ஐரோப்பா
:
பிரான்ஸ்
Shootings in France reveal explosive social tensions
பிரான்சின் சூட்டுச் சம்பவங்கள் வெடிக்கும் சமூகப் பதட்டங்களை வெளிப்படுத்துகின்றன.
By Therese LeClerc
3 April 2002
Back to screen version
மார்ச் 27 காலை நேரத்தில் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான நந்தேர் இல் நடந்த
பெருமளவானோர் கலந்துகொண்ட ஒரு நகரசபை கூட்டத்தில் 33 வயதுடைய ஒரு மனிதன் சரமாரியாகச் சுட்டதில் எட்டு
உள்ளூர் அரசியல்வாதிகளும் மேலும் பதின்நான்கு பேரும் காயமடைந்தனர், இதில் எட்டுப்பேர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
ஒருபோதும் ஒரு நிரந்தரமான வேலையினைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த பல்கலைக்கழக பட்டதாரியான, றிச்சர்ட்
டூர்ன் பார்வயாளரை கண்காணிப்பதற்காக நியமிக்க்ப்பட்ட காவலர்கள், கட்டடத்திலிருந்து வெளியேறும்வரை காத்திருந்தபின்
தானியங்கித் துப்பாக்கியினை வெளியில் எடுத்து அங்கு வந்திருந்த 40 அலுவலர்கள் மீது டசின் கணக்கான வேட்டுகளைத்
தீர்த்தார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட கட்சியின் (PCF)
நான்கு அங்கத்தினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர், அதன்போது பிரெஞ்சு ஜனநாயகத்துக்கான மத்திய-வலது சங்க
(center-right Union)
அங்கத்தவர் மூவரும் பசுமை கட்சியின் பிரதிநிதி ஒருவரும் இதில் கொல்லப்ட்டனர். ஒரு அதிகரி டுர்ன் ஐ
கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து போலிசாரிடம் ஒப்படைக்க உதவியவேளையில் இரண்டுதடவை சுடப்பட்டு, இப்போதும் வைத்தியசாலையில்
உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றார். டுர்ன் அவரது தீரச்செயல் (rampage)
முடிவுற்றதும் அவர் ''என்னைக் கொல்லுங்கள்! என்னைக் கொல்லுங்கள்!'' எனக் கூச்சலிட்டார். பின் 36 மணிநேரங்களின்
பின்னர் அவர் பாரிஸ் நகர போலீஸ் தலமை அலுவலகத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
நந்தேர் இல் நடந்தவற்றுக்கு அரசியல்வாதிகள் இவற்றினை விளங்கப்படுத்தபட முடியாத
கொலைகள் என்றதுடன் இவற்றுக்கு வன்முறைக்கு எதிரான மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அழைப்புவிட்டதன்
மூலம் பதிலிறுக்கினர். அதிகமான அபிப்பிராயங்கள், மனநோய் சிகிச்சை பெற்றுவந்தவரான டுர்ன் எப்படி துப்பாக்கிகள்
பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டார் மற்றும் அவரால் எப்படி தற்றகொலை செய்துகொள்வதில் அங்கு வெற்றிபெறமுடிந்தது
என்பவற்றினை வெளிப்படுத்துபவையாகவே இருந்தன. இதன்போது பிரான்ஸ் நாடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொளவதற்கான
காலம் ஒரு மாத்திற்கும் குறைவானதாகவே இருந்தது, ஏப்பிரல் 21 மற்றும் மே 5 இல் இது நிச்சையிக்கப்பட்டிருந்தது,
அத்துடன் சட்டம்- ஒழுங்கு மற்றும் இளம்பிராயத்தினரது குற்றச்செயல்கள் என்பனவற்றை தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை
வேட்ப்பாளர்களது முக்கிய அம்சமாக வைத்திருந்தனர்.
இருப்பிலுள்ள ஜனாதிபதி ஜாக் சிராக் விவரிக்கையில் டுர்ன் இனது செயல்கள் போன்றவை
காட்டுமிராண்டித்தனமானவை எனவும், ''இவற்றினை ஒடுக்குவதற்கும் தடுப்பதற்குமான எல்லா நடவடிக்கைகளும்
கட்டாயாமாக மேற்கொள்ளப்படும்" எனவும் கூறினார். இவரது முக்கிய எதிராளியான சோசலிசக் கட்சி பிரதமரான
லியோனல் ஜொஸ்பன் தானும் "குற்றத்தின் மீதான கடும் நடவடிக்கைக்கு" உறுதிவழங்கியதுடன், டுர்ன் இனது செயல்கள்
"முற்றிலும் அர்த்தமற்றவை" என விவரித்தார். இங்கு ஜொஸ்ப்பன் "இந்த பைத்தியக்கார தனிமனித செயலுக்கும் சமூக
பாதுகாப்பின்மையையிட்ட பிரச்சனக்கும் இடையில் ஒரு இணைவு ஏற்படுவத்ற்கு" எதிராக எச்சரிக்கை செய்தார்.
பத்திரிகைகள் இத்தப் பார்வையினை ஒரு அரைகுறையான முறையில் வெளிப்படுத்தின.
Liberation
பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கமொன்றில் பண்பிழந்த செயல்புரியும்
டுர்ன் போன்றவர்கள் எப்படி உருவாகுகின்றார்கள் என கேட்டிருந்ததுடன், தனது கேள்விக்கு "யாருக்கும் தெரியாது"
என்னும் அறிக்கை மூலம் விடையளித்திருந்தது. Le Monde
பத்திரிகை "ஒரு சாதாரண நகரசபை கூட்டத்தில் நடந்த இவ் வன்முறை
வெடிப்பினை தர்கரீதியில் எந்தவிதத்திலும் விளக்கிவிடமுடியாது என்றது. கம்யூனிசக் கட்சியின் தினசரியான
L'Humanite
இக் கொலையினை ''ஒரு பைத்தியக்கார கொலைகாரனின் செயல்'' என வர்ணித்ததுடன், கொலையுண்டவர்களின்
குடும்பத்தினர் கொலையாளியை நீதிக்கு முன் கொண்டுவந்து பார்க்கும் திருப்தியினை டூர்னின் தற்கொலை தடுத்துவிட்டிருக்கிறது
என மேலும் அது விபரித்திருந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தில் மனக் குளப்பம் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை
வகித்திருந்தது. டூர்ன், ''நண்பர்களற்றவர்'' எனவும், 12 வருடங்களாக மன அழுத்தங்கள் நிறைந்த ஓர் சூழ்நிலையில்
வாழ்ந்து வந்ததுடன் முன்னர் இரு தடவை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார் என அவரது தாயாரினால் விவரிக்கப்பட்டார்.
ஆனால் அவர் பொலிசாரிடம் கூறியதுபோல அவரது உணர்வுகள் ''சமூகத்தினால் குப்பைக் கூடைக்குள் எறியப்பட்டுவிட்டன,
இவை அதிகமான இளைஞர்களின் உணர்வுகளை ஒத்தவையாகும். இப்பொழுது சில வருடங்களாக பிரெஞ்சு அரசாங்கம் அரசுக்கான
செலவீனங்கள், தொழிலதிபர்கள் செலுத்தவேண்டிய காப்புறுதி கட்டணங்கள் மற்றும் ஏனய சமூகக் கொடுப்பனவுகள் என்பவற்றிற்கான
செலவீனங்களை குறைத்து வருகின்றது. பிரான்சில் இப்போது 2,200,000 வேலையற்றோர் உள்ளனர், இது சனத்தொகையின்
9 வீதமாகும். சில பகுதிகளில் வேலையற்ற இளைஞர்கள் 50 வீதமளவில் உள்ளனர். கணிப்பீட்டின்படி வேலை செய்வோர்
உள்ளடங்கலாக 4 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றார்கள், ஐரோப்பாவில் இளைஞர்களின் தற்கொலை வீதம் பிரான்சிலேயே
அதிகமாக இருக்கின்றது.
நம்பிக்கையிழந்த தனிநபர்களது வன்முறைகள் பிரான்சில் அமெரிக்காவினை ஒத்திதாகவே உள்ளது.
அத்துடன் இப் பிரச்சனைகள் பிரான்சில் அதிகரித்த முறையில் இடம்பெற்று வருகின்றது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக
இப்படியான 17 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, இவற்றுள் அனேகமானவை சம்பந்தப்பட்டவரின் தற்கொலையிலேயே
முடிவடைந்துள்ளன. ஜூலை 1992 இல் Besancon
என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் ஒரு இளம் தொழிலாளி 7 பேரை
கொன்றார் இவர் அங்கிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டவராவார். பின்னர் அவர் தன்னையே மாய்த்துக்கொண்டார்.
இதற்கு பன்னிரு மாதங்களின் பின்னர், ஒரு ஜிப்சி சமூகத்தின் அங்கத்தவர் ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்வதற்கு
முன்னர் அவரது உறவினர்கள் 6 பேரை கொன்றார். செப்டம்பர் 1995 இல், 16 வயதுடைய ஒருவர் அவரது குடும்ப
அங்கத்தவர் மூவர் உள்ளடங்கலாக பதினாறு பேரைக் கொன்றார், அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர்
மேலும் 7 பேரைக் காயப்படுத்தினார். கடந்த அக்டோபரில் ரயில்வே தொழிலாளி ஒருவர் மத்திய பிரான்சின் நகரமான
Tours இல்
சரமாரியாகச் சுட்டதில் நாலுபேர் கொல்லப்பட்டனர் மற்றும் பதினொரு பேர் காயமடைந்தனர். அவர் தற்போது
சிறைச்சாலையில் உள்ளார்.
பல நகர பிதாக்களின் கருத்துப்படி, உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் டூர்ன் இனது இலக்காக
இருந்ததானது, மக்களுக்கும் தேர்வுசெய்யப்பட்ட அதிகாரிகளிலிருந்து அரசியல் அலுவலர்கள் வரையானவர்களுக்கும் இடையிலான
உறவுகள் மோசமடைந்து போனதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். பாரிசின் வடகிழக்கு புறநகர் பகுதியான
Seine-Saint-Denis
இல் உள்ள Sevran
இன் PCF
கட்சி நகரபிதாவான
Stephane Gatignon
''நீண்டகாலமாக மக்கள் முறைப்பாடுசெய்தால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைத்துவிடுமென நினத்துவருகின்றனர்........
நாம் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரியில்
Gatignon அவரது
நகரில் உணவு விடுதி நடத்துவோருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் நடைபெற்ற சர்ச்சை ஒன்றில் தலையிட்டபோதில்
அவர்களினால் தாக்கப்பட்டார்.
''வீட்டு உதவி அல்லது நிதி உதவி பெற்றுக்கொள்ள முடியாத நிலையின் காரணமாக உடல்நல
பரிசோதனைக்கான உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், மக்கள் இன்னும் இன்னும் ஒரு கவுன்சிலர் அலுவலகத்திற்கு
வந்துகொண்டிருக்கின்றனர்.'' என பாரிசின் தெற்கு புறநகர் பகுதியான
Evry in Essonne
இன் நகரபிதாவும் சோசலி கட்சியின் அங்கத்தவருமான
Manuel Valls,
Le Monde
இடம் குறிப்பிட்டார். ''அண்மையில் ஓர் இளம் கர்ப்பிணி பெண்ணுடன் எனக்கு ஒரு பிரச்சனை நடந்தது. அவள் ஒரு
வதிவிடமற்ற பெண். அவளது தாயார் அவளை வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டிருந்தார். அவளது காதலன், 'அவளது
குழந்தை தெருவில் பிறந்தால், நீ தான் முதலாவதாக விலை செலுத்த வேண்டிவரும்' என என்னிடம் கூறினான்.'' என
Seine-Saint-Denis
மற்றும்
Rosny-sous-Bois இன் நகரபிதாவும், ஒரு வலதுசாரி
Liberal Democracy
இன் ஆதரவாளருமான
Claude Pernes குறிப்பிட்டார்.
கடந்த வாரம்
Liberation இல் வெளிடப்பட்டிருந்த ஒரு இளைஞரிடம் இருந்து
வந்திருந்த கடிதம் டுர்னின் கொடூரமான வெடிப்புக்கான பாரிய பொறுப்பினை இந்தச் சமூகமே வகிக்கிறது என குறிப்பிட்டிருந்ததானது
அரசியல்வாதிகள் பற்றி ஒரு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடாகும். ''டூர்ன் மன அழுத்தத்தில்
இருந்தபோதும், மன உளச்சல் பற்றி பேசுவது ஒரு இலகுவான சாக்குப்போக்காகும். இந்த கொடூரமான நடவடிக்கை
தேர்தல் காலத்தில் அரசியல் வாதிகளின் ஒரேவகையான பேச்சுகளை தவிர எதற்கும் அர்ப்பணிக்காத ஒரு சந்ததியின் அதிருப்தியின்
மீது ஒளி பாய்ச்சுகிறது. அரசியல் விஞ்ஞானம் மற்றும் வரலாற்றுப் பாடத்திலும் பட்டம்பெற்றிருந்த டுர்ன், குறைந்த
ஊதியத்தில் அவரது தாயருடன் வாழ்ந்துவந்தார். இது வழமைக்குமாறான நிலைமையல்ல. இப்படியான குறைந்த ஊதியத்தைப்
பெறுபவர்கள் கற்பனை செய்ய முடியாத துயரங்களை அனுபவிக்கிறார்கள், இறுதிக்கட்டத்தின் இந்த அளவீடு கூட எல்லாவற்றில்
இருந்தும் அந்நியப்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்கள் குறிக்கவில்லை. சராசரி ஊதியத்தில் வாழ்வதானது அறியப்படுவதை மறுப்பதாக
இருப்பதுடன், ஒரு இரண்டாம் தர மனித ஜீவியாக இருக்கவேண்டியிருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து எமது
பெற்றோர்களை விட மிக குறைவாக ஊதியம் பெறும் முதலாவது சந்ததியாக நாம் தான் இருக்கிறோம். எமது வருங்காலமானது
உறுதியற்றதாக இருக்கிறது. தனிப்பட்ட மனித ஆன்மா பலகீனப்படுவதுதான் இவை எல்லாவற்றினதும் விளைவாக இருக்கிறது.
நிரந்தமான இருப்பிடமற்றோரை மதிப்பற்ற முறையில் குறிப்பிடப்படும் வீடற்றோர், இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
இந்தப் பார்வையானது கொடூரமானதாகும். பொதுச் சேவைத் துறையிலான வேலை அழிப்புகள் தான் எமது வருங்காலமாக
இருக்கிறது. தற்காலிக வேலைகள், குறைந்த ஊதியம் மற்றும் இன்னும் இன்னும் மேலதிகமான தகமைகள் கோரப்படுவதுதான்
எமது வருங்காலமாக இருக்கிறது. எதை ஒன்றையும் பெற்றுக்கொள்ளாது இருப்பதும் எமது வருங்காலமாக இருக்கிறது.
நாம் பெரும் வேதனையில் வாழ்ந்துவருகிறோம். டூர்னின் மன்னிக்கப்படமுடியாத நடவடிக்கை அதைத்தான் வெளிப்படுத்துகிறது''
என Michaël Moretti
எழுதினார்.
|