World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush gives Israel blank check in assault on Palestinians

இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு புஷ் பகிரங்க அனுமதி வழங்கியுள்ளார்

By Bill Vann
26 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

மத்திய கிழக்கின் ''சமாதானத்திற்கான'' தொடர்ச்சியான முன்மொழிவுகளின் மத்தியில் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் ஜோர்ஜ். டபிள்யூ. புஷ் இனால் ஜூன் 24ஆம் திகதி வழங்கப்பட்ட உரையானது அதனது மனிதத்தன்மையற்றதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இஸ்ரேலின் டாங்கிகளும், இராணுவமும் மேற்குக் கரையின் ஒவ்வொரு முக்கிய நகரத்தினுள் புகுந்து அழிவுகளை செய்கையிலும், அப்பாவி மக்களை கொல்கையிலும், ஆயிரக்கணக்கானோரை நாள்முழுவதும் ஊரடங்கு சட்டத்தின் கீழ் வைத்திருக்கையிலும், அமெரிக்க ஜனாதிபதி, பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு ''ஜனநாயக'' சுயசீரமைப்பு வேண்டும் எனவும் அவர்களின் தேர்தெடுக்கப்பட்ட தலைவரான யாசிர் அரபாத்தை விலக்குமாறும் புத்திமதி கூறுகின்றார்.

புஷ் இனது திட்டமானது பாலஸ்தீனயர்களுக்கு ஒன்றையும் வழங்காததுடன், இந்த நீடித்த இரத்தம் தோய்ந்த மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒரு புதிய முன்னாலோசனையையும் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக அது வழமையாக பாலஸ்தீனிய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பகுதிகளை மீண்டும் ஆக்கிரமித்துக்கொள்ளும் இஸ்ரேலின் கொள்கைகளை தொடர்வதற்கும், அவர்களால் பாலஸ்தீனிய தலைமையையும், பாதுகாப்பு படையினயும் உடலியல் ரீதியாக அழிப்பதற்கு பச்சை விளக்கு காட்டுகின்றது.

அமெரிக்க நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடானது, பாலஸ்தீனிய கேள்வி எனப்படுவது தொடர்பான ஒரு தீவிர மாற்றத்தை காட்டுகின்றது. 1948 ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்தும், 1967 இல் மேற்குகரை மற்றும் காஸா பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்தும், அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்ட சியோனிச குடியேற்றங்களால் மீண்டும் மீண்டும் அவர்களது நாட்டிலிருந்து கலைக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்களினது உரிமைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற பிரச்சனையை உலக இராஜதந்தரமானது பலகாலத்திற்கு முன்னரே கண்டுகொண்டுள்ளது.

பாலஸ்தீனியர்களை ''பயங்கரவாதிகள்'' எனவும், அவர்களது தலைமையான நீண்ட காலத்திற்கு முன்னரே சட்டபூர்வமான முதலாளித்துவ தேசிய இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஒரு குற்றவாளியான அமைப்பாக எடுத்துக்காட்டுவதன் மூலமாக இப்பிரச்சனையை புஷ் மீண்டும் கிளறிவிட விரும்புகின்றார்.

அரபாத்தையும், ஏனைய பாலஸ்தீனிய தலைவர்களையும் சட்டவிரோதமாக்க முயல்வதனூடாக ஒரு வருடத்திற்கு மேலாக வாஷிங்டன் தனது கொள்கைகளை முறைமைப்படுத்தி, இஸ்ரேலிய அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என கருதப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை இஸ்ரேல் கொலைசெய்வதை ஏற்றுக்கொள்கின்றது.

புஷ்ஷினது உரைக்கு இஸ்ரேலிய ஆளும் தட்டினர், இது பிரதமர் ஆரியல் ஷரோனால் எழுதப்பட்டிருக்கலாம் என கூறியதுடன், அவரது கொள்கைக்கான முழு வெற்றி எனவும் குறிப்பிட்டது. இஸ்ரேலின் ஆழும் கட்சியான லிகுட் கட்சியானது அவ்வுரை ''அரபாத்தின் காலகட்டத்தின் முடிவாக'' கருதப்படக்கூடியது என தெரிவித்தது.

எவ்வாறிருந்தபோதிலும், இஸ்ரேலின் தீவிர பாதுகாப்பாளர்கள் மத்தியில் கூட புஷ்ஷினது திட்டமானது இஸ்ரேல் அரசாங்கத்தின் மீது ஒரு கோரிக்கையை கூட வைக்கவில்லை என கவலை தெரிவித்தது. New York Times பத்திரிகையானது ''ஜனநாயக பாலஸ்தீனம் ஒன்று உருவாகும்வரை முழு மேற்குகரையையும் ஆக்கிரமிக்கலாம் என இஸ்ரேலிய பிரதமர் ஆரியல் ஷரோனுக்கு திரு, புஷ் கூறுவது போலுள்ளது'' எனவும் ''இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு ஒரு தெளிவற்ற நிலையில் இருக்கையில் எவ்வாறு பாலஸ்தீனிய மக்கள் ஒரு தேர்தலை நடாத்துவது அல்லது தம்மை சீர்திருத்தத்திற்குள்ளாக்குவது'' எனவும் குறிப்பட்டது.

இத்திட்டமானது இஸ்ரேலில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதலையோ அல்லது ஆக்கரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் ஒடுக்குமுறையையோ நிறுத்துவதில் ஒரு சிறிய பங்காவது ஆற்றும் என்பதை இப்பிரச்சனை தொடர்பாக உண்மையாக சிந்திக்கும் எவரும் சாத்தியம் என கருதமாட்டார்.

புஷ்ஷிற்கோ அல்லது ஷரோனுக்கோ பாலஸ்தீனிய ''சீர்திருத்தம்'', ''ஜனநாயகம்'' தொடர்பாகவோ எவ்வித அக்கறையுமில்லை. அவர்களது முழுநோக்கமும் 1993 இல் இஸ்ரேலிற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையில் ஒஸ்லோவில் செய்யப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளையும் கட்டுமானத்தையும், அவ்வுடன்படிக்கையை தொடர்ந்து உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகாரத்துவத்தையும் முற்றாக அழிப்பதாகும்.

அமெரிக்க ஜனாதிபதி, ஷரோனின் அரசாங்கம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட விமர்சிக்காததுடன், அதற்குப் பதிலாக ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் எவ்விதமான முயற்சியும் பயனற்றது என ''இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதை தொடரும் எனவும், பாலஸ்தீனிய மக்களின் நிலைமை மேலும் மேலும் மோசமடையும்'' எனவும் தெரிவித்தார்.

அவரது பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்கள் உண்மைக்கு மாறானவையாகும். புஷ் இன் படி தற்போதைய பிரச்சனைக்கான காரணம், பயங்கரவாதமும், அதற்கு எதிராக பாலஸ்தீன தலைமை போராடவில்லை என்பது மட்டுமேயாகும்.

''இன்று பாலஸ்தீனிய மக்கள் உத்தியோகபூர்வமான ஊழலால் உருவாக்கப்பட்ட மோசமான பொருளாதார மந்தநிலைக்குள் வாழ்கின்றனர்'' என கூறும் புஷ் இன் கருத்தின்படி, ஏழ்மையும் வறுமையும் 7 வருடங்களாக ஒரு பிரதேசத்தில் நிலையற்ற கட்டுப்பாட்டை வைத்திருக்கும் பாலஸ்தீன அதிகாரத்துவத்தின் விளைவாகும் எனவும், அது ஒரு ''சந்தைப் பொருளாதாரத்தை'' அரவணைத்து கொள்ளாததின் விளைவு என குறிப்பிடுகின்றார். மீண்டும் மீண்டும் பாலஸ்தீன மக்கள் தமது நாட்டைவிட்டு பாரியளவு வெளியேற்றப்பட்டதும், காஸாவினதும் மேற்குகரையினதும் பாரிய வழமான பிரதேசம் சியோனிச குடியேற்றத்தால் பறிக்கப்பட்டதும், இராணுவ ஆக்கிரமிப்பால் பல பத்தாண்டுகளாக பொருளாதார வாழ்க்கை தொடர்ச்சியாக குழப்பப்பட்டதும் இங்கு கருத்திற்கெடுக்கப்படவில்லை.

''கடந்த காலத்துடனான ஒரு உடைவுடனேயே'' சமாதானம் வருவதற்கான ஒரேயொரு வழி என புஷ் குறிப்பிடுகையில் அவர், யாசிர் அரபாத் உள்ளடங்கலான முழு பாலஸ்தீன தலைமைக்கும் எதிரான ஒரு சதி பற்றி வெளிப்படுத்துவதுடன், ''பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளாத'' ஒரு புதிய தலைமையை உருவாக்குவது தொடர்பாகவும் குறிப்பிடுகின்றார்.

அப்படியான ஒரு ''உடைவு'' பல தடவை யுத்தக் குற்றங்களை புரிந்த பிரதமரை கொண்ட இஸ்ரேலுக்கு முன்வைக்கப்படஙில்லை. பதிலாக புஷ் இன் இக்கருத்துக்கானது, 20 வருடங்களுக்கு முன்னர் லெபனானில் ஆயுதம்தரிக்காத ஷப்ரா, ஷட்டில்லா பாலஸ்தீன அகதிமுகாம்களின் மீதான கொலையை ஒழுங்கமைத்ததற்காக புறூஸல்சில் (Brussels) மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்கு ஷரோன் குற்றம் சாட்டப்படக்கூடிய வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

புஷ்ஷின் திட்டப்படி எவ்வாறான பாலஸ்தீனய அரசு வடிவமைக்கப்படவுள்ளது, அல்லது அப்படியானது ஒன்று நிறுவுவது அனுமதிக்கப்படுமா? அப்படியான ஒன்றின் தலைவர் வாஷிங்டனின் கைப்பொம்மையாகவே இருப்பார் என்பதை எவரும் நிச்சயமாக கூறலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அப்படியானவர் CIA இற்கு சார்பாக பாலஸ்தீன இயக்கத்தினுள் நீண்டகாலமாக இருந்து ஒருவராக இருக்கலாம். அதனது பொருளாதாரம் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் நலன்களுக்கு அடிமைப்பட்டதாகவும், சர்வதேச நாணய நிதியத்தால் நேரடியாக நடாத்தப்படும் ஒன்றாகவே இருக்கும். அதனது பாதுகாப்புபடை CIA ஆலும், இஸ்ரேலிய இரகசிய பொலிசான மொசாட்டால் நடத்தப்படுவதாகவும், அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டதாகவே இருக்கும்.

சியோனிச குடியேற்றங்கள் தொடர்ந்தும் இருப்பதுடன், புதிய அரசு என கூறப்படுவது சாத்தியமற்ற சிறிய துண்டுகளாகவும், பாலஸ்தீனிய மக்களின் நாளாந்த வாழ்க்கையை கொடுமையாக்கும் இஸ்ரேலிய வீதித்தடைகளையும், சோதனை நிலையங்களையும், காவல்புரிவதையும் கொண்டதாகவே இருக்கும்.

சுருக்கமாக கூறினால் ஒரு ''தற்காலிக'' பாலஸ்தீன அரசானது கறுப்பின மக்களை தொடர்ச்சியான ஒடுக்குமுறையினுள்ளும், ஏழ்மையினுள்ளும் வைத்திருந்த தென்னாபிரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பன்டுஸ்தான்களை போலிருக்கும்.

செய்தித்துறையினரின்படி, அமெரிக்க ஜனாதிபதியின் உரையின் இறுதிவடிவமானது, புஷ் நிர்வாகத்தினுள் இருக்கும் உதவி ஜனாதிபதியான றிச்சாட் சென்னியாலும், பாதுகாப்பு அமைச்சர் டொனால் ரும்ஸ்வெல்ட்டினாலும் தலைமை தாங்கப்படும் மிக வலதுசாரி, இஸ்ரேல் சார்பான பிரிவுடனான கடுமையான விவாதத்தின் பின்னர் எடுக்கப்பட்டது என தெரியவருகின்றது.

1980 களில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான றிச்சாட் சென்னி, தென் ஆபிரிக்காவின் இனவாதக் கொள்கைக்கான அமெரிக்காவின் தீவிர ஆதரவாளன் மட்டமல்லாது, வெள்ளை இனவாத அரசாங்கத்துடனான அமெரிக்க பொருளாதார உறவுகளை தொடரவேண்டும் எனவும், 20 வருடங்காக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கான தீர்மானத்தை எதிர்த்ததுடன், பிரிடோரியாவிற்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரசிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை எதிர்த்தவருமாவார்.

தற்போது தனது வாக்களிப்பை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஒரு ''பயங்கரவாத அமைப்பு'' என்பதனூடாக பாதுகாக்கின்றார். அவரது கருத்துக்கள் மாறாததுடன், அமெரிக்க ஆளும் தட்டினது பிரதிநிதிகள் ஒடுக்கப்படும் நாடுகளில் உள்ள பரந்த மனித இனத்தின் மீது சர்வாதிகாரத்தையும், துயரத்தையும் திணிக்க தயாரிப்பு செய்கின்றது.

ஏமாற்றுக்களால் அதிகாரத்திற்கு வந்த புஷ், பாலஸ்தீனியர்களை ''சகிப்புதன்மையையும், சுதந்திரத்தையும் அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்தை கட்டியெழுப்ப கலந்துகொள்ளுமாறு'' அறிவுரை கூறுவதுடன், அமெரிக்கா ஒரு ''நேர்மையான' தேர்தலை நடாத்துவதற்கு உதவியளிக்கும் எனவும் கூறுகின்றார்.

எவ்வாறிருந்தபோதிலும், இத்திங்கட்கிழமை உரையில் தெளிவாகுவது என்னவெனில், யார் ஒரு சட்டபூர்வமான தலைவராக இருப்பது, யார் அவ்வாறு இருக்கமுடியாது என்பதை தீர்மானிக்கும் உரிமையை தனக்குரியதாக்கியுள்ளது. இது பாலஸ்தீனத்திலும், ஆப்கானிஸ்தானிலும் உண்மையாகியுள்ளது. புஷ் நிர்வாகத்தின் அமெரிக்க நோக்கில் ஒரு மேலெழுந்தவாரியான சுயநிர்ணய உரிமைக்கு கூட இடமில்லை. தேவையாயின் வாஷிங்டன் இராணுவ பலத்தினால் தீர்மானிக்கும்.

இக்கருத்து புஷ் நிர்வாகத்தாலும், ஷரோனின் அரசாங்கத்தாலும் பகிர்ந்துகொள்ளப்படுவதுடன், இலகுவில் கையாளப்படமுடியாத மத்திய கிழக்கின் பிரச்சனையை இச்சக்திகள் ஒரு சமூக சீரழிவினை நோக்கியே இட்டுச்செல்லும்.

See Also :

பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டம்:
இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலும் சியோனிசத்தின் முட்டுச்சந்தும்

பாலஸ்தீனிய தற்கொலை குண்டு வெடிப்புக்கள்: உலக சோசலிச வலை தளத்திற்கு வந்த கடிதங்களும் ஆசிரியர் குழுவின் பதிலும்

இனப் படுகொலையின் நிகழ்ச்சிப் பட்டியல்: ஷரோனும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்கள் மேல் எப்படித் தாக்குதலைத் தயார் செய்தனர்

ஜெனின் நகரத்தில் இஸ்ரேலிய படுகொலை

புஷ்ஷின் ''சமாதான முன்னெடுப்பு'' அரபு மக்களுக்கு எதிரான பரந்த யுத்தத்திற்கு அடித்தளமிடுகின்றது

Top of page