WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
The war against Iraq and America's drive
for world domination
ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்
By David North
4 October 2002
பகுதி-3
Back
to screen version
பின்வருவது உலக சோசலிச வலை தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான, டேவிட்
நோர்த்தால் அக்டோபர் 1, 2002 அன்று அன் ஆர்பரில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பலர் வருகை தந்திருந்த பகிரங்கக்
கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கையின் மூன்றாவதும் இறுதிப் பகுதியும் ஆகும்.
முதலாவது புஷ் நிர்வாகத்தினால் பின்பற்றப்பட்ட இராணுவ மூலோபாயம் பற்றிய மீளாய்வு
முதலாவது புஷ் நிர்வாகமானது சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமற்
போனமைக்கு அமெரிக்க இராணுவ மூலோபாயத்தை ஒரு முழு அளவிலான மறு ஆய்வு செய்வதன் மூலம் பதில்கொடுத்தது.
அதன் மேலோங்கி நின்ற குறிக்கோள்கள் சோவியத் ஒன்றியம் கலைப்பால் விடப்பட்ட அதிகார வெற்றிடத்தை செயலூக்கத்துடன்
பயன்படுத்திக்கொள்ள இருந்தன, மற்றும் அவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு செல்வாக்குள்ள
போட்டியாளராக எந்த நாடும் தோன்றுவதிலிருந்து தடுக்கும் ஒரு புவிசார் அரசியற்கோட்டையை ஏற்படுத்துவதாக
இருந்தது. இந்த செயல்வேலைத்திட்டத்திற்கு முக்கியமானது இருக்கின்ற அல்லது சாத்தியமுள்ள எந்த பகைவரையும் அல்லது
எதிரியையும் ஆத்திரமூட்டுவதற்கு மற்றும் தேவைப்பட்டால் நசுக்குவதற்கு, இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாக
இருந்தது. 1992ல், பாதுகாப்பு செயலாளர் ரிச்சர்ட் செனி மற்றும் அப்போதைய படைத்தளபதியான கொலின்
பாவெல் அமெரிக்க இராணுவப் படைகளுக்கான பரந்து விரிந்த செயல்பாட்டு குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துதற்கு
அழைப்பு விடுத்தனர். அதாவது இராணுவமானது 100 நாட்களில் ஒரு பெரிய போரை மற்றும் 180க்கும் குறைவான
நாட்களில் இரண்டு போரை முடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என தூண்டி விட்டது.
பில் கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்க இராணுவத் திட்டமிடலாளர்களின் அதிகரித்துவரும்
வலுச்சண்டைக்குப் போகும் நோக்கில் எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. "ஈடுபடல் மூலம்
உலகை வடிவமைத்தல்" என்ற முழக்கத்தின் கீழ், 1990கள் ஐக்கிய அமெரிக்க அரசுகள் நீண்டகால பூகோள மேலாதிக்கத்தை
உத்தரவாதம் செய்யும் பிரதான வழிமுறையாக இராணுவ ஆற்றலைப் பார்த்த ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி
இரண்டினதும் உள்ளே அரசியல் ஒத்திசைவின் தோற்றத்தைக் கண்டது.
ஆயினும், இராணுவ ஆற்றலின் தீர்க்கமான பாத்திரத்தின் மீதான இந்த வலியுறுத்தல் அதன் பலத்திலிருந்து
எழவில்லை மாறாக, இன்னும் சொல்லப்போனால் அமெரிக்க முதலாளித்துவத்தின் கீழுள்ள பலவீனத்திலிருந்தே ஆகும்.
சாராம்சத்தில், இராணுவ வாதமானது பொருளாதார மற்றும் சமூக சரிவின் அறிகுறி ஆகும். அதன் பிரதான
போட்டியாளர்களுக்கு எதிரெதிராக அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார பலத்தின் நம்பிக்கை சரியான காரணத்துடன்
இழந்து போகையில், மற்றும் உள்நாட்டு சமூகக் கட்டமைப்புக்குள்ளே பிளவுகள் பற்றி அதிகரித்துவரும் அச்சம் வளர,
ஆளும் தட்டானது இராணுவ ஆற்றலை தொந்திரவு கொடுக்கும் அனைத்து எதிர்மறைப் போக்குகளுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடிய
வழிமுறையாகப் பார்க்கின்றது. நியூயோர்க் டைம்ஸின் தோமஸ் பிரைட்மன்
(Thomas Friedman)
மார்ச் 1999ல் எழுதியவாறு, "மறைந்த முஷ்டி இல்லாமல் சந்தையின் மறைந்த
கை ஒருபோதும் வேலை செய்யாது --எப்-15 கட்டியமைப்பவர், மாக்டொன்னெல் டுக்ளஸ் இல்லாமல் மக் டொனால்ட்
பூத்துக்குலுங்காது. சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில்நுட்பத்திற்காக உலகை பாதுகாப்பாக வைத்திருக்கும் மறைவான
முஷ்டி அமெரிக்க இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடற்படையிலுள்ள நிலப்படை.... என அழைக்கப்படுகின்றது,
அமெரிக்கா கடமையில் இல்லாமல், அமெரிக்கா ஒன்லைன் இருக்காது."
அமெரிக்காவின் மூலோபாய குறிக்கோள்கள் பற்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈராக்
பிரச்சினை முக்கிய பாத்திரத்தினை ஆற்றியது. ஒரு பொருளில், ஈராக்கிற்கு எதிரான முதலாவது போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப்
பொறுத்தவரை ஒரு சிலமாதங்களே மிக முன்கூட்டி நிகழ்ந்தது. ஜனவரி -பெப்ரவரி 1991ல், சோவியத் சோசலிசக்
குடியரசுகளின் ஒன்றியத்தின் தலைவிதி இன்னும் நிச்சயமில்லாததாய் இருந்தவேளை, ஐ.நா ஆட்சிக் கட்டளை உரிமையின் எல்லகளை
வரம்பு மீறுதற்கு மற்றும் சதாம் ஹூசைன் ஆட்சியை ஒருதலைப்பட்சமாய் தூக்கி வீசுதற்கு முயற்சிப்பதற்கு புஷ் நிர்வாகம்
அதனை அதி ஆபத்துநேர்வுக்குரியதாய் கருதியது. ஆனால் போர் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்திருந்த வேளை, ஆளும்
தட்டின் சக்திமிக்க பகுதிகளுக்குள்ளே பெரும் வாய்ப்பு தவறவிடப்பட்டிருந்ததாக ஒரு உணர்வு அங்கு இருந்தது. அமெரிக்க
மேலாதிக்கத்தை சவால் செய்யக்கூடிய எந்த ஒரு அரசு அல்லது அரசுகளின் சேர்க்கையும் தோன்றுவதைத் தடுக்கும் புதிய
மூலோபாய நோக்கத்தின் உள்ளடக்கத்தினுள்ளே, ஈராக்கை வெற்றி கொள்ளல் தீர்வுக்குரிய மூலோபாய குறிக்கோளாகக்
காணப்பட வந்தது. வலதுசாரி மூலோபாய வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட எண்ணற்ற பத்திரங்களில், சதாம் ஹூசைனின்
ஆட்சியைத் தூக்கி வீசல் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு எண்ணெய் மீதான, ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் உள்ள அதன் இராணுவப்
போட்டியாளர்களாகும் சாத்தியம் உள்ளவர்களின் மற்றும் பொருளாதாரப் போட்டியாளர்களாகும் சாத்தியம் உள்ளவர்களின்
பொருளாதாரங்களுக்கு அத்தியாவசியமாக இருக்கும், உச்சபட்சமாய் நெருக்கடி மிகுந்த வளத்தின் மீது மூலோபாயக்
கட்டுப்பாட்டை வழங்கும் என வெளிப்படையாக வாதித்தனர். கொள்கை வகுப்பதில் சிறப்பு வல்லநர்களான ஜோர்ஜ்
பிரைட்மன் மற்றும் மெர்டித் லெபார்ட் (Meredith
Lebard) அவர்களின் செல்வாக்குமிக்க நூலான, 1991ல் வெளியிடப்பட்ட,
ஜப்பானுடன் வரவிருக்கும் போர் என்பதில் வாதிக்கின்றனர்.
"எண்ணெயோடு பாரசீக வளைகுடா ஒரு பிராந்திய பிரச்சினை என்பதை விடவும் அதிகமான
ஒன்றாக ஆனது. அது அமெரிக்காவைப் பொறுத்தவரை உலகப் பொருளாதாரத்தின் இயக்கமையமாக ஆகிறது, பிராந்தியத்தின்
மேலாதிக்கம் முன்னர் எதிர்பார்த்திராத சர்வதேச ஆற்றல் மீது கதவைத் திறந்துவிடும். மற்றொருபுறம், ஈராக்
அல்லது ஈரான் போன்ற இன்னொரு பிராந்திய அரசை, பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும் அதன்
சொந்த அதிகாரத்தை வலுப்படுத்தவும் அனுமதித்தலானது, இந்தப் பிராந்தியத்தில் ஒரு தரைவழி போரைத் தொடுப்பதற்கு
அமெரிக்காவைத் தயார்செய்திராவிடில், அச்சாத்தியத்தின் கதவை மூடிவிடும்.
"குவைத் மீதான 1990 ஈராக்கிய ஆக்கிரமிப்பின்பொழுது, அமெரிக்க பதில் வெளிப்படையாக ஒரு நோக்கத்திற்காக
இருந்தது: பிராந்தியத்தின் எண்ணெய் அளிப்பின் ஈராக்கின் மேலாதிக்கத்தைத் தடுத்தல். ஆயினும், அது கூடவே
இன்னுமொரு சாத்தியத்தைத் திறந்து விட்டது. குவைத்தை மீண்டும் எடுத்துக்கொள்வதில், சதாம் ஹூசைனின் ஆட்சியை
உடைத்தலில் மற்றும் ஈராக் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றலில் அமெரிக்காவின் வெற்றியானது உலகின் பேரளவு
எண்ணெய் சேர்ம இருப்பின் மற்றும் உற்பத்தியின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவை வைக்கும். எவ்வளவு
சேதம்விளைக்காது இந்த சக்தி பயன்படுத்தப்படும் என்பது ஒரு பொருட்டல்ல, அமெரிக்காவானது சர்வதேச
பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்துவதில் வெளித்தோன்றும்.....
"...அது உற்பத்தி ஒதுக்கீடுகளை நிர்ணயிக்கும் நிலையில் இருக்கும் மற்றும் ஆகையால் விலைகளை, அதேபோல
எண்ணெய் நகர்வினைக் கட்டுப்படுத்தும். தனது 60 சதவீதத்திற்கும் மேலான எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு ஹொர்முஜ்
நீரிணைக்குள் (Straits of Hormuz)
உள்ள நாடுகளின் மீது சார்ந்திருக்கும், ஜப்பான் போன்ற நாடு, அதன் மாபெரும் பொருளாதாரப்
போட்டியாளர் --உலகின் ஒரே பெரிய பொருளாதாரம் மற்றும் அதிகிரித்த அளவில் ஜப்பானின்பால் கடுமையாயிருக்கும்
ஒன்று-- ஜப்பானின் எண்ணெய் அளிப்பின் மீது நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காணும்.....
"...முன்னணி அரசியல் சக்தியான, அமெரிக்காவானது திடீரென்று, சர்வதேசப் பொருளாதாரத்தின்மீது
முதுகுக்குப் பின்னால் மல்லன் பிடி போட தனது அரசியற் சக்தி பயன்படுத்தப்பட முடியும் ஒரு ஸ்தானத்தில்
இருப்பதாய் தன்னையே கண்டு கொள்ளும்.
"பாரசீக வளைகுடாவானது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தகராறுகளின் மையமாக
ஆவது அவசியமானதாக ஆகும். அந்தப் பகுதியிலிருந்து எண்ணெய் பாய்வதற்கு ஜப்பானின் வடுப்படும் நிலை, இப்பிராந்தியத்தில்
அதிகரித்த அமெரிக்க அதிகாரம் கட்டாயம் ஜப்பானிய பாதுகாப்பின்மை அதிகரிப்பதை அர்த்தப்படுத்தும். மோதலின்
பிராந்தியமயமாதல் மற்றும் பொருளாதாரத்தின் பிராந்திய பிளவுகள் ஐக்கிய அமெரிக்க அரசுகளைப் பொறுத்தவரை
முக்கியமான கதவைத் திறக்கும்: ஜப்பானிய எண்ணெய் அளிப்பை சூழ்ச்சியுடன் கையாளுதல் ஜப்பானிய ஏற்றுமதிகள்
அமெரிக்காவிற்கு முன்வைக்கும் சவாலை நன்றாக முடிவுக்குக் கொண்டுவரக் கூடும்." [8]
எளிதில் பாதிக்கக் கூடிய இந்த பிரச்சினை பற்றிய விவாதம் தொடக்கூடாததாக உண்மையில்
இருக்கும், அமெரிக்க வெகுஜன ஊடகங்களைத் தவிர, அமெரிக்காவைப் பிரதானமாய் முன்ஆக்கிரமித்திருப்பது பரந்த
மக்களை அழிக்கும் ஆயுதங்கள் எனப்படுபவை அல்ல, எண்ணெய்தான் என உலகம் முழுவதிலும் பரவலாய் அங்கீகரிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் போரானது, உலகில் இரண்டாவது பெரும் பெட்ரோலிய சேர்ம இருப்புக்களைக் கொண்டிருப்பதாக
நம்பப்படும் மத்திய ஆசியாவில் புதிய அமெரிக்க இராணுவ தளங்களை ஏற்படுத்துதற்கான வாய்ப்பை வழங்கிய
அதேவேளை, ஈராக்கை வென்று கைப்பற்றல் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய க்ரூட் எண்ணெய் சேர்ம
இருப்பினை உடனடியாக ஐக்கிய அமெரிக்க அரசுகளின் கட்டுப்பாட்டில் வைக்கும். சொல்லுதற்கரிய தோமஸ் பிரைட்மனை
மேற்கோள் காட்டுவதாயின், "உடைந்து போயிருக்கிறது ஈராக், நாம் ஈராக்கை சொந்தமாக்குவோம்."
தங்களின் குற்றவியல் திறமைகளை எண்ணெய் தொழில்துறை நிர்வாக அதிகாரிகளாக சாணை
தீட்டிக் கொண்ட செனி போன்ற ஆட்களை முன்னணி நபர்களாக உடைய, புஷ் நிர்வாகமானது தோன்றிக் கொண்டிருக்கும்
அமெரிக்கப் பேரரசின் கிரீடத்தில் சாத்தியமாக ஆகும் மணிக்கல்லாக பாரசீக வளைகுடாவைப் பார்க்கின்றனர். மத்திய
ஆசியாவில் இறுதியில் வெளிக்கொண்டுவர விருக்கும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு சேர்மங்கள் மீதான கட்டுப்பாட்டுடன்
அந்தப் பிராந்தியத்தின் மேலாதிக்கம் சேர்ந்து விடுமாயின், ஐக்கிய அமெரிக்க அரசுகளை நீண்டகாலத்துக்கு சட்டம் முதலியவற்றுக்கு
பிடிகொடாமல் ஏய்க்கும் நீண்டகால மூலோபாய மேலாதிக்கத்தை அவர்கள் அடைவார்கள் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
தலைவர்கள் நம்புவர். உலக மேலாதிக்கத்தின் இந்தக் காட்சி, மூலோபாய பூகோள வளங்களின் கட்டுப்பாடு மூலமாக
உத்தரவாதம் செய்யப்படுவது, பிற்போக்கு கனவுருவுப் புனைவாற்றல் ஆகும், அது நிர்வாக நிறுவனத்தின் பரந்தபகுதியினர்
மத்தியில் ஆர்வமிக்க பார்வையாளர்களைக் கண்டிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் மற்றும் நிதி மேற்குடி ஆட்சியின் உள்ளே
நிலைகொண்டிருக்கும் எண்ண வடிவு, பொருநர் அரசியல்: ஏன் தலைமை புறச்சமய ஒழுங்கமைதியைக் கோருகிறது
என்று தலைப்பிடப்பட்ட, றொபேர்ட் கப்ளானால் எழுதப்பட்ட புதிய புத்தகத்தில் எதிரொலிக்கிறது. ஒரு மாதிரி பந்தியில்,
அவர் அறிவிக்கிறார்:
"மிக வெற்றிகரமான எமது வெளிநாட்டுக் கொள்கை, உலகில் அமெரிக்கா அதிக செல்வாக்கைக் கொண்டிருக்க
வேண்டும். இவ்வாறு, எதிர்கால வரலாற்றாசிரியர்கள் இருபத்தோராம் நூற்றாண்டை ஐக்கிய அமெரிக்க அரசுகளை
ஒரு குடியரசு போல ஒரு பேரரசாக திரும்பிப் பார்ப்பர், அது வரலாறு முழுவதும் உள்ள ரோம் மற்றும் ஏனைய
பேரரசிலிருந்து எவ்வளவுதான் வேறுபட்டிருந்த போதும் அவ்வாறு பார்ப்பர். தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகள்
செல்கையில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் நாற்பத்து மூன்று ஜனாதிபதிகளுக்குப் பதிலாக, நூறு ஜனாதிபதிகளை அல்லது
150 ஜனாதிபதிகளைக் கூடக் கொண்டிருக்கும், மற்றும் அவர்கள் கடந்து போன பேரரசுகளின் --ரோமன்,
பைஜான்டன், ஒட்டோமான் இவற்றின்-- ஆட்சியாளர்கள் போல ஒரு நீண்ட பட்டியலில் இடம் பெறுவர். தொல்
பழமையுடன் ஒப்பிடுவது குறைந்துபோவதை விடவும் வளரும். குறிப்பாக ரோம் ஒழுங்கற்ற உலகில் ஆணையின் சிறு
பகுதியை ஊக்குவிக்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்தும் மேலாதிக்க வல்லரசுக்கு ஒரு மாதிரி ஆகும்..."
[9]
இந்தப் பிதற்றல் ஒரு வகை நம்பத்தகாத கலாச்சார இயல்நிகழ்ச்சியின் --பொது
நாகரிகம் என்பதைப் பற்றிக் கூறத் தேவையில்லை, அனைத்துவிதமான வரலாற்று உணர்வு மற்றும் நிகழ்கால யதார்த்தம்
ஆகியவற்றை இழந்து விட்ட ஆளும் தட்டுக்குள்ளே உள்ள மாயத் தோற்ற மனநிலையின் ஒரு எடுத்துக்காட்டின்-- நலனாக
மட்டுமே இருக்கிறது.
ஐக்கிய அமெரிக்க அரசுகள் இந்த கனவுருப் புனைவாற்றல்களை நடைமுறைப்படுத்துதற்கு
விழையும் மட்டத்திற்கு அது எதிர்ப்பை எதிர்கொள்ளும்: முதலாவதாக, அமெரிக்கக் கொள்ளையிடல்களின் உடனடி இலக்குகளாக
இருப்பவற்றிலிருந்து --வென்றடக்குவதற்கு இலக்குவைக்கப்பட்ட இந்நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து என்பது திரு. கப்ளனுக்கு
மனத்தில் தோன்றுவதாகத் தெரியவில்லை. ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் உள்ள அமெரிக்காவின் ஏகாதிபத்தியப்
போட்டியாளர்களின் எதிர்ப்பும் கூட அங்கு இருக்கிறது, அவை பொருளாதார அழுத்தத்துடன் கூடிய அச்சுறுத்தலை சாதாரணமாய்
ஏற்றுக் கொள்ளமாட்டா. முற்றிலும் அதே முறையிலேயே அமெரிக்காவின் நீண்டகால மூலோபாய நோக்கங்களின்
விளைபயன்கள் மீதாக வளர்ந்து வரும் அச்சங்கள் --பூகோள மேலாதிக்கத்தை நிறுவுதல்-- ஈராக்கில் போருக்கான அமெரிக்கத்
திட்டங்களுக்கு வெளிப்படையான எதிர்ப்பில் அதிகரித்த அளவில் வெளிப்பாட்டைக் காண்கிறது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப்
போரின் விளைவுகள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்கள் --ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் அதன் பிரதான
பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டியாளர்களுக்கும் இடையில் பேரளவில் உக்கிரமடைவது நடக்கக்கூடியதாக
இருக்கும். மூன்றாவது உலகப் போருக்கான மேடை அமைக்கப்படும்.
ஐக்கிய அமெரிக்க அரசுகளில் சமூக உறவுகள்
இதுவரை, போருக்கான ஐக்கிய அமெரிக்க அரசுகளின் முன்னெடுப்பிற்கான காரணங்களை
விவாதித்தலில், நாம் பூகோள புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நோக்கங்கள் மீது எண்ணங்களை ஒரு முகப்படுத்தி
இருந்தோம். ஆனால் இருந்தும் அரசியல் சமன்பாட்டில் இன்னொரு தீர்க்கமானகரமான காரணி அங்கு இருக்கிறது --அதாவது,
ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள சமூக உறவுகளில் அதிகரித்த அளவில் வெடிக்கும் நிலையும் முதலாளித்துவ ஆட்சிக்கு அது
முன்வைக்கும் அச்சுறுத்தலும் ஆகும்.
கடந்த தசாப்தம் முழுவதும் அமெரிக்க கொள்கை வல்லுநர்கள் சமூக ஒருங்கிசைவின் சீரழிவின்
வளர்ந்து வரும் அறிகுறிகள் பற்றி கவலைகளைத் தெரிவித்திருக்கின்றனர். நாகரிகங்களின் மோதல் என்ற புத்தகத்தின்
மூலம் பிரபலமான, சாமுவேல் ஹன்டிங்டன் (Samuel
Huntington) பல ஆண்டுகளுக்கு முன்னர், குளிர் யுத்தத்தின்
முடிவானது அரசுக்கான மக்கள் ஆதரவை ஊட்டி வளர்க்கக் கூடிய காரணத்தை அமெரிக்கா இழந்திருந்தது என எச்சரித்தார்.
பரந்த மக்கள் ஆதரவைப் பெறும் எந்தவிதமான உண்மையான தேசிய நலன்களின் உணர்வும் அங்கு நிலைகொண்டிருப்பதாக
காணப்படவில்லை. இருப்பினும், ஹன்டிங்டனால் குறிப்பிடப்பட்ட பிரச்சினை அடிப்படை ரீதியாக கருத்தியல் சார்ந்ததல்ல.
அது அமெரிக்க சமுதாயத்தினுள்ளே உள்ள அதிகரித்துவரும் சமரசம் செய்யமுடியாத மோதலில் வேரூன்றி இருக்கிறது. அமெரிக்க
சமூதாயத்தை தற்போது பண்பிட்டுக்காட்டும் பரந்த சமூக சமத்துவமின்மையை முகமூடியிட்டு மறைப்பது அதிகரித்த அளவில்
கடினமாகி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் எவ்வளவு திடமாக செல்வந்தரையும் அவர்களின் வாழ்க்கைப் பாணியையும்
புகழ்கின்றன என்பது ஒரு பொருட்டல்ல, மக்கள் தொகையின் மிகச் சிறிய வீதத்தினர் மத்தியில் தனிச்சொத்து அசாதாரணமான
அளவில் செறிந்திருத்தல் தொலை-நோக்கிலான சமூக பாதிப்புக்களைக் கொண்டிருக்கிறது.
ஜனநாயக விதிமுறைகள் அரித்துப்போதலும் அமெரிக்க அரசியலின் எவ்வளவோ அதிகமான வெளிப்படையாய்
செயல்படா நிலையும் சமூக துருவமுனைப்படலின் புறநிலைரீதியான விளைபயன்கள் ஆகும். 2000வது ஆண்டில், குளிர்யுத்தத்தை
அடுத்து உடனடியாக முதல் தடவையாக, தேர்தல் பற்றியதில் உண்மையான ஜனநாயக தீர்வுக்கு வருதல் இயலாததாக
இருந்தது. முடிவில், நிதி செல்வராட்சி ஜனாதிபதியைப் பொறுக்கி எடுத்தது.
ஐக்கிய அமெரிக்க அரசுகள் இடருக்குள்ளாக்கப்படும் சமூகப் பிரச்சினைகளுக்கு நிலவுகின்ற
அரசியல் அமைப்பில் விடைகள் இல்லை. உண்மையில், அவற்றைக் கவனிக்கக்கூட அதனால் முடியாது. செல்வராட்சியின் நிதி
ஆதரவில் அப்பட்டமாக தங்கி இருக்கும் நபர்களைக் கொண்ட, நிலவுகின்ற இரு கட்சி முறை, முற்றிலும் பொதுமக்களின்
பிரிதிநித்துவமின்மை ஆகும். போரை நோக்கிய முன்னெடுப்பு தொடர்பாக பத்துலட்சக்கணக்கான அமெரிக்கர்களால் உணரப்படும்
ஆழமான மன உலைவு மற்றும் இரு மனப்போக்கு பற்றி அரசியல் நிறுவனத்தில் உண்மையில் தெளிவாக ஒலிப்பதைக் காணவில்லை
என்ற உண்மையைத்தவிர வேறு எவ்வாறு ஒருவர் விளக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், மக்கள்தொகையின் இரண்டு
சதவீத, மிகவும் செல்வம் படைத்தவர்களின் பல்வேறு பகுதிகளை அரசியல் வட்டாரங்களாக உடைய அரசியல் நிறுவனம்,
பரந்த வெகுஜனங்களின் நலன்களுக்கும் அக்கறைகளுக்கும் குரல் கொடுக்க முற்றிலும் திராணி அற்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஆளும் வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும்
இடையிலான மனமுறிவை ஆற்றல் மிக்கவகையில் ஆழப்படுத்தி இருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் கார்ப்பொரேட் தட்டுக்களின்
குற்றவியல் தன்மை அம்பலப்படலானது பொருளாதார நெருக்கடியை --அது, அதாகவே, பேரளவில் ஆபத்தான பண்பைக்
கொண்டது-- வர்க்க ஆட்சியின் பொது நெருக்கடியாக மாற்றுதற்கு அச்சுறுத்துகின்றது. அயல்நாடுகளில் திடீர் வெற்றிகள்
உள்நாட்டு நெருக்கடியிலிருந்து மக்களை திசைதிருப்பும் என்று புஷ் நிர்வாகமானது நம்பிக்கை வைத்திருப்பது சிறு மட்டத்துக்கு
அல்ல. ஆனால் உள்நாட்டுப் பிரச்சினைகளை முன்னேறவிடாமல் தடுத்து வைப்பதற்கு செயல்படும் பிற்போக்கு ஆட்சிகளுக்கு
நேரிட்ட பேரழிவுகளின் பல எடுத்துக்காட்டுக்களை வரலாறு வழங்குகின்றது. தோல்வி அடைந்து வரும் உள்நாட்டு
பொருளாதாரத்திற்கான மற்றும் உக்கிரமடைந்து வரும் சமூக மோதலுக்கான மருந்தாக ஒரு போரை வகுத்துரைக்கும்
அரசாங்கங்கள் அனைத்துவகையான முன்னரே பார்க்க முடியாத பக்கவிளைவுகளாலும் பாதிக்கப்படலாம் -- அதில் புரட்சி
மிகவும் சீரிய ஒன்று என்பதை நிரூபிக்க இருக்கும்.
போரை நோக்கிய புஷ் நிர்வாகத்தின் முன்னெடுப்பு ஒவ்வொரு மாணவரையும் அரசியலுடன்
முரண்பட வைக்கிறது மற்றும், ஒழுக்கநெறி பிரச்சினைகளையும் நான் சேர்ப்பேன், அதனுடனும் பெரும் அளவில் முரண்பட
வைக்கிறது. அனைத்துக்கும் முதலாவதாக, இந்தக் கருத்தை என்னால் முடிந்த அளவு வலியுறுத்திக் கூற அனுமதிக்கவும். புஷ்
நிர்வாகத்தின் கொள்கைகள் வெறுமனே தவறாகக் கொள்ளப்பட்டவை அல்ல... அவை குற்றத்தனமானவை. இந்தக்
கொள்கைகளுக்கு பொறுப்பானவர்கள் தவறாக வழிநடத்தப்பட்ட தனிநபர்கள் அல்லர். அவர்கள் அரசியல் குற்றவாளிகள்.
ஆனால் அவர்களின் கொள்கையின் குற்றவியல் தன்மை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான குற்றவியல் பண்பிலிருந்து
பெருக்கெடுக்கிறது-- அது கொள்ளையிடல் மற்றும் வெகுஜனப் படுகொலை கொள்கையின் மூலம் தடுமாறும் முதலாளித்துவ
அமைப்பை முண்டு கொடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றது. ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள் ஆளும் தட்டால் செயற்படுத்தப்படும்
வழிமுறைகளுக்கும் அது சர்வதேச ரீதியாக பயன்படுத்தும் வழி முறைகளுக்கும் இடையில் உண்மையிலேயே அடிப்படை ரீதியாக
வேறுபாடு இல்லை.
கார்ப்பொரேட் ஊழல் பற்றிய அண்மைய அம்பலப்படுத்தல் தொலைநோக்கில் சமூக முக்கியத்துவம்
உடையது. அமெரிக்க வர்த்தகத்தின் நாளாந்த நடவடிக்கைகள் குற்றத்தன்மையை மேற்கொள்கின்றன. ஆளும் தட்டு
தொழில்துறை, நிதித்துறை மற்றும் சமூக வளங்களை விரும்பி மற்றும் படிமுறை ரீதியாய் கொள்ளையிடல் மூலம் பரந்த
செல்வத்தைத் திரட்டி இருக்கிறது. அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO)
அவர்கள் சீரழித்த கார்ப்பொரேஷன்களில் வகித்த பதவிக்காலத்தை
சீசரின் வார்த்தைகளை சிறிதே மாற்றி அமைப்பதன் மூலம் சுருக்கிச் சொல்ல முடியும்: "வந்தேன், பார்த்தேன்,
திருடினேன்." உண்மையில் கடந்த தசாப்தத்தில் ரஷ்யாவைச் சூறையாடிய கொள்ளைக் கும்பல் போன்ற "பிஜ்னெஸ்மென்"
("biznessmen")
களுக்கும் தங்களின் கார்ப்பொரேசன்களை கொள்ளையடித்திருக்கும் தலைமை நிர்வாக
அதிகாரிகளின் குற்றக் கும்பலுக்கும் இடையில் எந்தவிதமான பிரதான வேறுபாடும் இல்லை. அதன் சர்வதேச குறிக்கோள்களை
அடைவதற்கு அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் எந்த அடிப்படை வேறுபாடும்
இல்லை. அதற்கு ஈராக்கின் எண்ணெய் தேவைப்படுகிறது, ஆகையால் அது அதனை --அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன்--
திருட விரும்புகிறது.
இந்த குற்றவாளிகளை எதிர்ப்பது மாணவர்களின் கடமை ஆகும் --ஆனால் எதிர்ப்பானது
அரசியலை மற்றும் முதலாளித்துவ சமூதாயத்தின் சமூக இயக்கவியலை விஞ்ஞான ரீதியாகப் புரிந்து கொள்ளலை கட்டாயம்
அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான அக்கறை கொண்ட மற்றும் விடாஉறுதி மிக்க
போராட்டமானது போரை எழ வைத்த சமூகப் பொருளாதார நலன்களுக்கு-- அதாவது, முதலாளித்துவத்திற்கு எதிரான
போராட்டத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. மேலும், அந்தப் போராட்டமானது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளேயும்
சர்வதேச ரீதியாகவும் புறநிலைரீதியாக முதலாளித்துவத்திற்கு எதிராக நிற்கும் பரந்த சமூக சக்திகளை அணிதிரட்டுவதற்கு
அது முயற்சிக்கும் அந்த மட்டத்துக்கு மட்டுமே வெற்றிகரமாக இருக்க முடியும். அந்த சமூக சக்தி, நவீன முதலாளித்துவ
சமுதாயத்தில் உள்ள அபரிமிதமான மக்களைக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கமாகும்.
இவ்வாறு, போருக்கு எதிரான ஆரம்ப மையமே தொழிலாள வர்க்கத்தை ஒரு சுதந்திரமான
அரசியல் சக்தியாக அணிதிரட்டலும் ஒங்கமைப்பதும் ஆகும். ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளே, இதன் அர்த்தமானது, முதலாவதும்
முக்கியமானதுமாக, தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சியின் அரசியல் மேலாதிக்கத்திலிருந்து விடுவிப்பதும் புதிய,
சுதந்திரமான, சோசலிசக் கட்சியைக் கட்டுவதுமாகும். அத்தகைய கட்சியின் வேலைத்திட்ட ரீதியான முதன்மையான
தன்மை, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியத்திற்கு
எதிரான போராட்டத்திற்கு கட்டாயம் தன் அர்ப்பணிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
ஐக்கிய அமெரிக்க அரசுகளில் அத்தகைய கட்சி இருக்கிறது. அதுதான் சோசலிச சமத்துவக்
கட்சி, அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஐக்கியத்தைக் கொண்டிருக்கிறது. அதில் சேருவது
பற்றி எண்ணிப்பார்க்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்புக்கள்:
5. Stanley Weintraub, MacArthur's War: Korea and the
Undoing of an American Hero (New York, 2000) pp. 253-54.
6. Foreign Affairs, vol. 70, no. 1, 1991, p. 33.
7. Writings of Leon Trotsky 1933-34 (New York, 1998) p. 302.
8. New York, 1991. pp. 210-11.
9. New York, 2002, p. 153.
|