Senegal ferry disaster kills close to a
thousand passengers
செனகலில் நடந்த பாரிய படகு விபத்தில் ஆயிரத்துக்கும் நெருங்கிய
பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
By Barbara Slaughter
2 October 2002
Use this version to print |
Send this link by email
| Email the author
செப்டம்பர் 26 இரவு காம்பியா (Gambia)
கடல் பிரதேசத்தில் யூலா (Joola)
என்ற செனகலுக்கு சொந்தமான படகு கடும் காற்றில் சிக்கி தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. படகிலிருந்த 1.034 பயணிகள்
மற்றும் சிப்பந்திகளில் 64 பேர்கள் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து உயிர் தப்பினர். கிட்டத்தட்ட 400
சடலங்கள்--அவற்றில் அதிகமானவை சிறுவர்களுடையதாகும்-- கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நாட்டின் கடலில் நிகழ்ந்த
கப்பல் அழிவுகளில் மிகவும் மோசமானதுடன் உலகத்தில் எல்லா வேளைகளிலும் நிகழ்ந்த மோசமான கப்பல் விபத்துக்களின்
வரிசையில் இது மோசமான பேரழிவாகும்.

உத்தியோகபூர்வ ரீதியாக 550 பயணிகளை உள்ளடக்கக்கூடிய இப்படகில் கிட்டத்தட்ட
இரண்டு மடங்கு பயணிகள் அதிகமாக ஏற்றப்பட்டதினால் இப் பேரழிவு நிகழ்துள்ளது. செனகலின் எல்லையிலுள்ள, தலைநகர்
டாக்காவுக்கு தென்பகுதியில் இருக்கும் Ziguinchor ன்
துறைமுகத்திலிருந்து இப்படகு புறப்பட்டது. இதன் பின்பு மேலும் 200 பயணிகள் மற்றும் சிப்பந்திகள் இரண்டாவது
தரிப்பிடத்திலிருந்து இப்படகினுள் ஏற்றப்பட்டார்கள்.
பயணிகளில் அதிகமானவர்கள் செனகலைச் சேர்ந்தவர்களாகும். அவர்களில் சில
வர்த்தகர்கள் டாக்காவுக்கு கருவாடு, மாம்பழம், சமையல் எண்ணெய் மற்றும் உப்பு போன்றவைகளை எடுத்துச் சென்றனர்.
மிகுதியானவர்களில் தென் பகுதியிலிருந்து திரும்புகின்ற புதிய வருடத்துக்கான கல்வியை ஆரம்பிக்கவிருக்கும் மாணவர்கள்
மற்றும் பள்ளிச் சிறார்களாவர். அத்தோடு பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய உல்லாசப் பயணிகளோடு சேர்த்து அருகிலுள்ள
நாடுகளான காம்பியா மற்றும் கினியா-பிசோ (Guinea-Bissau
and Gambia ) போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அடங்குவர்.
உயிர் தப்பியவர்களின்படி, கொந்தளித்துக் கொண்டிருந்த கடலில் படகு நிமிடங்களில் கவிழ்ந்தபோது
அதிகமான பயணிகள் அதற்குள் சிக்கிக் கொண்டனர். படகு தலைகீழாக கவிழ்ந்து அதனது அடிப்பாகம்
மேலெழுந்தபோது பயணிகளின் எழுப்பிய கூச்சல் சத்தத்தை தாம் கேட்டதாக உயிர் தப்பியவர்கள் நடுக்கத்துடன் விபரித்தனர்.
சில மணித்தியாலங்களின் பின்பு செனகல் மீனவர்களினால் உயிர்தப்பியவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த மீனவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்து கொந்தளிக்கும் கடலில் உயிர் தப்பியவர்களைக் காப்பாற்றினர்.
முன்னாள் காலனி ஆதிக்க நாடான பிரான்ஸ், இறந்தவர்களின் சடலங்களைக் கண்டுபிடிக்க தனது கெலிக்கொப்டர்களையும்
ஆபத்திலிருந்து மீட்க உதவும் விமானங்களையும் மற்றும் சிறிய படகுகளையும் கொடுத்தது.
இப் பேரழிவைக் கேள்விப்பட்ட பின்பு ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
டாக்காவிலுள்ள துறைமுகப்பகுதியில் செய்திகளை எதிர்பார்த்து மறுநாள் காலையில் கூடத் தொடங்கியவுடன் இராணுவப்
போலிசார் அவர்களைக் கட்டுப்படுத்த வரவழைக்கப்பட்டனர். இன்னும் பலர் வைத்தியசாலையில் உயிர் தப்பியர்வர்களின்
பெயர்ப்பட்டியல்களைப் பார்ப்பதற்கு அங்கு காத்திருந்தனர்.
ஆத்தரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குறிப்பாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இப்பேரழிவுக்குப்
பொறுப்பானவர்களை தெரியப்படுத்தவேண்டும் என செனகல் ஜனாதிபதி அப்துலாயே வாட்டிடம் (Abdoulaye
Wade) கோரிக்கை வைத்து அவரது வாசஸ்தலத்துக்கு வெளியே கூடி நின்றார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களின்
ஆத்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்குவதோடு
இதற்கான பொறுப்பை அரசு பொறுப்பேற்றுக்கொள்ளும் என வாட் தெரிவித்தார். அது ''பிழைகளின் திரட்சி'' எனவும்
அந்தப் படகானது ''நீர் மட்டத்துக்கு மேல் அதி உயரமாகவும் வேகம் குறைவானதாகவும்'' இருந்ததாக மேலும்
அவர் தெரிவித்தார். தட்டையான அடிப்பாகத்தைக் கொண்டுள்ள யூலா படகானது ''ஏரிகளில் பயணம் செய்வதற்காக
வடிவமைக்கப்பட்டது'' என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அவர் மூன்று நாட்களை துக்க தினமாகவும் மற்றும் இப்பேரழிவுக்கான
விசாரணைகளை முடுக்கிவிடுவதாகவும் உறுதியளித்தார்.
இந்தப் படகானது தனது முன்னைய பயணங்களின்போது பாரிய காற்றினுள் சிக்குண்டு அதனது
ஒரு பகுதி இயந்திரம் பாதிப்புற்றிருந்ததை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அரச சார்பற்ற ''Le
Sud Quotidien" என்னும் பத்திரிகையானது தனது முன்பக்கத்தில் பின்வருமாறு ''இந்தக் கப்பல்
நீருக்குள் செல்ல அனுமதித்திருக்கக் கூடாது'' எனத் தலையங்கம் தீட்டியது.
Walfadjri என்னும் பத்திரிகையானது
''பொது மக்கள் மீதான குற்றம்'' என்று அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியதுடன் இந்தப் படகு விரிவான திருத்த
வேலைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கவேண்டும் என்றது.
ராய்ட்டர் செய்தியின் படி,
Ziguinchor துறைமுகத்திலிருந்து இப்படகானது புறப்படும்போது ஒரு பக்கமாக சரிந்திருந்ததை சாட்சிகள்
கூறியதாக தெரிவித்தது. முன்னைய பயணத்தின்போதே இதனது ஒரு இயந்திரம் பழுதடைந்ததாகவும் மற்றும் அதிகமான
பயணிகள் மற்றும் சரக்குகளை அது எற்றிச் சென்றதாகவும் உறுதிப்படுத்தாத செய்தியை
This Day (Lagos) என்னும் பத்திரிகை
கூறியது.
இப்படகு அரசுக்கு சொந்தமானதாக இருந்ததோடு அதனை செனகல் கடற்படையே இயக்கியும்
வந்தது. செனகலின் முக்கியமான பிராந்தியங்களுக்கும் அதனது தென்மாகாணமான கசமன்சுக்கும் இடையிலான போக்குவரத்துக்காக
இந்தப் பாதை பரவலாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்தது. 1960 களில் கிடைத்த சுதந்திரத்துக்குப் பின்பு
தென்பகுதி மக்கள் அமைதியின்மையுடன் வாழ்ந்து வருவதுடன் பிரிவினைவாத இயக்கமான கசமன்ஸ் ஜனநாயக இயக்கம் (MDFC)
இப்பகுதிக்கு சுதந்திரமும் கோரி வருகின்றது. கடந்த வருடம் ஜனாதிபதி வாட்
MDFC யுடன் ஒரு அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.
ஆனால் இப்பிரிவினைவாத இயக்கத்தின் உள்முரண்பாடுகளினால் இது பலனற்றுப் போயுள்ளது.
MDFC யின் காரியாளர்கள் செனகலின்
இரு ஆபத்தான பகுதிகளுக்கு இடையில் கடந்து செல்லவேண்டும். அதிகமான கசமன்சுகளை செனகலின் வடக்குப் பகுதியிலிருந்து
முன்னாள் பிரித்தானிய காலனித்துவ நாடான காம்பியாவின் துண்டு நிலப்பகுதி பிரிக்கின்றது. காம்பியாவைக் கடந்து
செல்லும் பயணிகள் அதனது எல்லையைக் கடப்பதற்கான அனுமதிச் சீட்டுடன் சுங்கச்சாவடியையும் கடந்து செல்ல
வேண்டும். ஆகவே படகில் பயனிப்பது அவர்களுக்கு அனுகூலமான தேர்வாக இருந்தது.
யூலா படகு கடலில் மூழ்கியதானது செனகலின் பொருளாதார உள்கட்டமைப்பு படுமோசமாகியுள்ளதை
தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது. 2000 யூலையில் செனகலானது உலகின் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில்
ஒன்றாக கணிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினுடைய மனித அபிவிருத்திக்கான சபையிலுள்ள
175 நாடுகளில் செனகல் 160 வது இடத்திலுள்ளது.
1980 களில் சர்வதேச நாணய நிதியமானது கட்டமைப்பு முறையில் வளைந்து
கொடுக்கும் வேலைத்திட்டத்தை சுமத்தியதுடன், கடுமையான வேலைத்திட்டத்தை தொடரச்செய்து 1994 ல் பணமதிப்பை
குறைந்து போகச்செய்தது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 14.4 வீதத்துக்கும் அதிகமானவை கடனுக்காக எடுக்கப்படுகின்றன
மற்றும் கடந்த 15 வருடத்தில் வெளிநாட்டு உதவிகள் மூன்று மடங்குகளாகியுள்ளதோடு அதில் மூன்றில் இரண்டு பாகம்
கடனைச் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தப்படுகின்றது.
ஜனாதிபதி வாட்டினுடைய நிர்வாகமானது யூலா படகு கடலில் மூழ்கியதற்கான பொறுப்பை
ஏற்றுக்கொண்ட போதிலும் அது ஒரு சில உத்தியோகத்தவர்களை பலிக்கடாக்களாக்கும். ஆனால் வாட்டும் அவருக்கு
முன்பிருந்தவர்களும் சரி சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை ஆதரித்து நடைமுறைப்படுத்தியவர்களாவார்.
இவர்களும் இவர்களுடன் இணைந்த வகையில் மேற்கு அரசுகளுமே நாட்டை பேரழிவுக்குள்ளாக்கியதுடன் இது போன்ற அழிவுகரமான
விளைவுகளையும் உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Top of page
|