WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக் New bombing raids on Iraq as US seeks pretext for war
போருக்கான அமெரிக்கா நாடும் சாக்குப்போக்காக ஈராக்கில் புதிய குண்டு வீச்சுத்
தாக்குதல்கள்
By Bill Vann
16 July 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
அரபு நாட்டுக்கு எதிரான இன்னொரு போருக்கான சாக்குப்போக்கை வாஷிங்டன் தொடர்ந்து
தேடும் விதமாக, பாக்தாதிலிருந்து தெற்கே 200 மைல்கள் தொலைவில் உள்ள ஈராக்கின் தி கூவார் மாகாணத்தில்
குடிமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் இரண்டிலும் வார இறுதி அளவில் அமெரிக்க போர்விமானங்கள் கடும் குண்டு
வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டன.
ஜூலை 13 அன்றைய குண்டு வீச்சுக்களில்
குறைந்த பட்சம் ஏழு குடிமக்கள் காயம்பட்டனர் என ஒரு ஈராக்கிய பேச்சாளர் ஒருவர் கூறினார். அது
குவைத் மற்றும் செளதி அரேபியாவில் உள்ள தளங்களிலிருந்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்விமானங்கள் பலதடவை
குண்டு வீச்சுக்களை நடத்தியதில் நிகழ்ந்தது.
1991ல் பாரசீக வளைகுடா போரின்போது தெற்கு மற்றும் வடக்கு ஈராக்கின் மீது
வாஷிங்டனால் முடிவு செய்யப்பட்ட "பறக்கக் கூடாத" மண்டலங்களை கட்டாயப்படுத்துவதற்காக வான் கண்காணிப்பு
உண்மையை மறைத்துக்காட்டும் விதத்தில் நடத்தப்பட்டது, ஆனால் அமெரிக்க போர்விமானங்கள் அப்பொழுது இலக்கு
வைக்கப்பட்ட விமான எதிர்ப்பு பாதுகாப்பு அலகுகளில் இருந்து பதிலடியைத் தூண்டும் முயற்சியில் ஏனைய ஈராக்கிய
வான் பிராந்தியத்தில் தொடர்ந்து அத்துமீறல்களைச் செய்தன.
"பறக்கக் கூடாத" மண்டலங்கள் ஐக்கிய நாடுகள் அவையால் ஆன ஆதரவு தீர்மானங்கள்
எதுவுமின்றி அமெரிக்க ஆணையால் ஏற்படுத்தப்பட்டன, மற்றும் பாரசீக வளைகுடா போர் முடிந்து விட்டதாகக் கூறப்படும்
ஒரு தாசாப்தத்திற்கும் அதிகமான காலம் ஈராக்கிற்கு எதிராக தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைக்கான ஒரு
கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1998லிருந்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்களால்
40,000 தடவைகள் பறந்து சென்று வீசிய குண்டு வீச்சுக்களில் நூற்றுக் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர்
மற்றும் அநேகம்பலர் காயம்பட்டனர்.
இந்த தொடர்ச்சியான இராணுவ ஆத்திரமூட்டல்கள், சாதாம் ஹூசைன் ஆட்சியைக் கவிழ்த்து,
அப்பிராந்தியத்தை அரைக்காலனித்துவ காப்பாட்சிப் (Protectorate)
பகுதியாக மாற்றி மற்றும் அதன் பெரும் எண்ணெய் சேர்ம இருப்புக்களின் மீது அமெரிக்கக் கட்டுப்பாட்டை
நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஈராக்கிற்கெதிரான முழுஅளவிலான ஆக்கிரமிப்பிற்காக புஷ் நிர்வாகம் தயாரிப்பு
செய்கிறதால் என்றுமில்லா அதிகமான முக்கியத்துவத்தை அவை எடுக்கின்றன.
கடந்த வெள்ளி அன்று லண்டனில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக்கிய இராணுவம் மற்றும்
அரசியலை விட்டு ஓடிவந்தவர்களின் கூட்டத்தைக் கூட்டின, அதற்கு அமெரிக்க உளவுத்துறை மற்றும் பெண்டகன் அதிகாரிகளாலும்
கூட வருகை தரப்பட்டது. மாநாட்டின் நோக்கம் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் நிறுவுவதற்கான ஐந்தாம் படை
ஆட்சியை திடப்படுத்துவதை ஆரம்பிப்பதாக இருந்தது.
ஈராக் மீதான போருக்கு உரத்துக் கூச்சலிட்டு வக்காலத்து வாங்குபவர்களுள் ஒருவரான,
துணை பாதுகாப்பு செயலாளர் போல் வொல்ஃபோவிட்ஸ் (Paul
Wolfowitz), ஈராக் ஆக்கிரமிப்பு பற்றிய பேச்சுவார்த்தைக்காக உயர் இராணுவ அதிகாரிகளுடன்
துருக்கிக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார். துருக்கியின் ஒத்துழைப்பு பிரதானமானதாகப் பார்க்கப்படுகிறது மற்றும்
ஹூசைன் ஆட்சி வீழும்பட்சத்தில் எழக்கூடிய குர்திஷ் விடுதலையை நோக்கிய எந்த நகர்வையும் ஒடுக்குவதில் அது சுதந்திரமாக
விடப்படும் என நிர்வாகமானது அங்காராவுக்கு உத்தரவாதத்தைக் கொடுப்பதாக செய்தி அறிவிக்கப்படுகிறது. துருக்கி
மற்றும் ஈராக் இரண்டுமே அவர்களின் பரஸ்பர எல்லைப்புறங்களில் இணைந்த பகுதியில் கணிசமான அளவு குர்திஷ் சிறுபான்மையினரைக்
கொண்டிருக்கின்றன. 1980கள் மற்றும் 1990களில் குர்திஷ் தேசியவாதிகளுக்கு எதிராக துருக்கியானது இரத்தம்
தோய்ந்த எதிர் ஒடுக்குதல் தாக்குதல்களை நடாத்தியது.
பிரதமர் டோனி பிளேயர் இலையுதிர்காலத்தின் ஆரம்பத்தில் உண்மையில் திட்டமிடப்பட்டிருந்த
காம்ப் டேவிட்டுக்கு விஜயம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகக்கூட லண்டனில் செய்தி அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ்
செய்தி ஊடகங்கள் இச்சந்திப்பை "போர் உச்சிமாநாடு" என விவரித்துக்கொண்டிருக்கின்றன.
புஷ்-ம் ஏனைய நிர்வாக அதிகாரிகளும், ஈராக்கின் "பரந்த அழிவுகளின் ஆயுதங்கள்்"
அமெரிக்க இராணுவத்தால் முன்கூட்டியே போர் நடத்தப்படுவதை நியாயப்படுத்துவதற்குப் போதுமான அளவு அச்சுறுத்தலை
முன்வைக்கிறது என்று கூறப்படுவதனைப் பற்றி பகிரங்கமாக வலியுறுத்தி இருக்கும் அதேவேளையில், அமெரிக்க ஆளும் வட்டங்களில்
அத்தகைய நடவடிக்கைகளின் பரிந்துரைக்கத் தக்கமை மற்றும் அதன் காலநேரம் பற்றி கணிசமான அளவு வேறுபாடுகள்
அங்கு இருக்கின்றன.
பென்டகனின் சீருடையணிந்த அதிகாரிகளுக்குள்ளே புஷ் நிர்வாகமானது ஈராக்கில்
போருக்கான "வெளியேறும் மூலோபாயத்திதை" விரிவாகக் கூறத்தவறியிருக்கின்றது, அமெரிக்க இராணுவம் முடிவில்லாத
ஆக்கிரமிப்புக்குள் இறங்கி சாத்தியமான வகையில் சதுப்பு நிலத்தில் மாட்டிக்கொண்டுள்ளது பற்றி கவலைகள் நிலவுகின்றன.
பென்டகன் அதிகாரிகள் இரண்டரை இலட்சம் அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான
போர்க்கப்பல்கள் சம்பந்தப்படும் முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கான திட்டங்களை விவரிக்கும் வகைப்படுத்தப்பட்ட பத்திரங்களை
கசியவிட்ட பின்னர், மூத்த காங்கிரசின் ஜனநாயகக் கட்சியினரும் அதேபோல குடியரசுக் கட்சியினரும் எந்தவிதமான
உடனடி போர் பற்றியும் முழு உடன்பாடின்மை கொண்டிருக்கின்றனர். ஹூசைன் ஆட்சியைக் கவிழ்ப்பது முழு பிராந்தியத்தையும்
சமநிலை குலையச்செய்யும் என அவர்கள் எச்சரித்திருக்கின்றனர் அதேவேளை மற்றவர்கள் ஆப்கானிஸ்தானில் இராணுவ
நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவப் படைகள் மிக குறைவாக இருப்பது
பற்றி கவலைகளை வெளிப்படுத்தினர்.
செனெட் வெளிவிவகாரக் குழுவின் ஜனநாயகக் கட்சித்தலைவர் செனெட்டர் ஜோசப் பிடன்
நிர்வாகத்தின் போர்த்திட்டங்கள் பற்றி கேட்பதற்கு அழைக்கப்பட்டிருந்தார். புஷ் உடன் நடைபெற்ற அண்மைய கலந்துரையாடலை
பிடன் விரிவாக எடுத்துக் கூறினார், அதில் அவரை அவர் எச்சரித்தார்: "ஜனாதிபதி அவர்களே, ஏன் உங்கள் தந்தையார்
நிறுத்தினார், பாக்தாதிற்குப் போகவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. அவர் ஐந்தாண்டுகள் தங்கி இருக்க
விரும்பவில்லை."
எந்தக்கட்சியிலும் உள்ள முன்னணி அரசியல்வாதி எவரும், பெரும்பாலும் பாதுகாப்பு
இல்லாத ஒரு நாட்டிற்கு எதிரான தூண்டி விடப்படாத ஆக்கிரமிப்பு போர் பற்றி எந்தவிதமான தயக்கங்களையும் வெளிப்படுத்தி
இருக்கவில்லை. கருத்துவேறுபாடு தந்திரோபாய தயக்கங்களின் மட்டத்திற்கு மட்டுமே எழுகின்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக்கட்சி உறுப்பினரோ அல்லது குடியரசுக்கட்சி உறுப்பினரோ,
அந்த விஷயத்திற்காக செய்தி ஊடகமோ, ஹூசைனை வெளியேற்றுவதற்கான அமெரிக்க போர் மிகவும் குறைந்தபட்சம்
10,000 குடிமக்கள் உயிரைப் பறிக்கும் என்பது பற்றிய கிளிண்டன் நிர்வாகத்திற்கு பெண்டகன் திட்டமிடுபவர்களால் அளிக்கப்பட்ட
மதிப்பீட்டை நினைவுகூருவதற்கு கவலைப்படவில்லை. அதேபோல மேலும் பதினைந்து இலட்சம் பேரின் இறப்புக்கு,
பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள், வயோதிகர், நோயாளிகள் மற்றும் ஏழைகள் இறப்புக்கு
வழிவகுத்த எதிர்பாராத வறுமையை, நோயை மற்றும் பசியை உருவாக்கிய பொருளாதாரத் தடைகளின் தண்டனையைப்
பற்றி அவர்களில் ஒருவர் கூட கேள்வி எழுப்பவில்லை.
செப்டம்பர் 11 தாக்குதல்களுடன் சதாம் ஹூசைனை இணைப்பதன் மூலம் அல்லது அவரது
ஆட்சி அணு ஆயுதங்களையோ அல்லது உயிரி ஆயுதங்களையோ ஏவும் தறுவாயில் இருக்கிறது என கூறுவதன் மூலம் இராணுவ
நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள், அபரிமிதமான மாறான சான்றுகளின் முன்னர் இவ்வாறு முகங்குப்புற
விழுகின்றன.
புஷ் நிர்வாகம் சுட்டிக்காட்டக் கூடிய ஒரே விஷயம் ஈராக்கிற்கு ஆயுத சோதனையாளர்களை
மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவைக்கும் பாக்தாத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்
முறிவு பற்றியதாகும். இந்தப் பேச்சுவார்த்தை முறிவானது வாஷிங்டனிலிருந்து வடிவமைக்கப்பட்டது, அது ஐ.நா
பொதுச்செயலர் கோபி அன்னானை ஈராக் சோதனைக் குழுவை நிபந்தனை அற்று அனுமதிக்குமாறு கோரும்
கோரிக்கை மீது தன் கருத்தைத் திணிக்க ஆணையிடுமாறு செய்தது. ஈராக்கின் எல்லைப்பகுதியில் அமெரிக்கக் குண்டு
வீச்சுக்கள் முதல் பொருளாதாரத் தடைகள் ஆகிய தண்டனைகள் மற்றும் ஆக்கிரமிப்புக்குத் தயாரிக்கவோ அல்லது சதாம்
ஹூசைனைப் படுகொலை செய்யவோ வேலைசெய்யும் முகவர்களை ஊடுருவச்செய்ய பெண்டகன் மற்றும் சி.ஐ.ஏ
சோதனைக் குழுவினைப் பயன்படுத்தும் என்ற உண்மையான அச்சுறுத்தல் வரையிலான விஷயங்களை எழுப்புவதற்கான பாக்த்தாதின்
முயற்சிகள் அனைத்தும் மறுதலிக்கப்பட்டன.
மூத்த பெண்டகன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கடந்தவாரம்
USA Today, "ஜனாதிபதி புஷ்-ன் தேசியப்
பாதுகாப்புக் குழு உடன்பட்டிருக்கிற சதாமைக் கவிழ்ப்பதற்கான மிகவும் திடீர் விருப்பத் தேர்வானது
-பெரும் அளவிலான ஆக்கிரமிப்பு- பரந்த அழிவுகரமான ஆயுதங்களின் அபிவிருத்தி மீதாக வாஷிங்டனுடன் ஈராக்கின்
தற்போதைய முறுகல் நிலைக்கு அப்பால் நியாயப்படுத்தல் இல்லாமல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசியல் ரீதியாகக்
கடினமானதாக இருக்கும்" என செய்தி வெளியிட்டது.
"இப்பொழுதுள்ள உடனடியான முக்கிய பிரச்சினை "ஈராக்கால்" ஒரு பொறி, ஒரு
தாக்குதல் இல்லாமை", என பத்திரிக்கை மூத்த உளவுத்துறை அதிகாரி கூறியதாக மேற்கோள்காட்டியது. நிர்வாகமானது
"திட்டவட்டமான சம்பவத்தின் எந்தவொரு வடிவத்தின் திட்டவட்டமான கணம் அங்கு இருக்க நேரும்" என தீர்மானித்திருப்பதாக
அதிகாரிகள் கூறினர்.
புஷ் நிர்வாகம் நெருக்கடியால் சூழ்ந்திருப்பது, "அத்தகைய ஒரு திட்டவட்டமான
சம்பவத்தை" அரங்கேற்கவோ அல்லது தூண்டிவிடவோ செய்யும் என்ற வளர்ந்து வரும் ஆபத்து அங்கே இருக்கிறது.
புஷ்-ன் வெள்ளை மாளிகையானது போரை தனது சொந்த உயிர்வாழ்வுக்கான அரசியல் தேவையாக புஷ், செனி
மற்றும் கார்பொரேட்டுக்களின் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சரவை பொறுப்பாளர்கள்
பெரும்பாலானோரை சுற்றிவளைத்திருக்கும், குவிந்திருக்கும் ஊழல்கள் மற்றும் நிதிச்சந்தைகளின் உருகி வழிந்தோடுதல்
இவற்றிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு சிறந்த வழிமுறைகளாக அதிகரித்த அளவில் பார்க்கிறது.
See Also :
அமெரிக்கா ஈராக்கின் மீது முழு
அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது
புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான
யுத்தத்திற்கான திட்டங்களை உறுதிப்படுத்துகின்றது
Top of page
|