World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Hundreds attend funeral of Sri Lankan Trotskyist

இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்ட்டின் இறுதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் சமூகமளித்தனர்.

By Sarath Kumara
8 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

மார்ச் 3, கொழும்பின் புறநகர் பகுதியான Dehiwala-Mount Lavinia இல் உள்ள பொது மயானத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி அங்கத்தவரான சபாரட்ணம் இராசேந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வில் 300 இற்கும் அதிகமான கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் -தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒருமித்து- கலந்து கொண்டார்கள்.

இராசேந்திரன் உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் அங்கத்தவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமாவார். அவர் தனது 54 வது வயதில் இலங்கையின் வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலையில் மாசி 27 அன்று நிமோனியா மற்றும் நுரையீரல் செப்ரிசீமியா நோயினால் காலமானார். 1973 இல் பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்துகொண்ட அவர் அதன் முன்னோக்கிற்காக துணிகரமாகவும் திடசங்கற்பத்துடனும் இளமை பருவத்திலிருந்து போராடி வந்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களிடம் வந்திருந்த பல அனுதாப செய்திகளில் சிலவற்றை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் வாசித்திருந்தார் அவற்றில், உலக சோசலிச வலைத்தளத்தின் தலைவர் டேவிட் நோர்த்தின் செய்தியானது, இராசேந்திரனின் திடீர் மறைவிற்கு தங்களுடைய வருத்தத்தையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்கான அவரின் போராட்டத்தின் கொள்கைகளுக்கு தங்களுடைய மரியாதையையும் தெரிவித்திருந்தார்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் மூன்று தசாப்தங்களாக தன்னை அர்ப்பணித்திருந்த இராசேந்திரனது இறுதி மரியாதை நிகழ்வில், 1970 களின் ஆரம்பத்தில் உள்ள அரசியல் நெருக்கடி காலப்பகுதியில் இராசேந்திரன் ஒரு இளம் தமிழ் மாணவனாக சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்துகொண்டார் என டயஸ் சுட்டிக்காட்டினார். யுத்தத்திற்கு பின்னரான பொருளாதார ஒழுங்கு முறையின் உடைவின் ஆரம்பத்தில் வர்க்கப் போராட்டமானது உலகிலுள்ள பல நாடுகளில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் புரட்சிகர சோசலிச முன்னோக்கின் பற்றாக்குறைவினால், இந்த போராட்டங்கள் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக வாத, மாவோவாத மற்றும் காஸ்ரோயிசத்தில் அடித்தளமிட்டிருந்த குட்டி முதலாளித்துவ இயக்கங்களால் ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில், 1964 ல் லங்கா சம சமாஜக் கட்சியானது ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை காட்டிக்கொடுத்ததுடன் பண்டாரநாயக்க அம்மையாரால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் தன்னை நுழைத்துக் கொண்டமையானது, தெற்கில் சிங்கள சோவினிச மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தோற்றத்திற்கும் வடக்கில் தனித் தமிழ் அரசை ஆதரிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினது இனவாத போக்குகள் தோன்றுவதற்கும் வழிவகுத்தது என டயஸ் தெளிவுபடுத்தினார்.

''இராசேந்திரன் தீவிர நெருக்கடிகளுக்கு வரட்டுத்தனமான தீர்வை ஏற்றுக்கொண்டு வெளிப்படுத்துவதை நிராகரிப்பவர். அவர் இதற்கு பதிலாக இந்த தீவிர நெருக்கடிகளின் வரலாற்று மூல வேர்களை ஆழ்ந்து ஆராய்வதில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்'' என டயஸ் கூறினார். இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை தமிழ் தேசிய இனம் போன்ற சிறுபான்மை தேசிய இனங்களும் மற்றும் ஒடுக்கப்படுகின்ற மக்களும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளின் தீர்வினை வழங்கும் வழிகாட்டியாக லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடுதான் என்ற முடிவிற்கு வந்தடைந்ததும் வேறுபட்ட சோசலிச போக்குகளின் வேலைத்திட்டங்களை கற்றுக்கொண்டதும் அவரை மார்க்சிசத்தின் விஞ்ஞான அணுகு முறைக்கு இட்டுச்சென்றது. இந்த அடிப்படையே இராசேந்திரனை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்து கொள்ள வழிவகுத்தது.

''இராசேந்திரன் எதற்காக போராடினாரோ அந்த முன்னோக்கின் வரலாற்று பெறுமதியானது என்றுமில்லாதவாறு தற்போதைய நிலைமையில், இந்திய உபகண்டத்தில் வகுப்புவாத முரண்பாடுகளினால் ஏற்படும் அழிவுளாலும் ஏகாதிபத்தியத்தின் மூன்றாவது யுத்த சூழ் நிலைகளுக்கான ஆரம்பத்தாலும் மிக தெளிவாகக்கப்பட்டிருக்கிறது'' என சோசலிச சமத்துவக் கட்சியின் பொது செயலாளர் கூறினார்.

இராசேந்திரன் கடந்த மூன்று தசாப்தங்களில் பாரிய இயக்கங்களென கூறப்பட்ட - லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), ஸ்ராலினிச கம்யூனிச கட்சி மற்றும் தேசிய குழுக்கள் ஆகியனவற்றின் தோற்றத்தையும் அதன் வீழ்ச்சியையும் கண்டார். அவர் எப்படி JVP, பழைய தலமைகளின் காட்டிக்கொடுப்பிற்கு ஒரு மாற்றீடான சோசலிச இயக்கமென அது தன்னை வெளிப்படுத்தியிருந்ததுடன், 1987-89 காலங்களில் ஒரு பாசிச இயக்கமாக சீரழிந்து சென்றதையும் கண்டுகொண்டார்.

அதே காலப்பகுதியில், தமிழர்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறிய LTTE உட்பட தமிழ் குழுக்களானது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய இராணுவத்தை தீவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு கொண்டுவருவதற்கு இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு அரசுகளுக்கும் உடந்தையாயிருந்தன. அத்தோடு எவ்வாறு இத் தமிழ் கட்சிகள் 1994 இல் மக்கள் முன்னணி அரசிற்கு ஆதரவளித்ததுடன் சந்திரிகா குமாரதுங்காவை அதிகாரத்திற்கும் கொண்டுவந்ததை போலவே தற்போதைய அரசிற்கும் கடந்த தேர்தலில் உதவி செய்தன. இவ் எல்லா தேசிய கட்சிகளினது கொள்கைகள், அவர்களை இனப்பாகுபாடின்றி சிங்களவரா அல்லது தமிழரா என்றில்லாமல் உழைக்கும் மக்களை சகிக்க முடியாத துன்பத்திற்கும் மற்றும் அழிவிற்கும் கொண்டு செல்கிறது.

சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தும் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் சரியான தன்மை மீதான இராசேந்திரனின் திட நம்பிக்கை அவருடைய அனுபவங்களால் பலப்படுத்தப்பட்டிருநத்தது. அவர் நோய்வாய்ப்பட்டிருந்தும், உலக சோசலிச வலைத்தளத்திற்கு கட்டுரைகளை தயார் செய்வதிலும் அதன் தமிழ் மொழி வலைத் தளத்திற்கு கட்டுரைகளை மொழி பெயர்ப்பதிலும் ஒரு திடமான பாத்திரத்தை வகித்து வந்தார். வைத்தியசாலையில் இருந்த பொழுதும் கூட அவர் அரசியல் அபிவிருத்திகளை அறிந்து வந்ததுடன் அவருடைய வேலைகளை தொடர்ந்து அவர் செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார்.

இராசேந்திரனுடைய தனிப்பட்ட சுபாவத்தையும் அவரின் பிரதான கடமையுணர்ச்சியையும் சோசலிச சமத்துவ கட்சியின் மத்திய குழு அங்கத்தவர் M.அரவிந்தன் நினைவு கூர்ந்தார். உலக சோசலிச வலைத்தளத்தில் சோசலிச சமத்துவ கட்சியால் பிரசுரிக்கப்பட்ட இராசேந்திரனின் மறைவு தொடர்பான அறிவித்தலின் நூற்றுக்கணக்கான பிரதிகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருந்தது. இப்பிரசுரங்கள் இராசேந்திரன் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் ஆக உருவாவவதற்கான நோக்கங்களையும் அதில் அவர் வகித்த பாத்திரத்தையும் தெளிவுபடுத்தியிருந்தது.

பரந்த அளவிலான நினைவஞ்சலி

இராசேந்திரனின் அரசியல் வேலையானது நாட்டின் பல பகுதிகளிலும் வேறுபட்ட வாழ்க்கை நிலையிலுள்ள பரந்துபட்ட மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை கொண்டிருந்தது. அவரின் மறைவிற்கும் இறுதி நிகழ்விற்குமிடையேயான ஐந்து நாட்களில், கிட்டத்தட்ட ஆயிரம் மக்கள் அவரின் இல்லத்திற்கு வருகை தந்து தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தனிப்பட்ட ரீதியில் அவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளிற்கும் தெரிவித்தனர்.

பல நூறு அஞ்சலி செலுத்துவோர், இராசேந்திரனின் உடலை தாங்கி செல்லும் வண்டியின் பின்னராக ஒரு கிலோமீற்றர் தூரம் வரை மயானத்திற்கு நடந்து சென்று இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். கட்சி தோழரால் சிவப்பு கொடி முன்னால் எடுத்து செல்லப்பட்டதுடன் ஊர்வலம் முழுவதும் சர்வதேசிய கீதம் இசைக்கப்பட்டது. பல பார்வையாளர்களும் சென்று கொண்டிருந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டு மிக ஆர்வத்துடனும் அறியும் ஆவலுடனும் அவதானித்தார்கள்.

இறுதி நிகழ்விற்கு அஞ்சலி செலுத்துவோர்கள் கொழும்பில் இருந்து மட்டும் சமூகமளிக்கவில்லை, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்தோட்ட பிரதேசங்களான ஹட்டன், பண்டாரவல, பதுளை போன்ற மத்திய மலையக பகுதிகளிலிருந்தும் அதேவேளை தூர கிராமங்களான தெற்கில் உள்ள தங்காலை மற்றும் வடமேற்கில் உள்ள உடப்பில் இருந்தும் வருகை தந்திருந்தனர். சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண எல்லை நகரான வவுனியாவில் இருந்து கடினமான பிரயாணத்தை மேற்கொண்டு வந்திருந்தார். நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குனரான தர்மசிறீ பண்டாரநாயக்கவும் தனது இறுதி மரியாதையை செலுத்துவதற்கு வந்திருந்தார்.

இராசேந்திரனுடன் பல தசாப்தங்களாக ஒரு நெருங்கிய உறவை வைத்திருந்த வடக்கிலுள்ள யாழ் நகர சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் கொழும்பிற்கு பிரயாணம் செய்ய எடுத்த முயற்சியானது பிரயாண கட்டுப்பாடுகளினால் தடுக்கப்பட்டிருந்தது.

மூன்று வருடங்களிற்கு மேலாக விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்களான பொன்னையா சரவணகுமார் மற்றும் அருணாசலம் லோகேஸ்வரன் ஆகியோர் இராசேந்திரனின் இறப்பை சிறையில் உள்ளபோது தெரிந்து கொண்டனர். அவர்களிற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியால் நடாத்தப்பட்ட பிரச்சாரத்தின் விளைவாக இறுதியில் அவர்கள் இவ்வாரத்தில் விடுதலை செய்யப்பட்டதுடன் தங்களது அனுதாப செய்தியை கட்சிக்கும் அவரது குடும்பத்திற்கும் உடனடியாக அனுப்பி வைத்தனர்.

இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலர் இராசேந்திரனின் இறப்பிற்கு கவலையை தெரிவித்தது மட்டுமல்லாமல் அவரின் சுய தியாகத்தையும் உறுதி தன்மையையும் குறிப்பிட்டார்கள். உள்நாட்டு வருமானவரி திணைக்களத்தின் பழைய சக தொழிலாளி குறிப்பிட்டதாவது; ''இராசேந்திரன் தனது அரசியல் பார்வையில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். ஆரம்பத்தில் இருந்து அவர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்த்ததுடன் அரசியல் வேலைத்திட்ட விடயங்களை அங்கத்தவர்களுக்கு விளங்கப்படுத்தினார்.

அஞ்சலிப் புத்தகத்தில் பலர் கையொப்பமிட்டனர். ''இராசேந்திரனின் நினைவு, அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் ஒரு புரட்சிகர நோக்கத்திற்கான ஒரு சர்வதேச ட்ரொட்ஸ்கிஸ்ட்டாக அர்ப்பணித்திருந்ததுடன், இனி வரப்போகும் போராட்டங்கள் இதை தெளிவுபடுத்துவதுடன் ஒரு உயர்ந்த ஆர்வத்தையும் வழங்கும்'' என ஒரு தொழிலாளி எழுதியிருந்தார். ''திரு. இராசேந்திரன் அளவிடமுடியாத பொறுமையும் பெரும் இரக்கமும் கொண்ட மனிதர், அவர் தனது நிலைப்பாட்டில் பற்உறுதி கொண்டவராக விளங்கினார், அவர் ஈடுபட்டிருந்த போக்கிற்கு அர்ப்பணித்திருந்ததுடன் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதநேய விடயங்கள் சார்பான சுபாவம் உடையவராக இருந்தார்'' என ஒரு அயலவர் குறிப்பிட்டிருந்தார். ''நான் பார்த்த மனிதர்களில் இராசேந்திரன் மாமா உயர்ந்த அன்பு மற்றும் இரக்கமுடைய ஒருவராக இருந்தார். அவர் அசையாத நம்பிக்கையையும் அதிக உறுதியுடையவராகவும் இருந்தார், '' என ஒரு இளைஞர் எழுதியிருந்தார்.

இராசேந்திரனின் குடும்பமானது ஒரு இந்து மத பின்னணியை கொண்டிருந்தும் கூட, அங்கே எந்த விதமான மத சடங்குகளும் நடைபெறவில்லை. சோசலிச சமத்துவ கட்சி இறுதி நிகழ்வு ஏற்பாடுகளில் அவர்களுடைய ஒத்துழைப்பிற்காக, குறிப்பாக அவருடைய துணைவியார் ஜானகிக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்றி தெரிவித்தது. இந்து வழக்கப்படி இறந்த ஒரு மனிதனின் மனைவியும் ஏனைய பெண்களும் மயானத்திற்கு செல்லக்கூடாதென வலியுறுத்தி இருந்த போதிலும் ஜானகி அதில் பங்கு பற்றினார். அவர் கட்சி அங்கத்தவருக்கு கூறியதாவது; ''நான் மயானத்திற்கு வருவேன். இராசேந்திரன் போராடிய கொள்கைகளின் சரியான தன்மை என்னை முழுமையாக நம்பவைக்கின்றது.''

இலங்கையில் இராசேந்திரன் நன்றாக அறியப்பட்டிருந்தார். பிரதான இரு தமிழ் பத்திரிகைகளான, வீரகேசரி மற்றும் தினக்குரல், பிரபல்யமான தமிழ் வானொலி நிலையமான சூரியன் FM உம் அவரின் இறப்பை அறிவித்தன. மொழி பெயர்ப்பாளராகவும் பத்திரிகை நிருபராகவும் தேர்ச்சியுடயவர் என்றும் அதேவேளை கட்சியில் அவரது ஈடுபாட்டைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தன, சோசலிச சமத்துவ கட்சியின் பொது செயலாளர் விஜே டயஸ் இராசேந்திரனின் இறப்பானது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும் ஒரு மிகப் பெரிய இழப்பு என்று கூறியதை அறிக்கைகள் சுட்டிக்காட்டின. இராசேந்திரன் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை வளர்ப்பதற்கு ஒரு ட்ரொட்ஸ்கிச போராளியாக தன்னை அர்ப்பணித்திருந்ததாக தினக்குரல் மற்றும் சூரியன் தமது இரங்கல் செய்தியில் சேர்த்திருந்தது.