ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: strikes, protests mount vs. austerity measures
பிரான்ஸ்: கெடுபிடி கொள்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் அதிகரிப்பு
By Alex Lefebvre
27 November 2002
Back
to screen version
பிரான்சில் உள்ள டிரக் ஓட்டுநர்கள் நவம்பர் 24 மற்றும் 25 அன்று நாடுபரந்த அளவில்
வேலை நிறுத்ததில் இறங்கியமை, நெடுஞ்சாலைகளிலும் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தொடர்பு வழிகளிலும் சாலைத்
தடுப்புக்களை நிறுவுவதிலும் காணப்பட்டது. சம்பள அதிகரிப்பு, கிறிஸ்மஸ் போனஸ், சுகாதார காப்பீடுகளில்
முன்னேற்றம், வேலை வாரத்தைக் குறைத்தல் மற்றும் வேலை அனுபவத்திற்கான போனஸ்கள் ஆகியன தொழிற்சங்க
கோரிக்கைகளாக இருந்தன.
பிரெஞ்சு டிரக் ஓட்டுநர்களின் சம்பளங்கள் ஏற்கனவே குறைந்த பட்ச கூலியை நோக்கி
திரும்பி இருக்கின்றன, மற்றும் அவர்கள், முன்னாள் வார்சோ ஒப்பந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைய
அனுமதித்தமை கிழக்கில் இருந்து மலிவான கூலி உழைப்புக் கிடைப்பதற்கு வாய்ப்பாக இருக்க, டிரக் நிறுவனங்கள் தங்களை
வேலையை விட்டு நீக்க அனுமதிக்கும் என அஞ்சுகின்றனர்.
பிரதமர் ஜோன் பியர் ரஃபரன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும்
பொருளாதாரக் கெடுபிடிக் கொள்கைகளை எதிர்த்தும் பொது சேவைகளின் மீதான மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீதான
தாக்குதலை எதிர்த்தும், எதிர்வரும் வாரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் தொடரான வேலை நிறுத்தங்கள் மற்றும்
ஆர்ப்பாட்டங்களில், இது டிரக் ஓட்டுநர்களின் முதலாவது தொழில் துறை நடவடிக்கை ஆகும். செவ்வாய் அன்று பாரிசில்,
இரயில் தொழிலாளர்கள், தபால் தொழிலாளர்கள், எயர் பிரான்ஸ் ஊழியர்கள், பிரான்ஸ் தொலைத் தொடர்பு
தொழிலாளர்கள் மற்றும் பாரிஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உட்பட பங்கேற்ற ஒரு பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம்
நடைபெற்றது.
அரசு தொலைக் காட்சித் துறை, ஓட்டுநர் உரிம ஆய்வாளர்கள் மற்றும் பிரான்ஸ் இண்டர்
எயர் லைன்ஸ் ஆகியவற்றிலும் ஏற்கனவே வேலைநிறுத்தம் நடைபெற்று வருகின்றன. அண்மையில் விவசாயிகள், உற்பத்தியாளருக்கான
குறைந்த விலைகளை எதிர்த்தும் சூப்பர் மார்க்கட் சங்கிலித் தொடர்களால் நுகர்வோரின் விலை அளவிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்
சூப்பர் மார்க்கட்டுகள் முன் மறியல் செய்தனர். டிசம்பர்8 ல் பொதுக் கல்வித் துறை தொழிலாளர்களின் பரந்த ஆர்ப்பாட்டத்திற்கு
திட்டமிடப்பட்டிருக்கிறது.
டிரக் ஓட்டுநர்களுக்கான பரந்த வெகுஜன ஆதரவு இருக்கிறது.
Journal du Dimanche-
TM வெளியிடப்பட்ட கருத்துக்
கணிப்பின்படி, 75சதவீத மக்கள் டிரக் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான அவர்களின் முடிவில் "முற்றிலும் சரியாக"
இருக்கின்றதாக நினைக்கின்றனர். தொழிற்சங்க அலுவலர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்குவதில் தொழிலாளர்கள் ஆர்வமுடன்
இருந்ததாகக் கூறினர். ஞாயிறு இரவு தொழிலாளர்களால் சாலைத் தடுப்புக்கள் தன்னிச்சையாக நிறுவப்பட்டதாகவும்
டிரக்குகளைப் பயன்படுத்தல் தொடர்பான கம்பெனி அல்லது தொழிற்சங்க விதிமுறைகளில் அகப்படாமல் இருக்க டிரக்
ஓட்டுநர்கள் தங்களின் சொந்தக் கார்களை சாலைத் தடுப்புக்களுக்குப் பயன்படுத்துகின்றனர் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
செய்தித்தாள்கள் அரசாங்கத்திற்கான கோரக்காட்சி பற்றிப் பேசுகின்றன: தொழிலாள
வர்க்க நடவடிக்கை பிரதான வர்த்தக மற்றும் மூலோபாய போக்குவரத்து வழிகளை மூடி இருக்கின்றது மற்றும் ஆட்டம்
கண்ட பொருளாதார கிறிஸ்துமஸ் பருவத்தைப் பாதித்திருக்கிறது, அதேவேளை பாரிசில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம்
மிகுந்திருக்கிறது. சில அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் தோன்றி வரும் நிலையை 1995 நவம்பர்-டிசம்பர், அலன்
யூப்பேயின் வலதுசாரி அரசாங்கம் ரஃபரனை ஒத்த தனியார்மயமாக்கல் மற்றும் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் பற்றிய
வேலைத் திட்டத்தை முன்னெடுத்தபோது, பொதுத்துறையில் பெரும் வேலை நிறுத்த அலையை எதிர்கொண்டதுடன் ஒப்பிடுகின்றனர்.
அதன் வேலைத் திட்டத்திற்கு பரந்த பொது மக்கள் எதிர்ப்பு இருப்பினும், ரஃபரன் அரசாங்கமானது,
கெடுபிடிக் கொள்கைகளைத் திணிப்பதற்கான பிரெஞ்சு வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஐரோப்பிய கமிஷனிடமிருந்து வரும்
உத்தரவுகளின் கீழ் இருக்கிறது. ஆகஸ்டில் அரசாங்கமானது, அதன் கொள்கைகள் கடந்த வசந்தகாலத்து தேசிய தேர்தலுக்குப்
பிறகு அறிவிக்கப்பட்ட மட்டங்களில் இருந்து வரிவெட்டுக்கள் மற்றும் பட்ஜெட் (செலவின) வெட்டுக்களைக் குறைப்பதன்
மூலம் ஏற்படப்போகும் பாதிப்பை மறைப்பதற்கு ஆகஸ்டில் முயற்சித்தது. ரஃபரன் வேலைத் திட்டத்திற்கு எதிர்ப்பானது
அவர் தனது "சீர்திருத்தங்களை" வஞ்சகமாக திணிக்க வேண்டி இருந்த அளவுக்கு பலமாக இருந்தது என்று அந்நேரம்
லு பிகாரோ பத்திரிகை குறிப்பிட்டது. அரசாங்கம் இப்பொழுது இந்த மூலோபாயத்தைக் கைவிட்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பழமைவாதக் குழுவின் தலைவர், ஜாக் பாரோ,
அக்டோபர் இறுதிவாக்கில், சுகாதார காப்பீடு ஆபத்தான நோய் பற்றி "குவிமைய" படுத்த வேண்டும் மற்றும்
பயன்படுத்துநரின் கட்டணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அப்பொழுது
Le Canard Enchaîné
எனும் நையாண்டி வார இதழ், சுகாதார அமைச்சர்,
Jean-François Mattei அக்ஸா காப்பீட்டுக் கழக
(Axa insurance company)
முன்னாள் மேலாளரை சமூகப் பாதுகாப்பு மற்றும் தனியார் காப்பீடு செய்தோர்
இவர்களுக்கிடையிலான புதிய கணக்கு விவரம் பற்றி ஒரு அறிக்கை தயாரித்துத் தருமாறு கேட்டிருந்தார் என்ற செய்தியை
வெளியிட்டது.
பிரதமரின் வலைதளம் தற்போது ஏனையவற்றுடன், "நடவடிக்கைக்கான கட்டணம்" மற்றும்
"சேவைப் பணிகளை அரசு வாங்குதல் மீதான கட்டுப்பாட்டு விதிகளில் அதிகரித்த நெகிழ்வு" இவற்றுக்கு ஒரு வழியையும்
அறிவிக்கிறது. சரியாகப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் எல்லாம் சுகாதார முறையை தனியார்மயப்படுத்துதற்கு இடைமருவும்
நிலையாக பார்க்கப்படுகின்றன.
அரசாங்கமானது ஓய்வூதியங்களுக்கு எதிராகவும் கூட தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.
சமூக விவகாரங்களுக்கான அமைச்சர், பிரான்சுவா ஃபிலோன்
(François Fillon), "முன்கூட்டி- ஓய்வு" (இளைப்பாறல்)
முறையை அறிவித்தமையானது, அது சில தொழிலாளர்களை 60 வயதிற்கு முன்னர் ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்கிறது. அது
அதிலும் சிறப்பாக இப்பொழுது தொழிலாளர்கள் நீண்டு பங்களிக்க இருக்கும்பொழுது "எமது ஓய்வூதிய திட்டங்களுக்கு பேரழிவாக"
இருக்கிறது என்றார்.
ஆட்சித்துறை அமைச்சர், ஜோன்-போல் டுலுவோய் (Jean-Paul
Delevoye), பணி- முடிவு விடுப்பினை --ஆட்சித்துறைப் பணியாளர்களின்
"முன்கூட்டிய ஓய்வை"-- வழமையாக தொழிற்சங்கத்திடம் கலந்தாலோசிப்பது எதுவுமின்றி ரத்துச் செய்வதாக அறிவித்தார்.
ஓய்வூதியத் திட்டங்களுக்கு தொழிலாளர்களின் பங்களிப்புக்களின் அளவை அதிகமாக்கல் மற்றும் முழு வீதத்தில் பெறுவதற்கு
முன்னரே பல ஆண்டுகள் பங்களிப்புச்செய்ய தொழிலாளர்களை நிர்பந்தித்தல் ஆகியவற்றை செனெட்டின் சீர்திருத்த செயல்
திட்டங்கள் உள்ளடக்கியுள்ளன.
மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு ஏகபோகங்களின்
(ணிறீமீநீtக்ஷீவீநீவீtங பீமீ திக்ஷீணீஸீநீமீ/ நிணீக்ஷ் பீமீ திக்ஷீணீஸீநீமீணிஞிதி/நிஞிதி)
தொழிலாளர்களுடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் ஆட்சித்துறைப்
பணியாளர்கள் எதை எதிர்பார்க்க முடியும் என்பதைக் காட்டுகிறது:
EDF/GDF ஓய்வூதியத்
திட்டத்தில் தொழிலாளர் பங்களிப்பில் சுமார் 50 சதவீதம் அதிகரிப்பை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
தொழிலாளர்களை அவமதிக்கும் முறையில், பெரும்பான்மை பழமைவாதக் கட்சியான புதிதாய்
திருமுழுக்காட்டு செய்யப்பட்ட (ஹிஸீவீஷீஸீ யீஷீக்ஷீ ணீ றிஷீஜீuறீணீக்ஷீ
விணீழீஷீக்ஷீவீtஹ்ஹிவிறி) அண்மையில் யூப்பே ஐ அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது
கள்ளவாக்குகளால் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி ஜாக் சிராக், வலதுசாரிகளின் தேர்தல் வெற்றிகளுக்குப்
பிறகு மிகவும் முக்கியமான நிலையில் யூப்பேயை வைக்க விரும்பினார், ஆனால் யூப்பேயின் செல்வாக்கின்மை
அவ்வாறு செய்வதிலிருந்து அவரைத் தடுத்தது.
முன்னாள் வலதுசாரி கட்சியான
Rassemblement pour la République (RPR)- க்கு
சட்டவிரோத நிதி வழங்கியமை தொடர்பான வழக்குத் தொடர்வில் இரண்டு
ஆண்டுகளில் யூப்பே வழக்கை எதிர்கொள்ள இருக்கிறார். கடந்த சில மாதங்களில் கணிசமான அளவு உயர்வுக்குப்
பின்னரும்கூட, கருத்துக்கணிப்பு முகவாண்மைகளின்படி, அவர் பற்றிய அங்கீகரிப்பு வீதம் 35சதவீதத்திற்கும் கீழே இருக்கிறது.
அரசாங்கப் பேச்சாளர்கள், டிரக் ஓட்டுநர்கள் முக்கிய சாலைகளை தடுக்க அனுமதிக்க
மறுத்தாலும், அவர்கள் "பேச்சு வார்த்தை" யை நம்புவதாகவும் மோசமான "வேலைநிறுத்த- உடைப்பு"- க்கு
கீழிறங்கமாட்டோம் என்றும் கவனமாக வலியுறுத்தினர். ஆயினும், செய்தித்தாள்கள் வெளியிட்ட கட்டுரைகள், 1992 டிரக்
ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்திற்கு எதிராக, சோசலிச கட்சி அரசாங்கத்தின்
Pierre Bérégovoy
சாலைத் தடுப்புக்களை அகற்ற டாங்குகளையும், ஹெலிகாப்டர்களையும் மற்றும் கனரக போக்குவரத்து சாதனங்களையும்
அழைத்தபொழுது பயன்படுத்திய அதேபோன்ற நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது பற்றி ஊகம் வெளியிட்டுள்ளன. அரசாங்க
பேச்சாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ள முக்கிய "கூட்டு நடவடிக்கை" பெரிய அளவிலான போலீஸ் தலையீடுகளுக்கு வசதி
வாய்ப்பாக உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்கோசியால் வடிவமைக்கப்பட்ட, புதிய போலீஸ் அமைப்பிடம் இருந்து
எதிர்பார்க்கின்றனர்.
வேலைநிறுத்த உடைப்புக்கான ரஃபரனின் விருப்பமின்மை என்று கூறப்படுவதன் ஒன்றைக் கூட
அரசு முகவர்கள் குறித்துக் காட்டவில்லை. வேலைநிறுத்தம் செய்பவர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமங்களை
(Drivers licenses)
இழக்கநேரும் என்று அச்சுறுத்துவதற்காக போலீஸ், டிரக்குகளில் உள்ளே
நுழைந்தது. மற்றும் டிரக்கிங் கம்பெனி முதலாளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரை நீக்கவும் தொலைபேசி செய்தமை
டிரக்கிங் கம்பனிகள் கம்பனி டிரக்கை சாலையைத் தடுப்புக்குப் பயன்படுத்தும் எந்த டிரக் ஓட்டுநர்களும் வேலையிலிருந்து
உடனடியாக நீக்கப்படுவார் என்று அறிவித்ததன் காரணமாக, பல சாலைத் தடுப்புக்கள் டிரக் ஓட்டுநர்களின் கார்களால்
ஏற்படுத்தப்பட்டன. சாலைத் தடுப்புக்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட டிரக் ஓட்டுநர்களை போலீசாரும் வேலை
நிறுத்தத்தில் பங்கேற்காத டிரக் ஓட்டுநர்களும் அடித்ததாகவும் அதேபோல சிஆர்எஸ் கலவர போலீசாராலும் தலையீடு
செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை மாலைதான்
விடுதலை செய்யப்பட்டனர்.
டிரக் ஓட்டுநர்கள் மத்தியில் மிகச்சிறு உறுப்பினர்களைக் கொண்ட நான்கு தொழிற்சங்கக்
கூட்டமைப்புக்கள்--CFTC (French Christian
Workers' Confederation), FO (Workers' Power), CDC (Confederation of Cadre),
and FNCR (National Federation of Drivers)-
வேலைநிறுத்தத்தை பகிரங்கமாக எதிர்த்தன, அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் முதலாளிகளுடன் "கொள்கைகள் அடிப்படையிலான
உடன்பாடு" ஒன்றில் கையெழுத்திட்டன. ஏனைய தொழிற்சங்கங்களான
CFDT, CGT யினர்
வேலைநிறுத்தம் தொடங்கப்பட இருந்த சில மணி நேரங்களுக்கு முன்னரே, செய்தி ஊடகத்திலிருந்து இந்த நகர்வு பற்றி
அறிந்து கொண்டதாக செய்தி அறிவித்தனர்.
தோன்றிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு அலை, வலதுசாரி அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு
வெகுஜன எதிர்ப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அது உத்தியோகபூர்வமான இடதுகள், தொழிற்சங்கங்கள் மற்றும்
"அதி-இடது"களின் பகுதிகள் ஆகியோரின் துரோகப் பாத்திரத்தையும் கூட கோடிட்டுக் காட்டுகின்றன. அவை ஏப்ரல்-மே
2000 தேர்தல் நெருக்கடிக்கு நவீன பாசிஸ்ட்டு ஜோன் மரி லூ பென்னுக்கு ஜனநாயக மாற்றாகக் கூறப்படும் சிராக்கிற்கு,
ஜனாதிபதிக்கான வாக்களிக்க அழைப்புவிடுப்பதன் மூலம் பதிலளித்தன. சிராக் மற்றும் அவரின் கூட்டாளிகள் சோசலிசக்
கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, முதலியன போல மிதமாக ஆட்சி செய்யப்போவதாகக் கூறியற்கு மாறாக, அவர்கள் வாழ்க்கைத்
தரங்களிலும் ஜனநாயக உரிமைகளிலும் பரந்த அளவிலான தாக்குதல்களில் ஈடுபட்டனர், தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு
வேலைநிறுத்த உடைப்பு மூலம் பதிலளித்தனர்.
|