World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president offers a political truce to the government

சிறிலங்கா ஜனாதிபதி அரசியல் மோதலின் தற்காலிக இடைநிறுத்தத்தை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளார்

By Wije Dias
2 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அரசாங்கத்துடன் உள்ள அரசியல் சச்சரவுகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த முன்னணி அவரது சொந்த பொதுஜன முன்னணியை (PA) கடந்த டிசம்பரில் தோற்கடித்ததன் மூலம் ஆட்சிக்கு வந்தது.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக பிரதமர் ரனில் விக்கிரசிங்க அரசாங்கத்துடன், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான (LTTE) பேச்சுவார்த்தைகள் தொடர்பாக அவர் விமர்சித்து வந்த பின்னர் குமாரதுங்காவின் வேண்டுகோளானது வந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான கணிசமான சர்வதேச அழுத்தத்துடன் பொருந்தும் நிலைப்பாட்டில் அவரது எதிர்ப்பு இப்பொழுது தொனி குறைக்கப்பட்டு இருக்கிறது.

அக்டோபர் 24ல் அவரது உரையில், குமாரதுங்கா பின்வருமாறு அறிவித்தார்: "எமது அரசியல் கலாச்சாரத்தின் அழிவு காரணமாக இருந்திருந்த சிறு அரசியற் சண்டை இப்பொழுது வரலாற்றின் பக்கங்களுக்குள் அடைபட்டிருக்க வேண்டும்." "அனைத்து சமூகத்தினரையும் மோதிக் கொண்டிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றாய் சேர்ப்பதற்கு, குறைந்த பட்சம் பிரதானமான ஒன்றினை ஒன்றாய் சேர்ப்பதற்கு" அரசின் தலைவர் என்ற வகையிலும் ஜனாதிபதியாக இருக்கின்றபடியாலும் அவர் தனது பொறுப்பை வரையறுத்தார். அரசாங்கமும் எதிர்க் கட்சியினரும் இரு முக்கியமான விஷயங்கள் மீது: அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு மீது கட்டாயம் சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.

அவரது முந்தைய விமர்சனங்களுக்கு மாறுபாடாக, அமைதிப் பேச்சுவார்த்தை மீது ஆதரவுக் குறிப்பை ஒலித்தார். "கிட்டத்தட்ட இரு சதசாப்தங்களாக ஒவ்வொரு சிறிலங்கனது வாழ்க்கையையும் நாய்போல் விடாது தொடர்ந்து பற்றி வரும் சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வுக்கான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை நாம் கொண்டிருக்கிறோம்" என்று அறிவித்தார். பகைவர்களுக்கு இடையில் நிலைகொண்டிருந்த பதட்டங்களைத் தணிக்கும் குறிக்கோளுடன், வெற்றியுடன் பல சாதக நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. பிரதமர் மற்றும் த.ஈ.வி.பு தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட சண்டை நிறுத்த உடன்படிக்கையின் தனது பங்கை நடைமுறைப்படுத்துதற்கு அரசாங்கமானது உயர்ந்த பட்சம் சாத்தியத்தை செய்து கொண்டிருக்கிறது."

குமாரதுங்காவின் பேச்சை பல அரசாங்க அமைச்சர்கள் வரவேற்றிருக்கும் அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி எச்சரிக்கையாக இருந்துவருகிறது. பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ் அனைத்து பகுதியிலிருந்தும் வரும் ஒத்துழைப்பு வழங்கலை அரசாங்கம் வரவேற்கிறது என அறிவித்தார் ஆனால் இன்னும் அதன் சொந்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த இருந்தது. கடந்த ஆண்டு த.ஈ.வி. புலிகளுடன் பேச்சுவார்த்தையை தான் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்த பின்னர், குமாரதுங்காவும் பொதுஜன முன்னணியும் ஐ.தே.மு மற்றும் எந்த பேச்சுவார்த்தையையும் கீழறுக்கும் பொருட்டு சிங்கள பேரினவாதத்தை தட்டி எழுப்ப முயற்சித்து வந்திருக்கின்றது.

டிசம்பர் தேர்தல்களுக்கு முன்னர், பொதுஜன முன்னணியானது, சிங்கள தீவிரவாத ஜனதா விமுக்தி பெரமுன (JVP) உடன் சேர்ந்து, ஐ.தே.மு த.ஈ.வி.புலிகளுடன் சேர்ந்து தீவைப் பிரிப்பதற்கு ரகசிய பேரத்தை செய்திருக்கிறது என்று அதன்மீது குற்றம் சாட்டியது. புதிய ஐ.தே. முன்னணி அரசாங்கம் த.ஈ.வி. புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிறகு, குமாரதுங்கா அதன் விதிமுறைகளைக் கேள்விக்கு எழுப்பினார் மற்றும் அந்த இயக்கத்தின் மீதான தடையை விலக்கியதை எதிர்த்தார்.

விக்கிரமசிங்கவும் ஐ.தே.முன்னணியும் தேர்தல் கழித்து ஒரு ஆண்டில் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் தேர்தல் நடைபெறுவதிலிருந்து தடுக்கவும் அரசியற் சட்ட திருத்தத்திற்காக தள்ளுவதற்கு குமாராதுங்கா அவரது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும் என கவலை கொண்டிருந்தார். போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பும் பெரு முதலாளிகளின் பகுதிகளால் ஆதரிக்கப்படும் அரசாங்கம் திரைக்குப் பின்னால், சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை உத்திரவாதப்படுவதற்கு எதிர்க்கட்சி எம்பிக்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அரசியற்சட்ட மாற்றங்கள் முன்னுக்கு செல்லவில்லை என்றால் ஐ.தே. முன்னணியானது புதிய தேர்தல்களுக்கு நிர்பந்திக்கப் போவதாகக் கூட அது அச்சுறுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, முன்மொழியப்படும் சட்டத்திருத்தம் "அரசியற் அமைப்புக்கு முரணானது" (சட்ட விரோதமானது) என தீர்ப்பளித்தபொழுது, அரசாங்கத்தின் திட்டங்கள் ஒரு பின்னடைவைச் சந்தித்தது. அக்டோபர் 22ல் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட தீர்ப்பு, சட்டத்திருத்தம் பொது மக்கள் வாக்கெடுப்பு மற்றும் அதனை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் என சுட்டிக்காட்டியது. நாட்டின் தலைமை நீதிபதி உட்பட, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பெரும்பான்மையோர் குமாரதுங்காவினால் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போதைய அரசியலமைப்பின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் முதலாம் ஆண்டு நாளான டிசம்பர் 5க்கு எவ்வளவு முன்னரோ அவ்வளவுக்கு, அரசாங்கத்திற்கு எதிராக குமாரதுங்காவினால் நகர முடியும்.

அதேநேரம், அரசாங்கத்தின் சொந்த அணிகளில் விகிரமசிங்க நெருக்கடியை எதிர் கொண்டார். ஐ.தே.முன்னணி கூட்டரசாங்கத்தில் ஒரு பங்காளியான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு பகுதி, த.ஈ.வி.புலிகளுடனான எந்த தீர்வும் கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் நிர்வாக அமைப்பு ஒன்றை --கடந்த காலத்தில், த.ஈ.வி.புலிகள் எதிர்த்திருந்த முன்மொழிவை-- உள்ளடக்கும் என்று விக்கிரமசிங்க உத்தரவாதம் தரும் வரை பாராளுமன்றத்தைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் ஒற்றுமைக்கான அழைப்பு, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டங்களின் வகுப்புவாத தன்மையைக் கோடிட்டுக் காட்டுகிறது. தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆளும் தட்டுக்களுக்கு இடையிலான அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடானது, தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை உக்கிரப்படுத்தும் பொருட்டு, தீவினை மத மற்றும் இனவாத வழிகளில் துண்டாடுவதாகும். ஒவ்வொரு குழுவும் --த.ஈ.வி. புலிகள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கொழும்பில் உள்ள பல்வேறு சிங்கள கட்சிகள்-- இறுதி ஏற்பாட்டில் அதனுடைய அதிகாரம் மற்றும் செல்வாக்கை அதிகரிப்பதற்கு மறை சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களாலான புறக்கணிப்பு விக்கிரமசிங்கே அரசாங்கத்தை அதன் பாராளுமன்ற பெரும்பான்மையை நிச்சயமில்லாததாக விட்டுச்சென்றது. ஐ.தே. முன்னணி புதுத் தேர்தலுக்கான அதன் அச்சுறுத்தலை நிறைவேற்ற முடிவு செய்தாலும் கூட, தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பாராளுமன்ற எண்ணிக்கையை அது கொண்டிருக்கிறது என்பதில் அது தெளிவாக இல்லை. அதேவேளை, சர்வதேச நாணைய நிதியத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதன் விளைவாக வாழ்க்கைத் தரங்களில் தொடரும் வீழ்ச்சிக்கு உழைக்கும் மக்களின் மத்தியில் குரோதம் வளர்ந்து வருகிறது.

ஆகையால், அரசாங்கத்தின் அரசியல் கஷ்டங்களை சுரண்டிக் கொள்வதைத் தேர்ந்தெடுக்காமல் நாட்டிற்கு அவர் விடுத்த உரையில் குறைந்த பட்சம், தற்காலிகமாவது சமாதான சின்னத்தை நீட்டித்தது முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. கொழும்பில் உள்ள பெரு முதலாளிகள் மற்றும் பிரதான வல்லரசுகளிடமிருந்து, குறிப்பாக போரானது இந்தியத் துணைக் கண்டத்தில் செல்வாக்கை சீர்குலைக்கும் ஒரு ஆபத்தாகக் கருதும், அமெரிக்காவிடமிருந்து அதிகரித்துவரும் அழுத்தங்கள் இரண்டின் கீழும் அவர் இருந்து வருகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் செயல்படும், அமைதி பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துதற்கான தள்ளல் பிரதானமாக நோர்வேயிடமிருந்து வந்திருக்கிறது. ஆனால் அண்மைய மாதங்களில் புஷ் நிர்வாகமானது சிறிலங்காவின் விவகாரங்களில் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவைத் தருவதில் மிகவும் செயலூக்கமான பாத்திரத்தை எடுத்திருக்கிறது. ஜூலையில் விக்கிரமிசிங்க வாஷிங்டனுக்கு சென்றார் --இது இரு தசாப்தங்களில் சிறிலங்காவின் பிரதமரால் செய்யப்படும் வெள்ளை மாளிகைக்கான விஜயத்தில் முதலாவது விஜயம் ஆகும். அதன் பின்னர் இருந்து, செப்டம்பர் தொடக்கத்தில் விக்கிரமசிங்க மற்றும் குமாரதுங்காவை சந்தித்த, அரசு துணைசெயலாளர் ரிச்சர்ட் அர்மிட்டேஜ் உள்பட, அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளின் வரிசை ஒன்று கொழும்பிற்கு வருகை தந்திருக்கிறது.

குமாரதுங்கா நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பொழுது, தெற்காசியாவிற்கான அமெரிக்க அரசின் உதவி செயலாளர், டொனால்ட் காம்ப், கொழும்பில் இருந்தார். கொழும்பு பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில், பிரதான அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து வேலை செய்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி இருந்தார். அரசியல் தீர்வினைக் கொண்டு வருதற்கான த.ஈ.வி. புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இரு பிரதான கட்சிகளின் ஒருமித்த கருத்து உதவிகரமாக இருக்கும்" என அவர் வலியுறுத்தினார்.

அக்டோபர் 27 அன்று அரசுக்குச் சொந்தமான Daily News- ல் வெளியான தலையங்கம், ஐ.தே.மு மற்றும் பொதுஜன முன்னணியும் சேர்ந்து வேலை செய்யாமல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்த நகர்வும் குழப்பத்தில் வைக்கப்படும் என்ற கொழும்பில் உள்ள அச்சத்தை எதிரொலித்தது. "தற்போதைய அமைதி நிகழ்ச்சிப் போக்கின் வலுவிழந்த தன்மையை எடுத்துக் கொண்டால், ஐ.தே.முக்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையில் உண்மையான பங்காண்மை (partnership) அடைவதில் தாமதம் இருக்க முடியாது. கிழக்கில் (சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்ப்புக்கள்) ஏற்கனவே காட்டி இருப்பது போல், காரணிகளின் வெறும் சிக்கல் நெருக்கடிக்கும் பதட்டங்களுக்கும் வழிவகுக்க முடியும், அது பதிலுக்கு, பெரும் அமைதி நிகழ்ச்சிப் போக்கை அச்சுறுத்தும்," என அது அறிவித்தது.

முதலாளிகளின் மிகவும் சக்தி உள்ள பகுதிகள், நாட்டின் 19 ஆண்டு உள்நாட்டுப் போரின் பொருளாதார விளைவு கொழும்பில் பல ஆண்டுகளுக்கான ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்காக தள்ளி இருக்கின்றது பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். அமைதித் தீர்வுக்கான முந்தைய முயற்சிகள் --ஐ.தே.மு மற்றும் பொதுஜன முன்னணி இரண்டால் எடுக்கப்பட்ட முயற்சிகளும்--பெரும்பாலான பகுதி, தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவித சலுகைகளுக்கும் குரோதமான தீவிரவாத குழுக்கள், அரசு அதிகாரத்துவம் மற்றும் இராணுவத்தினரின் ஒரு பகுதியினர் ஆதரவுடன், எதிர்க்கட்சியினர் சிங்கள பேரினவாதத்தைத் தூண்டிவிட பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பின் காரணமாக, தட்டுத்தடுமாறிப் போய் இருக்கின்றன.

கணிசமான அழுத்தத்தின் கீழ், குமாரதுங்கவின் பேச்சானது, பெரு முதலாளிகளின் நிகழ்ச்சி நிரலை--போருக்கு முடிவுகட்டல் மற்றும் பொருளாதார சீரமைப்பிற்கான உக்கிரப்படுத்தப்பட்ட வேலைத் திட்டத்திற்கான வழியைத் தெளிவாக்கல்-- நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கும் எதிர்க் கட்சிக்கும் இடையில் ஒரு நெருங்கிய ஒத்துழைப்பை நோக்கிய முதலாவது அடிஎடுப்பு முற்கோளாக இருக்கும்.

See Also:

இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தை: தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மூலதனத்துக்கு தலைவணங்குகின்றது

Top of page