WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
Cover-up and conspiracy: The Bush administration and September 11
சதியும் மூடி மறைப்பும்: புஷ் நிர்வாகமும் செப்டம்பர் 11ம்
By the Editorial Board
18 May 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
செப்டம்பர்11க்கு ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னரே புஷ்-க்கு அமெரிக்க விமானத்தைக்
கடத்தி, அதனை சம்பந்தப்படுத்தும் பயங்கரவாதத் தாக்குதலின் ஆபத்துப்பற்றி விவரிக்கப்பட்டதாக பத்திரிகை செய்திகள்
வெளிவந்ததைத் தொடர்ந்து, புஷ் நிர்வாகமானது பெரும் நெருக்கடியில் மூழ்கி உள்ளது. கடந்த ஆகஸ்டில் உளவுத்
தகவல் அனுப்பப்பட்டு, எச்சரிக்கை செய்த போதும், வெள்ளை மாளிகையானது அமெரிக்க வரலாற்றிலேயே மிகக்
கொடிய பயங்கரவாத நடவடிக்கையை முன்னுணர்ந்து தடுக்க அல்லது பொதுமக்களை எச்சரிக்க நடவடிக்கை எதையும்
எடுக்கவில்லை.
கடந்த 48 மணிநேர வெளிக்காட்டல்கள், மிகக் குறைந்த அளவிலேனும், நியூயோர்க்கிலும்
வாஷிங்டனிலும் 3000 மக்களைக் கொன்றழித்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பற்றிய தகவலை
கடந்த எட்டு மாதங்களாக மறைத்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னரான நாட்களில், புஷ் நிர்வாக அதிகாரிகள் தற்கொலைத்
தாக்குதல்களை மறைந்து செய்யும் தாக்குதல் என்றும் அதற்கான "எச்சரிக்கை இருந்திருக்கவில்லை" என்றும் திரும்பத்
திரும்பப் பண்பிட்டனர். இந்த அறிக்கைகள் இப்பொழுது பொய் என அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன - இந்த உண்மை,
ஏன் வெள்ளைமாளிகையானது தான் பெற்ற எச்சரிக்கை இயல்பினை மறைக்க விழைந்தது என்ற கேள்வியை தவிர்க்க
முடியாதவகையில் எழுப்பியது.
உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலுக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னர், ஆகஸ்டு
6 அன்று சி.ஐ.ஏ-ன் குறிப்புக்களை, அது ஒசாமா பின் லேடனுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் விமானம்
கடத்தப்படும் உடனடி சாத்தியம் பற்றிக் கூறும் குறிப்புக்களை, புஷ் பெற்றிருந்தார் என்ற புதன்கிழமை அன்று வெளியான
சி.பி.எஸ் செய்தி அறிக்கையுடன் இந்த மூடிமறைப்பானது, கடந்தவாரம் நீங்கத் தொடங்கி இருக்கிறது. இது வியாழக்கிழமை
மற்றும் வெள்ளிக்கிழமை செய்தி ஊடகங்களில் வெடிக்கும் செய்தி அறிவிப்புக்களையும் வர்ணனைகளையும் தூண்டி விட்டது,
மற்றும் காங்கிரஸ் மற்றும் செனட்டின் ஜனநாயகக் கட்சி தலைவர்களின் அதேபோல குடியரசுக் கட்சித் தலைவர்களின்
பகுதியினரிடமிருந்து முழு அளவிலான பாராளுமன்ற விசாரணையைக் கோரியது.
காங்கிரசனல் விமர்சகர்கள் ஆகஸ்டு 6 குறிப்புக்கும், ஜூலை 10ல் அரிசோனா
அலுவலகம், பொனிக்ஸிடமிருந்தும், மற்றொன்று ஆகஸ்ட் 13ல் மினியாபோலிசில் இருந்தும் வந்த இரண்டு எப்.பி.ஐ அறிக்கைகளுக்கும்
உள்ள பொருத்தத்தை குறிப்பாகக் கவனித்தனர். அது அல் கொய்தா இயக்கிகள் விமானங்களைக் கடத்துவதற்குத் தேவையான
நிபுணத்துவத்தைப் பெற அமெரிக்க விமானப் பயற்சிப் பள்ளிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என்ற சந்தேகங்களில்
குவிமையப்படுத்தியது. ஜூலை 10 குறிப்பானது விமானப் பயிற்சிப் பள்ளிகளை நாடு முழுவதும் கண்காணிக்க வலியுறுத்தியது
மற்றும் ஒசாமா பின் லேடனுடன் சாத்தியமான தொடர்புகளை மேற்கோள் காட்டியது. மினியாபோலிஸ் எப்.பி.ஐ முகவர்கள்
ஜக்காரிய முஸ்ஸூவியின் கைது பற்றி அறிவித்தனர். அவர் ஒரு புலம் பெயர்ந்த பிரெஞ்சு மொரோக்கன், அவர்
போயிங் 747 விமானத்தை எப்படிப் பறக்கவைப்பது என்பதை கற்கவும், ஆனால் எப்படி மேலே எழுப்புவது மற்றும்
கீழே இறக்குவது என்பதை கற்க விரும்பாதவராகவும் இருந்தார் என்பதையும் மினியாபோலிஸ் எப்.பி.ஐ முகவரிடமிருந்து
வந்த மின்மடல் செய்தி முஸ்ஸூவியை ஜம்போ ஜெட் விமானத்தை உலக வர்த்தகக் கட்டிடத்தின் மீது பறக்கவிடக் கூடிய
யாரோ ஒருவராகவும் விவரித்திருந்தது. இரண்டு செய்திகளும் இரு எப்.பி.ஐ தலைமையகத்தினால் அலட்சியப்படுத்தப்பட்டன.
பல செனட்டர்கள், குடியரசுக் கட்சியினர் அதேபோல ஜனநாயகக் கட்சியினர்,
முன்கூட்டிய எச்சரிக்கை பற்றிய வெளிப்படல்கள், செப்டம்பர் 11 தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருக்க முடியும் ஆயிரக்கணக்கான
உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்ற பிரச்சினையை எழுப்பியதாகக் கூறினர். அரிசோனா குடியரசுக்
கட்சிக்காரரும் முன்னாள் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டவருமான செனெட்டர்
ஜோன் மெக்கெய்ன் குறிப்பிட்டார் ,"இரண்டு எப்.பி.ஐ குறிப்புகளும் ஒரு சி.ஐ.ஏ குறிப்புகளும் அங்கு இருந்தன, ஒன்றுகூட
தொடர்புபடுத்திப் பார்க்கப்படவில்லை. இம் மூன்றும் தொடர்பு படுத்தப்பட்டிருந்தால், அது மிக படு சுறுசுறுப்பான
நடவடிக்கைகளுக்கு வழி அமைத்திருக்குமா? என்பதுதான் கேள்வி.
மெக்கெய்ன், தானும் 2000ல் ஜனநாயகக் கட்சி சார்பில் உதவி ஜனாதிபதி
வேட்பாளராக முன்மொழியப்பட்ட ஜோசப் லிபர்மேனும், செப்டம்பர்11க்கு முந்திய காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு
என்ன தெரிந்தது, அது என்ன செய்தது என்பதைப் பற்றி கண்டுபிடித்து அறிய இரு கட்சி சார்ந்த விசாரணைக் கமிஷனை
உருவாக்க சட்டமசோதாவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகக் கூறினார். புஷ் நிர்வாகமானது அது ஆப்கானிஸ்தானில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்திற்கும் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" அடுத்த கட்டத்திற்கும் இடையூறு
விளைவித்துவிடும் என்று உரத்துக் கூச்சலிட்டது.
பொய்களும் மிகப்பலமுடையோர் அடக்கலும்
சமீபத்திய வெளிப்படுத்தல்களுக்கு புஷ் நிர்வாகத்தின் பதிலானது, செப்டம்பர்11லிருந்து
அதன் பொய்களும் மிகப்பலமுடையோர் அடக்குதலும் சேர்ந்த சேர்க்கையைத் தொடர்ந்து காட்டிக் கொள்ளுதலாக
இருக்கிறது. தேசிய பாதுகாப்பு செயலாளர் கொண்டலீசா ரெய்ஸ், பத்திரிக்கைப் பேச்சாளர் அரி ஃபிளெய்ச்சர்
மற்றும் வெள்ளை மாளிகை உதவியாளர்கள் ஆகியோரிடமிருந்து பொய்கள் வந்தன. புஷ்ஷின் விமர்சகர்களை உண்மையில்
அரச துரோகமாகப் பண்பிட்டுக் குற்றம்சாட்டும், சண்டித்தன அடக்குதலானது காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினரிடமிருந்தும்
சிறப்பாக உதவி ஜனாதிபதி ரிச்சர்ட் செனியிடமிருந்தும் வந்தன.
நியூயோர்க் மாநகரில் நிதிதிரட்டும் விருந்தொன்றில், செனி "காங்கிரசில் உள்ள தனது
ஜனநாயகக் கட்சி நண்பர்களுக்கு" பின்வருமாறு அசாதாரணமான வகையில், "வெள்ளை மாளிகையானது 9/11 துன்பகரமான
தாக்குதல்களைத் தடுத்திருக்கக்கூடிய முன்கூட்டிய தகவல்களைப் பெற்றிருந்தது என, இன்று சிலரால் கூறப்படுவதைப்
போன்று, கலகமூட்டும் கூற்றுக்களைச் செய்வதால் அரசியல் சாதகத்தை எடுக்க நாடுதல் வேண்டாம் என அவர்கள்
மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." என எச்சரிக்கையைச் செய்தார். அவர் அத்தகைய விமர்சனத்தை "யுத்த
காலங்களில்.... முற்றிலும் பொறுப்பற்றது" என அழைத்தார்.
செப்டம்பர் 11 பற்றி காங்கிரஸ் எந்தவிதமான விசாரணை செய்வதையும் வாயடைப்பு
செய்வதற்கான சட்டத்தை செனியும் கூட கோரினார். "அது உணர்வுகரமான ஆதாரங்களையும் வழிமுறைகளையும்
கட்டாயம் பாதுகாக்க வேண்டும், இன்னும் கசிவு சிறிதும் இல்லாததாக இருக்க வேண்டும், மற்றும் அது கட்டாயம்
உணர்வுகரமான மற்றும் அழிவுகரமான வர்ணனைகளைத் தவிர்க்க வேண்டும்" என்றார். செப்டம்பர் 11
தாக்குதல்களைச் சுற்றிய சம்பவங்கள் தொடர்பான எந்த விதமான அக்கறையான ஆய்வும் உடனொப்பாக எதிரிக்கு "உதவியையும்
திருப்தியையும்" வழங்கும் என்ற வெள்ளை மாளிகையின் நிலைப்பாட்டை வற்புறுத்திக் கூறி, "ஒருவேளை மிக முக்கியமானது,
அடுத்த தாக்குதலைத் தடுப்பதற்கு நடக்கும் முயற்சிகளுடன் விசாரணை கட்டாயமாக தலையிடக் கூடாது, ஏனென்றால்,
ஐயத்திற்கு இடமில்லாமல், இன்னொரு மிக யதார்த்தமான ஒருவேளை மிகவும் அழிவுகரமான தாக்குதல் இன்னும் நிலை
கொண்டிருக்கிறது" என அறிவித்தார்.
வெள்ளை மாளிகையிலிருந்து வரும் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு அடுத்தமாதம் விசாரணையை
ஆரம்பிக்க விருக்கும் செனெட் மற்றும் அவையின் கூட்டு புலனாய்வுக் குழுவுடன் அது ஒத்துழைக்கும் என்பதாக இருக்கிறது.
ஆனால் பத்திரிகைச் செய்திகள் நிர்வாகமானது முழுமையாக ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் இன்றுவரை ஆகஸ்ட் 6
சி.ஐ.ஏ குறிப்பிட்ட தாள்மீதாக, அதேபோல போனிக்ஸ் மற்றும் மினியாபோலிஸ் எப்.பி.ஐ அலுவலகங்களில் இருந்து
வந்த அலுவலகக் குறிப்புக்களின் உரை மீதாக அது கவனத்தைத் திருப்புதற்கான அழைப்புக்களை வெள்ளை மாளிகை நிராகரித்து
வருகிறது.
வெள்ளை மாளிகை உதவியாளர்களால் புஷ்ஷின் செயல் காட்சி பாதுகாக்கப்படல் விஷயத்தை
மோசமாக்க மட்டுமே செய்தது. முரண்பாடு ஒன்றின்மேல் ஒன்றாக அடுகடுக்காக வருவது, தவிர்க்க முடியாத கேள்வியை
எழுப்புகின்றது: நிர்வாகம் எதனை மறைக்க முயற்சிக்கின்றது?
புஷ் காங்கிரசின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவின் முன் தோன்றிய
பொழுது அவர் விஷயத்திற்கு ஒரு உதவியும் செய்யவில்லை மற்றும் விமானக் கடத்தல்காரர்களின் திட்டங்களைப் பற்றி தெரிந்திருந்தால்,
அவர் "ஐக்கிய அமெரிக்க நாடுகளின் முழு படைபலத்தையும் இராணுவப் படையின் முழு ஆவேசப் பாயச்சலையும் அதனைத்
தடுப்பதற்குப் பயன்படுத்தி இருக்க முடியும்" என்று அறிவித்தார். எல்லாவிதமான பகட்டுப் பேச்சுக்ளைப் பொறுத்தவரை,
விமானக் கடத்தல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 6க்குப் பின்னர் வான்பாதுகாப்பு ஜெட் விமானங்களை
அணிதிரட்ட ஏன் ஒன்றும் செய்யப்படவில்லை என்பதை புஷ் விளக்க முயற்சிக்கவில்லை. விமானப்படையின் படி, அமெரிக்காவைத்
தளமாக்க் கொண்ட ஜெட் போர் விமானங்கள் செம்பம்பர் 11 அன்று எச்சரிக்கையாக வைக்கப்படவில்லை, மற்றும்
விமானக் கடத்தல்களுக்கு எதிர் நடவடிக்கை எடுக்க பதிலளித்தவர்கள் கடத்தப்பட்ட ஜெட்விமானங்கள் அவற்றின் இலக்குகளைத்
தாக்கும் வரைக்கும் நியூயோர்க் மற்றும் வாஷிங்டனை அடையவில்லை.
வியாழன் அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், கொண்டலீசா ரைஸ் ஆகஸ்ட் 6
குறிப்புக்களைப் பற்றியும் செப்டம்பர் 11க்கு இட்டுச்சென்ற காலகட்டத்தில் புஷ் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த பதிவுக்
குறிப்புக்களையும் பற்றிய அவரது விளக்கத்தில் தடுமாறுவது காணக்கூடியதாக இருந்தது. அறிவிக்கப்பட்ட அபாயமானது
பணயக் கைதிகளை எடுப்பதற்கு விமானத்தைக் கடத்துவதாக இருந்தது, விமானத்தை தற்கொலை ஆயுதமாகத்
திருப்புவது அல்ல என்றார். "இவர்கள் விமானத்தை எடுத்து உலக வர்த்தக மையத்தின் மீது மோதுவார்கள்,
இன்னொன்றை எடுத்து பெண்டகன் மீது மோதுவார்கள், இவர்கள் விமானத்தை ஒரு ஏவுகணையாகப் பயன்படுத்த முயற்சிப்பார்கள்
என எவரும் கணித்திருக்க முடியுமா என்று நான் நம்பவில்லை" என்றார் அவர்.
இந்தக் கூற்று பல மட்டங்களில் சாதாரணமாக நம்பத்தகாததாக இருக்கின்றது. மினியாபோலிஸில்
உள்ள எப்.பி.ஐ அலுவலகத்திற்கான ஒன்று, அத்தகைய தாக்குதல் பற்றி துல்லியமாக எச்சரித்தது. மேலும், அங்கு
கணிசமான வரலாறு உள்ளது, விமானங்களைக் கடத்தி தற்கொலை ஆயுதமாகப் பயன்படுத்தும் அல்கொய்தா சதித்திட்டத்துடன்
தொடர்புடைய பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட முயற்சிகளின், அரை டசின் ஆண்டுகள் இப்பொழுது பின்னோக்கி நீட்டப்படுகிறது.
அத்தகைய விமானக் கடத்தல் 1994ல் பிரான்சில் நடைபெற்றது, மற்றும் அதேபோன்ற முயற்சி 1995ல்
பிலிப்பைன்ஸ் போலீசால் முறியடிக்கப்பட்டது, அதன் ஒழுங்கமைப்பாளர் அமெரிக்காவிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு ஜெனோவாவில் ஜி-8 மாநாட்டில் உதாரணம் இருக்கிறது, அது 2001
ஜூலை20-22 வரை நடந்தது. அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி எகிப்திய ஜனாதிபதி ஹஸ்னி முபாரக் உள்பட,
வெடி பொருள் நிரம்பிய கடத்தப்பட்ட விமானம் மாநாட்டுக் கட்டிடத்தில் மோதக்கூடும் என்பது உட்பட, பல தகவல்களில்
இருந்து வந்த எச்சரிக்கைகளுக்குப் பிறகு, இத்தாலிய நிர்வாகத்தினர் அந்தப் பகுதியைச் சுற்றிலும் விமான எதிர்ப்புப்
பீரங்கியை நிறுத்தி இருந்தனர் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அங்கு பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
உச்சிமாநாடு முழுவதும், பாதுகாப்புக் காரணமாக துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைக்
கப்பலில் புஷ் அவரது இரவைக் கழித்தார். இருந்தும் ரைஸ் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஜனாதிபதியின்
நாளாந்தக் குறிப்புக்கள் கடத்துவதற்காக அல் கொய்தா அமெரிக்க விமானங்களை இலக்கு வைத்திருக்கின்றது என்ற
எச்சரிக்கையைக் கொண்டிருந்த பொழுது, விமானங்கள் பறக்கும் குண்டுகளாக பயன்படுத்தப்பட முடியும் என்ற
சாத்தியம் பற்றி ஒருவரும் எண்ணிப் பார்க்கவில்லை.
ரைஸின் கூற்று அல் கொய்தா அமைப்பின் ஒட்டு மொத்த பதிவுச் சான்றுகளுடன் பொருந்தவில்லை.
புரூக்கிங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மைக்கல் ஓ ஹன்லோன் எனும் ஒரு ஆய்வாளர் போஸ்டன் குளோப் பத்திரிகையிடம்
கூறியதாவது, " 'வெள்ளை மாளிகை வாதிப்பது போல, அல் கொய்தா வழக்கமான விமானக் கடத்தல் தந்திரத்தைப்
பயன்படுத்தப் போகிறது என்ற கருத்து ஒருபோதும் அர்த்தமுள்ளதாக இல்லை.
தசாப்தகாலம் திரும்பிப் பார்த்தால் பலரைக் கொல்ல விழைந்த இயக்கம் அது..., அல் கொய்தா விமானத்தைக்
கடத்தலாம் என நினைக்கும் எவரும் அவர்கள் விமானத்தில் ஏறியோர் எவரையாவது கொல்ல முயற்சிப்பர் என்று உடனடியாக
அதனை தெரிந்த முடிவுகளில் இருந்து புது முடிவாக வருவிப்பது, அதன் அர்த்தம் விமானக் கடத்தலை அணுகும் பழைய
தந்திரம் பொருத்தமற்றதாக அங்கீகரிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகின்றது.' "
வெள்ளை மாளிகை கடத்தல்-வெடிகுண்டு பற்றி கற்பனை செய்து பார்த்திருக்க முடியவில்லை
என்ற அதன் வலியுறுத்தலை, அது எந்தவிதமான விமானக் கடத்தல் பற்றியும் எச்சரிக்கப் படுத்தப்பட்டிருக்கிறது என்ற
உண்மையை, ஒருவர் ஏற்றுக் கொண்டால் கூட அப்பட்டமான சுட்டிக் காட்டல்களுடன் கேள்விகளை எழுப்புகின்றது. புஷ்
நிர்வாகம் வழக்கமான விமானக் கடத்தலைத் தடுக்க எந்தவித அக்கறையான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தால்,
அந்நடவடிக்கைகள் கூட தற்கொலை வெடிகுண்டுகளைத் தடுத்திருக்கும்.
ஆனால் ஆகஸ்ட் 6ல் வழங்கப்பட்ட எச்சரிக்கை இருப்பினும், விமான நிறுவனங்களின் பகுதியில்
அதிகரித்த பாதுகாப்பு இருக்கவில்லை. பல விமானக் கடத்தல்காரர்கள் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் அல்லது
எப்.பி.ஐ- ஆல் நாடப்பட்டவர்களாக இருந்திருந்தனர் என்ற உண்மை இருப்பினும், இதில் கூட்டத் தலைவர் என்று கூறப்படும்
மொகம்மது அட்டா, மற்றும் கடத்தப்பட்ட ஒரு ஜெட் விமானத்தின் விமான ஓட்டி என்று நம்பப்படும் ஹனி ஹஞ்சூர் ஆகியோர்
உள்ளடங்குவர், 19 விமானக் கடத்தல்காரர்கள் செப்டம்பர் 11 பற்றிய தடங்கல் எதுவுமின்றி விமானங்களில் ஏறினர்,
அவர்களில் பலர் ஒரு வழிப் பயணச் சீட்டுக்களுக்கு முதல் வகுப்புக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
விமானக் கடத்தலின் சாத்தியம் பற்றிய எச்சரிக்கை மிகவும் பொதுவானதாக
இருந்திருந்தது, மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையிடமிருந்து, 1998ல், வந்த ஒரேயொரு தனி அறிக்கையை அடிப்படையாகக்
கொண்டிருந்தது என ரைஸ் கூறினார். ஆனால் சபையின் புலனாய்வுக் குழு உறுப்பினரான ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர்
நான்சி பெலோசி பின்வருமாறு அவதானித்தார், "கேள்விகள் வருமாறு: பயங்கரவாத நடவடிக்கையின் சாத்தியம் பற்றிய
மூன்று பழைய அறிக்கைகளில் இருந்து ஜனாதிபதியின் தகவல் தொடர்பின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவர உளவுத்துறையினரைத்
தூண்டிய ஆகஸ்ட் 7ல் மாறிய (மேற்கோளாளர் கூறிய அதே மாதிரியான) சூழ்நிலைகள் யாவை? அத்தகைய மட்டத்துக்கு
விஷயத்தை உயர்த்திய பின்னர், இந்தத் தகவலின் வெளிச்சத்தில் ஏதாவது நடவடிக்கைகள் பொருத்தமான நடவடிக்கைகளாகக்
கருதப்பட்டிருந்தால், அந்நடவடிக்கைகள் யாவை?"
தனியே "திறமைக்கேடு" செப்டம்பர் 11ஐ விளக்க மாட்டாதது
செய்தி ஊடகமும் காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் சிலரும் குடியரசுக் கட்சியினர்
சிலரும் செப்டம்பர் 11 தாக்குலுக்கு இட்டுச் சென்ற மாதங்களில் நிர்வாகத்தின் நடத்தை பற்றி, குறிப்பாக அமெரிக்க
உளவுத் துறை முகவாண்மை பற்றி கேள்விகளை எழுப்பத் தொடங்கி உள்ளனர். இது "பயங்கரவாதத்தின் மீதான
யுத்தம்" என்பதற்கான எட்டு மாதங்கள் விமர்சனமற்ற ஆதரவு மற்றும் புஷ்ஷை அடிமைத்தனமாக புகழ்தல் இவற்றுக்குப்
பின்னர் ஒரு நகர்வைக் குறிக்கிறது.
இருப்பினும், பகிரங்க விமர்சனங்களை திடீரென்று தடுத்தல் குறுகிய எல்லைகளுக்குள்
கட்டுப்படுத்தப்படுவது தொடர்கின்றது. அமெரிக்க உளவுத்துறை முகவாண்மைகளும் புஷ் நிர்வாகமும் அமெரிக்க இலக்குகள்
மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மெதுவாக, திறமைக்கேடுடன் அல்லது ஒரேயடியாக அக்கறையின்மையுடன்
பதிலளித்தனர். ஆனால் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் எங்கும் புஷ்-ன் இராணுவத் தலையீட்டின் ஒட்டு மொத்தக்
கொள்கை பற்றி கேள்வியே இல்லை. மேலும் புஷ்-இன் அலுவலர்கள் அல்லது பத்திரிகை விமர்சகர்கள் ஒருவரும் மிக
அடிப்படையான: செப்டம்பர்11க்கு முன்னர் செயல்படாதன்மை வேண்டுமென்றே செய்யப்பட்டது, அச்சுறுத்தும் நிலையில்
இருந்த பயங்கரவாதத் தாக்குதலை நீண்டகால அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு திட்டத்தை தொடங்குதற்கான வசதியான
சாக்குப் போக்காக வரவேற்றனர் என்பனவற்றை விஷயத்தை எழுப்பவில்லை.
இந்த நிலைப்பாட்டிலிருந்து, இந்தவார மிக முக்கியமான வெளிப்படுத்தல், உலக
வர்த்தக மைய கட்டிடம் மற்றும் பெண்டகன் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் -புஷ்
செப்டம்பர் 9 அன்று அவரது செய்தியாளர் மேசையில்- யுத்த அச்சுறுத்தலால் ஆதரிக்கப்பட்ட, ஆப்கானிஸ்தானில் தலிபான்
ஆட்சிக்கு இறுதிக்கெடு விடுப்பது உள்பட, ஒசாமா பின் லேடனையும் அவரது அல்கொய்தா அமைப்பையும் இலக்குவைத்து
இராணுவரீதியான, ராஜதந்திர ரீதியான மற்றும் உளவு நடவடிக்கைக்கான உலக ரீதியான நடவடிக்கையை விளக்குவதில்
தேசியபாதுகாப்பு ஜனாதிபதி இயக்கிகளின் விவரங்களைப் பெற்றிருந்தார் என்ற என்.பி.சி செய்தியால் வழங்கப்பட்ட
அறிக்கையாக இருந்தது.
என்.பி,சி-யின் படி, வரைவு ஆணை, "செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் வெள்ளை
மாளிகை, சி.ஐ.ஏ மற்றும் பெண்டகன் ஆகியன செயல்படுத்திய அதே யுத்தத்திட்டத்தை அடிப்படை ரீதியாக விவரித்திருந்தது."
அது பெண்டகன், சி.ஐ.ஏ. அரசுத்துறை மற்றும் ஏனைய பாதுகாப்பு மற்றும் உளவு முகவாண்மைகளை சம்பந்தப்படுத்தி,
பலமாதங்களாக கலந்தாலோசித்த நிகழ்ச்சிப்போக்கு மூலம் தயாரிக்கப்பட்டது. வேறுவார்த்தைகளில் சொன்னால்,
பயங்கரவாதிகளின் விமானக் கடத்தல்களுக்கு முன்னரே, இராணுவ நடவடிக்கையை எடுக்க தயாரிப்பு செய்யப்பட்டிருந்தது,
அது பின்னர் செப்டம்பர் 11 அட்டூழியத்திற்கு ஒரு பதிலாகவே எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
புஷ் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட விவரங்களில், அடிப்படையில் முரண்பாடு இருக்கிறது.
ரைஸூம் ஏனைய பேச்சாளர்களும் அரசாங்கமானது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளே பெரும் பயங்கரவாதத்
தாக்குதலின் உடனடி அச்சுறுத்தல் மீது அதிகமாய் குவிமையப்படுத்தி இருந்தது. மேலும், என்.பி.சி அறிக்கை
சுட்டிக்காட்டுவது போல, நிர்வாகமானது அல் கொய்தாவுக்கும் அதன் அரசுரீதியான ஆதரவாளர் என்று கூறப்படும்
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சிக்கு எதிரான இராணுவத் தாக்குதலை நடத்த தயாரிப்பு செய்து
கொண்டிருந்தது, இது திருப்பித் தாக்குதல்களை தூண்டிவிடுவதை நிச்சயப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இருந்தது.
இருந்தும் அமெரிக்க நகரங்கள், விமானப் போக்குவரத்து, அரசாங்க கட்டிடங்கள் அல்லது உண்மையான இலக்குகளான
உலக வர்த்தக மையம் -இது 1993ல் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளால் ஏற்கனவே தாக்கப்பட்டது-
போன்றவைகளின் பாதுகாப்புக்களைப் பலப்படுத்த உண்மையில் ஒன்றும் செய்யப்படவில்லை.
மின்னசோட்டா மற்றும் அரிசோனாவிலிருந்து வந்த அறிவிப்புக்களை எப்.பி.ஐ கையாண்டது
பற்றிய அசாதாரணமான வெளிக்காட்டல்கள் அப்பாவித்தனமான விளக்கங்களை அனுமதிக்கவில்லை. எப்.பி.ஐ உயர்மட்டம்
வழக்கமானதாகக் கருதப்படும் நடவடிக்கைக்குக் கூட ரத்து வேண்டுகோளை விடுத்தது. "புள்ளிகளை இணைக்கத் தவறியது"
பற்றியதாக இதனை விளக்குதற்கு எடுக்கும் வலிந்த முயற்சிகளை விடவும், அமெரிக்க அரசுக்குள்ளே உயர் மட்டத்தில்,
திட்டமிடல் படிநிலைகளில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்த கடும் இராணுவத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விடுவதற்கான
சம்பவத்தை வழங்குவதற்கு வேண்டி, அல் கொய்தா விமானக்கடத்தல் இடம்பெற அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருந்திருக்கிறது
என்பது போன்றது, வாதவகையில் சரியாகத் தோன்றுகிறது.
"பயணிகள் ஜெட் விமானங்களை ஏவுகணைகளாக கடத்தல்காரர்கள் பயன்படுத்தல் பற்றி
நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை" என்ற ரைஸின் கூற்றுக்களில் ஏதாவது உண்மை இருக்குமாயின், அது இதாக
இருக்கலாம்: போர்க் காரணத்தை வழங்குவதற்கு, பாதுகாப்பை "விலக்கிக் கொள்ள" ஆணையிட்ட அரசின் மிக
உயர்மட்டங்களில் இருப்பவர்கள் விமானக் கடத்தல்கள் நியூயோர்க்கின் வானுயர்ந்த கட்டிடத்தை அழிப்பதுடன் முடியும்
என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அமெரிக்க அரசாங்கமானது தனது சொந்தக் குடிமக்களைப் படுகொலை செய்வதை மன்னித்துவிடும்
என்பது நினைத்துப் பார்க்க முடியாதது என கருதும் எவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈவிரக்கமற்ற தன்மையையும்
புஷ் நிர்வாகத்தின் குற்றத்தனத்தையும் குறைத்து மதிப்பிடுகின்றனர். இராணுவ நடவடிக்கைக்கான சாக்குப்போக்கை
உருவாக்குவதன் மூலம் சிக்கலில் இருந்து விடுபட முயல்வதும், வெளிநாடுகளில் மூலோபாய சாதகத்தையும் வளங்களையும்
சுரண்டும் நம்பிக்கையுடன் மற்றும் உள்நாட்டில் தேசிய உணர்வைத் தூண்டி விடவும், முதலாளித்துவ அரசாங்கம் உள்நாட்டிலும்
வெளிநாட்டிலும் முரண்பாடுகளாலும் நெருக்கடிகளாலும் பேயாட்டம் போடுவது இதுதான் முதல்தடவையாக இருக்காது.
நிச்சயமாக 2001 கோடைக்காலத்தில் புஷ் நிர்வாகமானது, ஜனநாயகக் கட்சியிடம் செனட் கட்டுப்பாட்டை இழத்தல்,
மற்றும் பங்குச்சந்தைக் குமிழிகள் பொறிவினை எதிர் கொள்ளல், உயர்ந்து வரும் வேலையின்மை, தெளிவின்றித்
தோன்றும் நிதி நெருக்கடி, மற்றும் அதன் ஒழுங்கற்ற ஒருதலைப்பட்ச வெளிநாட்டுக் கொள்கைக்கு வளர்ந்துவரும் சர்வதேச
எதிர்ப்பு என நெருக்கடியில் இருந்தது.
கடந்த நூற்றாண்டு முழுவதும் அமெரிக்காவால் தொடுக்கப்பட்ட ஒவ்வொரு யுத்தமும்
பொதுக்கருத்தைத் திணிப்பதற்கு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு "பாதுகாப்பு" மூடுதிரை வழங்குதற்கு அமெரிக்க
அரசாங்கத்தால் இசைக்கப்பட்ட ஆத்திரமூட்டல்களால் சேர்க்கப்பட்டிருந்தது. 1888ல் ஸ்பெயினுக்கு எதிரான அமெரிக்க
யுத்தத்திற்கு இட்டுச்சென்ற மெய்ன் யுத்தக் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு மீதான நடவடிக்கையிலிருந்து,
டோங்கின் வளைகுடா நிகழ்ச்சி (வியட்நாம்) மற்றும் 1999ல் கொசோவாவில் அமெரிக்கத் தலையீட்டுக்கான
சாக்குப்போக்காக அமைந்த ரகாக் படுகொலை வரையிலான நடவடிக்கை வரை அதன் பாணியானது நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.
மேலும், பித்தலாட்டமும் ஆத்திரமூட்டலும் புஷ் நிர்வாகத்திற்கு இரண்டாம் இயல்பாகும்.
மொத்தத்தில் அது, 2000 ஜனாதிபதி தேர்தலின் திருட்டில் மற்றும் உச்சநீதி மன்றத்தின் மீதான வலதுசாரி
பெரும்பான்மையின் ஜனநாயக விரோத தலையீட்டில், அத்தகைய வழிமுறைகள் மூலம் அதிகாரத்தில் இருத்தப்பட்டது.
புஷ் அவரது அரசியல் உயர்வுக்கு என்ரோன் போன்ற கார்ப்பொரேட் அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த
கும்பலுக்கும் கடன் பட்டிருக்கிறார். என்ரோன் உள்விவகார பத்திரங்கள், புஷ்ஷின் அரசியல் வாழக்கையின் பெரும்
பின்புலமாக இருந்த, முன்னாள் என்ரோன் தலைவர் கென்னெத் லே, அவரது நிறுவனத்தின் இலாபங்களை அதிகரிக்க
வேண்டி, கலிஃபோர்னியாவில் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வை அச்சுறுத்தும் நிலையைக் கொண்ட கிட்டத்தட்ட அழிவுகரமான
மின்ஆற்றல் பற்றாக்குறையை உண்டு பண்ணினார் என்பதை இப்பொழுது நிரூபிக்கின்றது.
ஆழமாகிவரும் அரசியல் நெருக்கடி இன்னும் திடுக்கிடச் செய்யும் வெளிப்படுத்தல்களை
உண்டு பண்ணலாம். வாஷிங்டன் போஸ்ட் வெள்ளி அன்று, பெரும்பாலும் போகிறபோக்கில், 2001 கோடையில்
சில கட்டத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆச்கிராப்ட் வணிகரீதியான பயணிகள் விமானங்களில்
இனிமேல் பயணம் செய்ய வேண்டாம் என புஷ் நிர்வாகம் முடிவு செய்தது -இது உடனடி பயங்கரவாத விமானக்கடத்தல்
பற்றிய எச்சரிக்கை "வழக்கமானது" மற்றும் "குறிப்பிட்டுச் சொல்லாதது" ஆக இருந்தது என்ற கூற்றுக்கு புறம்பான
வேண்டுகோளாக இருந்தது.
ஆனால், செப்டம்பர்11 துயரத்தை அக்கறையுடன் விசாரணை செய்வதற்கு காங்கிரசில்
உள்ள ஜனநாயகக் கட்சியினர் மீதோ அல்லது அமெரிக்க செய்தி ஊடகத்தின் மீதோ ஒருவரும் நம்பிக்கை வைக்க
முடியாது. அமெரிக்கப் பத்திரிகைகளின் முன்னணி உறுப்புகளான, நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன்
போஸ்ட் போன்றவை, செப்டம்பர்11 பற்றிய புஷ்-இன் முன்கூட்டிய அறிதல் "புயல் வீச" (போஸ்ட்)
இருக்கிறது அல்லது "குற்றஞ்சாட்டும் விளையாட்டு" (டைம்ஸ்)
வாஷிங்டன் பாணி எடுத்துக்காட்டு என்ற செய்திகளை அறிவிக்கும் ஆசிரியத் தலையங்கங்களை வெளியிட்டிருக்கின்றன.
உலக சோசலிச வலைதளமானது, பயங்கரவாதிகளின் நடவடிக்கையின் உண்மையான
சூழ்நிலைகள் பற்றியும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுத்தத்தின் ஏகாதிபத்திய குறிஇலக்குகள் பற்றியும் புஷ் நிர்வாகமும்
செய்தி ஊடகமும் அமெரிக்க மக்களுக்கு வேண்டுமென்றே மறைத்துக் காட்டுகின்றன என எச்சரித்து, செப்டம்பர் 11
தாக்குதல்களை அம்பலப்படுத்துவதிலும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்வதிலும் முன்னணியில் இருந்து வருகின்றது. நான்கு
மாதங்களுக்கு முன்னரே, நாம் "அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை
செய்யப்பட்டதா?" என்று தலைப்பிடப்பட்ட நான்கு
பாகங்கள் கொண்ட தொடர் கட்டுரைகளை வெளியிட்டோம். இந்த ஆய்வு இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றது
See Also :
பகுதி 2: விமானக் கடத்தல்காரர்களைக்
கண்காணித்தல்
பகுதி 3: அமெரிக்க ஐக்கிய அரசுகளும்
மத்திய கிழக்கு பயங்கரவாதமும்
பகுதி 4: விசாரணை செய்ய மறுப்பு
Zacarias Moussaoui இன் வித்தியாசமான வழக்கு:
செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கு பொறுப்பானவர் மீதான விசாரணையை
FBI மறுத்துள்ளது
|