World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
UN food summit ends in fiasco ஐக்கிய நாடுகள் சபையின் உணவுப் பொருட்களுக்கான உச்சி மாநாடு பெரும் தோல்வியில் முடிவடைந்தது By Peter Daniels கடந்த வாரம் நான்கு நாட்கள் இத்தாலியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பின் (FAO) கூட்டமானது, பணக்கார நாடுகளான வட அமெரிக்காவாலும் மற்றும் ஐரோப்பிய கூட்டாலும் முன்னெடுக்கப்பட்ட பிரதானமான பகிஸ்கரிப்பை அடுத்து படுதோல்வியில் முடிவடைந்தது. உணவு, விவசாய அமைப்பின் அறிக்கையின் படி, உலகத்தில் 815 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக் குறையினால் தொடர்ச்சியான பஞ்சத்தை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் 777 மில்லியன் மக்கள் அபிவிருத்தி அடையும் நாடுகள் என்று கூறப்படுபவற்றை சேர்ந்தவர்களாவர். ஒவ்வொரு நாலு வினாடிக்கும் ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போஷாக்கின்மையால் இறக்கிறார். ஒரு வருடத்தில் 12 மில்லியன் குழந்தைகளில் 55 வீதமானவை இந்த போஷாக்கின்மைக்கு பலியாகின்றன. பெருக்கெடுத்துச் செல்லும் இந்த உலகளாவிய பஞ்சம் எனும் இவ் உள்ளடக்கத்தில், ஆபிரிக்காவின் சகாராப் பகுதிகளில் உள்ள ஆறு நாடுகளில் இப்பஞ்சம் எனும் கொடிய மக்கள் சாவினால் 12.8 மில்லியன் மக்கள் பசியினாலும், வறட்சியினாலும் மற்றும் வெள்ளப் பெருக்கினாலும் இறக்கிறார்கள். இவற்றில் கிராமப் பகுதிகளில் வாழும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் இடங்களே மிகவும் கொடுமையான பஞ்சத்திற்கும், மோசமான உணவுப் பற்றாக் குறைக்கும் முகம் கொடுக்கின்றன. எவ்வாறிருந்தபோதும் மக்கள் இப்பேரழிவிற்கு முகம் கொடுக்கையில் இக்கூட்டத்திற்கு மேற்கத்தைய நாடுகளின் தலைவர்களில் ஒருவரான பிரதமர் Silvio Berlusconi உம், ஒரு சுற்றுவட்டத்தில் ஐரோப்பிய கூட்டிற்கான தலைமைத்துவத்துக்கு வந்த ஸ்பானியாவின் பிரதமரான Jose Maria Aznar உம் மட்டுமே இதில் கலந்து கொண்டார். 181 நாடுகள் இவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்கையில் 74 நாடுகளைச் சேர்ந்த அரசாங்கங்களின் தலைவர்கள் அல்லது அவற்றின் பிரதமர்களும் இதற்கு வருகை தந்திருந்தனர், அவர்களில் Berlusconi, Aznar போன்றோர் மட்டுமே பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இதில் அமெரிக்காவும், அனேகமாக பொருளாதாரக் கூட்டு அபிவிருத்தி நிறுவனங்களைச் சேர்ந்த வேறு அங்கத்துவ நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், கனடா போன்ற நாடுகளின் விவசாய அமைச்சர்கள் றோமில் கலந்துகொண்டனர். பிரித்தானியா இதற்கு அதனது கிராமிய சுற்றுச் சூழல் மற்றும் உணவு நிறுவனத்தைச் சேர்ந்த அமைச்சரவை அங்கத்தவரை அனுப்புவதற்கு மாறாக ஒரு பிரதி அமைச்சரை அனுப்பி கூட்டத்தை மிகவும் குறைத்து மதிப்பிட்டது. இந்த FAO கூட்டத்தை உண்மையில் வெளிப்படையாகவே பகிஸ்கரித்த அரசாங்கங்களின் மிக முக்கியமான இதே தலைவர்கள்தான் இரண்டு வாரங்களுக்கு முன்னால் றோமில் நடைபெற்ற NATO வின் ஒரு கூட்டத்திலும் சந்தித்துக் கொண்டனர். FAO கூட்டத்தில், ஆத்திரமூட்டல் மற்றும் வாய்ச் சவடால்களில் ஈடுபட்ட அனைத்து பெரிய சக்திகளுமே மேற்கில் இருந்து பெறப்படும் இந்த விவசாய அபிவிருத்தி நிதிக்கான அழைப்பை நிராகரிக்கும் பணிகளில் நேரடியாக இறங்கினர். போசாக்கின்மை மற்றும் பஞ்சத்தை போக்குவதற்கான போராட்டதிற்கு என FAO க்கு மேலதிகமாக 24 மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டது. FAO யின் செயலாளர் ஜெனரல் Jacques Diouf, இதில் கலந்து கொள்ளாதோரை கவனத்திற்கு எடுத்து கூறியதாவது, ''பஞ்சத்திற்கான அவலநிலை எமக்கு அதன் அரசியல் முன்னுரிமைக்கான ஒரு நல்ல சைகையை வழங்கி உள்ளது.'' றோமில் பங்கு பற்றிக் கொள்ளாத அமெரிக்காவின் உயர் அதிகாரிகள், வருடாந்தம் விவசாய பொருளாதார வியாபாரத்துக்கு என ஒதுக்கப்பட்டு வரும் 18 பில்லியன் டாலர்கள் மேலும் அதிகரித்து செல்கின்றன போன்ற, வாஷிங்டனில் தற்போது இடம் பெற்று வரும் அந்த விமர்சனத்திலும் ஈடுபடுவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர். ''சுதந்திரச் சந்தையில்'', அமெரிக்கா தனது விவசாயப் பொருட்களை வறிய நாடுகளுக்கு கட்டியடிக்கும் உரிமையில் முரட்டுத்தனமான ஒரு தரகராக ஈடுபடுகிறது. இவற்றினால் ஆபிரிக்கா மற்றும் நாடுகளில் உள்ள வாழ்க்கைத்தொழில் பத்து அல்லது ஆயிரம் மில்லியன் கணக்கில் நாசமாக்கப்படுகின்றன. 1996 ல் கடைசியாக நடை பெற்ற FAO கூட்டம், இது 2015 ம் ஆண்டு முடிவடைவதற்குள் உலகத்தில் நிலவும் பஞ்சத்தில் அரைவாசியை போக்கிவிடுமென உத்தரவாதம் அளித்தது. அதில் மூன்றில் ஒரு பகுதி காலம் கடந்த விட்டபோதிலும், உத்தியோக பூர்வமான தரவுகளின்படி ஒரு சிறிய அளவிலான அல்லது முன்னேற்றம் எதுவுமே இன்னமும் நடைபெறவில்லை. வருடத்தில் பஞ்சத்தாலும், போசாக்கின்மையாலும் வாடும் ஆறு மில்லியன் பேருக்கான நிவாரணம், இது கடந்த ஆறு வருடத்தில் ஒரு துளியே ஆயினும், இது ஒரு முன்னேற்றத்தையே காட்டுவதாக சில உத்தியோக பூர்வமான தரவுகள் வாதாடுவதற்கு முயற்சிக்கின்றன. இந் நிவாரணம் வருடத்திற்கு 22 மில்லியன்களாக உயரும் தறுவாயில் மட்டுமே அதற்கான உண்மையான பலன் கிடைக்கும். அறிந்து கொண்டுள்ள செய்திகளின்படி, 122 மில்லியன் மக்கள் 2015 ம் ஆண்டளவில் பஞ்சத்தால் ஏற்படும் நோய்களினால் இறப்பார்கள். சீனாவில் ஏற்பட்ட சடுதியான பொருளாதார உயர்ச்சியின் விளைவை அடுத்து, கடந்த சில வருடங்களில் மிகவும் ஒரு சிறியளவு பஞ்சம் குறைந்திருப்பதாக கூறப்படுகின்றது, அங்கு 76 மில்லியன் மக்களுடைய வறுமை இதனால் போக்கப்பட்டுள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன. FAO வின் அறிக்கைகளையே படி பெருமளவு நாடுகள், மற்றும் மூன்றாவது உலக நாடுகளில் 99 நாடுகளில் வசிக்கும் மூன்றில் இரண்டுக்கும் அதிகமானவற்றில் கடந்த சகாப்தங்களில் பஞ்சம் அதிகரிக்கின்றன. கொங்கோ, இந்தியா, தன்சானியா, வடக்கு கொரியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், வெனிசூலா, கெனியா, ஈராக் போன்ற மற்றும் பல நாடுகளில் இந்த போசாக்கின்மை வளர்ச்சி அடைந்து செல்கின்றன. அவற்றில் சீனா சேர்க்கப்படாமல் இருந்தாலும் கூட போசாக்கின்மை 1996 ல் இருந்து வளர்ச்சி அடைகின்றன. மாலாவி, மொசாம்பிக், சிவாசிலான்ட் (Swaziland), சாம்பியா, சிம்பாவே, லெசேத்தோ (Lesotho) போன்ற நாடுகளில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன, அங்கே மில்லியன் கணக்கான மக்கள் இவற்றால் ஏற்படும் பட்டினிச்சாவை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, சாம்பியாவில் வாழும் 2.3 மில்லியன் மக்களுக்கு தேவையான உணவு வசதிகள் தற்போது முதல் 2003 ம் ஆண்டு மார்ச் வரைக்கும் தேவையாக உள்ளன. FAO அறிவித்துள்ள செய்தியின்படி, அந் நாட்டில் ''உக்கிரமடைந்து கொண்டிருக்கும் சமூக சச்சரவுகளின் அனைத்து வடிவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.'' மேலும் அங்கே, ''மக்கள் விரக்த்தியின் விளிம்பிற்கே சென்று விட்டனர், அவர்கள் அங்கே கிடைக்கும் அனைத்து விதமான, மோசமான நஞ்சுக் கனிகளைக் கூட உண்கின்றனர், மேலும் அவர்கள் தமது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தானியங்களை களவாடுகிறார்கள், விபச்சாரத்துக்கு போகிறார்கள்.'' HIV எனும் வைரஸ் தொற்று நோயானது ஆபிரிக்காவில் இரு முனையான ஆபத்துக்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந் நாடுகளில் உள்ள மக்கள் அனேகமாக 20 முதல் 30 வீதம் வரையில் இத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உலகில் ஓர் மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும். மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு விநியோகம் தடைப்பட்டுப் போகும் பட்சத்தில் இந் நோயினால் மேலும் அவர்கள் நலிவடைந்து போவர். அங்கே இறப்பதற்கு உள்ளார்கள் என முன்கூட்டியே தெரிந்த தொகையைவிட விட அங்கே எயிட்ஸ் நோயினால் இறக்கபோவர்களைக் காட்டிலும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லெஸ்சேத்தோ (Lesotho) எனும் இடத்தில் உள்ள 35 வீதமான வயது வந்தோரில் 26.5 வீதமானோர் HIV வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாலாவியில் உள்ள 70 வீதத்துக்கும் அதிகமானோருக்கு போதியளவு உணவு இல்லை. மொசாம்பிக்கில் 2000, 2001 களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து 2002 ல் அங்கே வறட்சி காணப்படுகிறது. இத் துயரம் மிகுந்த வாழ்க்கையின் முன்னே மேற்கு நாடுகளின் வெட்கம் கெட்ட பகிஸ்கரிப்பு நடத்தையும், அடிப்படையில் ஒரு பின்னடிக்கும் கொள்கையை கடந்த இரண்டு தசாப்தங்களாக பின்பற்றி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையும், அதனது அடிவருடி ஏஜென்சிகளும் இரண்டாவது உலக யுத்தத்துக்கு பின்னால் ஒரு மூன்று சகாப்தங்களாக பெரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும், காலனித்துவ நாடுகள் மற்றும் நவகாலனித்துவ நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார முரண்பாடுகளை பெருமளவில் தணிப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வந்திருக்கின்றன. அபிவிருத்தி நிதி சிறு, சிறு பகுதிகளாக பகிர்ந்து கொடுக்கப்பட்டதுடன், தேசிய முதலாளித்துவ அரசு இவற்றை சுரண்டிக் கொண்டது. இன்று தேசிய பொருளாதார நடவடிக்கைகள் போன்ற அனைத்துமே மேற்கு நாடுகளின் முதலீட்டுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைக்கு என முழுப்படியே அடிபணிந்துள்ளன. பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி செயலாளரான Clare Short என்பவர், ''நான் ஒரு அமைச்சரை அங்கே அனுப்பப் போவதில்லை, ஏனெனில் அது ஒரு பிரயோசனமான மாநாடு ஆக இருக்கும் என நான் அதை எதிர்பார்க்கவில்லை.'', என மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ''FAO, இது ஐக்கிய நாடுகள் சபையின், ஒரு பழைய முறையிலான நடவடிக்கை போன்றே இப்போதும் செயல்பட்டு வருகிறது, இது மேலும் முன்னேற வேண்டும்.'' எனவும், ''FAO அதனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.'' எனவும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நிதியுதவி, இது ஓர் ''பழைய முறையிலான நடவடிக்கை'' என்று கூறப்பட்ட செய்தி ஓர் தெளிவான வரையறுப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்துவத்தை ''சீர்திருத்தம்'' செய்ய வேண்டும் என வாஷிங்டனில் உள்ள குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் அதிகாரத்துவங்கள் அடிக்கடி கேட்டுக் கொள்கின்றன. பெரிய ஏகாதிபத்திய சக்திகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை ஒவ்வொரு முறையும் தாக்குவதற்கான இவ்வாறான அழைப்புகள், அவர்கள் தமது பூகோள ரீதியான முதலாளித்துவ இலாப நலன்களை இதற்குள் முன்னெடுப்பதைத் தவிர வேறு எதையும் இப்போது செய்வதற்கில்லை என்பதையே தெளிவு படுத்துகின்றன. இந்த உலகத்தின் தலைவர்கள் இவ் உணவு மாநாட்டில் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் அவர்களுடைய நோக்கம் இலாபத்தை பாதுகாப்பதே தவிர பஞ்சத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. இதில் அமெரிக்காவை பொறுத்தவரை, புஷ் நிர்வாகம் அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களுடைய நலன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த பஞ்சத்திற்கான கலந்துரையாடலை பயன்படுத்திக் கொள்கிறது. விவசாய அபிவிருத்தி செயலாளரும், அமெரிக்க பிரதிநிதியுமான Ann Veneman என்பவர் மனதில் ஒரு விசேடமான குறிக்கோளுடனேயே, அதாவது மரபணுக்களில் மாற்றப்பட்ட தானியங்களை பயிரிடுவதை பாதுகாப்பதை வலியுறுத்தவே இங்கு வந்துள்ளார். FAO கூட்டம் இந்த தானிய ஆராச்சியை ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றின் செயற்பாடுகள் அமெரிக்க உயிரியல் விஞ்ஞான நிறுவனங்களுக்கு மிகவும் ஒரு பாரியளவிலான வெற்றியை ஈட்டிக் கொடுக்கவுள்ளன. உலகில் பஞ்சத்திற்கான அடிப்படைக் காரணம் உணவு முறைப்படி விநியோகிக்கப்படவில்லை
என்பதில் இருக்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு முதலாளித்துவத்தின் கீழ் நடைபெறும் அபரிதமான உணவு உற்பத்தி பெருக்கத்துடன்
இணைந்துள்ளது. இந் நிலமைகள் அமெரிக்காவிற்கும், அதேபோன்று வறிய நாடுகளுக்கும் பொருந்தும். அமெரிக்கா
அதனது தேவையைக் காட்டிலும் மேலும் அதிகமாக 40 வீதமான உணவுத் தானியத்தை உற்பத்தி அபிவிருத்தி செய்கிறது.
ஆனால் அதேசமயம் பஞ்சம் பரந்தளவில் காணப்படுகிறது. 26 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் உணவுக்கான முத்திரையில்
தங்கியுள்ளனர். இந்தியா 59 மில்லியன் தொன் தானியத்தை உபரியாக உற்பத்தி செய்வதில் முன்னணி வகிக்கிறது. ஆனால்
இந்தியாவில் வாழும் ஏறத்தாள அரைவாசி பிள்ளைகள் போசாக்கின்மைக்கு ஆளாகி உள்ளனர். |