World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Condemn the LTTE's violent attack on Sri Lankan socialist இலங்கை சோசலிஸ்ட் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறைத் தாக்குதலைக் கண்டனம் செய்! By the WSWS Editorial Board தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இலங்கையின் வடக்கில் உள்ள ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிரான அவர்களின் தாக்குதலை உக்கிரமாக்கியுள்ளனர். அக்டோபர் 8 செவ்வாய்க்கிழமை நன்கு அறியப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரான கார்த்திகேசு அமிர்தலிங்கம், சோ.ச.கட்சியின் உறுப்பினரான நாகராஜன் கோடீஸ்வரனை மூர்க்கமாகத் தாக்கினார். 27 வயதான கோடீஸ்வரன் மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஊர்காவற்துறையின் அம்பிகை நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் ஸ்தாபக அங்கத்தவரும் பொருளாளருமாவார். கோடீஸ்வரன் தப்பித்துக்கொள்ள முயற்சித்தபோது அவர் தலையிலும் கழுத்திலும் தோள்களிலும் கடுமையான கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளானார். ஆனால் உண்மையில் அவரால் ஒரு உள்ளூர் கடைக்குள் பாதுகாப்பு தேடிக்கொள்ள முடிந்திருக்காவிடில் நிச்சயமாகக் கொல்லப்பட்டிருப்பார். இச்சம்பவத்தை அடுத்து ஊர்காவற்துறையிலுள்ள சோ.ச.கட்சி அங்கத்தவர்கள் உள்ளூர் பொலிசுக்கு உடனடியாக அறிவித்திருந்த போதிலும் சமபந்தப்பட்ட நபரை கைது செய்வதற்காக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர் இன்னமும் சோ.ச.கட்சி அங்கத்தவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராக வன்முறை அச்சுறுத்தல்களை விடுக்கின்றார். செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலானது சோ.ச.கட்சியை அடக்குவதற்காகவும் அமைதியடையச் செய்வதற்காகவுமான விடுதலைப் புலிகளின் முயற்சியின் கடுமையான விஸ்தரிப்பை குறிக்கின்றது. ஒரு வாரத்துக்கும் முன்னதாக, விடுதலைப் புலிகளின் அலுவலரான செம்மணனனும் அவரது பிரதிநிதியான அருந்தவனும் ஊர்காவற்துறையில் சோ.ச.கட்சி அங்கத்தவர்களுக்கு எதிராக செப்டம்பர் மாதம் விடுத்த மரண அச்சுறுத்தலை எதிர்த்து உலக சோசலிச வலைத்தளமும் மற்றும் சோ.ச.கட்சியும் ஒரு அனைத்துலக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன. இந்த மரண அச்சுறுத்தல்கள், விடுதலைப் புலிகளின் புதிய கட்டிடத்துக்காக நிதி கோரியபோது சோ.ச.கட்சியின் தலைமையிலான கடற் தொழிலாளர் சங்கம் அதற்கு பணம் வழங்க மறுத்ததையடுத்தே விடுக்கப்பட்டன. இந்த நிதிக் கோரிக்கையானது விடுதலைப் புலிகளின் எதிராளிகளுக்கு விரோதமான வன்முறைப் பிரச்சாரத்தை நியாயப்படுத்துவதன் பேரில் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிட்ட ஆத்திரமூட்டலாகும். சோ.ச.கட்சி மீதான தாக்குதல்கள், தற்போதைய இலங்கை பேச்சுவார்த்தைகளோடு பிணைக்கப்பட்டுள்ள புதிய அதிகாரப் பகிர்வு கொடுக்கல் வாங்கல்களுக்கான விடுதலைப் புலிகளின் தகமையை எடுத்துக்காட்டும் நடவடிக்கைகளை அதன் தெளிவான நகர்வுகளோடு இணைந்து கொண்டுள்ளன. கொழும்பு அரசாங்கத்துடனும் மற்றும் அதன் திறந்த சந்தைப் பொருளாதார திட்டத்துடனும் ஒரு கனிஷ்ட பங்காளியாக தம்மை வெட்கம் கெட்ட முறையில் அர்ப்பணித்துவரும் விடுதலைப் புலிகள் இயக்கமானது, தமிழ் மக்களின் நலன்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் பாசாங்குகளை கை விட்டுள்ளது. ஊர்காவற்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் அண்மைய தாக்குதல் தொலை நோக்குடைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிறுபான்மை தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் அதன் சளைக்காத போராட்டத்தின் காரணமாக சோசலிச சமத்துவக் கட்சியும் (அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்) இலங்கை முழுவதும் நன்கு அறியப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சி, 1983 ல் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானதிலிருந்து, இடம்பெற்றுவந்த இராணுவத் தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளைப் பாதுகாத்தும், மற்றும் வடக்குக் கிழக்கிலிருந்து இலங்கை துருப்புக்களை முற்றாக வெளியேற்றுமாறும் கோரி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளது. இலங்கை அரசினதும் மற்றும் அதன் அரசியல் ஏஜன்டுகளின் பதிலளிப்புக்கள் பல சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களை படுகொலை செய்தல் மற்றும் ஏனையவர்களை சிறைவைத்தல் உட்பட்ட அரச ஒடுக்குமுறைகளைக் கொண்டிருந்தது. சோசலிச சமத்துவக் கட்சி கடந்த தசாப்தங்களில் விடுதலைப் புலிகளின் தேசியவாத மற்றும் பிரிவினைவாத வேலைத்திட்டத்துடனான தமது அரசியல் வேற்றுமைகளை முழுமையாக தெளிவுபடுத்தி வந்துள்ளது. தற்போது விடுதலைப் புலிகள் இந்த வேற்றுமைகளுக்கு வன்முறைத் தாக்குதல்களோடு பிரதிபலிப்பதானது வடக்கில் அது ஸ்தாபிக்கத் தயார் செய்துகொண்டிருக்கும் மாதிரியை சுட்டிக் காட்டுகின்றது. உலக சோசலிச வலைத்தளமும் (WSWS) சோ.ச.கட்சியும் விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது பிரச்சாரத்துக்கு ஆதரவாக கடந்த வாரத்தில் மின்னஞ்சல் மற்றும் தொலைமடல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடிதங்களை வரவேற்கின்றது. ஆனால் இது தற்போது தீவிரமாக்கப்பட வேண்டியுள்ளது. நாம் கோடீஸ்வரன் மீதான விடுதலைப் புலிகளின் கொலைகாரத்தனமான தாக்குதலை பகிரங்கமாக கண்டனம் செய்யவும், தமிழர்களின் பிரச்சனையை குறைத்து மதிப்பிட வழி செய்யும் இத்தகைய வழிமுறைகளை மறுத்து ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடுமாறு விடுதலைப் புலிகளைக் கோருவதற்கும், இலங்கையிலும் உலகம் பூராகவும் உள்ள தமிழ் சமூகத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம். அமிர்தலிங்கம் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தல்களில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவர வேண்டும். நாம் இந்த குற்றவியல் தாக்குலைக் கண்டனம் செய்யுமாறும், தமது அரசியல் நடவடிக்கைகளை அடக்குமுறைகளிலும், வன்முறைகளிலும் இருந்து சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் உரிமையை காப்பாற்றுமாறும் அனைத்து மனித உரிமை அமைப்புகளுக்கும் ஜனநாயக உரிமைகளைப் பேணுவதில் அக்கறை கொண்ட அனைவருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம். கடிதங்களும் அறிக்கைகளும் அஞ்சல் செய்யப்பட வேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யப்பட வேண்டிய முகவரிகள், யாழ்ப்பாணம். Ilamparithi LTTE Jaffna Office Potpathy Road, Kokuvil Jaffna கொழும்பு LTTE c/- Sri Lanka Monitoring Mission PO Box 1930 Galle Road Colombo 3 Email: slmm-hq@mfa.no அவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கும் தபால் மூலம் அல்லது தொலைமடல் மூலம் அனுப்பி வைக்கலாம். லண்டன் The LTTE c/- Eelam House 202 Long Lane London SE1 4QB United Kingdom Telephone: 44-171-403-4554 Fax: 44-201-403-1653 தயவு செய்து அனைத்து அறிக்கைகளினது பிரதிகளை உலக சோசலிச வலைத் தளத்துக்கும் அனுப்பி வைக்கவும் Email: editor@wsws.org Fax: United States: 248 967 3023. Britain: 0114 244 0224.
Australia: 02 9790 3501. |