுரையின் கருப்பொருளாக இருந்த்து, அது அமெரிக்கா "பொருளாதாரத் தாழ்விற்குப் பின்னர் மிகப்புதுமையான
மற்றும் ஒருவேளை மிகவும் இடருக்குள்ளாக்கும் பொருளாதார மீட்சியால் பீடிக்கப்பட்டுள்ளது."
வாஷிங்டன் போஸ்டில் அதேநாளன்று வந்த கட்டுரை அதே கருத்தை எடுத்தது மற்றும்
பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் --விவசாயம் மற்றும் இரும்பு எஃகு இவற்றிலிருந்து கணிணி, மென்பொருள்
மற்றும் நிதிசேவைகள் வரை-- மிகைத் திறனின் அதிகரிக்கும் பிரச்சினைகளை சுட்டிக் காட்டியது. புள்ளிவிவரங்கள்
இருக்கின்ற, உற்பத்தித் தொழில்துறையில், சமீபத்திய தசாப்தங்களில் வரலாற்று ரீதியான சராசரியான, 81 சதவீத
சராசரியுடன் ஒப்பிடும்பொழுது, கடந்தமாதம் தொழிற்சாலைகள் 74.4 சதவீத மிகை உற்பத்தி ஆற்றலில் இயங்கிக்
கொண்டிருந்தன என்று மத்திய ரிசர்வ் வாரியம் மதிப்பிடுகிறது.
மிகை உற்பத்தி ஆற்றல் அர்த்தப்படுத்துவது பொருளாதாரத்தின் "உள்ளுறைந்த சாத்தியமான
உற்பத்திக்கும்" உண்மையான உற்பத்திக்கும் இடையில் அதிகரித்துவரும் இடைவெளியை ஆகும். கலிஃபோர்னிய பல்கலைக்
கழகத்து பொருளியலாளர் பிராட்போர்டு டிலாங்-ஆல் எழுதப்பட்டு, ஆகஸ்டு 20 அன்று ஃபைனான்சியல் டைம்ஸில்
வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, அமெரிக்கப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக 3--4 சதவீதம் உள்ளுறை ஆற்றலுக்குக்
கீழே இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் முன் கணிக்கும் வளர்ச்சி வீதம் 3.5 சதவீதமாக இருக்கையில், அதனை
எட்டினால், உற்பத்தி இடைவெளியை அதிகரிப்பதிலிருந்து தடுத்துவிடும், அதனை முடிப்பதற்கு ஒன்றும் செய்யாது.
வீழ்ச்சியடையும் விலைகள்
உற்பத்தி இடைவெளியின் இருத்தலானது இலாபவீதங்களுக்கு செயலற்ற அல்லது வீழ்ச்சியுறும்
விலைகளின் வழியாக இலாபவீதங்களுக்கு அழுத்தம் கொடுக்கும்.
"உள்ளுறை சாத்தியமான உற்பத்திக்கு கணிசமான அளவு கீழான உறபத்தியுடன், அங்கு அமெரிக்கப்
பணவீக்கத்தின் மீதான கீழ்நோக்கிய அழுத்தம் இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு பணவீக்கம்
வீழ்ச்சி அடைந்ததை நாம் ஏற்கெனவே பார்த்தோம். கீழ் நோக்கிய அழுத்தமானது குறைந்த பட்சம் அடுத்த ஒன்றரை
ஆண்டுகளுக்கு குறைவதை எதிர்பார்க்க முடியாது. இதன் அர்த்தம் 2004 கோடை அளவில் அமெரிக்கா பணவீக்க வீதத்தை
--குறைந்த பட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தி தளர்ச்சியால் அளவிடப்பட்டவாறு கொண்டிருக்கும்-- அது பூச்சியத்திற்குக்
குறைவாக இருக்கும். இந்த முன்கணிப்புக்கள் உண்மையானதாக ஆனால், அமெரிக்கா பணச் சுருக்கத்தில் ஜப்பானுடன் சேர்ந்து
கொள்ளும்" என டுலோங் எழுதுகிறார்.
ஆகஸ்ட் 5 அன்று வெளியிடப்பட்ட குறிப்புரையில், மோர்கன் ஸ்டான்லி ஸ்டீபன் ரோக், "ஜப்பானைப்போல,
குமிழிக்கு பிந்திய அமெரிக்கப் பொருளாதாரத்தில் பொருளாதார மீட்சியானது, சிறந்த முறையில் எளிதில் உடையக்கூடியதாக
மாறும்" என்று குறிப்பிட்டார்.
"வாஷிங்டனிலிருந்து வரும் அரசியல்ரீதியான சரியான சுழற்சி, எப்பொழுதும் 'அமெரிக்கப்
பொருளாதாரத்தின் அடிப்படைகள் ஒருபோதும் உறுதியாக இருந்திருக்கவில்லை' என்ற உணர்ச்சியற்ற கூற்றுடன் எப்போதும்
முடிகிறது. துன்பகரமாக, குமிழிக்குப் பிந்திய சகாப்தத்தில் --அளவுக்கு அதிகமான உற்பத்தி ஆற்றல், குறைந்த தேசிய
சேமிப்பு, பெரும் பயமுறுத்தும் கடன் மற்றும் பெருமளவிலான தற்போதைய பற்றாக்குறை கணக்கீடு இவற்றுடன் பொங்கி
வழியும்--உண்மையிலிருந்து பெறுவது மேலதிகமாய் ஒன்றும் இருக்க முடியாது" என அவர் தொடர்ந்தார்.
ரோக்கின் மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த பணவீக்க வீதம் 2.2 சதவீதமாக தொடர்ந்து
சாதகமாக இருக்கையில், பெரும்பாலும் சேவைகளின் உயரும் விலையின் காரணமாக, பொருளாதாரத்தின் ஏனைய பகுதியில்
குறிப்பிடத்தக்க பணச்சுருக்க அழுத்தங்கள் அங்கு இருக்கின்றன. ஜூலையில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான உற்பத்தியாளர்
விலைக் குறியீட்டெண், ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் 1.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது, அதே காலகட்டத்தில் இடைப்
பொருட்களின் விலைகள் 1.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தன, அதேவேளை இயற்கையிலே கிடைக்கும் சரக்குப் பொருட்களின்
விலைகள் 6.2 சதவீதமாகக் குறைந்தன. இந்த விலை வீழ்ச்சிகள், "அமெரிக்கப் பொருளாதாரத்தின் அரைவாசிக்கும்
சிறிது குறைவான பகுதி இப்பொழுது ஒரேயடியான பணச்சுருக்க பிரசவ வேதனையில் இருக்கிறது" என்று அர்த்தப்படுத்துகின்றன.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் பணச்சுருக்கத்தின் தோற்றம் பாரதூரமான
விளைபயன்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது இடத்தில், அதன் அர்த்தம் வட்டிவீதத்தில் வெட்டுக்கள் மூலமாக
பொருளாதாரத்தைத் தூண்டி விடும் மையவங்கியின் திறமை கண்டிப்பாய் மட்டுப்படுத்தப்பட்டது என்பதாகும். பணவீக்கமானது
4 அல்லது 5 சதவீதத்தில் போய்க் கொண்டிருப்பதாகக் கொள்வோம், அப்பொழுது வட்டிவீதங்களில் வெட்டானது முதலாளிகளுக்கு
அவர்களின் உபரி பணத்தை முதலீடு செய்வதற்கு செயல்தூண்டலை வழங்கும், ஏனென்றால் இந்த உபரித் தொகைகளை வெறுமனே
வைத்துக் கொண்டிருத்தல் அவற்றின் உண்மை மதிப்பில் (பெறுமதியில்) குறைந்து செல்வதைப் பார்க்க வைக்கும்.
ஆனால் வீழ்ச்சியடையும் விலைகள் முதலீட்டினை தூண்டாதிருக்கும், ஏனென்றால் பெரும் பணம்
கையிருப்பில் உள்ள முதலாளிகள் தங்களின் பணச் சொத்துக்களின் உண்மை மதிப்பு (பெறுமதி) குறித்தகாலத்திற்கு மேல்
அதிகரிப்பதைக் கண்டுகொள்வர்.
பணச்சுருக்கத்தின் விளைபயன் இது மட்டுமே அல்ல. டுலோங்கின் படி, அதையும் விட முக்கியமானது
"பணச்சுருக்கம் வர்த்தகத்தினரின் மற்றும் வங்கிகளின் மூலதனக் கட்டமைப்புக்களில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்துகிறது
என்ற உண்மை ஆகும். அங்கு சங்கிலிக் கோர்வையாய் திவால்கள் இருப்பதற்கான சாத்தியம் இருப்பின் அது நிதிச் சந்தைகளின்
ஊடாக நிதிகள் பாய்வதைச் சீர்குலைக்கும், முதலீட்டுச் செலவீனங்களை முடமாக்கும் மற்றும் ஆழமான பொருளாதாரப்
பின்னடைவைக் கொண்டு வரும், அந்த சாத்தியத்தை மகிழ்ச்சியற்ற யதார்த்தமாக மாற்றுதற்கான சிறந்த வழி பணச்சுருக்கமாகும்."
நியூயோர்க் டைம்ஸ் பொருளாதார பந்தி எழுத்தாளர் போல் க்ருக்மன் அமெரிக்கப்
பொருளாதாரத்திற்கும் ஜப்பானியப் பொருளாதாரத்திற்கும் இடையிலான ஒத்ததன்மைகளை சுட்டிக்காட்டும் இன்னொருவராவார்.
ஆகஸ்டு 16 அன்று, ஒரு கட்டுரையில், ஏன் அமெரிக்காவானது தசாப்தகால தேக்கநிலைக்குள் ஜப்பானைப் பின்பற்ற
முடியாது என்பதற்கான நான்கு காரணங்கள் கொண்ட பட்டியலை அவர் வைத்திருக்கிறார் என குறிப்பிடுகிறார்.
இவை: மத்திய ரிசர்வ் வாரியம் வட்டிவீதங்களை வெட்டுதற்கு நிறைய செயல் எல்லைகளை
வைத்துள்ளது, அரசாங்கத்தின் நீண்டகால வரவு செலவுத் திட்ட நிலை மிகப் பலமானது, நிதித் தூண்டல்களுக்கான நிறைய
வாய்ப்பெல்லைகளை உருவாக்கல், வர்த்தகப் பகுதியில் ஆசிய பாணியிலான நம்பிக்கை இழத்தல் பற்றி கவலைப்படத்
தேவை இல்லாதிருந்தது, ஏனென்றால் "திறமையான கார்ப்பொரேட் ஆளுமை" காரணமாக மற்றும் அங்கு பங்குச்சந்தை
குமிழி இருந்த அதேவேளையில் நிலம் சொத்து குமிழி இல்லை.
அவர் எழுதிய, முதல் மூன்று அம்சங்கள் பட்டியலில் இப்பொழுது குறிக்கப்ட்டிருந்திருக்கிறது,
மற்றும் அங்கு உயர்ந்து வரும் அமெரிக்க வீடமைப்பு சந்தையானது ஒரு குமிழியாக மாறிக் கொண்டிருந்தது என்பதற்கான
ஆதாரங்கள் அங்கு அதிகரித்துவருகின்றன. க்ருக்மன் முடிவுரைத்த, அது அவ்வாறாக இருந்தால், அந்தக் குமிழி வெடித்தால்,
அமெரிக்கப் பொருளாதாரமானது ஜப்பானைப் போலவே ஆரம்பிக்கும்.
|