WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Trapped in Moscow: Exile and Stalinist Persecution, by Reinhard Müller
Stalin's persecution of German communists
மொஸ்கோவில் சிக்கிக் கொண்டவர்கள்: புலம் பெயர்ந்த நிலையும்
ஸ்ராலினிச துன்புறுத்தலும்
ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் மீதான ஸ்ராலினின் துன்புறுத்தல்
By Alexander Boulerian
16 March 2002
Use this version
to print |
Send this link by email
| Email the author
Menschenfalle Moskau: Exil und Stalinistische
Verfolgung (Trapped in Moscow: Exile and Stalinist Persecution), by
Reinhard Müller, Hamburg 2001
பல கம்யூனிஸ்டுகளுக்கு நாஜி ஜேர்மனியிலிருந்து சோவியத் யூனியனுக்கு தப்பியோடியது
மரணப் பொறியாக நிரூபணமாக இருந்தது. லெனினின் பழைய ஆதரவாளர்களை வெறுத்த ஸ்ராலின் அரசியல்
புலம்பெயர்ந்தோரை விட்டுவைக்கவில்லை. Reinhard Müller-ன்
சமீபத்தய புத்தகம் சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்டுகள் கொடுமைப்படுத்தபட்டதை நன்றாக ஆய்வு செய்கிறது.
அந்தக் கொடுமையின் கட்டமைப்பு, தொழிற்பாடு மற்றும் நடைமுறை செயல் வகை முதலியவற்றை முழுவதுமாக தெளிவுப்படுத்துகின்றது.
Erich Wollen Berg, Max Hoelz சுற்றிய உண்மையல்லாத,
புரட்சிக்கு புறம்பான ''எதிர்ப்புரட்சிகர ட்ரொட்ஸ்கிச பயங்கரவாத அமைப்பு'' இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
1989-க்கு முன்பு ரஷ்ய ஆவண காப்பகங்கள் மூடியிருந்தமையால், ஸ்ராலினின்
சரித்திரத்திர காலத்தின் "இருண்ட காலத்தைப் பற்றி" முழுமையான ஆய்வு நடத்த முடியவில்லை. ஸ்ராலினிச ஆட்சி பற்றிய
முக்கிய அம்சங்கள் தெரிய வந்துள்ளன. ஆனால் ஸ்ராலின் ஆட்சியில் அதிகாரிகளின் உத்தியோகரீதியான விசாரணைகளையோ
அவர்கள் உபயோகப்படுத்திய வழிமுறைகளையோ பற்றி விவரமாக கண்டுப்பிடிப்பது முடியாததாக இருந்தது.
சோவியத் ஒன்றியமும் அதனைச் சார்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பொறிந்தபின்
ஆவண காப்பகங்கள் திறக்கப்பட்டன. இதுவரை யாருக்கும் தெரியாத ஸ்ராலினிச களையெடுப்புகளின் நோக்கம்,
கட்டமைப்பு, நடைமுறை பற்றிய பல தகவல்கள் வெளியாயின. அதே நேரத்தில், புதிதாக அணுகக்கூடிய கோப்புகள்
மாபெரும் பயங்கரத்தின் (Great Terror) பயங்கரமான
பரிமாணங்களை வெளிக்கொணர்ந்தன. குறிப்பாக ஸ்ராலினின் கொடுமைப்படுத்தும் கொள்கையை. இவ்வாறு வெளிப்படும்
உண்மைகள் சாராம்சத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி முதன் முதலாக
எடுத்துக்கூறிய ஸ்ராலினிச படுகொலைகளைப் பற்றிய நோக்கமும் வழிமுறைகளைப் பற்றியுமான ஆழமான ஆய்வுகளை
ஊர்ஜிதம் செய்கின்றன.
ஸ்ராலினிசத்தின் அடிப்படை சிறப்பியல்பு என்னவென்றால் அந்த அடக்குமுறை கம்யூனிஸ்ட்
கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், அதிகாரிகள் முதலியவர்களுக்கு எதிராக வழிநடத்தப்பட்டது, அவர்கள் வேட்டையாடப்பட்டு
கொலை செய்யப்பட்டனர். ஸ்ராலினிச படுகொலைகள் சோவியத்
கம்யூனிஸ்ட் கட்சி (CPSU) உறுப்பினர்களை மட்டும்
அல்லாமல் அயல்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களையும் அதிகாரிகளையும்கூட இலக்காகக் கொண்டிருந்தன.
இவர்கள் ஹிட்லரின் ஆட்களின் கொடுமையிலிருந்து தப்பி ஓடி சோவியத் ஒன்றியத்தில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் ஸ்ராலின்
அரசு தங்களை களையெடுப்பிலிருந்தும் கொடுமையிலிருந்தும் காப்பாற்றும் என நம்பினர், அடுத்தடுத்து இந்த மரண ஆபத்தான
பிரமையின் பலியாட்களாக அவர்களே ஆயினர்.
மொஸ்கோவில் தஞ்சம் புகுந்த அரசியல் புலம்பெயர்ந்தோரின் அன்றாட வாழக்கையானது
நிரந்தர கண்காணிப்பு, ஒருவர் மீது ஒருவர் வேவு பார்த்தல் மற்றும் பயங்கர கவலைமிகுந்ததாக இருந்தது.
1935-36-ல் ஜேர்மன் கம்யூனிஸ்ட்டுகள் மீதான துன்புறுத்தலின் முதலாவது அலை, அவர்களை "சமரசவாதிகள்" என
மாசுபடுத்தி அழித்தது. ஸ்ராலினிச ரகசிய போலீஸ் NKVD
தனது திட்டப்படி "வலதுசாரி" யினரையும் "ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும்"
போலித்தனமான "வலது ட்ரொட்ஸ்கிச கூட்டு" என்பதில் ஒன்று சேர்த்தது. அதே நேரத்தில்
NKVD போலியான பாசிச சதித்திட்டங்களை கண்டுபிடித்தது.
Deutsche Zentral-Zeitung பத்திரிகை ஆசிரியர் குழு இதற்கு ஒரு உதாரணம்.
உள்நாட்டு விவகாரங்களுக்கான மக்கள் கமிஷனர் நிக்கொலாய்.ஐ.யெஷோவ் உத்தரவின்படி
NKVD, ட்ரொட்ஸ்கிஸ்டுகளைக் கொடுமைப்படுத்தியது. முன்னாள் ட்ரொஸ்கிஸ்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு
கொல்லப்பட இருந்தனர். ஏனையவற்றுக்கு மத்தியில், பின் நிகழ்வான கைதுகளின் அலை, "ட்ரொட்ஸ்கிச - சினோவியேவிச
மையத்திற்கு" எதிராக திட்டமிடப்பட்ட வழக்கு விசாரணைக் காட்சிக்காக நோக்கம் கொண்டிருந்தது. அது இறுதியில்
ஆகஸ்டு 1936-ல் நடைபெற்றது. ஸ்ராலின் மற்றும் அரசியற்குழுவின் முன்முயற்சிகளின் பேரில் பல்வேறு
NKVD இயக்கிகளைத் தொடர்ந்து, 1936-தொடக்கத்தில்
இந்த தீவிர தேடுதல் முயற்சி வோல்கா குடியரசில் இருந்த ஜேர்மன் புலம்பெயர்ந்த அரசியலாளர்களுக்கு
நீட்டிக்கப்பட்டது.
1936 வசந்த காலத்தில் NKVD
கடைசியாக ஒரு "ட்ரொட்ஸ்கிச சதியை" கண்டுபிடிப்பதில் வெற்றிகொண்டது.
Willi
Leow-ஐ சுற்றி அவர்கள் "எதிர்ப்புரட்சிகர, ட்ரொட்ஸ்கிச - பாசிச, பயங்கரவாத இயக்கம் ஒன்றை
நிர்மாணித்தனர். சித்ரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலங்களாலும் கூட்டு சேருவதால் குற்றம் என்ற கொள்கையின்
அடிப்படையிலும், 47 பேரும் ஆறு குழுக்களும் இந்த சதித்திட்டத்தில் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டனர். லெனின்கிராட்,
மொஸ்கோ மற்றும் உக்கிரெய்னில் இதுபோன்று மற்றய குழுக்கள் NKVD-ஆல்
"கண்டுபிடிக்கப்பட்டன." மார்ச் 1938ல் மாபெரும் பயங்கரம்
உச்சநிலையை எட்டிப்பிடித்தபோது, 70 சதவீத KPD
(ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினர்கள் சோவியத் ஒன்றியத்தில் தங்களது புலம்பெயர் இருப்பிடங்களிலிருந்து ஸ்ராலினிச
ரகசிய போலீஸ் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
Erich Wollen Berg மற்றும்
Max Hoelz சுற்றி இருந்த போலியான "எதிர் புரட்சிகர
ட்ரொட்ஸ்கிச- பயங்கரவாதி" என்பதுடன் NKVD
அமைத்த உண்மைக்கு புறம்பான ஸ்ராலின் கட்டளையின் பேரில் உருவான சதித்திட்டங்கள்
மிகவும் கொடூரமான பரிமாணங்ளை எடுத்தன.
மொஸ்கோவில் உள்ள காரியாளர் கோப்புகளில் இருந்தும் புலனாய்வு கோப்புகளில்
இருந்தும் Reinhard Miller
"Wollen
Berg - Hoelz"
சதித்திட்டத்தின் வரலாற்றை உருவமைத்தார். NKVD
ஆல் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் தலைவிதியை ஆய்வு செய்தார்.
ஹம்பேர்க் சமூக ஆய்வு நிலையம்
(Hamburger Institut für Sozialforschung)
என்ற நிறுவனத்தில்
Reinhard Muller
பணி புரிகின்றார். மேலே குறிப்பிட்டவர்களின் விதி சோவியத் ஒன்றியத்தில் அரசியல் அகதிகளின் தலையெழுத்தை ஒத்திருந்தது.
மேலும் NKVD, KPD,
கம்யூனிச அகிலம் (Communist
International) போன்றவற்றின் கொடுமைப்படுத்தும் அதிகாரத்துவங்கள்
கம்யூனிஸ்ட் எதிராளிகளை நடத்தும் விதத்தில் ஒன்றுபட்டு செயல்பட்டன.
"Wollenberg - Hoelz"
சதி திட்டம்
மார்ச் 5, 1933 அன்று பாராளுமன்ற
(Reichstag) தேர்தலில் ஹிட்லர் மற்றும்
அவரது கூட்டணியினர், ஜேர்மன் தேசியவாதிகள் வெற்றிபெற்றதானது
தொழிலாளர் இயக்கம் ஜேர்மனியில் தோல்வி அடைந்ததைக் கோடிட்டுக் காட்டியது. அன்று மாலையே
Elsa மற்றும் Hermann Tauben
Berger உடைய மொஸ்கோ அடுக்ககத்தில்
KPD உறுப்பினர் குழு ஒன்று கூடியது. Taurew Berger
ஒரு பொறியியலாளர். இவரது தனியார் வானொலியைக் கேட்கவும் தேர்தல் முடிவுகளை அலசவும் இக்குழு அங்கு
கூடியது.
இந்தக் கூட்டத்தில் KPD இராணுவ
நிபுணர் Erich Wollen Berg, இசை வல்லுநர்
Konstantin Siebenhaar (Volga
Republic- லிருந்து ஒரு ஜேர்மன்),
Werner Rakow எனும் முன்னாள் இடது எதிர்ப்பாளர் ஆகியோர் இருந்தனர். இவர் 1923-ல்
KPD-யின் சட்ட விரோத செய்தி சேவையின் தலைவராக
இருந்தார். இவர்களுடன் KPD உறுப்பினர்கள்
Hans Schiff, Peter
Schiff, Karl
Schmidt மேலும்
Erich Tache ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Werner Rakow, என்பவர்
Felix Wolf என்னும் கட்சி பெயரை சூட்டிக்கொண்டார். இவர் 1928-ல் சோவியத் ஒன்றியத்தில்
கைது செய்யப்பட்டார். ஆனால் மன்னிப்பு கடிதம் கொடுத்தபின், இவர் மற்ற "38 பேர்கள் குழு" வுடன் மீண்டும்
கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்த தேர்தல் இரவு கூட்டத்தில் பங்கு கொள்ளும் உறுப்பனர்களில் சிலர் மியூனிச் சோவியத்
குடியரசிலிருந்து ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டிருந்தனர். அது
Reichswehr மற்றும் பாசிச Freikorps
ஆகியவற்றின் துணையுடன் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சித் தலைமையால்
(SPD) 1919ல் கொடூரமாக நசுக்கப்பட்டது.
அன்று இரவு Berlin-னில் கட்சி மேலிடத்தைப் பற்றியும்
அதன் கொள்கைகளை பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில்
பங்குபெற்ற Hans Schiff என்பவர் நீண்ட கண்டன விவாதத்தைச்
செய்தார் மற்றும் தனது முன்னாள் பவேரியா கூட்டாளிகளால் கூறப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் பற்றியும் கூறினார்.
Schiff-ன் தாக்குதலைத் தொடந்து ஒரு அதிகாரபூர்வமான
கட்சி விசாரணை நடைபெற்றது. 1935-ல் NKVD அன்று
இரவு தேர்தல் கூட்டத்தில் பங்குபெற்ற பலர் மீது நடவடிக்கை எடுத்திருந்தது.
ஏப்பிரல் 1933-ல் Wollenberg மற்றும்
Rakow KPD-ல் இருந்து முன்கூட்டியே வெளியேற்றப்பட்டிருந்தனர்.
அந்த நேரம் Yagoda
தலைமையில் இயங்கிய இரகசிய போலீஸ் இந்த கூட்டத்தை "எதிர்ப்புரட்சிகர ட்ரொட்ஸ்கிச - பயங்கரவாத இயக்கத்தின்"
ஆரம்ப கட்டமாக எடுத்துக்கொண்டது. மேற்கூறிய அமைப்பு
KPD இராணுவ நிபுணர்
Wollenberg மற்றும்
Max Hoelz என்ற தொழிலாளர் தலைவரை மையமாக கொண்டது. கட்சி வட்டாரங்களில் "மக்களது
ராபின் ஹூட் (Robin Hood) என்று அழைக்கப்பட்ட
Hoelz, சோவியத் ஒன்றியத்திற்கு வந்தவுடனேயே கட்சி
அமைப்புடன் மோதலில் ஈடுபட்டார். அவர் தனித்தன்மை வாய்ந்தவர். ஸ்ராலினிச ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தார்.
சோவியத் ஒன்றியத்தை விட்டு வெளியே செல்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர் மொஸ்கோவில்
உள்ள ஜேர்மன் தூதரகத்தை அணுகினார். இது மன்னிக்க முடியாத குற்றம். சிறிது காலத்திற்கு பின்னர் அவர்
1933-TM Nizhny Novgorod அருகில்
மர்மமான சூழ்நிலையில் இறந்தார்.
NKVD, Wollenberg -ஐ எல்லா
சதிகார அமைப்புகளுக்கும் காரண கர்த்தாவாக குறை கூறி குற்றம் சாட்டியது.
Wollenberg ஒரு
இராணுவ டாக்டரின் மகன். இவர் முதல் உலக மகா யுத்தத்தில் பணி புரிந்தவர். பல பதக்கங்களை வென்று துணை லெப்டினென்ட்
ஆக பதவி உயர்வு பெற்றவர்.
நவம்பர்1918-ல்
Königsberg-ல் கடற்படை தலைவர் மற்றும் பாதுகாப்பு சேவைத்
தலைவர் என்ற முறையில் அவர் ஜேர்மன் புரட்சியில் செயலூக்கத்துடன் பங்கேற்றார்.
செப்டம்பர் 1923-ல், ருரில் வேலை நிறுத்தத்தின் பின்பு, தென்மேற்கு ஜேர்மனியில்
KPD-ன் இராணுவத்தில் அவருக்கு உயர் பதவி அளிக்கப்பட்டது. "ராஜத்துரோகம்,
கொலை மற்றும் வெடிமருந்துப் பொருள் விதிமீறல் குற்றங்களுக்காக" தேடப்பட்ட நிலையில், ஜேர்மனியின் அக்டோபர்
(1923) புரட்சி வெற்றி பெறாததாலும், KPD-யின்
மத்திய கமிட்டியானது அவரை சோவியத் ஒன்றியத்துக்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர் செஞ்சேனையில் சேர்ந்தார்.
பொது மன்னிப்பிற்கு பிறகு அவர் ஜேர்மனிக்கு திரும்பினார். அவர் சட்ட விரோதமான
"சிவப்பு முன்னணி" படையின் (Rot front kämpfer
bund, RFB) தேசிய தலைமையில் சேர்ந்தார்,
RFB-ன் அரசியல்
கிளர்ச்சித் துறையின் தேசிய தலைவராக ஆனார் மற்றும் அதன்
Rote Front பத்திரிகைக்கு
எழுதினார்.
Wollenberg ஜூன் 2, 1932-ல்
பெர்லினில் ஒரு நாஜி கூட்டத்தில் பேசியபோது துருப்புக்களால் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவர்
குணமானபிறகு KPD
மத்திய கமிட்டிக்கு பல கடிதங்களை எழுதினார். அதில் KPD
மற்றும் RFB
அவரை பாதுகாக்காததை "குற்றத்தனமான அலட்சியம்" என விமர்சித்தார். அவரது எதிர்ப்பு ஏனையோருக்கு மத்தியில்
பேர்லினில் உள்ள
KPD-யின் அரசியல் செயலாளர்
Walter Ulbricht
மீதும் திருப்பப்பட்டது.
Ulbricht -ம் அப்போதைய
மத்தியகுழு அலுவலரான
Herbert Wehner-ம்
Wollenberg-க்கு
எதிராக ஒரு விசாரணையை நடத்தினர். கட்சி அவரை கண்டித்தது.
Rote Fahne
பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலிருந்து அவரை நீக்கிவிட்டது. 1932-ல் இலையுதிர்காலத்தில்
Wollenberg, Erich
மற்றும் Zenzl Mühsam
ஆகியோருடன்
பெர்லினுக்கு குடியேறினார். இதற்கு முன்பே மியூனிச் காலத்தில்
NeiderSchonenfeld -TM
Erich Mühsam
உடன் அவர் சிறையிருந்த காலத்தில் அவர்களை அவர் அறிவார்.
Wilhelm Pieck
என்பவரின் பரிந்துரையின் பேரில் இவர் சோவியத் ஒன்றியத்துக்குள் 1932 கடைசியில் உள்ளே புக அனுமதிக்கப்பட்டார்.
மொஸ்கோவில்
Wollenberg, லெனின் நூல் திரட்டு
(Lenin's Collected Works)
என்னும் புத்தகத்தின் ஜேர்மானிய மொழி பதிப்பு ஆசிரியராக வேலைசெய்தார்.
1933-ல் தன்னை ஜேர்மனிக்கு திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு
KPD தலைவர்களை
அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவருடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. பிப்ரவரி 1933-ல்
Wollenberg, Karl Gröhl
எனும் ட்ரொட்ஸ்கிஸ்டை மொஸ்கோவில் சந்தித்தார். சில நாட்களுக்கு பிறகு
Gröhl
சோவியத் ஒன்றியத்தை விட்டு அவசரமாக ஓடிவிட்டார். அவர் புறப்படுவதற்கு சிறிது முன்னர் மூன்றாம் அகிலத்தின்
தபால் அறையில் ஸ்ராலின் மற்றும் பியாஸ்னிட்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு சென்றார். இந்த கடிதத்தில்
KPD மொஸ்கோ அலுவலகம் மற்றும் மத்திய குழுவை அவர்களின் தேசிய
சோசலிசம் குறித்த தவறான கொள்கையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
KPD- யிலிருந்து வெளியேற்றப்பட்ட சில
தினங்களுக்கு பின்னர் Wollenberg
பிராக்குக்கு தப்பி ஓடிவிட்டார். இது நடந்தது 1934ம் வருடம்.
Wollenberg அப்போது
சோவியத் ஒன்றியத்தின் ட்ரொட்ஸ்கிச எதிரியாக பயங்கரமாக
சித்தரிக்கப்பட்டார்.
1933 TM
Gröhl, Pyatnitsky-க்கு (Max
Hoelz-ன் மரண இரங்கல் குறிப்பையும் சேர்த்து) பிராக்கில்
இருந்து வெளிவரும் ட்ரொட்ஸ்கிச நாளேடான Unser
Wort (Our
Word) -ல் மேலும் ஒரு கடிதத்தை வெளியிட்டார். மீண்டும்
Gröhl, KPD,
சோவியத் ஒன்றியம் மற்றும் மூன்றாம் அகிலத்தின் கொள்கைகளை கடுமையாக
விமர்சித்தார் மற்றும் உத்தியோகரீதியான கம்யூனிஸ்ட்டு கட்சியிலிருந்தும் மூன்றாம் அகிலத்திலிருந்தும் பகிரங்கமாக தமது
உறவை முறித்துக் கொண்டார். Wollenberg-
ஐயும் Rakow-
வையும் KPD-
யிலிருந்து வெளியேற்றியதற்கான காரணங்களை அவர் ஒளிவுமறைவின்றி கூறினார். "இரண்டு தோழர்களும் ஜேர்மனியின்
நிலையைப் பற்றிய ECCI
(Executive Committee of the Communist
International) தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
அவர் KPD
ஐ மட்டுமல்லாது மூன்றாம் அகிலத்தையும் கூட புதிய அடித்தளங்களில் கட்டமைக்க வேண்டும் என்று கூறினார்."
மொஸ்கோவிலும் பேர்லினிலும் உள்ள கம்யூனிஸ்ட் தலைமை உண்மைகளை பிடிவாதமாக அசட்டை
செய்து, "சோவியத் ஜேர்மனிக்கான போராட்டத்தில்" "புரட்சிகர எழுச்சியின்" எதிர்பார்ப்பினைப் பற்றிக்
கொண்டிருந்தது, "ஜேர்மன்
தொழிலாளர் இயக்கம் தோல்வி" தொடர்பாகக் கூறும் எந்தக் கருத்தும் "தோல்விவாத" மற்றும் "கட்சி விரோதமானது"
என்று கருதப்பட்டது, "தொழிலாள வர்க்கத்தின் ஆற்றலில் நம்பிக்கையின்மை" என்று கூறப்படும் காட்டிக்
கொடுப்பாகவும் கருதப்பட்டது. KPD
கீழ்மட்ட அணிகளுக்குள் விமர்சனம் செய்பவர்கள் வர்க்க எதிரியின் 'புறநிலையான
ஏஜண்டுகள்' என வெளியேற்றப்பட்டனர், மற்றும் சிலர் பிராயச்சித்த சடங்குகளில் ஒழுங்கு படுத்தப்பட்டனர்......
அல்லது 'பல நாள் விவாதத்தின் போக்கில்' 'தண்டனை அளிக்கப்பட்டு மீண்டும் சரியான வழிக்கு' கொண்டு வரப்பட்டனர்
என முல்லர் குறிப்பிடுகின்றார்.
1934 வரைக்கும் கூட மூன்றாம் அகிலமும்
KPD-யும் ஜேர்மனி புரட்சிக்கு தயாராகிறது என்ற "பொதுக்
கொள்கையை" முன்னெடுத்து வந்தன, மற்றும் சமூக ஜனநாயக "சமூக பாசிஸ்டுகளுக்கு" எதிரான போராட்டத்தை
தொடர்ந்து பரப்பி வந்தன. 1933-ல் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் மூன்றாம் அகிலத்தின் தலைமையும்
KPD-யும் பின்பற்றி வந்த கொள்கையை மிகவும் வன்மையாகக் கண்டித்தார்.
அவர்கள் "தோல்விவாதிகள்" என்று தோல்விக்கு காரணமானவர்களை கூறவில்லை - அப்படியானால் அவர்கள் தம்மை
தாமே குறை கூறிக்கொள்ளவேண்டும். ஆனால் தோல்விவாதிகள் என்பது இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்
கொள்ள முயற்சிப்பவர்களைக் குறிக்கிறது."[1]
ட்ரொட்ஸ்கிச பத்திரிகைகளான Unser Wort
[2] மற்றும்
Neue Weltbühne பாசிசம் குறித்த ட்ரொட்ஸ்கியின்
ஆய்வின் அடிப்படையில் இதைப் போன்ற விமர்சனங்களையே பிரசுரித்தன.
Gröhl- ன் பகிரங்க அறிக்கையைத்
தொடர்ந்து, ஸ்ராலினிச இரகசிய போலீஸ் Wollenberg,
Rakow
மற்றும் Hoelz
இவர்களை அரசாங்கத்திற்கு விரோதமான பயங்கரமான ட்ரொட்ஸ்கிச எதிரிகள்
என முத்திரை குத்த இருந்தது. NKVD
ஆல் தயாரிக்கப்பட்ட 70 பேர்களுக்கு மேற்பட்ட தனிநபர்கள் அல்லது குற்றத்திற்குரிய தொடர்புகளைக் கொண்ட
"தொடர்பாளர்கள்" கொண்ட ஒரு பட்டியலைத் தயாரித்தது. கற்பனையான
Wollenberg - Hoelz
அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறி இவர்களை கைது செய்தும், கடூழியச் சிறைமுகாமில் வைத்தும் அல்லது
மொஸ்கோவில் சுட்டும் கொன்றது.
பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவரான முன்னாள்
KPD அதிகாரியும்
Rote Fahne
என்ற கட்சிப் பத்திரிகையின் தலைமை ஆசிரியரும் ஆன
Werner Hirsch என்பவர் முன்னதாகவே மார்ச் 3 அன்று
பேர்லினில் கைது செய்யப்பட்டார்.
SA மற்றும்
GESTAPO சித்திரவதை முகாம்களூடான அவரது பயணத்தில் சித்திரவதை
சோதனைகளில் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது ஏமாற்றம் நிறைந்த பாதுகாப்புக்குரிய புலம் பெயர் நிலையில்
இருந்து வந்த உடன் Hirsch,
கடூழியச் சிறை முகாம்களில் இருந்து வந்த ஏனைய KPD
அலுவலர்கள் போலவே "சாத்தியமான உளவாளி" என்றும் ``திசைமாறி
போனவர்`` என்றும் அல்லது ஹிட்லருக்காக வேலை செய்யும் "கெஸ்டாபோ ஏஜண்ட்" என்றும் சந்தேகத்தின் கீழ்
வைக்கப்பட்டார்.
போருக்குப் பிந்தைய மேற்கு ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சிப் பிரிவின் (கன்னையின்)
தலைவராக பின்னாளில் விளங்கிய Herbert Wehner
என்பவரை உள்ளடக்கிய,
KPD-யால் அமைக்கப்பட்ட
ஒரு விசாரணை கமிஷன், Hirsch-க்கும்
Erich Mühsam-ன்
விதவை மனைவிக்கும் பிரேக்கில் நெருக்கமான உறவை நிரூபித்தது.
Erich Mühsam ன்
மனைவி Erich
Wollenberg
எனும் "முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுடன்" "நெருங்கிய உறவுகளை" கொண்டிருந்தார்.
Hirsch, NKVD
கடுங்காவல் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டார். அவர் ஆரம்ப காலத்தில் கட்சியில் செய்த சில
தவறுகளை ஒப்புக்கொண்டு கட்சிக்கு தம் ஆழ்ந்த விசுவாசத்தை நிலை நாட்டினார். அவர் வற்புறுத்திப் பெறப்பட்ட
வாக்குமூலத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
NKVD சிறையில்
கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் வந்த நோயால் அவர் நவம்பர் 10, 1937-ல் காலமானார்.
ஸ்ராலினிஸ்டுகளால் நிறுவப்பட்ட பொய்
"கூட்டில்"
பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் Hirsch
ம் Eric Mushm
(ஒரானியன்பேர்க் என்ற நாஜி கடூழியச் சிறை முகாமில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்) என்ற அராஜகவாத
கவிஞரின் மனைவியான Kreszenzia ("Zenzl")
Musham மற்றும்
Brecht நாடகக்குழுவின்
நடிகையான Carola Neher
ஆவர். Carola Neher
உடன் zenzl Muhsam (Wollenberg-ன்
நெடுநாளைய நண்பர்) Prague-ல்
தலைமறைவாக இருந்த காலம் முதற்கொண்டு சந்தேகத்திற்கு ஆளானார். அவர் மொஸ்கோவிற்கு தனது கணவர்
Erich Mühsam-ன்
பிரசுரிக்கப்படாத புத்தகங்களை வெளியிடும் நம்பிக்கையோடு மொஸ்கோவிற்கு வந்தார்.
Zenzl MOPR-ன்
(International
Organization to Support the Fighters of the
Revolution) தலைவரான
Yelena Stasova
என்பவரின் தனி பாதுகாப்பை பெற்றிருந்தார்.
அரசியல்வாதியும் KPD-யின்
எதிரியுமான Erich Mühsam-ன்
புத்தகங்களை பிரசுரிக்க விருப்பமில்லாத ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காலங்கடத்தும் தந்திரத்தை எதிர்கொண்டும்
மற்றும் எப்போதும் கட்டுப்பாடும், எங்கும் வேவு பார்த்தலும் கொண்ட "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" பற்றிய
யதார்த்தத்தைக் குறித்து வெறுப்படைந்தும், அவர் ஸ்ராலினிச அரசை விட்டு வெகுதூரம் விலகி சென்றார். அப்பெண்மணி
வெளிப்படையாகவே புலம்பெயர்ந்தோர் வட்டாரங்களில் தனது விமர்சனங்களை எடுத்துக்கூறவே, ஸ்ராலினிச
அரசு அவரை கண்டித்தது. பலத்த சர்வதேச எதிர்ப்புக்கள்
இருந்தபோதிலும் அவர் அடுத்த 20 ஆண்டுகளில் மூன்று முறை கைது செய்யப்பட்டார். 1955-ல் கிழக்கு ஜேர்மனியில்
குடியேறும் முன்னர் இறுதியில் தடைசெய்யப்பட்டார். ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் அவர் ஆளும் சோசலிச ஒற்றுமைக்
கட்சி (Socialist Unity Party -SED)
யால்
"கவனிக்கப்பட்டார்." அவரை இரகசிய போலீசும் கண்காணித்தது.
புகழ்பெற்ற ஜேர்மன் டைரக்டர்
Gustav Von Wangewheim (இவர் உளவுத் தகவல் கொடுப்பவராக
இருந்தார்) தனது "Left Column"
எனும் நாடகக் குழுவில் நடிகையாகப் பணிபுரிந்த Carola
Neher என்பவர் மீது குற்றம் சாட்டினார். இதன் காரணமாக
Carola,
மொஸ்கோவில் July
23, 1936 அன்று கைது செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் கடூழியச் சிறைமுகாமிற்கு அனுப்பப்பட்டார்.
Orenburg அருகிலுள்ள
Sol-Ilzek சிறையில் அவர் ஜூன் 26, 1942-ல் மரணமடைந்தார்.
ஸ்ராலினுக்கு எதிர்ப்பு
பல விதங்களில், ஸ்ராலினிசத்தின் கீழ் எதிர்ப்பாளர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
14, 15, 16 நூற்றாண்டுகளில் மத்திய காலத்து விசாரணை முறைகளை ஒத்திருந்தது. இந்த ஒப்புவமை ட்ரொட்ஸ்கியினாலும்
புக்காரினாலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. புக்காரின் 1938 நடந்த ஒரு புலன் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்.
Muller பின்வருமாறு எழுதுகிறார்: "போலீஸுக்கு தகவல்
தெரிவிப்பது, குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தாலும் மற்றவர்களும் அதற்கு பொறுப்பாவது, குற்றம் சாட்டுபவர்,
தகவல் சொல்லும் உளவாளிகள், ஒப்புதல் வாக்குமூலம் பெற கொடுமைப்படுத்துவது, இரகசிய புலன் விசாரணை, வெளிப்படையான
வழக்கு விசாரணை முதலியவை ஸ்ராலினிச பயங்கரவாதத்திற்கும் மத்தியகாலத்து விசாரணைகளுக்கும்
பொதுவானவையாகும்."
குற்றச்சாட்டுகளும், அரசியல் அதிருப்தியாளர்களின் உத்தியோகரீதியான கோப்புகளும்
ஒருவரது கடந்தகால வரலாற்றுப் பத்திரங்களுக்கும் "வியாதிக்காரர்களின்" கருப்புப் பட்டியலுக்கும் அடிப்படையாக
இருந்தது. இவை பின்னர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் காரியாளர் துறையால் ஸ்ராலினிச இரகசிய போலீஸுக்கு அனுப்பப்பட்டது.
பிராக்கில் இருக்கும்போதே "ட்ரொட்ஸ்கிஸ்டுகளை" தீவிரமாக வேவு பார்த்த
Herbert Wehner, மொஸ்கோவில் உள்ள
KPD தலைமைக்கு நீளமான அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அவர் மொஸ்கோவிற்கு 1937-ல் வந்த பின்னர் Zenzl
Mühsam, Erich Wollenberg போன்ற எதிர்ப்பாளர்களையும்
மற்ற அரசியல் புலம்பெயர்ந்தோர் பற்றியும் தகவல் சேகரித்தார்.
Muller கூற்றுப்படி Wehner மொஸ்கோவுக்கு
வந்தவுடன் "ஏனையோருக்கு மத்தியில், Zenzl மற்றும்
Mühsam-க்கு எதிராக அதிகாரபூர்வமான தாக்குதல் மேலும் புதிய பரிமாணங்களை எடுத்தது."
"கருத்தியல் தூய்மையின் காவலர்" என்ற வகையில்
Wehner- "அவருடைய குறுகிய மனப்பான்மையான குணாதிசயப்படி"
"ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும்" அவர்களுடைய "சமூக ஜனநாயக கூட்டாளிகளையும்" பல வெளிப்படையான, மற்றும்
இரகசியமான அறிக்கைகளால் குற்றம் சாட்டினார். இவ்வறிக்கைகளை அவர் மூன்றாம் அகிலம் மற்றும்
KPD தமைக்கு மட்டுமல்லாது, 1937-ல் லுபியங்கா சிறையில்
NKVD க்கும் இவ்வறிக்கைகளை சமர்ப்பித்தார்.
Dinitrov, Pieck மற்றும் Togliatti
ஆகியோரின் அதிகாரபூர்வ ட்ரொட்ஸ்கிச கண்டனத்துடன் பொருந்தும் வகையில், மேற்கு ஜேர்மனியில் ஒரு முன்னணி சமூக
ஜனநாயகவாதியாக வர இருந்த Wehner, "மட்டரகமான,
இழிவான ஹிட்லரின் பாசிச ஏஜண்டுகளான 'ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு" எதிராக வன்மையாக சாடினார். "இவர்கள் முதலாளித்துவ
நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தை அழிக்க முயற்சி செய்வது போலவே சோசலிச அரசையும் பலவீனப்படுத்த
முயலுகின்றனர்`"[3] என்றார்.
முல்லரின் கூற்றுப்படி, "தங்களது
அரசியல் காரணங்களுக்காக ஆளும் கட்சியினரும் ட்ரொட்ஸ்கிச பத்திரிக்கையும் கூறுவதுபோல", மார்ச் 5, 1933
அன்று ஜேர்மன் தேர்தல்களின்போது கூடிய கூட்டத்தை "ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பாளர்களின் ஒரு சதிக் கூட்டம்" என்று
கூறுவது சரியல்ல. "ஜேர்மன் தொழிலாளர் இயக்கம் தோல்வியடைந்ததால் ஏமாற்றமடைந்ததன் காரணமாக, மேலும்
இராணுவ நிபுணர்கள் பற்றிய பிரமையும் கிளர்ச்சி எழுச்சியின் மூலோபாயங்கள் தொலை தூரத்தில் மொஸ்கோவில்
இருந்ததன் காரணமாக.... பேர்லினில் இருந்த KPD
தலைமை பற்றியும் கொள்கைகள் பற்றியும் சில விமர்சனங்கள் செய்யப்பட்டிருக்கலாம்" என்பதை அவர் விலக்கவில்லை.
ஆனால் 1933ல் "ட்ரொட்ஸ்கி ஆதரவாளர்கள் ஒரு கூட்டமைப்பாக பிராக்கிலோ
அல்லது மொஸ்கோவில் உள்ள KPD அதிகாரிகள் மத்தியிலோ
இல்லை" என முல்லர் எழுதுகிறார்.
ஸ்ராலினிச ஆட்சிக்கு உட்பட்ட சோவியத் ஒன்றியத்தில் கூட்டமைப்பாக இயங்கும் ட்ரொட்ஸ்கிச
குழுக்கள் இருந்தன என்பதற்கு சில ஆதாரங்களை முல்லர் சுட்டிக்காட்டும் அதேவேளை, ஆனால் அவற்றிற்கு அரசியல்
முக்கியத்துவம் இல்லை என்கிறார்.
வாடிம் ரொகோவின் இந்த குழுக்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும்
நன்றாக, விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்.[4] முல்லர்
இதை மறுக்கிறார். ரொகோவின் NKVD-ன் ஆரதாரமற்ற
குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனையின்றி அப்படியே திருப்பிக் கூறுவதாக முல்லர் குற்றம் சாட்டுகிறார்: " 'ட்ரொட்ஸ்கிச
சதி' பற்றிய ஸ்ராலினிச குற்றச்சாட்டுகள், நீட்டிக்கப்பட்ட மற்றும் செயலூக்கமான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பின்
இருப்பினை நிரூபிப்பதற்கு வாடிம் ரொகோவினால் அண்மையில் எடுத்துக் கொள்ளப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது."
முக்கியமாக, ரொகோவினுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உண்மையான விவாதங்களை
ஆதாரமாக வைக்க முல்லர் முயலவில்லை.
ரொகோவின், ஸ்ராலினிச கூற்றை ஒப்புக்கொள்ளவுமில்லை, உதறித்தள்ளவுமில்லை. எனவே
முல்லரது குற்றசாட்டு தவறானது. ஸ்ராலினிச கொடுமைகளின் உச்சக்கட்டத்தில் கூட எதிர்ப்பு வட்டாரங்கள் ட்ரொட்ஸ்கியின்
கருத்துக்களினால் செல்வாக்குப் பெற்றிருந்தன என்று காட்டும் தஸ்தாவேஜுக்களை ரொகோவின் எடுத்துக்காட்டுவதன்
மூலம், ஸ்ராலினிச ஆட்சியின் பயங்கரமான பொய் குற்றச்சாட்டுகளுக்கும் பொய்புனைவுகளுக்கும் பின்னால் உள்ள
சாராம்சத்தை வெளிக்கொணர்கிறார்.
"ஜேர்மன் இரகசிய போலீசுடன்" ட்ரொட்ஸ்கிச "பயங்கரவாதிகள்" ஒத்துழைப்பு பற்றிய
குற்றச்சாட்டு மற்றும் நாசவேலை என்று கூறப்படும் செயல்களை (தவிர்க்க முடியாதவகையில் கடைசி நிமிடத்தில் சோவியத்
ஆட்சியாளர்களால் தடுக்கப்பட்ட, பயங்கரவாத செயல்களான கொலை, விஷம் கொடுத்தல்) கட்டுக் கதைகள் என
ரகோவின் மறுத்தார். ஆனால் ஸ்ராலினிசத்தின் கீழ் ட்ரொட்ஸ்கிச
இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம், இந்த ரஷ்ய வரலாற்று
அறிஞரால் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் அறிவுஜீவித மற்றும் அமைப்புரீதியான தொடர்ச்சியை
நிலைநாட்ட முடிந்தது. இந்த ட்ரொட்ஸ்கிச அமைப்பின்
தொடர்ச்சியை, ஸ்ராலினின் பயங்கரவாத செயல்கள் முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.
Hermann Weber சோவியத் பற்றிய
ஆய்வில் புகழ்பெற்ற நிபுணர். இவர் ரொகோவினை ஆதரிக்கிறார். மான்ஹெய்மில் உள்ள ஐரோப்பிய சமூக ஆய்வுகளுக்கான
மையம் என்பதில் Hermann Weber
பேராசியர் ஆவார். ஸ்ராலினைப் பொறுத்தவரை ட்ரொட்ஸ்கிசம் என்ற சொல் வேறுபடுகிற ஒவ்வொருவரையும்,
உண்மையான எதிராளியை அல்லது எதிராளி என்று கூறப்படுபவர் ஒவ்வொருவரையும் 'மரண ஆபத்தான பகைவனாக' முத்திரை
குத்த சேவை செய்தது என விவாதித்து, 1937-38-ல் இன்னும் ட்ரொட்ஸ்கிசம் ஒரு அரசியல் சக்தியாக இருந்ததா
என்று Weber
சந்தேகிக்கிறார்.
இரண்டாவதாக
ட்ரொட்ஸ்கிசம் என்னும் சொல்லை ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களை நோக்கி நனவுடன்
திரும்பிய எதிர்ப்பாளர்களுக்கு நாம் பயன்படுத்துகிறோம். மூன்றாவதாக ஒழுங்கமைக்கப்பட்ட உண்மையான ட்ரொட்ஸ்கிச
குழுக்கள் இருந்தன. "இருப்பினும், இது ஸ்ராலினிசத்தின் கீழ் 'ட்ரொட்ஸ்கிசத்தின்' அடிப்படை முக்கியத்துவத்தைக் குறைத்து
மதிப்பிடவில்லை மற்றும் அங்கு உண்மையாகவே எதிர்ப்பாளர் குழுக்கள் இருந்தன. ஸ்ராலினின் பயங்கரவாதமானது
கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்தும்
கம்யூனிசத்தின் வரலாற்று எழுத்தாண்மையில் எஞ்சி நிற்கும் லெனினது கருத்துக்களில்
இருந்தும் தீவிரமான நிலைமுறிவு என ரொகோவினது விவாதம் விளக்கம் தருகிறது" என
Weber கூறுகையில், அவர்
ரொகோவினுடன் ஒத்துப்போகிறார்.
சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பைப் பற்றிய முல்லரின் அறியாமை அவருடைய
புத்தகத்தின் மதிப்பைக் குறைக்கவில்லை. இந்தப் புத்தகம் ஜேர்மனியில் இருந்து புலம்பெயர்ந்த அரசியலாளர்கள் ஸ்ராலினிசத்தின்
கீழ்ப்பட்ட தலைவிதிகளை அகழ்ந்தெடுப்பதில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது, மேலும் ஸ்ராலினிச களைஎடுப்புக்களைப்
பற்றி தெரிந்துகொள்ள, மற்றும் அவற்றின் கட்டமைப்பு, செயல்பாடுகள் பற்றி அறிய உதவுகிறது.
குறிப்பு:
1. "Deutsche Perspektiven"
("German Perspectives"), in Die neue Weltbühne, 1933, no. 30, p.
920)
2. First among them was Willy Schlamm, e.g., in "Leninism
and Stalinism"
3. Kurt Funk (Herbert Wehner): "Mobilize for world
peace and against the fascist war mongers on May 1st", in: Rundschau
über Politik, Wirtschaft und Arbeiterbewegung, 6, 1937, no. 17, p. 662
4. Vadim S. Rogovin, 1937: Stalin's Year of Terror,
Mehring Books, 1998
5. Müller, Menschenfalle, p. 134
6. Hermann Weber/Ulrich Mählert (eds.): Terror:
Stalinistische Parteisäuberungen 1936-1953 (revised special edition),
Paderborn, 2001
|