ஐரோப்பா
Summit in Barcelona: Silence over US war
plans against Iraq
பார்செலோனாவில் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு: ஈராக்குக்கு
எதிரான ஐக்கிய அமெரிக்காவின் யுத்தத் திட்டத்தின் மீதான மெளனம்
By Peter Schwarz
25 March 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களின் அரையாண்டு உச்சி மாநாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின்
அபிவிருத்தியினை வரையறை செய்வதில் மைல்கல்களாக கருதப்படுகின்றன. பல எண்ணிக்கையிலான அமைப்புகள் மற்றும்
பிரமாண்டமான இயந்திரங்களை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருந்தபோதும், இறுதி முடிவெடுப்பது அரசாங்கங்களுடன்
தொடர்புபட்டிருக்கும் 15 அங்கத்துவ அரசுகள்தான். இந்த உச்சிமாநாடுகளில் மட்டும்தான் தீர்க்ககரமான அரசியல்
தீர்மானங்களை உருவாக்க கூடியதாக இருக்கின்றது.
இப்படியான தீர்மானங்களுக்காக சந்தித்துக்கொள்ளும் உச்சிமாநாடுகள் இடம்பெறும்
இடங்கள் ஒரே மாதிரியானவையாக மாறியுள்ளன. ஐரோப்பிய நாணய ஒன்றியத்திற்கான நகர்வை வரையறை செய்த
1992 இன் மாஸ்ட்ரிச் மாநாடும் இதைத்தான் விளைவாக்கியதுடன், அரசியல் ஐக்கியத்திற்கான நீண்ட கால திட்டங்களையும்
கருத்தில் கொண்டது. ஏனைய மாநாடுகளைப் போல், ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திவாய்ந்த அங்கத்தவர்களான ஜேர்மன்
மற்றும் பிரான்ஸ் க்கு இடையிலான போட்டியின் விளைவாக டிசம்பர் 2000 இன் நீஸ் உச்சிமாநாடு (Nice
summit) ஐரோப்பிய ஒன்றியத்தின் முட்டுக்கட்டைக்கான ஒரு சின்னமாக வந்திருந்தது. ஏனையவைகளும்
கூட சின்ன சின்ன சர்ச்சைகளுக்கான சதுப்பு நிலமாக வந்துவிட்டதுடன், கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் புறக்கணித்துவிட்டு
உடனடியாக வெளியேறிவிடுவார்கள்.
எப்படியிருந்தபோதும்், பார்செலோனாவின் மார்ச் 15-16 கூட்டத்தினைப்போல்,
பங்குபற்றிய அங்கத்தவர்கள் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சனைகளுக்கான தெளிவான வேறுபாட்டினை கலந்துரையாடி
மற்றும் முடிவெடுத்த ஒரு ஐரோப்பிய உச்சிமாநாடு நடைபெற்று இருந்தது என்பது அரிதானதே. ஐரோப்பிய ஒன்றியத்தின்
வருங்கால முன்னோக்கு அது முக்கிய அரசியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திறமையாலும்
கணிப்பிடப்படுமானால், அது தெளிவான வகையில் ஒரு முன்னேறிய ஸ்தம்பித நிலையை அடைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
வேறு எதையும்போல் அல்லாது ஐரோப்பிய அரசியலை அண்மையில் ஆக்கிரமித்திருக்கும் கேள்வியான
ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தயார்படுத்தல்கள் பார்செலோனாவில் ஒரு முட்டுக்கட்டையாக இருந்து
வருகின்றது. உச்சிமாநாட்டினை நடாத்தும் ஸ்பானிய பிரதமர் ஐொஸ் மரியாக அன்சார்
(Jose Maria Anzar) அந்த விடயத்தினை நிகழ்ச்சிநிரலில் கொண்டுவருவதற்கான ஒவ்வொரு முயற்சியையும்
தடைசெய்தார். பெல்ஜிய பிரதமர் Guy Verhofstadt
ஒரு உத்தியோகபூர்வ உணவு விருந்தில் இந்தக் கேள்வியை எழுப்ப முயன்றபோது, மரியாதையுடன் ஆனால் தீர்க்கமான
முறையில் அது நிராகரிக்கப்பட்டது. ஒரு பக்கத்தில் லண்டனுக்கும் புறுசலுக்கும்
(Brussels) மற்றும் இன்னொரு பக்கத்தில் நடுநிலையில்
இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்களுக்கும் இடையிலான இணைக்க முடியாத இடைவெளியானது உச்சிமாநாட்டினை
உடைவுக்கு இட்டுச் செல்லலாம் என அன்சார் அச்சமடைந்தார் என இராஐதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டிருந்தனர்.
அமெரிக்க யுத்த திட்டத்தையிட்ட ஐரோப்பிய அரசாங்ககங்களின் மனப்பான்மை அதிக
வித்தியாசமாக இருக்கமுடியாது. இதுவரை, ஈராக்குக்கு எதிரான ஒரு இராணுவ தாக்குதலுக்கு சார்பாக பிரிட்டன்
பிரதமர் டொனி பிளேர் தான் கூடிய பட்சமோ அல்லது குறைந்த பட்சமோ வெளிப்படையாக தன் அபிப்பிராயத்தை
வெளிப்படுத்தியிருக்கிறார். சாத்தியமெனில் வாஷிங்டனுடனான ஒரு வெளிப்படையான முரண்பாட்டினை தவிர்ப்பதற்கு
முயன்றபோதும், ஐரோப்பாவின் எல்லா தலைநகரங்களில் இருந்தும் தெளிவான உடன்பாடின்மைகளை கேட்கக் கூடியதாக
இருந்தது.
ஒரு புதிய வளைகுடா யுத்தமானது உலக அரசியல் மற்றும் பொருளாதார ஸ்த்திரத்தன்மைக்கான
எதிர்வுகூற முடியாத விளைவுகளுடன் -மத்திய கிழக்கு முழுவதையும் சீர்குலைத்துவிடலாம் என்ற அச்சம் பாரிஸ் மற்றும்
பேர்லினின் அரசாங்க அதிகாரிகள் மத்தியில் இருந்து வருகின்றது. யுத்தத்திற்கு பின்னரான ஆழமான மந்தநிலையை
உண்டாக்கிய 1973 இன் எண்ணை விலை அதிர்ச்சியை ஆழ்ந்த கவலையுடன் அவர்கள் ஞாபகப்படுத்துகிறார்கள்.
இன்னும் அதிகமாக நேட்டோ கூட்டு மற்றும் நிலையான நெருங்கிய தொடர்புகள்
இருந்தபோதும் புஷ் அரசாங்கம் தற்போது எதை செய்ய முயல்கிறது என்பதை ஐரோப்பிய அரசாங்கங்கள் (சாத்தியமாகின்
பிரித்தானியாவை தவிர்த்து) அறியாது இருக்கின்றன. ''அமெரிக்காவின் ஈராக் கொள்கை மற்றும் ஜேர்மன் மீதான
அதனது விளைவுகள் வரும்போது, அவர்கள் புகை மண்டலத்திற்குள் தடவிக்கொண்டு இருக்கிறார்கள். ஜனாதிபதியில்
இருந்து மிகக் கீழ்மட்டத்திலான பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் உத்தியோகபூர்வமான அறிவுடன் செயல்படுவதற்கு
மாறாக ஊகங்களுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்'' என ஐேர்மனிய தினப் பத்திரிக்கை ஒன்று அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றிய உத்தியோகஸ்த்தர் குறிப்பிட்டதுபோல், ''ஐரோப்பா
முகம்கொடுக்கும் இரண்டு உடனடி வெளிநாட்டு கொள்கைப் பிரச்சனைகளான அட்லாண்டிக்கு அப்பாலான உறவு மற்றும்
ஈராக்குக்கு எதிரான ஒரு அமெரிக்க நடவடிக்கையின் முன்னோக்கு'' பார்செலோனாவில் முட்டுக்கட்டையாக
இருந்தபோதும், உத்தியோகபூர்வ கூட்டத்தின் இடைவேளையின்போது நடைக்கூடத்தில்தான் அவர்கள் அனைவரும் எல்லாவற்றையும்
பற்றி விடாப்பிடியான முறையில் விவாதித்துக்கொண்டிருந்தனர்.
புஷ் நிர்வாகம் ஐரோப்பிய உடன்பாடின்மைகளால் தன்னை திசை திருப்பிவிடாது என்ற
கருத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மெதுவாக பழக்கப்படுத்தி வருகிறது போல் தோன்றுகிறது. ''மட்டுப்படுத்தப்பட்ட
மற்றும் சரியாக நெறிப்படுத்தப்பட்ட'' வாஷிங்கடனின் ஒரு இராணுவ தாக்குதலை ஏற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை
ஒன்று வந்துசேர்ந்துள்ளது என உச்சிமாநாட்டின் முடிவில் வதந்தி பரவியிருந்தது. அறிக்கைகளின் பிரகாரம், ''பெரியவர்கள்''
(ஐேர்மன், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன்) ஒரு பொருத்தமான உடன்பாட்டிற்கு வந்துவிட்டார்கள், அதன் பாகமாக அமெரிக்க
இராணுவ நடவடிக்கை வெற்றிகரமாகி நடந்தால், அவர்களில் ஒருவரும் யுத்தத்திற்கு எதிர்ப்பான தமது நிலைப்பாட்டை
விருப்பமில்லாமல் வாபஸ் பெற்றிருக்கவேண்டியிராது என முடிவாய் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிய நாடுகளின்
பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இது உடனடியாக மறுக்கப்பட்டது. ''இராணுவ தலையீட்டுக்கான சாத்தியத்தைப் பற்றி
நாம் கலந்துரையாடவில்லை'' என பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிறாக் குறிப்பிட்டார். ''ஒரு குறிப்பிட்ட திட்டத்தை
எடுக்கும்படி யாரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை'' என ஐனாதிபதி ஸ்ரோடர் மேலும் குறிப்பிட்டார். ''குறைந்த முக்கியத்துவம்
வாய்ந்த முறையில்'' உம், இயல்பானமுறையிலும் ஈராக் கலந்துரையாடப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் தான்
''இந்த விடயத்தில் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை'' என குறிப்பிட்ட பிரதமர் பிளேயர் குறைந்த அளவே தீர்க்கமாக
இருந்தார்.
எப்படியிருந்தபோதும், மாநாட்டிற்கு ஒரு கிழமைக்கு முன்னரே ஐக்கிய அமெரிக்காவுடன்
எந்தவொரு வெளிப்படையான உடன்பாடின்மையையும் தவிர்ப்பது அதற்கு அவசியமாக இருக்கிறது என்பதை ஜேர்மன்
அரசாங்கம் ஏற்கனவே தெளிவாக்கியிருந்தது. ஜேர்மனில் கட்சி அங்கத்தவர்களின் ஒரு கூட்டத்தில், பிரதமர் ஷ்ரோடர்
குவைத்தில் இருந்து ஜேர்மன் கவசவாகனங்களின் பின்வாங்கலை நிராகரித்ததுடன் இனிவரும் சகாப்பதங்களில் இப்படியான
ஒரு அடிவைப்பின் விளைவுகள் அமெரிக்க மற்றும் ஐேர்மானிய உறவுகளுக்கு என்ன தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதற்கு
யாரும் பதிலளித்துவிடமுடியாது என கூறினார்.
ஜேர்மனியின் Fuchs
கவசவாகனங்கள் தற்போது ஈராக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இது இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களுக்கு
எதிராக போராடுவதில் பிரேத்தியேக பயிற்சி பெற்றவையாகும். ஈராக்குக்கு எதிரான ஒரு அமெரிக்க தாக்குதல்
நடைபெறுமானால் பெரும்பாலும் அவர்களும் சுயமாகவே சண்டையில் ஈடுபடுத்தப்படலாம், இந்தவகையில் இது ஜேர்மனையும்
யுத்தத்திற்கான ஒரு ஆதரவான குழுவாய் உருவாக்கியுள்ளது.
அமெரிக்க யுத்த பொறுமையின்மையை ஆறுதல்படுத்துவதன் பாகமாக, குறிப்பாக ஐேர்மன்
வெளிநாட்டுக்கொள்கை ஐக்கியநாடு சபையை நோக்கியுள்ளது. ''இஸ்ரேல் - பாலஸ்த்தீன முரண்பாட்டிற்கு ஒரு
அரசியல் தீர்வுக்கு நிர்ப்பந்தித்த ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கியநாடு சபையின் அரசியல் முயற்சிகள் யுத்தத்தின்
அபாயத்தின் மட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாக பேர்லினில் நோக்கப்பட்டது'' என
Frankfurter Rundschau அறிக்கை
விட்டிருந்தது. இப்படியான ஒரு கருத்து, பெப்ரவரி இறுதியில் பேர்லினிக்கான கொபி அன்னானின் வருகையின் போது
ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது என பத்திரிக்கை குறிப்பிட்டிருந்தது. இது, அரசியல் முன்னெடுப்புகளுக்கான கால அவகாசத்தை
வெற்றிகொள்வதற்கான நோக்கமாக இருந்தது.
ஒரு ஐரோப்பிய தர்மசங்கட நிலை
ஈராக்குக்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புகளுக்கான ஒரு பொதுவான பதிலை
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சமாநாட்டின் அளிக்க முடியாத இயலாமை ஒரு அடிப்படையான தர்மசங்கட நிலையின் ஒரு
வெளிப்பாடாக இருக்கிறது. செப்டம்பர் 11 நிகழ்வுகள் இதுவரை ஐரோப்பிய ஐக்கியத்திற்கான 1990களின் உயரப்பறக்கும்
திட்டங்களின் அடித்தளத்தை அகற்றியுள்ளன.
பொது நாணயத்தின் அறிமுகமும் மற்றும் ''உலகின் பரந்த உள்நாட்டுச் சந்தை''யை
உருவாக்க எதிர்பார்த்து அகற்றப்பட்ட வர்த்தக தடைகளானது, ஐக்கிய அமெரிக்காவினை பொருளாதார ரீதியில்
அணுகமுடியாதது மட்டுமல்ல மாறாக முந்தவும் முடியாது போயுள்ளன. 2010 இல்
ஐரோப்பிய ஒன்றியத்தை ''உலகின் மிக
போட்டியும், ஆற்றலும் வாய்ந்த அறிவை அடிப்படையாகக் கொண்ட சந்தை'' ஆக உருவாக்குவதன் நோக்கத்தை
1999 இல் லிஸ்பனில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு வகுத்தது. அதிகரித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகள்
அதிகரித்த முறையில் முட்டாள்த்தனமானதாக வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த நோக்கம் பார்செலோனாவில் உறுதிப்படுத்தப்பட்டது.
இன்னொரு பக்கத்தில்,
தாராளமயப்படுத்தலின் சமூக எதிர் விளைவுகள் அதிகரித்த பொருளாதார வளர்ச்சியால் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டமை
ஒரு கற்பனையாகயுள்ளது. குறிப்பாக 1990 களின் போது ஐரோப்பா எங்கும் அரசாங்கத்தினுள் வந்துகொண்டிருந்த
சமூக ஜனநாயக கட்சிகளால் இந்த எதிர்பார்ப்பு உற்சாகப்படுத்தப்பட்டது. உதாரணமாக, 1998 இல் சமூக நீதியுடன்
தாராளவாத பொருளாதாரத்தின் ஒத்துப்போகும் தன்மையை பரிந்துரை செய்வதற்கு அவசியமாக
இருந்த ''புத்தமைப்பும், நீதியும்'' என்ற சுலோகத்துடன் ஹெகார்ட் ஷ்ரோடர் தேர்தல்களை வழிநடத்தினார்.
அதேநேரம், உடல்நலத்திற்கான (வைத்திய) செலவுகள், வயோதீக வருவாய் மற்றும்
பொதுச் சேவைகள் ஐரோப்பா எங்கும் கடுமையாக குறைக்கப்பட்டன. எப்படியிருந்தபோதும், பொருளாதாரத்தை
விரைவுபடுத்துவதற்கு பதிலாக இது மேலதிக வேலையின்மையின் அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது. ஒவ்வொரு மேலதிக
வெட்டுக்களும் சமூக கிளர்ச்சிகளை கட்டவிழ்த்துவிட்டதுடன், எதிர்ப்பினையும் அதிகரித்தது. பார்சொலோனாவில் உச்சி
மாநாட்டிற்கு எதிராக பல நூறாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டார்கள் மற்றும் கடந்த சனிக்கிழமை ரோமில்
பெர்லுஸ்கோனியின் சமூக அரசியலுக்கு எதிராக மூன்று மில்லியன் (முப்பது இலட்சம்) மக்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு
பின்னரான இத்தாலிய வரலாற்றில் பெரிய ஆர்ப்பாட்டத்தில் அணிதிரண்டனர்.
இன்னொரு பக்கத்தில் ஐரோப்பா மீதான அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம்
அதிகரித்துக்கொண்டுள்ளது. செப்டம்பர் 11 இல் இருந்து, அமெரிக்க நிர்வாகம் தான் பிரகடனம் செய்த சுதந்திர
போட்டியின் கட்டுப்பாடுகளுக்கு தன்னை மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருக்கிறது. வர்த்தக யுத்த அளவுகோல்கள்
மற்றும் இராணுவ பலத்தின் மூலமான பயமுறுத்தகளும் இப்போது அந்த இடங்களை பிடித்துக்கொண்டுள்ளன. அமெரிக்க
விமானத்துறை நிறுவனத்திற்கான பில்லியன் டாலர் உதவிகள், இராணுவ செலவில் பிரமாண்டமான அதிகரிப்பு--இவை
பாதுகாப்புதுறை உதவிகளுக்கு ஒரு பக்க விளைவாக இருக்கின்றது --மற்றும் பொருளாதார கொள்கையில் ''அமெரிக்கா
முதலாவது'' என்ற சுலோகத்தின் அடிப்படையில் புஷ் நிர்வாகம் இயங்குவதை அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டும்
உருக்கிற்கான தண்டனை வரிவிதிப்பு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' என அழைக்கப்படுவது என்றுமில்லாதவாறு
அதிக வெளிப்படையாக அமெரிக்க பொருளாதார போட்டியாளர்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது. நல்லதுக்கோ
அல்லது கெட்டதுக்கோ ஐரோப்பிய பொருளாதாரம் சார்ந்திருக்கும் ஐரோப்பாவின் முக்கிய இரு வர்த்தக கூட்டாளிகளான
ஈரானும் ஈராக்கும் பயமுறுத்தப்பட்டிருப்பது மட்டுமல்ல, அதிகரித்த முறையில் தற்போதைய யுத்தத்தின் நோக்கம்
வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் வளங்களை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்துவதாகவும் கூட
இருக்கின்றது.
அமெரிக்காவின் அதிகரித்த இராணுவ பொருளாதார அழுத்தங்களின் கீழ், ஐரோப்பாவில்
தெளிவான மத்தியவாத போக்குகள் அபிவிருத்தி அடைந்துகொண்டுள்ளன. மீண்டும் ஒரு முறை தேசிய நலன் வெற்றியடைந்துள்ளது.
ஒரு பலமான தேசியவாத மற்றும் வெளிப்படயான ஐரோப்பிய எதிர் வர்ணத்துடனான வலதுசாரிகள் அல்லது புதிய பாசிச
கூட்டு கட்சிகளின் ஆதரவினைப் பெற்ற பழமைவாதிகளால், நான்கு ஐரோப்பிய நாடுகளில் சமூக ஜனநாயக அரசாங்கங்கள்
பதிலீடு செய்யப்பட்டுள்ளன. இது ஒஸ்ரியாவில் தொடங்கி மற்றும் இத்தாலி, டென்மார்க், மற்றும் பார்செலோனா
உச்சி மாநாட்டின் போது சமூக ஐனநாயகவாதிகள் தாராள-பழமைவாத மற்றும் வலதுசாரி கூட்டிடம் அதிகாரத்தை
இழந்தமை போர்த்துக்கலிலும் தொடர்ந்தது.
எப்படியிருந்தபோதும், தேசிய தன்முனைப்புவாதத்தின் புத்துயிர்ப்பு பார்செலோனாவில்
ஹேர்காட் ஷ்ரோடரின் அறிக்கையில் மிகத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டது. அவர் ''ஒரு தொழிற்துறை இடமாக ஜேர்மனின்
பிரேத்தியேக நிபந்தனைகளை போதுமானவகையில் கணக்கில் எடுக்கவில்லை'' என ஐரோப்பிய ஒன்றிய கமிஷனை
குற்றம் சாட்டியதுடன் ''ஜேர்மன் நலன்கள் பேணப்படும்'' என பலத்த குரலில் கேட்டுக்கொண்டார். இதற்கு பல
ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆத்திரத்தையும், எரிச்சலையும் காட்டிக்கொண்டன.
ஜேர்மன் ஊடகம் இதை கவனத்தில் கொண்டது .''ஷ்ரோடரின் 'ஜேர்மன் நலன்கள்'
வரையறை குறிகளை தாண்டிய சூடாகும்.'' என Die Welt
பத்திரிகை எழுதியது. ''ஜேர்மனின் தன்னம்பிக்கையின் புதிய செய்தியாகும்'' என
Frankfurter Rundschau பேசியது.
''கொடூர பேச்சு'', மற்றும் ''விடலைப்பருவத்தின் குணாம்சம்'' ''அடியாள்த்தனத்தின் சைகை'' யினை எடுத்துக்காட்டியதற்கு
பிரதமரை Säddeutsche Zeitung தாக்கியது.
ஆனால் வருங்காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதியும் ஐரோப்பிய ஒன்றியத்தினுள், ''செல்வாக்கிற்கும் மற்றும் (நாணய)
இடம்மாற்றுதல்கள் மீது அதிகாரத்தினையும் பாரங்களையும் ஒரு மறுவிநியோகம் செய்வதை வலியுறுத்துவார்கள்'' என
அது முடித்தது.
இந்த நிபந்தனைகளுக்குள், வாஷிங்டனுடன் சர்ச்சைக்கு போவது ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு
இரட்டை ஆபத்தாகும்.
ஒரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் தனது உள்ளார்ந்த முரண்பாடுகளாலும், அமெரிக்காவிற்கு
குறைந்த இராணுவ பலமும் அமெரிக்காவுடனான எந்தவொரு முரண்பாட்டிலும் சிறு துரும்பைத்தான் பெறமுடிவதோடு
மற்றும் அது இன்னும் மாபெரும் அழுத்தத்துக்கு உள்ளாகும் அவர்கள் அச்சமுறுகின்றனர். இன்னொரு பக்கத்தில், அமெரிக்காவுடனான
ஒரு வெளிப்படையான முரண்பாடு அவர்களது சொந்த நாட்டில் அவர்களது நிலையை கீழறுக்கலாம் எனவும் அவர்கள்
அஞ்சுகின்றனர்.
இறுதியில், அமெரிக்காவுடனான ஐரோப்பியர்களது நெருங்கி கூட்டிற்கு கடந்த 50 வருடங்களின்
சார்புரீதியான அரசியல் ஸ்திரத்தன்மைக்கு கடமைப்பட்டனர். பிரத்தியேகமாக ஐேர்மனின்
Wilhelmian பேரரசு,
Weimar குடியரசு, மூன்றாவது ஐேர்மன் குடியரசு (Third
Reich), அல்லது ஐேர்மன் ஐனநாயக குடியரசு போன்ற அனைத்தும் அரசுகளும் மேற்கு ஜேர்மன் குடியரசின்
நீடித்திருந்தளவிற்கோ அல்லது அமெரிக்காவினது பாதுகாப்பினாலோ நீடித்திருக்கவில்லை. ஆகையால் நலன்களின்
அதிகரித்துவரும் மோதல் பலமானவகையில் என்றுமில்லாதவாறு அந்த திசையை நோக்கி இன்னும் தள்ளுகிறபோதும்,
அத்திலாந்திற்கு இடையிலான கூட்டின் ஒரு வெளிப்படையான உடைவு ஒரு மிக ஆபத்தான அழிவை நோக்கிய துணிகரச் செயலாக
இருக்கும்.
ஐரோப்பிய அரசாங்கங்களை தமது எதிராளியான, அமெரிக்கவுடன் ஒரு பொதுவான
வர்க்க நலனின் அடித்தளத்தில் கட்டிவைப்பது வளர்ச்சியடைந்துவரும் சமூக, அரசியல் எதிர்ப்புகள் தொடர்பான அச்சமாகும்.
திரைக்குப் பின்னால் இருந்து அவர்கள் வெளிப்படுத்தும் புஷ் இன் வெளிநாட்டுக்கொள்கை மீதான அவர்களது அனைத்து
விமர்சனங்களும் இருந்தபோதும், அவரது உள்நாட்டு கொள்கையை பிரதிபண்ணிக்கொள்வதில் அவர்கள் ஒரு வினாடியும்
தயங்காததுடன், அடிப்படை ஐனநாயக உரிமைகளை அழிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களையும் ஐரோப்பாவில்
அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
|