WSWS:
செய்திகள் & ஆய்வுகள் :
மத்திய
கிழக்கு
Israel on Jenin: "Nothing to hide"... but no one can look
ஜெனினில் இஸ்ரேல்: ''மறைப்பதற்கு எதுவும் இல்லை ''... ஆனால் யாரும் பார்வையிட
முடியாது
By Barry Grey
30 April 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
ஜெனின் அகதிகள் முகாமில் இடம்பெறும் இஸ்ரேலுடைய பயங்கரவாதத்தை புலனாய்வு செய்ய
பிரேரித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மிகக்கேவலமான இராஜதந்திரத்தை இந்த உலகம் அறிந்திருக்கிறது. அரசாங்கம்
கடந்த எட்டு நாட்களாக மிகவும் சன நெரிசலான பகுதியில் கவசவாகனங்கள், புல்டோசர், ஆயுத தளபாடங்கள்
பொருத்தப்பட்ட ஹெலிப்கொப்டர் மற்றும் பாதுகாப்பு அரண்கள் போன்றவற்றுடன் அங்கே நிலை கொண்டுள்ளது. காயப்பட்டவர்களை
முதலுதவி வாகனம் மூலம் பாதுகாக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் பிரவேசிக்கும் பத்திரிகை
நிருபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றன. தாக்குதலுக்கு ஒரு வாரத்துக்கு பின்னால்
சிகிச்சைக்காக போகவிருந்த செஞ்சிலுவை சங்கம் அல்லது விசாரணைகளை மேற்கொள்ள முனைந்த ஐக்கிய நாடுகள்
சபை போன்றவை தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன,
பிரதம மந்திரி ஆரியல் ஷரோன், இவர் 1982ல் பெய்ரூட்டில் உள்ள
Sabra, Shatilla போன்ற அகதி முகாம்களில்
இடம்பெற்ற படுகொலை வழக்கில் முக்கிய பாத்திரத்தை முன்னர் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில்,
சாட்சியங்களையும், புள்ளி விபரங்களையும் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதுடன், விசாரணைக்குழுவில் யார் உள்ளடங்குவது
என்பதையும் தான் தீர்மானிக்கும் உரிமையை கொண்டிருக்கவேண்டும் என கூறியுள்ளார். இவற்றிற்கு பின்னால் அமெரிக்க
அரசாங்கம் இந்த விசாரணையை தடுப்பதற்கான ஆதரவைக் இஸ்ரேலுக்கு கொடுக்கிறது. அல்லது அதை தேவையற்ற
ஒரு விடயமாக உருமாற்றுகிறது. ஏனெனில் அமெரிக்காவின் பத்திரிகைத்துறையினர் இச் செய்திகளை அரசியல் மற்றும்
மனிதாபிமான ரீதியாக பாதுகாப்பதற்கு எதிரான முறையில் அவற்றை போட்டு குழப்பியடிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோபி அனான்
எண்ணிறைந்த எதிர்ப்பு ஊர்வலங்களுக்கும், உறுதியற்ற உத்தரவாதங்களுக்கும் இடையே நின்று ஊசலாடுகிறார்.
இறுதியில் பாலஸ்தீன மக்களை கொலை செய்வதற்கு எதிராக ஏதாவது ஒரு விசாரணையை எப்போதாவது நிறைவேற்றத்தான்
வேண்டும். இது அமெரிக்கா வியட்னாம் மீது செய்த அழித்தொழிப்புக்களை நினைவூட்டுவதாகவும், ஐரோப்பிய யூதர்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்பட்ட நாசிகளின் நடவடிக்கைகளுடனும் ஒப்பிடக் கூடியதாகவும் இருக்கின்றன.
இதுவரையிலும் நடைபெற்ற துன்பியல்கள் அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் கபடம் நிறைந்த
மற்றும் கோரமான அரசியல் பாடத்தின் போதுமான விளக்கங்களாகும், இவற்றில் ஐக்கிய நாடுகள் சபை, பெரிய
வல்லரசுகளின், பிரதானமாக அமெரிக்காவின் ஒரு கைப்பொம்மை பாத்திரத்தை வகிக்கிறது.
இவ்வரிகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், றமாலாவில் யசீர் அரபாத்துக்கு
மேலான ஷரோனின் வெற்றிகரமான உடன்படிக்கைக்கு அமெரிக்கா இணக்கம் தெரிவிப்பதுடன், ஜெனின் நடவடிக்கை
சம்பந்தமாக இஸ்ரேலுக்கு மேலாக ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க இருக்கும் எந்தவொரு விசாரணைத் திட்டத்தையும்
இல்லாதொழிக்க அல்லது அதை முற்றாக குழப்பியடிப்பதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு அமெரிக்கா முனைகிறது.
இஸ்ரேலின் மந்திரி சபை கூட்டத்தில் அரபாத்தை வெளியேற்றுவதற்கான அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,
அதே சமயம் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவு ஜெனினிற்குள் பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும் வாக்களிக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பிரிவு இஸ்ரேலின் அசட்டையீனத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்கு ஞாயிறு ஒரு
அழைப்பை விட்டது, இதை அமெரிக்கா, ஒரு அராபிய - பின்னணித் தீர்மானத்தின் வேண்டுகோளால் தடுத்து, இஸ்ரேல்
இதில் ''எதுவித கோரிக்கைகளையோ, அல்லது பின்வாங்கல்களையோ ஏற்படுத்தாமல்'' இவ் விசாரணையில் ஒத்துழைக்க
வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
இருந்து கொண்டுள்ள இந்த எதிர்ப்புவாத நிலைப்பாட்டைப் பற்றி,
Washington Post பத்திரிகை திங்கள் அன்று
தெரிவித்த செய்தியில், ''விசாரணைப்பிரிவு ஜெனினுக்கு போவதை இஸ்ரேல் விரும்பவில்லை, இதை ஐக்கிய நாடுகள்
சபையின் தலைவர் கோபி அனானுக்கு புஷ் உணர்த்துவதாக வாக்குறுதி அளித்துள்ளாரா என்பதை இஸ்ரேல் அரசாங்கத்தின்
பிரதிநிதிகள் கூறப் போவதில்லை. அமெரிக்கா இவ் விடயத்தை பாதுகாப்பு அமைச்சில் வாக்களிப்புக்கு விட்டு இதில்
ஏதேனும் மாற்றத்தை கொண்டு வருகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என ஒரு உயர் அதிகாரி
குறிப்பிட்டார்.''
இஸ்ரேல் ஆரம்பம் முதலே, முற்றுகையிடப்பட்ட பகுதியான ஜெனினுக்குள் ஐக்கிய நாடுகள்
சபையின் உட்பிரவேசத்தை எதிர்த்து வருகிறது, அதேசமயம் வாஷிங்டனின் சொந்த நலன்கள் இவற்றிற்கு வேறு ஏதேனும்
ஒரு மாற்றீட்டை முன்வைக்க முடியாது இருப்பதால் இம் மாதத்துக்கு முதல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் தீர்மானங்களுக்கு
அதனது உத்தியோக பூர்வமான ஆதரவை, ஒரு பரீட்சையாக வழங்கிற்று. புஷ் அதிகாரம் அதனது வாடிக்கை அரசாங்கங்களுக்காக
ஒரு வரிசைக் கிரமமான அபிநய விளையாட்டுக்களை இந்த அராபிய உலகில் அரங்கேற்ற வேண்டியுள்ளது. அந்நாடுகளில்
பல ஈராக்குக்கு மேல் திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கான தமது ஆதரவை ஒன்றில் வெளிப்படையாகவோ அல்லது
மெளனம் சாதித்தோ வழங்குகின்றன. ஆனால் நடைமுறையில் இவை பாலஸ்தீனத்திற்கு எதிரான ஷரோனின் யுத்தக்
கொள்கைக்கே பின்பக்கமாக உதவுகின்றன.
ஷரோன் அரசாங்கம், சந்தேகத்திற்கு இடமின்றி, இவ்விசாரணையை மூடிமறைப்பதற்கு
தேவையான ஆதரவை வாஷிங்டனிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. பின்னர் நிலமைக்கு தகுந்தால்போல், நாசமாக்கப்பட்ட
முகாமுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவுக்கு இது வழங்கிக் கொள்ளும்.
''மறைப்பதற்கு இஸ்ரேலிடம் எதுவுமில்லை'', என இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சரான
Shimon Peres ஏப்ரல் 19 ல் வெளியிட்டார். இஸ்ரேல்
இராணுவம், தமது இறுதியான தாக்குதலுக்கும், இந்த முகாமுக்கு வெளியார் அனுதிக்கப்பட்ட அந்த நாளுக்கும் இடையில்
இடம்பெற்ற குற்றங்களுக்கான காரணங்களை இல்லாதொழிப்பதில் மிக வேகமாக செயலாற்றுகிறது. ஜெனினில் தப்பிப்
பிழைத்தவர்கள், அங்கே புதைக்கப்பட்ட சடலங்கள் மேலும் பல இருப்பதாகவும், அவற்றை ஷரோன் அரசாங்கம்,
இஸ்ரேலின் உயர் நீதிமன்ற முறைப்படி அவற்றிற்கான மயானங்களில் தகனம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளை
தடைசெய்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
இஸ்ரேல் இராணுவத்தின் சகல முயற்சிகளுக்கும் மத்தியில், இஸ்ரேலின் கவச வாகனங்கள்
மிதித்து துவம்சம் செய்த வீடுகளும், இவ்வீடுகளின் அடிமட்டத்திலிருந்து அழுகிப்போன சடலங்களின் துர்நாற்றத்தைத் தொடர்ந்து,
இக்கொடூரமான காட்சிகளாக அம்பலமாகின. இது சர்வதேச எதிர்ப்பையும், பலகாலமாக தொடர்ந்த யுத்தக்குற்றங்கள்
தொடர்பாகவும் கருத்துக்கள் வெளிவருவதை உருவாக்கின. ஒரு உண்மையான விசாரணையை மேற்கொள்வதற்கு,
ஷரோன், பெரஸ் மற்றும் அதேபோன்று இஸ்ரேலின் முக்கிய தலைவர்கள் இந்த யுத்தத்தின் குற்றங்களில் தாமும் சம்பந்தப்பட்டிருப்பதற்காக
பயப்படுகிறார்கள். எனவே இஸ்ரேலின் மந்திரி சபை, உடனேயே ஐக்கிய நாடுகள் சபையின் இச் சோதனையை தடை
செய்வதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டது, இது பகிரங்கமாகவே நிறைவேற்றப்பட்டது.
கோபி அனானினால் புலனாய்வுத் துறைக்காக,
Cornelio Sommaruga என்பவரும், (இவர்
செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச காரியாலத்தின் முன்னாள் தலைவர்) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பிரிவில்
முன்னாள் ஓர் உயர் அதிகாரியாக இருந்த Sadako Ogata
போன்ற இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என இஸ்ரேலின் பேச்சாளர் தெரிவித்தார். சோதனையில்
வெளியாகும் எந்தவொரு ''உண்மை - வெளிப்படுத்தலும்'' அதன் பிரிவினரால், ஒரு வெளிப்படுத்திக்காட்டுவதாக
இருக்கவேண்டுமே தவிர ஒரு முடிவுக்கு வரக்கூடாது எனவும், மாறாக இவை ஜெனின் முகாமின் ''பயங்கரவாதக்
கட்டுமானங்களின் ஒரு தோற்றம்'' ஆகவே காண்பித்தல் வேண்டும் எனவும் கோபி அனான் மீது நிபந்தனை விதித்தனர்.
இராணுவ மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கு பேர்போன ஒரு அமெரிக்க இராணுவ ஆலோசகரும், மேலும் ஓய்வு எடுத்துக்
கொண்ட ஒரு பெரிய தளபதியான William Nash,
இவர் வளைகுடா யுத்தத்தில் வேறு அமெரிக்க இராணுவத்துக்கும் தலைமை தாங்கியுள்ளார், இந்தப் புலன் விசாரணையில்
ஒரு முக்கியமானவர் என்றெல்லாம் கூறி ஷரோனை கோபி அனான் சாந்தப்படுத்த முயற்சித்தார்.
சென்ற வாரத்தின் கடைசியில், பெரஸ் அவரது ''மறைப்பதற்கு எதுவுமில்லை'' எனும்
நிலைப்பாட்டுடன், ''இஸ்ரேலுக்கு மேல் இரத்தப் பழியை சுமத்துவதைத் தவிர, அனேகமாக இங்கே குற்றம் காண்பதற்கு
குற்றம் எதுவுமில்லை'' என ஐக்கிய நாடுகள் சபையை சாடியுள்ளார்.
புஷ் நிர்வாகம், வெறும் பெயரளவில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை பெயரளவில்
ஆதரித்துக் கொண்டு, ''பயங்கரவாத'' துப்பாக்கிதாரிகளை மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், அங்கே எவ்விதமான
அழித்தொழிப்புகளும் நடைபெற்றுவிடவில்லை என்று சாடும் இஸ்ரேலையே இதுவும் பின்பற்றியது. கடந்த வாரம் இடம்
பெற்ற ஒரு பகுதி செனட் குழுவினரின் முன் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளரான
Colin Powell, ஜெனினில் இரத்தக் களரி அல்லது மனிதப்
படுகொலைகள் நடைபெற்றதற்கான எவ்விதமான தடயங்களையும் அவர் காணவில்லை எனக் குறிப்பிட்டார். ''அங்கே
படுகொலைகள், புதைகுழிகள் போன்ற எவற்றையுமே காணமுடியாதபோது'', ஐக்கியநாடுகள் சபையின் புலன் விசாரணை
மேற்கொண்டு இவ் விடயத்தை மிகைப்படுத்துவதாகவும், குழப்புவதாகவுமே இருக்கும் என அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
கொலின் பெளவல், அவர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தபோதும், இம் மாதத்தின்
ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கும், மேற்குகரைக்கு சென்றிருந்தபோதும் இந்த அழிவுகரமான அகதி முகாமை அவர் பார்வையிடுவதற்கு
செல்லவில்லை என்பதை இங்கே குறித்துக் கொள்ளப்படல் வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் இவ்விசாரணையை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்காவின்
செய்தித்துறை, இந்த விசாரணையில் எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன என்பது பற்றி உண்மையில் தெளிவின்றி
இருக்கின்றன. இப்போக்கு ஒரு புறம் வளர்ச்சியடைந்து செல்கின்றது, மறுபக்கத்தில் இஸ்ரேல், கோபி அனானினால்
அமர்த்தப்பட்ட குழு அனுமதிக்கவே முடியாத ஒரு பாலஸ்தீன சார்பானதாக இருக்கிறதாக வேறு முழங்கி உள்ளது.
Washington Post பத்திரிகை ஏப்ரல் 26
இதழில், ''ஜெனினுக்கு ஒரு பக்க சார்பான குழு'' எனும் தலைப்பில் அதனது ஆசிரியத் தலையங்கத்தை வரைந்தது.
இப்பத்திரிகை, Cornelio Sommaruga என்பவரை ஒரு
இஸ்ரேலிய எதிர்பாளனாக பட்டம் சூட்டி எழுதியதாவது, ''கோணேலியோ சொமரூகா, மற்றும்
(ICRC) செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேசக் குழு, இரண்டுமே
இஸ்ரேலுக்கு ஒரு சிவப்பு கொடியாகும், இவை நன்கு புரிந்து கொள்ளக் கூடிய காரணங்களேதான். இக் குழுவின்
உண்மை நிலையையும், அதன் யதார்த்தத்தையும் பற்றி இஸ்ரேல் எடை போட்டதில் ஏதாவது ஆச்சரியப் படுவதற்கு
இருக்கிறதா? '' என அந்த ஆசிரியர் குழு அறிக்கை மேலும் தொடர்ந்தது.
அதே பத்திரிகையின் முன்பக்க அட்டை செய்தியில், இஸ்ரேலின் துணைப்படையில் உள்ளவர்களை
ஜெனினில் பேட்டி கண்டதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதில் ''இஸ்ரேலின் பாதுகாப்பு
படை (IDF) யினருக்கு எதிரான பலவிதமான அழித்தொழிப்பு
நடவடிக்கைகளால்தான் இராணுவத்தினர் திடீரென உள்ளே புகவேண்டி ஏற்பட்டது'' என எழுதியது. ஒரு உயர் அதிகாரி
குறிப்பிட்டதாக அப்பத்திரிகை மேலும் எழுதுகையில், ''ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து சுட்டுத் தள்ளுமாறும், மற்றும்
எமது வானொலி செய்தியின்படி, ஒவ்வொரு ஜன்னல்களையும் துப்பாக்கி ரவைகளால் துளைக்கும் படியும் எமக்கு உத்தரவு
கிடைத்தது.''
அவ் உயர்அதிகாரி மேலும் கூறுகையில், ''உண்மையில் துப்பாக்கிதாரிகளை குறிவைத்து
கொலை செய்யும்படியான உத்தரவு இராணுவத்தினருக்கு தரப்படவில்லை'' என்பதால் அதுதொடர்பாக தனக்கு பிரச்சனை
இருந்ததாக குறிப்பிட்டார். இருப்பினும் இஸ்ரேல் இராணுவத்தினர் எவ்வகையிலும் பின்வாங்காமல் பாலஸ்தீனர்களுடைய
பலகை வீடுகள் அடங்கிய ஒரு பகுதியை தீ மூட்டிக் கொளுத்தினர், மேலும் இவற்றிற்காக 50-கலிபர்
இயந்திர துப்பாக்கிகள், வி-24 சினைப்பர் துப்பாக்கிகள்,
Barrett சினைப்பர் துப்பாக்கிகள், Mod 3
கிரனைட் லோஞ்சர்கள், போன்ற ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன.'' எனவும் அவர் தெரிவித்தார்.
அவ் அதிகாரி, தான் இந்த கொலைத் தளத்தில் ஈடுபடவில்லை என மறுக்கிறார். ஆனால்
''நாம் வீடுகளை சுட்டுத் தள்ளினோம் என்பதுதான் உண்மை, ஆனால் எத்தனை அப்பாவி மக்கள் இதில் கொல்லப்பட்டார்கள்
என்பது கடவுளுக்குத்தான் தெரியும்'' என அவர் மேலும் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
பொது மக்களை அம் முகாமில் இருந்து வெளியேற்ற இராணுவம் சகல முயற்சிகளையும் மேற்
கொண்டதாக இஸ்ரேல் அரசாங்கம் கூறிக்கொள்ளும் கருத்தில் அவ் அதிகாரி முரண்பட்டுக் கொள்கிறார்.
''பொதுமக்கள் அவ் இடத்தை விட்டு வெளியேறுவதற்கான மார்க்கம் உண்மையில் அங்கு இருக்கவில்லை.'' என அவர்
குறிப்பிட்டதுடன், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF)
புள்டோசரால் வீடுகளை உடைத்த பின்னர் அவற்றை பெரிய அளவில் நசுக்கி தரை மட்டமாக்கினர் எனவும் அவர் அறிந்து
கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
அப்பத்திரிகை இவரையும், வேறு ஒரு அதிகாரியையும் பேட்டி கண்டதில், துப்பாக்கி பிரயோகிகளை
வீடுவீடாக இஸ்ரேல் இராணுவம் தேடுகிறது என்பதை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அறிவிக்குமாறு பாலஸ்தீன மக்கள்
நெருக்கப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது.
அமெரிக்க அரசியல் கொள்கையையும், அத்துடன் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலுடைய
அழித்தொழிப்புகளை இறுக்கமாக பற்றிக் கொள்ளும் செய்தி நிறுவனங்கள், மூன்று வருடங்களுக்கு முன்னர் சேர்பியாவுக்கு
எதிரான யுத்தத்தில் பரந்துபட்ட மக்களின் அபிப்பிராயங்களை ஒரு பெரியளவிலும், நாடகபாணியிலும் பெற்றுக் கொள்ள
முயற்சித்த நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிடுவது ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அந் நேரத்தில் இடம்
பெற்ற ஒவ்வொரு சம்பவங்களின் அர்த்தத்தையும், அல்லது வதந்திகளையும், கொலை செய்வது, கற்பழிப்பது அல்லது
கொசொவோ அல்பானியர்களை விரட்டியது போன்ற சம்பவங்களை, இவற்றை ஏதோ மிகவும் மலிவான வியாபார
கொடுக்கல் வாங்கல்களைப் போன்றே இந்த செய்தித் துறைகளும், தொலைக் காட்சிகளும் கையாண்ட முறையானது இப்பயங்கரவாத
சம்பவங்களை நிரூபிக்க போதுமான அத்தாட்சிகளை கொண்டிருக்கின்றன என கூறின. மிலோசவிக் தொடர்ச்சியாக சேர்பியாவின்
ஒரு கிட்லராக பிரகடனப்படுத்தப்பட்டு வந்தார்.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் பயங்கரவாதத்துடன் இந்த கொசொவோவில்
இடம் பெற்ற மிலோசவிக்குடைய அடக்கு முறையை ஒப்பிடுகையில் அது மிகவும் மங்கலாகவே தெரிகிறது. அமெரிக்க
ஏகாதிபத்தியம், அதனுடைய பூகோள ரீதியான நலன்களுக்கு சேர்பிய அரசாங்கம் ஒரு தடையாக இருப்பதாக கருதியது,
எனவேதான் இராணுவ நடவடிக்கையினூடு அது தகர்த்தெறியப்பட்டது. இஸ்ரேல், இது மறுபக்கத்தில், வாஷிங்டனின்
மூலோபாய கூட்டுக்களை, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் கொண்டுள்ளதால், அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலுடைய
குற்றங்களை எல்லாம் மூடி மறைத்து, ஷரோனை ''அமைதியின் காவலன்'' என்கிறது. மிலோசெவிக் அமெரிக்காவால்,
யுத்த குற்றங்களுக்கான ஹக் (Hague) நீதிமன்றத்தில் இருத்தப்பட்டுள்ள
அதே வேளையில், அதனது ஊதுகுழல் பத்திரிகைத் துறையானது, அரபாத்தையும், பாலஸ்தீனர்களையுமே இக் குற்றங்களுக்கு
பொறுப்பானவர்கள் என்கிறது.
See Also :
பாலஸ்தீனிய தற்கொலை குண்டு
வெடிப்புக்கள்: உலக சோசலிச வலை தளத்திற்கு வந்த கடிதங்களும் ஆசிரியர் குழுவின் பதிலும்
இனப் படுகொலையின் நிகழ்ச்சிப்
பட்டியல்: ஷரோனும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்கள் மேல் எப்படித் தாக்குதலைத் தயார் செய்தனர்
ஜெனின் நகரத்தில் இஸ்ரேலிய
படுகொலை
|