World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
Sophistry in defense of opportunism: an exchange with a member of the French LCR சந்தர்ப்பவாதத்தைப் பாதுகாப்பதில் குயுக்திவாதம்: பிரெஞ்சு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினருடன் ஒரு கருத்துப் பரிமாற்றம் 20 July 2002 கீழே வெளியிடப்பட்டிருக்கும் கடிதம், ட்ரொட்ஸ்கிசத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொள்ளும் பல அமைப்புக்களுள் ஒன்றான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) உறுப்பினர் ஒருவரிடமிருந்து, "பிரெஞ்சு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன் சந்தர்ப்பவாதத்தைப் பாதுகாக்கிறது" என்ற கட்டுரைக்குப் பதிலாக உலக சோசலிச வலைதளத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து டேவிட் வோல்ஷால் விடுக்கப்பட்ட பதில் வருகிறது. ஏப்ரல் 21 ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்றில், எல்.சி.ஆரின் வேட்பாளர் ஒலிவர் பெசன்ஸ்நோட் 12 லட்சம் வாக்குகளை வாக்குப்பதிவில் பெற்றார், அது தேசிய அளவிலான மொத்தத்தில் 4.25 சதவீதம் ஆகும். முதலாவது சுற்றானது, தேசிய முன்னணியின் அதி வலதுசாரி ஜோன் மேரி லுபென் மற்றும் பதவியில் இருக்கும் கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கும் இடையில் முடிவைத் தீர்மானிக்கும் போட்டியை உண்டுபண்ணியபோது, பிரான்சில் ஒரு பெரிய அரசியல் நெருக்கடி அபிவிருத்தி அடைந்தது. பாராளுமன்ற வலதும் இடதும், "குடியரசின் மதிப்புக்களைக் காப்பாற்றுபவர்" என கூறப்படுகின்ற சிராக் வேட்பாளர் பின்னால் மக்கள் தொகையினரை முண்டியடித்துக் கொண்டு செல்வதற்கு செய்தி ஊடகம் வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். எல்.சி.ஆர் பிரெஞ்சு பெரு முதலாளிகளின் தெரிவுக்குரிய வேட்பாளருக்கு ஆதரவான இப்பிரச்சாரத்தில் இணைந்து, "லு பென்னுக்கு எதிராக" வாக்களிக்க அழைப்பு விடுத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினரிடமிருந்து ஒரு கடிதம் "எல்.சி.ஆர் அதன் சந்தர்ப்பவாதத்தைப் பாதுகாக்கிறது" என்ற உங்களது கட்டுரை சம்பந்தமாக: 1) உங்களைப் போன்ற குறுகிய எண்ணங்கொண்ட குறுங்குழுவாதிகள் (உட்குமைவுவாதிகள்) தவிர, ஒரு இடது வாக்காளர், அதிலும் பார்க்க குறைந்த இடது வாக்காளர் கூட, லு பென்னுக்கு எதிராக வாக்களிப்பதற்கான அழைப்பை சிராக் மீதான நம்பிக்கை வாக்கு என்று அர்த்தம் கொள்ள மாட்டார்கள். 2) இந்த வாக்களிப்பு பரிந்துரைக்கு வலதுசாரி மற்றும் சிராக்கிற்கு எதிரான எச்சரிக்கைகள், மற்றும் அவர்களுக்கு எதிராகப் போராடத் தயாராக இருப்பதற்கு அழைப்புக்கள் முன்நிகழ்வுகளாக இருந்தன. உங்களது கட்டுரை , இதனை நீக்குவதன்மூலம், உண்மைகளை வெட்கங்கெட்ட முறையில் பொய்மைப்படுத்துவதை ஒத்திருக்கின்றது. 3) நீங்கள் பெசன்சநோ வின் பதிலைப் புரிந்திருக்கிறதாக -ஆனால் எதிர்மறைப் பொருளைத் தருகிறது- பாசாங்கு செய்யும்பொழுது உங்களது நேர்மையற்ற தன்மையும் கூட தெளிவாக வெளிப்படுகிறது. அவரது பதில் லு பென்னுக்கு எதிராக வாக்களிப்பதற்கான அழைப்புக்கும் வாக்களிக்காமைக்கான அழைப்புக்கும் இடையிலான வேறுபாட்டை ஒப்பீட்டு முறையில் பார்க்கிறது. அது துல்லியமாக ஏனெனில் நவ பாசிசத்தின் ஆபத்து யதார்த்தமாக இருக்கிறது, இறுதியாக நாம் முதலாவது சூத்திரப்படுத்தலைத் தேர்ந்தெடுத்தோம், மற்றும் கடந்த காலத்தில் நாம் எப்போதும் செய்ததைப் போல மற்றும் எதிர்காலத்தில் நாம் செய்வது போல, அத்தகைய கட்சிக்கு எதிரான அணிதிரட்டலில் பங்கெடுத்தோம். முடிவில், தனியாக அணிநடையிடும் அதேவேளை, "சேர்ந்து அடிப்பதற்கு", நாம் உண்மையாக உங்களுடன் விவாதிக்க முடியும் மற்றும் முயற்சிக்க முடியும் என தெரியாத்தனமாக எண்ணிவிட்டேன்; உங்களது அறிவுஜீவித நேர்மையின்மை எனது கண்களின் முன்னால் உங்களை முற்று முழுதாக மதிப்பிழக்கச்செய்கிறது. பின் குறிப்பு: நான்காம் அகிலத்தை விட்டு நீண்டகாலத்திற்கு முன்பே விலகிச்சென்று விட்டவரும் மற்றும் எல்.சி.ஆருக்குள்ளே ஒரு போதும் குறிப்பிடப்படாதவருமானா பப்லோவைப் பற்றி இன்று இன்னும் பேசுவது, அவ நம்பிக்கை, முட்டாள்தனம் மற்றும் "சகோதர" ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் உண்மையைப் பொய்யாக்குவதற்கான உங்களது ஆவல் ஆகியவற்றின் மேலும் கூடிய விளக்கிக் காட்டலாக இருக்கிறது. டேவிட் வோல்ஷால் விடுக்கப்பட்ட பதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (எல்.சி.ஆர்) அரசியல் பற்றிய எமது கட்டுரைக்கு உங்களது பதில் முழுதும் வசைமாரியாக இருக்கிறது, ஆனால் நாம் செய்த அரசியற் கூற்றுக்கள் எதற்கும் சீரிய முறையில் பதிலளிக்கவில்லை. நான் ஒன்றை மட்டும் அனுமானிக்க முடியும், குரோதமான மற்றும் ஆத்திரமூட்டல் தொனியானது, இப்பிரச்சினைகள் மீதான விவாதத்தைத் தடுப்பதும் எமது விமர்சனங்களிலிருந்து உங்களது இயக்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களைப் பாதுகாத்துக் கொள்வதுமாய் அதன் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உங்களது கடிதம் "அறிவுஜீவித நேர்மையின்மை", "வெட்கங்கெட்ட பொய்மைப்படுத்தல்" மற்றும் ஏனைய பாவங்கள் என எம்மீது குற்றம் சாட்டுகிறது. எல்.சி.ஆர் மற்றும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஒலிவியே பெசன்சநோ ஆகியோரின் நிலைப்பாடுகளை நாம் ஏதோ பொய்மைப்படுத்திவிட்டோம் என்ற சுட்டிக்காட்டல்கள் சிறப்பாக அபத்தமானதாக இருக்கிறது. நாம் எல்.சி.ஆரின் ஜனாதிபதி வேட்பாளரை ஜூன் 5 அன்று பாரிசில் அவர் எம்முடன் பேசும் வரைக்கும் பேட்டி எடுக்கும் முயற்சியில் சென்றோம் மற்றும் அவரது வார்த்தைகளை முழுமையாக வெளியிட்டோம். அந்தநாள் மாலையில் பொதுக் கூட்டத்தில் எமது விமர்சனங்களுக்கு அவர் விடுத்த பதிலின் போதிய பகுதிகளை நாம் வெளியிட்டோம். இது "நேர்மையில்லாத குறுங்குழு வாதிகளுக்கான" ஒரு விசித்திரமான தொழில் நுட்பம். "ஒரு இடது வாக்காளர், அதிலும் பார்க்கக் குறைந்த இடது வாக்காளர் கூட....., லு பென்னுக்கு எதிராக வாக்களிப்பதற்கான அழைப்பை சிராக் மீதான நம்பிக்கை வாக்கு என்று அர்த்தம் கொள்ள" மாட்டார்கள் என நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கும் அதிவலதுசாரி ஜோன் மேரி லு பென்னுக்கும் இடையிலான முடிவைத் தீர்மானிக்கும் போட்டியை உருவாக்கிய, ஏப்பிரல் 21 ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றைத் தொடர்ந்து வந்த நாட்களில் சோசலிசக் கட்சியினதும் (PS) அதேபோல பிரெஞ்சுக் கம்யூனிஸ்டு கட்சியினதும் (PCF) நிலைப்பாடாகவும் இது இருந்தது. கோலிச தலைவருடனான தங்களின் வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கின்றன என்றும் நவபாசிச லு பென்னின் பாதையை அடைப்பதற்கு ஒரு தந்திரோபாயமாக சிராக்கிற்கு வாக்களிக்க மட்டுமே அழைப்பு விட்டதாகவும் சோசலிசக் கட்சி மற்றும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைகள் கூட வலியுறுத்தினர். அவர்கள் கூட சிராக் வெற்றியின் விளைபயன்கள் பற்றி காலியான எச்சரிக்கைகளை விடுத்தனர். யதார்த்தத்தில், ஏப்பிரல் 21ல் செய்தி ஊடகத்தையும் அரசியல் நிறுவனத்தையும் அந்த அளவுக்கு மிகவும் தொலைலப்படுத்தியது என்னவெனில் வலது மற்றும் இடது ஆகிய இரு பாராளுமன்ற அணிகளின் கணிசமான அளவு மக்களால் (54 சதவீதம் ஒன்றில் வாக்களிக்காது விட்டனர், அதி இடதுகளுக்கு வாக்களித்தனர் அல்லது அதி வலதுகளுக்கு வாக்களித்தனர்) நிராகரிக்கப்பட்டமை ஆகும். ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்றினை அடுத்து இளைஞர்களும் மக்களின் பரந்த தட்டினரும் லு பென்னுக்கு எதிராக அணிதிரண்டது பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தை மேலும் அச்சுறுத்தியது. அரசியல் அமைப்பானது ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தது மற்றும் சூழ்நிலை கட்டுப்பாடற்றுப் போகலாம் என ஒவ்வொரு பார்வையாளருக்கும் அது தெளிவாகத் தெரிந்தது. சிராக் ஆதரவுப் பிரச்சாரம் பாசிசத்தைத் தோற்கடிக்க ஒழுங்கு செய்யப்படவில்லை, மாறாக நிலவும் முதலாளித்துவ அரசியல் அமைப்பைப் பாதுகாப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. லு பென் பிரெஞ்சு மக்களின் மீது பாசிச சர்வாதிகாரத்தைத் திணிக்கும் எந்த நிலையிலும் இருக்கவில்லை. அதிகாரத்திற்கு அவரது வருகையின் ஆபத்து மக்கள் தொகையினரை முண்டியடித்துச் செல்லவைக்கும் பொருட்டு பெரிதளவில் மிகைப்படுத்தப்பட்டது. எந்த சம்பவத்திலும் அத்தகைய முடிவானது அக்கறையுடன் கூடிய சாத்தியத்தைக் கொண்டிருந்திருக்கும், முதலாளித்துவ பிற்போக்கு சிராக்கிற்கான ஆதரவு பாசிஸ்டுகளை தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றும் செய்யவில்லை. முதலில், சிராக்கிற்கும் லு பென்னிற்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் இல்லை. அதன் சொந்த குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சோசலிசக் கட்சித் தலைமையானது பாராளுமன்றத் தேர்தல்களின் இரு சுற்றுக்களுக்கு இடையில் வலது- அதிவலதுகளுடன் கூடிய இரகசிய ஏமாற்று உடன்படிக்கைகளை - பல்வேறு எடுத்துக்காட்டுகளில் சுட்டிக்காட்டியது மற்றும் இது லு பென் உத்தியோகபூர்வமாக ஒதுக்கி வைக்கப்படும் சூழ்நிலைகளில் சுட்டிக்காட்டியது. மேலும், தேசிய முன்னணிக்கான ஆதரவின் அடி மூலம் கடந்த பல தசாப்தங்களாக சமூக ஜனநாயகவாதிகளாலும் ஸ்ராலினிஸ்டுகளாலும் மேற்கொள்ளப்பட்ட தொழிலாள வர்க்க காட்டிக்கொடுப்புக்களில் கிடக்கின்றது. ஜோஸ்பனின் பன்மை இடது அரசாங்கத்தின் வலதுசாரி, முதலாளித்துவ ஆதரவுக் கொள்கைகள் பரந்த மக்கள் தட்டினரை சூறையாடி விட்டது மற்றும் வெறுப்படையச் செய்துவிட்டது. பிரான்சில் மக்கள் திரளினர் ஒரு அரசியல் மாற்றீட்டுக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகத்தான் உங்கள் சொந்தக் கட்சி உட்பட "ட்ரொட்ஸ்கிச" கட்சிகளுக்கு முப்பது இலட்சம் பேர் வாக்களித்தனர். ஏப்பிரல் 21 ஐ அடுத்து சிராக்கிற்கான "இடது" - வலது பிரச்சாரமானது இந்த அரசு நிறுவனத்திற்கு குரோதமான பலரது கண்களில் லு பென்னுக்கு பெரும் செல்வாக்கை வழங்கியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைதளமும், ஒரு பகிரங்கக் கடிதத்தில், லுற் ஊவ்றியர் மற்றும் தொழிலாளர் கட்சி ( Parti des Travailleurs) ஆகியோருடன் சேர்த்து எல்.சி.ஆர்-ஐயும் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்று புறக்கணிப்பை ஒழுங்கு செய்வதற்கு வலியுறுத்தியது. ஏப்பிரல் 21 அன்று 10 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த, இந்த அமைப்புக்களை, இரு முதலாளித்துவ வேட்பாளர்களுக்கும் எதிராக அவர்களின் சக்தியையும் ஆதரவாளர்களையும் திரட்டுவதற்கு, "வஞ்சக" சிராக்கிற்கும் "பாசிச" லு பென்னுக்கும் இடையில் தேர்வு இல்லை என்ற உண்மையை இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சொல்வதற்கு நாம் அழைத்தோம். மே 3 அன்று நாம் "பகிரங்கக் கடிதத்தின்" படி ஒன்றை எல்.சி.ஆரின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்தோம், அந்த சம்பவத்தின்போது நாங்கள் பதிலைப் பெறுவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டோம். நாம் ஒரு போதும் அதனைப் பெறவில்லை. மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் புறக்கணிப்பு வேண்டுகோளுக்கு பதில் கொடுத்திருப்பர் என்று கூறுவது சாத்தியமில்லாதது. எல்.சி.ஆர், எல்.ஓ மற்றும் பி.டி ஆகியன நிராகரித்துவிட்ட கொள்கைக்கான உறுதியான போராட்டம் மட்டுமே அதனைத் தீர்மானித்திருக்க முடியும். அது சடரீதியாக அரசியல் சூழலை மாற்றியிருக்கும், தொழிலாள வர்க்கத்தைப் பலப்படுத்தி இருக்கும், அரசியல் நிறுவனத்திற்கு ஒரே எதிர் துருவமாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் நவ பாசிஸ்டுகளை பலவீனப்படுத்தி இருக்கும் மற்றும் சிராக் அல்லது லு பென்னின் கீழ் வர இருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தயாரித்திருக்கும். சிராக் ஆதரவு பிரச்சாரத்தின் அரசியல் விளைவுகள் இடதுகளுக்கு அழிவுகரமாக இருந்தன. பதவியில் இருந்த ஜனாதிபதி 82 சதவீத பெரும்பான்மை அலையின் மீது பதவிக்குள் நுழைந்தார். பாராளுமன்ற தேர்தல்களின் முதலாவது சுற்றில், இடதுசாரிக் கட்சிகள் பெரும் தோல்வியைத் தழுவின. எல்.சி.ஆர் மற்றும் எல்.ஓவுக்கான வாக்கு ஏப்பிரல் 21 மட்டங்களில் இருந்து கணிசமான அளவு வீழ்ச்சி அடைந்தது. இரண்டாவது சுற்று வலதுசாரியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. சிராக்கின் சக்திகள் ஜனாதிபதி தேர்தலின் வாக்களிக்கத்தகுதியான வாக்காளர்களில் 14 சதவீதம் வருவதற்கு ஜூன் 16 தேசிய அசெம்பிளியில் அறுதிப்பெரும்பான்மைக்கு நெம்பித்தள்ளின, இந்த வியப்பூட்டும் காட்சி இடதுசாரி என்று அழைக்கப்படுவனவற்றின் சமரசத்தால் மட்டுமே சாத்தியமானது. இதற்கிடையில் இந்த நேரம் பிரெஞ்சு ஆளும் தட்டின் மிகவும் சக்தி மிக்க பகுதியின் ஆதரவு பெறாத லு பென் கட்சியானது ஒரு பிரதிநிதியைக் கூட தேர்ச்சி பெறத்தவறியது. சிராக்கும் அவரது சக்திகளும், பிரெஞ்சுத் தொழிலாளர்களின் வரலாற்று வெற்றிகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு குறிப்பிடத்தக்க அளவு சுதந்திரமாக விடப்பட்டுள்ளனர், சட்டப்பூர்வ அளவிலும் கூட விடப்பட்டுள்ளனர். ஒலிவியே பெசன்சநோ அங்கு வேறுபாடுகள் இருக்கின்றதாக எமக்கு சுட்டிக்காட்டிய போதிலும், எல்.சி.ஆர் என்றும் புறக்கணிப்பு தந்திரோபாயத்தை கருதிப்பார்க்கவில்லை என்று அதன் பகிரங்க அறிக்கையிலிருந்து எதுவும் சுட்டிக்காட்டவில்லை. ஏப்பிரல் 21 லிருந்து உங்களது இயக்கம் உத்தியோகபூர்வ சிராக் பிரச்சாரத்தின் இடதுசாரி நிலைப்பாட்டை எடுத்தது. "சிராக்கிற்கு வாக்களி", "லுபென்னுக்கு எதிராக வாக்களி" என்ற சொற்றொடர்களை உச்சரிக்க உங்களை ஒருபோதும் அனுமதிக்காத அதேவேளை -உங்கள் சுலோகம்- இருவருக்கும் இடையிலான போட்டியில் ஒரு விஷயத்தை மட்டுமே அர்த்தப்படுத்த முடியும். "லு பென்னுக்கு எதிராக வாக்களி" சுலோகம் வாக்களிக்காது விலகி இருத்தலுக்கான அழைப்பின் திக்கில் ஒரு அடி எடுத்துவைப்பாக இருந்தது என்ற உங்களது குறிப்பான சுட்டலை ("பெசன்சநோவின் பதில்....... லு பென்னுக்கு எதிராக வாக்களிப்பதற்கான அழைப்புக்கும் வாக்களிக்காமைக்கான அழைப்புக்கும் இடையிலான வேறுபாட்டை ஒப்பீட்டு முறையில் பார்க்கிறது") அரசியல் அக்கறையின்மையின் அறிகுறியாக மட்டுமே அர்த்தப்படுத்தப்பட முடியும். எல்.சி.ஆரின் நிலைப்பாடு பற்றி பொதுமக்களுக்கு ஐயம் இருக்கவில்லை. ஏன் இருக்க வேண்டும்? மே5 இரண்டாவது சுற்றுக்கு முந்தைய வாரத்தில், தான் சிராக்கிற்கு வாக்களிக்கப்போவதாக அறிவித்தார். பிரெஞ்சு மொழி அசோசியேடட் செய்தி நிறுவனம் மே2ல் "ஒலிவியே பெசன்சநோ சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்பு" ("Olivier Besancenot appelle à voter Jacques Chirac") என்ற தலைப்பிட்டு செய்திவெளியிட்டது, அது பெசன்சநோ "மீண்டும் ஒருமுறை ஜாக் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை அழைத்திருந்தார்" என்று செய்தி வெளியிட்டது. அதேநாளில் பெசன்சநோ ஐரோப்பா-1 ல் சிராக்கின் தேர்வுக்கு அழைப்பு விடுத்தார் அது மேலும் குறிப்பிட்டதாவது: "அனைத்து வாக்காளர்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை தங்களது கரங்களைக் கழுவ வேண்டும் என்று நாம் கூறுகிறோம் [அதாவது, சிராக்கிற்கு வாக்களித்த பிறகு], மற்றும் கணிசமான அளவு எண்ணிக்கையில் வீதிகளுக்கு செல்வதன் மூலம், மூன்றாவது, சமூக சுற்றினை ஒழுங்கு செய்யவேண்டும்." இரண்டாவது சுற்று வாக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எல்.சி.ஆரால் வழங்கப்பட்ட இறுதி பத்திரிகைச் செய்தியில் "நாம் வீதிகளில் செய்திருப்பது போல வாக்குச்சீட்டில் தேசிய முன்னணியைத் தடுப்பது" அவசியமானதாக இருக்கிறது. மே5 அன்று லு பென்னுக்கு எதிராக வாக்களி" என அறிவித்தது. எல்.சி.ஆரின் நிலைப்பாடு தெளிவானதாக இருக்க முடியாது. உங்களது அமைப்பு பிரெஞ்சு முதலாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு வக்காலத்து வாங்கியது. நீங்கள் அதனை உறுதிப்படுத்த கவனமெடுக்கிறீர்களோ இல்லையோ, பத்தாயிரக்கணக்கான மக்களின் கண்களில் சிராக்கை சட்டரீதியானவராக்குவதில் நீங்கள் பாத்திரம் ஆற்றினீர்கள் மற்றும் மே மற்றும் ஜீனில் வலதுசாரிகளின் வெற்றிக்கான பாதையைத் தெளிவாக்க உதவினீர்கள். பாசிஸ்டுகளின் "வழியை அடைக்க" மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க சிராக்கிற்கு வாக்களிக்க இளைஞர்களையும் தொழிலாளர்களையும் உங்களால் வற்புறுத்த முடியும் என்றால், அதே அடிப்படையில் அவரது வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக அழைப்பதிலிருந்து அல்லது மக்கள் முன்னணி-பாணி ஆட்சியில் சேருவதிலிருந்து கூட எது உங்களைத் தடுக்கப்போகிறது? அலன் கிறிவின் கீழான எல்.சி.ஆர் மற்றும் அதன்தலைமை அந்த வழியில் கட்டுண்டிருக்கிறது என்ற எமது கண்ணோட்டத்தை நாம் மறைக்கவில்லை. ஏப்பிரல் 30 அன்று லு பிகாரோ வுடனான நேர்காணலில் அலன் கிறிவினால் அளிக்கப்பட்ட விளக்கங்களை ஒருவர் அப்படி அல்லாமல் எப்படி அர்த்தப்படுத்த முடியும்?: "பசுமைக்கட்சியினர் மற்றும் PCF தலைமைகள் எல்.சி.ஆரை கூட்டத்திற்கு அழைத்தனர், அது இயல்பாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் உள்நோக்கிய வெடிப்பை (Implosion) அனுபவித்தது, மற்றும் பல உறுப்பினர்கள் பெசன்சநோக்கு வாக்களித்திருப்பர். நீண்ட காலப்போக்கில், கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நோக்கிய வெடிப்பானது, புதிய பெண்ணிலைவாத, சுற்றுச்சூழல், முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் தோற்றத்திற்கு வழி வகுக்கும். அது தற்போதைய அதி இடது எனும் நிலைக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது. ஆயிரக்கணக்கான அரசியல் ரீதியாக இயக்கம் இல்லாதவர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைக் குழுக்கள் அதில் இடத்தைக் கண்டு கொள்வர்." அத்தகைய மறு அணிசேர்தல் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை அரசியல் பொறியை மற்றும் பரந்து பெருகிவரும் மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் முயற்சியை மற்றும் அதிபயங்கரமான விளைபயன்களுடன் இதுகாறும் உள்ள நிலையுடன் உள்ள அதிருப்தியை பழைய பிற்போக்கு வடிகால்கள் வழியாக திருப்பி அனுப்புவதைப் பிரதிநிதித்துவம் செய்யும் என நாம் நம்புகிறோம். அத்தகைய தவிர்க்கமுடியாத ஆண்மையற்ற மற்றும் பல்லில்லாத இடது உருவாக்கம் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் பெற்ற துரோகிகளால் தலைமை தாங்கப்படுவது, தீர்க்கமான நடவடிக்கைக்கு உறுதிகொடுக்கும் ஒரே கட்சியான, தேசிய முன்னணியின் கரங்களுக்குள் அதிகமான எண்ணிக்கையினரைக்கூட முன்னோக்கித்தள்ளும். எல்.சி.ஆருக்குளே மைக்கேல் பப்லோ (1911-1996) "குறிக்கப்படும் அம்சமாக ஒருபோதும்" இருந்ததில்லை என நீங்கள் வலியுறுத்தும் அதேவேளை, உங்களது தற்போதைய அரசியல் நிலை மற்றவிதமாகக் கூறுகிறது. ஸ்ராலினிசத்தின் குற்றங்களை எதிர்கொள்ளும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூட, அடிக்கடி கூறுவர் ஸ்ராலின் சில காலத்துக்கு முன் இறந்தார் என்று. நாம் எம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என அழைத்துக் கொள்கிறோம். அரசியல் அமைப்பு முறைகளும் தத்துவங்களும் அவற்றைத் தோற்றுவித்தவர்களையும் கடந்து வாழ்ந்திருக்கும். பப்லோ 1940 களின் இறுதியிலும் 1950 களின் தொடக்கத்திலும் நான்காம் அகிலத்தின் (FI) தலைவராக இருந்தார். மார்க்சிச இயக்கம் எதிர்கொண்டிருந்த கடினமான சூழ்நிலைகளின் கீழ் அவர், ட்ரொட்ஸ்கிசம் ஒருபோதும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை வென்றெடுக்க முடியாது மற்றும் அது நிலவும் ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் குட்டி முதலாளித்துவ தேசிய இயக்கங்களுக்கு ஆலோசகர் பாத்திரத்தினை ஆற்றுவதில் தன்னைத் திருப்திப்படுத்திக் கொண்டாக வேண்டும் என்ற தத்துவத்தை அபிவிருத்தி செய்தார். அத்தகைய கலைப்புவாத நிலைப்பாட்டை ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள்ளே திணிப்பதற்கு வரலாற்று ரீதியாக திரண்டிருந்த நான்காம் அகிலத்தின் காரியாளர்களுக்கு எதிராக போர் தொடுப்பது தேவையாக இருந்தது. பப்லோ 1951-52ல் பிரெஞ்சுப் பகுதியின் பெரும்பான்மையினருக்கு எதிரான முற்றிலும் ஜனநாயகமற்ற பிரச்சாரத்திற்கு தலைமை வகித்தார். சர்வதேசத் தலைமையினுள்ளே அவரது பிரிவுக்கு (கன்னைக்கு) அடிபணியும் தலைமையை நிறுவும் முயற்சியில், அப்பெரும்பான்மை பப்லோவினது கொள்கையை எதிர்த்தது. பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்த இந்த பப்லோ ஆதரவு சிறுபான்மையினர்தான், இன்று எல்.சி.ஆர் என்ற போக்கிற்கு மூலம் ஆவர். 1953 "பகிரங்கக் கடிதத்துடன்", ஜேம்ஸ் பி. கனன் மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தலையீடு மட்டுமே பப்லோவை எதிர்த்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிறுவியது, ட்ரொட்ஸ்கிச இயக்கம் கலைக்கப்படுவதைத் தடுத்தது. எந்த சம்பவத்திலும், நீங்கள் பப்லோவை நினைவு கூருவதற்கு விரும்பாமல் இருக்கலாம், ஆனால் உங்களது நிலைப்பாடு பப்லோவாத- கலைப்புவாத அரசியலின் வெளிப்பாடாக இருக்கிறது. நீங்கள் எம்மை "குறுங்குழுவாதிகள்" என குறிக்கின்றீாகள். அதன்மூலம் நீங்கள் சிராக்கினதும் வலதுசாரியினதும் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பிரெஞ்சு நிறுவனத்தால் தட்டி எழுப்பப்பட்ட இசிப்பு நோயை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ள அல்லது அதில் சேர்ந்து கொள்ள நாங்கள் தவறிவிட்டோம் என தெளிவாக அர்த்தப்படுத்துகிறீர்கள். அத்தகைய அழுத்தத்திற்கு எதிராக நிற்றலை மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடாக நாம் கருதுகிறோம், அது உங்களால் முடியாது, நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக முயற்சிக்க முடியாது, அதனை நீங்கள் கைவிட்டுவிட்டீர்கள். இந்த நிலைப்பாடுகளின் வழியே நாம் பிரான்சில் தலையீடு செய்து உங்களது நிலைப்பாடுகளை விமர்சித்தோம், மற்றும் நாம் அவ்வாறு தொடர்ந்தும் செய்வோம். டேவிட் வோல்ஷ் |