:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Indian court refuses to reduce homicide
charges over Bhopal disaster
போபால் பேரழிவு பற்றிய மனிதக் கொலைக் குற்றச்சாட்டுக்களைக் குறைப்பதற்கு இந்திய
நீதிமன்றம் மறுக்கின்றது
By Priyadarshana Maddewatte
12 September 2002
Back
to screen version
ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலி எடுத்த போபாலில் உள்ள அமெரிக்க பூச்சிக்
கொல்லி மருந்து நிறுவனத்தில் 1984ல் ஏற்பட்ட இரசாயன பேரழிவு தொடர்பாக, முன்னாள் யூனியன் கார்பைட்
தலைமை செயலாக்க அதிகாரி வாரன் ஆண்டர்சனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் குறைக்கும் அதன் முயற்சியில் இந்திய
அரசாங்கமானது ஒரு பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
குற்றத்திற்குரிய மனிதக் கொலையிலிருந்து "கவனக் குறைவால் ஊறு நேர்ந்ததாக" ஆண்டர்சனுக்கு
எதிரான குற்றச்சாட்டுக்களைக் குறைக்கவும் இவ்வாறு உயர்ந்த பட்ச சிறைவாசம் 20 வருடத்திலிருந்து வெறும் இரண்டு
ஆண்டுகளாக அதனைக் குறைப்பதற்கும், மத்திய புலனாய்வு நிறுவனத்தால் (சிபிஐ) கேட்கப்பட்ட வேண்டுதலை, போபால்
குற்றவியல் நடுவரின் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தூண்டலின்பேரில், இந்த மாற்றம் அமெரிக்காவிலிருந்து
ஆண்டர்சனின் ஒப்படைப்புக்கு வாய்ப்புவசதி அளிக்கும் என்று சிபிஐ வாதிட்டது. ஆனால் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.
அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், ஆண்டர்சன் தள்ளி வைத்து மாற்றப்பட்டிருந்திருப்பார், அதுதான் இந்திய அரசாங்கத்தின்
உண்மையான நோக்கமாக இருந்தது.
கடந்த மாத இறுதியில் அவரது தீர்ப்பில், தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரமேஷ்வர்
கோத்தார அறிவித்தார்: "வாரன் ஆண்டர்சன் தலைமறைவாகிவிட்டவர் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாலும் எந்த நீதிமன்றத்திலும்
தோன்றி இருக்காத, அவருக்கு எதிராக நிரந்தர கைது ஆணை பிறக்கப்பட்டிருப்பதாலும், குற்றங்களைக் குறைப்பதில்
எந்த அர்த்தமும் இல்லை." அவர் வழக்குத் தொடுத்திருப்பவர்களை, ஒப்படைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து
செல்லுமாறு வலியுறுத்தினார், அது 18 ஆண்டுகள் ஆகியும், தொடங்கப்படாமல் கூட இருக்கிறது.
இப்பேரழிவில் தப்பிப்பிழைத்தவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர்கள் வாஷிங்டனிலிருந்து
வரும் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டதாக பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி மீது குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றச்சாட்டுக்களைக் குறைப்பதற்கான மனுவானது, வெளிநாட்டு முதலீட்டாளராக வரக்கூடியவர்களுக்கு, அவர்கள் இந்தியாவில்
சுதந்திரமாக விடப்படுவதை எதிர்பார்க்க முடியும் என்று ஒரு சமிக்கை கொடுக்கும் பொருட்டு விஷயத்தைப் புதைப்பதை
நோக்கமாகக் கொண்ட சூழ்ச்சி ஆகும்.
நீதிமன்ற முடிவை அடுத்து, ஆண்டர்சனின் வழக்கறிஞர் வில்லியம் க்ரோஹ்லி தனது
கட்சிக்காரரை இந்தியாவில் விசாரிப்பதற்கான எந்த முயற்சியையும் எதிர்த்தார்: "இந்திய நீதிமன்றங்களின் குற்றவியல்
சட்ட அதிகாரத்திற்கு எம்மை ஒப்படைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். குற்றவியல் சாராத
வழக்கு நீண்டகாலத்திற்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டது. நீங்கள் காயத்தை அழித்துவிட முடியாது. சிறப்பாகச் செய்யக்
கூடியது செய்யப்பட்டு விட்டது."
க்ரோஹ்லி கூற்றே இந்திய அரசாங்கம் மற்றும் யூனியன் கார்பைடு இவற்றின் பொய்மைத்
தன்மையைக் கோடிட்டுக்காட்டுகிறது. இந்தியாவில் எந்தவிதமான குற்றவியல் வழக்கையும் எதிர்க்கும் அதேவேளை,
கம்பெனியானது உரிமை சம்பந்தமான வழக்கு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
அங்கு நஷ்ட ஈட்டிற்கான கோரல்கள் அமெரிக்காவில் எதிர்பார்த்திருப்பதைக் காட்டிலும் சிறு பின்ன அளவையாக
இருந்தது. 1989ல் உரிமை சம்பந்தப்பட்ட வழக்கின் வெளிப்பாடு 470 மில்லியன் டாலர்கள் கொண்ட அற்பமான தீர்வாக
இருந்த்து.
போபால் துயரத்தில் உயிர்பிழைத்தவர்களும் இந்தியாவிலும் சர்வதேசரீதியாகவும் உள்ள
அவர்களின் ஆதரவாளர்களும் நீதிக்கான அவர்களின் பிரச்சாரத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். அவர்கள் போபால் நீதிமன்றத்திற்கு
வெளியேயும் இந்தியா எங்கிலும் ஆண்டர்சன்னுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் கடுமையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின்
முயற்சிகளை எதிர்ப்பதற்கு எதிர்ப்புக்களை ஒழுங்கு செய்தனர்.
அவர்களின் ஏனைய கோரிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கானது
மற்றும் 2001ல் யூனியன் கார்பைடை முயன்று பெற்ற டெள கெமிக்கலில் இருந்து, கம்பெனியின் கடன் பொறுப்புக்களை,
அது அமெரிக்காவில் செய்திருந்ததுபோல, இந்தியாவிலும் ஏற்கும் என உத்தரவாதம் பெறுவதற்கானது.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின்
ஒழுங்கமைப்பாளர், ரஷிதா பீ, கூறினார்: "எங்களது யுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது மற்றும் நாங்கள் ஆண்டர்சனை
நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கும் குற்றவாளியைத் தண்டிப்பதற்கும் தொடர்ந்து போராட இருக்கிறோம். போபால்
இன்னொருமுறை ஒருபோதும் ஏற்படக்கூடாது." என்றார் அவர். 46 வயதான ரஷிதா அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவரை
புற்றுநோய் பாதிப்பால் இழந்தவர் மற்றும் அவர் பகுதி அளவு பார்வை இழப்பாலும் நரம்புக் கோளாறாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
பேரழிவின் போது இளஞ் சிறுமியாக இருந்த சைதா, மிகவும் ஐயுறவாதத்தில் இருந்தாள்.
"அவர்கள் அவரை கடந்த 18 வருடங்களாக நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை மற்றும்
நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல், இப்பொழுது அவ்வாறு செய்வதை அவர்கள் விரும்பவில்லை. நீதிமன்றத்
தீர்ப்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம் ஆனால் ஆண்டர்சன் ஒப்படைக்கப்படுவார் என்பது உறுதி இல்லை. பாதிக்கப்பட்டவர்களை
ஒரு முறை எதிர்கொள்ளுவதற்காகவாவது அவர் போபாலில் உள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்."
உலகின் மிகப் பெரிய தொழிற்சாலைப் பேரழிவு
பத்தாயிரக்கணக்கான போபால் வாசிகள் உலகின் மிகப் பெரிய தொழிற்சாலைப் பேரழிவினால்
பாதிக்கப்பட்டனர். 1984, டிசம்பர்3 காலை நேரத்தில், யூனியன் கார்பைடு நிறுவனத்தில், விரைவில் ஆவியாகக்
கூடிய, மரண ஆபத்தான 40 தொன்கள் எடையுள்ள, இரசாயனப் பொருளான மெதைல் ஐசோசயனைடைக்
(Methyl isocyanate)
கொண்டிருந்த கொள்கலம் ஒன்று வெடித்து, அடுத்த மூன்று மணிநேரத்தில் போபால்
சுற்று வட்டாரம் முழுவதும் வாயுக்களின் மேகப்படலமாக கசிந்து வெளியேறியது. உத்தியோக ரீதியிலான புள்ளிவிவரப்படி,
குறைந்த பட்சம் 4,000 பேர் சில மணி நேரத்திற்குள்ளேயே கொல்லப்பட்டனர். விஷவாயுவால் பாதிக்கப்பட்டு இறந்த
வகையில், வருடக் கணக்கில் இறப்பு எண்ணிக்கை 14,410 க்கு உயர்ந்தது.
கம்பெனியானது, கவனக் குறைவு என பணியாளர் மீது குற்றம் சாட்ட முயன்ற அதேவேளை,
அதற்கு அடிப்படைப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அலட்சியம் செய்யப்பட்டதே பொறுப்பு என தெளிவாகியது,
அது பேரழிவுக்கு வழிவகுத்தது. கம்பெனியானது அந்த நிறுவனத்தை 1969ல் கட்டியது மற்றும் 1980ல் செவின் எனும்
பூச்சிக்கொல்லி மருந்தை உற்பத்தி செய்தது ஆனால் அதன் இந்திய உற்பத்தி நடவடிக்கைக்கு அமெரிக்க தர அளவுகளை
பிரயோகிக்கவில்லை. அமெரிக்கா போல் அல்லாமல், அங்கு மெதைல் ஐசோசயனைடு ஆபத்து நேர்வைக் குறைப்பதற்கு
சிறிய அளவிலான அடர்த்தியில் சேமிக்கப்படும், இந்திய நிறுவனமோ ஒரேயொரு பெரிய மெதைல் ஐசோசயனைடு கொள்கலத்தைக்
கொண்டிருந்தது. மேலும், எச்சரிக்கை விதிகளுக்கு மாறாக, நிறுவனமானது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின்
மக்கள் தொகை செறிந்த தலைநகரான போபாலின் மையத்தில் இருந்தது.
1984க்கு முன்னர் போபால் தொழிற்சாலையில் குறைந்த பட்சம் மூன்று விபத்துக்கள் நடந்திருந்தன.
1981 டிசம்பரில் அந்தப் பகுதியை இயக்குபவர் (plant
operator) பொஸ்ஜீன் அல்லது கடுகுப் புகை கசிவினால் இறந்தார்
மற்றும் 1982 அக்டோபரில் மெதைல் ஐசோசயனைடு பெரிய அளவில் கசிந்து அடுத்துள்ள வசிப்பிடப்பகுதியில் இருந்து வெளியேறும்படி
பலர் நிர்பந்திக்கப்பட்டனர். 1983 பிப்ரவரியில் விஷவாயுவை சுவாசித்த பின்னர் பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டனர்.
1982 நடுப்பகுதியில், தொழிற்சாலையை ஆய்வு செய்த அமெரிக்க வல்லுநர் பின்வருமாறு சுட்டிக்காட்ட இருந்தார்:
"இந்தத் தொழிற்சாலை பெரும் விபத்துக்கான ஆபத்து நேர்வின் கீழ் இயங்குகிறது."
பிரிட்டனை தளமாகக் கொண்ட இண்டிபென்டென்ட் செய்தித்தாளில், "18 வருடங்களுக்குப்
பின்னர் போபால் இன்னும் நீதிக்காகக் காத்திருக்கிறது" என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில், 1984ல் அந்த
நிறுவனமானது அதன் பூச்சிக் கொல்லி மருந்துக்கான தேவையை வறட்சியானது குறைத்ததன் பின்னர், அது "கவனித்தல்
மற்றும் பராமரித்தல்" செயல்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது என்று விவரித்தது. "அவர்கள் பணியாளர்களைக் குறைத்தனர்,
மற்றும் பாதுகாப்பு முதல் பலியாக இருந்தது. டிசம்பர் 1984 அளவில், மரண ஆபத்தான மெதைல் ஐசோசயனைடு
கொள்கலம் விஷயத்தில் ஆபத்தான வகையில் சமரசம் செய்யப்பட்டு இருந்தது. அது அரைவாசிக்கு மேல் ஒரு போதும்
நிரப்பப்படக் கூடாது என்ற விதிமுறை இருப்பினும், அது 90 சதவீதம் நிரப்பட்டு இருந்தது. அது ஒன்று பட்டுக் கலக்க
ஆரம்பித்தாலும் கூட பாதுகாப்பாக இருக்கும் என்பதால், அதன் உள்ளிருப்பதை 0 சென்டிகிரேடு வெப்பநிலையில் (32F)
வைத்திருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, குளிரேற்று அமைப்பு தொடர்பு அறுக்கப்பட்டு இருந்தது. கசிந்து வரும் விஷவாயுவை
சமநிலைப்படுத்தும் ஒரு தெளிப்பான் செயல்படாதிருந்தது; அதனை எரித்து இல்லாதாக்கும் தீச்சுவாலைக் கோபுரம்
பழுதுபார்ப்பில் இருந்தது. அதனைப் பராமரிக்கும் பணியாளர்கள் ஆறு பேர்களில் இருந்து இருவராகக் குறைக்கப்பட்டிருந்தனர்,
மற்றும் இரவு பராமரிப்பு மேற்பார்வையாளர் பணி அழிக்கப்பட்டிருந்தது."
நள்ளிரவுக்குப் பிறகு விஷவாயு கசிவு நிகழ்ந்ததும் உடனே, பிரதான எச்சரிக்கை ஒலி (சங்கு)
செயல்படவில்லை. நிர்வாகமானது சிறிய விபத்துக்களை வழக்கமாகக் குறிப்பதில் தொடர்புடைய சிறிய ஒலிஎழுப்பியை
மட்டும்தான் இயக்கினர், அதற்கு நகர மக்கள் குறிப்பிட்ட கவனத்தை அளிக்கவில்லை. விளைவு தொழிற்சாலையிலிருந்து
வந்த கீழ்நோக்கி அடித்த காற்று உறங்கிக் கொண்டிருந்த குடிசைகளுக்குள் விஷவாயுவை மேகமாய்ச் சூழ விட்டதால்
சேதம் ஏற்பட்டது.
பேரழிவிற்குப் பின்னரும் பதினெட்டு வருடங்கள் கழித்து, அதன் பயங்கரமான பாதிப்பு
இன்னும் உணரப்படுகிறது. 120,000க்கும் அதிகமான போபால்வாசிகள் நாட்பட்ட வாயு தொடர்பான சீர்கேடுகளால்
பாதிக்கப்பட்டிருந்தனர், ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 வரையிலான பேர் அதில் இறக்கின்றனர். மெதைல் ஐசோசயனைடு,
திசுக்களிலும் தோல்களிலும் உள்ள புரதங்களை மாற்றுவதன் மூலம், அது தாக்கியோரின் நுரையீரல்களை நிரந்தரமாகப்
பாதித்தது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட அறிக்கையின்படி பாதிக்கப்பட்டோரின்
மொத்த எண்ணிக்கை 521,262. இவற்றுள் 10 சதவீதம் பேர் உறுப்புக்கள் மரத்தும் மனநலமின்மை பிரச்சினைகளாலும்
பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் மற்ற பகுதிகளில் உள்ளவர்களை விடவும் மூன்று மடங்கு
அதிகம் கருச்சிதைவால் பாதிக்கப்படும் வாய்ப்பில் இருக்கின்றனர். நலத்துறை ஆணையர் அலுவலகம் புற்று நோயாலும் ஏனைய
உடல் நலிவாலும் 1992 அளவில் 5,325 பேர் இறந்திருந்ததாக அறிவிக்கிறது.
இந்தப் பகுதியில் பிறந்த குழந்தைகளில் பலர் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் மந்தமானவர்களாக
இருக்கின்றனர். 1987-89ம் ஆண்டு ஆய்வு ஒன்று, விஷவாயு கசிந்த நேரம் ஐந்து வயதிற்கும் குறைவாக இருந்தவர்களை
ஏனைய பகுதிகளில் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், இன்று காய்ச்சல், ஆஸ்த்மா, வாந்தி எடுத்தல் (சத்தி எடுத்தல்),
இருமல் மற்றும் ஏனைய நோய்களுக்கு இரண்டிலிருந்து நான்கு மடங்குகள் வரை மிகவும் பாதிக்கப்பப்படத் தக்கதாக
இருக்கின்றனர் என்கிறது.
போபால் தொழிற்சாலைப் பகுதியில் உள்ள 1993-ம் ஆண்டு மக்கள் தொகையினரின்
65.7 சதவீதத்தினர் ஆஸ்த்மா மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், 68.4 சதவீதத்தினர்
கடும் நரம்புக்கோளாறுகள் மற்றும் 49 சதவீதம் கண்நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன், 43.2 சதவீத
பாலியல் ரீதியாக பருவத்திற்கு வந்த பெண்கள் இனவிருத்தி கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் பாத்திரம்
கடந்த 18 ஆண்டுகளாக, மத்திய மற்றும் மாநில அரசாங்கள் --அது பாரதீய ஜனதாக்
கட்சி (பிஜேபி) யாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி-- யூனியன் கார்பைடு நிறுவனத்தின்
பக்கம் சார்ந்து அதன் நலன்களைப் பாதுகாத்தன. இந்த அழிவுக்கு எதிராக எதிர்ப்போர் போலீசாரால் தாக்கப்பட்டு
சிறையிடப்படும் அதேவேளை, அரசாங்கங்கள் குற்றவாளிகளை விளக்கந்தரப் பணிப்பதற்கு அல்லது பாதிக்கப்பட்டோர்
குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை செலுத்துவதில் இரக்கத்தொகையை விட அதிகம் செலுத்துவதற்கு குற்றவாளிகளைக்
கொண்டுவரத் தவறி விட்டிருக்கின்றன.
1985ல், பாதிக்கப்பட்டோரை ஆதரிக்கும் செயல்பாட்டாளர்களால் நடத்தப்படும்
மருத்துவப் பரிசோதனை நிலையத்திற்கு போலீஸ் திடீரென்று நுழைந்து ஆறு தன்னார்வ ஊழிய மருத்துவர்களைக் கைது
செய்தனர் மற்றும் மருத்துவ குறிப்பேடுகளை பறிமுதல் செய்தனர். 100க்கும் மேற்பட்ட வினைஆர்வலர்களின் மீது போலிக்
குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறைந்த பட்சம் 10 குற்றவியல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. போபாலில்
உள்ள ஐக்கிய ஆதரவு குழுவினரின் உறுப்பினர்கள் மீது போடப்பட்ட உத்தியோக ரீதியிலான இரகசியச் சட்டத்தை
மீறியதான குற்றச்சாட்டுக்கள், 1986 செப்டம்பரிலிருந்து இன்னும் நிலுவையில் இருக்கின்றன.
விஷவாயு கசிவுக்கு முன்னால் கூட, ஆரம்பகால விபத்துக்களின் தொடர்ச்சிக்குப் பின்னர்
வசிப்பிடத்தில் உள்ளோரால் வந்த எதிர்ப்புக்களை மாநில அரசாங்கம் அலட்சியம் செய்தது. மத்தியப் பிரதேச
தொழிலாளர் அமைச்சர் தாராசிங் அந்த நிறுவனம் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை
வெளிப்படையாக எதிர்த்தார்: "இந்தத் தொழிற்சாலை 25 மில்லியன் ரூபாய்கள் செலவில் கட்டப்பட்டது, ஒரு சிறு கல்
அல்ல இடத்துக்கு இடம் மாற்றுவதற்கு." டிசம்பர் 1982ல் அவர், தொழிற்சாலை போபாலுக்கு பேரழிவைத் தரும்
ஒன்றாக இருந்ததில்லை என்று ஆணித்தரமாகக் கூறினார்.
எதிர்ப்புக்களின் அண்மைய சுற்றின்பொழுது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி போபால்
பாதிப்புக்கு ஆளானோருக்கான ஆதரவை வெளிப்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆர்ப்பாட்டங்களுள்
ஒன்றிற்கு வருகை தந்து நீதி பெற்றுத் தருவதாக உறுதி கொடுத்தார். இருப்பினும், காங்கிரஸ் அரசாங்கம் 1969ல்
அறிவிக்கப்பட்ட அதன் சொந்தக் கொள்கைகளை மீறி போபால் மத்தியில் அபாயமான இந்த நிறுவனத்தைக் கட்டுவதற்கு
அனுமதித்தது.
யூனியன் கார்பைடு நிறுவனத்தை வழக்குத் தொடுப்பில் இருந்து விலக்கியதற்கும் நிதி ரீதியான
தண்டத்தொகையைக் குறைத்ததற்கும் அனுமதித்தற்கு காங்கிரஸ் கட்சியும் கூட நேரடிப் பொறுப்பாகும். பேரழிவிற்குப்
பின்னரான நாளில் போபாலுக்கு வருகை தந்தபோது ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார், நாட்டை விட்டு
தப்பித்துச்செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார் மற்றும் வழக்குத்தொடுப்பதைத் தவிர்க்கவும் அனுமதிக்கப்பட்டார். வாயு
கசிந்து பல மாதங்களுக்குப் பிறகு, அரசாங்கமானது உயிர்பிழைத்தவர்களின் நலன்களைப் பிரதிநித்துவப்படுத்த முழு
அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள அதனை அனுமதிக்கும் போபால் சட்டத்தை நிறைவேற்றியது. 1989ல் சட்டரீதியான
வழக்கை முடிவுக்குக் கொண்டுவர யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் செய்த அதன் பேரம், உண்மையாய் கோரிய
இழப்பீட்டில் ஏழில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையான --470 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குப் பதிலாக,
அனைத்து கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால கடன் பொறுப்புக்களிலிருந்து விடுவித்தது.
1990ல் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த, இந்து பேரினவாத பி.ஜே.பி அந்தப்
பேரழிவைத் தொடர்ந்து காங்கிரசின் நடவடிக்கைகள் பற்றி விமர்சித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், மாநில
அரசாங்கமானது பாதிக்கப்பட்டோரைத் துன்புறுத்தியது, அவர்களில் பலர் ஏழ்மை பீடித்த முஸ்லிம்கள் ஆவர். "நகரை
அழகுபடுத்தல்" எனும் பெயரில், பாதிக்கப்பட்டோருக்கு உதவ இருந்த கொஞ்சநஞ்ச நிதியையும் அவர்களின்
"சட்டவிரோத" குடிசைகளிலிருந்து வெளியேற்றும் மற்றும் பூங்காக்களை அழகுபடுத்தல், புதிய விளக்குகளை நிறுவுதல்
மற்றும் நினைவுச்சின்னங்களை புணருத்தாரணம் செய்தல் மூலம் அப்பகுதிகளைப் புதுப்பிக்கும் திட்டத்திற்கு திசைதிருப்பி
விட்டது.
1998ல் தேசிய மட்டத்தில் அதிகாரத்தை எடுத்த, பிஜேபி தலைமையிலான தேசிய
ஜனநாயக கூட்டணி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களைப் போல, தொழிற்சாலைப் பாதுகாப்பு உட்பட, அரசாங்க
கார்ப்பொரேட் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடு இன்மை பற்றி விளம்பரம் செய்வதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்க
நாடி இருக்கிறது. வாஜ்பாயி அரசாங்கம் 2001ல் டெள கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் யூனியன் கார்பைடு எடுக்கப்படுவதை
வரவேற்றது, இந்தியக் கம்பெனிகளின் 100 சதவீத உடைமையை வெளிநாட்டு நலன்களுக்கு அனுமதிக்கும் அதன் முடிவின் ஒரு
நிரூபணமாகும்.
முன்னாள் யூனியன் கார்பைடு தலைவர் வாரன் ஆண்டர்சனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக்
குறைப்பதற்கு பிஜேபியால் எடுக்கப்பட்ட அண்மைய நகர்வு, பாதிக்கப்பட்டோரின் நலனைப் பலியிட்டு
கார்ப்பொரேட்டுகளது நலன்களைப் பாதுகாப்பதில் அனைத்து அரசாங்கங்களின் 18 ஆண்டு கால பதிவுச்சான்றுகளின்
வழியில் பொருந்தி நிற்கிறது. பாதுகாப்பு மற்றும் சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கை தொடர்பான அவர்களின்
அப்பட்டமான அவமதிப்பு, ஒரு படிப்பினைகளும் பெறப்படவில்லை மற்றும் அதே அளவு அல்லது மோசமான
தொழிற்சாலைப் பேரழிவுகளுக்கான சூழ்நிலைமைகள் நிலவுகின்றன என்பதன் ஒரு உறுதியான அடையாளமாகும்.
|