World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Egyptian economy facing major crisis

எகிப்திய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறது

By Liz Smith
12 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

2 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள தற்போதைய கணக்கு பற்றாக்குறையால் எகிப்திய பொருளாதாரமானது ஆபத்தான நிலையில் உள்ளது. செப்டம்பர் 11 இலிருந்து அதன் கடினமான தன்மைகளானது சுற்றுலாத்துறை, எண்ணெய் வருவாய் மற்றும் உலக வணிகம் போன்றவற்றில் ஏற்பட்ட சரிவின் விளைவாய் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தின் தொடக்கப் பகுதியில் எகிப்திய அரசாங்கத்தாலும் உலக வங்கியாலும் இணைந்து ஒழுங்குபடுத்தப்பட்ட எகிப்திற்கான ஆலோசனை குழு கூட்டம் (CGME) இரண்டு நாள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எகிப்திற்கான ஆலோசனை குழு கூட்டம் ஒவ்வொரு மூன்று வருடங்கள் சந்திப்பதுடன் முதலாவது தடவையாக எகிப்தில் ஒரு பொழுதும் சந்தித்திராத 40 நன்கொடையாளர்கள் அறிமுகமாயிருந்தனர். இந்த கூட்டத்தின் இரு முக்கிய நோக்கங்களான உலக வங்கியின் ஆலோசனைக்கேற்ற வகையில் எகிப்திய பொருளாதாரத்தை மீண்டும் கட்டுதல் மற்றும் செப்டம்பர் 11 இற்கு பின்னரான வருமான அழுத்தத்தை கூடுதலான நன்கொடையாளர்களை வரவழைத்து தளர்த்துதலை வழிகாட்டியிருந்தது. உலக நன்கொடையாளர்கள் உடனடியாக 2.1 பில்லியன் டொலருக்கு வாக்குறுதி அழித்துள்ளதுடன் மிகுதியான மூன்று வருடங்களில் மேலதிக 10.3 பில்லியன் டொலருக்கும் வாக்குறுதி அழித்துள்ளார்கள்.

எகிப்தின் ஒரு நெருங்கிய சகாவும் பரஸ்பரமான ஒர தனிப்பெரிய நன்கொடையாளராக அமெரிக்கா இருந்தபோதும் மூன்று வருடங்களுக்கு முன்னர் 1999 இல் கடைசியாக நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் சிவில் உதவிக்கு வழங்கிய $1.8 பில்லியனுக்கு அப்பால் எந்தவொரு புதிய பணத்திற்கும் வாக்குறுதி அளிக்கவில்லை.

இந்த எல்லா நன்கொடைகளின் விநியோகமானது நீண்டகாலமாயுள்ள எகிப்தின் நுன்ணிய பொருளாதாரத்தை சீர்திருத்துவதற்கான பிரேரணைகளை IMF உம் உலக வங்கியும் உறுதி செய்யப்படுவதில் தங்கியுள்ளது. அரசாங்கம் தனது கொள்கை திட்ட அறிக்கையில் "தனியார் துறையினது நம்பகத்தன்மை, அபிவிருத்தி மற்றும் தொழில்களை" ஊக்கிவிப்பதற்கு ஒரு நெகிழ்வானதும், சந்தை வழிப்படுத்தப்பட்ட நாணயமாற்று வீதத்தையும் அதேவேளை பொதுசெலவீனங்களை மீளாய்வு செய்வதுடன் மற்றும் வியாபாரம் சார்ந்த சட்டங்களை உள்வாங்கி கொள்வதினையும் நடைமுறைப்படுத்துவதற்கு வாக்குறுதி அளித்திருக்கிறது. அரசாங்கமானது நான்கு பிரதான பொது வங்கி துறைகளை தனியார் மயப்படுத்துதலை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் எகிப்தின் தொலைதொடர்பு ஸ்தாபனத்தை விற்பதற்கும் உறுதி அழித்திருப்பதாகவும் கூறியுள்ளது, இது ஒரு வருடத்திற்கும் மேலாக காலதாமதமாக கிடந்த விடயம் என ஆய்வார்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கப் பிரதிநிதிகளை தலமை தாங்கிய குழு ''அவர்கள் விளைவுகளை பெறவேண்டுமானால் இந்த சீர்திருத்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள். ஒரு சமுகப் பேரழிவை தடுப்பதற்கு அவசியமாயுள்ள, புதிய தொழில்களையும் அபிவிருத்திக்கான முதலீடுகள் மற்றும் ஸ்திரத்தன்மை போன்றவற்றை வழங்குவதில் தனியார் துறையானது இன்றியமையாதது என்பது யதார்த்தமாகவிருக்கின்றது."

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் Jean Louis Sarbib, ''வணிகத்தை தாராளமயப்படுத்துதல், வியாபார சூழ்நிலையை மேம்படுத்துதல், தனியார் பங்கேற்றலை நிறுவுவதிலும் நிதித்துறையை பலமூட்டுவதிலும் கவர்ச்சியுறச்செய்தல்'' போன்றவற்றை செயலாற்றுவதற்கு எகிப்தை தூண்டினார். 1991 தொடக்கம், 314 தொழில் நிறுவனங்களில் ஏலத்திற்கு விற்கப்பட்ட 185 தொழில் நிறுவனங்களானது முழுமையாகவோ அல்லது சிறிதளவாகவோ தனியார் மயமாக்கல் படுத்தப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கில் எகிப்து விரைவாக வளர்ந்து வரும் சனத்தொகையை கொண்டிருப்பதுடன், தற்போதைய கணக்கெடுப்பு 67 மில்லியனாகும், அத்துடன் 600,000 ற்கும் 800,000 ற்குமிடையிலான வயது குறைந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் உழைப்பு சந்தையினுள் நுழைகிறார்கள். ஆயினும் 10 வருட பொருளாதார சீர்திருத்த திட்டம் அதிகமாக சுற்றுலா துறையை சார்ந்திருக்கிறது. எகிப்திற்கான ஆலோசனை குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பல வகைப்பட்ட கவலைகள் உலக வங்கியால் 2001 ஜூலை இல் வெளியிடப்பட்ட எகிப்தும் சமூக கட்டுமான அறிக்கை இல் குறிப்பிட்டுக் காட்டப்பட்டதுடன், பூகோள பொருளாதாரத்துடன் ஒருங்கிணைதலை மேலும் இலகுபடுத்தும் அதனது கொள்கைகளை உள்வாங்குவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்கள்.

உலக வங்கியின் ''சீர்திருத்த'' கோரிக்கையானது பாதுகாப்பு வரிகள் மற்றும் ஏனைய வணிக வரிகளை கடுமையாக குறைப்பதாகவும் முக்கியமாக உற்பத்தியாளர்கள் மீதும் மற்றும் எகிப்தில் வியாபாரம் செய்வதற்கான செலவீனங்களை அதிகரிக்க செய்யும் அரசாங்கத்தின் ஒழுங்கு முறைகளை முடிவுறச்செய்வதாகவும் இருக்கிறது.

2000 ஆண்டிற்கான எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வீதமான வருமானம், சுயேஸ் கால்வாய் வரி, எண்ணெய் ஏற்றுமதி வருவாய், தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதி மற்றும் சுற்றுலாத்துறை வருவாய் போன்றவற்றில் இருந்து கிடைத்தன என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருவாய்கள் பொதுத்துறைகள் மற்றும் தனியார் நுகர்விற்கு உதவி செய்தபோதும், இது விரும்பத்தகாத இரு விளைவுகளை கொண்டிருக்கிறது என உலக வங்கி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. உற்பத்தியாளர்களின் போட்டியினை அதிகரிக்கும் அவசியமான பரந்தளவிலான சீர்திருத்தத்தினை நடைமுறைக்கிடுவதற்கு அழுத்தத்தை அது குறைக்கிறது மற்றும் உலக சந்தையில் எகிப்திய உற்பத்தியாளர்களின் போட்டி மனப்பான்மையினை கீழறுக்கிறது.

எண்ணெய் மற்றும் சுற்றுலா துறைகளின் வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 1998 இன் பிற்பகுதி வரை அயல் நாட்டு செலுத்து நிலையானது அழுத்தின் கீழ் இருந்தது; இஸ்லாமிய அடிப்படை வாத குழுக்களின் சுற்றுலாபயனிகள் மீதான இலக்கு, நிலமையை மேலும் மோசமடைய செய்தது என அறிக்கை குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த காலப்பகுதி 1999 இல் 11 வீதமான பாரிய கடன் பெருக்கத்தை வெளிக்காட்டியது.

''பூகோள ஒருமைப்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள்'' என தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில், எகிப்தின்1999 ஆண்டிற்கான உள்நாட்டு உற்பத்தி பொருட்களில் ஏற்றுமதி பொருட்களின் அளவு 3 சதவீதத்தையும் விட குறைவு என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஏற்றுமதி பொருட்களில் மூன்றில் இரண்டு பகுதி பெட்ரோலியம் சார்ந்த அல்லது விவசாய பொருட்கள் ஆகும். எகிப்து அதிகளவு உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை என உலக வங்கி கவலை தெரிவித்திருக்கிறது.

எகிப்து வெளிநாட்டு முதலீட்டார்களை கவரும் சாத்தியமான இயல்புகளை கொண்டிருக்கிறது ஏனெனில் அது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாரிய சந்தை வாய்புடையதாக இருப்பதுடன் அது அரபு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கு அருகில் இருக்கிறது என அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. இருந்தபோதும் தற்போதைய கட்டணங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் தரங்களுக்கு உயர்வாகவிருக்கின்றன்: வளர்ச்சி குன்றிய நடுத்தர வருவாயுடைய நாடுகளின் 18 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 28 சதவீதமாகவிருக்கின்றது. ஏனைய வளர்ச்சி குன்றிய நடுத்தர வருவாயுடைய நாடுகளின் மொத்த செலவுகள் 16 வீதத்துடன் ஒப்பிடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 27 சதவீதமாகவிருக்கிறது. ஒரு "பயனற்ற" வர்த்தக சூழலின் காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான ஒரு நம்பிக்கையின்மையினை இட்டு அது வருத்தம் தெரிவிக்கிறது. அதேவேளை தனியார் மயப்படுத்தலை விரைவாக்குவதற்கு அழைப்பு விட்டிருப்பதுடன், பெரிய நிறுவனங்களின் வரிவிதிப்பினை வெட்டுவதற்கான கோரிக்கை மற்றும் வரவு செலவு திட்டத்தினை குறைப்பதற்காக உலக வங்கியால் கேட்கப்பட்ட கொள்கைகள் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டி இருக்கிறது.

இந்த கொள்கைகளின் மேலதிக விளைவுகள், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் பாரிய வீழ்ச்சியினை அதிகரிப்பதாகவிருப்பதுடன் ஏற்கனவே ஏழ்மை அபிவிருத்தி அடைந்த நிலமையின் கீழ் சமூக பதட்டங்கள் மேலும் மோசமடைகிறது. வேலையின்மை வீதம் தற்போது 15 சதவீதமாகவிருக்கின்றது. நகரப்புற மொத்த இளம் பெண்களில் 1/4 வீதம் வேலையற்றவர்களாக இருக்கின்றனர்.

எகிப்து அதனுடைய இராணுவ திறன்களை பலப்படுத்துவதற்கு மேலதிக பணத்தை செலவிட்டிருப்பதுடன் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து 255 மில்லியன் டொலர் பெறுமதியான 53 ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களையும் இப்போது கொள்முதல் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. பிராந்தியங்களில் அரசியல் பதட்டம் தோன்றும் வேளையில், பாலஸ்தீனியர்கள் மீதான மூர்க்கத்தனம் வாய்ந்த தீவிரமான தாக்குதல்களுக்கான கண்டனத்தில் ஆயிரக்கணக்கான எகிப்திய மாணவர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கொடிகளை எரித்தார்கள். Alexandria இல், இஸ்ரேல் மீது போர் பிரகடனம் செய்வதற்கு, அராபிய தலைவர்களை அழைப்பதற்காக 8000 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.