:ஐரோப்பா
:
பிரான்ஸ்
An encounter with Lutte Ouvrière: the
political physiognomy of centrism in France
லூற் ஊவ்றியேர் இயக்கத்துடன் ஒரு போராட்டம்: பிரான்சில்
மத்திய வாதத்தின் அரசியல் குணாம்சம்
By David Walsh
17 June 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
ஜூன் 9ம் திகதி நடைபெற்ற பிரான்சின் முதலாவது கட்ட பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரி
அமைப்பு எனக்கூறப்படும் லூற் ஊவ்றியேர் (தொழிலாளர்
போராட்டம்) பிரான்சின் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இவ்வமைப்பு தனது நிலைப்பாட்டு
வாக்காளர்களுக்கு விளங்கப்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டங்களை நடாத்தியது. இக் கட்டுரையாளர் வடகிழக்கு
பாரிசின் புறநகர் பகுதியிலுள்ள தொழிற்துறை நகரமான லா குர்நேவ்
(La Courneuve) இல் ஜூன் 7ஆம் திகதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்நகரம்
Alstom தொழிற்சாலைக்கு சிலமைல் தூரத்தில்
இருப்பதுடன், இங்குதான் லூற் ஊவ்றியேர் இன் வேட்பாளரான
Michel Jouannin தொழில் புரிகின்றார்.
லூற் ஊவ்றியேர் ஆனது
பிரான்சில் ட்ரொட்ஸ்கிசத்தின் கருத்துக்களுடனும், பாரம்பரியத்துடனும் இணைந்துள்ளதாக கூறும் பல அமைப்புக்களில்
ஒன்றாகும். இது 1938ல் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சர்வதேச கட்சியான நான்காம் அகிலத்தில் இணைந்துகொள்வதை
மறுத்த ஒரு தேசிய குழுவாகும். லூற் ஊவ்றியேர் நான்காம்
அகிலத்தில் தலைமையை ''குட்டி முதலாளித்துவ'' தன்மையுடையது எனவும், பிரெஞ்சு தொழிலாளர்களின் மத்தியில்
நிலைகொள்வதே முக்கியமானது என குறிப்பிட்டனர்.
Lutte Ouvrière இன் வெளிப்படையான
பிரதிநிதியான Arlette Laguiller,
குறிப்பாக
1995இன்
ஜனாதிபதி தேர்தலின் முதலாவது கட்டத்தின் பின்னர்
பிரான்சின் ஒரு தேசிய பிரதிநிதியாகியுள்ளார். இத்தேர்தலில் அவர்
5.3% வாக்குகளை பெற்றார். ஏப்பிரல் 21 இல் நடந்த இவ்வாண்டின் ஜனாதிபதி தேர்தலின் முதலாவது கட்டத்தில்
அவருக்கு மொத்த வாக்குகளில் 5.7% இனை பெற்றார். இது 16 இலட்சமாகும். அத் தேர்தலானது ஒரு தொடர்
அதிர்ச்சிகளை உருவாக்கியது. 10% வாக்குகள் ''தீவிர இடதுசாரிகள்'' என அழைக்கப்படும் கட்சிகளுக்கு கிடைத்தது.
(இதில் Ligue Communiste Révolutionnaire
(புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம்) இன்
Olivier Besancenot
4.25% இனை பெற்றார்.)
நவபாசிச தேசிய முன்னணியின் தலைவரான லு பென் 17%
வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றதுடன், சோசலிச கட்சியின் வேட்பாளரான லியொனல் ஜொஸ்பன் இரண்டாம்
கட்டவாக்களிப்பில் கலந்துகொள்ளமுடியாது போயிற்று.
சோசலிச இடதுகளுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வாக்குகளும் மற்றம் லு பென்னிற்கு
எதிரான இளைஞர்களின் பாரிய அணிதிரளுலுமான இப்புதிய நிலைமைகளை எதிர்கொண்டு,
Lutte Ouvrière இன் தலைமையானது ஒரு புரட்சிகரமான
வகையில் பிரதிபலிக்க அழைக்கப்பட்டது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், உலக சோசலிச வலைத்தளமும்
Lutte Ouvrière, Ligue Communiste
Révolutionnaire, Parti des Travailleurs (Pierre Lambert இனால் தலைமை
தாங்கப்படும் அமைப்பு) போன்றவற்றை ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டவாக்களிப்பை நிராகரிக்குமாறு ஒரு
தொழிலாள வர்க்கத்தின் புறக்கணிப்பிற்காக ஒன்றிணைந்த பகிரங்க பிரசாரத்தை செய்யுமாறு ஒரு பகிரங்க கடிதத்தை
வெளியிட்டது. உலக சோசலிச வலைத்தளத்தின் பகிரங்க கடிதமானது, முதலாளித்துவத்தின் பிற்போக்கான இரண்டு
பாதுகாவலர்களையும் எதிர்நோக்கும் தேர்தல் ஏமாற்றுக்களை நிராகரிக்குமாறும், எவர் வெற்றியாளராக வந்தாலும்
அதற்கு எதிரான போராட்டத்திற்கு இந்த புறக்கணிப்பை ஒரு வழியாக பயன்படுத்துமாறும் விவாதித்தது.
அவ்வாறான ஒரு பிரச்சாரமானது லு பென்னிற்கு எதிராக மட்டுமல்லாது, பிரெஞ்சு முதலாளித்துவத்தின்
உணர்வுபூர்வமான பிரதிநிதியான தற்போதைய ஜனாதிபதியான சிராக்கிற்கு வாக்களிக்குமாறு கோரிய சோசலிச கட்சி
மற்றும் கம்யூனிச கட்சி அடங்கலான உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பிற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு
சுயாதீன சக்தியாக முன்கொண்டு வந்திருக்கும்.
Lutte Ouvrière அல்லது
Ligue Communiste Révolutionnaire
அல்லது
Parti des Travailleurs இத் தொழிலாள வர்க்க புறக்கணிப்பிற்கு
ஆரவளிக்கவில்லை. பதிலாக அவர்கள் வித்தியாசமான வழிகளில் அனைவரும் சிராக்கிற்கான உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்கு
அடிபணிந்தனர். Ligue Communiste
Révolutionnaire இன் ஜனாதிபதி வேட்பாளர், தானே சிராக்கிற்கு
வாக்களிக்க போவதாக அறிவித்தார். Parti des
Travailleurs தன்னிடம் கொள்கை எதுவுமில்லை என்றது.
Lutte Ouvrière
மழுப்பியது.
முதற்கட்ட வாக்களிப்பின் ஒரு வாரத்தின் பின்னர்
Lutte Ouvrière,
இரண்டாம் கட்ட வாக்களிப்பில் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிப்பிற்கு
சென்று வெற்றுவாக்கை அல்லது செல்லுபடியற்ற வாக்கை வழங்குமாறு அழைப்புவிட்டது. தேர்தலை நிராகரிக்குமாறு
ஒரு பகிரங்க பிரச்சாரத்தை செய்வதற்கும், செய்தியாளர் மாநாட்டை கூட்டுவதையும், பொதுக்கூட்டத்தை நடாத்துவதையும்,
ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து இப்பிரச்சனையில் கூடியளவு மக்களுக்கு கல்வியறிவூட்டுவதற்கு பதிலாக அவர்கள்
பின்வாங்கினர். ''இடது'' செய்தித்துறையாலும் தொழிற்சங்க வட்டாரங்களாலும் அதனது நிலைப்பாடு தொடர்பான
முன்வந்த நிலையை பிரதிபலித்து அவ்வமைப்பானது வாக்களிப்பதோ அல்லது வாக்களிக்காதுவிடுவதோ அல்லது யாருக்கு
வாக்களிப்பது என்பதோ ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரித்தானது என விவாதித்தது.
Arlette Laguiller
தமது பத்திரிகை ஆசிரிய தலையங்கத்தில் ''ஒவ்வொருவரும் தமக்கு எது சரியானது என தோன்றுகின்றதோ அதை செய்யவேண்டும்.
ஆனால் அவர்கள் தமது வாக்களிப்பின் எதிர்கால விளைவைப் பற்றியும் கவனத்திற்கு கொள்ளவேண்டும்'' என எழுதினார்.
அக் கட்டுரை ஆசிரியர் கலந்கொண்ட ஜூன் 7ஆம் திகதி நடைபெற்ற அக்கூட்டத்தில்
அதிகளவிலானோர் கலந்துகொள்ளவில்லை. அக்கூட்டமானது
Lutte Ouvrière இன் பிரதி தலைவரான
Cécile Duchêne
இனதும் கட்சியில் பிரதான வேட்பாளரான
Michel Jouannin
இனதும் அறிக்கையுடன் ஆரம்பித்தது. ஒரு காரியாலய பணியாளரும்
Lutte Ouvrière
இன் நீண்டகால அங்கத்தவருமான
Cécile Duchêne
அப்பிரதேசத்தின் மோசமான நிலைமைகளை விபரித்து சுருக்கமாக உரையாற்றினார்.
அவர் பல தொழிற்சாலைகள் அங்கிருந்து வெளியேறுவதால்
La Courneuve பிரதேசத்தில் தமது மகன்மாருக்கும் மகள்மாருக்கும்
எதிர்காலமில்லை எனவும், வரி பெறும் அடித்தளத்தை மாநகரசபை இழப்பதால் வீதிகளை சுத்தம் செய்வதோ அல்லது
திருத்துவதோ கடினமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
Michel Jouannin தனது ஒரளவு
நீண்ட அறிக்கையில் முதற்கட்ட ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பை பற்றி அது ஒரு ''வழமைக்கு மாறானது'' என குறிப்பிட்டார்.
சிராக்கிற்கு சார்பான பிரச்சாரத்தின் நிகழ்வுகளை பற்றி புலம்பி அது ''சந்தோசமில்லாவிடினும், தீவிர இடது பிரிவினை''
(அதாவது LCR
இனை) இழுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் உடனடியாகவும் தம்மை
பாதுகாத்துக்கொள்ளவும், ''இம் மண்டபத்தில் உள்ள மக்கள் அனைவரினதும், மற்றும் எனது முகத்தையும் பார்ப்பதற்கு,
லு பென்னிற்கு எதிராக சிராக்கிற்கு வாக்களிக்க விரும்பியவர்களின் உணர்வை
Lutte Ouvrière
விளங்கிக்கொள்ள வேண்டும்'' என கூறினார்.
அவர் உழைக்கும் மக்களுக்கு எதிராக ஒரு தொடர் நடவடிக்கைகளை எடுத்ததாக
லியோனல் ஜொஸ்பனின் சோசலிச கட்சியின் கூட்டு அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். அரசாங்கத்தில் இருந்து மானியத்தை
பெறும் Alstom
நிறுவனம் வேலைநீக்கம் செய்வதாகவும், 1990 களின் நடுப்பகுதியிலிருந்து அலன் யூப்பே இன் வலதுசாரி நிர்வாகத்தையே
ஜொஸ்பன் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டார். வலதுகளும் இடதுகளும் ஒரேமாதியான கொள்கைகளையே
கொண்டுள்ளதாக Michel Jouannin
விவாதித்தார். இது வாக்காளர்களை அதிருப்தியடைய செய்து, சோசலிச
கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் 4 மில்லியன் வாக்குகளை இழக்கும் நிலையை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.
சிராக்கிற்கு ஆதரவான பிரச்சாரமானது ''வலது நோக்கிய உந்துதலை'' வழங்கியுள்ளதாக
Jouannin
கருதினார். அவர்
Lutte Ouvrière வெற்றுவாக்குகளை வழங்குமாறு கூறியதாக
விளங்கப்படுத்தினார். இப்புள்ளி பற்றி குறிப்பிடுகையில் அவர் மீண்டும் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமுகமாக ''நாங்கள்
தனிமைப்பட்டிருந்த போதிலும், செய்தித்துறையால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் தொழிலாளர் முகாமின்
கொடியை பாதுகாத்தோம்'' எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் ''எந்த கட்சி தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், பாரிய முதலாளிகளும்,
பங்கு சொந்தக்காரர்களுமே முன்வருவார்கள். எங்களுக்கு எங்களது சொந்த கொள்கை தேவை'' எனக் குறிப்பிட்டு,
Lutte Ouvrière
இன் முன்னோக்கில் வேலை நீக்கத்திற்கு எதிராகவும், நிறுவனங்களின் கணக்கு புத்தகங்களை
திறக்கவேண்டும் என்ற நடவடிக்கைகளுக்காக அழைப்புவிட்டதாக'' குறிப்பிட்டார். அவர் மேலும் ''கடந்த கால''
சோசலிசக் கட்சி மற்றும் கம்யூனிச கட்சியை போன்ற ஒரு கட்சியை கட்டுவதே
Lutte Ouvrière
இன் நோக்கம் என குறிப்பிட்டார். அத்துடன் தமது கட்சியின் வேட்பாளர்களுக்கு
கூடிய வாக்குகள் கிடைப்பதை சாத்தியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இவ் ஆரம்ப அறிக்கை குறித்து சில விடயங்களை குறிப்பிடவேண்டும். அதனது பொதுவான
வழக்குமுறையான தன்மையை விட அதில் குறிப்பிடப்பட்டவற்றில் கூடியளவானவை 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர்
வழங்கியிருக்கப்படகூடியது. மத்திய ஆசியாவில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலையையிலும், மத்திய கிழக்கின் கசப்பான
மோதல்களினதும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு அணுவாயுத யுத்த அபாயத்திற்கும், பொதுவாக
நிலையற்றதும், உறுதியற்றதுமான உலக நிலைமையின் மத்தியிலும், பிரான்சின் எல்லைகளுக்கு அப்பால் ஒரு வார்த்தையும்
குறிப்பிடப்படிவில்லை. ஒரு தேசிய தேர்தலில் தமது கட்சி 1 1/2
மில்லியன் வாக்குகளை பெற்றது குறித்து ஒரு சிறு குறிப்புகூட ஒரு
பேச்சாளராலும் குறிப்பிடப்படவில்லை. எவ்வாறிருந்தபோதிலும்
Lutte Ouvrière
தனது சொந்த முக்கியத்துவத்துடனான கருத்துக்களுடன் இணைத்துக்கொண்ட ஒரு
அமைப்பாகும்.
கேள்வி- பதில் வேளையில் ஒரு பெண்மணி, தேசிய முன்னணியில் வலது
சாரிகள் பெரும்பான்மையை பெற்றால் 5% வரி வெட்டினை நடைமுறைப்படுத்த தற்காலிக பிரதமரான
Jean-Pierre Raffarin
உறுதியளித்துள்ளது பற்றி கேட்டார்.
அதற்கு Jouannin
தேர்தலில்
Lutte Ouvrière இற்கு வாக்களிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தைப்
பற்றி மேலதிகமாக உரையாற்றியதுடன், அது முக்கியமாக ஆர்வமற்றுள்ள தொழிற்சங்கங்களில் உள்ள போர்க்குணமிக்கவர்களையும்,
மக்களையும் இன்னும் உற்சாகப்படுத்தும் எனவும், இது தொழிலாள வர்க்கத்துடனான ''இணைப்பை '' மறுசீரமைக்கும்
என குறிப்பிட்டார்.
இக்கட்டுரையின் ஆசிரியர்
''நீங்கள் இரண்டாவது கட்டவாக்களிப்பில் ஒரு நிராகரிப்பிற்கு ஏன்
அழைப்புவிடவில்லை?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு
Jouannin ''அது
எனது நிலைப்பாடக இருந்திருக்குமானால் நான் அதற்கு ஏற்கனவே பதிலளித்துவிட்டேன்'' என குறிப்பிட்டார்.
அக்கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நீடித்தது.
அக்கலந்துரையாடலில் பலதடவை எனது கேள்விக்கு பதிலளிக்குமுகமாக உரையாற்றப்பட்டது.
முதலாவது, நாங்கள் கடந்த 7 வாரங்களாக பிரான்சில் பலதடவை கேள்விப்பட்ட ''சக்திகளுக்கு இடையிலான உறவுகளின்''
சாதகமற்ற நிலைமையாகும். Arlette Laguiller
உரையாற்றும்போது மக்களை கிளர்ந்து எழச்செய்ய
முடியாதுள்ளதால், Lutte Ouvrière
இன்னும் நிகழ்வுகளை பாதிக்ககூடியதாக இல்லை என
Duchêne குறிப்பிட்டார்.
''வெற்று வாக்கு'' என்பது
Lutte Ouvrière இன் நிலைப்பாட்டுடன் ஒத்துக்கொள்ளாதவர்களுடன்
செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு என அவர் ஒத்துக்கொண்டார். வேறுவார்த்தைகளில் குறிப்பிடுவதானால் தற்போதுள்ள
அரசியல் பிரச்சனைகளுக்கு அல்லது இருப்பதாக கருதப்படும் பிரச்சனைகளுக்கு அடிபணிந்துபோவதாகும். நான் நிராகரிப்பிற்கான
அழைப்பு விட்டபோது ''பிரெஞ்சு எழுச்சியின் காலகட்டத்தில்'' உள்ளதாக
Laguiller ஒருவிதமான
வன்சொல்லுடன் குறிப்பிட்டார்.
Jouannin இன்னொருவாதமாக
கதையை கூறினார். அவர் செய்தித்துறையினர் தம்மை எவ்வாறு நடாத்தினார்கள் என்பது தொடர்பாக முறையிட்டார்.
அதாவது Lutte Ouvrière
இனது வெற்றுவாக்களிக்குமாறு விடுத்தகோரிக்கை தொடர்பாக அவர்கள் நடாத்தியது
தொடர்பாகவாகும். ஏன் ஒரு மார்க்சிஸ்ட் என கூறப்படுபவர் முதலாளித்துவ பத்திரிகையிடமிருந்து சிநேகிதபூர்வமான
அணுகுமுறையை எதிர்பார்க்கவேண்டும் என அவர் விளக்கவில்லை.
சிராக்கிற்கு சார்பாக செல்லுமாறு ''பாரிய அழுத்தம்'' இருந்ததாக
Jouannin குறிப்பிட்டார்.
நான் மே தினத்திற்கு சமூகமளித்திருந்தேனா எனவும் அவ் ஊர்வலத்தில்
Lutte Ouvrière
பிரிவினர் கூக்காட்டப்பட்டு வெறுப்புணர்வு காட்டப்பட்டதை கவனித்தேனா என
கேட்டார். ஆனால் அவர்களில் அதிகமானோர் சோசலிச கட்சியின் மத்தியதர தட்டினராக இருந்தனர் என்பதையும்
அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
இவ்விடயத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆதரவாளர்களும், உலக
சோசலிச வலைத்தளமும் மே தினத்தில் சமூகமளித்திருந்ததுடன், கூட்டத்தினரின் மத்தியில் நின்று ''சிராக்கிற்கும், லு
பென்னிற்கும் இல்லை, பிரெஞ்சு தேர்தலில் ஒரு தொழிலாள வர்க்க நிராகரிப்பிற்கு'' என்ற தலையங்கத்துடனான
துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தனர். நாங்கள் ஒரு சிறிய மத்தியதர தட்டு பிரவினரின் எதிர்ப்பை நோக்கியபோதிலும்,
பாரியளவினர் எமது பிரசுரத்திற்கு கூடிய அக்கறையை காட்டனர்.
Lutte Ouvrière செய்தித் துறையினதும்
''இடதுகளினதும்'' பயமுறுத்தலுக்கு உள்ளாகி அரசியல் ரீதியாக அடிமட்டத்தில் வீழ்ந்து இருந்தது. நான்
Jouannin இனது
உரையையும் அக்கூட்டத்தையும் எடுத்துக்காட்டியபடி, அங்கு உள்ளடங்கியிருந்து பிரச்சனை தனிப்பட்டவர்களின் ஊக்கமல்ல,
மாறாக அரசியல் முன்னோக்காகும். ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரத்தையும், அப்படியான சக்திகளையும் நோக்கி
அணிதிரண்டு, Lutte Ouvrière
இனால் அரசியல் நிலைமை தொடர்பாக ஒரு தெளிவற்ற முடிவிற்கே வரமுடிந்தது.
பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர அங்கத்தவர்களால் நிராகரிப்பு தொடர்பாக
விளங்கிக்கொள்ள முடியாதிருந்ததாகவும், ஒரு பெண்ணிலைவாதி ஒருவருடன் தனது கட்சியின் நிராகரிப்பு நிலைப்பாடு
தொடர்பாக நடந்த விவாதத்தில் தன்னை அவர் மோசமாக தாக்கியதாகவும்
Jouannin குறிப்பிட்டார்.
தான் வேலைசெய்யும் தொழிற்சாலையில் சிராக்கிற்கான ஆதரவு குறைவானதாகவும், வெற்றுவாக்கு தொடர்பான
கோரிக்கை ஒரு ''தூண்டகூடியதாக'' இருந்தது எனவும் ஏற்றுக்கொண்டார்.
Duchêne இதில் மீண்டும் தலையிட்டு
Lutte Ouvrière
உண்மையான கட்சியல்ல என்பதை எடுத்துக்காட்டினார். அவர் ''நாங்கள்
எல்லாவிடத்திலும் இருக்கவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி எல்லா விடங்களிலும் தமது ஆதரவாளர்களை வைத்திருக்கின்றது.
இதனை விளங்கிக் கொள்ளவேண்டும், எனவும் இம்மாலையின் இன்னொரு தலையங்கமான
Lutte Ouvrière
இனது பிரெஞ்சு கம்யூனிச கட்சி பற்றிய கருத்தினை அறிமுகப்படுத்தினார்.
அவ்வேளையில், ''உலக அரசியல் நிலைமை தொடர்பான
Lutte Ouvrière
இன் ஆய்வு என்ன?'' என நான் கேள்வி எழுப்பினேன்.
Duchêne ஒரு அசட்டு
சிரிப்புடன், கண்களை செம்மறியாடு உருட்டுவதுபோல் உருட்டி, இது ஒரு தேவையற்ற கேள்விபோல் பார்த்தார்.
நான் பின்னர் ''உங்களது சர்வதேச வேலைத்திட்டம் என்ன என கேட்டேன்?''. இதற்கு அவர் பாய்ந்து வந்து ''சகலவிதத்திலும்
மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய ஒரு சமுதாயத்தின் தேவையைப் பற்றி'' தமது கட்சியின் நிலைப்பாட்டை பற்றி குறிப்பிட்டார்.
மேலும், ஆகக்குறைந்தது 18ம் நூற்றண்டிலிருந்து முதலாளித்துவம் நீண்டகாலம் இருப்பதாகவும், இது சகல இடத்திலுமுள்ள
மக்கள் அனைவரையும் சுரண்டுவதாகவும், எங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் கட்சி தேவை. எனவே
தொழிலாளர்கள் பல நாடுகளில் புரட்சி செய்யலாம். நாங்கள் இதற்கு மிகதொலைவில் உள்ளோம். நாங்கள் பிரான்சில்
கட்சியை கட்டுகின்றோம். Lutte Ouvrière
இன் மூலோபாயம் பிரான்சில் ஒரு பாரிய கட்சியை கட்டுவது எனவும், இதனை
பின்னர் மற்றைய நாடுகளில் முன்மாதிரியாக கொள்ளலாம்'' என
Duchêne குறிப்பிட்டார்.
இவைதான் உலக நிகழ்வுகள் தொடர்பான அவரின் ஆய்வின் கூட்டாகும்.
Duchêne மீண்டும்
Lutte Ouvrière
இன் முக்கியத்துவமின்மை குறித்து ''நாங்கள் இன்னும் ஒரு சிறிய குழு. ஒரு உண்மையான
கட்சி எம்மைப் போலல்ல'' என குறிப்பிட்டபோது நான் ''உண்மையான கட்சி'' என நீங்கள் எதனை கருதுகின்றீர்கள்
என கேட்டபோது, அதற்கு அவர் ''பிரான்சின் கம்யூனிச கட்சி போன்ற ஒரு கட்சி எனவும் இதற்கு எல்லாவிடத்திலும்
போர்க்குணமிக்கவர்கள் இருக்கின்றார்கள். அது தான் உண்மையான கட்சி, எங்களுக்கு அப்படியான ஒரு அமைப்பு
இல்லை'' என கூறினார்.
ஒரு கட்சி அக்காலகட்டத்தில் பிரபல்யமாக இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, ஒரு
கட்சியானது பாரிய கொள்கைகளின் மீதுதான் கட்டப்படுவது என நான் தெரிவித்தேன். இவ்வேளையில் கூட்டத்திலிருந்து
இரண்டு தொழிலாள வர்க்கத்தினர், முன்னைய பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்காளர்கள் பலர் தற்போது தேசிய
முன்னணிக்கு வாக்களிப்பதாக தெரிவித்தனர். ஒரு பெண்மணி அப்படியானவர்களை தனக்கு தனிப்பட்டரீதியில் தெரியும் எனவும்
குறிப்பிட்டார்.
அத்தருணத்தில் Duchêne
இடைமறித்து, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் போர்க்குணமிக்கவர்கள்
லு பென்னை ஆதரவளிக்கவில்லை எனவும், அப்போர்க்குணமிக்கவர்கள் இனவாதிகள் அல்ல எனக்கூறி அத் தலையங்கத்தை
தொடர்ந்தார்.
இங்கு அவர்கள் செய்தது, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தொடர்பான தொழிலாள வர்க்கத்தின்
விமர்சனத்தின் மீது Lutte Ouvrière
தலையிட்டு
அக்கட்சியின் மதிப்பை பாதுகாத்தது. அம்மாலை நேரம் முழுவதிலும் ட்ரொட்ஸ்கியின்
பெயர் ஒருவராலும் உச்சரிக்கப்படவில்லை. எந்த கட்சி கூடியிருக்கின்றது என்பதை அறியாமல் வீதியால் செல்லும் ஒருவர்
இக்கூட்டத்தை அவாதானித்தால் அது ஒரு ஸ்ராலினிச முகாமின் ஒரு ''இடது'' பிரிவு ஒன்றின் கூட்டம் என்றே கருதுவார்.
இது தான் Lutte Ouvrière
இன் அரசியல் தன்மையின் சாராம்சம்.
Lutte Ouvrière பிற்போக்குதனத்தை
புகழ்ந்துரைப்பதான நோக்கு தொடர்பான விடயத்தை
Duchêne இன்னொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தினார். அவர்
''மக்கள் பலருக்கு தெரிந்த சிறந்த பேச்சாளர்களை முன்நிறுத்தவில்லை. முற்போக்கான தொழிலாளர்கள்
முன்கொண்டுவந்தோம். ஒருவர் தொழிலாளியா இல்லையா என்பதோ அல்லது ஒருவர் பலருக்கு தெரிந்தவரா என்பவை
தேவையற்ற விடயமாகும்.
''எங்களுக்கு சாதாரண தொழிலாளர்களே தேவை, நன்கு படித்த அல்லது கலாச்சாரமிக்கவர்களோ
அல்ல. உண்மையில் நாங்கள் மிகவும் கலாச்சாரமிக்க தொழிலாளர்களை விரும்பவில்லை'' என
Duchêne தெரிவித்தார்.
ஒருவர் ''மோசமான, ''புத்திஜீவி எதிர்ப்பு கம்யூனிச'', ''நிராகரிப்பு ஒருபோதும் ஒருவருக்கும் உதவவில்லை''
என்பதை பிரதிநிதித்துவப்படுத்திய Wilhelm Weitling
எதிரான கார்ல் மார்க்சின் கோபத்தை கவனத்திற்கு
கொள்ளவேண்டும்.
இன்னுமொரு Lutte
Ouvrière உறுப்பினர் ''பாரிய கொள்கைகள்'' தொடர்பான
கேள்விக்கு தமது கட்சியானது பல பத்தாண்டுகளாக அதனது வேலைத்திட்டத்திற்கும், கருத்துகளுக்கும் மதிப்பளித்திருந்ததாக
தெரிவித்தார். அவர் மேலும் ''வேலைத்திட்டத்தை மாற்றுவதற்கு காரணமெதுவுமில்லை'' எனக் கூறி
Arlette Laguiller
ஒரேவிடயத்தையே கூறுவதாக மக்கள் குறைகூறுவதாகவும், ஆனால் அது தான்
எமது பலம் என நாங்கள் நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் ''கம்யூனிஸ்ட் கட்சி கொடியை
கைவிட்டுவிட்டது, நாங்கள் அதனை எடுத்துக்கொண்டோம், நாங்கள் அப்படியான ஒரு கட்சியல்ல என்பதை உண்மையுடன்
கூறுகின்றோம்'' எனவும் கூறினார்.
அங்கு உள்ள ஒரு ''முக்கிய கொள்கை'' ஒருபோதும் கலந்துரையாடப்பட்டது கிடையாது.
அது சர்வதேசவாதமாகும். Lutte Ouvrière
உண்மையாக இருந்தது, மார்க்சிசத்தினுடன் ஒருபோதும்
ஒன்றுபடமுடியாத தொழிற்சங்க போர்க்குணத்தின் அதனது தேசிவாத முன்னோக்கிற்காகும். ஆனால் அத்தேசியவாத
முன்னோக்கு இப்போது பூகோளரீதியாக ஒன்றிணைந்த உலகப் பொருளாதாரத்துடன் ஒன்றிற்கும் உதவாது
போயுள்ளதுடன், காலாவதியாகியுள்ளது. Lutte
Ouvrière பிரான்சின் ஸ்ராலினிசத்துடனும், தொழிற்சங்கத்துடனும்
பிரிக்கமுடியாது இணைந்துள்ளது. முன்னைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மரண ஓலத்திலிருந்து ஏதாவது நம்பிக்கையை
பெற்றுக்கொள்வதற்கு மாறாக, Lutte Ouvrière
தன்னை நெருக்கடிக்குள்ளும், அவநம்பிக்கைக்கும் உள்ளாகியுள்ளது.
அவர்கள் தற்போது தாழ்ந்து செல்லும் கப்பலில் இருப்பதாக உணருகின்றனர்.
Duchêne உம்
Jouannin உம் மீண்டும் ஒருதடவை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின்
கடந்தகால பெருந்தன்மையை எடுத்துக்காட்டினர். பிரதி வேட்பாளர் ஒருவர் ''நாங்கள் கம்யூனிஸ்ட்் கட்சியின் அடித்தளத்தினரை
அடைவதற்கு முயல்கின்றோம். ஏனெனில் அங்குதான் கொள்கையுடனானவர்கள் உள்ளார்கள், எங்களுக்கு அவர்கள் தேவை''
என குறிப்பிட்டார். Jouannin
''வர்க்கப் போராட்டம் தொடர்பான உணர்மையை நாங்கள் கம்யூனிஸ்ட்
கட்சியின் அடித்தளத்தினரிடையே காண்கின்றோம். அவர்கள் ''வர்க்க உணர்மையை'' கொண்டுள்ளார்கள். இது
அவர்களின் இரத்தத்தின் ஊறியது. இத்தொழிலாளர்கள் தான் கொள்கைகளை பாதுகாக்கின்றனர்'' என மேலும் குறிப்பிட்டார்.
இப்படியானதொரு வங்குரோத்தான அமைப்பிடமிருந்துகூட இப்படியான கருத்துக்கள்
வருவது ஆச்சரியமானது. முன்னர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கூடிய உண்மையான, சோசலிச உணர்மையுள்ள தொழிலாளர்களை
தன்னகத்தே உள்ளிளுத்துக்கொண்டது. ஆனால் இன்று
Duchêne உம்
Jouannin உம் மயங்கும்
இந்த ''அடித்தளத்தில்'' உள்ள ஸ்ராலினிஸ்டுக்கள் நடைமுறையில்
Lutte Ouvrière
இன் அங்கத்தவர்கள் உட்பட ட்ரொஸ்கிஸ்டுக்களை கற்களுடனும், பேஸ் பந்து
விளையாடும் தடிகளுடனும் பின்தொடர்ந்தவர்களாகும்.
மேலும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட்் கட்சி இன் சோசலிச சிந்தனை மிக்க போர்க்குணமிக்க
தொழிலாளர்களின் அடித்தளம் இல்லாது அரிக்கப்பட்டுள்ளது. ஸ்ராலினிச தலைமையால் தொடர்ச்சியாக தமது சந்தர்ப்பவாத,
தேசியவாத குற்றச்சாட்டுக்களால் அரசியல் உணர்மை சீரழிந்த அதிகரித்தளவில் சீழிந்து செல்லும் ஒரு சிறிய பிரிவு
தொழிலாளிகளில் தங்கியுள்ளது. இம்மதிப்பீடு தொடர்பாக ஏதாவது ஐயுறவு இருக்குமானால், அதனை கடந்த தேர்தலில்
கிடைத்த தோல்வியானது இல்லாதொழித்திருக்கும். எவ்வாறிருந்தபோதிலும், ''யதார்த்தமான உலகத்தில்'' உள்ள
தொழிலாளர்களுடன் தொடர்பை வைத்திருப்பதாக கூறும்
Lutte Ouvrière ஒரு கற்பனையான உலகத்தில் இருப்பதாகவே
தோன்றுகின்றது.
அக் கூட்டமானது ''ஸ்ராலினிச பழமைகளை'' குறிப்பிட்டதுடன் முடிவிற்கு வந்தது.
Lutte Ouvrière
இன் அங்கத்தவர்கள் உண்மையானவர்களாகவும், நல்ல நோக்கமுடையவர்களாகவும்
காப்படுகின்றனர். அவர்களில் பலர் அவர்களது அமைப்பின் பலவருடகால தொழிற்சங்கவாத நடவடிக்கைகளால் தொழிற்சங்க
முத்திரை குத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பல்லைகடித்துக்கொண்டு எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு போவதுபோல்
காணப்படுகின்றனர். லெனின் பலவருடங்களுக்கு முன்னர் அவதானித்ததுபோல் நல்ல நோக்கங்கள் மட்டும் அரசியல்
வாழ்க்கையில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட முடியாது. ஒருவருக்கு சமுதாயம் தொடர்பாகவும், அரசியல் வரலாற்று
நிகழ்வுகள் தொடர்பாகவும் சரியான விளக்கமிருக்கவேண்டியதுடன், முற்போக்கான தொழிலாளர்களையும், இளைஞர்களையும்,
புத்திஜீவிகளையும் கவர்ந்திழுக்ககூடியதும் மற்றும் வென்றெடுக்ககூடியதுமான முன்னோக்கு ஒன்று தேவை.
Lutte Ouvrière குழுவில் காணப்படும்
தத்துவார்த்த போக்குகள் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துகூறலாம்:
அ) ஒரு முற்றுமுழுதான தேசிய அல்லது ஆகக்குறைந்தது பிராந்திய அல்லது சிறுபிரதேசவாத
பார்வையை கொண்டிருக்கின்றனர்.
ஆ) ஸ்ராலினிசம் தொடர்பான ஆச்சரியம் உண்மையில் உள்ளடங்கியுள்ளது.
இ) தனது புறநிலைரீதியான பங்கு தொடர்பாக விளங்கிக்கொள்ளாததுடன், சோசலிச
போராட்டத்தில் கருத்துக்களினதும், உணர்மையினதும் முக்கியத்துவத்தின் தேவையை உணராமை.
ஈ) தற்போதைய நிகழ்வுகள் குறித்தும் ஒரு ஆய்வினை செய்வதை விரும்பாததுடன், முதலாளித்துவ
சமுதாயத்தின் கசப்பான உண்மையுடன் திருப்தியடைந்து கொள்ளல்.
உ) மார்க்சிசத்துடன் தொடர்பற்ற ஏனைய குட்டிமுதலாளித்துவ தீவிரவாதத்துடனும், மக்கள்
வாதத்துடனும் பொதுமைப்பாட்டை கொண்ட பிற்போக்குத்தனத்தை புகழ்ந்துரைத்தல்.
ஊ) எல்லாவற்றினதும் விளைவாக சோசலிச புரட்சி தொடர்பாக ஒரு ஆழ்ந்த
ஐயுறவுவாதமும், நம்பிக்கையின்மையும்.
கூட்டாக நோக்கினால் Lutte
Ouvrière இன் சமூகத்தன்மை அவர்களின் கொள்கைகளாக தேசிய வாதத்தையும், மத்திய வாதத்தையும்
கொண்ட முக்கியமாக குட்டி முதலாளித்துவ தன்மையுடையதாகும். அவ்வமைப்பின் நடவடிக்கைகளில் இருந்து
முற்போக்கானது ஒன்றும் தோன்றமுடியாது.
See Also :
இரண்டாவது சுற்றுத்
தேர்தலில் உச்ச அளவு வாக்களிப்பின்மை
பிரெஞ்சு வலதுசாரிக் கட்சிகள் பாராளுமன்ற அறுதிப்
பெரும்பான்மையை வலுப்படுத்துகின்றன
பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தலில்
வலதுசாரி உறுதியான பெரும்பான்மையைப் பெற்றது
வாக்களிக்க செல்லாமையின் அளவு மக்களின் அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது
பிரான்சின் புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகம் தனது சந்தர்ப்பவாதத்தை பாதுகாக்கின்றது
பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தல்கள்:
இடதுகளின் அடிபணிதல்களில் இருந்து வலதுகள் அரசியல் ஆதாயம் அடைகிறது
பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் மே2002 (முழு உள்ளடக்கல்)
Top of page
|