WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
The war against Iraq and America's drive
for world domination
ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்
By David North
4 October 2002
பகுதி-1 |பகுதி-2
|பகுதி-3
Use this version to print |
Send this link by email
| Email the author
பின்வருவது உலக சோசலிச வலை தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான, டேவிட்
நோர்த்தால் அக்டோபர் 1, 2002 அன்று அன் ஆர்பரில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பலர் வருகை தந்திருந்த
பகிரங்கக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது பகுதி ஆகும்.
சோவியத் யூனியனின் கலைப்பு
தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் மூலங்கள் பற்றி இரு வாரங்களுக்கு முன்னர் முகத்திரை
விலக்கியது 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட நாளுக்கு திருப்பிச்செல்ல முடியும். இது அமெரிக்க
ஐக்கிய அரசுகளைப் பொறுத்தவரை மிகப் பரந்த செயல்விளைவுடைய முக்கியத்துவம் உடையது. நூற்றாண்டின் கிட்டத்தட்ட
மூக்கால்வாசி பகுதிகளான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியானது விடுபட
முடியாமல் இணைந்திருந்தன. முதல் உலகப் போரில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் நுழைந்த 1917 ஏப்ரலுக்கு சிலமாதங்களுக்குப்
பின்னர் மட்டுமே போல்ஷிவிக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்த அக்டோபர் புரட்சி தொடரப்பட்டது. இவ்வாறு,
பிரதான ஏகாதிபத்திய வல்லரசாக அதன் வெளித்தோன்றலின் ஆரம்ப நாட்களிலிருந்து, அமெரிக்க ஐக்கிய அரசுகளானது,
உலக சோசலிசப் புரட்சியைப் பறைசாற்றிய புதிய வரலாற்று சகாப்தத்தின் வருகையினைப் பறைசாற்றிய
தொழிலாளர் அரசின் யதார்த்தத்துடன் மோதியது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட
புரட்சிகர சர்வதேச கருத்துக்கள் பற்றியதில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அடுத்தடுத்த காட்டிக் கொடுப்பு
இருப்பினும், ரஷ்யாவில் முதலாளித்துவத்தைத் தூக்கி வீசியதால் உண்டு பண்ணப்பட்ட அரசியல் --அமெரிக்க ஐக்கிய நாடுகள்
உட்பட முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சமூக நனவு மற்றும் அரசியல் போர்க்குணத்தின்
வளர்ச்சியில், மற்றும் சிறப்பாக இரண்டாவது உலகப் போரின் பின்னர்
பூகோளத்தின் குறுக்கே அடித்துச்செல்லும் காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின்
அலையில்--தசாப்த காலங்களாக தொடர்ந்து எதிரொலிக்க இருந்தது.
இரண்டாம் உலகப்போரில் இருந்து அது உலக முதலாளித்துவத்தின் தலைவராக தோன்றினாலும்,
அமெரிக்க ஐக்கிய நாடுகளானது உலகை அது பொருந்தக்கூடியதாக பார்க்கிறவாறு ஒழுங்கு செய்வதற்கான நிலையில்
இல்லை. அணுகுண்டை உடைமையாகக் கொண்டிருப்பது, அமெரிக்க ஐக்கிய அரசுகள் அச்சுறுத்த அதிகாரம் கொடுக்கும்
மற்றும், தேவைப்படுமானால், சோவியத் ஒன்றியத்தை அழிக்கும் என்ற ஆரம்ப எதிர்பார்ப்பானது, 1949ல் சோவியத்
ஒன்றியத்தின் அணுஆயுத சாதன உற்பத்தியால் சிதறுண்டு போனது. அதே ஆண்டில் சீனப்புரட்சியின் வெற்றியானது, ஆசியாவின்
மேல் சவால் செய்ய முடியாத ஆதிக்கத்தை, தான் செயல்படுத்தும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு ஒரு அழிவுகரமான
தாக்குதல் கொடுப்பதை பிரதிநிதித்துவப்படுத்தியது.
குளிர் யுத்த ஆரம்ப ஆண்டுகள் முழுவதும் சோவியத் ஒன்றியத்துடன் எப்படி அணுகுவது
என்பது தொடர்பாக அமெரிக்க ஆளும் வட்டங்களுக்குள்ளே ஒரு கடும் சண்டைக்கான வேட்கை இருந்தது. 1940களின்
இறுதி மற்றும் 1950களின் ஆரம்பத்தினது கொடிய கம்யூனிச எதிர்ப்பு வேட்டையாடல் மற்றும் அரசியல் களையெடுப்புக்கள்
ஆகியன இந்த விவாதம் இடம்பெற்ற சூழலின் முக்கிய கூறுகளாக இருந்தன. ஆளும் தட்டின் கணிசமான பிரிவினர்
(கன்னை) 'திரும்பச் சுருட்டல்' மூலோபாயத்துக்கு --அதாவது, சோவியத் ஒன்றியத்தையும் சீனாவில் மாவோயிச
ஆட்சியையும் அழித்தலுக்கு வக்காலத்துவாங்கின, இது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலை தவிர்க்க முடியாததாகக்கூட
ஆக்கியது. அரசுத்துறை கொள்கை வகுப்பாளர் ஜோர்ஜ் எப். கென்னான்
(George F. Kennan) உடன் தொடர்புடைய,
இன்னொரு பிரிவு, "எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி" க்கு வக்காலத்து வாங்கியது.
ட்ரூமன் நிர்வாகம் சீன இராணுவத்திற்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தலை
அங்கீகரிப்பதற்கு நெருக்கமாக வருகையில், இந்த பிரிவுகளுக்கு (கன்னைகளுக்கு) இடையிலான மோதல் கொரிய
போரின்பொழுது முன்னுக்கு வந்தது. 1950, நவம்பர் 30ல் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில், ட்ரூமன்
கொரிய போரில் சீனா நுழைவதை எப்படி அணுக அவர் விருப்பங்கொண்டுள்ளார் என்று கேட்டனர். ஜனாதிபதி பதிலளித்தார்:
"நாம் எப்போதும் போலவே, இராணுவ சூழலை சந்திப்பதற்குத் தேவையான என்னென்ன நடவடிக்கைகள் இருக்கின்றனவோ
அவற்றை எடுப்போம். பின்னர் அவர் குறிப்பாக அது அணுகுண்டு பயன்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதா எனக் கேட்கப்பட்டார்,
அதற்கு ட்ரூமன் பதிலளித்ததாவது, அது "நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு ஆயுதத்தையும் உள்ளடக்குகிறது. இந்தக் கூற்றை
விளக்குமாறு அதிர்ச்சியுற்ற செய்தியாளர்கள் வலியுறுத்தியபோது, "அணுகுண்டு பயன்படுத்தல் செயலூக்கத்துடன் எண்ணப்பட்டிருந்தது,
"[5] என்றார்.
சர்வதேச பெருங்கூச்சல் அமெரிக்க அரசாங்கத்தை ட்ரூமனின் கூற்றுக்கு பதில்வினையாற்றும்படி
நிர்ப்பந்தித்தது பின்நிகழ்வாகியது. இறுதியாக, ட்ரூமன் நிர்வாகம் மஞ்சூரிய --கொரிய எல்லையில் ஜப்பான் கடலில்
இருந்து மஞ்சள் கடல்வரை "கோபால்ட் கதிரியக்க வீச்சின் ஒரு பட்டை" யை பரப்புதற்கு 30லிருந்து 50 அணுகுண்டுகள்
போடப்படவேண்டும் என்ற ஜெனரல் மக்ஆர்தரின் (General
MacArthur) கோரிக்கையை நிராகரித்தது. இந்த முன்மொழிவு ஒரு பைத்தியக்கார ஜெனரலின்
மூளையில் உருவாகிய குழந்தை அல்ல. இந்த மற்றும் அதேபோன்ற கருத்துக்கள் நீண்டு நினைக்கப்பட்டது மற்றும் ஆதரிக்கப்பட்டது.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலை பகிரங்கமாக ஆதரித்தோர்களுள் பிற்கால உதவி ஜனாதிபதியின் தந்தையான காங்கிரஸ்
உறுப்பினர் மூத்த அல்பர்ட் கோர் ஆவார். கொரியப் போரில் அணுகுண்டுகளைப் பயன்படுத்தாதிருக்க முடிவெடுத்தமைக்கு
இரு காரணிகள் வழிவகுத்தன. முதலாவாக, நிலவும் இராணுவ சூழலில் அது பலனுள்ளது என நிரூபிக்கும் என்பது பற்றி அங்கு
சீரிய சந்தேகங்கள் இருந்தன. இரண்டாவது, மற்றும் தீர்மானகரமானது, கொரியாமீது குண்டு போடுவது ஒரு அரசியல்
சங்கிலித்தொடரான எதிர்வினையை இயங்க வைக்கும், அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும்
இடையில் அணுஆயுத மோதல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் இருந்ததாகும். குளிர் யுத்தத்தின் எஞ்சிய தசாப்தங்களில்,
"பின்வாங்கும்படி செய்வதன்" உண்மையான அர்த்தம், சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை அவ்வாறு செய்வதிலிருந்து
அமெரிக்க ஐக்கிய நாடுகள் தடுப்பது அல்ல, மாறாக சோவியத்தின் திருப்பித் தாக்கல் சாத்தியமானால் அவ்வாறு செய்வதிலிருந்து
அமெரிக்க ஐக்கிய அரசுகளைத் தடுப்பதாகும்.
குளிர் யுத்தம் ஒட்டு மொத்தமானதின் மூலோபாயமாக இல்லாதது என்பது ஒருபுறம்
இருக்க, குளிர் யுத்தத்தின்பொழுது அமெரிக்க ஐக்கிய அரசுகளின் அணுஆயுத மூலோபாயம் பற்றி சக்தி இழக்கும் வகையில்
விவாதிப்பதற்கான இடம் இதுவல்ல. ஆனால் கடந்த தசாப்தத்தின் சம்பவங்களையும் அமெரிக்க அரசாங்கத்தின் தற்போதைய
நடவடிக்கைகளைப் பற்றியும் புரிந்துகொள்வதன் நோக்கத்திற்காக, சோவியத் ஒன்றியம் அமெரிக்க இராணுவ பலத்தை
செயல்படுத்தலின் கீழ் வைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் இருப்பு எனும் கட்டுப்பாடுகளின் கீழ் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின்
பரந்த பகுதிகள் சினமூட்டப்பட்டன என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டும். இந்தக் காலகட்டம் முழுவதும் ஜனாதிபதி
ஐசனோவர் அழைத்த "இராணுவ -- தொழிற்சாலை வளாகம்" என்பதனுள்ளே சக்திமிக்க வட்டாரத்துக்குள் எஞ்சி
இருந்தது, அது சோவியத் ஒன்றியத்துடன் கடுமை தணியாத மோதலுக்கு தள்ளியது. நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு,
புஷ் நிர்வாகத்தில் தற்போது மிகமுக்கிய பதவிகளில் இருப்பவர்களுள் பலர் 1970கள் மற்றும் 1980களில் பெரும்
சோவியத் விரோத இராணுவக் கட்டி எழுப்பலுக்கு வெறியுடன் வக்காலத்து வாங்கியோராக, மற்றும் சோவியத் சோசலிச
குடியரசுகளின் ஒன்றியத்தின் மீது அணு ஆயுதத்தாக்குதலை நடத்தல் நிகழக்கூடிய தேர்வாக கருதப்பட்டிருந்தது என்று கூட
வாதித்தவர்களாக இருந்தனர்.
அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் அதிகரித்துவரும் வலியத்தாக்கும் தன்மை பிரத்தியேகமாக
குடியரசுக் கட்சியின் செயல்முறைத் திட்டம் ஆக இல்லை. ஜிம்மி கார்ட்டர் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்தின் மத்திய
ஆசிய குடியரசுகளை சீர்குலைக்க வேண்டி ஆப்கானிஸ்தானுக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் தூண்டி விடும் கருத்தை
தட்டிவிட்டது. கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி, பல ஆண்டுகளுக்கு முன்னர் உறுதிப்படுத்தியவாறு,
சோவியத் ஒன்றியம் அந்த நாட்டில் இராணுவ தலையீடு செய்ய தீர்மானிக்கும் முன்னரே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க
நடவடிக்கைகள் நன்கு செயல்பட்டுக் கொண்டிருந்தன.
குளிர் யுத்தத்தின் பொழுது சோவியத் - அமெரிக்க உறவுகள் பற்றி மேலதிகமாய் ஒரு
புள்ளி கூறப்பட வேண்டும். அமெரிக்க வலியத் தாக்குதல் தன்மை உலக முதலாளித்துவ பொருளாதாரத்துடன் தொடர்புடையது
என்று பலமாக மற்றும் செயலூக்கத்துடன் விவாதிக்கப்பட முடியும் என்று நான் நம்புகிறேன். இரண்டாம் உலகப்
போருக்குப் பின்னரான சர்வதேச முதலாளித்துவத்தின் விரிவாக்க முழுமலர்ச்சிக் காலத்தின்பொழுது, அமெரிக்க ஆளும்
தட்டிற்குள்ளே கசப்பான உள்சண்டை சோவியத் ஒன்றியத்துடன் சமரசத்தை ஆதரித்தவர்களின் விவாதங்களின் அடிப்படையில்
தீர்க்கப்படுவதை நாடியது. உலகரீதியான பொருளாதார விரிவாக்கத்தின் பொதுவான சூழ்நிலைகள் கிழக்கு -- மேற்கு
பிரிவு என்று அழைக்கப்படும் புவிசார் அரசியல் கட்டமைப்புக்குள்ளே லாபரீதியாக இயங்குதற்கு அமெரிக்க முதலாளித்துவத்தை
அனுமதித்த அந்த மட்டத்துக்கு, அமெரிக்க ஆளும் தட்டு சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்துடன் அணுஆயுத
மோதலைத் தவிர்ப்பதற்கு அல்லது தள்ளிப்போடவாவது மூலோபாய முடிவை செய்தது. வெளிப்படையான இராணுவ
மோதல்கள் புற எல்லைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இருப்பினும், ஆழமான கட்டமைப்பு மற்றும் அமைப்பு முழுதும் சார்ந்த பிரச்சினைகளில்
இருந்து எழுந்த நீண்ட பொருளாதாரத் தேக்கநிலை மற்றும் பொருளாதார சரிவு கொண்ட காலகட்டத்தில்
1970களில் உலக முதலாளித்துவம் நுழைகையில், --அதன் தற்போதைய பொருளாதார பின்னடைவு முன்கூட்டிய அடையாளமாக
இருக்கிறது-- இன்னும் அதிகமாய் வலியத் தாக்கும் போக்குகள் தம்மை உறுதிப்படுத்தின மற்றும் ஆளும் வட்டத்திற்குள்ளே
ஆதரவான பதிலைக் கண்டன. ஒருவர் இரு மாபெரும் எண்ணெய் அதிர்ச்சிகளையும் கூட சேர்க்கலாம் --முதலாவது
எண்ணெய் விற்பனை மீதாக புறக்கணிப்பை திணித்தலை அமல்படுத்துவதற்கான அரபு அரசுகளின் முடிவின் விளைவாக
1973ல் முதலில் நிகழ்ந்தது, இரண்டாவது 1979 ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து-- அமெரிக்க ஆளும் வர்க்கம்
எண்ணெய், இயற்கை வாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய மூலோபாய வளங்களை அது பெறுவதற்கு எந்தவிதமான
எதிர்கால இடையூறுகளையும் தடுப்பதற்கு அதன் உறுதியை அதிகரித்தது.
1980களின் பெரும் இராணுவக் கட்டி எழுப்பலானது, அமெரிக்க ஆளும் தட்டின்
சக்திமிக்க பகுதிகள் சோவியத் ஒன்றியத்துடன் பிரதான மோதலின் ஆபத்து நேர்வை எடுக்க விரும்பி இருந்தது
என்பதைச் சுட்டிக்காட்டியதாய் காணப்பட்டது. இந்தப் போர்வெறி கொண்ட சர்வதேசக் கொள்கை றேகன் நிர்வாகத்தால்
பின்னபற்றப்பட்ட உள்நாட்டுக் கொள்கையின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருந்தது, அது தொழிற்சங்க- உடைப்பின் வெற்றிகரமான
மற்றும் செயலூக்கமுள்ள வேலைத்திட்டத்தையும் முந்தைய 50 ஆண்டுகளாக தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட
சமூக சீர்திருத்தங்களை "திரும்ப சுருட்டிக் கொண்டுபோதலை" யும் முன்னெடுத்தது.
முடிவில், சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை கலைப்பதற்கு முடிவெடுத்தது
சோவியத் அதிகாரத்துவம் ஆகும். 1991ல் சோவியத் ஒன்றியம் சுய-கலைப்பு --ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால்
அக்டோபர் புரட்சியின் மரபியத்தை இறுதியாய்க் காட்டிக் கொடுத்தது-- அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முன்னர் என்றுமிருந்திராத
வரலாற்று வாய்ப்பினை உண்டு பண்ணியது. முதல் தடவையாக அது அதன் நோக்கங்களை அடைவதற்கு பலத்தைப்
பயன்படுத்துவதில் எந்தவித குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளும் --இராணுவ அல்லது அரசியல் கட்டுப்பாடுகளும்--
இருக்காத சர்வதேச சூழலில் செயல்பட முடிந்தது. இந்தப் புள்ளியிலிருந்து, அமெரிக்க ஐக்கிய அரசுகளின் மூலோபாய
குறிக்கோள்கள் மீதான உள் விவாதங்கள் மிகவும் கொடிய மற்றும் பிற்போக்கு போக்கினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.
சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமற்போனது, அமெரிக்காவைப்
பொறுத்தவரை சவால் செய்ய முடியாத பூகோள மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு வாய்ப்பை வழங்கியது என அவர்கள்
அறிவித்தனர். அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணியானது 1991ல் வலதுசாரி பத்தி எழுத்தாளர் சார்லஸ் கிராத்தம்மர்
(Charles Krauthammer) குறிப்பிட்டவாறு முற்றுமுழுதான பூகோள மேலாதிக்க நிலையை ஏற்படுத்துவதற்கு
ஒரு "ஒரு திற முனைப்பாற்றலுடைய இயக்கமாக" பயன்படுத்திக் கொள்வதாக இருந்தது. அமெரிக்க ஐக்கிய அரசுகள்
அது எதனை எல்லாம் விரும்புகிறதோ அதனை அடைய இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு தயங்கக் கூடாது என
கிராத்தம்மர் விவாதித்தார். ஐரோப்பியர்களும் ஜப்பானியர்களும் ஏளனமாக நடத்தப்பட வேண்டும், மற்றும் அவர்கள்
அமெரிக்க ஐக்கிய அரசுகளை கெஞ்சுபவராக அணுக இருந்தனர் என்பதை அங்கீகரிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட
வேண்டும். அமெரிக்கத் தலைவர்களைப் பொறுத்தவரை பன்முகத்தன்மைக்கு உதட்டளவில் சேவை செய்வது அரசியல்
ரீதியாக உசிதமாக இருக்கும் அதேவேளை, அந்தக் கொள்கை யதார்த்தத்தில் இறந்து விட்டது. "உலக ஒழுங்கின்
விதிமுறைகளை வெட்கமில்லாமல் கீழே போடுவதற்கு மற்றும் அவற்றை வலிந்து செயற்படுத்த தயாரிப்பு செய்வதற்கு"
[6] தன்னிச்சையாக அதன் ஆற்றலை செயல்முறைப்படுத்துதற்கு
அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு நேரம் வந்திருந்தது.
விசித்திரம், அவர் இந்த வார்த்தைகளை எழுதிய பொழுது, பல ஆண்டுகளுக்கு முன்னால்
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மார்க்சிஸ்டுகளால் செய்யப்பட்ட முன்கணித்தலை அவர் நிரூபணம் செய்ததை
ஒருவேளை திருவாளர் கிராத்தமர் உணராதிருக்கலாம். லியோன் ட்ரொட்ஸ்கி 1933ல் எழுதுகையில், ஐரோப்பாவை
"ஒழுங்கு செய்ய" ஜேர்மனி முதலாம் உலகப் போரைத் தூண்டி விட்டது என்று நினைவு கூர்ந்தார். ஆனால் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் நோக்கங்கள் இன்னும் அதிகமான பேரவாவென நிரூபிக்கப்படும். "அமெரிக்க ஐக்கிய அரசுகள் உலகை
"கட்டாயம் 'ஒழுங்கு' செய்யும்" என ட்ரொட்ஸ்கி எழுதினார். "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்புடன்
வரலாறானது மனிதகுலத்தை நேருக்குநேர் கொண்டுவந்திருக்கிறது" என ட்ரொட்ஸ்கி எழுதினார்.[7]
தொடரும்........
See Also :
ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் பாக்தாதில் "ஆட்சி மாற்றத்திற்கான" அமெரிக்க திட்டங்களும்
பகுதி I
|
பகுதிII
Top of page
|