WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
Xerox restates billions in revenue: yet
another case of accounting fraud
Xerox
பில்லியன் கணக்கான பணத்தை தனது வருடாந்த வருமானத்தில் மீள்வரவு வைத்துள்ளது: கணக்கு ஏமாற்றல் தொடர்பான
இன்னுமொரு நிகழ்ச்சி
By Joseph Kay
1 July 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
பிரபல்யமான அமெரிக்க நிறுவனம் தொடர்புபட்டுள்ள அண்மைய அவதூற்றில்,
Xerox கடந்த 5 வருடங்களாக முறைகேடாக 6 பில்லியனை
டொலரை தவறாக வகைப்படுத்தியுள்ளது வெளிவந்துள்ளதுடன், இது அதனது வருமானத்தினை 2 பில்லியன் டொலரால்
அதிகப்படுத்திக்காட்டுவதற்கு இட்டுச்சென்றுள்ளது.
Xerox இன் அறிவித்தலானது ஒன்றும்
புதியதல்ல. இதுதொடர்பான Securities and
Exchange Commission (SEC) இன் விசாரணை இவ்வருடத்தின்
ஏப்பிரல் மாதத்தில் முடிவடைந்தது. போட்டோ பிரதி இயந்திரங்களையும், அது தொடர்பான சேவைகளையும் உற்பத்தி
செய்யும் இந்நிறுவனமானது கணக்குவழக்கு திருகுதாளங்களை செய்துள்ளதாக
Securities and Exchange Commission
குற்றம்சாட்டியது.
இப்போதைய தொகையாக குறிப்பிடப்படுவதைவிட விசாரணையின் ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட தொகையானது 3 பில்லியன்
டொலராகும். இது தொடர்பாக ஒரு உடன்பாடு காணப்பட்டுள்ளதுடன், 10 மில்லியன் டொலர் தண்டனைப் பணமாக
விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக கணக்கு பரிசோதனை தொடர்பாகவும் ஒரு உடன்பாடு காணப்பட்டது. இப்பரிசோதனைதான்
இந்த 6$ பில்லியனை வெளிக்கொண்டுவந்தது.
Securities and Exchange Commission
இன் இணைத்தலைவரான
Paul Berger ,
கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தலானது ''எமது ஆரம்பவிசாரணையின் செயல் எல்லையை தாண்டியுள்ளதுடன், ஒரு மோசமான
ஏமாற்று எனகூறக்கூடிய ஒன்றை நாங்கள் கண்டுபிடுத்துள்ளோம்'' என குறிப்பிட்டார்.
Securities and Exchange Commission
இன் விசாரணைக்கு காரணமாக இரண்டு அடிப்படை திருகுதாளங்கள் அமைந்தன.
முதலாவது ''cookie jar''
வழிமுறை என கூறப்படுவது. இது வருடாந்த வருமானத்தை ஐந்தொகையல்
இருந்து தவறான முறையில் மறைத்துவைத்து, பின்னர் ஒரு முக்கியமான நேரத்தில் குறிப்பிட்ட ஒரு காலாண்டு பகுதியின்
வருமானத்தை கூட்டி காட்டுவதற்காக இவ்வாறு மறைத்துவைத்த பணத்தை வெளிவிடுதலாகும். இது பரவலாக பயன்படுத்தப்படும்
ஒரு திருகுதாளமாகும். இவ்வருட ஆரம்பத்தில்
Securities and Exchange Commission இன் விசாரணையின்போது
Microsoft
நிறுவனமும் இப்படியான நடவடிக்கையை மேற்கொண்டது
கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டாவது வழிமுறை, அதிகமான பிழை முறையான உழைப்பில் இது பயன்படுத்தப்படுவதாக
கருதப்படுவதாகும். இதில் குறைந்த காலத்திற்கு இயந்திரங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் வருடாந்தவருமானத்தை
அதிகரித்தலாகும். ஆனால் அது நீண்டகால வாடகை வழங்கியதாக கணக்குகாட்டப்படும். இவ்வித்தியாசமானது முக்கியமானது.
ஏனெனில் நிறுவனங்களின் கணக்கு புத்தகங்கள் கணிப்பிடப்படுவதற்கான அளவுகோலாக கூறப்படும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட
கணக்கியல் விதிகளின் (Generally Accepted
Accounting Principles) படி, நீண்டகால வாடகையின்
முழு பெறுமானமும் இவ்வாறான உடன்படிக்கை செய்யப்பட்ட முதல்வருடத்தின் வருடாந்த கணக்கில் சேர்க்கப்படும். குத்தகையின்
பெறுமானமானது உடன்படிக்கையின் கால எல்லையையும் தாண்டி கணக்கில் எடுக்கப்படும்.
இத்திருகுதாளங்களின் தாக்கம் என்னவெனில்,
Xerox தனது எதிர்காலத்திற்குரிய
வருடாந்த வருமானத்தையும் தனது வருமானமாக கணிப்பிட்டுள்ளது. இது குறுகியகால இலாபத்தை அதிகரிக்க செய்ததுடன்,
1997, 1998, 1999 இல் நிறுவனத்தின் இலாப எதிர்பார்ப்பையும் அநுமதித்தது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக
தனது வருமானத்தை குறைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1998 இல்
Xerox தனது
அறிக்கையில், 579$ மில்லியன் வரிக்குமுந்திய வருமானமாக
காட்டியது. மறுபக்கத்தில், இத்திருகுதாளங்கள் திருத்தப்பட்ட பின்னர் 2001 இன் 137$ மில்லியன் இழப்பு 365$
மில்லியன் வருமதியானது. 1997-2001 இற்கும் இடையில் வருடாந்த வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்ட 1.9$ பில்லியன்
எதிர்கால அறிக்கையில் சேர்க்கப்படவுள்ளது.
இது கடந்த பல மாதங்களாக வெளிப்பட்ட ஏமாற்றுக்களை போலல்லாது,
Xerox உழைக்காத
வருமானத்தை பிழையாக உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்வில்லை. மாறாக அது இதனது வருமானத்தை ஏமாற்றான
வழிகளில் பலவருடங்களுக்கு நீடித்துள்ளது. இதேமாதிரியான முடிவில்,
WorldCom 4$ பில்லியன்
டொலர் சாதாரண செலவை பிழையான வழியில் மூலதனமாக்கி, அதன் மூலம் பத்துவருடங்களுக்கு அதிகமாக தனது செலவை
முற்றாக ஒரே தடவையில் கணக்குகாட்டுவதற்கு மாறாக தனது செலவீனத்தை குறைத்துள்ளது. இவ்விரண்டு முறைகளும் குறுகிய
கால இலாபத்தை அதிகரித்து காட்டுவதற்கு உதவியது.
ஒரு வருடத்தில் உழைத்த மேலதிகமான வருமானத்தை எதிர்வரும் வருடங்களில் கழிக்ககூடியதாகவுள்ளபோது
ஏன் இப்படியான திருகுதாளங்கள் செய்யப்படுகின்றன? குறுகியகால வருமானத்தை பாதுகாத்துக்கொள்ள வோல் ஸ்ரீட்
முதலீட்டாளர்களால் நிறுவனங்கள் பாரிய அழுத்தத்திற்குள்ளாவதால் இது அவசியமாகவுள்ளது. இல்லாவிடின் அவர்களது
பங்குபெறுமதிகள் வீழ்ச்சியடைவது பங்கு பெறுமதிகளில் பாரியளவில் தங்கியுள்ள நிலைமையில் இருந்து நிதிக்கடனுக்கு இந்நிறுவனங்களை
இட்டுச்செல்ல பயமுறுத்தவது மட்டுமல்லாது, பங்கு மாற்று உரிமைகளுடன் தொடர்பான பாரிய வருமானத்தையடைய
உயர் அதிகாரிகளுக்கு நிதிப்பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது.
Securities and Exchange Commission
இன் விசாரணையானது ''Xerox
இன் முக்கிய அதிகாரிகளின் நஸ்டஈடு முக்கியமாக அவர்கள் எல்லையை
(உழைப்பின்) அடைவதில் தங்கியுள்ளது'' என குறிப்பிட்டது. கணக்கு ஏமாற்றுகள் மூலம்,
Xerox இன் உயர்
அதிகாரிகள் பங்கு பரிமாற்றத்தால் 35$ மில்லியன் உழைக்கூடியதாக இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
1999களின் மத்தியில், இந்நிறுவனமானது கணக்குவழக்கு ஏமாற்றுகளை செய்கையில்
Xerox
இன் ஒரு பங்கின் பெறுமதியானது உச்சமட்டமாக 60$ இனை அடைந்தது. அது தற்போது மோசமாக வீழ்ச்சியடைந்து
7$ ஆகியுள்ளது.
1990களின் இறுதியில் வருடாந்தவருமானம் வீழ்ச்சியடைவதை எதிர்கொண்டு, அது தான்
எதிர்பார்த்த வருமான அறிக்கையை மதிப்புகுறைக்க இட்டுச்சென்றிருக்கவேண்டும். அதற்காக
Xerox கணக்குப்புத்தகங்களை
திரிபுபடுத்த தீர்மானித்தது. இது திட்டமிட்டபடி செய்யப்பட்டது. வோல் ஸ்ரீட்டின் எதிர்பார்ப்புக்களை எதிர்நோக்குவதற்காக
Xerox
கணக்குகளில் திருகுதாளம் செய்யவேண்டும் என்பது பற்றி உயர் அதிகாரிகளின் மத்தியில் நடந்த கலந்துரையாடல்கள்
உள்ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வோல் ஸ்ரீட்டின் ''முதலாவது ஒருமைப்பாடான'' எதிர்பார்ப்பை சரியாக
பூர்த்திசெய்வதற்கான அல்லது சற்றுமிகையான தொகையை கணிப்பிடுவதற்கு நிறைவேற்று அதிகாரிகள் கணிப்பிட்டுள்ளதாகவும்,
இது நிறுவனத்தின் வருமான தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
உதாரணமாக, 1997இல் ஒரு பங்கிற்கு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 1.99$
ஆகும். ஆனால் அறிவிக்கப்பட்ட வருமானமானது 2.02$ ஆகும். கணக்கு வழக்கு ஏமாற்றிற்கான திருத்தப்பட்ட உண்மையான
வருமானம் 1.65$ ஆக இருந்தது. தவறாக வரையறுத்த வருடாந்த வருமானமான 3 பில்லியன் டொலர் அதனது
முன்னைய குறைத்து மதிப்பிடலை பாவித்து, Securities
and Exchange Commission இந்த உண்மையான வருமானத்தை
கணிப்பிட்டது. 1998 இல் ஒரு பங்கின் உண்மையான வருமானம் 1.72$ ஆக இருக்கையில் எதிர்பார்க்கப்பட்டதும்,
அறிவிக்கப்பட்டதமான வருமானம் 2.33$ ஆக இருந்தது. 1999 இல் அறிவிக்கப்பட்ட வருமானம் எதிர்பார்க்கப்பட்ட
வருமானத்தைவிட 1சதம் அதிகமாக இருக்கையில், உண்மையான வருமானம் கிட்டத்தட்ட 50 சதமாக வீழ்ச்சியடைந்தது.
இது ஒரு நிறுவனம் தனது பங்குகள் மதிப்பிளந்துவிடுவதை தடுப்பதற்காக தனது வருமானத்தை
உறுதிப்படுத்திக்கொள்ளவதற்கான குறிப்பிடத்தக்க உதாரணமாகும். எவ்வாறிருந்தபோதிலும் இது ஒரு மிகப்பொதுவான
நடைமுறையாகும். உண்மையில் பாரிய நிறுவனங்களின் அறிவிக்கப்பட்ட வருமானமானத்தை பங்கீடு செய்வதானது ஒரு சாதகமான
பக்கத்தை நோக்கி சரிவதை அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது, ஒரு நிறுவனம் தனது எதிர்பார்ப்புகளுக்குள்
குறுகிப்கொள்வதை தவிர்ப்பதற்காக, பல நிறுவனங்கள்
Xerox இனை போன்ற கணக்குவழக்கு நடவடிக்கையில் ஈடுபடுவது
நன்மையானது என கருதுகின்றன.
WorldCom இனது ஏமாற்றுக்களை
போல் Xerox
இனது திருகுதாளங்களும் யாராவது உண்மையில் அதைப்பற்றி அறியவிரும்பியிருந்தால்
அதனை கண்டுகொள்வது சுலபமானதாகும். Securities
and Exchange Commission இன் முன்னாள் பிரதான கணக்காளரான
Lynn Turner
''இவ் எண்கள் பாரியளவினை அடைந்துள்ளதுடன், அதனுடைய தொடர்பு எவரஸ்ட்
மலையை ஒருவர் கடந்து சென்றுவிட்டு தாம் ஒன்றையும் காணவில்லை என கூறுவதை போலாகும். வர்த்தக அமெரிக்கா
இது சரியென கருதிக்கொள்ளும் ஒரு கருத்துகளுக்குள் எப்படியோ வந்தடைந்துள்ளது'' என குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில்
Xerox
இனது கணக்கு மேற்பார்வை செய்தது, இத்துறையில் ஆதிக்கம்செலுத்தும் 'பாரிய நான்கு' நிறுவனங்களில் ஒன்றான
KPMG
ஆகும். இது அக்டோபர் மாதம் விலக்கப்பட்டு, பின்னர்
PricewaterhouseCoopers நிறுவனம் அப்பொறுப்பை எடுத்துக்கொண்டது.
கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட
Securities and Exchange Commission
இன் விசாரணைகளில் KPMG
உம் உள்ளடங்கும். இம்மேற்பார்வை செய்யும் நிறுவனம் நடப்பது தெரிந்தும் அதனை
தொடருவதற்கு முடிவுசெய்ததாக சாட்சியங்கள் கருதுகின்றன.
Securities and Exchange Commission
இற்கு கிடைத்த உள் ஆவணம் ஒன்றில்
KPMG உத்தியோகபூர்வமாக
''வருடாந்த வருமானம் அரைவாசியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட''
Xerox இன் திட்டங்களை
ஏற்றுக்கொண்டது தொடர்பான அறிக்கையை உள்ளடக்கியிருந்தது.
Xerox இன் கணக்குகளை
மேற்பார்வை செய்யும் பொறுப்பான அதிகாரி நிறுவனத்தின் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தனது கவனத்தை
தெரிவித்ததும் அவர் வேறொருவரால் மாற்றீடு செய்யப்பட்டார்.
இவ்வருட ஆரம்பத்தில், KPMG
இனதும்
Xerox இனதும் உயர் அதிகாரிகள் மீது சிவில் வழக்கு தொடுப்பது
தொடர்பாக Securities and Exchange
Commission கவனத்தில்கொண்டது. இக்கணக்கு மேற்பார்வை செய்யும்
நிறுவனம் Xerox
இன் கணக்குவழக்குகளை சரியாக செய்ய தவறியது என்பதனால் பங்குதாரர்களால்
வழக்குதொடுக்கப்பட்டதை எதிர்நோக்குகின்றது. இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது வருமானத்தை 1 பில்லியன்
டொலரால் அதிகப்படுத்தி காட்டியதை ஒத்துக்கொண்ட மருத்துவ நிறுவனமான
Rite Aid இனது
கணக்குகளை உறுதிப்படுத்தியதற்காகவும் KPMG
பரிசோதனைக்குள்ளாகியுள்ளது. 70% ஆன தனது விற்பனை தொடர்பாக பொய்ப்பத்திரம்
தயார் செய்த பெல்ஜியத்தை சேர்ந்த வங்குரோத்தடைந்த மென்பொருள் நிறுவனமான
Lernout & Hauspie Speech Products NV
இனது கணக்குகளையும்
KPMG உறுதிப்படுத்தியுள்ளது.
Xerox தொடர்பான பிரச்சனையானது
Securities and Exchange Commission
இன் தலைவரான
Harvey Pitt
மீதும் கவனத்தை திருப்பியுள்ளது. இவர் KPMG
உள்ளடங்கலான பல பாரிய கணக்கு பரிசோதனை செய்யும் நிறுவனங்களின்
முன்னாள் வழக்கறிஞராக இருந்துடன், Securities and
Exchange Commission இன் தற்போதைய தலைவரான
Gene O'Kelly
இனை ஏப்பிரலில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் தான்
Harvey Pitt
இடம் ''KPMG
மீதான
Securities and Exchange Commission இன்
எந்தவொரு நடவடிக்கையும் 'ஆதாரமற்றதெனவும்', இது மூலதனச்சந்தை மீது முக்கிய குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும்''
தெரிவித்ததாக Gene O'Kelly
அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அக்கூட்டம் முழுவதிலும்
Xerox தொடர்பாக
கலந்துரையாடியதை Harvey Pitt
மறுத்துள்ளார். அப்படியான ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்குமானால்,
அது சுயாதீன விதிமுறைகளை மோசமாக மீறியுள்ளது. ஏமாற்றுக்கள் நடைபெறுவது தொடர்பாக எவ்விதமான கவனமெடுக்க
தவறிய Securities and Exchange
Commission இவ் ஊழலுக்கு உடந்தையாகவுள்ளது.
தனது தொடர்ச்சியான நெருக்கடி காரணமாக தனது சொத்துக்கள் சிலவற்றை விற்க
Xerox
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இம்மாத ஆரம்பத்தில் தனது கடன்கள் தொடர்பாக மீண்டும் ஒழுங்குசெய்துகொள்ள சமாளித்துக்கொண்டது.
ஆனால் இது உயர்வான வட்டிவீதத்துடனாகும். இது தனது கடன்களை குறிப்பட்ட கடன்எல்லைக்குள் மீள் ஒழுங்குசெய்யாதுவிடுமானால்,
மற்றும் தனது கடமைப்பாடுகளை நிறைவேற்றத்தவறுமானால் அது வங்குரோத்தடைய நிர்ப்பந்திக்கப்படும். 2000 இன்
இறுதியில் ஏற்கெனவே இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
Xerox தனது செலவுகளை குறைக்குமுகமாக
கடந்த இரண்டு வருடங்களாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கியுள்ளதுடன், எதிர்காலத்திலும் இப்படியான
வெட்டுக்களை மேற்கொள்ளலாம். மறுபக்கத்தில் Xerox
இன் நெருக்கடி அதிகரிக்கையில், அதனது முக்கிய அதிகாரியான
Anne Mulchay
25 மில்லியன் டொலர் பெறுமதி இருக்ககூடிய வருமானத்தை பெற்றுள்ளார்.
See Also :
இன் உடைவின் அபாயமானது அரசியல் கட்டமைப்பினை
நெருக்கடியினுள் இட்டுச்சென்றுள்ளது
Top of page
|