WSWS :Tamil
:
வரலாறு
A Tribute to Vadim Rogovin
வாடிம் ரொகோவினுக்கு அனுதாபம்
By David North
20 May 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
மே 15ம் திகதி மொஸ்கோ நகரில் இடம்பெற்ற
கூட்டத்தில் 75க்கும் மேற்பட்ட மக்கள் ரஷ்ய மார்க்சிச வரலாற்றாசிரியரும்,
சோசலிசவாதியுமான வாடிம் ஸகாரோவிச் ரொகோவினின்
65வது பிறந்த தினம் எவ்வகையிலானதாக அமைந்திருக்கும்
என்பதை நினைவு கூர்ந்தனர்.ஒன்றுகூடலுக்கு சமூகமளித்திருந்தவர்களில்
ஸ்ராலினிச அரசாங்கத்தால் கொலைசெய்யப்பட்ட ரஷ்ய இடது
எதிர்ப்பாளர்களின் பிள்ளைகளதும், மொஸ்கோவின் சமூகவியல்
நிலையத்தில் வாடிமுடன் வேலை செய்த சகஊழியர்களும், ரஷ்யாவின்
பல சோசலிச அமைப்புகளின் பிரதிநிதிகளும் நண்பர்களும் அடங்குவர்.
இந்தக் கூட்டத்தை வாடிமின் மனைவி கலீனா ரொகோவினா ஒழுங்கு
செய்திருந்தார்.
உலக சோசலிசவலைத் தளத்தின் ஆசிரியர் குழுத்
தலைவர் டேவிட் நோர்த், வாடிமின் வாழ்க்கையினதும் அவரது
பணிகளதும் முக்கியத்துவம் பற்றிய பிரதான உரையை நிகழ்த்துவதற்காக
கலினா ரொகோவினாவினால் அழைக்கப்பட்டிருந்தார். அவரது
குறிப்புகள் கீழே மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
இன்று நாங்கள் வாடிம் ரொகோவினின் 65வது பிறந்த
நாள் எந்தவகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதை நினைவு
கூரும் அதேவேளை அவரது மகத்துவமான வரலாற்று படைப்பின்
ஏழாவதும் இறுதியானதுமான பிரதியின் வெளியீட்டைக் கொண்டாடுவதற்காகவும்
இங்கு கூடியுள்ளோம்: ஸ்ராலினிசத்துக்கு ஒரு மாற்றீடு இருந்ததா?
என்ற நூல் 1923 இல் இடது எதிர்ப்பு இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டது
முதல் 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கி கொல்லப்பட்டது வரையும்
அக்டோபர் புரட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான
அரசியல் போராட்டத்தின் ஒரு வரலாறாகும்.
இந்த சம்பவங்களில் ஒன்றுசேர்தலில் ஆழ்ந்த
மற்றும் உயிர்ப்பான வெளிப்பாடுகளும் உள்ளது. அவரது 65வது பிறந்த
தினத்தை அனுஷ்டிக்கும்போது, நாம் வாடிமின் வாழ்க்கையைக்
கொண்டாடுகின்றோம். அவரது வரலாற்றின் ஏழாவது வெளியீட்டை
வரவேற்கும்போது, நாம் வாடிமின் பணிக்கு மதிப்பளிக்கின்றோம்.
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும்்்்,
முடிவையும் முடிவின்மையையும் கொண்டுள்ளது. அது அதனது தனித்துவத்திலும்
உடலியல் ரீதியாக வாழும் காலத்தாலும் ஒரு எல்லைக்குட்பட்டது.
ஆனால் அது மனிதனின் ஒன்றிணைந்த சமூக இருப்பாகவும், அந்தவகையில்
உலகத்தின் மனித இனத்தின் அனுபவங்களை உணர்வு ரீதியாக வெளிப்படுத்துவதனூடாகவும்
ஒரு முடிவிலியாகும்.
ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் குறிப்பிட்டால்,
"மனித குலத்தின் தலைவிதியின் ஒரு சிறு பகுதியை தமது தோள்களில்
சுமந்து செல்பவர்களும்" இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுள்
இந்த முடிவற்ற பெறுமதிமிக்க மூலங்கள் அசாதாரணமான ஆழ்ந்த
வெளிப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும். மனித குலத்தின் எதிர்காலத்துக்கான
அவர்களின் பங்களிப்பு அவர்களுக்குப் பின்னரும் நிலைத்திருக்கும்.
அவர்களது வாழ்க்கையின் வழிப்பெற்றப் பேறானது அடுத்துவரும்
சந்ததியினரின் நனவினுள் நுளைந்து முழுமனித குலத்தினதும் மகத்தான
பொதுச்சொத்தாக மாற்றமடையும். வாடிம் ஸகாரோவிச்
ரொகோவினின் வாழ்க்கையும் அவ்வாறான ஒன்றேயாகும்.
வாடிம் ரொகோவினின் மகத்துவம் தங்கியிருப்பது
எங்கே? இந்தக் கேள்விக்கு அவரது வாழ்க்கையை அவர் வாழ்ந்த
காலகட்டத்தின் உள்ளடக்கத்தில் வைத்து நோக்குவதன் மூலம்
மாத்திரமே பதிலளிக்கமுடியும். விசேடமாக வாடிமின் மகத்தான
புத்திஜீவி சிருஷ்டிப்புக்களின் காலகட்டமான அவரது வாழ்க்கையின்
கடைசி தசாப்தத்தின் உள்ளடக்கத்தில் வைத்து நோக்குவதில்
மாத்திரமேயாகும். கடந்த 15 வருட காலத்துக்குள் முன்நாள்
சோவியத்யூனியனில் பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று,
பழைய சோவியத் சமூகத்தின் சமூகப் பொருளாதார அமைப்பில்
இடம்பெற்ற மாற்றங்களின் பண்பு சம்பந்தமான ஒரு விவாதத்துக்குள்
பிரவேசிப்பது எனது நோக்கமல்ல. இந்த மாற்றங்களின் பண்பு
மற்றும் விளைவுகள் சம்பந்தமாக வித்தியாசமான கருத்துக்கள்
கொண்டவர்கள் எங்களுக்கிடையில் உள்ளார்கள் என்பதை நான்
அறிவேன். வாடிமின் ஆய்வு, சோவியத் ஸ்ராலினிச அரசாங்கத்தின் நீண்டகால
நெருக்கடியானது 1980 களின் கடைப்பகுதியிலும் 1990களிலும், அரசியல்ரீதியில்
பிற்போக்கானதும் சமூகரீதியில் எதிரானதாகவும் தீர்த்து வைக்கப்பட்டது,
என்ற அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஆய்வோடு ஒத்திருந்தது.
ஆனால் கடந்த 15 வருடகால புத்திஜீவி சூழலைப்பற்றி
விசேடமாக சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒரு அம்சம் உள்ளதை
கருத்தில்கொள்ளவேண்டும் என்பதை நான் கடமையாக உணர்கிறேன்.
1980களின் நடுப்பகுதி முதல் இடம்பெற்ற எல்லா சம்பவங்களுக்கு
மத்தியிலும் சோவியத் மற்றும் சோவியத்துக்கு பின்னைய சமூகத்துக்குள்
அனைத்துலக ரீதியான மதிப்பை பெற்ற அல்லது ஆகக்குறைந்தது
பாராட்டுதலை பெற்ற ஒரு தனி அரசியல் பிரதிநிதியும் தோன்றவில்லை.
மனிதன் புதியதும் நம்பிக்கையூட்டுகின்றதுமான சிந்தனைகளைப் பெற்றுக்கொள்ள
ஒரு தேடலில் ஈடுபட்டுள்ள போதிலும் அவ்வாறான சிந்தனைகளுக்காக
முன்நாள் சோவியத் ரஷ்யாவின் பக்கம் பார்வையை செலுத்தவேண்டும்
என்பது ஒருவருக்கும் தோன்றவில்லை. உண்மையில் உயர்ச்சியும்
அல்லது தீயவழியில் பேர்பெற்றவர்களும் அனைவரும் இரண்டாந்தரமானவர்களாகவும்,
அயோக்கியர்களின் வரிசையிலும் அம்பலப்படுத்தப்பட்டு வந்துள்ளார்கள்.
இன்று, யாராவது கொர்பச்சேவ், யெல்ட்சின், லெபெட்,
சோபக்சி ஆகியோரது (சிலருடைய பெயர்கள் ஞாபகத்தில்கூட இல்லை)
"மேன்மையைப்" பற்றியும், மன்னிக்கவும் கிரம்ளினின் தற்போதைய
பதவியிலிருப்பவரையும் பற்றி சபையில் சிரிப்பொலியைத் தூண்டாமல்
ஒருவர் பேசமுடியுமா? இந்த அனைவரும் தம்மால் முன்கூட்டி
காணமுடியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத வரலாற்று,
சமூக போக்குகளின் நனவற்ற கருவிகளாகும்.
குருட்டுத்தனமானதும் உயர்வற்ற தன்மையும்
அரசியல் வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை என்பதை
நான் சேர்க்கவேண்டும். சிலவேளைகளில் நான் இதைப்பற்றி
குறைந்தளவில் புரிந்துகொண்டுள்ளபோதிலும், ரஷ்யாவின் கலாச்சார
வாழ்க்கையானது அதன் பொருளாதாரத்தைப் போலவே
வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என நான் நம்புகிறேன்.
கடந்த தசாப்தத்தில் சர்வதேச அவதானத்தை ஈர்த்துக்கொண்ட
ஒரு சிறந்த நாவல், ஒரு பெறுமதியான கவிதை, ஒரு குறிப்பிடத்தக்க
இசைப் படைப்பு அல்லது ஒரு திரைப்பட படைப்போ வெளிவந்துள்ளதா?
இந்தப் புத்திஜீவி மற்றும் கலாச்சார பாலைவன சூழலில்
ரொகோவினின் படைப்பு ஒரு பாரிய வெற்றியாக உருவெடுத்துள்ளது.
வரலாறு பற்றிய வாடிமின் ஏழு பாகங்களும் ரஷ்யாவில்
மட்டுமல்ல உலக இலக்கியத்துக்கு ஒரு சிறந்த படைப்பாக நீடித்திருக்கும்.
இ.எச். கார் குறிப்பிட்டதுபோல், கடந்த காலத்தைப் பற்றிய
வரலாற்றாசிரியனின் பார்வை நிகழ்கால முரண்பாடுகள் பற்றிய ஆழ்ந்த
அறிவில் இருந்து விளக்கப்படும்போது ஒரு "பெறுமதியான
வரலாறு உருவாகிறது". வாடிமின் பணிகளின் முக்கியத்துவத்தை
புரிந்து கொள்வதற்கான திறவுகோல் இதுவேயாகும். அது
அவரது கால கட்டத்தின் பிரச்சினைகளுடனான முன் அனுபவமும்,
மனித குலத்தின் எதிர்காலம்பற்றி அவர் கொண்டிருந்த அக்கறையும்
அவரை கடந்த காலத்தைப் பற்றி படிக்கவும் ஆய்வு செய்யவும்,
விளக்கவும் தூண்டின. வரலாற்று உண்மைகளின் பிரச்சினைகளுடனான
வாடிமின் குரூரமான முன் அனுபவங்கள் வெறுமனே அறநெறி சம்பந்தமானது
அல்ல. மாறாக அவை அவர் வாழ்ந்த சகாப்தத்தின் உயர்ந்த
பிரச்சினைகளான, பொய்யும் மோசடிகளும் நிறைந்த ஸ்ராலினிச
சகாப்தங்களால் வழங்கப்பட்ட சமூகப் பரிசுகளான சமூக
முன்நோக்கு ஒன்று உலகரீதியாக இல்லாதுள்ளமை, வர்க்க உணர்மையின்
வீழ்ச்சி, பரவலாகக் காணப்படும் அரசியல் குழப்ப நிலைமை மற்றும்
பொதுக் கருத்துக்கள் உணர்வு மழுங்கச்செய்யப்பட்டவை
போன்றவை பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவிலிருந்து பெற்றுக்கொண்டதாகும்.
வரலாற்று உணர்மையின் அழிப்பானது குழப்பமான தகவமைவற்ற
மக்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் தாம் முகம் கொடுக்கும்
சமூக, அரசியல் பிரச்சினைகளின் தன்மையை புரிந்துகொள்ள
முடியாதவர்களாகவும் தமது சமூகத்தின் நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான
தீர்வை காணமுடியாதவர்களாகவும் உள்ளனர்.
வாடிம் தனது வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில்
தன்னை எந்த நோக்கத்திற்காக அர்ப்பணித்திருந்தார்? சோவியத்
வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் பாத்திரத்தை திரிபுபடுத்துவதற்கு
எதிராகவும், ஸ்ராலினிசம் மார்க்சிசத்தினதும் ரஷ்யப் புரட்சியினதும்
உற்பத்தியில் ஒரு அங்கம் எனக் கூறும் பொய்களை எதிர்ப்பதற்காகவும்:
சோவியத் யூனியனில் ஸ்ராலினிசத்துக்கு ஒரு பதிலீடு இருந்திருக்கவில்லை
என்பதை எதிர்த்துப் பதிலளிப்பதற்காகவுமாகும்: நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் கலந்துரையாடுவதன் மூலமும்
அனைத்துலகக் குழுவில் இணைந்து செயற்பட்ட வாடிம், ஸ்ராலினிஸ்ட்டுக்களை,
1930 களில் பயங்கரவாதமானது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற
வடிவில் சோவியத் தொழிலாள வர்க்கத்துக்கும் புத்திஜீவிகளுக்கும்
இடையில் இருந்த மார்க்சிய அரசியல் மற்றும் கலாச்சார
பிரதிநிதிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அரசியல் மக்கள்
படுகொலைகளின் உருவங்கள், என தமது கருத்துக்களை அபிவிருத்திசெய்தார்.
வாடிம் 1930களின் பயங்கரத்தை ஸ்ராலினாலும், அவரது கைக்கூலிகளாலும்
(மொலடோவ், கஹனெவிஷ், வொரோஷலோவ், பெரியா, யெஸ்கோவ்,
மிகோயான் மற்றும் ஏனையவர்கள்) ஒடுக்கப்பட்டதும் ஆனால்
அந்த சந்தர்ப்பத்திலும் பலமாக இருந்த இடது எதிர்ப்பியக்கத்துக்கு
எதிராக நடாத்தப்பட்ட உள்நாட்டு யுத்தம் என ஆய்வுசெய்தார்.
லேவ் டாவிடோவிச் ட்ரொட்ஸ்கி அந்த இடது எதிர்ப்பியக்கத்தின்
சக்திவாய்ந்த குரலாகும்.
இந்த வரலாற்று ஆய்வுகளின் அடித்தளத்தில் இருந்தது
ஒரு ஆழ்ந்த தத்துவார்த்தத்தை கொண்ட ஒரு கொள்கையாகும்.
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கொலைகாரக் கொள்கைகளின் கீழ்
இருந்துகொண்டிருப்பது சமூக அந்தஸ்துக்களை கைப்பற்றிக்கொள்வதற்கான
உந்துதலாகும் என வாடிம் சுட்டிக் காட்டினார். அதாவது
பெரும்பான்மையானவர்களிடமிருந்து செல்வத்தை பறித்து ஒரு
சிறுபான்மையினருக்கு பெற்றுக் கொடுப்பதாகும். ஸ்ராலினின் குற்றங்களில்
வெளிப்பட்ட சமூக கொள்கைகளானது அவர் தலைமை வகித்த
அதிகாரத்துவத்தின் மூலம் சமூக சமத்துவமின்மையை போஷிப்பதும்
பாதுகாப்பதுமாகும். ஸ்ராலினிசத்திற்கும் போல்சிவிசத்திற்கும்
இடையிலுள்ள அடிப்படையான முரண்பாடு என்னவெனில், போல்சிவிசத்தின்
வரலாற்று நோக்கம் சமூக சமத்துவமாகும், ஸ்ராலினிசத்தின்
நோக்கம் தனிமனிதர்களின் அந்தஸ்துக்களை பாதுகாப்பதாகும்.
வாடிம் எழுதியதுபோல் ''சடத்துவ பொருட்கள் மீதான ஸ்ராலினின்
விருப்பும், நாளாந்த வாழ்க்கையில் ஆடம்பரப் பொருட்கள்
மீதான அளவற்ற விருப்பும் கொர்பச்சேவ் உள்ளடங்கலான
அவரது ஆதரவாளர்வரை நீண்டு சென்றது, இவர்கள் அனைவரும்
முன்னைய போல்சுவிக்கு பாதுகாவலரை போலல்லாது, மக்களுடன்
தமது தனிப்பட்ட தன்மைகளையும், உடலியல் ரீதியான பிரச்சனைகளை
பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களாகும்''.
புறநிலை உண்மை மீதான ஆய்வுரீதியான செல்லுபடியான
தன்மையின் மிகவும் அசைக்கமுடியாத தன்மைதான் வாடிமின் வரலாற்று
தத்துவம் மையமாக இருந்தது. உண்மையை அகநிலையான சிந்தனையை
புறநிலை இருப்புக்களுடன் தொடர்புபடுத்தி நோக்குவதை ஏற்றுக்கொள்வதையும்,
மற்றும் சமூக இருப்பின் போக்குமே விஞ்ஞான வரலாற்று உணர்மைக்கு
முக்கிய மையமாக இருப்பதாகும். இந்த தத்துவம் சோவியத்
ரஷ்யாவின் வரலாற்றை கற்பதற்கு அடிப்படையாக இருப்பது மட்டுமல்ல
இந்த விடயம் இங்கு உண்மையான ஒரு சர்வதேச பிரச்சினை:
இது ரஷ்யாவின் அக்கறைகொள்ள வேண்டிய பிரச்சினை மட்டுமல்ல.
அடிப்படையில் 20ம் நூற்றாண்டின் அனுபவங்களையும் படிப்பினைகளையும்
முழுமையாக பற்றிப்பிடிக்கும் பிரச்சினையாகும்.
சோவியத் சமூகத்தின் பின்தங்கிய நிலைமையின்
தன்மை சம்பந்தமான எனது குறிப்பில், அமெரிக்கர்களதும்
ஐரோப்பியர்களதும் புத்திஜீவி ஆக்கங்கள் குறைந்து வருகின்றது
எனக் கூறுவதற்கு எண்ணவில்லை. ரஷ்யாவின் எல்லைக்கு அப்பால்
உள்ள நிலைமை பரிதாபகரமானது அல்ல எனக் கூறமுடியாது.
உலகம் பூராவும் தகவமைவின்மையும், குழப்பமும், அறியாமையும்,
வேறுபட்ட தோற்றத்திலும், வேறுபட்ட மட்டத்திலும் இருந்துகொண்டுள்ளன.
வரலாற்று சம்பவங்களையும், தற்பொழுது தோன்றும் அனுபவங்களையும்
தத்துவார்த்த ரீதியில் புரிந்துகொள்ள முடியாமையும் கிரகிப்பதில்
ஏற்பட்ட தோல்வியும் ரஷ்யாவின் தகவமைவின்மையின் மூலங்களாகும்.
விசேடமாக அக்டோபர் புரட்சியும், அதற்கு பிந்திய
நிலைமைகளும் -மறைக்கப்பட்டதுடன் பொய்மைப்படுத்தப்பட்ட
ஒரு நிலமையில் பழைய அனுபவங்களை கிரகித்துக்கொள்வது எவ்வாறு?
அதனால்தான் வாடிம் ரொகோவினின் எழுத்துக்கள் உலக முக்கியத்துவம்
வாய்ந்தவையாக உள்ளன. அவை சர்வதேச வாசகர்களையும்
கவருகின்றது.
வரலாற்றில் புரட்சிகர எழுச்சிகள் பழைய
தடைகளை உடைத்து, மனித இனத்தின் கலாச்சாரத்தில் ஒவ்வொரு
பகுதியிலும் பெரும் வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கிய காலகட்டங்கள்
உண்டு. அத்தகைய எழுச்சிக்கான காலகட்டத்தில் அறிஞர்கள் புதிய
பேச்சாளர்களாக முன்னணியில் தோன்றுவார்கள். அவர்கள் தமது
காலத்தின் முற்போக்கான தாக்கங்களை மிகவும் ஆழமாகவும்,
ஒருமுகமாகவும், பலப்படுத்தி வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் ஆக்கபூர்வமான அறிஞன், எதிர்ப்பின் மத்தியிலும்
தனிமைப்பட்ட நிலையிலும், மிகவும் நெருக்கடியான நிலைமையிலும்
வேலை செய்ய வேண்டிய வருந்தத்தக்க காலகட்டமும் உள்ளது.
அத்தகைய சகாப்தத்தின் பிரத்தியேக மனிதர்கள் அவர்கள் காலத்தின்
ஆண்கள் பெண்கள் அல்ல, ஆனால் அவர்களுடைய காலத்திற்கு
எதிரான ஆண்களும், பெண்களும் ஆவர். அந்த வகையில் ட்ரொட்ஸ்கிக்கும்,
வாடிம் ரொகோவினுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கின்றது.
1923ம் ஆண்டு ட்ரொட்ஸ்கி இறந்திருப்பாரேயானால், அவர்
ரஷ்யப் புரட்சியின் முக்கியமான ஒருவராக கணிக்கப்பட்டிருப்பார்.
ஆனால் உலக சோசலிசத்தை காட்டிக் கொடுத்த ஸ்ராலினிசத்திற்கு
எதிராக ஈவிரக்கமற்ற போராட்டத்தை நடாத்திய ட்ரொட்ஸ்கி
1923ம் ஆண்டுக்கும் 1940ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 17 வருட
காலத்தில் நிறைவேற்றியவை 20ம் நூற்றாண்டினதும், ஏன் 21ம் நூற்றாண்டினதும்
தலைசிறந்த புரட்சிகர சிந்தனையாளனாகவும், தலைவராகவும்
அவரை வரலாற்றில் இடம்பெறச்செய்தது.
ட்ரொட்ஸ்கியை போன்று, பலசகாப்தங்களாக
பொய், சுயநலம், போலி நடிப்பு, கோழைத்தனம் மிக்க சூழலின்
மத்தியில் துணிகரமான கொள்கையிலும் வரலாற்று உண்மைகளுக்குமான
வாடிமின் அர்ப்பணிப்புகள் அவரது அரசியல், புத்திஜீவி ஒழுக்கத்தில்
இருந்து வெளிப்பட்டன. தான் வாழ்ந்த காலத்திற்கு எதிராக
வாடிம் ரொகோவின் 7 திரட்டுக்களை உற்பத்தி செய்ததுடன், அவ்
ஒவ்வொரு நூல் திரட்டுகளும் மனித இனத்தின் புரட்சிகர
மரபுரிமையில் ஒரு அறநெறியானதும் புத்திஜீவித்தனமானதுமான மைல்கற்களாக
உலக இலக்கியத்தில் வாழும்.
7வது நூல்திரட்டின், தலையங்கம், "முடிவு,
ஆரம்பமாக இருக்கிறது." இந்த தலையங்கம் வாடிம்
ரொகோவினின் எழுத்துக்களுக்கு பொருத்தமானது.1998ம் ஆண்டு
18ம் திகதி அவருடைய உடல் எங்களைவிட்டு பிரிந்தது. ஆனால்
என்றும் அழியாத அவருடைய வாழ்க்கையும், அவருடைய எழுத்துக்களும்
எம்முடன் வாழ்கின்றது, இது நாளுக்கு நாள் பலமடையும்.
Top of page
|