WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா
Pressure builds on Jakarta to toe the line on Bush's "war on terrorism"
புஷ்ஷினுடைய "பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு" அடி பணியுமாறு ஜக்காட்டா மேல்
அழுத்தம் கொடுக்கப்படுகிறது
By John Roberts
6 March 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
சிங்கப்பூரிலுள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்தைய கட்டிடங்களை தாக்குவற்கான ஓர் சதி
என கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் புஷ் நிர்வாகத்தினுடைய "பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போர்" இல் ஓர்
தீவீரபங்கு வகிக்க வேண்டுமென இந்தோனேசியா மேல் அழுத்தத்தை கொடுக்கிறது. இப் பிரச்சனை ஏற்கனவே
சிங்கப்பூரிற்கும் ஜக்காட்டாவிற்கும் இடையில் வெளிப்படையான ஆத்திரமூட்டல்களை உருவாக்கியுள்ளது. இச் சம்பவங்களின்
பின், இந்தோனேசியா இத்திட்டத்துடன் தொடர்புபட்ட இரு இஸ்லாமிய மத குருமாரை கைது செய்ய வேண்டும் என
வாஷிங்டன் வற்புறுத்துகின்றது.
டிசம்பரில் சிங்கப்பூர் அதிகாரிகள் 15 பேரை கைது செய்துடன், அமெரிக்கா அத்துடன்
தீவிலுள்ள வேறு குறி வைக்கப்பட்ட இடங்களையும் தாக்குவற்கான திட்டம் இவர்களிடம் இருந்ததாக குற்றம்
சாட்டியதுடன் Jemaah Islamiah என்ற அமைப்பின்
மூலமாக ஒசாமா பின் லேடன் இன் அல் கொய்தாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறினர். கைது செய்யப்பட்டவர்களில்
இருவர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மற்றவர்கள் உள்ளூர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் விசாரணை
இல்லாமல் நீண்ட காலத்திற்கு காவலில் வைத்திருக்கலாம்.
காவலில் வைக்கப்பட்டவர்கள் வெடி வைப்பதகும், தாக்குவதற்கானதுமான வழிவகைகள்
வைத்திருந்ததாக பொலிசார் கோரியிருந்தனர். ஆனால் உள்ளூர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எத்தவொரு ஆதாரங்களுமே
வெளியிடப்படவில்லை. கைதிகளை குறுக்கு விசாரனை செய்ததன் அடிப்படையிலே சிங்கப்பூர் அரசாங்கம் இரு இந்தோனேசிய
மத குருமார் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம் சுமத்தியுள்ளனர். கம்பாலி (Hambali)
என தெரிந்த Riudan Isamuddin இந்
நடவடிக்கைகளுக்கு திட்டம் தீட்டிய தலைவர் எனவும்
Jemaah Islamiah இற்கு பின்னால் உள்ள சிந்தனையாளரான அபு பாக்கர் (Abu
Bakar) சவுதி அரேபிய பண உதவி மூலமாக இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை இப் பிராந்தியத்தில்
ஊக்குவிப்பதற்கு பொறுப்பாகவுள்ளார் என குற்றம் சாட்டினர்.
மலேசியாவின் அரசாங்கம் உள்ளூர் பாதுகாப்பு சட்டத்தினை ஒத்து சட்டத்தின் கீழ் தனது
சொந்த அரசியல் போட்டியாளனான Parti Islam
se-Malaysia இனை மறைமுகமான குற்றச்சாட்டின் கீழ் துன்புறுத்துவதற்காக ''பயங்கரவாத
ஐயுறவுவாதிகள்'' என கைதுசெய்துள்ளது. சிங்கப்பூரின் கைதினைத் தொடர்ந்து மலேசிய அரசாங்கம் தனது
குற்றச்சாட்டை மாற்றி தான் தடுத்துவைத்திருக்கும் 47 பேரில் 22பேர், மலேசிய குழுவான
Kumpulan Mujahhidin Malaysia (KMM) உடன்
அல்லாது, அபு பாக்கருடனும், Jemaah Islamiah
உடனும் தொடர்புள்ளவர்கள் என கூறியது. ஆனால் மீண்டும் சாட்சியங்கள் எதுவும் வெளிபபடுத்தப்படவில்லை.
மத்திய ஜாவாவிலுள்ள சமய கல்விக் கூடத்தின் தலைவரான அபு பாக்கரை இந்தோனேசிய
அதிகாரிகள் விசாரித்து விடுதலை செய்ததுடன் இங்கே தண்டனை விதிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என
கூறினர். 1999 இருந்து Hambali உடனோ அல்லது
Jemaah Islamiah உடனோ எந்தவொரு தொடர்பும்
தனக்கு இல்லையென அபு பக்கர் மறுத்துள்ளார். பொலிஸ் அதிகாரிகள்
Hamboli யின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என கூறினார்கள்.
Time பத்திரிகைக்கான பேட்டியில் அபு பக்கர் கருத்து தெரிவிக்கையில்:
"அங்கே எந்த விதமான திட்டமும் இருக்கவில்லை என நான் நம்புகிறேன் (சிங்கப்பூரில் குண்டு வைப்பதற்கான அறிகுறிகள்)
என தெரிவித்தார்.
செப்டம்பர் 11 இல் இருந்து இந்தோனேசிய ஜனாதிபதி மேகாவதி சுகார்னோ புத்திரி
(Megawati Sukarno putri) மறைமுகமாக புஷ்
நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போரிற்கு" உதவி புரிவதுடன் உலகிலேயே அதிகூடிய முஸ்லீம்களை கொண்ட
நாட்டில் எதிர்ப்பினையும் சம்பாதித்துள்ளார். உடைந்து பொறியக் கூடிய கூட்டு ஆட்சியிலுள்ள மேகாவதி தங்கியுள்ள பல
வலதுசாரி இஸ்லாமிய கட்சிகள் ஆப்கானிஸ்தானுக்கு மேலான போர் சம்பந்தமாக அதிருப்தியடைந்திருந்தனர். தற்பொழுது
வாஷிங்டன் தென்கிழக்கு ஆசியாவை குறிவைக்க தொடங்கியதுடன் குறிப்பாக இந்தோனேசியாவில் பதட்ட நிலையை
அதிகரித்துள்ளது.
புஷ் நிர்வாகத்திற்கான வெளிப்படையான உதவி அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
உருவாக்குவது மட்டுமல்லாமல் தனது அரசாங்கத்தையும் கூட பாதிக்குமென மேகாவதி பீதியடைந்துள்ளார். வறுமைமிக்க
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு அங்கே பகைமை மட்டுமல்ல
IMF ஆலும் வாஷிங்டனாலும் திணிக்கப்பட்ட பொருளாதார
சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட வேலையில்லா திண்டாட்டத்தாலும், வறுமையாலும் பரந்தளவு ஆத்திரமடைந்துள்ளனர்.
கடத்த மாதம் சிங்கப்பூரின் வயதான அரச தலைவரான
Lee Kuan yew, இந்தோனேசியாவிற்கு வழங்கப்பட்ட
துப்பறிவு தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத்தவறியதும், "பயங்கரவாதிகளை" தொடர்ந்தும் பாரிய மட்டத்தில்
செயற்படுவதற்கு அனுமதித்துள்ளது என குற்றம் சாட்டியமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு எண்ணெய் விட்ட
நிலையை உருவாக்கியுள்ளது. Lee னுடைய குறிப்புகளுக்கு
ஜக்காட்டா உடனடியாகவும் நிதானமான பதிலை வெளிநாட்டு மந்திரி
Hassan Wirayuda விபரிக்கையில் இக் கருத்துகள் ஆத்திரமூட்டுவதும் நிரூபிக்க முடியாததும் என குறிப்பிட்டார்.
சிங்கப்பூரிலுள்ள இந்தோனேசிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சகத்திடம் பெப்பிரவரி
21 ம் திகதி கடிதம் ஒன்றை
Lee இடம் கைளித்து, அவரது குறிப்பு தொடர்பாக தெளிவுபடுத்துமாறும்
கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் பதிலளிக்கையில் இரு இத்தோனேசிய மத குருமாருக்கிடையே தொடர்புகள்
இருந்ததாக தான் நிரூபிக்க முடியுமெனவும் 13 காவலில் உள்ளவர்ளை இந்தோனேசிய அதிகாரிகள் கேள்விகள் கேட்க
அழைப்பு விட்டுள்ளதாகவும் கூறியது. ஜக்காட்டா போலீசாரை அனுப்பிவதற்கு அனுமதித்தது. ஆனால் இதற்கு முன்னைய
பிரயாணங்களில் நீதிமன்றத்தில் நிலைநிறுத்தக் கூடிய எதுவித சாட்சிகளை காட்ட தவறியுள்ளது என குறிப்பிட்டது.
இந்தோனேசிய வெளிநாட்டு மந்திரி Hassan இது தொடர்பாக
குறிப்பிடுகையில் ''பிரச்சனை என்னவென்றால் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அதிகாரத்துவப்போக்கே எனவும், தனியே
சந்தேகம் என்ற ரீதியில் இத்தோனேசியாவில் கைது செய்ய முடியாது என்பதை அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை''
என குறிப்பிட்டார்.
பெப்பிரவரி 26, கிட்டத்தட்ட 500 பேர் அளவில் ஜக்காட்டாவிலுள்ள சிங்கப்பூர் துாதுவரகத்திற்கு
முன்னால் Lee உடைய குறிப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்ட
ஊர்வலத்தை நடாத்தினர். அக்கூட்டமானது இஸ்லாமிய குழுக்களையும் சீன எதிர்ப்பு தன்மைகளை கொண்டிருந்ததுடன்,
1990 இன் இறுதியில் சீன எதிர்ப்பு வன்முறைகளால் இந்தோனேசியாவிலுருந்து வெளியேறிய வியாபாரிகள் ''பயங்கரவாதிகளுக்கு''
அடைக்கலம் வழங்குவதாக குற்றம்சாட்டியது. அபு பாக்கர்
Lee இற்கு எதிராக அவதூறு செய்ததற்கான வழக்கு தொடரவேண்டும்
எனக் கூறி அவ்விடயத்தை இன்னும் தூண்டிவிட்டார்.
வாஷிங்டனுக்கு சார்பாக கூட்டு சேருதல்
இந்தோனேசியாவும் சிங்கப்பூரும் இனக்கலவர உணர்வுகளை ஒருவருக்கொருவர் துாண்டித்தாக்குவதில்
மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். ஜக்காட்டாவின் சார்பில் சீன விரோதம், சிங்கப்பூரின் பகுதியில் முஸ்லீம் எதிர்ப்பு
வாதம். ஆனால் ஜக்காட்டா மேல் பயங்கரவாதத்திற்கு "மென்மை" யாக இருப்பதான
Lee இன் வெளிப்படையான தாக்குதல் உள்நாட்டு பார்வையாளர்களை
விட வாஷிங்டனுக்கு சார்பாக இருப்பதை நோக்கமாக கொண்டதாகும். மற்றைய நாடுகளான மலேசியா அத்துடன்
அவுஸ்திரேலியா உட்பட சப்தமற்ற முறையில் "கடினமான நிலைப்பாட்டை" எடுக்குமாறு ஜக்காட்டாவை தூண்டியுள்ளார்கள்.
பெப்பிரவரி 27ல், அவுஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி
Robert Hill சிங்கப்பூரில் நடந்த 2002 ஆசிய வான்வெளி
மாநாட்டில் பேசும்போது "இந்தோனேசியாவிற்குள் பயங்கரவாத குழுக்கள் கூடுவதை எதிர்த்து போராட மிகவும் பயனளிக்க
கூடிய முறையில் இதுவரை செய்வதை விட இத்தோனேசிய அரசாங்கம் முயல நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம் என
கோரிக்கை விட்டார். Hill இனுடைய கருத்துக்கள் பிரதம
மந்திரி John Howard இம்மாத தொடக்கத்தில்
ஜக்காட்டாவில் கூறியதை மீள் பிரதிபலித்துடன் மேகாவதி அரசாங்கத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான
ஒத்துழைப்பிற்கும் கைச்சாத்திட்டனர்.
மலேசிய பிரதம மந்திரி Mahathir
Mohamed பிரத்தியோகமாக மேகாவதியை அமெரிக்காவின் கோரிக்கையான கடினமான நடவடிக்கைகளுக்கு
ஒத்துக்கொள்ளுமாறு தூண்டினார். பெப்பிரவரி 20ல், ஜக்காட்டாவும் கோலாலம்பூரும், அவுஸ்திரேலியா
செய்த ஓர் ஒப்பந்தம் போல சம்பிரயாயத்திற்கு செய்துகொண்டனர்.
இவ் உடன்பாடுகள் இராஜதந்திர அழுத்தத்தை குறைக்க உதவும் என மேகவதி சந்தேகத்திற்கிடமில்லாது
நம்புகின்றார், ஆனால் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் குறைவதாக தெரியவில்லை.
புஷ் நிர்வாகம் வெளிப்படையாக ஜக்காட்டா மேல் விமர்சனத்தை வைக்காமல் விட்ட
போதிலும், அமெரிக்க தொடர்பு சாதனங்கள், பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகள் மேகாவதியினுடைய "நடவடிக்கையின்மை"
யுடன் அதிருப்தியை தெரிவித்து குரல் கொடுத்த பல முக்கியமான கட்டுரைகளை வெளியிட்டன.
Time பத்திரிகை "பயங்கரவாதிகளின் தளம்" என்ற அறிக்கையில்
தென்கிழக்கு ஆசியாவில் மலேசியா, சிங்கப்பூர், மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை தொடர்புபடுத்தி பல விபரங்களை
வெளியிட்டதுடன் Abu Bakar, மற்றும்
Hambali சம்பந்தமான மிகுதியாகவுள்ள நிரூபிக்க முடியாத
உண்மைகளையும் குறிப்பிட்டது.
அரசியல் அழுத்தம்போல, இந்தோனேசியா பொருளாதார திட்டங்களின் அபாயத்திற்கும்
முகம் கொடுக்க வேண்டியுள்ளது. Far Eastern Economic
Review கடந்த வெளியீட்டில் "நிலைமையை
நீண்ட காலத்திற்கு இழுத்தடித்தால், ஜக்காட்டா தனிமைப்படுத்தப்படலாம். பாதுகாப்புச் சட்டம் (Safe
Harbour bill) காங்கிரசிற்கு முன்னாலும், மற்றும் அண்மையில் விஸ்தரித்த பன்நாட்டு நிதி செயல்
குழுவின் உத்தரவு இரண்டுமே பொருளாதார அத்துடன் பிரயாணத் தடைகளை விதிப்பதற்குமான உறுதி மொழிகளை கூறியுள்ளன.
ஆனால் நாடு அதனுடன் ஒத்துப்போவதாக இல்லை'' என குறிப்பிட்டது.
வாஷிங்டனுடைய திட்டங்களை குறிப்பிட்டுக் காட்டுகையில், அமெரிக்காவின்
CIA அதிகாரியான
George Tenet இந்தோனேசியாவை பெயர் பட்டியலில் சேர்த்ததுடன் சோமாலியா, யேமன்,
பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு கவனத்தில் கொண்டுள்ளது என்றார். அமெரிக்க
விசேட படைகள் ஏற்கனவே பிலிப்பைன்சில் வெளித்தோற்றத்திற்கு உள்ளூர் சிப்பாய்களுக்கு "அறிவுரைப்பவர்" போல
பாசிலியனின் அபு சயாவ் குழுவினருக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பெப்பிரவரி 13 ல் New York
Times ஓர் கட்டுரையில் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" புதிய குறிகளுக்கான சாத்தியக்
கூறுகள்" என கருத்துத் தெரிவிக்கையில்: "இப் போர் ஈராக்கை மையப்படுத்தும், ஆனால் இது மட்டும் தனியே பயங்கரவாதத்திற்கு
எதிரான நடவடிக்கையாக இருக்காது." அப் பத்திரிகை மேலும் குறிப்பிடுகையில் பிலிப்பைன்ஸ், யேமன், மற்றும் சூடான்
உட்பட புஷ் இன் அலுவலகர்கள் பிலிப்பைன்ஸ் எப்படி படைகளை ஏற்றுக்கொண்டதோ அதேபோல இந்தோனேசியாவை
"கேட்பதற்கு" கருத்தில் கொண்டுள்ளார்கள் என்றது.
1999 ல் கிழக்கு தீமோர் சார்பான போராளிகளை பலவந்தமாக தாக்குவதற்கு
ஒழுங்குபடுத்தியதற்கு இந்தோனேசிய இராணுவம் சம்பந்தப்பட்ட பின்னர், தற்பொழுது அமெரிக்க இராணுவம் வெளிப்படையாக
இந்தோனேசிய இராணுவத்துடன் ஒத்துழைப்பதற்கு காங்கிரஸ் தடைவிதித்துள்ளது. நெருங்கிய அமெரிக்க-இந்தோனேசிய
இராணுவத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட சட்டத்தை விலக்குவதற்கு புஷ் நிர்வாகம் வற்புறுத்தியபடியே
உள்ளது. கடந்த வருடம் காங்கிரஸ் தடையை தளர்த்தி இந்தோனேசிய அதிகாரிகளை அமெரிக்காவில் பயிற்றுவிப்பதற்கு
அனுமதித்துள்ளது. பத்திரிகைகளின் அறிக்கையின்படி, பென்டகன் தனது விசேட $21மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அனைத்தையும்
அல்லது கூடியவற்றையோ இந்தோனேசிய இராணுவத்ததை பலப்படுத்துவதற்கு பாவிக்க ஆவலாகவுள்ளது.
ஆப்கானிஸ்த்தான் நடவடிக்கைபோல, இந்தோனேசியாவில் இராணுவ ஈடுபாட்டிற்கான
புஷ் நிர்வாகத்தினுடைய அபிலாசைகள் பயங்கரவாதத்தின்
அபாயம் தொடர்பானதல்ல. அமெரிக்கா எப்பொழுதுமே இத்தோனேசியாவில் முக்கிய மூலோபாய மற்றும்
பொருளாதார நலன்களை பேணிப்பாதுகாத்துள்ளது. இந் நலன்கள் கடற் பாதையின் திறவு கோலாக இருப்பதுடன்
மலிவான கூலி உழைப்பால் கணிசமான அளவு பொருளாதார முக்கியத்துவமும், எண்ணெய் வளம் உட்பட கனிப்பொருட்கள்
நிறைந்ததுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதார முன்னுரிமைகளுக்கு தடையாக வருவதற்கு முன்னர், வாஷிங்டன்
மூன்று சகாப்தங்களுக்கு மேலாக கொடூரமான சுகாட்டோவின் சர்வாதிகாரத்திற்றகு உதவியளித்தது. 1998ல்
சுகாட்டோ இராணுவ ஆட்சியின் பொறிவிற்கு பின்னர் ஜக்காட்டாவில் ஸ்திரமற்ற நிர்வாகத்தை தொடர்வதற்கு வழி வகுத்தது.
இவ் உறுதியற்ற அரசியல் நிலைமையில், புஷ் நிர்வாகம் இந்தோனேசிய இராணுவத்துடன் மீண்டும் பழைய தொடர்புகளை
ஏற்படுத்துவதற்கு ஆவலாகவுள்ளது.
ஆனால் அங்கே அமெரிக்கா, தென் கிழக்காசியா முழுவதும் கவனம் செலுத்துவதின் பின்னணியில்
பரந்த நோக்கங்கள் உண்டு. சீனாவை "மூலோபாய போட்டியாளர்" என நோக்கும் புஷ்ஷினுடைய தோரணை, இவருடைய
நிர்வாகம் வட கிழக்காசியாவில் கூட்டையும், இந்திய உபகண்டத்தையும், புது உறவுகளையும், மத்திய ஆசியாவில் இராணுவத்
தளத்தையும் பலப்படுத்த சுறுசுறுப்புடன் இயங்குகிறது. தெற் கிழக்காசியா மூலோபாய வடிவத்திற்கு ஓர் முக்கிய பாதையின்
திறவு கோல். அது சீனாவை சுற்றி வளைப்பதன் நோக்கத்தை கொண்டதாகும். மத்திய ஆசியாவைப் போல, இப்
பிராந்தியத்திலும் கூட முக்கியமான எண்ணெய் வளங்கள், எரி பொருள்வாயு போன்ற வளங்கள் குறிப்பாக தென் கிழக்கு
ஆசியாவிலுள்ள சச்சரவுக்குட்பட்ட Spratly தீவுகளில் உள்ளது.
இந்தோனேசியா மீதான புஷ் நிர்வாகத்தின் கடும்போக்கான நடவடிக்கையின் அரசியல்
அபாயம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. Far Eastern
Economic Review கடந்த ஜனவரியில் '''இப்பிராந்தியத்தின் உடையக்கூடிய நிர்வாகத்தையும்
மத, இன உணர்வுகளையும் குழப்பாது இப்பிராந்தியத்திலுள்ள பயங்கரவாத்தை முடிவிற்கு கொண்டுவர அமெரிக்கா
கொண்டிருக்கும் பொறுமையின்மை தொடர்பாக பயம் உள்ளது'' என குறிப்பிட்டது.
முன்னாள் தேசிய பாதுகாப்பு அறிவுரைத்தலைவரும், தற்பொழுது புஷ் நிர்வாகத்தின்
சார்பாக அமெரிக்காவின் உளவு சேவையை மீளாய்வு செய்யும் Brent
Scowcroft என்பவர், இந்தோனேசியாவிற்கு உதவிக்கு அழைக்கையில் "அது தனியே ஓர் நாடு" என
விபரித்தார். அவர் வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கையில் தற்போதைய நிலைமையில் மேகாவதிக்கு அழுத்தத்தை
கொடுப்பது சில பிளவுகளையோ அல்லது நாட்டில் உடைவுகளையோ" உருவாக்கும் என்றார்.
எவ்வாறிருப்பினும் புஷ் இந்த எச்சரிக்கைளை கவனத்தில் கொள்ளவது என்பது கூடுதலாக
நடக்க கூடியதல்ல. மற்றைய எல்லா இடங்களையும் போலவே இதில் உள்ளடங்கியுள்ள பயங்கரமான விளைவுகளை கருத்திற்கொள்ளாது
புஷ் நிர்வாகம் மூர்க்கத்தனமான முறையில் தனது திட்டங்களை கொடூரமான தொடர்கிறது.
|