World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Ex-Stalinist leader Gysi resigns Berlin post

ஜேர்மனி : முன்னாள் ஸ்ராLனிசத் தலைவர் ஹிரேகோ ஹீசி (Gregor Gysi) தனது பதவியை பேர்லினில் இராஜினாமா செய்துள்ளார்.

By Ulrich Rippert
6 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச ஜனநாயகக் கட்சியின் (PDS) முதன்மை அரசியல்வாதியான ஹிரேகோர் ஹீசி, தனது பொருளாதார அமைச்சர், பேர்லின் மாநகர முதல்வர் போன்ற பதவிகளையும் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்துள்ளார், இச் செய்தி புதன் கிழமை மாலை நாட்டின் தலைநகரத்தை பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இவ் வருடத்தின் ஆரம்பம் முதல் ஹீசி, பேர்லின் மாநிலத்தின் பொருளாதார அமைச்சர் பதவியை ஏற்றதில் இருந்து சமூக ஜனநாயக கட்சியும், (SPD) சோசலிச ஜனநாயகக் கட்சியும் (PDS) இணைந்து நடாத்தும் சிவப்பு- சிவப்பு கூட்டு அரசாங்கத்தில் ஓர் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீசி தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தைப் பற்றித் தெரிவிக்கையில், அவர் 2000, 2001 ம் ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கையில் கிடைத்த அலுவலக விமானப் பிரயாணங்களை அவர் தனது ''தனிப்பட்ட பாவனைக்காகவும் பிரயோகித்தார்'' எனவும், இதனால் தான் ஒரு பிழை விட்டிருப்பதாகவும், ''அதை நான் மன்னித்துக் கொள்ள விரும்பவில்லை.'' எனவும் மேலும் தெரிவித்தார்.

இதைப் பற்றி சில பழமைவாத பத்திரிகைகள், அவற்றுள் Bild எனும் தினசரி, ஹீசிக்கும் மற்றும் சில முன்னணி அரசியல்வாதிகளுக்கும் எதிராக இச் சம்பவத்தை மிகப் பூதாகாரப்படுத்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சரான (பசுமைக் கட்சி) Jürgen Trittin, அரச - வெளிவிகார செயலாளரான (இவரும் பசுமைக் கட்சியை சேர்ந்தவரே) Ludger Volmer போன்றோர் அலுவலக விமானப் பிரயாணத்தை தமது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தினார்கள் என கூறப்படுகின்றது.

பத்திரிகைகள் இவ்வாறான செய்திகளை, பெயர் விபரங்கள் அடங்கிய (மிகவும் இரகசியமாக பாதுகாக்கப் படவேண்டிய) புள்ளி விபரங்களை எவ்வாறு பெற்றுக்கொண்டது என்பது தெளிவாகவில்லை. இப் பத்திரிகைத் துறையானது மிகவும் பகிரங்கமாகவே தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை (CDU) வெற்றி கொள்ள வைப்பதற்காக சமூக ஜனநாயக, பசுமைக் கட்சி மற்றும் சோசலிச ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு மேலான ஒரு திட்டவட்டமான தாக்குதல்களை தொடுத்தன.

விமான பிரயாணத்தின் சேவையை துஸ்பிரயோகம் செய்ததை ஒரு குழறுபடியாகவும், கடந்த வருடத்தில் இதை ஓர் மிகவும் இழிவான செயலாகவும் காட்டப்பட்டது. கடந்த காலத்தில் ஜேர்மனியில் நிகழ்ந்த ஊழல்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறியதாகும். ஆனால் ஒரு முறையாவது பேர்லின் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஹீசியை இதற்காக இராஜினாமா செய்யுமாறு கோரவில்லை. அவருடைய நடவடிக்கை பாராளுமன்றத்தின் அடிப்படை முறையுடன் முரண்பாடாக உள்ளது. அனேகமான உறுப்பினர்கள் இச்சலுகையை வெளிப்படையாகவே கையாண்டதுடன் மேலும் அதைப்பற்றி அவர்கள் ஓர் குற்றமாகவும் உணரவில்லை. பல பெரிய தனியார் நிறுவனங்களில் இவ்வாறான விமானச் சேவை மிகவும் ஓர் சாதாரணமான விடயமாகும் என பத்திரிகைத் துறை வேறு கருத்து வெளியிட்டு இருந்தது. இச் சேவை அப்படியான உயர் உத்தியோகஸ்தர்களின் பாவனைக்கே விடப்பட்டுள்ளதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளது.

Trittin என்பவரும், Volmer உம் தமது குற்றங்களை இதுவரையிலும் நிராகரித்துக் கொண்டிருக்கையில், ஹீசி எதுவித மறுப்பும் இன்றி உடனே அவரது பதவியை இராஜினாமா செய்து விட்டார். அவர் இந்த விமான பிரயாணச் சேவையின் பிழைக்கான விளக்கத்தை இவ்வாறு முன்வைக்கிறார், அதாவது ''இது உண்மையிலும் ஓர் பிழையான செயலல்ல, மேலும் இது ஓர் குற்றமென கருதப்படவும் முடியாது, அனேகமானவர்களால் இது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, சமுதாயத்தின் யதார்த்தமான போக்குகளில் இருந்து அரசியல் நேர்மையை (Moral) ஒருவர் பிரித்து பார்க்கையில் இராஜினாமா செய்வதற்கான காரணங்கள் எதுவுமே பலருக்கு இல்லாமல் இருக்கின்றன''.

அவர் தனது பிழையைப் பற்றி குறிப்பிடுகையில், ''நான் எனது வாக்காளர்களில் இருந்து தூரவிலகி இருக்கிறேன், சலுகையை உண்மையாக நான் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து, எதனை நியாயப்படுத்தலாம், எதனை நியாயப்படுத்தமுடியாது என்பதற்கு இடையேயான வித்தியாசத்தை பார்க்கையில் என்னால் எனது நடுநிலையான உணர்வில் 100% தங்கியிருக்க முடியாமல் இருக்கின்றேன். நான் என்னவாக மாற விரும்பாது இருக்கின்றேனோ அப்படியானதாக மாறுகையில் எனது மரியாதை மற்றும் நம்பகத் தன்மையை இழக்க வேண்டி நேர்ந்தது''. இதைப் பற்றி ஹீசி மேலும் குறிப்பிடுகையில், ''நான் பயப்படுவதுடன், எனது சொந்த தன்மையில் மாறுதல் ஏற்படுகின்றது'' என்றார்.

இந்த சுயவிமர்சன வெளிப்படுத்தலானது, அவருடைய தன்மையை ஒருபோதும் மாசுபடுத்தவில்லை. முதலாவதாக ஹீசியினுடைய இந்த நிலைப்பாடு ஓர் உயர்ந்த மற்றும் பெரியதொரு ஒழுக்கமாக மதிக்கப்பட்டுள்ளது. பேர்லின் மாநகர முதல்வரான Klaus Wowereit (SPD), என்பவர் தனது விடுமுறையை இதற்காக அவசரமாக இரத்து செய்துவிட்டு, இந்த இராஜினாமாவுக்காக அவர் தெரிவித்த அனுதாப வார்த்தைகள்: ''நான் அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கிறேன், அத்துடன் அவர் எம்முடன் இணைந்து கடமையாற்றிய அதிகப்படியான வேலைகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.'' Süddeutschen Zeitung பத்திரிகையில் தலைப்பு செய்திகளை வெளியிடுபவரான Heribert Prantl இதைப்பற்றி மிக மேலாகவே புகழ்ந்து கொண்டு, ஹீசி இவ்விடயத்தை ஓர் தனிப்பட்ட ரீதியில், அவரே இதைக் கையாண்டதினால் அதை அவரால் மிகவும் சரியாக கணிப்பிட்டுக் கொள்ள முடிந்தது, மேலும் இதை அவர் வேறு அரசியல் விவாதங்களுக்கு இடையேயும் செய்ய முடிந்துள்ளது. ''எனவே இதற்கான மரியாதையை பெற்றுள்ளார்'' என கூறினார்.

ஹீசியினுடைய சமப்படுத்தல்

ஹீசியினுடைய உண்மையான இலக்குகள், இந்த ஒழுக்கநெறிப் பிரார்த்தனைகளை பொறுத்தவரை அவற்றுடன் இவை மிகவும் குறைவாகவே தொடர்புற்றிருக்கின்றன. சமுதாய தன்மையற்ற ஒரு அரசியல் பொருளாதார அழுத்தத்தை மக்களுக்கு மேல் திணிக்கும் போது அவரால் ஒரு ஒழுக்க நேர்மையாக நடக்க முடியாதிருந்தது. மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஊர்வலங்கள், கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றினால், ஒரு பொருளாதார அமைச்சராக இருந்த அவரால் வேலை நீக்கங்கள், சமூக வெட்டுக்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்தி வைக்கவும் முடியாது போனது.

ஹீசி ஒரு வருடத்திற்கு முன்னால் மிகவும் உணர்வுபூர்வமாக பேர்லின் தேர்தலில் கலந்து கொண்டபோது, ''மிகக் கடுமையான சமூகவெட்டுக்களுடன் சேர்ந்து நடைபோடல் வேண்டும்'' என அவர் அப்போது Tagespiegel எனும் பத்திரிகைக்கு தெரியப்படுத்தினார். அவர் இந்த நகரத்தை ''உண்மையில் முதலீடு செய்யவிரும்பும் முதலீட்டாளர்களுக்கு'' ஏற்றதாக அமைக்கவிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டுமெனவும், எனவே இதற்கான அதிகாரத்துவமான கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்து மேலும் விளம்பரங்களால் அவற்றை அலங்காரப்படுத்த வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.

முன்னாள் பெரிய கூட்டு அரசாங்கங்களான SPD-CDU பெரியளவில் வெறுக்கப்பட்டு இருந்தபோது, அவர்களால் சமூக வெட்டுக்களை மக்களுடைய எதிர்ப்புக்கள் இல்லாமல் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. அதானால் சமூக வெட்டுக்களால் துன்பப்படும் இந்த மக்கள் -இந்த வெட்டுக்கள் நியாயமானவை என்பதை உணரவேண்டும்'' என ஹீசி இதற்காக வருத்தப்பட்டார்.

SPD, PDS இனுடைய சிவப்பு - சிவப்பு அமைச்சரவை 2002 / 2003 களின் இரண்டு ஆண்டுகளுக்கான ஒரு வரவுசெலவுத்திட்டத்தை அந்நேரத்தில்தான் தீர்மானித்தது, ஆனால் அவர்கள் செய்தது CDU-SPD அமைச்சரவையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே சமூகத் தன்மையற்ற வெட்டுக்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததை தொடர்ந்ததாகும்.

அமைச்சர் அவையின் நிர்வாகமும், மாநிலங்களும் தற்போதைய பட்ஜெட்டில் இருந்து 121 மில்லியன் யூரோக்களை மிச்சம் பிடிப்பதற்காக கீழ்கண்ட நிலமைகளை நடைமுறைப்படுத்த உள்ளன: அரசாங்கத்தின் பொது வேலைத்தலங்களில் இருந்து 15.000 வேலைகள் வெட்டப்பட உள்ளன, மற்றும் மேற்கு பேர்லின் அலுவலகங்களில் பெறப்படும் அதே சம்பளத்துக்கு வாரம் தோறும் மேலும் அதிகப்படியாக அரை மணித்தியால வேலை நேரத்தை கூட்டுவதும், பெற்றுக் கொள்ளும் மாதப் பணத்தில் சராசரியாக மேலும் ஒரு பத்து வீத சம்பள வெட்டை ஏற்படுத்துவதும் இடம் பெற உள்ளன.

சிறுவர் பாடசாலைகள், பாலர் நிலையங்கள் போன்றவற்றில் மட்டும் வேலை செய்பவர்களில் 1100 பேர் வரையில் நிறுத்தப்படவுள்ளனர். மற்றும் மாநிலங்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தினூடு இளைஞர்களுக்கான பொழுது போக்கு, விளையாட்டு, கல்விக்கான நிலையங்கள் போன்றவற்றின் கட்டணங்கள் மிக அதிகமாக உயர்த்தப்படவுள்ளன. விசேடமாக சமூக வசதிப் பணத்தில் வசிப்போருக்கான பணத்தில் இருந்து (23 வீதம்) 40 மில்லியன் யூரோக்களை வெட்டுவதற்கு அமைச்சரவை முன்வந்துள்ளது.

அதைத் தொடர்ந்தாற்போல், ஸ்திரமற்ற வியாபாரத்தால் உருவாகிய பேர்லின் வங்கியின் (AG) நிதி நெருக்கடியை சமாளிக்க 21,6 பில்லியன் யூரோக்கள் வரையில் மாநிலங்களுக்கான வரவுசெலவுத் திட்டத்திலிருந்து அமைச்சரவை பாதுகாக்க உள்ளது. நடைமுறையில் அதனுடைய அர்த்தம், இலாபத்தை பெருக்குவதற்காக பணத்தை முதலிட்ட முன்னைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் இலாபங்கள் மக்களுடைய செலவிலும், ஏழைகளினதும், மிகவறியவர்களின் செலவில் இருந்தும் இவை வழங்கப்பட இருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்னால், கோடை காலத்தின் ஆரம்பத்தில், திறந்த வெளியில் அமைந்திருக்கும் பொதுஜன நீச்சல் நிலையங்களின் நுழைவுக் கட்டணங்கள் அதிகப்படியாக உயர்த்தப் பட்டிருந்ததினால் பலவிதமான எதிர்ப்புக்களை இந்நகரம் எதிர் நோக்கியது. இந்நடவடிக்கைகள் குறிப்பாக பொருளாதார அமைச்சில் உள்ள ஹீசிக்கும் அவருடைய சகாக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டது. அவர் கடைசி நேரங்களில் பகிரங்கமாக எங்காவது வெளியில் காணப்படுகையில், விசில் சத்தங்கள், மற்றும் கூக்குரல் போன்றவற்றை எதிர்நோக்கவேண்டி இருந்தது. அத்துடன் அவர், அழுகிப்போன தக்காளிப்பழம், கூழ் முட்டை தாக்குதல்களையும் எதிர்கொள்ளவேண்டியதாயிற்று.

ஹீசி இவ்வாறு ஏற்கனவே கீழிருந்து மக்கள் மத்தியிலிருந்து மிகவும் அதிகப்படியான அழுத்தத்திற்கு விட்டுக்கொடுக்காது இருக்கையில், வலதுசாரி பத்திரிகைத் துறையின் அழுத்தத்தின் தாக்குதல்களுக்கு உடனடியாக விட்டுக்கொடுத்துள்ளார். சில மோசமான மற்றும் பழமைவாத பத்திரிகையாளர்கள் ஒரு சில சந்தேகங்களை அவருக்கு மேல் எழுப்பி விட்டிருந்தனர், இவை அவருடைய இராஜினாமாவுக்கு வழியமைத்துக் கொடுத்தன.

ஹீசியினுடைய உண்மையான காரணம்

ஹீசியினுடைய இராஜினாமா பல விதங்களில் மூன்று வருடங்களுக்கு முன்னால் விலகிக் கொண்ட சமூக ஜனநாயக கட்சித்தலைவர் Oskar Lafontaine என்பவரையே நினைவுபடுத்துகின்றது. முன்னைய சமூக ஜனநாயக கட்சியின் தலைவரும், பொருளாதார அமைச்சருமான இவர் அந்நேரத்தில் அரசியல் வலதுசாரிகளின் அழுத்ததிற்கு உட்படுத்தப்பட்டு உடனடியாக அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்தார். நாம் முன்பு இதைப் பற்றி மிகவும் சரியாகக் கூறியதைப் போன்று, இந்த இராஜினாமா, ''அவருடைய சொந்த அரசியல் திவால் தன்மையின் ஒரு பெறுபேறாக கொள்ளப்படல் வேண்டும்''.

Oskar Lafontaine, சமுதாயத்தின் சமத்துவத்தைப் பற்றி வாயளவில் கதைத்த ஒரு முக்கியமான, ஐரோப்பாவில் உள்ள கடைசி சமூக ஜனநாயகவாதி ஆவார். அவர் பூகோளமயமாக்கலால் சமூக நிலமைகளில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் சந்தைகளில் ஏற்படும் கட்டுக்கடங்காத தன்மைகள் போன்றவற்றை அரசின் கட்டுப்பாட்டினால் போக்க வேண்டும் என்றார். இவற்றை முதலாளித்துவ அமைப்பு முறையை ஓர் கேள்விக்கு உள்ளாக்காமல் செய்ய முடியும் என்றார். அவர், ஹெல்முட் கோல் அரசாங்கம் முன்னெடுத்த சமூகத்தன்மையற்ற ஒரு வேலைத் திட்டத்திற்கு ஓர் மாற்றீட்டை முன்வைத்ததால் சமூக ஜனநாயக கட்சி அத் தேர்தலில் வெற்றி பெற்றது.

அவருக்கு முன்பிருந்த பழமைவாதி முன்னெடுத்த சேமிப்புத் திட்டத்தையே Oskar Lafontaine எதுவித மாற்றமும் இன்றி முன்னெடுத்தார், ஆனாலும் விரைவாகவே அவர் பொருளாதார வாதிகளின் பக்கத்தில் இருந்தும், அவருடைய சொந்தக் கட்சியின் வலதுசாரிப் பிரிவில் இருந்தும் மோசமான அழுத்தத்துக்கு முகம் கொடுத்தார். பிரதமர் ஹெகார்ட் ஷுரோடருடனான முரண்பாட்டில் அவர் போராட்டம் எதுவும் இன்றி தனது பதவியை விட்டு விலகிக் கொண்டதுடன், கட்சியில் உள்ள வலதுசாரிப் பொருளாதார பிரிவினருக்கு வழிவிட்டு வெளியேறிக் கொண்டார்.

qC, Oskar Lafontaine மேற்கொண்ட ஒரேமாதிரியான அரசியல் போக்கையே கடைப்பிடித்தார். இவர் கிழக்கு ஜேர்மனி (DDR) யின் கலாச்சார அமைச்சரின் ஒரு மகனாவார். பழைய அரசாங்கத்தின் (SED) உடைவுக்கு பின்னால் கிழக்கு ஜேர்மனியின் முன்னைய அரசாங்க கட்சியின் (DDR) தலைமையே பின்னர் சோசலிச ஜனநாயகக் கட்சி (PDS) ஆக மாற்றம் கண்டது. ஹீசியினுடைய திட்டம் யாதெனில், முரண்பாடற்ற விதத்தில் முன்னைய கிழக்கு ஜேர்மனியின் (DDR) வசதிபடைத்த ஒரு சிறு தட்டை ஜேர்மனியின் மறு இணைப்புக்குள் சேர்த்து விடுவதாகும்.

எவ்வகையிலும் சோசலிச ஜனநாயகக் கட்சி இன்று வரையும் சோசலிச கட்சி என கூறிக்கொள்கின்றபோதிலும், அது முதலாளித்துவ அமைப்பு முறையின் உறவுமுறைகளை கூடிய அவதானத்துடன் ஓர் கேள்விக்குள்ளாக்கவில்லை. அது உச்சரிக்கும் சோசலிச வாய்ச்சவடால் அனைத்தும் கிழக்கில் வளர்ச்சியடைந்து செல்லும் சமூக ஏழ்மையின் அதிருப்தியை தமது பக்கம் வென்று கொள்வதற்கே பயன்பட்டது. சோசலிச ஜனநாயகக் கட்சி Sachsen-Anhalt, Mecklenburg-Vorpommern போன்ற இடங்களிலும் மற்றும் வேறு எங்கு உள்ளூராட்சி அரசாங்கத்தில் பொறுப்பான ஓர் பாத்திரத்தை வகிக்கின்றதோ அங்கெல்லாம் அது சமூக ஜனநாயக கட்சி, கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிகள் முன்னெடுக்கும் அரசியல்களில் இருந்து பெரியளவில் இது ஒன்றும் வித்தியாசமானவற்றை முன்னெடுக்கவில்லை. விசேடமாக இவ்விரு மாநிலங்களும் வேலையில்லா திண்டாட்டத்தின் பட்டியலில் ஜேர்மனியில் மிகவும் முன்னணியில் உள்ளன.

முதலாளித்துவ ஒழுங்கு முறைகளை பேணிப் பாதுகாப்பதில் சோசலிச ஜனநாயகக் கட்சி ஓர் மிக முக்கியமான பாத்திரத்தை புதிய மாநிலங்களில் வகித்து வருகிறது. அதேசமயம் தேசிய அரசியலில் ஓர் எதிர்க் கட்சி பாத்திரத்தை வகிக்கும் முயற்சியையும் அத்துடன் கூடவே எதிர்ப்பான அரசியல் போக்குகளையும் இது வென்று கொள்ள முயல்கின்றது. ஆனால் இந்த சமநிலைப் போக்கு எல்லா நேரங்களிலும் கடினமானது.

இதனால்தான் 1993 ல் ஹீசி, Lothar Bisky என்பவரை நீக்கிவிட்டு கட்சியின் தலைவராக வந்தார், அவருடைய நோக்கம் கட்சியை வெளியே நகர்த்தி, அதாவது பாராளுமன்றத்தில் தமது அரசியலை முன்னெடுப்பதாகவே இருந்தது. 2000 ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில், ஒரு சில வரையறுக்கப்பட்ட நிலமைகளுக்குள் வெளிநாட்டில் அமர்த்தப் பட்டிருக்கும் இராணுவத்துக்கான ஆதரவை சோசலிச ஜனநாயகக் கட்சியும் வழங்க வேண்டும் என்ற கட்சியின் தலமைப்பீடத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹீசியும், பிஸ்கியும் பதவிவிலகத் தீர்மானித்தனர்.

பேர்லினில் உள்ள முன்னாள் அமைச்சரவையில் தோன்றிய ஊழல் போக்கானது தலைநகரத்தில் உள்ள அரசாங்கத்தில் சோசலிச ஜனநாயகக் கட்சி பங்கு கொள்ளுவதற்கான ஓர் வாய்ப்பை திறந்து விட்டது, ஹீசி இந்த அரசியலுக்கு மறுபடியும் திரும்பி வந்து சோசலிச ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளராக அத்தேர்தலில் நின்றார். ''முதல் வருடத்தில், அரசியலில் இருந்து விலகுவது என நான் எடுத்திருந்த முடிவு, அது சரியாக இருந்தது, ஓர் குறுகிய காலத்திற்குள் எடுத்துக் கொண்ட அந்த மீளாய்வு -இன்று எனக்கு தெரிந்த அது- ஓர் பிழையானது'', இதுவே அவருடைய இராஜினாமாவுக்கான விளக்கமாக இருந்தது.

அவர் இவ்வாறான நல்லொழுக்க மற்றும் பொறுப்பு தொடர்பாக குறிப்பிடுகையில், ஹீசி தொழிலாளர்கள், இளைஞர்களைப் பற்றிய விடயத்தில் அக்கறையற்று இருந்தார். இந்த இளைஞர்களும், தொழிலாளர்களும் இவர் வலதுசாரி அரசியல் மற்றும் சதிகார கிரிமினல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பேர்லினில் உள்ள கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் Diepgen, Landowski போன்ற பேர்வழிகளுக்கும் எதிராகப் போராடுவார் எனக் கருதி, பிழையாக வாக்களித்து இருந்தனர். மிக முக்கியமான மற்றும் ஓர் அவசியமான சமயத்தில், அதாவது வலதுசாரித் தாக்குதல்களை எதிர்த்து முன்னே செல்வதற்கு பதிலாக, அதைவிட்டு விலகி பின்வாங்கியதுடன் ஓர் தனிப்பட்ட வாழ்க்கையை தீர்மானித்தும் விட்டார்.

இவரின் நடவடிக்கையை ஹெசன் மாநிலத்தின் வலதுசாரி அரசியல் வாதியான Roland Koch (கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி) என்பவருடன் ஒப்பிடலாம். கோக் அவரது கட்சிக்கு கள்ளத்தனமாக சேர்க்கப்பட்டிருந்த நிதியுதவியை நியாயப்படுத்தினார், கையெழுத்திடப்பட்ட பொய்யான கணக்கு பத்திரங்களைப் பற்றி பாராளுமன்றத்தில் பொய் சொன்னார். இவை இறுதியில் பலவிதமாக இராஜினாமா செய்யும்படி அவரை நெருக்கியபோது அவர் மிகவும் ஆத்திரமுற்று, கொதித்தெழுந்தார்.

கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (CDU) தாரளவாத ஜனநாயக கட்சி (FDP) களின் பிரதான தேர்தல் பிரச்சார நிலையங்களில் ஹீசியின் இராஜினாமா விடயம் மிகவும் ஓர் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட முறையில் பாராட்டுக்களைப் பெற்றன. சோசலிச ஜனநாயகக் கட்சி செப்டம்பர் 22ல், அவரது இராஜினாமா நடவடிக்கையால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிடுமானால், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, தாரளவாத ஜனநாயகக் கட்சிகளின் ஆசனங்கள் அங்கே பெரும்பான்மைக்கான உத்தரவாதத்தை பெறமுடியும்.

இவற்றை இறுதியாக பார்க்கையில், ஹீசியினுடைய இராஜினாமா காரணங்கள் மிகவும் ஓர் ஆழமான மற்றும் தனிப்பட்ட பகட்டுத்தனத்தையும், குள்ளத்தனத்தையுமே கொண்டிருக்கின்றன. ஹீசியின் அரசியல் அத்தியாயமும், லவன்ரைனைப் போல அல்லது பிரான்சின் முன்னைய ஜனாதிபதி லியோனல் ஜொஸ்பனை -இவர் தேர்தல் தோல்வியை அடுத்து எதுவித விமர்சனங்களுமின்றி அரசியல் அரங்கை விட்டு அகன்றதைப் போல- ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அவருடைய வெளியேற்றம், பச்சை- சிவப்பு அரசாங்கத்தையும் அதனை சுற்றியுள்வர்களினதும் பொதுவான சீரழிவினது ஒரு பாகமாகும். அவரது பலவிதமான அரசியல் அனுபவ தேட்டங்கள் அதேபோல் சிவப்பு- பச்சை அரசாங்கத்தால் முன்னெடுத்த பாராளுமன்ற வேலைத்திட்டம் போன்ற இவை எல்லாம் அனேகமாக தொண்ணூறாம் ஆண்டுகளில் கோலோச்சிய பங்குச்சந்தையின் பொருளாதார செழுமைகளில் இருந்து ஸ்தாபிக்கப்பட்டன. அப்பொருளாதார செழுமையினூடு பெருகிச் செல்லும் இலாப வெற்றிகள் ஒரு சில தனிப்பட்ட வசதி படைத்த தட்டினரின் (Elite) பணப் பெருக்கத்துக்கு மட்டும் வாய்பளிக்காது, ஆகக்குறைந்தது, ஒரு குறிப்பிட்டளவாவது வர்க்க முரண்பாட்டை தணிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். பங்குச் சந்தைகளின் பாரிய பொறிவுகளும், வளர்ச்சியடைந்து செல்லும் உலகப் பொருளாதார நெருக்கடியும் இந்த சமூக சீர்திருத்தல்வாத மாயைகளை தவிடு பொடியாக்கி உள்ளன.

Top of page