World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

What Lies Behind India's Planned Trip to the Moon?

சந்திர மண்டலத்திற்கு செல்ல விழையும் இந்தியாவின் திட்டத்திற்கு பின்னணி என்ன?

By Daniel Woreck and Parwini Zora
6 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

பெங்களூரைத் தளமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO) சென்ற மாதம், அடுத்த ஐந்தாண்டுகளில், சந்திர மண்டலத்திற்கு ஆளில்லாத விண்வெளி ஆய்வை மேற்கொள்ளும் திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்தது. ISRO-வின் சந்திர மண்டல பயண திட்டக்குழு, இந்த திட்டத்தைக் குறித்தும், அதன் செலவு பற்றியும் ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமென்றும் இதற்கு 82.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும் இந்தக் குழு கூறியுள்ளது.

திட்டக் குழு தலைவர் ஜோர்ஜ் ஜோசப், இந்திய பத்திரிகையாளர்களுக்கு கூறியதாவது: ``விஞ்ஞான ஆய்வுகள் நடத்த சந்திர மண்டல சுற்றுப் பாதையில் ஒரு செயற்கை கோளை செலுத்த, இந்த திட்டத்தை செயல்படுத்த, நாடு போதிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டிருப்பதாக எமது ஆய்வுகள் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன." ஆய்வுகளைத் தொடர்பு கொள்வதற்கு, கட்டுப்படுத்துவதற்கு மற்றும் பின் தொடர்வதற்குத் தேவைப்படும் விண்வெளி தகவல் தொடர்பை ஏற்படுத்தும் பொருட்டு, பல கருவி கல அமைப்பு கொண்ட பல தரை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என அவர் விளக்கினார்.

சந்திர மண்டலத்தின் அணுத்துகள்; மற்றும் கதிரியக்க சூழ்நிலை பற்றிய தகவலை அறிய ஒரு சோதனை சுற்றுப்பாதை செயற்கைகோளை விண்வெளியில் செலுத்த ISRO திட்டமிட்டுள்ளது. மேலும் சந்திர மண்டல மேற்பரப்பை விவரமாக வரைப்படம் வரையவும் திட்டமிடப்பட்டுள்ளது. காற்றில்லா நிலாவெளியில் தூசுகிளம்புவது போன்ற முன்னர் விளக்கம்தரப்படாத இயல்நிகழ்ச்சியை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். மேலும் சந்திரனில் சில நிலக்குழிகளில் தண்ணீர் இருக்கும் சாத்தியம் பற்றியும் ஆய்வார்கள்.

ISRO, 1969ல் நிறுவப்பட்டதிலிருந்து, இதில் சுமார் 12,000 விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் பணியாற்றுகின்றனர். வானிலையை பற்றி முன்கூட்டியே அறிதல் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற பயன்பாடுகளுக்காகப் பயன்படும் செய்ற்கோள்களை அபிவிருத்தி செய்வதிலும் ஏவுதலிலும் பிரதானமாய் இது கவனம் செலுத்தி வருகின்றது. இச்செயற்கைகோள்கள் இயற்கை கனிம வளங்களை வரைபடம் வரையவும், இயற்கையின் சீற்றங்களைப் பற்றி முன்னெச்சரிக்கை பெறவும் கிட்டத்தட்ட நிச்சயமாக உளவு பார்க்கவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் சந்திர மண்டல ஆய்வுக்கு அனுப்பும் திட்டம் விண்வெளியில் இந்தியாவின் முதன் முயற்சியாகும். இம்முயற்சியில் ISRO வெற்றி பெற்றால் சந்திர மண்டலத்திற்கு விண்கலம் செலுத்துவதில் உலகில் நான்காம் நாடு இந்தியா ஆகும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளே இம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன. இந்திய செய்தி ஊடகம் பொதுவாக இந்த திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. இந்தியாவின் 100 கோடி ஜனத்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர், ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலர் வருமானத்திற்கும் குறைவாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்ற உண்மையுடன் ஒப்பிடுகையில், இதற்காகும் செலவு குறித்து விமர்சனக் கூற்றுக்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விண்வெளி பொறியியல் துறைத்தலைவர் பேராசிரியர் H.S. முகுந்தா, வெளிப்படையாக: "மற்ற நாடுகள் முப்பதாண்டுகளுக்கு முன் செய்து முடித்ததை நாம் திரும்ப செய்வது அடிமுட்டாள்தனம் ஆகும். ``அது நாட்டிற்கு எந்த தொழில்நுட்ப பலனையும் தராது``, "சக்கரத்தையே திரும்பக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, மலிவான, உயர்ந்த தொழில்நுட்ப செயற்கைக் கோள்களை தயாரிப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறினார்

சந்திர மண்டல ஆய்வு விஞ்ஞான ரீதியாக பயனற்றது. 97சதவீத சந்திர மண்டல நிலத்தளம் வரைபடமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா 1972 நடுப்பகுதியில் தன் சந்திர மண்டல ஆராய்ச்சியை நிறுத்திவிட்டது. சோவியத் ஒன்றியம் 1976-ல் தன் சந்திர மண்டல ஆராய்ச்சி திட்டத்தை நிறுத்திவிட்டது. அதற்குப் பதிலாக வேறு தொலைதூர கோள்களை ஆய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டது. 1990-ல் Japan தனது Hiten செயற்கை கோளை சந்திரனுக்கு அனுப்பியது. அமெரிக்கா Lunar Prospector- ä அனுப்பிற்று. சந்திரனில் நீர், கனிம வளம் இருக்கலாம் என்னும் சாத்தியக் கூறுகளை அது எழுப்பியது. ஐரோப்பிய விண்வெளிக் கழகம் (ESA) இந்த ஆண்டு இறுதியில் Smart-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. சந்திரனின் தென் துருவத்தை முதன் முறையாக ஆய்வு செய்ய இது உத்தேசித்துள்ளது.

ISRO-வின் சந்திர மண்டல திட்டத்தின் பின் உள்ள உண்மையான நோக்கங்கள் என்ன என்பதை விமர்சகர்கள் ஆய்வு செய்யவில்லை. பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் இந்தத் திட்டத்தை முன்மொழிய விஞ்ஞான ரீதியான ஆர்வத்தால் உந்தப்பட்டிருக்கலாம், ஆனால் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் எந்த விதமான முடிவும், இந்தத் திட்டத்தால் பெரிய கம்பெனிகள் ஈட்டும் லாபம் மற்றும் இந்தியாவின் இராணுவ பலத்தை பெருக்கும் சாத்தியம் பற்றிய கணக்கிடல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவை, நன்கு படித்தவர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மற்றும் கணிணி தொழில்நுட்பவியலாளர்கள் மலிவாக பெரிதளவில் கிடைக்கும் ஒரு உயர் தொழில் நுட்ப (Hi-Tech) அதிசய இடமாக ஊக்கப்படுத்தி வருகின்றது. உலக கணினி மென்பொருள் சந்தையில் கணிசமான பகுதியை இந்திய கம்பெனிகள் கைப்பற்றியுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 90-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு 9.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமான ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வெற்றிகரமான சந்திர மண்டலப் பயணம் இந்திய தொழில்நுட்ப அற்புதம் எனும் எண்ணத்தையும் புதிய பொருளாதார வாய்ப்புக்களுக்கு கதவு திறந்து விடுவதற்கான சாத்தியத்தையும் மட்டுமே மேம்படுத்தும்.

ISRO 2000-ல் முதன்முதலாக இந்த திட்டத்தை அறிவித்தபோது அதன் இயக்குநர் கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் சந்திர மண்டல பயணம் "நாட்டை ஊக்கப்படுத்தும்" எனக் கூறினார். இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ``நாம் மேலும் முன்செல்வோமாயின், இந்தியா சிக்கலான பணியையும் எடுக்கக் கூடிய அதி முன்னணியில் விண்வெளி ஆய்வில் இருக்கின்றது என்பதை அது உலகத்திற்கு விளக்கிக் காட்டும்."

இந்திய விண்வெளி தொழில்

போட்டிமிகுந்ததாகவும் இலாபகரமாகவும் உள்ள விண்வெளி தொழிலில் இந்தியாவின் சொந்த வர்த்தக நலன்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கும். இந்தப் போட்டியின் உக்கிரமான அறிகுறி மற்ற ஆசிய நாடுகளில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. மலேசிய அரசாங்கம் ஒரு விண்வெளி நிறுவனத்தை அமைக்க இருக்கின்றது. அது தன் நாட்டு விண்வெளி வீரர்களை விண்வெளியில் செலுத்த திட்டமிட்டுள்ளது. சீனா 12 வான்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்து விண்கலத்தை 2005-ல் செலுத்த திட்டமிட்டுள்ளது. 2010- அளவில் சீனா சந்திரனில் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளது.

ISROக்கு Antrix என்னும் வியாபாரத்துறை உள்ளது. இது பெரிய கம்பெனிகளுக்கு தொழில்நுட்ப உதவியையும் ஏனைய பணிகளையும அளிக்கிறது. Antrix பல விண்கல, செயற்கைகோள் உற்பத்தியாளர்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. பிரதானமாக தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் செயற்கை கோள்கள், அதற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை அளித்து வருகிறது. அக் கார்ப்பொரேஷன் தொலைத்தொடர்பு பணி முதல் பூமியை தொலைதூரத்திலிருந்து பார்வையிடும் பணி வரையிலான செயற்கைக்கோள்களை அளித்து வருகிறது.

May 1999-TM ISRO கொரிய மற்றும் ஜேர்மன் செயற்கை கோள்களை விண்வெளியில் செலுத்திற்று. இதன் மூலம் வியாபார சந்தையில் ஊன்றிவிட்டது. அது டெலிமெட்ரி, வழிப்படுத்தல், ஆணையிடல் (Telemetry, Tracking, Command) பணிகளை செய்கிறது. அதேபோல பயிற்சி, ஆலோசனை வழங்குதல், வடிவமைத்தல் போன்ற பணிகளையும் செய்கிறது. அதன் உற்பத்திகள் அதன் சர்வதேச வாங்குனர்களுக்கு குறிவைக்கப்படுகின்றன. இந்த விண்வெளி நிறுவனம் அவர்களிடமிருந்து அதன் வருமானத்தில் 75 சதவீதத்தை ஈட்டுகின்றது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் ISRO "அமைதியான விண்வெளி உபயோகம்" குறித்து பிரேசில் மற்றும் இந்தோனேஷியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. ISRO இந்தோனேஷியாவின் விண்வெளிக் கழகமான Lapan அந்நாட்டில், கட்டுப்பாட்டுக் கழகத்தை அமைப்பதற்காக நிலம், தேவையான வசதிகள், தொலை கணக்கிடலுக்கான மற்றும் வழிநடத்துவதற்கான மனித ஆற்றல், மற்றும் ஆணையகத்தை நிறுவவேண்டிய ஏற்பாடுகள் செய்யுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ISRO சென்ற ஆண்டு சர்வதேச விருந்தாளிகளை வரவேற்றிருக்கிறது. இவர்களுள் தாய்லாந்து பிரதமரும் இஸ்ரேல் துணை பிரதமரும் அடங்குவர்.

இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி இந்திய விண்வெளி திட்டங்களை கூர்ந்து கண்காணித்து வருகிறார். சென்ற அக்டோபர் மாதம் Polar Satellite Launch Vehicle (PSLV) நிறைய செயற்கைக் கோள்களை ஏற்றிக்கொண்டு விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. பிரதமர் ISROக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை பின்வருமாறு எழுதினார்: "சிறிஹரிகோட்டா விலிருந்து இந்தியா வெற்றிகரமாக PSLO-ä செலுத்தியுள்ளது, TES (Technology Experiment Satellite) செயற்கைக்கோள் மற்றும் பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியின் செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளன....... TES Optical Imaging Systems களில் புதிய தொழில்நுட்பம் ஊடுருவி முன்னேற்றம் கண்டுள்ளது கண்டு நான் மகிழ்கிறேன். நமது விஞ்ஞானிகள் உள் நாட்டிலேயே தயாரித்து.... நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்."

இந்திய தேசியவாதத்தைத் தூண்டுவதற்கான பனுள்ள கருவியாக இருப்பதோடு விண்வெளித் திட்டத்தின் இராணுவ பின்வள வாய்ப்புக்கும் பயன்படும் என்று வாஜ்பாயிக்கு நன்கு தெரியும். இத்திட்டம் தொலை தூரம் ஏவுகணைகளை அபிவிருத்தி செய்வதற்கான தொழில் நுட்ப அடிப்படையை வழங்குகிறது. இது போட்டியாளர் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் தடையாகவும், வாஜ்பாயியின் இந்து சோவினிச பாரதிய ஜனதாக் கட்சிக்கு இந்தியாவை இப்பிராந்திய வல்லரசாக ஆக்க வேண்டும் என்ற குறிக்கோள்களுக்கு முண்டு கொடுக்கும் ஒரு கருவியாகவும் இருக்கிறது.

வாஜ்பாயி அரசாங்கம், நாட்டின் விண்வெளித் திட்டம் இராணுவம் அல்லாத பயனுக்கானது என உறுதியாகக் கூறி வந்தாலும் உண்மை வேறாக உள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் கழகத்தின் (Federation of American Scientists) கொள்கை ஆய்வாளர் ஜோன் பைக்: "விஞ்ஞானத்திற்காக அதைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், இந்தியா விண்வெளியை அதன் கெளரவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதில் மிக அதிகமான முக்கியத்துவத்தை அது கொண்டிருக்கிறது. அவர்கள் செய்திராத விஷயங்களைச் செய்வதற்கு போதுமான வளமுடையதாகவும் மற்றும் பெரிய நாடாகவும் இருக்கின்றனர் என்று அது காட்டுகிறது. PSLV-ல் பயன்படுத்தும் திட எரிபொருள் ஏவுகணை மோட்டார் , கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை ICBM (Intercontinental Ballistic Missile)- தயாரிப்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உபயோகிக்கப்படும். எனக் கூறினார்

PSLV 44 மீட்டர் நீளமானது, 294 டன் எடையுள்ளது, மற்றும் 1.2 டன் சுமையை எடுத்துச் செல்லக்கூடியது. பைக்: "PSLV ஒரு ஆயுத அமைப்பாக வடிவமைக்கப்பட்டால், அது அணு குண்டை கண்டம் விட்டுக் கண்டம் தொலைவுக்கு செலுத்த முடியும்" என குறிப்பிடுகின்றார். PSLV-ä சந்திரனுடைய ஆய்வுக்கு போவதற்கு அடிப்படையாக செய்வதன் மூலம், ISRO தன் ஏவுகணைகளையும் அதேபோல அது தொடர்புடைய வழிநடத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப அமைப்பு முறைகளையும் மேலும் மேம்படுத்தும். அத்தகைய செயல் வேலைத் திட்டத்திலிருந்து கிடைக்கும் அனுபவம், அணு குண்டுகளை ஏற்றிச் செல்லும் ICBM-ன் திறனைக் கட்டி எழுப்புவதுடன் மட்டுமல்லாமல், அதனை துல்லியமாக இலக்கில் செலுத்தக் கூடியதாகவும் உறுதிப்படுத்துவதை மதிப்புடையதாய் நிரூபிக்கும்.

ISRO-க்கும் இராணுவ ஆராய்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ISRO-வின் முன்னோடி INCOSPAR (Indian National Committee For Space Research) 1962-ல் அணு சக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்டது. அது இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்திற்கு பொறுப்பான நிறுவனம் ஆகும். இந்தியாவின் ஏவுகணைகள் திட்டம் நாட்டின் சாதாரண செயற்கைக் கோள் தயாரித்தலுக்கான ஆய்வு மற்றும் அபிவிருத்தியின் ஒரு பகுதியாகத் தோன்றியது.

கடைசியாக வாஜ்பாயி அரசாங்கம், இந்திய சந்திர மண்டலத் திட்டத்திற்கு பச்சை விளக்கு காட்டுகின்றதோ இல்லையோ ஒன்று நிச்சயம்: அந்த முடிவானது, அந்த செயல் வேலைத் திட்டத்தின் விஞ்ஞான பலாபலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்காது அல்லது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கான எந்த விதமான சாத்தியமுள்ள பயன்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்காது.

Top of page