WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
WSWS campaign against LTTE death threats wins international support
தமிழீழ விடுதலைப் புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கு எதிரான உலக சோசலிச வலைத் தள
பிரச்சாரம் அனைத்துலக ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ளது
By Wije Dias
12 Octobers 2002
Use this version to print
|
Send this link by email
| Email the author
இலங்கையின் வடக்கில் ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சியின்
உறுப்பினர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை கண்டனம் செய்வதற்காக
உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுத்த பிரச்சாரம் சக்தி வாய்ந்த பிரதிபலிப்புகளைப்
பெற்றுக்கொண்டுள்ளது. சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதோடு, அச்சுறுத்தல்களை பகிரங்கமாக
கண்டிக்குமாறும் அவற்றுக்கு முடிவுகட்டுமாறும் விடுதலைப் புலிகளுக்கு கோரிக்கை விடுத்து ஐரோப்பா, வட அமெரிக்கா,
அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்காவில் இருந்தும் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள் மற்றும் தொலை மடல்களின் பிரதிகளை உ.சோ.வ.த. பெற்றுக்
கொண்டுள்ளது.
அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் அக்டோபர் 8ம் திகதி ஊர்காவற்
துறையில் உள்ள ஒரு முன்னணி சோ.ச.க. உறுப்பினரை கொலை செய்வதற்காக விடுதலைப் புலிகளின் கொலையாளி
ஒருவர் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தமது பயங்கரவாதப் பிரச்சாரத்தை விஸ்தரித்தனர்.
கத்திக் குத்து வன்முறைத் தாக்குதல் சம்பந்தமான விபரங்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் நேற்று
பிரசுரிக்கப்பட்டிருந்தது. கொலையாளியின் பெயர் பொலிசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அவரைக் கைது செய்வதற்கான
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. செவ்வாய்க் கிழமை தொடக்கம் அவர் சோ.ச.க.
அங்கத்தவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எதிராக மேலும் அச்சுறுத்தல்களை விடுத்திருந்தார்.
ஊர்காவற்துறையில் தமது அரசியல் எதிரிகள் மீதான விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான
அச்சுறுத்தல்களும், வன்முறைகளும் உ.சோ.வ.த. பிரச்சாரத்தை உக்கிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்
மற்றும் தமது அரசியல் வேலைகளைச் செய்வதற்காக சோ.ச.க.யின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்த
வேண்டியதையும் சுட்டிக் காட்டுகின்றது.
அக்டோபர் 5 உ.சோ.வ.த. ஆசிரியர் குழு அறிக்கையானது இணையத்தினூடாகப்
பரந்த அளவில் பரவியதோடு சோ.ச.க. க்கு எதிரான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் சம்பந்தமாக இலங்கை
ஊடகங்களில் குறிப்பிடத்தக்க அளவு செய்திகள் வெளியாகி இருந்தன.
அக்டோபர் 5 மாலை, இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் பரந்த சிங்களம் பேசும்
வாசகர்களைக் கொண்டுள்ள H.H.C. உலகச் சேவை (சிங்களப் பகுதி) இலங்கை சோ.ச.க.வின்
பொதுச் செயலாளர் விஜே டயஸின் பேட்டியை ஒலிபரப்பியது.
டயஸ், ஆறு நிமிட ஒலிபரப்பில் ஊர்கவாற்துறையிலான மரண அச்சுறுத்தலின் பின்னணியை
விபரப்படுத்தியதோடு பொறுப்பாளிகளான விடுதலைப் புலிகளின் உள்ளூர் அலுவலர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்.
அவர் சோ.ச.க. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதிலும் மற்றும் "ஸ்ரீலங்கா -ஈழம் சோசலிசக்
குடியரசை நிறுவுவதற்கான எமது அரசியல் வேலைத் திட்டத்தின் ஒரு பாகமாக" வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கைத்
துருப்புக்களை வாபஸ் பெறுவதற்கான அதனது தொடர்ச்சியான போராட்டத்தினதும் கறைபடியாத பதிவுகளையும் விபரித்தார்.
அவர் மேலும் தொடர்கையில்: "எமது கொள்கையானது விடுதலைப் புலிகளின் முதலாளித்துவ
தேசியவாத வேலைத்திட்டத்தை ஊடறுக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அடக்குமுறைகளிலிருந்தும்
வன்முறைகளிலிருந்தும் சுயாதீனமாக இயங்குவதற்கான சோசலிஸ்டுகளின் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களின் எதிர்ப்பை
தெளிவுபடுத்த வேண்டும். இது விசேடமாக தமிழ் சிங்கள தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதில் பிரசித்திபெற்ற
கொழும்பு அரசாங்கத்துடனான தீர்மானங்களின் பேரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலைமையின் கீழ் முக்கியத்துவம்
வாய்ந்ததாகும்," எனக் குறிப்பிட்டார்.
மறுநாள் அக்டோபர் 6 அன்று, ஏசியன் ரிபியூன் அதனது வலைத் தளத்தில்
உ.சோ.வ.த அறிக்கை முழுவதையும் வெளியிட்டிருந்தது. இது ஐலண்ட் பத்திரிகையின் ஆங்கில
மற்றும் சிங்களப் பதிப்புக்களில் ஒரு சுருக்க அறிக்கையாகவும் வெளிவந்திருந்தது.
அக்டோபர் 8 ம் திகதி மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்களின்
(யாழ்ப்பாணம்) சஞ்சிகையில் உ.சோ.வ.த. அறிக்கையின் ஒரு நீண்ட பகுதியும் வெளிவந்திருந்தது.
இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவரான எம்.ஜி. கிறிபண்டா விடுதலைப்
புலிகளின் தலைமைக்கு அனுப்பிய கண்டனக் கடிதத்தில், "உங்களது அங்கத்தவர்களின் கோழைத்தனமான நடவடிக்கையானது
ஒரு சோசலிச இயக்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதலாகும்... இந்த
அச்சுறுத்தல் அலட்சியம் செய்யமுடியாததாகும் ஏனெனில், சோ.ச.க.யும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகமும் கொழும்பு அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தில் இருந்து உங்களது அமைப்பைப் பாதுகாக்கப் போராடி
வந்துள்ளது...." எனப் பிரகடனப்படுத்தினார்.
"மத்திய வங்கி ஊழியர் சங்கமான எமது தொழிற்சங்கம், சோ.ச.க. அதனது சட்ட
ரீதியான அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்கான உங்களது அங்கத்தவர்களின் முயற்சிகளைப் பொறுத்துக்
கொள்ளப் போவதில்லை என நாம் வலியுறுத்துகிறோம். நாம் அதனது உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப்
பாதுகாப்பதற்கான சோ.ச.க.வின் பிரச்சாரத்தை ஆதரிக்கின்றோம்..." என அவர் குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முழுவதிலும் உள்ள உ.சோ.வ.த. வாசகர்கள் பிரச்சாரத்தில் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.
RK, விடுதலைப் புலிகளுக்கான தனது கடிதத்தில், விடுதலைப்
புலிகளின் மரண அச்சுறுத்தலானது உலகத் தொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு தாக்குதலாகும்," எனக் குறிப்பிட்டிருந்ததோடு
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இதில் தலையீடு செய்துள்ளதா இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும்
கோரியுள்ளார்.
கொழும்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட யுத்த
நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் நோர்வே தலைமையிலான இலங்கை கண்காணிப்புக் குழுவுக்கு,
JJ கனடாவிலிருந்து எழுதியபோது: "கொழும்பு அரசாங்கத்துடன்
ஒரு புறம் இதயம் கனிந்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் விடுதலைப் புலிகள், சங்கப் போராளிகளுக்கு
எதிரான மரண அச்சுறுத்தலின் மூலம் இப்போது ஒரு தயார் செய்யப்பட்ட குண்டர் படையாக தம்மை தெளிவாக விற்றுக்
கொண்டிருப்பதை கேள்வியுற்று நான் அதிர்ச்சியடைந்தேன்... இங்கு வட அமெரிக்காவில் உள்ள மக்கள், அவர்களது
பிற்போக்கு நகர்வுகளை மிகவும் நெருக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்குச்
சொல்லவும்"... என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கனடாவில் வசிக்கும் JC
தமது கடிதத்தில்: இரண்டு விடுதலைப் புலி அலுவலர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலானது "தெளிவாக அளவுக்கு
மிஞ்சியதாகும். அதேவேளை பேச்சு சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம் மற்றும் கழகங்களை அமைக்கும் சுதந்திரம்
ஆகிய ஜனநாயக அடிப்படைகளை மீறுவதாகும். இந்த அச்சுறுத்தல்களை துரிதப்படுத்திய சமீபத்திய விடயமான, இரண்டுத்
தனிப்பட்டவர்களாலும் பணம் கறந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி நியாயத்தினதும் நேர்மையினதும் அக்கறையின்
பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு கண்டிக்கப்பட வேண்டியதுமாகும் என எழுதியுள்ளார்.
இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கான கண்காணிப்புக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில்
DM பிரகடனப்படுத்தியதாவது: "நான் விடுதலைப் புலிகள்,
சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தலை விலக்கிக்கொள்ள வேண்டுமெனவும், அதைக் கண்டனம் செய்யவும்
மற்றும் அடக்குமுறை, பயமுறுத்தல்களில் இருந்தும் சுயாதீனமாக தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான
சோ.ச.க.வின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் கோருவதற்காக அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பேணும் அனைவருக்கும்
அழைப்பு விடுத்திருந்த உ.சோ.வ.த. அறிக்கையில் எனது கையெழுத்தையும் இடுகின்றேன்."
அமெரிக்காவில் இருந்து DL
எழுதும்போது: "விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடன் இணைய தாயராகிக்கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளப்பட
வேண்டும். சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், அடக்குமுறை, மற்றும் தாக்குதல்களாவன இலங்கையில்
தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட உள்ளது என்ன? என்பதற்கான ஒரு முன் எச்சரிக்கையாகும்,"
எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து டாக்டர் IW
விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திடம் பின்வருமாறு கேட்டுள்ளார்: "இந்த மரண அச்சுறுத்தல்கள் விடுதலைப் புலிகளின்
வழமையான சாதாரண நடவடிக்கைகளில் ஏனைய கட்சிகளையும் இலக்காகக் கொண்டுள்ளனவா? நான் உங்களது அலுவலர்களின்
அச்சுறுத்தல்களைப் பகிரங்கமாகவும் நிபந்தனையின்றியும் கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதோடு, தமது
அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளுக்கு உங்களுடைய உறுதிமொழியை
வழங்க வேண்டும் எனவும் கோருகிறேன்."
மேலும் கனடா, அமெரிக்கா, தென்னாபிரிக்கா, சுவிற்சலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி,
மற்றும் நியூசிலாந்தில் இருந்தும் உ.சோ.வ.த. வாசகர்களின் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நாம் விடுதலைப் புலிகளின் சரீர ரீதியிலான வன்முறைகள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக
ஒரு பகிரங்க நிலைப்பாட்டை எடுக்கவும், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் அவற்றைப் பகிரங்கமாகக்
கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தவும் இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தமிழ் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு
விடுக்கின்றோம். நாம் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் பிரச்சாரத்தைக் கண்டனம் செய்யவும் பயமுறுத்தல்களில்
இருந்து சுயாதீனமாக தமது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான சோ.ச.க. யின் உரிமையை வலியுறுத்துமாறு
எல்லா தொழில் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் ஜனநாயக உரிமைகளைப் பேணுவதில் அக்கறை கொண்ட அனைவரையும்
வேண்டுகிறோம்.
கடிதங்களையும் அறிக்கைகளையும் தபால் செய்யவேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யவேண்டிய
முகவரிகள்:
யாழ்ப்பாணம்
Ilamparithi
LTTE Jaffna Office
Potpathy Road, Kokuvil
Jaffna
Sri Lanka
கொழும்பு
LTTE
c/- Sri Lanka Monitoring Mission
PO Box 1930
Galle Road
Colombo 3
Sri Lanka
Email: slmm-hq@mfa.no
அவை கீழ்வரும் முகவரிகளுக்கும் தபால் செய்ய அல்லது தொலைமடல் செய்ய முடியும்:
லண்டன்
The LTTE
c/- Eelam House
202 Long Lane
London SE1 4QB
United Kingdom
Telephone: 44-171-403-4554
Fax: 44-171-403-1653
தயவு செய்து அனைத்து அறிக்கைகளின் பிரதிகளையும் உ.சோ.வ.த.வுக்கும் அனுப்பி
வைக்கவும்:
Email: editor@wsws.org
Fax:
United States: 248-967-3023
Britain: 0114 244 0224
Australia: 02 9790 3501
See Also:
உலக சோசலிச வலைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மரண அச்சுறுத்தலுக்கு எதிராக பிரச்சாரத்தை
முன்னெடுக்கின்றது
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கின்றனர்
ஒரு தமிழீழ விடுதலைப் புலி அமைப்பு
ஆதரவாளருக்கு பதில்
மார்க்சிசமும் இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையும்
பகுதி-1
|
பகுதி-2
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான
போராட்டமும்
Top of page
|