WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
Threatened collapse of WorldCom sends political
establishment into crisis
WorldCom இன் உடைவின்
அபாயமானது அரசியல் கட்டமைப்பினை நெருக்கடியினுள் இட்டுச்சென்றுள்ளது
By Joseph Kay
28 June 2002
Back to screen version
பாரிய தொலைத்தொடர்பு நிறுவனமான
WorldCom இன் உடனடி
உடைவானது என்றோனின் ஊழலின் அளவினையும், தாக்கத்தையும் விரைவாக தாண்டிச்சென்றுள்ளது. அமெரிக்க நிறுவனங்களின்
வரலாற்றில் பாரிய கணக்குவழக்கு சீரழிவினை ஏற்றுக்கொண்ட பின்னர், நாட்டின் இரண்டாவது பாரிய நீண்டகால வழங்குனர்
வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிலான நிறுவனத்தின் வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளது.
WorldCom இன் இந்த
நிலைமையானது அமெரிக்காவினுள் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க செய்வதுடன், பாரிய வேலை நீக்கத்தை
உருவாக்குவதோடு, பங்கு சந்தையில் திடீர் வீழ்ச்சியை உருவாக்குவதுடன், டொலரின் பெறுமதியையும் வீழ்ச்சியடையச்செய்யும்.
கடந்த செவ்வாய்க்கிழமை, கடந்த இரண்டு வருடங்களாக 3.8 பில்லியன் மூலதனச்செலவு
ஏற்பட்டுள்ளதாக கூறி WorldCom
தனது கணக்குவழக்கை முடித்தது. இது பல பில்லியன் டொலர்களை இலாபத்தில் உயர்வு நவிழ்ச்சியை (overstatement
of profits) அனுமதித்தது. இவ் ஊழலில் உள்ளடங்கியிருக்கும் தொகையானது
அதிர்ச்சியடைய வைக்கின்றது. தனது கணக்கு வழக்கின் ''பிழைகளை'' திருத்துவதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றாலும்
அறிவிக்கப்பட்டிராத அளவிலான அதனது வருமானம் தொடர்பான பாரிய மறுவிளக்க அறிக்கையை வழங்கவேண்டியுள்ளது.
இது இம்மாத இறுதியில் Rite Aid
இனால் உருவாக்கப்பட்ட உச்ச அளவை ஒப்பீட்டால் இது சிறியதாக்கியுள்ளது. ஒரு
தனி கணக்குவழக்கு திருகுதாளம் மூலமாக இந்நிறுவனமானது ஒரு கணக்கு முடிப்பால் பில்லியன் கணக்கான இலாபத்தை
அடைந்தது.
அடிமட்டம் வரையிலான உழுத்துப்போன ஒரு பொருளாதார அமைப்பாக உருவாக்கப்பட்ட
சூழ்நிலைகளாலேயே இப்படியான சுத்துமாத்துக்கள் ஒரு வருடத்திற்கு மேலாக நல்லதொரு விடயமாக நடக்ககூடியதாக
இருந்தது. இது இப்படியான சுத்துமாத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்படுவதை எடுத்துக்காட்டுவதுடன், அவை கடந்த பத்தாண்டுகளாக
பொருளாராத ''செழிப்பு'' எனக் கூறப்பட்டதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.
ஒரு அரசியல் பொருளாதார நெருக்கடி
WorldCom இனது நெருக்கடியானது முதலீட்டாளர்களின்
நம்பிக்கையை இல்லாதொழித்துள்ளது. முடிவற்ற ஊழல்களினை தொடர்ந்த பங்கு சந்தையின் ஆழ்ந்த வீழ்ச்சியானது வோல்
ஸ்ரீட்டினதும் வெள்ளை மாளிகையினதும் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தையினது விற்பனையை தடுப்பதற்கான முன்நடவடிக்கையான
முயற்சியாக ஜனாதிபதி புஷ் கனடாவில் நடந்த G-8 மாநாட்டை விட்டு
முன்னதாகவே புதன்கிழமை இடையில் வெளியேறி ''அரசாங்கம் முழு விசாரணையை நடாத்தும் எனவும், பொறுப்பானவர்களை
(WorldCom) பிடித்துவைக்கும் எனவும், அமெரிக்க வர்த்தகத்தின்
ஐந்தொகையின் உண்மைநிலை தொடர்பாக சில கருத்துக்கள் உள்ளன. நான் அதை விளங்கிக்கொள்ளகின்றேன்'' என தெரிவித்தார்.
திறைசேரியின் செயலாளரான
Paul O'Neill "முழு சட்டத்தையும் பிரயோகித்து அதற்கு காரணமானவர்கள்
மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என தான் கருதுவதாகவும், சில விடயங்ககளில் நாங்கள் சட்டத்தை இறுக்கமாக்க
வேண்டும், இதனால் அரசாங்கம் உயர் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்"
என தெரிவித்தார்.
ஒரு தொடர்ச்சியான அலைபோன்ற நிறுவனங்களின் ஊழல் வெளிப்பட்டதை தொடர்ந்து, புஷ்
நிர்வாகம் தனிப்பட்ட நிறுவனங்களை குற்றம்சாட்டி, அவர்களை காரணம் காட்டி இந்நெருக்கடியினை கட்டுப்படுத்த
முயல்கின்றது. பாரிய முதலாளிகளுக்கு எதிரானது என அறியப்படாத
Wall Street Journal
பத்திரிகை வழக்கு தொடுக்க அழைப்புவிட்டுள்ளது.
Securities and Exchange Commission
ஆனது
WorldCom இற்கு எதிராக சிவில் ஏமாற்று வழக்கு தொடுத்துள்ளது.
Arthur Andersen
இன் அரசாங்க குற்றவியல் வழக்கினைப்போன்று, எவ்விதமான விசாரணையும் ஊழலின்
அளவினையும், தன்மையையும் குறித்து வெளிப்பதுத்துவதற்கு மாறாக மறைப்பதற்கே உதவும்.
WorldCom இனது ஊழலானது அமெரிக்காவினதும்
உலகப் பொருளாரதாரத்தினதும் பொதுவான இயக்கத்திலிருந்து பிரிக்கப்படமுடியாதது. உயர் அதிகாரிகளினதும், தனி
நிறுவனங்களினதும் குற்றங்களானது, பல பத்தாண்டுகளான முதலாளித்துவ பொருளாதாரத்தின் மாற்றத்தினுள் வேரூன்றியிருக்கும்
புறநிலையான போக்கினது அகநிலையான வெளிப்பாடாகும். Securities and Exchange
Commission ஆனது ''இலாபகரமான வியாபாரத்திற்காக தன்னை பிழையாக
எடுத்துக்காட்டியதாக'' WorldCom மீது குற்றம்சாட்டியுள்ளது. எவ்வாறிருந்தபோதிலும்
WorldCom இதனை செய்யக்கூடியதாக இருந்தமைக்கு காரணம் பொய்யினை
அடித்தளமாக கொண்ட பொருளாதாரத்தின் ''அதனது நிலைமை பிழையாக எடுத்துக்காட்டப்பட்ட'' பொருளாதாரத்தினுள்
இயங்கியமையாலாகும்.
மார்க்ஸ் விளங்கப்படுத்தியதுபோல் முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்திபோக்கில்
தொழிலாள வர்க்கத்திடமிருந்து கறந்தெடுக்கப்படும் இலாப வீதத்தின் வீழ்ச்சி தொடர்பான உள்ளார்ந்த போக்கு ஒன்று
உள்ளது. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியுடன், பாரிய மூலதனத்தை பெருக்கிக் கொள்ளவதற்காக ஒரு சிறிய அளவு உழைப்பு
மட்டமே தேவைப்படுகின்றது. உழைப்பிலிருந்து பெறப்படும் உபரிமதிப்பானது இலாபத்தின் ஒரேயொரு மூலமாக இருக்கையில்
அப்போக்கானது இலாபத்தின் வீழ்ச்சியை நோக்கி இட்டுச்செல்கின்றது. இது ஒரே அளவு மூலதனத்தால் பெறப்படும் இலாபத்தின்
அளவினை வீழ்ச்சியடைய செய்கின்றது.
இந்தப்போக்கினை எதிர்த்து இயங்குவதற்காக, மூலதனம் வித்தியாசமான மூலோபாயங்களை
தஞ்சமடைந்துள்ளது. ஒரு பக்கத்தில் தனி முதலாளிகள் திரளும் உபரி மதிப்பில் தமது பங்கை அதிகரித்துக் கொள்வதற்காக
தமது சொந்த நிறுவனத்தில் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலமும், சம்பளத்தையும் வேலையாட்களையும் குறைப்பதன்
மூலமும், தொழில்நுட்பத்தை அபிவிருத்தியடைய செய்வதன் மூலமும் உற்பத்தியை அதிகரிக்கின்றனர். எல்லா நிறுவனங்களும்
தாம் தப்புவதற்காக இவ்வாறான ஒரே வழியை கையாளுவதன் விளைவாக உழைப்பின் உற்பத்தியை பொதுவாகவே அதிகரிக்கின்றது.
இது உற்பத்தி போக்கில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களின் அளவை குறைக்கின்றது. எவ்வாறிருந்தபோதிலும், சிறிய
அளவாக மிஞ்சியிருக்கும் தொழிலாளர்களில் இருந்து பெறப்படும் உபரிமதிப்பை அதிகரிப்பது மேலும் மேலும் கடினமாகின்றது.
உற்பத்தியை அதிகரிக்க செய்யும் எதிர்நடவடிக்கைகளால் இலாப வீதத்தில் உருவாகும் வீழ்ச்சி போக்கை தடுக்க எதிர்கொள்வதும்
கடினமாகின்றது.
முதலாளித்துவத்தின் இயக்கத்தினுள் அடங்கியிருக்கும் இந்த முரண்பாடுகள் சர்வதேச
பொருளாதாரத்தினுள்ளும், முக்கியமாக அமெரிக்கவினுள்ளும் உயர் மட்டத்தை அடைந்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க
ஆளும்வர்க்கம் தனது சமூக நிலையை பாதுகாத்துக்கொள்வதற்கு உற்பத்திக்கு மாற்றீடாக அதிகரித்தளவில் நிதி திருகுதாளங்களிலும்,
ஊகவாணிபத்திலும், நேரடியான திருட்டுக்களிலும் ஈடுபட்டுள்ளது. இந்தப் போக்கினது முக்கியமான தன்மை 1991 களின்
இறுதிப்பகுதியில் உருவாகிய பங்குச்சந்தையின் வீக்கமாகும். நிதி மூலதனமும், வங்கிகளும், நீண்டகால வைப்புக்களும், பாரிய
முதலீட்டாளர்களும் நிறுவனங்களின் பெறுமதியானது அதனது பங்குகளால் மட்டுமே அளவிடப்படும் ஒரு சூழ்நிலைமையை ஊக்குவித்தன.
நிறுவனங்கள் தமது பங்குகளின் பெறுமதி செயற்கையாக அதிகரித்திருப்பதற்காக சகலவிதமான
குற்றநடவடிக்கைகளில் அதிகரித்தளவில் ஈடுபட்டன. இதனானல்தான் கணக்குகளும், கணக்கு தொடர்பான சுத்துமாத்துகளும்
முன்வரத்தொடங்கின. தமது நோயை மறைத்துக்கொள்வதற்காக ''அழுக்கின் மீது உதட்டுச்சாயம் பூசுவது'' அவசியமானது.
இதன் வழியாகத்தான் நிறுவனங்களின் உள்ளார்ந்த ஆரோக்கியம் தீர்மானிக்கப்பட்டது. கணக்குபரிசோதனை செய்யும்
நிறுவனங்களால் மேற்பார்வை செய்யப்படும் அறிக்கைகளும், ஐந்தொகையும், சம்பள பட்டியல்களும் ஒரு நிறுவனத்தின்
அடிப்படை கட்டுமானத்தினை ஒன்றிணைத்தவகையில் காட்டுவதாக கருதப்பட்டது. இந்த கட்டுமானம் உடைந்து
செல்லுமானால், இந்த தகவல்களை மறைப்பதற்காக ''புத்தகங்களை இல்லாதொழிப்பது'' அவசியமானது.
பங்குச் சந்தையின் வீக்கமானது சமுதாயத்தின் ஒரு சிறிய தட்டினரை பாரியளவில் செல்வந்தராக்கியது.
இதில் உள்ளடங்கியிருந்தவர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் ஏனைய நிறைவேற்று உத்தியோகத்தர்களுமாவர்.
இவர்களில் WorldCom
இனது முன்னாள் தலைவரான
Bernard Ebbers
உம் அடங்குவார். அவர் இவ்வருட இறுதியில் பதவிவ விலகமுன்னர், தனது நிறுவனத்தை பாவித்து நூறு ஆயிரக்கணக்கான
டொலர் சம்பளத்தையும், பங்குகளையும், தனிப்பட்ட கடனையும் எடுத்துள்ளார். எவ்வாறிருந்தபோதிலும் இது இவ்வாறான
அதிகாரிகளுடன் மட்டும் மட்டுப்படவில்லை. திறைமைவாய்ந்த பங்கு சந்தை ஊகவாணிபகாரர்களை விட, மத்தியதர வர்க்க
உயர் தட்டினரும், செய்தி ஸ்தாபனங்களும், புத்திஜீவித்தட்டினரும், முழு அரசியல் தட்டினரும் இந்த பங்குச்சந்தை வீக்கத்தால்
இலாபமடைந்துள்ளனர்.
இந்த வீக்கத்தின் உடைவுடன், வசதிபடைத்தவர்களின் கைகளுக்கு பணம் சென்றடைய செய்த
வழிகளும் வெளிப்படத்தொடங்கின. இது பரந்தபட்ட மக்களுக்கு பாரிய அழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்,
இன்னமும் ஏற்படுத்தும். உற்பத்திக்கான அடிப்படை கட்டுமானம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதுடன் சமூக சேவைகளான கல்வி
மற்றும் சுகாதாரத்துறை போன்றவை இல்லாது போவதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைகையில்
மிகவும் அதிகமான வேகத்தில் ''தொழில்கள் அழிக்கப்படுவது'' தொடரும்.
இந்த நிலைமைகளின் கீழ் புஷ்ஷினது நீதியான கணக்குவழக்கு பார்ப்பதற்கான வஞ்சகமிக்க
அழைப்பானது இகழ்ச்சிக்குரியதாகும். இந்த குற்றமிக்க தட்டின் மீதுதான் புஷ் இன் நிர்வாகம் தங்கியுள்ளது. குடியரசுக்
கட்சியின் ஜனாதிபதியின் அரசியல் எழுச்சிக்கு Kenneth Lay
ஆலும் Enron
ஆலும் வழங்கப்பட்ட நிதியுதவியான குறைந்த பங்கை வகிக்கவில்லை. இராணுவத்தின்
செயலாளரான Thomas White
என்ரோனின் ஒரு உயர் அதிகாரியாவார். உதவி ஜனாதிபதியான
Dick Cheney, பாரிய
எண்ணெய் நிறுவனமான Halliburton
இன் உயர் அதிகாரியாவார். இதுவும்
Cheney இன் மேற்பார்வையின்
கீழ் கணக்கு வழக்குகளின் ஒழுங்கற்ற தன்மைகளுக்கு உள்ளாகியுள்ளது. திறைசேரியின் செயலாளரான
O'Neill, நிறுவனங்களின்
குற்றவாளிகளுக்கு ''உயர்கிளையில் கட்டித் தொங்கவிடப்பட வேண்டும்'' என அழைப்புவிட்டார். அவர் கவனமாக
இருக்கவேண்டும், இது கவனமாக எடுத்துக்கொள்ளப்பட்டால், அவரது வார்த்தைகள் ஜனாதிபதியினதும், அவரது முழு மந்திரி
சபையினதும் வாழ்க்கைக்கும் எதிரானது என கருதப்படலாம்.
புஷ் இற்கும் பாரிய முதலாளிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வைத்து ஜனநாயக்கட்சி
அவரை கண்டனம் செய்கின்றது. தற்போது அதுவும் இம் முழுபோக்கிற்கும் குற்றம்சாட்டப்பட வேண்டியாகும். கிளின்டனின்
கீழேயே ஊகவாணிப பைத்தியமானது அதன் உச்சகட்டத்தை அடைந்தது.
WorldCom இன் பிரசாரத்தில்
குடியரசுக்கட்சியை விட அதிகமான பணத்தை பெற்றவர்கள் ஜனநாயக கட்சியினராகும்.
Brookings Institute
இனை சேர்ந்த
Stephen Hess குறிப்பிட்டபடி ''இதில் கறைபட்டதோ இல்லையோ
பல கைகள் ஈடுபட்டுள்ளதுடன், மற்றைய கட்சியை நிறுவனங்களின் பேரவாவிற்கான குற்றம்சாட்டுகின்றனர்''.
நிறுவனங்களின் ஊழல் வலை
WorldCom ஆனது இப்போக்கினது ஒரு குறிப்பிட்ட
வெளிப்பாடாகும். Tyco இனைப்போன்று, WorldCom
ஆனது உற்பத்தியினை அடித்தளமாக கொண்டிருக்காது, வேறு நிறுவனங்களால் வழங்கப்படும்
நிதியுதவியளிக்கப்படும் உயர் பங்குகளின் விலைகளில் தங்கியுள்ளது. முன்னாள் உயர்மட்ட அதிகாரியான Ebbers
இன் கீழ், கடந்த 20 வருடங்களில் MCI
உள்ளடங்கலாக 70 நிறுவனங்களை வாங்கியுள்ளது. இப்போக்கில் ஒரு சிறிய
தொலைபேசி நிறுவனமாக இருந்தது, AT&T நிறுவனத்திற்கு அடுத்ததாகியுள்ளது.
ஒவ்வொரு நிறுவத்தையும் வாங்குவதற்கு பங்குகள் பாவிக்கப்பட்டது, இது பங்கு சந்தையில்
அதன் பெறுமதியை அதிகரிக்க செய்தது. இது தொடர்ச்சியாக வேறு நிறுவனங்களை வாங்குவதற்கான அடித்தளமாகியது.
முறிவடைவதற்று முன்னர், 1999 இல் WorldCom
இனது பங்கு உச்சமாக 60$ இனை அடைந்தது. இது நேற்றுமுன்தினம் அது 25
சதத்தை அடைந்தது.
1990 களின் மத்தியில்
WorldCom இனது வாங்கும் பைத்தியமானது அதிஉச்சமாக இருந்தது.
ஆனால் 1998 இல் MCI
இனை 37 பில்லியனுக்கு வாங்கியது நிறுவனங்களின் ஒன்றிணைப்பின் வரலாற்றில் மிகப்பெரியதாகும்.
வாங்கப்பட்ட நிறுவனங்கள் தமது குறுகியகால இலாபத்தை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களை வேலை நீக்கியதுடன்,
இலாபத்தை காட்டவதற்கும் மற்றும் பங்குபெறுமதிகளை உயர்வாக வைத்திருப்பதற்காக தமது கணக்கேடுகளை பிழைப்படுத்தின.
வாங்கிய நிறுவனங்கள் வாங்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுபவத்தையோ அல்லது எவ்விதமான முன்னேற்றத்தையோ அல்லது
தேவையான எதையுமோ கொண்டுவரவில்லை. மாறாக எதிராக நடந்தது என்பதே உண்மை. உற்பத்தி போக்கில் நீண்ட
கால முன்னேற்றத்தின் கணக்கில் வாங்கிய நிறுவனங்கள் ஒட்டுண்ணித்தனமாக குறைந்தகால இலாபத்தை அடைந்தன.
இந்தபோக்கில் அந்நிறுவனம் கிட்டத்தட்ட 30பில்லியன் டொலர்கள் கடனாளியாகியது. அதிகூடிய
விலைக்கு வாங்கியதை சமாளிப்பதற்காக ஐந்தொகையில் 50 பில்லியன் டொலர்
goodwill என அழைக்கப்படும்
கணக்கில் (தனது வியாபார மதிப்பை காட்டுவதற்காக மறைமுகமாக கணக்குகள் அதனது சொத்துடன் சேர்க்கப்படுவது)
எழுதப்பட்டது. இது சொத்துக்களின் உண்மையான பெறுமதிக்கும் அதை வாங்கிய விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை
சமாளிப்பதற்காகும். மூலதனச் செலவினைப்போல் இதுவும் வருமானத்தில் இருந்து கழிக்கப்படுவதில்லை, மாறாக வருடக்கணக்கில்
ஏற்றுக்கொள்ளப்படும்.
தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தித் துறையை அபரி உற்பத்தி வெளிப்படுகையில்,
பங்குப் பெறுமதிகள் குறைந்ததுடன், WorldCom
இனது அடித்தளமும் இல்லாதுபோனது. இவ்வருடம் அந்நிறுவனமானது தனது வருமானத்திலிருந்து
goodwill
இற்கு 15பில்லியன்$ எழுத நிர்ப்பந்திக்கப்பட்டது. இது பின்னர் விசாரணையின் போது உள் கொடுக்கல் வாங்கல் போன்ற
கணக்கு ஒழுங்கீனங்கள் வெளியானதுடன், அது தனது பங்குபத்திரங்களின் விலையை குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இறுதியில்
அது அடிமட்டம்வரை உடைந்தது.
அதனது உடைவின் பின்னரே, ஏமாற்றின் அளவு வெளிவந்தது. செவ்வாயக்கிழமை இதன் சுற்றுமாற்றுக்கள்
வெளிவந்தபோது, இந்நிறுவனம் தனது உழைப்பினை அதிகரிக்க செய்த வழிவகைகளில் ஒன்று மிக சாதாரணமானது என்பது
தெரியவந்தது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில்
WorldCom இனது கணக்குகளில் பில்லியன் கணக்கான டொலர்கள்
மூலதனச்செலவு என்பதன் கீழ் வழமையாகத் தோன்ற தொடங்கியது.
வழமையாக மூலதனச் செலவுகளுள் அடங்குவது இயந்திரங்களுக்கும், நீண்டகால சொத்துக்கள்
வாங்குவதற்குமே ஆகும். சொத்துக்களை வாங்குவதற்கு மூலதனம் பயன்படுத்தப்படுவதால், இதற்கான செலவானது உடனடியாக
நிறுவனத்தின் செலவுகளில் இருந்்து கழிக்கப்படுவதில்லை. இது ஐந்்தொகையில் நிறுவனத்தின் சொத்தில் ஏற்பட்ட மாற்றமாகவே
காட்டப்படும், அதாவது பணம் இயந்திரமாக மாற்றப்பட்டது என குறிப்பிப்படும். அடுத்த பல வருடங்களில் இயந்திரங்கள்
வாங்கப்பட்டதற்கான பணம் பகுதி பகுதியாக நிறுவனத்தின் வருமானத்தில் இருந்்து கழிக்கப்படும். இச்சொத்தினது (இயந்திரத்தினது)
பெறுமதி தேய்வானது வருடாந்த கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வழமையான செலவினை மூலதனச்செலவாக காட்டியதன் மூலம்
WorldCom தனது குறுகியகால
வருமானத்தையும், நிதி உள்வாங்கலையும் அதிகரிக்ககூடியதாக இருந்தது. இந்நிறுவனம் 3.8 $ பில்லியன் பெறுமதியான
பொருட்களையும் சேவையையும் வாங்கியும், பாவித்துள்ளபோதும் இது சாதாரணமாக மூலதன வடிவத்தில் இருப்பதாக
காட்டப்பட்டது. இது ஒருவர் தனது பாவித்த மோட்டார் வாகனத்தை விற்பதற்கு அதன் பெறுமதியுடன் அவர் அவ்வாகனத்தை
வாங்கியதிலிருந்து இதுவரை அதற்கு பாவித்த எரிபொருளின் பெறுமதியையும் சேர்த்து கூறுவது போன்றது. இவ்வழிகளில்
சகல எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக ஒரு நிறுவனமானது திடீரென ஒரு நெருக்கடிக்குள் சென்றது.
WorldCom இனது ஏமாற்றானது பல வித்தியாசமான
பிரிவினரின் மெளனமான சம்மதம் இல்லாமல் சாத்தியமில்லை. அங்கு எவராவது சற்று கவனமெடுத்து பார்த்திருந்தால்
இந்த இலகுவான ஏமாற்று புலப்பட்டிருக்கும். WorldCom இற்கு கூட
ஒரு பாரிய தொகையான, 4 பில்லியன் டொலருக்கு என்ன வாங்கப்பட்டிருக்கும்? எதற்காக இப்பணம் செலவிடப்பட்டது?
நிறுவனங்களின் நடவடிக்கை தொடர்பாக ஓரளவேனும் தெரிந்திருக்க கூடிய ஒருவருக்கு இவ்வகைப்பட்ட பிரச்சனை பாரிய
வெளிச்சம் பாச்சும்.
எவ்வாறிருந்த போதிலும்,
WorldCom இனது கணக்கு பரிசோதகரான
Arthur Andersen,
அல்லது அதன் சுதந்திரமான நிர்வாகிகள் எனக்கூறப்படுபவர்கள் அல்லது
Securities and Exchange Commission
உண்மையில் இது தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவில்லை. இவர்கள் அனைவரும்
ஏதோ ஒரு வகையில் இப்போக்கிலிருந்்து இலாபம் அடைந்தவர்களாகும்.
ஒவ்வொரு நிறுவனத்தின் ஊழல்களைப்போல்
WorldCom இனது ஊழலும்
அதனது தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் அழிவுகரமானதாகும். ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள தனது தொழிலாளர்களில்
நான்கில் ஒரு பகுதியான 17,000 பேரை வேலைநீக்கம் செய்ய ஆரம்பித்துள்ளது. பங்குச் சந்தையின் வீழ்ச்சியானது
401(K) எனப்படும்
ஓய்வூதிய திட்டத்திற்கு பாரிய அழிவுகரமானதாகும். (இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் ஓய்வூதியப்பணம் பங்குசந்தையில்
முதலீடு செய்யப்பட்டது). மேலும் இந்த மீள் ஒழுங்கமைத்தல், ஊகவாணிபம், ஏமாற்று போக்குகள் அனைத்தும் அமெரிக்காவினது
சமூக பாதுகாப்பு திட்டத்தை இல்லாதொழிப்பதுடனும், தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தின் மீது தாக்குதல் செய்வதுடனும்
தொடர்புபட்டது. இறுதி ஆய்வுகளில் ஊழலாலும் ஏமாற்றுக்களாலும் உருவாக்கப்பட்ட செல்வமானது பரந்துபட்ட மக்களிடமிருந்து
களவாடப்பட்டதாகும்.
|