World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The danger of war on the Indian subcontinent

War and Peace, directed by Anand Patwardhan

சிட்னி திரைப்படவிழா

இந்தியத் துணைக் கண்டத்தில் போர் அபாயம்

ஆனந்த் பட்வர்தன இயக்கத்தில், போரும் அமைதியும்

By Richard Phillips
22 August 2002

Back to screen version

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான அணு ஆயுத மோதலின் அபாயம் பற்றி ஆனந்த் பட்வர்தனால் இயக்கப்பட்ட, மூன்று மணி நேர ஆவணப்படமான போரும் அமைதியும், இந்திய போர் எதிர்ப்பு திரைப்படங்களுள் ஒன்றாகும். அண்மைய சிட்னி திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பட்வர்தனின் படம், எல்லையின் இருபுறமும் உள்ள அரசாங்கங்களால் தட்டி எழுப்பப்படும் இனவாதத்தால் முன்வைக்கப்படும் அக்கறை கொள்ளத்தக்க அபாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகளாலும் வெகுஜன ஊடகங்களாலும் செய்யப்படும் போர்வெறியைத் தூண்டும் பேச்சுக்களை திறமையுடன் பயன்படுத்தி இருக்கிறது.

பட்வர்தன் போரும் அமைதியும் படத்தை, 1998ல் இந்தியாவும் பாக்கிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளை நடத்திய பிறகு, எடுக்க ஆரம்பித்தார். 1999ல் பாக்கிஸ்தான் இராணுவத்தால் ஆதரிக்கப்பட்ட, ஆயும் தாங்கிய இஸ்லாமியப் போராளிகள், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் முக்கியமான கார்கில் குன்றுகள் பகுதிகளைக் கைப்பற்றினர். மாதக்கணக்கில் தொடர்ந்த இந்த மோதலானது, இரு நாடுகளுக்கும் இடையில் ஒரேயடியான போரை வீழ்படிவாக்கும் அச்சுறுத்தலைச் செய்தது.

இந்த சம்பவங்களின் பொழுதும் அடுத்த சில ஆண்டுகளின் பொழுதும் பட்வர்தன் விவசாயிகள், தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள், தலித்துகள் அல்லது தீண்டத்தகாதோர்- இந்தியாவின் மிகத் தாழ்ந்த அல்லது ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினரை மற்றும் இருநாடுகளிலும் உள்ள போர் எதிர்ப்பு இயக்கத்தினரை நேர்காணல் செய்தார்.

அவரது படம், இந்தியத் துணைக் கண்டத்தில் பரந்த பெரும்பான்மையான மக்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானால் அணு ஆயுத சோதனைகளுக்கு ஆண்டுக்கு பில்லியன் டாலர்கள் செலவழிவதுடன் வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்தியா அதன் மொத்த தேசிய உற்பத்தியில் 2.5 சதவீதத்தை இராணுவத்திற்கும் 0.7 சதவீதத்தை சுகாதாரத்திற்கும் செலவழிக்கிறது, இருந்தும் நாட்டின் நான்குவயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் சத்துணவின்றி உள்ளனர் மற்றும் 60 சதவீத பெண்கள் இரத்த சோகையுடன் உள்ளனர். திரைப்படம் வெளிக்காட்டுகிறவாறு, ஒரு இந்திய அக்னி-II ஏவுகணைக்கு ஆகும் செலவைக் கொண்டு 37000 கிராமங்களுக்கு 15000 பொது சுகாதார நிலையங்களை அமைக்க அல்லது பாதுகாப்பான குடிநீரை வழங்க முடியும்.

போரும் அமைதியும் இந்திய அணு ஆயுத சோதனைப் பகுதிகள் மற்றும் யுரேனிய சுரங்கங்கள் அருகில் உள்ள கிராமங்களில் வாழும் கிராமவாசிகளிடமிருந்து எடுக்கப்பட்ட புற்றுநோய் பற்றிய நிகழ்வின் கூடுநிலை அதிகரிப்பு மற்றும் கூடுதல் கதிர் வீச்சுக்கு ஆளாவதால் விளையும் ஏனைய சுகாதாரம் பற்றிய புகார்களைப் பற்றிய வாக்குமூலத்தைக் கொண்டிருக்கின்றது. அங்கு பாக்கிஸ்தானிய எதிரணியினரான ஜெனரல் பெர்வெஸ் முஷாரப் ஆட்சியின் நேர்காணலும், அத்துடன் பாக்கிஸ்தானிய தனியார் பெண்கள் பள்ளியிலிருந்து மாணவிகளால் வழங்கப்பட்ட கூற்றுக்களும் கூட அங்கு உண்டு. இந்தியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் பேச்சுக்களை வகுப்பறையில் நிகழ்த்திய பிறகு, அச்சிறுமிகள் போரின் அபாயத்தை இட்டு தாங்கள் மிகவும் கவலைப்படுவதாகக் படத்தில் ஒப்புக் கொண்டார்கள் ஆனால் இந்திய-எதிர்ப்பு உரைகளை சிறந்த தரத்தில் எழுதுவதற்கு அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டிருந்தனர்.

பட்வர்தனின் ஆவணப்படம் இந்திய வெகுஜன ஊடகங்களும் அரசாங்க அதிகாரிகளும் எப்படி போர்வெறிக் கூச்சலை, போர்க் காய்ச்சலைத் தூண்டுகின்றனர் மற்றும் எப்படி அணு ஆயுதங்களை புகழ்கின்றனர் என்பதற்கு உறையவைக்கும் எடுத்துக் காட்டுக்களை வழங்குகிறது. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, உள்துறை அமைச்சர் எல்.கே அத்வானி, மதத்தலைவர்கள் மற்றும் அதேபோல உயர் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் நாட்டின் அணு ஆயுத தளவாடங்களை இந்திய செல்வம் மற்றும் தொழில்நுட்ப மேலாளுமைத்திறனின் அடையாளம் என பிரகடனம் செய்து காட்டிக் கொண்டனர். பாக்கிஸ்தானுக்கு எதிரான இந்திய இராணுவ நடவடிக்கைகளின் அரசாங்கம் ஆதரவு பெற்ற இசைக் காட்சிகள், இராணுவத்தை முதன்மைப் படுத்தும் திரைப்படங்கள் மற்றும் மதரீதியான பல்லூடக -மீள் சேர்க்கைகள் (multi-media reenactments), புகை, வெடிப்பு மற்றும் ஏனைய வாணவேடிக்கைகள் இவற்றின் படச்சுருள் அங்கே இருக்கிறது.

இந்து தீவிரவாத சிவசேனை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அல்லது உலக இந்து பேராயம் ஆகியன தேசபக்தி வெறியார்வத்தை தட்டி எழுப்புவது காண்பிக்கப்படுகிறது. வி.இ.ப பேரணியில் பேச்சாளர்கள் இந்தியா அணு ஆயுதங்களைப் பெற்றிருப்பதன் காரணமாக அது "அதன் தலையை நிமிர்த்தி இருக்க" முடியும் என்று கூறிய அதேவேளை, பாக்கிஸ்தானை அணு ஆயுதத்தால் அழித்தொழிப்பதற்கு அழைப்பு விடுத்தனர். இந்தியாவின் அணு ஆயுத திட்ட முன்னாள் தலைவர் டாக்டர் பி.கே.ஐயங்கார் கூட நேருரை காணப்பட்டார். பாக்கிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார் ஆனால் நீண்டதூர ஏவுகணை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் ஏனென்றால் சீனா, இந்தியாவின் "அடுத்த பகைவனாகும் சாத்தியம்" இருக்கலாம் என்றார்.

போரும் அமைதியும் கடந்த ஆண்டின் ஆயுத கொள்வனவில் அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டதை அம்பலமாக்கிய தெஹெல்க்கா வலைதளம் பற்றிய படச் சுருளைக் கொண்டிருக்கிறது. ஆயுதத் தரகராகக் காட்டிக் கொண்டு, தெஹெல்க்கா பத்திரிக்கையாளர்கள் இந்திய அரசு அதிகாரிகளுடனான சந்திப்புக்களை இரகசியமாக ஒளிப்படம் எடுத்தனர், அவர்களில் பணத்தை லஞ்சமாகப் பெறும் சிலர் படமெடுக்கப்பட்டனர்.

அதிகரித்துவரும் அமெரிக்க இராணுவவாதத்தின் விளைபயன்கள் மற்றும் எங்கு "போர் இலாபகரமாக இருக்கிறதோ, எங்கு பகைவர்கள் மீளக்கண்டுபிடிக்கப்படுகின்றனரோ மற்றும் எங்கு 'மதம்' மற்றும் 'தேசபக்தி' நமது உலகம் என்றும் அறிந்திராத மாபெரும் அபாயங்களின் பெயர்களாக இருக்கின்றதோ" அங்கு "பாதுகாப்பு வியாபாரம்" பற்றியும் பட்வர்தன் எச்சரிக்கிறார். அப்படம் உலக வர்த்தக மையம் மீதான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து படிமங்களுடன் மற்றும் ஆயுதக் குறைப்பு மற்றும் மகாத்மா காந்தியால் விடுக்கப்பட்ட அகிம்சைக்கான வேண்டுதலை முடிவுரையாய்க் கொள்கிறது.

சில விமர்சகர்கள் போரும் அமைதியும் படத்தை தொலைக்காட்சிக்கானதாக திரும்பவும் அளவு குறுக்கப்பட வேண்டும் என்று கருத்துரைத்து, அதன் நீளத்திற்காக விமர்சித்திருக்கின்றனர். இந்த ஆவணப்படம், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்டதால் தப்பிப் பிழைத்தவர்களுடன் நேர்காணல்களை மற்றும் அமெரிக்க விமானங்களுள் ஒன்று ஜப்பானில் அணு குண்டு வீசிய, 1996 எனோலாகே பற்றிய வாஷிங்டன் கண்காட்சி பற்றிய படச்சுருள் உள்பட, நிச்சயமாக பரந்த அளவிலான விஷயதானங்களை, ஒருவேளை அளவுக்கு அதிகமானதைக் கொண்டிருக்கிறது. இந்த அம்சங்கள் தனித்தனிப் படங்களுக்கான கருப்பொருளாக எளிதில் இருக்க முடியும்.

இருப்பினும், மிகமுக்கியமான பிரச்சினை, முஸ்லிம் பாக்கிஸ்தான் மற்றும் இந்து மேலாதிக்கம் கொண்ட இந்தியா என்ற 1947 பிரிவினையில் இருக்கும், போருக்கான வரலாற்று காரணிகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யத் தவறியதாகும். இப்பிராந்தியம் வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தப்பட்டது இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று பெரும் போர்களுக்கும் அதேபோல எல்லை நெடுகிலும் நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட பத்துலட்சம் துருப்புக்களுக்கும் அதிகமானவை ஒன்றைஒன்று மோதும் நிலையுடன் கூடிய தற்போதைய பதட்ட நிலைக்கும் வழி வகுத்திருக்கிறது.

போரும் அமைதியும் பாசிச ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க்கின் (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினரான நாதுராம் கோட்சேவால் 1948 ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதுடன் தொடங்குகிறது, ஆனால் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் பிரிட்டிஷ் வகுத்த பிரிவினையை அங்கீகரித்ததை விளக்கத் தவறுகிறது. பட்வர்தன் வாஜ்பாயியின் பாரதிய ஜனதாக்கட்சிக்கும் (பி.ஜே.பி) அதனுடைய ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து தீவிரவாதக் கூட்டாளிகளுக்கும் கடும் எதிராளி ஆவார், ஆனால் இனவாதத்தையும் இராணுவவாதத்தையும் ஊக்கப்படுத்துவதில் காங்கிரசின் பாத்திரத்தை அவர் விமர்சன ரீதியாக ஆய்வு செய்யவில்லை. உண்மையில் மூன்று போர்களும் இந்தியாவின் அணுஆயுதத் திட்டமும் இடம்பெற்றது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ்தான், பி.ஜே.பி அரசாங்கத்தின் கீழ் அல்ல.

1999ல் கார்கில் நெருக்கடியின் போது, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (சி.பி.ஐ-எம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) ஆகியன இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க போதுமான செயலூக்கத்துடன் செயல்படத் தவறியதற்கு கண்டனம் செய்துகொண்டு, வலதுபுறத்திலிருந்து பி.ஜேபி அரசாங்கத்தை விமர்சித்தன. இதுதொடர்பான எந்தக் குறிப்பையும் சேர்ப்பதை அவர் தேர்ந்து எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படமானது அணு ஆயுதப் போரின் ஆபத்துக்கு இந்திய முதலாளித்துவத்தின் ஆழமாகிவரும் அரசியல் நெருக்கடியைக் காட்டிலும் அணு ஆயுதத் திறனைக் குற்றமாக நாடுகிறது. கீழே வருகின்ற நேர்காணலில், பட்வர்தன்- இடதுசாரிகள் என்று அழைக்கப்படும் சி.பி.ஐ(எம்) மற்றும் சி.பி.ஐ ஆகியனவற்றை- அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (CTBT) இந்தியா கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட விமர்சிக்கிறார். இந்த ஸ்ராலினிசக் கடசிகள் அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தினை முற்றிலும் தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து எதிர்த்தது நிச்சயம் உண்மையாயிருக்கும் அதேவேளை, அவ்வொப்பந்தம் அணுஆயுதப் போர் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்த ஒன்றும் செய்திருக்கவில்லை.

இந்த அரசியல் பற்றாக்குறைகளை குறைக்காமல், பட்வர்தன் திரைப்படம் தொடர்ந்தும் தொல்லைதரும் படைப்பாக இருக்கிறது, அது இந்திய உபகண்டத்தின்மீதான மத அடிப்படைவாதத்தின் எழுச்சியால் முன்வைக்கப்படும் ஆபத்துக்களை சுட்டிக்காட்டுகிறது. பி.ஜே.பி-ஐ வெளிப்படையாக விமர்சன ரீதியாகப் பார்க்கும் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிலரில் இந்த இயக்குநரும் ஒருவர்: அதன் வகுப்புவாத வேலைத்திட்டத்தின் விளைபயன்களை அம்பலப்படுத்துதற்கான அவரது திரைப்படத் திறமைகளை பயன்படுத்துதற்கு தயாரிப்பு செய்திருக்கிறார்.

எந்த விமர்சனத்தையும் சகிப்பதற்குத் திராணியற்ற, பி.ஜே.பி தலைமையிலான இந்திய அரசாங்கமும் அதன் அடிப்படைவாத கூட்டாளிகளும் திரைப்படத்திற்கு எதிராக கூருணர்வாய் நடந்து கொண்டார்கள். ஜூன் தொடக்கத்தில், இந்து தீவிரவாதிகளால் மேலாதிக்கம் செய்யப்படும் இந்தியாவின் திரைப்படத் தணிக்கைக் குழு, இயக்குநர் அதிகமான வெட்டுக்களுக்கு உடன்படும் வரைக்கும் போரும் அமைதியும் வெளியிடப்பட முடியாது என தீர்ப்பளித்தனர். வெட்டுக்கள் தொடக்கத்தில் இந்திய கொடிகள் எரிக்கப்படும் அனைத்துக் காட்சிகளையும் நீக்குதற்கு கோரின, அதேவேளை பாக்கிஸ்தானிய கொடிகள் எரிக்கப்படும் படச்சுருளை அனுமதித்தனர்; தெஹெல்க்கா அம்பலப்படுத்தல் பற்றிய அனைத்து படச்சுருளை வெட்டல்; "பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களால் பேசப்பட்ட பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் "அனைத்தையும் அகற்றல் ஆகியவற்றைக் கோரின.

இந்த கோரிக்கைகள் இந்தியாவில் போரும் அமைதியும் திரையிடப்படுவதிலிருந்து தடுப்பதை நோக்கமாக்க் கொண்டது மற்றும் தெளிவாகவே அரசியல் ரீதியான நோக்கமும் உடையது. திரைப்படத் தணிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் அண்மைய ஆண்டுகளில் கலைத்துவ வெளிப்பாடுகள் மற்றும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கம் மற்றும் இந்து அடிப்படைவாதிகளின் பரந்த அளவிலான தாக்கதல்களின் பகுதி ஆகும். அவை எந்தவிதமான அதிருப்தியின் குரலையும் வாய்மூடப்பண்ணும் மற்றும் எதிர்க்கும் ஒரு முயற்சி ஆகும்.

***

ஆனந்த் படவர்தன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆவணப்படங்களை எடுத்துவருகிறார். இவற்றுள் உள்ளடங்குவனவற்றுள் சில, பீகார் ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றிய புரட்சியின் அலைகள் (1974), 1975-77ல் இந்திரா காந்தியின் நெருக்கடிகாலத்தில் சிறையிடப்பட்ட அரசியல் கைதிகள் பற்றிய மன சாட்சியின் கைதிகள் (1978); பம்பாய் குடிசைவாசிகளைப் பற்றிய பாம்பே நமது மாநகரம் (1985) ; கடவுளின் பெயரால் (1992); தந்தை, மகன் மற்றும் புனிதப் போர் (1995); நாங்கள் உங்கள் குரங்குகள் அல்ல (1996) மற்றும் தொழில்: ஆலைத் தொழிலாளி (1996) ஆகியனவாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் அணு ஆயுதப் போரின் அபாயம் மற்றும் மத அடிப்படைவாதத்தின் எழுச்சி பற்றிக் கூறும் போரும் அமைதியும் படத்தின் தணிக்கை பற்றி அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார்.

ரிச்சர்ட் பிலிப்ஸ்: போரும் அமைதியும் படத்தை தடைசெய்யும் முயற்சியுடன் தற்போதைய சூழ்நிலை என்ன?

ஆனந்த் பட்வர்தன்: கடந்த ஜூனில் தணிக்கைக்குழு திரைப்படத்தில் பெரிய எண்ணிக்கையில் வெட்டுக்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அது மறுஆய்வுக் குழுவுக்கு சென்றது மற்றும் அவர்கள் முற்றிலும் தடைசெய்வதற்கு கேட்டனர். இரண்டாவது மறுஆய்வுக் குழு வகைப்படுத்த இருந்தது. அவர்கள் தடைசெய்வதற்கு கேட்கவில்லை ஆனால் 21 வெட்டுகளுக்கு கேட்டனர், அது பலமாய் திரைப்படத்தை அழித்துவிடும். இப்பொழுது நான் தில்லியில் உள்ள தீர்ப்பாயத்திற்கு செல்லவேண்டியுள்ளது மற்றும் தோல்வி பெற்றால் அதனை முறையான நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு எனக்கு உண்டு. இந்தக் கணத்தில் திரைப்படம் சக்திமிக்க வகையில் தடைசெய்யப்பட்ட போதிலும் நாட்டிற்கு வெளியே திரைப்பட விழாக்களில் அதனைக் காட்டுவதிலிருந்து அவர்கள் என்னைத் தடுக்க முடியாது-- அதற்கான சட்ட மசோதாவை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் எந்தவிதமான பொதுத்திரையிடலையும் நான் செய்ய முடியாது.

K.H: திரைப்படத்திற்கு உள்நாட்டு வரவேற்பு என்னவாக இருந்தது?

ஆ.ப: இந்த தடை கடந்த இரு மாதங்களில்தான் ஆரம்பமானது, ஆகையால் அதற்கு முன்னர் அதனை இந்தியாவில் மிகவும் பரவலாக நாங்கள் காட்டி இருந்தோம் அதற்கு வரவேற்பு பெரிய அளவினதாக இருந்தது. இப்பொழுதும் கூட நான் அப்படத்தை மக்களின் வீடுகளில் உள்ள சிறிய பார்வையாளர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன், அது நன்றாக இருக்கிறது. இருப்பினும், இப்படத்தைக் காண்பிப்பதில் பிரச்சினை பெரும்பாலும் ஏற்கனவே எங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களை மட்டும் சென்றடைவதுதான். அது இன்னும் நம்பி ஏற்கச்செய்யப்படாத அல்லது மறுபக்கத்தில் உள்ள மக்களுக்கு காண்பிக்கப்படவேண்டி இருக்கிறது மற்றும் விவாதிக்கப்பட வேண்டி இருக்கிறது.

ரி.பி: போரும் அமைதியும்் இந்து அடிப்படைவாதிகள் பற்றிய பலமான விடயத்தை --மேற்கத்தைய பார்வையாளர்கள் அரிதாய்க் காண்கின்ற படச்சுருளை-- கொண்டிருக்கிறது. இது பற்றி நீங்கள் குறிப்பிடமுடியுமா?

ஆ.ப: இந்த அடிப்படைவாதத்தின் எழுச்சி பற்றி நான் இரு படங்களை தயாரித்திருக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தயாரித்த கடவுளின் பெயரால் என்ற படம் பாபர் மசூதி இடிப்பைப்பற்றி அலசுகிறது, அது உண்மையில் இந்து அடிப்படைவாதிகளுக்கு எதிராக பந்தை அடிக்க அமைத்துக் கொடுக்கிறது. 1992 மற்றும் 1993 மற்றும் பம்பாயில் வகுப்புவாததக் கலவரங்களுக்குப் பிறகு தந்தை, மகன் மற்றும் புனிதப்போர் என்று அழைக்கப்படும் திரைப்படத்தையும் கூட நான் எடுத்தேன், அது மத வன்முறை மற்றும் ஆண்தன்மைக்கும் (masculinity) இடையிலான தொடர்பு பற்றியதாகும்.

K.H: உங்களது படங்களுள் ஒன்றை இந்த ஆண்டு நியூயோர்க்கில் திரையிடப்படுவதை தடுத்துவிட்டார்கள் என கேள்விப்படுகிறேன்.

ஆ.ப: ஆமாம் அவர்கள் நியூயோர்க்கில் இயற்கை வரலாறு பற்றிய அருங்காட்சியகத்தில் கடவுளின் பெயரால் படத்தை அவர்கள் தடுத்து விட்டனர். வி.இ.ப திரையிடலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது மற்றும் என்னை கம்யூனிஸ்ட் என்று கூறி மற்றும் இடையூறு விளைக்கப்போவதாய் அச்சுறுத்தியதால் சக்திமிக்க வகையில் அது தவிர்க்கப்பட்டது. மதச்சார்பற்ற இந்தியர்கள் படத்தைத் தவிர்த்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தபொழுது, அருங்காட்சியகம் பின்வாங்கி சமரசம் செய்தது மற்றும் அது அருங்காட்சியக வளாகத்துக்கு வெளியே நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் காட்டப்பட்டது.

K.H: போரும் அமைதியும் படத்தை எந்த அடிப்படையில் தணிக்கைக்குழு தடைசெய்தது?

ஆ.ப: அவர்களிடம் உண்மையில் எந்தவித அடிப்படையும் இல்லை. உண்மையான காரணம் என்னவெனில் எமது நாட்டில் பல முக்கிய நிறுவனங்கள் காவி மயமாதலில் இருந்து வருகிறது. காவிநிறம் இந்து அடிப்படைவாதிகளின் நிறமுமாகும் மற்றும் அவர்கள் தங்களின் கடுங்கோட்பாட்டாளர்களை பல முக்கிய பொறுப்புக்களில் வைத்திருக்கின்றனர். இது தணிக்கைக் குழுவிற்கும் நிகழ்ந்துள்ளது. பலகாலமாக தணிக்கை வாரியத்திலிருந்து ஓய்வு பெறும்பொழுது அவர்கள் பி.ஜே.பி அல்லது மற்றைய வலதுசாரி இந்து அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களால் நிரப்பப்படுவர். தணிக்கை வாரியத்தில் 70லிருந்து 80 சதவீதத்தினருக்கு மேல் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் ஆவர்.

அவர்கள் தங்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதற்கு கடப்பாடுடையவர்களாக மற்றும் தணிக்கைக்குழு நெறிமுறைகளை குறித்திருக்கலாம்தான். நெறிமுறைகள் மிகவும் விரிவானவை மற்றும் எனது விஷயத்தில் அவர்கள் அரசாங்க அரசியலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் பற்றிய அனைத்து படச்சுருளையும் வெட்டும்படி எனக்கு ஆணையிட்டார்கள். அவர்கள் குறித்த நெறிமுறை அவமதிப்பாகும், ஆனால் எனது திரைப்படம் இந்த அரசியல்வாதிகள் பேசியதைத்தான் பதிவு செய்திருக்கிறது. நான் செய்ததெல்லாம் அவர்கள் கூறி இருப்பதை முன்வைத்ததாக இருக்கும்பொழுது எப்படி அது அவமதிப்பாக இருக்க முடியும்? அது செய்தி அறிவிப்பாக இருக்கிறது மற்றும் அவர்கள் செய்தி அறிவிப்பு கொள்கைக்கு எதிராகப் போனால் பின்னர் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் அர்த்தமில்லாமல் போகும்.

K.H: நீங்கள் தணிக்கைக் குழுவிடம் முன்னர் முரண்பட்டு இருந்திருக்கிறீர்களா?

ஆ.ப: ஆம், என்னுடைய பல திரைப்படங்கள் விஷயத்தில், ஆனால் இந்த ஒன்று போல யுத்தங்கள் இருக்கவில்லை. முதலாவது சுற்றில் வழக்கம்போல நான் தொல்லை அடைந்தேன். ஆனால் இரண்டாவது சுற்று அளவில், அது மீளப்பார்க்கும் குழு ஆக இருந்த கட்டமாக இருந்தது, அங்கு குழுவில் சில அறிவார்ந்த நபர்களும் இருப்பர் மற்றும் அப்படம் வெட்டுக்கள் இன்றி கடக்கும். இன்று வரைக்கும் நான் தனி ஒரு காட்சியையும் வெட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கவில்லை மற்றும் அது 30 ஆண்டுகளான ஆவணப்படத் தயாரிப்பில் ஆகும்.

K.H: இதனை அரசியல் ரீதியாக எப்படி மதிப்பிடுகிறீர்கள்? காஷ்மீர் மீதான மோதலில் செல்வதற்கு எந்த அளவு அவர்கள் தயாரிப்பு செய்திருக்கிறார்கள் என்பது பற்றி அது என்ன சொல்கிறது?

ஆ.ப: ஆற்றொணா நடவடிக்கை இயங்கத் தொடங்கியுள்ளது மற்றும் அரசாங்கத்தையும் அதன் நிறுவனங்களையும் கடுங்கோட்பாட்டாளர் குழு கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. நீங்கள் அறிந்தவாறு, புதிய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆவார் மற்றும் அவர் பி.ஜ.பி-ன் கடுங்கோட்பாட்டாளரிலிருந்து வந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களில் குஜராத்தில் உள்ள வன்முறை மற்றும் இனஅழிப்பு இந்தக் கட்சி ஆற்றொணா நிலையில் உள்ளது மற்றும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் போக விரும்புகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். தாராண்மைவாத மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி அது பொருட்படுத்துவதே இல்லை. நான் எப்படி நுட்பமாக மதிப்பிடுவது என்பதில் எனக்கு உறுதியாய் தெரியாது ஆனால் அவர்கள் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி இந்த அணுகுமுறையுடன்தான் என அவர்கள் நம்பி இருக்கலாம்.

இந்தக்கணம் சென்று கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் தெஹெல்க்கா மீதான தாக்குதலாகும், அது கீழ்த்தரமான ஆயுத பேரத்தை அம்பலப்படுத்த மறைவாய் கேமராக்களைப் பயன்படுத்தி சிக்கவைக்கும் நடவடிக்கையை செய்த ஒரு வலைத் தளமாகும். அது அரசாங்கத்திடமிருந்து தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றது மற்றும் இது அரசாங்கம் எனது படத்திலிருந்து எடுக்கும் தொடர் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இது இருக்கிறது.

K.H: இதுவரை நீங்கள் ஆதரவைப் பெற்றதற்கான அறிகுறியைக் கூறமுடியுமா?

ஆ.ப: நிறையவே ஆதரவிருக்கிறது. அங்கு இணையத் தொடர்பில் மனுச்செய்யும் மற்றும் கையெழுத்திடும் பிரச்சாரம் இருக்கிறது. கடந்த மாதம் 11 ஆண்டுகள் பழமையான எனது படம் கடவுளின் பெயரால் கேரளாவில் ஒரு மாவட்டத்தில் நிறுத்தப்பட்டது. அந்த மாநிலத்தை காங்கிரஸ் ஆளுகிறது மற்றும் அங்கு பலமான இடது எதிர்க்கட்சி இருக்கிறது ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது நிர்வாகி, திரையிடலானது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று இந்து வலதுசாரி சக்திகள் கூறியதன் காரணமாக திரையிடலுக்கு தடை ஆணை வழங்கினார் மற்றும் நிறுத்தினார். உள்ளூர் நிர்வாகி 15 நாட்களுக்கு தடை விதித்தார் மற்றும் பின்னர் மற்றுமொரு 15 நாட்களுக்கு நீட்டித்தார். இந்தப்படம் உலக சான்றிதழைப் பெற்றிருக்கிறது, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது மற்றும் தேசிய விருதை வென்றிருக்கிறது.

நல்வாய்ப்பாக கேரளாவில் மதச்சார்பற்ற இயக்கம் மிகப் பலமாக இருக்கிறது மற்றும் ஆயிரம்பேர் இரண்டு அல்லது மூன்று தடவைகள் அணிவகுத்தனர், ஊர்வலம் சென்றனர். அங்கு வீதி நாடக அரங்கு இருந்தது மற்றும் சில "எதிர்ப்பு" திரையிடல் நடந்தது, ஆகையால் அங்கு படத்தைக் காண்பிப்பதற்கான உரிமையைப் பாதுகாக்க பெரும் இயக்கம் கட்டப்பட்டது. இறுதியில் உள்ளூர் நிர்வாகியால் அந்தத் தடை ஆணை தளர்த்தப்பட்டிருந்தது, ஆகையால் மக்களின் அழுத்தம் தடைஆணையை தலைகீழாக்குவதில் வெற்றி கண்டது.

K.H: போரும் அமைதியும் படத்தில் ஒரு புள்ளியில் அடிப்படைவாதம் சோசலிசத்தின் பொறிவுடன் எழுகின்றதாக மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் என்ன அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதைக் கூற முடியுமா?

ஆ.ப: நான் இங்கு விஷயங்களை மிக எளிமைப்படுத்தி இருக்கிறேன் மற்றும் இந்தப்படத்தில் ஆழமாகச் செல்லவில்லைதான். சோசலிசம் இறந்து விட்டது அல்லது ஒட்டுமொத்தமாக பொறிந்து விட்டிருக்கிறது என்பதை நான் அர்த்தப்படுத்தவில்லை மாறாக சோசலிசத்தின் செல்வாக்கு மங்குகையில் அந்த வெற்றிடம் அடிப்படைவாத சக்திகளால் நிரப்பப்படுகிறது, இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே.

K.H: சோவியத் ஒன்றியம் மற்றும் ஏனைய சோசலிச அரசுகள் என்று அழைக்கப்படுபவை சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.

ஆ.ப: இல்லை, சீனாவோ அல்லது சோவியத் ஒன்றியமோ உண்மையான சோசலிச அரசாக இருக்கவில்லை என்பதில் நான் உடன்படுகிறேன் மற்றும் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் பொறிவிற்கு பின்னால் உள்ள காரணிகளுள் ஒன்று அது ஜனநாயக ரீதியானதாக இருக்கவில்லை. ஆனால் நான் கூறுவது சோசலிசம் என்ற கருத்துருவே கடந்த 20 ஆண்டுகளிலோ அல்லது மிகுதியானதிலோ மதிப்பிறக்கப்பட்டிருக்கின்றது. நான் கல்லூரிக்குச் சென்ற காலத்தின் பொழுது, சோசலிசம் என்பது மிகவும் ஆர்வமூட்டும் கருத்தாக இருந்தது, இப்பொழுது அது பலரால் தோல்வியுற்ற கற்பனையான ஒன்றாய் கருதப்படுகிறது.

அபாயம் என்னவென்றால் உலகம் குழந்தையை குளித்த நீருடன் சேர்த்துத் தூக்கி எறிந்து விட்டது, அவர்கள் சோசலிசத்தின் சாதக மதிப்புக்களை எறிந்து விட்டார்கள் மற்றும் அவ்வெற்றிடம் அடிப்படைவாத சக்திகளால் நிரப்பப்படுகிறது. ஒரே தேர்வுக்குரியது சுதந்திர சந்தைப் பொருளாதாரம் மற்றும் "முதலில் எனக்கு" தலைமுறை பற்றி சிந்திக்கும் வளர்ந்துவரும் குழந்தைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், அங்கே பணம்தான் கடவுள். இவை ஒன்று கூட ஆன்மரீதியாய் திருப்திப்படுத்தாது, ஆகையால் ஆன்ம வெற்றிடத்தை நிரப்புதற்கு நீங்கள் மதத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.

K.H: போரும் அமைதியும் படத்தில் வரலாற்று உள்ளடக்கத்தைப் பற்றி கேட்க விரும்புகிறேன். திரைப்படம் பற்றிய ஒரு விமர்சனம், அது இந்தியப் பிரிவினைக்கான வரலாற்றுப் பின்னணி பற்றி வழங்கவில்லை என்பது. இரண்டாவதாக, இந்தியாவில் காங்கிரசோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, அவை பாக்கிஸ்தானுக்கு எதிராக அரசாங்கத்தை ஆதரித்திருந்தும் மற்றும் இவை எல்லாவற்றிலும் வாய்ச்சிலம்பம் ஆடியிருக்கிறபோதும், அவைபற்றிய எந்தவிதமான படச்சுருளும் உங்களிடம் இல்லை. அதுபற்றிக் கூறமுடியுமா?

ஆ.ப: உங்களது முதலாவது கேள்வியை எடுத்துக்கொள்கிறேன். நான் பிரிவினை பற்றி அலசவில்லை --நான் அந்த விஷயத்தை வசதியாக எடுத்துக் கொண்டேன் ஏனென்றால் அது ஏற்கனவே மூன்று மணிநேர திரைப்படம் மற்றும் நான் அதனைச் சேர்த்திருந்தால் அது மிக நீண்டதாக இருக்கும். படத்தின் ஆரம்பப்புள்ளி இந்து அடிப்படைவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்படுவதாகும். நான் முன்னர் எனது படங்களில் விளக்கத்தில் முதல் மனிதனை நான் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை ஆனால் போரும் அமைதியும் படத்தில் எனது குடும்பம் விடுதலைக்கான போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தது, அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதால் சிறைக்கு சென்றனர் என்பதை விளக்குவதன் மூலம் ஆரம்பத்தை நான் தொடங்கினேன். நான் இந்திய விரோதியாக அல்லது தேசிபக்தி இல்லாதவனாக இருக்கின்றதாய் தாக்கப்படுவேன் என்பதை அறிவேன், ஆகையால் நான் எனது "தேசிய" நற்சான்றுகளை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் ஆரம்பிக்க விரும்பினேன்.

போரும் அமைதியும் நம்புகின்ற அமைப்பு முறையானது, இன்று நாட்டை ஆள்பவர்களின் நம்பிக்கை அமைப்பு முறையைவிட சுதந்திரத்திற்காகப் போராடியவர்களது கண்ணோட்டத்திற்கு நெருக்கமானதிலிருந்து தோன்றுகிறது. நீங்கள் இந்து வலதுசாரிகளின் மற்றும் முஸ்லிம் வலதுசாரிகளின் வரலாற்று நிலைச்சான்றுகளை ஆய்வு செய்வீர்களாயின், அவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்பது உண்மையாகும். ஒருவர் கூட பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சிறை செல்லவில்லை. இந்திய தேசபக்தர்கள் என கூறிக்கொள்பவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்பது இன்றைய சூழலின் முரண்நகையாகும்.

உங்களது இன்னொரு கேள்வி பற்றியதில், அணுகுண்டு மற்றும் அணுஆற்றல் தொடர்பான பாரம்பரிய இடதுகளின் நோக்குடன் பகுதிஅளவுக்கு நான் பலமான ஆனால் ஆக்கபூர்வமான விமர்சனத்தைக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கூற என்னை அனுமதிக்கவும். எனது படத்தில் உள்ள எனது நிலைப்பாட்டுக்கும் இடதுசாரிகளின் பெரும்பான்மைப் பகுதியினர் பாரம்பரியமாக பராமரித்து வரும் நிலைப்பாட்டுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. அவர்களில் பலர் மொத்தத்தில் அணு ஆற்றலை விமர்சித்திருக்கவில்லை. ஆகையால் அணு ஆயுதங்கள் பற்றிய பிரச்சினைகளும் அணு ஆற்றல் பற்றிய பிரச்சினைகளும் பிரிக்கமுடியாதது என்பதை நான் படத்தில் வலியுறுத்த முயற்சி செய்திருக்கிறேன். நான் யுரேனிய சுரங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டி இருக்கிறேன் மற்றும் யுரேனியம் இரண்டுக்கும் பொதுவானதாகும்.

நான் இடதுசாரிகளை வெளியே சென்று பகிரங்கமாக விமர்சிப்பதற்கு விரும்பவில்லை ஏனென்றால் அணு ஆயுதங்களுக்கு எதிராக பல்வேறு மக்களின் வானவில் கூட்டணி அங்கு இருக்கிறது என நான் நம்புகிறேன் மற்றும் சிவப்பு இந்த வானவில்லின் பெரும் பகுதியாய் இருக்கிறது. ஆனால் நான் அணு ஆற்றல் அல்லது அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை பற்றியதில் எனது நிலைப்பாட்டை சமரசம் செய்து கொண்டிருக்கவில்லை.

நீங்கள் அறிவீர்களோ என எனக்கு உறுதியாய்த் தெரியாது, ஆனால் 1996ல் இந்திய இடதுகளின் பகுதிகள் தங்களின் ஊசிகுத்த அசைவுறும் தேசியவாத நிலைப்பாடுகளின் காரணமாக அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்பதில் உறுதிப்படுத்துவதில் பாத்திரம் ஆற்றி இருந்தார்கள். அவர்கள் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று பேசினர், அமெரிக்கா அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் நாம் கையெழுத்திட விரும்புகிறது மற்றும் நாம் அதைச் செய்யக் கூடாது, நாம் இந்திய சுதந்திரத்திற்காக நிற்க வேண்டும் மற்றும் இவ்வாறாக கூறினர். அவர்கள் அணு ஆயுத தேசியவாதத்திற்கு உணவூட்ட உதவி செய்தனர். விளைவு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் கையெழுத்திடவில்லை மற்றும் உடனே அமெரிக்காவில் உள்ள வலதுசாரி குடியரசுக்கட்சியினர் தங்கள் சொந்த வழியை எடுத்துக் கொண்டு அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்க மறுத்தனர், அது நமது உலகை இன்னும் அதிகமான ஆபத்துக்குள்ளானதாய் ஆக்கியிருக்கிறது.

ஆகையால் எனது படத்தில் நான் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை மற்றும் அணு ஆற்றல் பற்றியதை பிரச்சினையாக ஆக்கி இருக்கிறேன். இவை பாரம்பரிய இடதுகளில் இருந்து பிரிந்து செல்லும் புள்ளிகள் ஆகும் மற்றும் அவர்கள் எனது படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் புள்ளியைப் பிடித்துக் கொள்வார்கள். நான் வெளியே சென்று அவர்களைப் பகிரங்கமாக விமர்சித்திருக்கவில்லை. இந்த உள்ளடக்கத்தில் படம் வேலை செய்கிறது மற்றும் இடது வட்டங்களில் நன்றாக வரவேற்கப்படுகிறது, அவர்கள் தவறாக சென்றதாய் நான் எண்ணும் விஷயங்களுக்காக நான் வெளியே சென்று அவர்களை திட்டினால் அது அப்படி இருக்காது. கூட்டணியைக் கட்டும் மற்றும் கொள்கைகளை உயிர்ப்புள்ளதாய் வைத்திருக்கும் அதேவேளை, இந்த பிரச்சினைகளை நுட்பமான முறையில் குறுக்காக கடந்து பெறுவது முக்கியமானதாகும்.

K.H: இருப்பினும், புதிய அரசியல் உணர்திறனை ஏற்படுத்தல், ஒருவர் தேசியவாதம் தன்னையே நிராகரித்தல் மற்றும் சோசலிச அடித்தளங்களில் உலக மக்களின் ஐக்கியத்திற்காக போராடல் அது முக்கியமான பிரச்சினை இல்லையா?

ஆ-ப: முற்றிலுமாக. இந்த வழியில் இந்தப்படம் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இப்படமானது இராணுவவாதம், போர்வெறிவாதம் மற்றும் அடிப்படைவாதம் பற்றிய விமர்சனமாய் அதன் பாத்திரத்தை சிறப்பாய் செயலாற்றுகிறது. சோசலிசம் பற்றி நேரடியாக நான் பேசாதிருப்பினும், படத்தில் உள்ள காந்திய சோசலிஸ்டுகள், அமைதிப் பேரணியினர், தலித்துகள் மூலம், ஒருவர் அது என்னவாக இருக்க முடியும் என்பது பற்றிய மங்கலான மினுக்கொளியைப் பெறுவார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved