World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: மருத்துவம் & சுகாதாரம்

Diabetes: a major new health problem

நீரழிவு: ஆரோக்கியத்திற்கு இது ஒருதலையான பிரச்சனை
By Leanne Josling
21 August 2001

Use this version to print | Send this link by email | Email the author

பலவிதமான படிப்புக்கள், ஆராச்சிகளின் பின்பு எடுத்த கணக்கெடுப்புக்களின் படி நீரழிவு முன்னேற்றமடைந்த நாடுகளில் வாழும் மக்களின் மரணத்திற்கு காரணமாக நாலாவது இடத்தில் இருக்கின்றது இது 21ம் நூற்றாண்டின் உலகம் பூராகவும் ஒரு பெரிய பந்தயமான பிரச்சனையாக இருக்கும் என கருதுகின்றனர்

அண்மையில் அகில உலக நீரழிவு பேரவையில் (IDF, International Diabetes Federation) நடந்த மாநாட்டில் அளித்த அறிக்கையின் படி நீரழிவு வியாதியால் 150 மில்லியனுக்கு கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கணித்திருக்கிறார்கள்

இத் தொகை 1985ன் கணிப்பிலும் பார்க்க 5 மடங்கு கூடுதலாக இருக்கின்றது 2025ல் இந்தத் தொகை 300 மில்லியனாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்

முன்னேற்றமடைந்து வரும் நாடுகளில் இத்தகைய நிலை ஒரு கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றது இந்நாடுகளில் நேரகாலத்தில் பரிசோதனை செய்து நோயை கண்டுபிடிக்க முடியாத நிலையும் அதற்கு பரிகாரம் செய்யக்கூடிய இன்சுலின் போதிய அளவில் இல்லாதமையும் காரணமாக இருக்கின்றது

இன்சுலின் இது கணயத்தில் உள்ள (PANCREAS) ஐலெட் குருதி என்ற கலங்களில் (ISLETS OF LANGERHANS) ஆல் சுரக்கப்பட்டு இது நேரடியாக குருதியுடன் கலக்கப்படுகிறது, இதன் தன்மை குருதியில் உள்ள சீனியின் அளவை தேவையான அளவில் வைத்திருக்கின்றது இன்சுலின் குறைவாக இருந்தால் (HYPERGLYCAEMIA) கூடுதலாக இருந்தால் (HYPOGLYCAEMIA) என்று கூறுவார்கள் இரண்டும் ஆபத்தான நிலை I D F மேற்கு பசுபிக் பிரதேசத்தின் தலைவர், பேராசிரியர் CLIVE COCKRAM இரண்டாந்தர நீரழிவு வியாதி வறுமையான நாடுகளில் கூடுதலாக இளம் சந்ததியினருக்கு வருவதாக எச்சரித்திருக்கின்றார் முற்காலத்தில் இந்த வியாதி கூடுதலாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், உடல் நிறை அளவு அளவுக்கதிகமாக உள்ளவருக்குமே காணப்பட்டது

நீரழிவு - இதை ( DIABETIC MELLITUS ) என்றும் அழைப்பார்கள் இது நெடுங்காலமாக நிலைத்து வரும் பிரதியோகமான கிளினிக்கல் சின்றோம் இதன் சிறப்பு என்னவென்றால், இன்சுலின் முழுமையாகவோ, அல்லது குறைவாகவோ சுரப்பதால் குருதியில் உள்ள சீனிச்சத்தையும், மற்ற ஊட்டச்சத்தையும் உடலில் சேருவதற்கான இது ஒரு ஊக்குவிப்பாக இருக்க முடிவதில்லை இது தேவைக்கு அளவாக உண்டாக்கப்பட்டு குருதியில் சுரந்தால் குருதியின் சீனி அளவை எப்பவும் சமநிலையில் வைத்திருக்க முடியும் ( BLOOD SUGAR LEVEL ) இப்படியான நோயாளியை தகுந்த படி பரிகாரம் செய்யாவிட்டால் இவர்களின் குருதியிலுள்ள சீனியின் அளவு கூடுகின்றது அத்துடன், உடலுக்கு வேண்டிய போசாக்குக் கிடைப்பதில்லை இவர்களின் சிறுநீரில் கூடுதலான சீனி வெளிச்செல்லும் இதனால் அவர்கள் சக்தியற்றவர்கள் ஆவார்கள் உடலின் எதிர்ப்புச்சக்தியும் குறைந்து பலவிதமான தொற்று வருத்தங்களைப் பெற்றுக்கொள்வார்கள் சிலசமயங்களில் மயக்கமடைந்து உயிர் இழக்கவும் நேரிடும்

இத்துடன் வியாதி உள்ள நோயாளியின் கண்களில், சிறுநீரகங்களில் நரம்புமண்டலங்களில், மற்றும் குருதி சுற்றும் பாகங்களிலும் வேறு நோய்கள் வரக்கூடிய பல வாய்ப்புக்கள் உண்டு

நீரழிவு வியாதி இரண்டு வகையானது; முதலாவது வகையைச்சேர்ந்த நோயாளிகளுக்கு அவர்களின் கணயம் (PANGLAS) ஒரு சிறிதளவு இன்சுலினை சுரக்கின்றது அல்லது இன்சுலினை முற்றாகவே சுரக்காது இவர்களுக்கு வாழ்க்கை பூராகவும் இன்சுலினை ஊசி மூலமாகதான் கொடுத்து வைத்தியம் செய்ய வேண்டும் இது ஒவ்வொரு நோயாளிக்கும் வித்தியாசமான அளவு தேவையாக இருக்கும் இதைக் கொடுக்கும் முன்பு அளவை, அவரின் தேவைக்களவாக பரிசோதித்துக் கொடுக்க வேண்டும்

இந்த வியாதி பிறவியில் இருந்தே இருக்கும் இதை இன்சுலின் நம்பியிருக்கும் நீரழிவு வியாதி (NIDDM) என அழைப்பார்கள் அல்லது பாலியல் அல்லது இளமையில் (JUVENNILE) உண்டான நீரழிவு வியாதி என்பார்கள்

இரண்டாவது வகையைச் சேர்ந்த நோயாளிகள் இதற்கு மாறாக அவர்களின் கடைசிக் காலங்களில் இந்த நோயை பெற்றுக் கொள்கிறார்கள் இவர்களின் கணயம் இன்சுலின் சிறிதளவு சுரக்கின்றது ஆனால் அது குருதியில் உள்ள சீனி அளவை நேர் நிலையில் வைத்திருக்க போதாமல் இருக்கும் இந்த நிலையை கூடுதலான உணவு உண்பதைக் கட்டுப்படுத்திச் சரி செய்யலாம் அல்லது உடலில் நிறையை குறைத்து அத்துடன் தேகாப்பியாசம் செய்தும் சரிசெய்யலாம்

ஆனால் சில நேரங்களில் இன்சுலின் ஊசிபோட்டோ அல்லது மருந்துகளைச் சாப்பிட்டோ சரிசெய்யலாம் இதை இன்சுலினை தங்கியிராத நீரழிவு வியாதி என்றளைப்பார்கள் (NIDDM) கூடுதலாக முதலான வகை நீரழிவால் பாதிக்கப்படுபவர்கள் பிள்ளைகளும் நோயால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளும் ஆவார்கள்

இரண்டாவது வகையில் கூடுதலாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களும் பரம்பரையாக இந்த வியாதி குடும்பத்தில் உள்ளவர்களும், அளவுக்கு மீறிய நிறை உள்ளவர்களும், குருதியில் HDL கொழுப்புத்தன்மையும் (CHOLESTROL) இத்துடன் உண்ணும் உணவில் அதிகப்படியான உறையும் தன்மை உள்ள கொழுப்புச்சத்தை உண்பவர்களும் ஆவார்கள் இத்துடன் 50 விகிதமான கற்பமான பெண்களுக்கும் அவர்களுடைய கற்ப காலங்களில் இந்த இரண்டாவது வகை நீரழிவு வரலாம் ஆனால் அது குழந்தை பிறந்தவுடன் குணப்பட்டு விடும் ஒரு சிலருக்கு பின்பு தொடர்ந்து நீரழிவு இருக்கலாம்

இன்றைய இளம் சந்ததியினர்களின் அன்றாட வாழ்க்கை முறைமாற்றங்களாலும் இரண்டாந்தர நீரழிவு கூடுதலாக வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது இத்துடன் வியாதி வருவதற்கு முக்கிய காரணங்களாக இருப்பவை அளவுக்கு அதிகமாக கொழுப்புச்சத்துக் கூடிய உணவுகளை உண்ணுதல், ஓடியாடி வேலை செய்யாது ஓரிடத்தில் இருந்து வேலை செய்வது, ஒன்றுமே செய்யாமல் சோம்போறியாக இருப்பது கடுமையான நீண்டகால மனத்தாக்கம் இவைகளுடன் அளவுக்கு மேலான உடல் பருமன், வயது, பரம்பரை போன்றவை

ஒரு அமெரிக்க நீரழிவு மன்றம் இளம் வாலிபர்களில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்த இரண்டாந்தர நீரழிவு 80 வீதம் அளவுக்கு அதிகமான உடல் நிறை கூடியவர்களில் கண்டு பிடித்தார்கள் அவர்கள் தொழில்துறை செய்யாமல் இருப்பதால் அதிகளவு சீனி (GLUCOSE) உடலில் உள்ள கலயங்களில் அடைக்கப்படுகின்றன இதை உடலில் உள்ள இன்சுலின் உள்ளெடுத்து சரிசெய்ய முடியாது இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் Fast Food, Mc Donlds போன்ற இடங்களில் மிகவும் விரைவில் பெறக்கூடிய பிஸ்ஸா, கம்பக்கர், பொரித்த கோழி, பொரித்த உருளைக்கிளங்கு அதிகம் உறையக்கூடிய கொழுப்புச்சத்து, எண்ணை கொண்ட பொருட்களை உண்பதேயாகும் அவர்கள் அவசரதேவைக்கு முறையாக நல்ல போசாக்குள்ள கொழுப்புத் தன்மையில்லாத உணவுகளைச் சமைத்துச்சாப்பிட முடியவில்லை

உலகச் சுகாதார அமைப்பால் 1980 லும் 1990 முற்பகுதியிலும் உலகத்திலுள்ள பல நாடுகளில் உள்ள 30 வயதிற்கும் 64 வயதுக்கும் இடையிலுள்ள, நீரழிவு நோயாளர்களில் கணக்கெடுத்துப்பார்க்கும் போது இந்த நோய்வாய்ப்பட்டவர்கள் கூடுதலாக குறைந்த வருமானமுள்ளவர்களும் நகரங்களில் வாழுபவர்களும் என கண்டறிந்தார்கள்

ஒரு அமெரிக்கன் ஆராட்சி ஒன்று செனர் அன்ரோனியோவில் செய்ததில் அங்கே வருமானம் உள்ளவர்களில் ஆண்களுள் 16.1 வீதமும் பெண்களுள் 21.1 வீதமும் நீரழிவு வியாதி இருப்பதாக கண்டுபிடித்தனர் ஆனால் கூடுதலான வருமானம் உள்ளவரிடம் பார்க்கும் போது ஆண்களுள் 6.2 வீதமும் பெண்களுள் 4.0 வீதமும் இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக கண்டறிந்தனர்

அமெரிக்கன் இந்தியர்களுக்கு உலகத்திலேயே மிகவும் கூடிய வீகிதம் இந்த நோய் உள்ளது இவர்களில் ஆண்களுள் 47.6 வீகிதமும் பெண்களுள் 48.9 வீகிதமும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்தியாவில் உள்ள கிராமங்களில் ஆண்களுள் 3.1 வீகிதமும் பெண்களுக்கு 1.8 வீகிதமும் நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆண்களுள் 11.9 விகிதமும் பெண்களுள் 6.8 விகிதமும் உள்ளது இது மாதிரி, பசுபிக் மேற்க்கு சமோஆ கிராமங்களில் உள்ள ஆண்களுக்கு 2.2 விகிதமும் பெண்களுக்கு 5.9 விகிதமும் நகரங்களில் ஆண்களுக்கு 12.2 விகிதமும் பெண்களுக்கு 10.8 விகிதமும் இந்த நோயால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்

கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் உணவைப் பெறுவதற்காக, தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை உண்டாக்குவதற்காகவும் நீண்ட தூரம் நடப்பதாலும் அவர்கள் உண்ணும் உணவில் குறைந்தளவு சீனியும் கொழுப்பும் இருப்பதாலும் இந்த நோய் அவர்களுக்கு மிகவும் குறைவாக வருகின்றது ஆனால் நகரத்தில் உள்ளவர்கள் மிகவும் விரைவில் பெறக்கூடிய செய்த உணவை பெறக்கூடியதால் அவர்களுக்கு கூடுதலாக இந்த நோய் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன

அவுஸ்ரேலியாவில் உள்ள அபோர்சியனஸ்

அவுஸ்ரேலியாவில் ஒரு வித்தியாசமான வடிவம் அமைந்திருக்கிறது அமெரிக்காவின் இந்தியர்கள் முதலாகவும் பசுபிக்தீவில் நாறு என்ற இடத்திலுள்ள மக்கள் இரண்டாவதாகவும் பாப்புகினியாவின் கோக்கி மக்கள் மூன்றாவதாகவும் அவுஸ்ரேலியாவில் உள்ள மக்கள் உலகில் நாலாவது கூடுதலான தொகையில் நீரழிவு நோயைப் பெற்றிருக்கிறார்கள்

1995 ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடத்திய தேசிய சுகாதாரக் கணக்கெடுப்பின் படி 2.4 விகிதமானோர் தங்கள் வாழ்க்கையில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டறிந்தார்கள் இதற்கு முரண்பாடாக முதிர்ந்த பழம்குடிமக்களில் 24 லிருந்து 44 வயதுக்குட்பட்டவர்களில் 7சதவிகிதமானோருக்கும் 45-54 வயதுக்குட்பட்டவர்களில் 24சதவிகிதமும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களில் 17 சதவிகிதமானோருக்கும் இந்த நோய் காணப்பட்டார்கள்

நல்ல இடங்களில் உள்ள ஒரு சில வயதுக்கூட்டத்துக்கு உட்பட்ட பழங்குடிவாசிகள் பின்தங்கிய பழமையான இடங்களில் உள்ள பழங்குடிவாசிகளிலும் 7 லிருந்து 8 மடங்கு கூடுதலாக நீரழிவு வியாதியால் பிடிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிய தந்தார்கள்

வறுமை நல்ல உணவுச் சத்துக்கள் இல்லாத சாப்பாடுகள், சரியான மருத்துவ வசதி, அத்துடன் நிறையக் குடிவகைகள் குடித்தல் போன்றவை இவற்றுக்கு முதல் காரணமாக இருக்கின்றது குடிவகையில் அதிகம் சீனிச்சத்து (GLUCOSE) உள்ளது இதை அதிகமாக, நெடுங்காலம் பாவிப்பதால் ஈரல் சம்பந்தப்பட்ட வருத்தமும் நீரழிவும் வரலாம்

உடல் நல சுகாதாரத்துக்கு நீரழிவின் நுழைவு பெரிய பிரச்சனையாக உண்மையாக அமைந்துள்ளது கடந்த நூற்றாண்டில் போசாக்குள்ள உணவு, சிறந்த சுகாதாரவசதி, பல தொற்று நோய்கள் வராமல் தடுப்பு மருந்துகள் பாவித்து நீண்டகாலத்துக்கு வாழக் கூடியதாக இருந்தது ஆனால் இந்த கொடுப்பனவுகள் பல வயது சம்பந்தமாக வரும் வேறு தொற்று நோய்யில்லாத, வயது சம்பந்தப்பட்ட வருத்தங்களாலும், நீரழிவு நோயினாலும் கிழித்தெறியப்பட்டுள்ளது

கிருமிகளால் தொற்றும் நோய்களை அன்ரிபயோரிக்காலும் (நோய்க்கிருமிகளைக் கொல்லும் மருந்து) நோய்வராமல் தடுக்கும் மருந்துகளாலும், பொக்கிளிப்பான், சின்னமுத்து, கூவைக்கட்டு போன்ற வருத்தங்களை வராமல் தடுக்கலாம் நீரழிவு ஒரு கிருமிகளால் தொற்றும் நோய் அல்ல ஆனால் அது வர வர கூடிக்கொண்டே வருகின்றது மற்ற நோய்களை போல நீரழிவை முழுதாகக் குணமடையச் செய்ய முடியாது, அதை குறைக்கலாம், மருந்துகளால் கட்டுப்படுத்தவும் முடியும் இந்த நீரழிவு வியாதியை கூடியளவு வராமல் தடுப்பதற்கு முடிந்தளவு இந்த வருத்தம் வராமல் தடுப்பது எப்படி வந்தபின் காப்பது போன்றவற்றை எப்படி எல்லா ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

அத்துடன் அவர்களுக்கு இயன்றளவு இந்த நோயைப்பற்றி படிப்பிக்க வேண்டும் அத்துடன் வராமல் தடைசெய்யக்கூடிய எல்லா முறைகளையும் தெரியவைக்க வேண்டும் குறைந்த நேர வேலையாகவும் அவர்களே தங்கள் சத்துள்ள உணவை சமைத்துச் சாப்பிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும் சத்துள்ள உணவுகள் பாடசாலைகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும் பிள்ளைகளுக்கு விளையாடக்கூடிய விளையாட்டு வசதிகளும், தேகாப்பியாசம் செய்யக்கூடிய வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களைத் தட்டி உசாராக்க வேண்டும் நீரழிவு உள்ள மக்களுக்கு வைத்தியசேவை இலவசமாகவும் எப்பவும் கிடைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் சரியான காலங்களில் சோதனைகள் செய்து நல்ல உணவுகள் கொடுத்து, முறையான தேகாப்பியாசம் செய்தால் நீண்ட காலத்துக்கு உற்சாகமாக நீண்ட காலம் வாழலாம்

முதலாளித்துவத்தின் கீழ் கூடுதலான மக்களுக்கு இவையெல்லாம் கிடைப்பது மிகவும் கஸ்டமாய் இருக்கிறது அரசாங்கங்கள் மக்களின் சுகாதாரத்துக்கு வேண்டியவற்றை, தடுப்பு வைத்தியங்களுக்கு தேவையானவற்றை வரவு செலவு கணக்கில் வெட்டி, தொழிலாளர்களை நீண்ட நேரம் கூடுதலான கஸ்டமான நேரங்களில் வேலையை வேண்டுகிறார்கள் அத்துடன் சுகாதாரம், சுத்தம், பெறுமதியில்லா உணவைக் கொடுத்து பணத்தை அள்ளி எடுக்கும் முதலாளிகளை முன்னேற்றுகிறார்கள்