World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan family alleges woman victim of human organ theft

மனித உறுப்பு திருட்டுக்கு பெண் பலியென இலங்கை குடும்பம் குற்றஞ்சாட்டுகின்றது

By Joanne Laurier
30 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

அனைத்துலக சமூக சமத்துவமின்மையின் மிகவும் கொடூரமான தோற்றங்களில் ஒன்று மனித அங்கங்களின் வர்த்தகமாகும். அத்துடன் இன்னும் குறிப்பாக வறிய மற்றும் ஆதரவற்ற மக்களின் உறுப்புக்களுக்கான கொலை மற்றும் துண்டிப்புக்களுமாகும்.

இலங்கையை சேர்ந்த வெளிநாட்டில் குடியேறிய தொழிலாளர்களின் உடலிலிருந்தான உறுப்புக்களின் திருட்டே ஆகஸ்ட் 27 அன்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாகும். ஆர்ப்பாட்டக்காரர்களில் மரணமான குடியேறிய தொழிலாளியான சோமலதா சதறசிங்கவின் உறவினர்கள் அடங்கலாக மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உரிமைகள் காக்கும் இயக்கத்தின் நடவடிக்கையாளர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (FEB) திருமதி சதறசிங்கவின் மரணம் மற்றும் உடல் துண்டிப்பு சம்பந்தமான விசாரணையை வலியுறுத்தினர்.

41 வயதான திருமதி சதறசிங்க குவைத்தில் மரணமானார். அவருடைய உடல் சிறுநீரகங்கள் மற்றும் விழி வெண்படலங்கள் அற்ற நிலையில் அம்பாறையில் உள்ள இல்லத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. "கொழும்பு பேஜ்" (Colombo Page) இன் படி அவர் உடல் உறுப்புக்களுக்காகவே கொலை செய்யப்பட்டார் என உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். அவருடைய உடலானது மரணமடைந்து 35 நாட்களின் பின்னரேயே திருப்பி அனுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் கடந்த வாரம் குவைத்திலிருந்து நாடு திரும்பிய வெளிநாட்டில் குடியேறிய தொழிலாளியான அஜித் பெரேராவும் இருந்தார். மர்மமான நிலைமைகளின் கீழ் மரணமான திருமதி சதறசிங்க ஒரு பாரிய ஒழுங்கு செய்யப்பட்ட மனித உடல் உறுப்பு வியாபாரத்திற்கு பலியானவர் என அவர் குற்றம் சாட்டினார். "அவரது எசமானர்கள் அவரை சிறுநீரகங்களில் ஒன்றை நன்கொடையாக தருமாறு வற்புறுத்தி வந்ததாக வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்திருந்தார். எனினும் இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு சில நாட்களின் பின்னரேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என முகவர் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது என திரு பெரேரா டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். உறவினர்கள் பிரேதப் பரிசோதனைக்கு வேண்டுகோள் விடுத்த பின்னரேயே அவரது உடல் உறுப்புக்கள் காணாமற்போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமதி சதறசிங்க ஒரு திடீர் மயக்கத்திற்கு பின்னர் குவைத்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பலியானவரின் குடும்பத்தினருக்கு ஜூலை 10ம் திகதி அறிவிக்கப்பட்டது. இரு நாட்களின் பின்னர் அவர் மரணமானார் அத்துடன் மரணமானவர் அவருடைய சிறுநீரகங்களை நன்கொடையாக அளித்தார் என ஜூலை 28 குடும்பத்திற்கு கூறப்பட்டது. எவ்வாறெனினும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவிப் பொது முகாமையாளரான எல்.கே.ருகுனுகே, பலியானவர் திடீரென நோய்வாய்ப்பட்டவுடன் கோமாநிலைக்கு சென்று விட்டார் எனவும் மூளை இறப்பிற்கு உட்பட்டது என நம்பப்படுவதாகவும் "சன்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஒரு தன்னிச்சையான உறுப்பு நன்கொடை வழங்கலுக்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்து, "அந்த வைத்தியசாலையில் இரு நோயாளிகள் சிறுநீரகம் தேவைப்பட்ட நிலையில் இருந்ததனால் இந்த மாற்றீடானது குவைத் சட்டங்களுக்கு அமைவாக நிகழ்த்தப்பட்டது என நமக்கு அறிவிக்கப்பட்டது என ருஹூனுகே குறிப்பிட்டார்.

உடல் உறுப்பு மாற்றீட்டுக்கான குவைத்திய திணைக்களம் இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிய கடிதமொன்றில் சுகாதார அமைச்சின் சம்மதத்துடன் மனித உறுப்பு அகற்றல்களை குவைத் சட்டம் அனுமதிக்கின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.

திருமதி சதறசிங்கவின் இறுதி நாட்களில் அவருக்கு உதவிபுரிந்த மக்களுடன் தொடர்புடைய அஜித் பெரேரா கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் "இந்த உடல் உறுப்பு மாற்றீட்டு வர்த்தகமானது நெடு நாட்களாக நடைபெற்று வந்துள்ளது என்பதை அங்கு வைத்தியசாலையில் வேலைசெய்யும் இலங்கையர்கள் மூலமாக நாம் அறிந்து கொண்டோம். இன்னொரு இலங்கையருக்கு அவரது சிறுநீரகத்திற்கு பதிலாக 10,000 குவைத் டினார்களும் 10 வருட வீசாவும் வழங்க முன்வந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவர் இதற்கு இணங்காதமையால் திருப்பி அனுப்பப்பட்டார் மிகவும் உயர் பதவிகளில் உள்ள இரு சாராரும் இந்த திடுக்கிடும் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டுள்ளனர் இதனாலேயே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இந்த சீரழிந்த வியாபாரத்திற்கு முடிவு கட்டும் வண்ணம் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இந்த பிரச்சாரத்தில் சேர்ந்துகொள்ள முடிவு செய்தேன்" எனக் குறிப்பிட்டார்.

திருமதி சதறசிங்கவின் மகன் யொஹான் நெலும்தெனிய அவருடைய தாயாரின் மரணத்தை சூழ்ந்துள்ள நிலைமைகள் ஆராயப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என கோரி இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு முகவரியிடப்பட்ட மனு ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் வழங்கினார்.

வெளிநாட்டு குடியேற்ற சேவைகள் நிலையத்தின் பணிப்பாளரான டேவிட் சொய்சாவும் திருமதி சதறசிங்கவின் விவகாரம் தன்னிச்சையான சிறுநீரக நன்கொடையளிப்புடன் சம்பந்தப்படவில்லை என சந்தேகிக்கின்றார். பயிற்சி பெறா தொழிலாளிகளாக வெளிநாடு செல்லும் போது இலங்கைப் பெண்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்களைப் பற்றி அவர் பேசினார். "கேள்விகள் இன்றி இந்த வேலைகளை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வறுமை அவர்களை கட்டாயப்படுத்துகின்றது." அத்துடன் இவர்களுடைய அடிப்படை உரிமைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும் "வேலை-பெறும் நாட்டின் சார்பில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாதது ஒரு பாரிய பிரச்சினையாகும்."

உயர்ந்து செல்லும் உலகளாவிய உறுப்பு வியாபாரம் ஒன்று நடைபெற்றுவருகின்றது. கரண்ட் என்திரோபோலொஜி (Current Anthropology) யின் 2000ம் ஆண்டு ஏப்பிரல் மாத இதழில் கலிபோர்னியா, பேக்லி பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியரும் மனித உறுப்பு கடத்தல் வியாபாரம் தொடர்பான துறையில் தலைமைவகிக்கும் நிபுணருமான நன்சி செபேர் ஹேக்ஸ், மத்திய கிழக்கிலிருந்து செல்வந்த நோயாளிகளுக்கு பெருமளவில் சிறுநீரகங்களை ஏற்பாடு செய்யும் ஒரு பாரிய சந்தை உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

"மனித உறுப்புக்களின் பூகோள கடத்தல் வியாபாரம்" (The Global Traffic in Human Organs) என்ற அவரது கட்டுரையில், உறுப்புக்களின் வர்த்தகச் சந்தை பற்றிய முதலாவது சமிக்ஞையானது அமெரிக்க வைத்தியரான எச். பரி ஜேகப் குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வாழும் வழங்கிகளிடமிருந்து சிறுநீரகங்களை ஏலமிடும் நோக்கில் சர்வதேச சிறுநீரக மாற்றீட்டை நிறுவியபோது 1983ல் தோன்றியது. 1990 களின் முற்பகுதிகளில் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வாழும் வழங்கிகளுடன் 2000 சிறுநீரக மாற்றீடுகள் இடம்பெற்று வந்துள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளார்.

செபர்-ஹேக்ஸ் குறிப்பிட்டதன்படி 1994ல் இந்திய அரசாங்கம் மனித உறுப்புக்களின் விற்பனையை சட்டவிரோதமாக்கியது. ஹெரோயின் வர்த்தகத்திலிருந்து வெளிப்பட்ட (சில விடயங்களில் சாதாரண அரசியல் தலைவர்களின் பக்கபலத்துடன்) ஒழுங்கு செய்யப்பட்ட குற்றவிரிவாக்கல்களால் கட்டுப்படுத்தப்பட்டவாறு மேலும் பாரிய அளவில் உள்நாட்டு கள்ள சந்தையின் வளர்ச்சிக்கு வழிசமைத்துள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், மானிடவியலாளரும் கூட்டாளியுமான லோறன்ஸ் கோஹென் இன்படி இன்று "பெரிய செல்வந்தர்களால் மாத்திரமே வேறு எந்த தொடர்புமில்லாத சிறுநீரகத்தை பெற்றுக்கொள்ள முடியும். புதிய சுதந்திர கட்டமைப்புக்குரிய விற்பனைச் சரக்குகளால் பலப்படுத்தப்பட்ட, கடன் ஊழியத்தின் நான்கில் ஒரு பங்காக சிறுநீரக விற்பனை உள்ளது என கோஹன் தெரிவித்தார். சிறுநீரக விற்பனையானது எல்லாவற்றையும் சரக்குகளாக மாற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் சில வினோதமான விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றது.

மனித உடல் உறுப்புக்களின் கடத்தற்காரர்களுக்கும் மிகவும் வறிய நாடுகள் மிகவும் பலவீனமான இரையை வழங்குகின்றன. ஆனால் அதிகளவில் இலாபகரமான மனித உடல் உறுப்புகளின் பூகோள விற்பனையானது எல்லா பாகங்களுக்கும் பரவிச் செல்கின்றது. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவே மலிவான சிறுநீரகங்கள் மற்றும் பல்வேறு உறுப்புக்களின் மாற்றீட்டு துறையின் புதிய மலிவான உற்பத்தி மூலமாகும். "இன்டர் பிரஸ் சேர்விசின்" (Inter Press Service) பெப்பிரவரி கணக்கீடுகளின்படி ஜனவரி மாதம் தலீம் மற்றும் எஸ்டோனியாவில் இஸ்ரேலியர்களுக்கு உரோம், மோல்டாவா மற்றும் ரஷ்ய வழங்கிகளிடமிருந்து சட்ட விரோதமாக பெறப்பட்ட சிறுநீரகங்களை பாவித்து இரு இஸ்ரேலிய வைத்தியர்கள் சிறுநீரக மாற்றீட்டை மேற்கொண்டனர். தலீனின் முஸ்தாமே வைத்திய சாலையின் தலைவர் றீட் லைனவ் எஸ்டோனியாவை மாற்றீட்டு துறைக்கு "எண்ணற்ற வாய்ப்புகளுடைய ஒரு தேசம்" என வர்ணிக்கின்றார்.

ஜேர்மனியில் கடந்த வருடம் "டேர் ஸ்பைஜெல்" சஞ்சிகை மரணமடைந்த வழங்கிகளின் உறுப்புக்கள் திருடப்பட்டு வைத்தியசாலை சவச்சாலையிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்டு உள்ளூர் மருந்து கம்பனிகளுக்கு விற்கப்படுகின்ற இந்த பிரேதப் பரிசோதனை வியாபாரத்தினுள் விசாரணை நடத்தியது.

"இறுதிப் புகலிடத்தின் உறுப்பு" என்ற அவருடைய கட்டுரையில் செபர்-ஹேக்ஸ் "மனித துண்டங்களின் சுரங்கமாக்கல்கள் தென் ஆபிரிக்கா, பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனாவின் முன்னைய பொலிஸ் அரசுகளுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை." ஆனால் இவற்றை அமெரிக்காவின் செல்வந்த குழுக்களிடையேயும் காணலாம். மனித உறுப்புகளினதும் இழையங்களினதும் விற்பனைகள் "தேவைகளை பெற்றுக்கொடுப்பவர்களின் பாத்திரத்திற்கு குறைக்கப்பட்டு குறிப்பிட்ட பிரதிகூலமான தனிப்பட்டவர்கள் மற்றும் சனத்தொகைகளை வேண்டுகின்றன. இது ஒரு காட்சியாகும் இதில் உடல்கள் துண்டிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, பக்குவப்படுத்தப்படுவதோடு அதிகளவு சமூக அனுகூலங்களுடைய சனத்தொகையின் உறுப்பு மற்றும் இழையங்களின் தேவைகளுக்காக விற்கப்படுகின்றன. அதிகளவு துணிச்சலாக மனித உறுப்புக்களை "துண்டாடி சேமித்தல்" ஆனது தேசிய எல்லைகளினுள்ளும் பூகோள அரங்கிலும் வெடிக்கின்ற சமூக சமத்துவமின்மைகளின் அளவுகோல் ஆகும்.

Top of page