உலகளாவிய சமநிலையின்மை "பொறுத்துக்கொள்ள இயலாததாகிறது" என சர்வதேச நாணைய
நிதியம் கூறுகிறது.
By Nick Beams
24 September 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
அமெரிக்க திறைசேரி செயலாளரான
Paul O'Neill இன்படி அதிகரித்துவரும் அமெரிக்க வர்த்தக இடைவெளி தொடர்பாக கவலைப்படதேவையில்லை.
அவர் தற்போதைய நிதி பற்றாக்குறையானது ஒரு ''அர்த்தமற்ற கருத்து'' என குறிப்பிட்டார். ஆனால் இந்த கருத்தானது
முக்கியமாக சர்வதேச நாணய நிதியம் உள்ளடங்கலான உலக நிதி அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படாததுடன், சர்வதேச
நாணய நிதியம் அமெரிக்காவின் அதிகரித்துவரும் வெளிநாட்டு செலுத்துமதியானது விரைவாகவோ அல்லது பின்னரோ பாரிய
சர்வதேச விளைவுகளை உருவாக்கும் என எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் வெளிவிடப்பட்ட World
Economic Outlook இன் அறிக்கையின் ஒரு பகுதியை உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின்
தலைமையிலான பற்றாக்குறை நாடுகளுக்கும், ஜப்பான் மற்றும் ஐரோப்பா தலைமையிலான மேலதிகத்தை (உபரியை)
கொண்டுள்ள நாடுகளுக்கும் இடையிலான அதிகரித்துவரும் கட்டமைப்பு சமமின்மையை பற்றி ஆராய செலவிட்டுள்ளது.
அதன் அறிக்கை அறிமுகப்படுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்வு துறையின் தலைவரான
Kenneth ''இவ்வறிக்கையானது கைத்தொழில் நாடுகளுக்கு
இடையிலான அமைதியை பாதிக்கும் உலக நிதி சமநிலையின்மையானது நிலையானதா'' என கண்டறியவே செய்யப்பட்டதாக
குறிப்பிட்டார். ஆனால் வரலாறு அப்படியல்ல என்பதை காட்டுகின்றது.
அவர் ''அமெரிக்காவின் அதிகரித்துவரும் நிதிப்பற்றாக்குறை மீது கூடிய கவனம் செலுத்தப்பட்டாலும்,
சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வானது ஒரு நாட்டின் பற்றாக்குறை இன்னொரு நாட்டின் மேலதிகமானதாக (உபரி)
இருக்கும் ஒரு உலக முன்னோக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அது தற்போதைய உபரியை கொண்டுள்ள
ஐரோப்பாவிற்கும் கிழக்கு ஆசியாவிற்கும் (குறிப்பாக யூரோவை கொண்டுள்ள பகுதிக்கும் ஜப்பானுக்கும்) இடையிலும்,
அமெரிக்காவினால் தலைமை தாங்கப்படும் பற்றாக்குறை நாடுகளுக்கும் இடையாலான வித்தியாசமானது உலக மொத்த
உற்பத்தியின் 2.5% ஆக இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. இவ்வாறான சமமின்மையின் வர்த்தகத்தின் வித்தயாசத்தின்
அளவானது ''யுத்தத்திற்கு பின்னான காலகட்டத்தில் கைத்தொழில் நாடுகளில் காணாத'' மட்டத்தை அடைந்துள்ளது.
இவ் ஆய்வின் விஷேட நோக்கம் இச்சமத்துவமின்மை விரைவாக பின்னோக்கி சென்று நாணய
மாற்றின் மீது ''அழிவிற்குரிய'' தாக்கத்தை நோக்கி செல்லும் பிரச்சனையை அணுகுவதா அல்லது அதனை மெதுவாக
குறைக்கும் சாத்தியம் உண்டா என்பதை அறிவதாகும். அவ் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ஆய்வுகளும், தற்போதைய
உலக பொருளாதார போக்கும் இரண்டாவதே ஒரளவு சாத்தியமானது என்பதை காட்டுகின்றது.
அவ் ஆய்வானது 1990களில் பாரிய கைத்தொழில் பிரதேசங்களுக்கு இடையிலான வெளி
சமத்துவமின்மையானது உறுதியாக அதிகரித்துள்ளதை அவதானிப்பதுடன் ஆரம்பிக்கின்றது. இது முக்கிய நாணய மாற்றுக்களில்
திடீர் மற்றும் அழிவுகரமான மாற்றங்களை செய்யவேண்டிய சாத்தியப்பாடு தொடர்பான ''பாரிய கவனத்தை''
நோக்கி இட்டுச்சென்றது.
இந்த உண்மையான உறுதியின்மைக்கு காரணமானது முக்கிய உலக நாணயமான அமெரிக்க
டொலர், உலகத்தின் பாரிய வெளிநாட்டு கடனைக்கொண்டுள்ள நாட்டின் நாணயமானதுதான். அவ்வறிக்கை இதனை
பின்வருமாறு குறிப்பிடுகின்றது ''தங்கமாற்று திட்டத்தின்போது பிரித்தானியாவினது நிலைபோன்று தலைமை தாங்கும்
நாட்டின் வெளிநிலைமையானது உறுதியாக இருக்கும்போதுதான், உலக நாணய அமைப்பானது பொதுவாக உறுதியாக
இருக்கும். தலைமை தாங்கும் நாட்டின் வெளிநிலைமையானது அழுத்தங்குள்ளாகியிருக்கும்போது அதுவும் உறுதியற்றதாக
இருக்கும்''.
அமெரிக்காவினது நிதிநிலைமையானது ''அழுத்தங்களுக்குள்ளாகியிருக்கின்றது'' என கூறினால்
அது ஒருவகையில் குறைத்து மதிப்பிடலாகும். அதனது மொத்த கடனானது தற்போது 2.3$ ரில்லியன், அதாவது மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 23% இற்கு சமனாகும். தற்போதைய போக்கு தொடருமானால், 2007 ஆம் ஆண்டளவில்
அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 40% இனை அடையும்.
அதிகரித்துவரும் அமெரிக்க செலுத்துமதி பற்றாக்குறையானது, அதற்கு நாளாந்தம் 1$
பில்லியனுக்கும் அதிகமான மூலதன பாய்ச்சல் தேவையாக உள்ளது.
1995 இல் இருந்து இவ்வருட ஆரம்பம் வரை இருந்ததுபோல், டொலரின் பெறுமதி
அதிகரித்தபோது இவ் உட்பாய்ச்சல் தொடரக்கூடியதாக இருந்தது. ஆனால் நிலைமைகள் விதிகளுக்கு ஏற்றமாதிரி தற்போது
மாற்றமடைந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் உள்ளான மூலதனப்பாய்ச்சலும், அதனைத்தொடர்ந்த
டொலரின் பெறுமதி அதிகரிப்பானது, இலாபத்தை அதிகரிப்பதை நோக்கமாக அடித்தளமாக கொண்டதாகும். எவ்வாறிருந்தபோதிலும்,
அவ்வாறு உயர்வாக காட்டப்பட்ட எதிர்பார்ப்பானது சர்வதேச நாணய நிதியம் மறைமுகமாக குறிப்பிடும் ''நிதி மிகை''
என்பது தகவல்தொழில் நுட்பத்தின் புரட்சியுடன் தொடர்புபட்டது என்பது தெளிவாகி உள்ளது.
அதிக இலாபத்தை தேடும் நோக்கத்தை கொண்ட மூலதன உட்பாய்ச்சலானது அமெரிக்க
டொலரினை அதிகரிக்க செய்ததுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மூலதன இலாபத்தை வழங்கியதுடன், மேலும்
மூலதன பாய்ச்சலுக்கு வழிவகுத்தது.
ஆனால் இப்போக்கானது மறுபக்கம் திரும்ப தொடங்கியுள்ளதுடன், இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
உள்ளடங்கியுள்ள தொகையிலான பாரிய நிதி நெருக்கடியை உருவாக்குகின்றது. அதில் டொலரானது 1995 இன் மதிப்பீட்டிற்கு
திரும்புமானால் அமெரிக்க சொத்துக்களை வைத்திருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 10% ஆன மொத்த உள்நாட்டு
உற்பத்திக்களவான பெறுமதியை இழக்கவேண்டியிருக்கும் என குறிப்பிட்டது.
இவ்விடயத்தை சர்வதேச நாணய நிதியம் தெளிவாக குறிப்பிடாவிட்டாலும், இந்நிலைமைகளுக்குள்
டொலரின் பாரிய வீழ்ச்சியானது, சிலவேளை 1995 இன் நிலைக்கு கீழ் செல்லுவது மட்டுமல்லாது, அமெரிக்க
சொத்துக்களை இல்லாதொழிப்பதை நோக்கிய மேலதிக வீழ்ச்சியை நோக்கி செல்லலாம்.
தொடரமுடியாத கடன்வாங்கல்
எவ்வாறிருந்தபோதிலும், இந்த நிலைமைகள் தொடருகையில், இவ் அறிக்கையின் வார்த்தைகள்
''பற்றாக்குறை நாடுகளின் உள்நாட்டு கேள்வியின் அதிகரிப்பிற்கும், உண்மையான உற்பத்திக்கும் இடையிலான இடைவெளியானது
தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது'' என குறிப்பிட்டது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதன் உள்நாட்டு வருமானத்திற்கு அதிகமான செலவீனத்தை
சமாளிப்பதற்காக அமெரிக்கா தொடர்ந்தும் உலகத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து கடன்வாங்க முடியாததுடன், உண்மையான
உள்நாட்டு கேள்வியானது வீழ்ச்சியடைந்து கொண்டு செல்லும்.
இப்படியான போக்கு ஒன்று 1980களின் இறுதியில் காணப்பட்டது. எவ்வாறிருந்தபோதிலும்
அப்போது, ''யூரோ பிரதேசத்தினதும், ஜப்பானினதும் மகிழ்ச்சிமிக்க தேலைகளால்'' உலக பொருளாதாரமானது
சமப்படுத்தப்பட்டிருந்ததுடன், மறு இணைப்பின் பின்னர் ஜேர்மன் அரசாங்கத்தினது செலவுகளாலும், சொத்துக்களின்
விலை அதிகரிப்பினாலும் குறிப்பிடத்தக்களவு இது பிரதிபலித்தது.
இப்போக்கானது அப்போது ஒரு உறுதிப்படுத்தும் தாக்கத்தை கொண்டிருந்தபோதிலும்,
தற்போழுதுவரை நீடிக்கும் ஜப்பானினது வங்கி அமைப்பினதும், ஜேர்மனியின் கட்டிட தொழிற்துறையினதும் பிரச்சனைகளுக்கு
நீடித்து தாங்கிப்பிடித்து நிற்க முடியாது என்பதை நிறுவிக்காட்டியது.
இவ் அறிக்கையானது தற்போதைய நிலைமையை சுருக்கமாக ''யூரோ பிரதேசமும்,
கிழக்கு ஆசியாவும் எல்லாவிடங்களிலும் முக்கியமாக தேவை (demand)
தாமப்படுத்துவதை பூர்த்திசெய்வது சாத்தியமற்றது'' என குறிப்பிட்டது.
இதுவும் ஒருவகையில் ஒரு குறைத்து மதிப்பீடாகும். அமெரிக்காவினது தேவையினது
வீழ்ச்சியின்போது உலகப்பொருளாதாரத்தை திருப்புவதை முன்னெடுப்பதற்கு மாறாக, வளர்ச்சியை அதிகரிப்பதற்கு
யூரோ பிரதேசமானது அமெரிக்காவினது சந்தையில் ஒருபோதும் இல்லாதளவு தங்கியுள்ளது என்பதை அண்மைய
மதிப்பீடுகளானது காட்டுகின்றது.
Economist
பத்திரிகையின் படி, இப்பிரதேசத்தின் இரண்டாவது காலப்பகுதிக்கான வருடாந்த
வளர்ச்சி வீதமானது 1.4% மட்டுமே எனவும், மூன்றாம் காலாண்டு பகுதிக்கான வளர்ச்சியானது இன்னும் ''மங்கலானது''
எனவும் குறிப்பிட்டது. ஜேர்மனியின் வளர்ச்சியானது மீண்டும் குறுகியுள்ளதுடன், அதன் வர்த்தகம் தொடர்பான மிதிளி எனப்படும்
குறியீடானது தொடர்ந்த 3 மாதங்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. யூரோ பிரதேசத்தில் பலமான நாணயத்தாலும்,
பங்குவிலைகளின் வீழ்ச்சியாலும் கேள்வியானது உறைந்துள்ளது. பல கணிப்பாளர்கள் தமது முன்னைய கணிப்பீடுகளை
பின்வாங்கி 2002 இற்கான வளர்ச்சியானது 1% இற்கு குறைவாக இருக்கும் என கூறியுள்ளனர்.
பலவிதங்களில் ஜப்பானின் நிலைமையானது மோசமாகியுள்ளதுடன்,
Bank of japan
நிதி நெருக்கடியை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளில் இறங்க நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அதனது
இறுதி நடவடிக்கையானது, சர்வதேச மட்டத்திற்கு மேல் தனது மூலதன தகுதி வீதத்தை பாதுகாத்துக்கொள்ள பாரிய
வங்கிகளிடமிருந்து கூடியளவிலான பங்குகளை வாங்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.
ஜேர்மனியினதும், ஜப்பானினதும் அதிகரித்துவரும் பொருளாதார வீழ்ச்சியானது, அமெரிக்க
டொலரின் பெறுமதியின் அதிகரிப்புடனும், அமெரிக்க தேவை அதிகரிப்புடனும், உலகத்தின் மற்றைய பிரதேசங்களில்
இருந்து வரும் கேள்வியின் அதிகரிப்பாலும் சாதாரண நிலைக்கு சுமுகமாக திரும்பும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின்
விருப்பத்தை இல்லாதொழித்துள்ளது.
ஆனால், டொலரின் பாரியளவு வீழ்ச்சியடையும் போக்கும், அமெரிக்காவில் கேள்வியின்
குறைவும், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதியின் குறைவால் ஐரோப்பாவினதும் ஆசியாவினதும் வளர்ச்சியின் வீழ்ச்சியும்
உலகளவிலான தேவையில் மேலதிக வீழ்ச்சியை அதிகரிக்க செய்வதுடன், உலக பொருளாதார வீழ்ச்சிக்கான நிலைமைகளை
உருவாக்குவதுமே சாத்தியமாக தோன்றுகின்றது.
Top of page
|