World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US "free" press and the Pentagon war machine

"சுதந்திரமான"அமெரிக்க பத்திரிகையும் பென்டகன் போர் எந்திரமும்

By Bill Vann
14 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

இந்த வார தொடக்கத்தில், பரவலாக எல்லா முன்னணி பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் பரவி இருந்த கண்மூடித்தனமான கட்டுரைகள், ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் திட்டங்கள் பற்றிய விரிவான செய்தியினை வெளியிட்டிருந்தது. இந்த தகவல்களை பெயர் குறிப்பிடப்படாத இராணுவ வட்டாரங்களும், மூத்த நிர்வாக அதிகாரிகளும், பென்டகன் ஆய்வாளர்களும் அளித்துள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆயினும், வாஷிங்டன் போஸ்ட் நவம்பர் 10ம் தேதியிட்ட நாளேட்டில், இடம்பெற்ற கட்டுரை ''சுதந்திரமாய் இருப்பதாகக் கூறப்படும் பத்திரிகைத் துறைக்கும், வாஷிங்டன் போர் எந்திரத்திற்கும் இடையே நிலவி வரும் ஆழமான உண்மைத் தொடர்புகள் குறித்து ஒரு விரிவான கண்ணோட்டத்தை அதன் வாசகர்களுக்கு மேலும் தந்துள்ளது.

''இந்த கட்டுரை குறித்து பல மூத்த குடிமக்களிடமும், இராணுவ பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடனும் விரிவான கலந்துரையாடலும், கருத்து பரிமாற்றங்களும் நிகழ்த்தப்பட்டதாக'' போஸ்ட் கூறுகிறது. ''அவர்களின் வேன்டுகோளுக்கிணங்கி திட்டத்தின் பல முக்கிய அம்சங்கள் நாளேட்டில் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கான நேரம், ஏனைய நகர்வுகளுக்கான விசை அழுத்தப் புள்ளிகள், கவனமாகக் கருத்தில் கொள்ளப்படும் சில தந்திரோபாயங்கள் மற்றும் சில தந்திரோபாயங்களை செயல்படுத்தும் பிரிவுகள் ஆகியன அந்த அம்சங்களில் அடங்கும்."

இவ்வாறு கட்டுரையில் வெளியிடப்பட்ட செய்தியில், ''மூலோபாய பலன்கள்'' இருப்பதாக சில அதிகாரிகள் பார்த்தனர் என கட்டுரை தெரிவிக்கின்றது. பென்டகன் அதிக அளவில் மக்கள் கொல்லப்படுவதை உறுதியாகத் தடுத்து நிறுத்த உறுதியாய் இருக்கிறது, அதே சமயம் ஈராக்கின் எத்தகைய எதிர்ப்பையும், தன்னுடைய அபரிமிதமான படை பலத்தால் முறியடிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதை அது அர்த்தப்படுத்தியது.

சுருக்கமாகச் சொன்னால், இராணுவமே இந்த செய்திகளை தணிக்கை செய்துள்ளது; பத்திரிகை போர்ப்பிரச்சாரத்தைப் பரப்பும் ஒரு காப்புக்குழாயாக செயல்படும் அதன் பாத்திரத்தை வெட்கங்கெட்ட முறையில் ஒப்புக்கொண்டது.

வாஷிங்டன் போஸ்ட் -TM இடம்பெற்ற கட்டுரை நியூயோர்க் டைம்ஸ், யுஎஸ்ஏ டுடே மற்றும் ஏனைய பத்திரிகைகளில் இடம்பெற்ற கட்டுரைகளில் இருந்து ஒரேயொரு வகையில் வேறுபட்டிருந்தது. அது, பென்டகனே இச்செய்தியை வடிவமைத்து தந்ததாக அப்பட்டமாய் ஒப்புக்கொண்டுள்ளது. இது ஒப்புக்கொண்டுள்ள விதத்தைப்பார்த்தால் சிகரட் பெட்டிமீதும், மதுபுட்டிகள் மீதும் ஒட்டப்படும் எச்சரிக்கையை நினைவுபடுத்துவதாய் உள்ளது. எச்சரிக்கை: நீங்கள் வாசிக்கும் செய்தி அரசாங்கத்தின் தவறான தகவல்களைக் கொண்டிருக்கிறது இது உண்மைக்கு இடர்பயப்பதாகும்" என்று சொல்வது போல் உள்ளது.

ஈராக்கில் போருக்காய் தயார் செய்தல், செய்தி ஊடகத்தை புஷ் நிர்வாகத்தையும் பென்டகனையும் பற்றிய கொள்கைளைப் பிரச்சாரக் கருவியாக அம்பலப்படுத்தியுள்ளது. பல தொலைக்காட்சி வலைப் பின்னல்களும், நாளிதழ்களும், இன்ன பிற வெகுஜன தொடர்பு சாதனங்களும் வெள்ளை மாளிகைப் பணியாளர்கள் தாங்களே, அமெரிக்க மக்களிடம் போரை ''விற்பனை'' செய்வது என்று விவரிக்கும் ஒரு பிரச்சாரத்திற்கு பணிவுடன் தங்களை செவிசாய்த்துக் கொள்கின்றனர்.

தொலைக்காட்சி செய்தியாளர்களும், பத்திரிகை நிருபர்களும், தங்களுக்குள் அபூர்வமாய் விதிவிலக்குகளுடன் இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லோரும் புஷ் நிர்வாகத்தின் பொய் பிரச்சாரத்தின் பின்னே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போரால் நாசமான, அதன் மக்களுக்கு உணவு வழங்க முடியாத நாடான ஈராக், அமெரிக்க மற்றும் உலக நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாய் இருக்கும் நாடு என இவர்கள் எல்லோரும் அதை முன்வைக்கின்றார்கள். அரபு நாடு, "பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை" தயாரிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்ற வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டுக்கள் இத்தகைய ஆயுதங்கள் இருக்கின்றதா என சுதந்திரமாய் ஊர்ஜிதம் செய்ய முயற்சிக்காமல், முற்றிலும் உண்மையாக அச்செய்தியை வெளியிட்டுள்ளது. பாரசீக வளைகுடா எண்ணெய் வயல்களில் மேலாதிக்கம் செய்வதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால மூலோபாய குறிக்கோளை --போருக்கான இயக்கு சக்தி என பரவலாக வெளியில் அங்கீகரிக்கப்பட்டது-- வெறுமனே குறிப்பிடப்பட்டதுடன் கடந்து செல்லப்பட்டது.

இதற்கிடையில் பெரிய செய்தி நிறுவனங்கள், போர் தொடுப்பதை ஆதரிப்பதாய் ஒரு வெளித்தோற்றத்தை முன்னெடுக்கும் விதமாய், நிர்வாக திட்டங்களையும், எண்ணெய்க் கிணறுகளின் ஏகபோக உரிமம் பற்றிய திட்டங்களை எதிர்ப்பதற்கு தடைகளை உருவாக்கும் நோக்குடன், அரசாங்கத்தின் விவரங்களை நிறைவேற்றுவதற்கு, உருவாக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் பயன்ற்றுப் போயின.

ஈராக்கில் போர் மூளுவதற்கு முன்பாக நடத்தப்படும் ஒரு ஒத்திகையாகவே இவை அனைத்தும் கருதப்படுகின்றன. போர் பிராந்திய செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்களை பிரத்தியேகமான இராணுவக் கூடாரங்களில் வைக்கப்பட்டு, பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது இவர்களையும் சேர்த்து அனுப்ப ஆயத்த பணிகள் நடப்பதாக பல செய்திகள் இம்மாத தொடக்கத்தில் வெளியாயின. பத்திரிகை துறையும் இராணுவமும் முதன்முறையாக இணைந்து செயல்படுவதை இது குறிக்கின்றது. செய்தியாளர்களை இராணுவ ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவதும் இதன் குறிக்கோளாகும். இதில் பங்கு கொள்ளும் செய்தியளர்கள் இராணுவ அதிகாரிகளுக்கு கீழ்படிந்து நடந்துகொண்டும், அதேவேளை போர்தொடுக்க இது உகந்தமான வேளை அல்ல எனக் கூறி உண்மையை மக்களிடம் வெளியிடாமல் மறைப்பார்கள்.

சென்ற முறை நடந்த வளைகுடா போரில் கச்சிதமாய் கையாண்ட பல முறைகள் மேலும் துல்லியத்திற்கு நேர்த்தி செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. வந்திருக்கும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்களில் சிலர் மட்டும் இராணுவ அதிகாரிகளால், ஒவ்வொரு நாளும் பொறுக்கி எடுக்கப்படுவர். செய்திகளை ''குழு முறை'' யில் தேர்ந்தெடுத்து போர் நடக்கும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்று, பொது மக்கள் படிக்க, பார்க்க ஏதுவானது என தாங்கள் கருதும் செய்திகளையும் படங்களையும் மட்டுமே எடுத்து வர அனுமதிப்பார்கள். இந்த செய்தி தொகுப்பானது அடுத்துள்ள தங்களின் சகாக்கள் மூலம் "கொட்டப்படும்", எனவே அதே கட்டுப்படுத்தப்பட்ட ஒரே செய்தி எல்லா பத்திரிகைகளாலும் வெளியிடப்படும்.

வியட்நாம் போரில், பொது மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை தொலைக்காட்சி குழு படமாக்கியதும், அமெரிக்க படைவீரர்களின் சடலங்கள் பைகளில் திணிக்கப்படுவது பற்றிய படங்களும், அதனைப் பார்த்த அமெரிக்க மக்கள் கொதித்தெழுந்ததும், இராணுவம் கற்றுக்கொண்ட பாடமாகும். எனவே இம்முறை புதிய திட்டம் வகுக்கப்பட்டது.

இப்போது இராணுவமானது, செய்தி வலைப் பின்னல்களின் கோடீஸ்வர வண்ணனையாளர்கள், மற்றும் அவர்களுக்கு ஏற்ப இயங்கும் போர் பற்றிய செய்தியாளர்களையும், ஈராக் நாட்டில் குடி மக்கள் படுகொலை செய்யப்படுவது பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்யவும், படுகொலைகளை வெளியிடாமல், இராக்கியர்களையே அதற்கு பொறுப்பாக்கி விட பென்டகன் பத்திரிகைக் குறிப்பு காட்டும் வழியில் செய்திகளைச் சேகரிக்க தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளவும், கணக்கிடலை செய்ய முடியும். அல் ஜசீரா (Al Jazeera) போன்ற அரபு செய்தி வலைப்பின்னல் இந்த சுயகட்டுப்பாட்டை மதிக்காமல் போனால், அதற்குரிய வாய்ப்பு வசதிகள் அமெரிக்க தாக்குதலுக்கு இலக்காகிவிடும்.

See Also :

ஈராக் மீதான போருக்காக அமெரிக்கப் பத்திரிகைகள் பட்டியலிடுகின்றன

Top of page