World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைInternational campaign against attacks on Sri Lankan socialists: Asian Tribune publishes WSWS reply to LTTE apologist இலங்கை சோசலிஸ்டுக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அனைத்துலகப் பிரச்சாரம்: ஏசியன் ரிபியூன் விடுதலைப் புலி பரிந்துரையாளருக்கான உலக சோசலிச வலைத் தளத்தின் பதிலை பிரசுரிக்கிறது By the Editorial Board அக்டோபர் 12 அன்று, அனைத்துலக தமிழ் மக்கள் பரந்தளவில் வாசிக்கும் வலைத் தளப் பிரசுரமான ஏசியன் ரிபியூன் (Asian Tribune), இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்பதற்கான உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) பிரச்சாரத்தை தாக்கி எழுதப்பட்ட கடிதத்திற்கு, உ.சோ.வ.த ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்தின் பதிலை பிரசுரித்துள்ளது. இலங்கையின் வடக்கில் உள்ள ஊர்காவற்துறை தீவில் தமிழழீ விடுதலைப் புலிகளின் அலுவலர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) அங்கத்தவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்திருந்ததோடு, அக்டோபர் 8ம் திகதி நன்கு அறிந்த விடுதலைப் புலிகளின் ஒரு உறுப்பினர், ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க அலுவலரான சோ.ச.க. அங்கத்தவர் மீது வன்முறைத் தாக்குதலும் தொடுத்தார். சோ.ச.க. க்கு எதிரான அச்சுறுத்தலை விளக்கியும் சோ.ச.க.யின் ஜனநாயக உரிமைகயைப் பேணும் அனைத்துலகப் பிரச்சாரத்துக்கு அழைப்புவிடுத்தும் முதல் நாள் உ.சோ.வ.த வெளியிட்ட அறிக்கையை அக்டோபர் 6 ஏசியன் ரிபியூன் பிரசுரித்திருந்தது. உ.சோ.வ.த. பிரச்சாரத்தை கண்டனம் செய்ததோடு சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலானது ஒரு புனைகதை என இலங்கை சோ.ச.க.யை குற்றம் சாட்டியும் ஒரு தமிழ் பத்திரிகையாளரான வீ.தங்கவேலு எழுதிய கடிதத்தையும் அக்டோபர் 7 ரிபியூன் பிரசுரித்திருந்தது. வி.தங்கவேலு, அக்டோபர் 5ம் திகதி தனது கடிதத்தை உ.சோ.வ.த.வுக்கு அனுப்பியதோடு அதன் பிரதியை ஏசியன் ரிபியூனிற்கும் அனுப்பியிருந்தார். ரிபியூன் ஆசிரியர் கே.ரி. ராஜசிங்கம், வி.தங்கவேலுவின் குற்றச் சாட்டுக்களுக்கு உ.சோ.வ.த. ஆசிரியர் குழுவிடமிருந்து ஒரு பதிலைக் கோரியிருந்தார். அக்டோபர் 12, டேவிட் நோர்த் பதில் அனுப்பியிருந்ததோடு அன்றைய தினமே அது "உலக சோசலிச வலைத் தள ஆசிரயர் குழு உச்ச திருப்தியளிக்கும் விதத்தில் எமக்கு விளக்கமளித்துள்ளது" என்ற தலைப்பில் பிரசுரமாகியிருந்தது. நோர்த்தின் கடிதம், "நாம் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் விளக்கத்தில் திருப்தியும் நம்பிக்கையும் கொண்டோம்" என்ற வலியுறுத்தும் பிற்குறிப்புடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. நாம் வீ.தங்கவேலுவின் கடிதத்தையும் டேவிட் நோர்த்தின் பதிலையும் கீழே பிரசுரிக்கின்றோம். அன்பின் ஆசிரியருக்கு, தங்களது சோ.ச.க. மிகத் தெளிவாக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறது. சோ.ச.க. பற்றியும் அதன் செயல்பாடு பற்றியும் வலைத் தளத்தின் மூலம் மாத்திரமே நான் அறிந்துள்ளேன். மொத்தத்தில் சோ.ச.க.யானது மிகத் தெளிவாக ஊர்காவற்துறையின் ஏழை தமிழ் மீனவர்களைச் சுரண்டும் ஓரத்தில் உள்ள ஒரு அமைப்பாகும். இது "வறிய தமிழ் தொழிலாள வர்க்கத்தையிட்டு" முதலைக் கண்ணீர் வடிக்கும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் முதல் முயற்சியல்ல. உங்களுக்கு முன்னர் என்.எம்.பெரேரா மற்றும் கொல்வின் ஆர்.டி. சில்வா அன்ட் கம்பனியும் முயற்சித்து தோல்விகண்டனர். விடுதலைப் புலிகள், ஒரு ஓரத்தில் உள்ள உங்களது அமைப்பினை முக்கியமானதாக கருதுவார்கள் என நான் நம்பவில்லை. கொலை அச்சுறுத்தல்களும் உங்கள் கற்பனையில் உருவான ஒரு கட்டுக்கதையாகும். விசேடமாக, செம்மனன் ராஜீவ் காந்தியின் பெயரால் மறைமுகமாகக் குறிப்பிட்டது! உங்கள் குற்றச்சாட்டின் உண்மை பற்றி ஆராய தயவு செய்து அம்பிகை நகர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களது பெயர்களை எனக்குத் தருக. தங்கவேலு * * * மதிப்புக்குரிய திரு. ராஜசிங்கம் அவர்களுக்கு: தங்களின் கடிதத்திற்கு நன்றி. இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உள்ள ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கைகளின் உண்மை பற்றிய விடயத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்க முடியாது. எமது அறிக்கையில் எந்தவொரு தெளிவின்மையும் கிடையாது. நாம் சோ.ச.க.வுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்த விடுதலைப் புலி அலுவலரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளதோடு, அதேபோல் நேரம், இடம், அச்சுறுத்தலின் சந்தர்ப்ப நிலை போன்றவற்றையும் வழங்கியுள்ளோம். சோ.ச.க. அங்கத்தவர் ஒருவரை மூன்று தினங்களுக்கு முன் கொலை செய்ய முயற்சித்த கொலையாளியின் பெயரையும் கூட நாம் தந்துள்ளோம். மறுபுறத்தில் திரு. தங்கவேலு, "விடுதலைப் புலிகள் ஓரத்திலுள்ள உங்களது அமைப்பினை முக்கியமானதாக கருதுவார்கள் என நான் நம்பவில்லை" என்ற தனது சுய அகநிலைவாத பிரகடனத்தை தவிர உண்மையை மறுத்து நிறுவுவதற்கான முறயற்சியை மேற்கொள்ளவில்லை. "அவர் நம்புவாரோ அல்லது நம்பாதிருப்பாரோ அது அவரது விருப்பம்." ஆனால் வடக்கில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் சோ.ச.க. அங்கத்தவர்களையும் ஆதரவாளரையும் தாக்கியது உண்மையாகும். 1998ல் சோ.ச.க. அங்கத்தவர்கள் நால்வர் விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்டனர். மூவர் இரு மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒருவர் 13 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர்களைப் பாதுகாப்பதற்காக தொடுத்த அனைத்துலக பிரச்சாரத்தின் பெறுபேறாக மட்டுமே அவர்களது விடுதலை சாத்தியமாகியது. சோ.ச.க. அங்கத்தவருக்கு எதிராக அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், எமது அபத்தமான கற்பனை என்று கூறும் திரு. தங்கேலுவின் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டானது அக்டோபர் 8ம் திகதி விடுதலைப் புலிகளின் கொலைகாரனாகி இருக்கக்கூடிய ஒருவரால் நாகராஜா கோடீஸ்வரனுக்கு விளைவிக்கப்பட்ட கத்திக்குத்து காயங்களின் இரத்த வடுக்களால் பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது திரு. தங்கவேல், கோடீஸ்வரன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டாரென கூறப்போகிறாரா? தமது புறநிலைபாவத்தைப் பற்றிய திரு. தங்கவேலுவின் கருத்துக்கள் அவர் பயன்படுத்திய வார்த்தைகளாலேயே தகர்ந்துபோய்விட்டன. இலங்கை அரசியலில் பரிச்சயமற்ற மக்களை குழப்புவதன் பேரில் அவர் சோ.ச.க.வை "ஒரு ஓரத்தில் உள்ள அமைப்பு" என வர்ணிக்கின்றார். உண்மையில் ஒரு அரசியல் கட்சியான சோ.ச.க. வின் வரலாறானது 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாகும். 40 ஆண்டுகாலம் இலங்கை தொழிலாள இயக்கத்துள் தலையீடூகளைக் கொண்டிருந்த நீண்ட வரலாற்றையுடைய பொதுச் செயலாளர் விஜே டயஸ் போன்ற பெருமதிப்புள்ள மார்க்சிச சோசலிச தலைவர்கள் அதன் சம ஸ்தாபகர்களாகும். திரு தங்கவேலு இகழ்ச்சியுடன் ஆட்சேபிப்பது இலங்கையிலும் அனைத்துலக ரீதியிலும் சோ.ச.க. வின் ஆழமான வரலாற்று வேர்களையேயாகும் எனக் குறிப்பிடுவது சரியானதாகும். அவர் பின்வருமாறு எழுதுகிறார், " வறிய தமிழ் தொழிலாள வர்க்கத்துக்காக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முதலைக் கண்ணீர் வடிப்பது இது முதற் தடவையல்ல." "உங்களுக்கும் முன்னர் என்.எம்.பெரேரா கொல்வின் ஆர்.டி செல்வா அன்ட் கம்பனியும் முயற்சித்து தோல்வி கண்டனர்!" இந்த அறிக்கை சோ.ச.க. மீதான திரு தங்கவேலுவின் வெறுப்பின் பின்னணியில் உள்ள பேரினவாத அரசியலை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. என்.எம். பெரேரா மற்றும் கொல்வின் ஆர்.டி. சில்வா மீதான தாக்குதலில் அவரின் இலக்கு, தேசிய முதலாளித்துவத்துக்கு எதிராக சோசலிசத்துக்கான ஒரு ஐக்கியப் போராட்டத்துக்காக சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ல.ச.ச.க.யின் 1963ற்கு முன்னைய துணிகரமான முயற்சிகளையேயாகும். 1950ன் முற்பகுதியில் இடம்பெற்ற மாபெரும் ஹர்த்தாலானது சிங்கள, தமிழ் மக்களின் சக்திவாய்ந்த சமூக இயக்கத்தின் உயர்ந்த வரலாற்று அம்சமாக விளங்கியது. பின்னர் 1964ல் திருமதி பண்டாரநாயகக்காவின் கூட்டரசாங்கத்தில் நுளைவதற்கான அதன் துன்பகரமான முடிவின் காரணமாக, ல.ச.ச.க. சிங்களத் தமிழ் மக்களின் ஐக்கியத்துக்கான போராட்டத்தின் அடித்தளமாக விளங்கிய அனைத்துலகவாத அடிப்படைகளை காட்டிக்கொடுத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (சோ.ச.க. வின் முன்னோடி) அக்காட்டிக் கொடுப்புக்கு எதிராக நடத்திய போராட்டத்திலிருந்து உதயமானதாகும். அடுத்து வந்த தசாப்தங்களில் பு.க.க. வும் சோ.ச.க. வும் இலங்கையின் சகல பாகங்களிலும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பேணும் சளையாத பிரச்சாரத்தை தொடுத்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்குரோத்தானதும் பிற்போக்கானதுமான பிரிவினைவாத முன்நோக்கினை நிராகரித்து வந்த அதேவேளை சகல வடிவிலான சிங்கள பேரினவாதத்தையும் அது எதிர்த்து வந்துள்ளது. தற்போது விடுதலைப் புலிகளே தனது நீண்டகால பிரிவினைவாத முன்நோக்கு வங்குரோத்தடைந்துள்ளதை தனது தத்துவார்த்த குருவான அன்டன் பாலசிங்கத்தின் கூற்றிலேயே ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ் அது தனக்கு எதிராக ஒப்புவிக்கப்பட்ட கண்டனங்களை தெரிவிப்போருக்கு எதிராக ஆத்திரத்துடன் பாய்ந்து விழுகின்றது. விடுதலைப் புலிகள் கொள்கைப் பற்றற்ற பயங்கரவாத செயல்முறைகளை கைவசம் கொண்டுள்ளதை அனைவரும் அறிவர். திரு. தங்கவேலு, விடுதலைப் புலிகள் தமது அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகிக்கின்றது என்ற குற்றச்சாட்டு ஒரு கட்டுக் கதை என, சோ.ச.க. அறிக்கைகளுக்கு எதிராக ஆவேசத்தைக் கொட்டுகிறார். ஆயினும் விடுதலைப் புலிகளின் வரலாற்றுடன் நன்கு பரிச்சயமானவர்கள் இது பற்றி நன்கறிவர். திரு. பிரபாகரன் இராணுவ உடைக்குப் பதில் தற்போது மூன்று-பகுதி ஆடை அணியலாம். ஆனால் ஒருவரின் ஆடை மாற்றம் அவரது அரசியல் செயல்முறையின் மாற்றமல்ல. திரு. தங்கவேலு, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை நீண்ட காலமாக பேணி வந்த சோசலிச போராளிகளின் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதிலும் பார்க்க, விடுதலைப் புலிகள் தனது அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது உடல் ரீதியான வன்முறைகளை மேற்கொள்வதை கண்டனம் செய்து ஒரு நேரடியானதும் உறுதியானதுமான அறிக்கையை வெளியிட வேண்டும். தங்கள் உண்மையுள்ள, டேவிட் நோர்த் தலைவர் உ.சோ.வ.த. ஆசிரியர் குழு * * * உலக சோசலிச வலைத் தளம், விடுதலைப் புலிகளின் தாக்குதலை கண்டனம் செய்யவும், வன்முறையிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் சுதந்திரமாக தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் உரிமையை பாதுகாக்கவும், அனைத்து மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் ஜனநாயக உரிமைகளை பேணுவதில் அக்கறை கொண்ட தனிப்பட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. கடிதங்களையும் அறிக்க்ைகளையும் தபால் செய்யவேண்டிய அல்லது மின்னஞ்சல் செய்யவேண்டிய முகவரிகள்: யாழ்ப்பாணம் Ilamparithi Sri Lanka கொழும்பு LTTE Sri Lanka Email: slmm-hq@mfa.no அவை கீழ்வரும் முகவரிகளுக்கும் தபால் செய்ய அல்லது தொலைமடல் செய்ய முடியும்: லண்டன் The LTTE c/- Eelam House 202 Long Lane London SE1 4QB United Kingdom Telephone: 44-171-403-4554 Fax: 44-171-403-1653தயவு செய்து அனைத்து அறிக்கைகளின் பிரதிகளையும் உ.சோ.வ.த.வுக்கும் அனுப்பி வைக்கவும்: Email: editor@wsws.org Fax: United States: 248-967-3023 Britain: 0114 244 0224 Australia: 02 9790 3501 |