World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Robert Hue and the putrescence of French Stalinism
A comment on Hue's interview with the WSWS

றொபேர்ட் ஹியூவும் பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் சீரழிவும்

உலக சோசலிச வலைத் தளத்துடனான றொபேர்ட் ஹியூவின் பேட்டி பற்றிய ஒரு கருத்துரை

By Peter Schwarz
15 June 2002

Back to screen version

றொபேர்ட் ஹியூவினை எதிர்கொள்கையில், இருபதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஒரு கட்சிக்கு இந்த மனிதன் தலைமை வகிப்பதை நினைத்துப் பார்ப்பது கடினமானது. உலக சோசலிச வலைத் தளத்தினால் கேட்கப்பட்ட கேள்விக்கான அவரது பதிலளிப்பு குறுகிய நோக்கும் தப்பிக்கும் மனப்பான்மையின் ஒரு கலவையாக இருக்கின்றது. அவர் ஒரு நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சியின் தலைவர் என்பதைவிட, வங்குரோத்தடைந்த ஒரு நிறுவனத்தின் கணக்காளனாக இருப்பதுபோன்ற ஒரு வெளிப்பாட்டினை அவர் வழங்குகின்றார்.

உண்மையில், ஹியூ பிரமாண்டமான சீரழிவினூடாக கடந்துகொண்டிருக்கும் ஒரு கட்சியினை கலைத்துவிடும் போக்கினை தலைமைதாங்குபவராக இருக்கிறார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 1920 களில் ஒரு ஸ்ராலினிச கட்சியாக உருவாகியிருந்ததுடன் மற்றும் 1930களில் இருந்து அதனது அரசியல் பாதை எதிர்ப்புரட்சிகரமானதாகியிருந்தது. மொஸ்கோ வழக்குகள் மற்றும் 1930 இன் பின்னர் சோவியத் யூனியனில் ஸ்ராலின் செய்த படுகொலைகளுக்கு ஆதரவளித்ததன் மூலம் அது அத்துடன் முற்றாக சமரசம் செய்துகொண்டது. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில், இது தொடர்ச்சியாக பிரெஞ்சு முதலாளித்துவத்தை பாதுகாத்து வந்தது.

அதே நேரம் இந்த காலப்பகுதி முழுவதும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பரந்த தொழிலாள வர்க்க அடித்தளத்தை கொண்டிருந்ததுடன் பத்தாயிரக்கணக்கான சோசலிச நனவு கொண்ட போராளிகளையும் கொண்டிருந்தது. அத்துடன் அது பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய புத்திஜீவித சமூகத்தில் மாபெரும் செல்வாக்கினை கொண்டிருந்தது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 26 வீத வாக்குகளுடன் பலம்வாய்ந்த தனிக்கட்சியாக எழுந்தது. 1960 மற்றும் 1970 களில் கூட பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தேசிய தேர்தலில் 20 வீதத்திற்கு மேலான வாக்குகளை பதிவு செய்தது.

இன்னொரு பக்கத்தில், இந்த வருடத்தின் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் 3.4 வீதத்தினை அது பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது சுற்றில் அது 4.8 வீதத்தினை பெற்றுக்கொண்டது. 1995 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 1997 இன் பாராளுமன்ற வாக்கினை ஒப்பிடும்போது தற்போது அதனது பாதி வாக்காளர்களை அது இழந்துள்ளது.

கட்சியின் சொந்த ஸ்ராலினிச கொள்கையே விரைவான சீரழிவின் முக்கிய காரணமாக இருக்கிறது. தன்னை ''கம்யூனிஸ்ட்'' என்று அழைத்துக்கொண்ட போதும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 70 வருடகாலமாக புரட்சியின் ஒரு எதிராளியாக இருந்துவருவதுடன், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதி முழுவதும் பிரெஞ்சு அரசின் ஒரு தூணாக இருந்துவருகிறது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, 1936, 1945 மற்றும் 1968 ஆகிய மூன்று தடவைகள் ஆழமான சமூக நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் முதலாளித்துவ அமைப்பின் உயிர்வாழ்வினை உறுதிப்படுத்தியது. ஒரு குறுகிய காலஇடைவெளியுடன் 1981 இல் இருந்து கட்சியானது அரசாங்கத்தில் தொடர்ச்சியான ஒரு சகாவாக இருந்துவருகிறது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பல வருடங்களாக ஒரு இடது அரசாங்கத்தில் கலந்துகொண்டதானது, சிரத்தையான சமூக சீர்திருத்தவாதத்தை நடைமுறைக்கிடுவதற்கும் சாத்தியமில்லாதது மட்டுமல்லாது விருப்பமற்றுமிருந்ததானது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்த அதனது செல்வாக்கினை பாரியளவில் இல்லாதொழித்தது.

ஒரு புதியவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் அரசாங்கத்திற்கு வந்துவிட்டது என மறைமுகமாக பரிந்துரை செய்த ஜேர்மன் நாடக ஆசிரியர் Bertolt Brecht இன் புகழ்பெற்ற மேற்கோளை ஞாபகப்படுத்திக்கொண்டு தொழிலாள வர்க்கம் பன்முக இடதுகளின் அரசாங்கத்தின் கொள்கைகளை விளங்கிக் கொள்ளாததால்தான் சோசலிச கட்சியின் தலைவர் லியோனல் ஜோஸ்பன் தோல்வியுற்றார் என ஹியூ கூறுகிறார். ஆனால் உண்மையானது ஹியூ வைத்திருக்கும் கருத்திற்கு எதிரானதாக இருக்கிறது. ஜோஸ்பனின் தலைமையின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச கட்சியினால் 5 வருடம் ஆளப்பட்ட அரசாங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கிய சோசலிச கட்சியின் தலைவர் பிரான்சுவா மித்திரோனால் தலைமை தாங்கப்பட்ட அரசாங்கத்தின் 14 வருடத்திற்கு பின்னர், உத்தியோகபூர்வ இடதுகளின் கொள்கைகளை தொழிலாளர்கள் நேரடியாக கண்டதுடன், அவர்கள் பாரம்பரிய இடது கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு தயாராக இல்லை.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கடந்த அரசாங்கத்தில் சோசலிச கட்சியுடனான கூட்டு சகாவாக மாற்றீட்டுக் கொள்கையை நடைமுறைக்கிட முயற்சித்தது என்ற ஹியூ இன் கூற்று கேலிகூத்தானது. 1981 இல் ஒரு சோசலிச அரசாங்கத்தினுள் முதல் நுளைவில் இருந்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர்கள் உத்தியோகபூர்வ அரசாங்கத்தின் கொள்கையை பணிவுடன் பாதுகாத்தனர். தசாப்தங்களூடாக மில்லியன் கணக்கானோர் பெற்ற அனுபவங்களை சில வார்த்தைகள் மூலம் துடைத்தெறிந்துவிடுவது சாத்தியமே என ஹியூ நம்புவதாக தெரிகின்றது.

ட்ரொட்ஸ்கி பற்றி தன்னிடம் ''கருத்து எதுவும் இல்லை'' என அவர் கூறியபோது வரலாற்று கேள்விளை பற்றிய அவரது ஆழ்ந்த அறிவின்மை தெளிவாகிறது. ஸ்ராலினிசத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட மார்க்சிசத்திற்கான போராட்டத்தில் அபிவிருத்தியடைந்த அவரது சொந்தக் கட்சியின் வரலாறு பற்றிய எந்த அறிவும் அவருக்கு இல்லை அல்லது அவர் பொய் சொல்கிறார்.

அவரது சொந்தக் கட்சியின் துயரந்தோய்ந்த வடிவம் எவ்வாறாக இருந்தபோதும், என்ன நடந்தது என்பது தொடர்பாக தயக்கம்காட்டவும், பிரதிபலிக்கவும் அவர் உணர்ந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக ஒரு ''சிக்கலான பிராந்தியத்தினதும் மற்றும் இருப்பிட குடியமைப்பினதும்'' நிர்வாகிபோல், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு ''மாபெரும் வருங்காலம்'' இருப்பதாக அறிவிக்கிறார்.

தேர்தலில் சிராக் ''குடியரசுவாத கொள்கையின் பிரதிநிதி'' ஆக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், அவர் தேர்தலின் போது ஒரு ''எதிர்ப்பு போராளியாக'' நடந்துகொண்டதாக அவர் (ஹியூ) குற்றம் சாட்டியபோது உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியலுக்கான அவரது அடிபணிவுத் தன்மை தெளிவாகியுள்ளது. கோலிச தலைவரிடம் இருந்து ஹியூ வேறு எதை எதிர்பார்க்கிறார்? யார் ஒருவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரள்விற்கு பதிலாக ஆளும் வர்க்கத்தின் ''நேர்மை'' இல் சார்ந்திருக்கிறாரோ, அவர் ஒரு அரசியல் சதுப்புநிலத்தினையே சென்று முடிவடைவார்.

ஹியூ ஸ்ராலினிசத்திற்கான அவரது எதிர்ப்பை தெரிவிக்க விரும்பியபோதும், அவர் ஸ்ராலினிசத்தின் ஒரு எடுத்துக்காட்டான உற்பத்தியாகும். அவர் அடிப்படைக் கொள்கைகளை அவமதிப்பதுடன், ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் ஏற்றுக்கொள்வதற்கான தயார் நிலை மற்றும் ஸ்ராலினால் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்தினை நோக்கிய சிடுமூஞ்சித்தனமான தன்மை போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

''ஸ்ராலினிசம்'' என்று அவர் வெளிப்படுத்திய விமர்சனமானது இறுதிநாட்களில் கம்யூனிஸ்ட் கட்சி உத்தியோகஸ்த்தர்களது சிறப்பம்சாகும். ஸ்ராலினிச கொள்கையின் அடிப்படை வேர்களான: மார்க்சிச வேலைத்திட்டமான உலக சோசலிசப் புரட்சியை அது நிராகரித்ததும், அதனது தேசியவாத ஒழுங்கமைவும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அது நிராகரித்ததையும் பற்றி கலந்துரையாட மறுத்தபோதும், ஸ்ராலினிசத்தின் மிக தெளிவான மற்றும் கொடூரமான குற்றங்களை அவர் மறுத்தார். ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் மற்றும் நான்காம் அகிலத்தின் விமர்சனம் மற்றும் மிக நனவான மட்டத்திலான போராட்டத்தில் இந்த அனைத்து அடிப்படை அரசியல் மற்றும் வரலாற்றுக் கேள்விகள் அபிவருத்தி செய்யப்பட்டன. இதனால் தான் ஹியூ ட்ரொட்ஸ்கி பற்றி கேள்வியை தவிர்க்கவேண்டியிருந்ததுடன், ட்ரொட்ஸ்கிசம் ஒரு ''அதிதீவிர-இடது'' வடிவம் என்ற பழைய ஸ்ராலினிஸ்ட்டுகளின் பிழையான கதையை மீண்டும் உச்சரித்தார்.

''பிரான்சில் ட்ரொட்ஸ்கிசம் அதிதீவிரமாக இருந்துவருவதுடன், ''அரச அமைப்புகளில் கலந்துகொள்வதற்கு'' நாட்டமற்று இருந்துவருகிறது என குற்றம் சாட்டியமை ஸ்ராலினிச அரசியல் முக்கியத்துவத்துடனான அவரது உடன்பாட்டினை தெளிவாக்குகிறது. நாம் ஏனைய கட்டுரையில் விளக்கப்படுத்தியதுபோல், அவர் குறிப்பிட்டுக்காட்டும் தம்மை ட்ரொட்கிஸ்டுகள் என அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கள் அனைத்தும் ட்ரொட்ஸ்கி போராடிய வேலைத்திட்டம் மற்றும் கோட்பாட்டினை நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டனர். அந்தக் கட்சிகளின் பலவீனங்கள் முதலாளித்துவ அமைப்புகளுக்கு இசைந்து போவதற்கான அவர்களது தயக்கமாக இருக்கவில்லை மாறாக நேர் எதிரானதாக அது இருக்கிறது. அவர்களது பலவீனங்கள் உத்தியோகபூர்வ பிரெஞ்சு அரசியலின் தேவைகளுக்கு தம்மை அடிபணிய வைப்பதற்கான அவர்களது நாட்டமாகும்.

Montigny இல் சேரிகளை(ghetto) ஸ்தாபிப்பதற்கு எதிரான ஒரு நடவடிக்கையில் அவர் தனது இனவாத பிரச்சாரத்தை பேணியபோது ஹியூ சிடுமூஞ்சித்தனத்தின் அதியுயர் இடத்தினை அடைகிறார். நாட்டில் ஏற்கனவே இருந்துவரும் குடிபெயர்ந்தோரின் சமூக ஐக்கியத்திற்கான ஒரு பங்களிப்பாக இது இருக்கிறது என்ற வாதத்தினூடாக நேரடியாக ஒவ்வொரு இனவாதியும் மற்றும் வெளிநாட்டவரை வெறுப்பவரும் குடியேற்றத்தை நிறுத்துவதற்கான அவரது இக்கோரிக்கையை பாதுகாக்கின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சின் சீரழிவினையிட்டு அனுதாபப்படுவதற்கு எதுவுமே இல்லை. அதனது நீண்ட தசாப்த செல்வாக்கானது பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் நனவில் மிக அழிவுகரமான தாக்கத்தினை உருவாக்கியுள்ளதுடன், தொழிலாள வர்க்க இயக்கத்தினை தீர்க்கமான முறையில் இல்லாதொழித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் உடைவானது, ஒரு பரந்துபட்ட உண்மையான சோசலிச மற்றும் சர்வதேச அரசியல் கட்சியின் அபிவிருத்திக்கு தொழிலாள வர்க்கத்தின் பாதையில் இருந்து ஒரு பிரதான தடையை அப்புறப்படுத்துகிறது. எப்படியிருந்தபோதும், இந்த உடனடி பணியை அடைவதற்கு, மிகவும் சிந்தனை மிக்க மற்றும் தீர்மானகரமான தொழிலாளர்கள்,மாணவர்கள், புத்திஜீவிகள் அனைவரும் இருபதாம் நூற்றாண்டில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் அரசியல் பாடங்களின் அனுபவங்களை உள்ளீர்த்துக்கொள்ள முயன்றாக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ட்ரொட்ஸ்கியாலும், நான்காம் அகிலத்தாலும் முன்னெடுக்கப்பட்ட ஸ்ராலினிசத்திற்கு எதிரான மார்க்சிசத்திற்கான போராட்டத்தின் அனுபவங்கள் உள்ளீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved