World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள் :ஐரோப்பா : ஜேர்மனி

Bush in Berlin: illusion and reality

பேர்லினில் புஷ்: நப்பாசையும் யதார்த்தமும்
By Ulrich Rippert
28 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

இது ஒரு ''முக்கியமான உரை'', இன்னும் சில பந்திகளில் மேலும் ''வரலாற்று முக்கியமான உரை'', இதுதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்.புஷ் கடந்தவாரம் ஜேர்மன் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்கான சமூக ஜனநாயக கட்சியின் பிரதமரான ஹெகார்ட் ஷ்ரோடரின் இன் பிரதிபலிப்பாகும்.கடந்த வியாழக்கிழமையின் பின்னர், இதேமாதிரியான கருத்துக்கள் ஜேர்மனியின் முக்கிய அரசியல் தலைவர்களாலும் செய்தித்துறையினராலும் திரும்பத்திரும்ப கூறப்பட்டது.

ஐரோப்பாவிற்கான நீண்ட விஜயத்தில், பேர்லினில் புஷ் இன் உரையின் உண்மையான முக்கியத்துவம் என்னவெனில், இது அத்திலாந்திற்கு இடையிலான கூட்டு தொடர்பாக கூடுதலாக நீண்ட சலிப்புத்தட்டும் இராஜதந்திர வார்த்தைகளுக்கு மாறாக, ஜேர்மன் அரசியல் பிரிவினரால் ஆர்வத்துடனும், சில பகுதிகள் ஆச்சரியமான பிரதிபலிப்புடனும் எதிர்கொள்ளப்பட்டது.

புஷ் இனது உரை தொடர்பான பிரதிபலிப்பானது ஜேர்மனின் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. புஷ் இன் விஜயத்தின் முன்னர், பசுமைக்கட்சியை சேர்ந்த வெளிநாட்டு அமைச்சரான ஜொஷ்கா பிஷ்ஸரும், பிரதமர் ஹெகார்ட் ஷ்ரோடரும் ஈராக்கிற்கு எதிரான யுத்தமானது தவறானது என கருதுவதாக வலியுறுத்துவது எனவும், அமெரிக்க அரசாங்கம் அவ்வாறான ஒரு வழியை தேர்ந்தெடுக்காது தடுக்க தமது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்வதாக கூறியிருந்தனர்.

புஷ் தனது உரையில் ஈராக் தொடர்பாகவோ அல்லது சதாம் ஹுசென் தொடர்பாகவோ குறிப்பிடாத போதிலும், அவர் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அத்திலாந்திற்கு இடையிலான இணைந்த நலன்கள்'' குறித்து திரும்பவும் குறிப்பிட்டிருந்தார். இது அவர் பேர்லினில் தங்கியிருக்கையில் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திற்கான தயாரிப்பு தான் கலந்துரையாடலில் முக்கியமாக இருக்கும் என்பதில் ஐயுறவெதுவுமில்லை. பாராளுமன்ற அங்கத்தவர்களாலும், அரசாங்க அங்கத்தவர்களாலும் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட ''எழுந்து நின்று கைதட்டலானது'' இது தொடர்பான ஜேர்மனின் உடன்பாட்டையே காட்டுகின்றது.

புஷ் இனது உரையை தொடர்ந்து, பாராளுமன்ற வராந்தாவில் ஜொஷ்கா பிஷ்ஸர் தாம் ''ஈராக் தொடர்பாக தாம் நிட்சயமாக'' கதைத்தாகவும், ஆனால் அமெரிக்க ஜனாதிபதி அப்படியான ''குறிப்பிட்ட திட்டங்கள்'' எதுவுமில்லை என பலதடவை குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். செய்தித்துறையினருக்கு ''அடுத்துவரும் காலத்தில் ஈராக் நிகழ்ச்சி நிரலின் உச்சியில் இருப்பதாக தாம் கருதவில்லை '' என ஜொஷ்கா பிஷ்ஸர் தெரிவித்தார். ஜேர்மன் பத்திரிகையான Der Spiegel ''ஜேர்மனியின் அடுத்த பொதுத்தேர்தல் நடக்கவுள்ள செப்டம்பர் 22 இற்கு முன்னர் ஈராக் மீதான யுத்தம் தொடர்பாக குறிப்பிடப்பட கூடாது என கதவுகளுக்கு பின்னால் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக'' குறிப்பிட்டது.

இப்படியான ஒரு உடன்பாடானது, யுத்தத்திற்கான தனது தயாரிப்பை ஜேர்மன் மக்களின் முதுகின் பின்னால் செய்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன், அதன்மூலம் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தேர்தலை குழப்பாது இருக்க விரும்புகின்றனர். அமெரிக்க தலைமையிலான ஈராக்கிற்கு எதிரான தாக்குதலுக்கு ஜேர்மன் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவை என்பதால், அப்படியான ஒரு விவாதத்தை தேர்தலுக்கு முன்னர் கூட்டு அரசாங்கம் விரும்பவில்லை.

ஈராக்கிற்கு எதிரான யுத்தம் தொடர்பாக ஜேர்மனின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, யுத்தம் தொடர்பாக பிரச்சனை வரும்போது அல்லது வேறெந்த விடயம் தொடர்பாகவோ அமெரிக்கா மீது எவ்விதமான ஆழுமையை செலுத்தும் நிலையில் பேர்லினோ அல்லது வேறு எந்த ஐரோப்பிய தலைநகரமும் இல்லை என்பது கடந்த சில மாதங்களாக தெளிவாகியுள்ளது. இரண்டாவதாக, ஜேர்மன் அரசாங்கம் தனது சொந்த ஏகாதிபத்திய நலன்களுக்காகவும், உலகத்தின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் அமெரிக்கா தனது ஆதரவான அரசுகளை உருவாக்கும்போது அதிலிருந்து அந்நியப்பட்டிருக்க தான் விரும்பவில்லை. மூன்றாவதாக, யுத்தமானது ஏற்கெனவே ஆரம்பித்துள்ள ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் இராணுவமயமாக்கல் திட்டங்களை இன்னும் முற்கொண்டு செல்ல சேவைசெய்யும்.

புஷ் இற்கு கிடைத்த கைதட்டலானது, ஐரோப்பிய கட்சிகளின் வலது பக்க திருப்பத்தின் வெளிப்பாடுமட்டுமல்லாது, அதிகரித்துவரும் சமூகப்பிரச்சனைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் அவர்களிடம் ஒரு தீர்வு இல்லாததன் பிரதிபலிப்புமாகும். வேலையில்லா பிரச்சனைகளுக்கும், ஏழ்மைக்கும், சமூக நெருக்கடியும் அதிகரித்துவரும் நிலைமையின் கீழ் ஐரோப்பிய அரசியல் தட்டினர் அதிகரித்தளவில் பயமுறுத்தலுக்குள்ளாவதுடன், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அந்நியப்படுவதால் அவர்களது நெருக்கமான தட்டினர் பயமுறுத்தலுக்குள்ளாகின்றனர். பாராளுமன்றத்தில் அமெரிக்காவினது யுத்தநோக்க கொள்கைகளுக்கு கிடைத்த கைதட்டலானது வெளிநாட்டு எதிரிகளை நோக்கி மட்டுமல்லாது உள்நாட்டு எதிரிகளுக்கும் எதிரானதாகும்.

யதார்த்தமற்ற சூழ்நிலை

புஷ்ஷின் விஜயத்தின்போது உத்தியோகபூர்வ அரசியலுக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி உணரக்கூடியதாக இருந்தது. இது ''திரு.ஜனாதிபதி எங்களுக்கு உங்கள் யுத்தம் வேண்டாம்'', என்ற சுலோகங்களுடன் கலந்து கொண்ட பல ஆயிக்கணக்கானோரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பாராளுமன்றத்தில் எழுந்துநின்று கைதட்டலிலும் பிரதிபலித்தது. இது அவரது முழு பயணத்திலும் வெளிப்படையாக தெரிந்தது. அவர் மீண்டும் மீண்டும் ''மக்களின் நலன்கள் பாலான கொள்கை'', ''சுதந்திரமும் மனித உரிமையும்'' தொடர்பாக குறிப்பிட்டபோதிலும் ஒரு சாதாரண மக்களையும் சந்திக்கவில்லை.

தனது உரையின் போது, ஜனாதிபதி ஜோன் எவ். கெனடியின் ஜேர்மன் விஜயத்தின்போது திறந்த வாகனத்தில் அப்போதைய ஜேர்மன் பிரதமரான வில்லி பிரண்ட் உடன் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் கைதட்டி வரவேற்றது, 1987 இல் பிரண்டன்பேர்க் நுளைவாசலில் நின்று பாரிய மக்கள் முன்னால் பிரசித்தமான வாசகமான ''திரு.கோர்பச்சேவ் சுவரை உடைத்துவிடுங்கள்'' என றொனால்ட் றேகன் கூறியது போன்ற கடந்தகாலத்தைப்பற்றி குறிப்பிட்டபோதிலும், இவற்றிற்கு மாறாக புஷ் ஜேர்மன் மக்களிடமிருந்து முற்றாக அந்நியப்பட்டிருந்தார். அவரினது விஜயம் தக்காளிப்பழம், முட்டை வீச்சு போன்றவற்றால் கட்டுப்படுத்தப்படாதிருப்பது தொடர்பாக அதிகம் பயமிருந்தது.

நகரத்தின் வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றத்தை சுற்றியுள்ள கூடுதலான பகுதி காற்றுபுகாதபடி முடப்பட்டிருந்்தது. பொலிஸ் தடைகளை கடப்பது சாத்தியமற்றதாக இருந்தது. இப்பிரதேசத்தில் வாழ்பவர்கள் பொலிசாரால் காவல் காக்கப்பட்டதுடன், ஒவ்வொரு தடவையும் அவர்கள் வீடு திரும்பும்போது உடல்முழுவதும் சோதனைக்குள்ளானது. பொலிஸ் வானவூர்திகள் மேலே சுற்றிக்கொண்டிருந்ததுடன், நகரத்தின் மத்தியில் முக்கிய கூரைகளில் எல்லாம் துப்பாக்கி குறிவைக்கப்பட்டிருந்தது. இதனால் பேர்லின் நகரத்தவர்கள் கண்கூடாகவே குழப்பப்பட்டிருந்தனர். ஒரு வயோதிபமாது தொலைக்காட்சிக்கு ''அவர் மக்களுக்கு இவ்வாறு பயந்தால், ஏன் இங்குவர யோசித்தார்?'' என வினாவினார்.

புஷ் இனால் குறிப்பிடப்பட்டதில் மிக சுவாரஸ்யமானது கவனமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையல்ல மாறாக, பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அறிக்கையில் தன்னை சுற்றியுள்ள சூழ்நிலை தொடர்பாக ''தான் ஒரு பலூனினுள் வாழ்வதாக'' குறிப்பிட்டது ஆகும்.

இந்த யதார்த்தமற்ற சூழ்நிலையானது தனிய வெளிக்காரணிகளால் மட்டும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது அவரது உரையிலும் எடுத்துக்காட்டப்பட்டது. ஒரு சந்தர்ப்பந்தத்தில் தனது இரக்கத்தன்மையை காட்டவதற்கு தான் ஒவ்வொரு மனிதவாழ்க்கை தொடர்பாகவும் அக்கறைப்படுவதாக குறிப்பிட்டார். இவ்வாசகங்கள் ரெக்ஸாஸ் மாநிலத்தின் ஆளுனராக இருந்தபோது 150 மரணதண்டனைகளுக்கு தானாக அத்தாட்சிப்படுத்திய ஒரு மனிதனிடமிருந்து வருகின்றது.

நீண்ட உரையில் புஷ் ''அமெரிக்க -ஜேர்மன் உறவு தொடர்பாகவும், இணைந்த பெறுமானங்கள், நலன்கள்'' தொடர்பாகவும் குறிப்பிட்டார். ஆனால் இவ்வாறான உறவுகள் நீண்டகாலத்திற்கு முன்னரே இவை எவ்வாறு மங்கிப்போய்விட்டன என்பது அனைவருக்கும் தெரியும். அண்மைக்காலத்தில், முரண்பாடுகளும், நலன்கள் தொடர்பான மோதல்களும் எல்லாமட்டத்திலும் காட்டப்படுகின்றது.

யதார்த்தத்தை ஒடுக்குவது புஷ் இடம் மட்டும் கட்டுப்பட்டு நிற்கவில்லை. இது அவரது உரைக்கு கைதட்டியவர்களிடமும் பிரதிபலித்தது. பசுமைக்கட்சியின் பிரதி தலைவரான Cem Özdemir ''புஷ் தனது உரையில், ஐரோப்பியர்கள் எதிர்பார்த்ததை கூறினார் '' என குறிப்பிட்டார். அவரது கட்சியை சேர்ந்தவரும், ஆப்கான் யுத்தத்தில் ஜேர்மனியின் பங்கெடுப்பிற்கு எதிராக வாக்களித்தவரும், இடது பிரிவினர் எனக்கூறப்படும் Winfried Herrmann இன்னுமொரு படி சென்று ''இது கடும்போக்கான புஷ் அல்ல என குறிப்பிட்டார். பசுமைக்கட்சி அரசியல்வாதிகளை ஆட்கொள்வது எவ்வளவு சுலபமாகவுள்ளது?

தம்மால் தீர்வு காணமுடியாத பிரச்சனைகளை எதிர்கொள்கையில், ஆளும் தட்டானது உண்மையை வெளிப்படையாக நோக்க தயங்குவது முன்னரைப்போல் இல்லாது அபூர்வமாகவுள்ளது.

அத்திலாந்திற்கு இடையில் அதிகரித்துவரும் பதட்டம்

உண்மைகள் கடுமையானவையே. அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான கடந்தகால உறவு தொடர்பான புஷ் இன் பெருமைப்படுத்தலோ அல்லது பாராளுமன்றத்தின் கைதட்டல்களோ வாஷிங்டனின் பேர்லின் கலந்துரையாடல்களோ அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையாலான முரண்பாடுகளை இல்லாதொழிக்கபோவதில்லை.

ஆப்கானிஸ்தானின் மீதான யுத்தத்தின்போதும், அதன் பின்னரான ஈராக் மீதான தற்போதைய அமெரிக்க யுத்ததயாரிப்பிலும் அது தனது சொந்த பூகோள, மூலோபாய நலன்களை பின்பற்றுகின்றது என்பது கடந்த காலத்தில் மிகவும் தெளிவானது. பலவருடங்களுக்கு முன்னரே வலதுசாரி புத்திமான்கள் மத்திய ஆசியாவில் இராணுவ நடவடிக்கை தொடர்பாக விவாதித்துள்ளனர். 1997 இல் முன்னாள் ஜேர்மன் வெளிநாட்டு அமைச்சரான Hans-Dietrich Genscher முன்னுரை எழுதிய, அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரான Zbigniew Brzezinski இன் புத்தகத்தில் அவர் மத்திய ஆசியா தொடர்பாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், ''எதிர்காலத்தில் உலகத்தை யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதை தீர்மானிப்பது மத்திய ஆசிய சதுரங்கப்பலகையாகும்''. மேமாத ஆரம்பத்தில் NBC தொலைக்காட்சி செப்டம்பர் 11ம் திகதி கடத்தப்பட்ட இரண்டு விமானங்கள் உலக வர்த்தக மையத்தையும், பென்டகளையும் தாக்கமுன்னரே அல் கொய்தாவை தாக்குவதற்கான யுத்ததிட்டம் ஜனாதிபதியின் கையெழுத்திற்காக மேசையில் இருந்ததாக குறிப்பிட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பதே கேள்வியாக இருந்தது.

அண்மையில் ஐரோப்பிய, அமெரிக்க நலன்கள் மோதிக்கொள்ளவதற்கு மத்திய கிழக்கு நல்லதொரு உதாரணமாகும். இஸ்ரேலிய தாக்குதலால் றமல்லாவில் தாக்கியளிக்கப்பட்ட இரண்டு நகரங்களிலும் இருந்த பாலஸ்தீனிய நிர்வாகத்தின் கட்டுமானங்கள் அனைத்தும் ஐரோப்பிய நிதியுதவியால் கட்டப்பட்டதாகும்.

ஐரோப்பிய உருக்கு இறக்குமதி தொடர்பாக வாஷிங்டனால் விதிக்கப்பட்ட தண்டிக்கும் நடவடிக்கைகள் ஐரோப்பாவின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. தனது உள்ளூர் உருக்கு உற்பத்தியை பாதுகாக்க அமெரிக்கா இவ்வருடம் மார்ச் இல் இருந்து தனது இறக்குமதியை தடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு இதனால் ஐரோப்பா வருடாந்தம் 2.4$ பில்லியனை இழக்கவேண்டியிருக்கும் எனவும், வர்த்தக ஆணையாளர் Pascal Lamy அமெரிக்க இறக்குமதி மீதான ஐரோப்பிய தடைகுறித்து தெரிவித்துள்ளார்.

மேலதிக மோதல் ஒன்று தனது நிழலை காட்டுகின்றது. ஐரோப்பிய ஒன்றிணைப்பின் கீழ் ஐரோப்பா விவசாயத்திற்கான தனது மானியங்களை குறைக்கையில், அமெரிக்கா தனது விவசாயத்திற்கான மானியத்தை ஆதிகரித்துள்ளது. சில பத்திரிகை அறிக்கைகள் வர்த்தக யுத்தத்தின் சாதகமான தன்மை தொடர்பாக குறிப்பிட்டுள்ளன.

அத்திலாந்திற்கு இடையிலான மோதல்களுக்கான இன்னுமொரு பிரச்சனை, அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக Anti-Ballistic Missile Treaty (ஆயுத கட்டுப்பாட்டு உடன்பாடு) இருந்து விலகுவதாக அண்மையில் குறிப்பிட்டதாகும். மனித உரிமைகளுக்கான சர்வதேச நீதிமன்றம் தொடர்பான முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளதுடன், காபன் ஒர் ஒட்சைட்டை (carbon monoxide) குறைக்கும் சுற்றுசூழல்பாதுகாப்பு தொடர்பான Kyoto உடன்பாட்டையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

இப்படியான நிலைமைகளின் கீழ், ஜேர்மனினதும் அமெரிக்காவினதும் அரசியல்வாதிகள் ஒரு சிக்கலான நிலையை எதிர் நோக்குகின்றனர். முரண்பாடுகள் அதிகரிக்கையில் அமெரிக்காவினது இராணுவ மேலாதிக்கநிலையை மோசமான வகையில் பாவிக்க முனையும்போது பேர்லினையும், புறூசல்சையும் பாரிய பங்கு வகிக்கமுடியாததாக்கியுள்ளது. எவ்வாறிருந்தபோதிலும் ஐரோப்பிய ஆளும் தட்டு தனது பொருளாதார, இராணுவ நிலையை சிறப்பாக எல்லாத்துறையிலும் பாதுகாக்க முனைகின்றது.

சகோதரத்துவமான வார்த்தைகளுக்கும், பரஸ்பர வாழ்த்துக்களுக்கும் மத்தியில் அத்திலாந்திற்கு இடையிலான மூர்க்கமான மோதல்களுக்கான காலகட்டத்தை திறந்துள்ளது. இது உலகளவிலான சமநிலையை அதிகரித்தளவில் அபாயத்திற்குள்ளாக்கின்றது.