World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
Why is the US government protecting anthrax terrorist? அமெரிக்க அரசாங்கம் அந்த்ராக்ஸ் பயங்கரவாதியை ஏன் பாதுகாக்கின்றது? By the Editorial Board செவ்வாய் கிழமை நியூயோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட வழக்கத்திற்கு மீறிய குறிப்புக்கள், எப்.பி.ஐ ஆனது கடந்த இலையுதிர் காலத்தில் ஐந்து பேர்களைக் கொன்ற அந்த்ராக்ஸ் தாக்குதலில் மிகவும் ஐயத்திற்கிடமின்றி சந்தேகத்திற்குரியவரை அக்கறையுடன் விசாரணை செய்யவோ அல்லது கைது செய்யவோ மறுத்துக் கொண்டிருக்கின்றது என அறிவிக்கிறன. டைம்ஸ் பத்தி எழுத்தாளர் நிக்கோலா கிறிஸ்டோப்பால் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அவை உடனடியாக முற்று முழுதாக பகிரங்க விசாரணைக்குத் தகுதியான அந்த அளவு அக்கறை கொள்ளத்தக்கனவாக இருக்கின்றன. ஆனால் இதுவரையில், புஷ் நிர்வாகம் மற்றும் செய்தி ஊடகம் ஆகியன என்னவாக இருக்கிறது என்பது பற்றி மெளனமாக இருக்கின்றன, மிகைப்படுத்தல் எதுவுமின்றி, பிரதான அமெரிக்க செய்தித்தாளில் என்றும் இடம் பெற்றிராத மிக அதிர்ச்சியூட்டும் கட்டுரைகளுள் ஒன்றாக அது இருக்கிறது. எப்.பி.ஐ-ன் "அந்த்ராக்ஸ் கொலைகாரர்களைத் தேடிச்செல்வதில் வருந்தும் தோற்றமுடைய மடையனை" குற்றம்சாட்டி கிறிஸ்டோப் எழுதுகிறார்: "எப்.பி.ஐ-ன் அந்த்ராக்ஸ் விசாரணையை எதிர்கொள்ளும் கிட்டத்தட்ட எல்லோரும், புலனாய்வுக் கழகத்தின் அக்கறையின்மையில் திகிலடைந்துள்ளனர். உயிரி ஆயுதப் பாதுகாப்பு சமுகத்தில் உள்ள சிலர் குற்றவாளியாக இருக்கக் கூடியவர் என்று அவர்கள் நினைப்பவரை நான் திரு Z என அழைக்கிறேன். கழகமானது திரு Z ஐ பலபடியமைவுகளில், அவரது இல்லத்தை இரு முறை சோதனை இட்ட போதிலும் அவரை நான்கு முறை பேட்டி எடுத்தபோதிலும், அது அவரைக் கண்காணிப்பின் கீழ் வைக்கவில்லை அல்லது அதன் வெளியிலுள்ள கையெழுத்து நிபுணர்களைக் கொண்டு அந்த்ராக்ஸ் கடிதங்களின் மேலுள்ள அவரது எழுத்துக்களை அவரது கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு கேட்கவில்லை." கிறிஸ்டோப் அவரது பெயரை பெயரிட்டு குறிப்பிடாத நிலையைத் தேர்ந்தெடுத்த போதிலும், பிரதான சந்தேகத்திற்குரியவரின் அடையாளம் செய்தி ஊடகத்திலும் அரசாங்க வட்டாரங்களிலும் நன்கு அறியப்பட்டதே என அவர் உறுதிப்படுத்துகிறார். "திரு Z அரபு நாட்டவராக இருந்தால், அவர் நீண்ட காலத்திற்கு முன்னரே சிறைவைக்கப்பட்டு இருந்திருப்பார். ஆனால் அவர் அமெரிக்க பாதுகாப்புத் துறை, சி.ஐ..ஏ மற்றும் அமெரிக்க உயிரி ஆயுதப் பாதுகாப்பு வேலைத் திட்டத்திற்கு நெருக்கமான தொடர்புடைய கொள்கை பிறழா அமெரிக்கன் ஆவார்" என்று கிறிஸ்டோப் குறிப்பிடுகிறார். அயோவா அரசு பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்த்ராக்ஸ் இருப்பை -ஆம்ஸில், அயோவாவில், கடிதங்களில் பயன்படுத்தப்படும் நஞ்சூட்டப்பட்ட மரபினத்தின் பெயருக்காக- சோதிப்பதைவிடவும் எரித்துச் சாம்பலாக்குவதற்கு அனுமதிக்கும் முடிவு உட்பட, பத்தியாளர் இந்த கவனிப்புக் குறைபாட்டை பெரிய வகையில் முன்வைக்கிறார். எப்.பி.ஐ டிசம்பர் வரைக்கும் செனட்டர் லெஹிக்கு அனுப்பப்பட்ட திறக்கப்படாத கடிதத்தை சோதிப்பதை தாமதம் செய்தது, மற்றும் தனியாரிடமிருந்து, அமெரிக்க அரசாங்கம் மற்றும் கடல் கடந்த நாடுகளில் சோதனைக் கூடங்களில் இருந்து ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பெறப்பட்ட அந்த்ராக்ஸ் மரபினங்களை சோதனை செய்வதை இன்னும் முடிக்கவில்லை. மேரிலாண்ட், டெட்ரிக் கோட்டையிலும் உடாவில் உள்ள டுக்வே நீரூபண தளத்திலும் உள்ள உயிரி யுத்த விஞ்ஞானிகளுக்கு பொய் பேசுவதைக் கண்டு பிடிப்பதற்கான கருவிச்சோதனை செய்யப்படவில்லை. கிறிஸ்டோப் அவரது பத்தியை எப்.பி.ஐ நோக்கிய தொடரான கேள்விகளுடன் முடிக்கிறார். அவர் எழுதுகிறார்: "திரு Z எத்தனை அடையாளங்களையும் கடவுச்சீட்டுக்களையும் வைத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா மற்றும் அவரது சர்வதேச பயணத்தை நீங்கள் கண்கானிக்கின்றீர்களா? அவரது ஒரு பெயரையாவது நான் கண்டறிந்திருக்கிறேன், மேலும் அவர் அரசாங்க பணிகளின் பேரில் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து அவர் பயணம் செய்திருக்கிறார், மத்திய ஆசியாவுக்குக் கூட சென்றிருக்கிறார். "அந்தராக்ஸ் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்துக்கு முன்னர் ஏன் அவரது உயர் பாதுகாப்பு சோதனை ஆகஸ்டில் விலக்கப்பட்டது? இந்த நகர்வு அவரை வெறியூட்டி இருக்கிறது. இந்த விசாரணையில் சி.ஐ.ஏ யும் இராணுவ உளவு முகவாண்மைகளும் முழுமையாக ஒத்துழைக்கின்றனவா? "கடந்த இலையுதிர் காலத்தில் அவர் பெற்றிருந்த தனிமை வசிப்பிடத்தை சோதனையிட்டிருக்கிறீர்களா? இந்தக் கட்டிடத்தைப் பற்றி எப்.பி.ஐக்கு தெரியும் மற்றும் அதற்கு வருகை தருபவர்களுக்கு திரு Z, சிப்ரோ (உயிரி கிருமிகள் தாக்காதிருக்க பயன்படுத்தும் தடுப்பு மருந்து) வழங்கினார் என்பதும் தெரியும். இந்த சொத்தும் ஏனைய பலவும் திரு Z இன் நண்பரது பெயரில் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் அவை அமெரிக்க புலனாய்வுத் துறையினரால் இயக்கப்பட்ட பாதுகாப்பான வீடுகளாக இருக்கலாம். "மனிதர்கள் மத்தியில் என்றுமில்லா பதிவுச்சான்றாய் மிகப் பெரிய அந்த்ராக்ஸ் பரப்பலுடன், 1978-80ல் சிம்பாப்வேயில் கறுப்பின விவசாயிகள் 10,000 பேருக்கும் அதிகமானோரை நோய்வாய்ப்படச் செய்த்துடன் திரு Z க்கு தொடர்பிருக்கிறதா என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா? வெள்ளை ரொடீசிய இராணுவம் போராடிக் கொண்டிருந்த கறுப்பின கெரில்லாக்களுக்கு எதிராக அந்த்ராக்ஸ் வெளிவிட்டது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, மற்றும் வெள்ளை இராணுவத்தின் மிகவும் அச்சமூட்டும் சிலோஸ்-ஸ்கெளட்ஸில் (Selous Scouts) தான் பங்கு கொண்டதாக திரு Z கூறி இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தில் உள்ள மூர்க்கத்தனமான சக்திகள் கறுப்பர்களுக்கு எதிரான அந்த்ராக்ஸ் மற்றும் காலரா தாக்குதலில் ரொடீசிய இராணுவத்திற்கு ஆதரவு தந்தனரா? திரு Z இன் மீண்டும் தொடர்தல் கூட முந்தைய தென்னாபிரிக்க பாதுகாப்பு படையில் சம்பந்தப்பட்டதைக் கூறுகிறது; மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், இரண்டு இனவாத ஆட்சிகளின் இனவாத ஆயுதப் படைகளில் பணியாற்றிய, முன்னாள் தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படையில் பணியாற்றிய அமெரிக்கரை, உலகின் மரண ஆபத்தான கிருமிகளின் சிலவற்றைக் கொண்ட அமெரிக்க உயிரி பாதுகாப்பு வேலைத் திட்டத்தில் வேலை செய்ய, அமெரிக்க பாதுகாப்புத்துறை பொறுக்கி எடுத்திருக்கும் என்பதை யார் அறிவார்? இந்த வழக்கத்திற்கு மீறிய விவரமான விளக்கம் அந்த்ராக்ஸை அஞ்சலில் அனுப்பியவரின் அடையாளம் உத்தியோகப்பூர்வ வாஷிங்டன் வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டது என வெளிப்படுத்துகிறது. புஷ் நிர்வாகத்தில், காங்கிரசில் மற்றும் செய்தி ஊடகத்தில் உள்ள நூற்றுக் கணக்கானோர் இந்தத் தகவலைக் கட்டாயம் பெறக்கூடியவராக இருக்கின்றனர், ஆனால் அமெரிக்க மக்களுக்கு வேண்டுமென்றே அது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சந்தேகப்படுபவர்கள் இனங்காணப்படவில்லை என்று அறிவிக்கும், அல்லது அக்டோபரில் மேலோட்டமாக அவர்கள் கொடுத்த பெயருடைய பயங்கரவாதிக்கு இட்டுச் செல்லும் "தகவல்" களுக்காக பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும், புலனாய்வு விசாரணையில் சிறு முன்னேற்றம் அங்கு இருக்கின்றது எனக் கூறும் அறிக்கைக்குப் பின் அறிக்கையை எப்.பி.ஐ வெளியிட்டு வருகிறது. அந்த்ராக்ஸ் பற்றிய புலன் விசாரணை முட்டுச் சந்தை அடைந்தது ஆதாரப் பற்றாக்குறையினால் அல்ல, மாறாக பிரதான சந்தேகத்துக்குள்ளானவர் உயர் பீடத்தில் சக்திமிக்க நண்பர்களைக் கொண்டிருக்கிறார் மற்றும் உத்தியோகபூர்வமான பாதுகாப்பை அனுபவிக்கிறார் என்பதன் காரணமாக என்பது கிறிஸ்டோப்பின் மையக் குற்றச்சாட்டாக இருக்கிறது. "திரு Z" கைது செய்யப்படமாட்டார் என்பதும் மற்றும் அமெரிக்க இராணுவ உளவு நிறுவனத்தில் உள்ள அவருக்கு பின்புலமாக உள்ளவர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் அவருக்கு அளவுக்கு அதிகமாகவே தெரியும். அவரைக் கைது செய்வது, அமெரிக்க குடிமக்களை வேண்டுமென்றே கொன்றது உட்பட, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கொடுமையான குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதைத் தவிர்க்க முடியாததாக்கும். மேலும், கிறிஸ்டோப்பின் கேள்விகளுள் ஒன்று சுட்டிக்காட்டுகிறவாறு, "திரு Z" அமெரிக்காவில் ஐவரைக் கொன்றதில் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் போதும், அவர் புஷ் நிர்வாகத்திற்கு, "அரசாங்கத்தின் பணி ஒதுக்கீடுகளின் பேரில்" மத்திய ஆசியாவுக்கு பயணம் செய்து, இன்னும் செயலூக்கமான சேவையில் இருக்கிறார். அவர் உண்மையில் தொடப்பட முடியாதவராக இருக்கிறார். மரண ஆபத்தான அளந்து சேர்க்கப்பட்ட அந்த்ராக்ஸ் கொண்ட இரு கடிதங்களை செனெட் பெரும்பான்மைத் தலைவர் தோமஸ் டாஷ்லே மற்றும் நீதித்துறைக் குழுத் தலைவர் பாட்ரிக் லெஹிக்கு அனுப்பி வைத்து, அமெரிக்க செனெட்டில் உள்ள ஜனநாயகத் தலைமையை அந்த்ராக்ஸ் பயங்கரவாதிகள் இலக்கு வைத்தனர். உத்தியோகபூர்வமான அரசியல் எதிர்ப்பினரின் படுகொலைக்கான முயற்சியில் -உண்மைக்குப் பிறகு- அதற்கு முன் இல்லையாயின்- புஷ் நிர்வாகமானது குற்றத்திற்கு உடந்தையாய் இருக்கிறது என்ற முடிவினை கிறிஸ்டோப்பின் பத்தி கடினமானவகையில் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய குற்றச்சாட்டு, முன்னணி அமெரிக்க செய்தித்தாளின் ஆசிரிய பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது "இயல்பான" ஜனநாயக நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் வழிமுறைகள் அமெரிக்காவில் சிதறுண்டு போயிருக்கும் மட்டத்தை குறிகாட்டுகிறது. டைம்ஸ் அமெரிக்க ஆளும் தட்டின் பிரதான நிறுவனமாகும், மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு எந்திரத்தின் பகுதிகளுக்கான நீண்டகால காப்புக் குழாயாக இருக்கின்றது. அது அத்தகைய பத்தியை அரசுக்குள்ளே அடிமட்டத்தில் நிகழும் யுத்த கொந்தளிப்பின் சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே வெளியிடக்கூடும் - அது அமெரிக்க மக்கள் கருத்து சொல்வதற்கு இல்லாத ஒன்று. கிறிஸ்டோப்பின் பத்தியானது உலகம் முழுமையும் ஒத்த வகையான அரிதான கண்ணோட்டத்தை
வழங்குகிறது, அந்த ஒன்று வழக்கமாக "பிரதான நீரோட்ட" செய்தி ஊடகத்தில் அறிவிக்கப்படாது போகும் மற்றும்
உறுதிப்படுத்தப் பெறாது போகும். அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் - ஜனாதிபதி புஷ், உதவி ஜனாதிபதி
செனி, அட்டர்னி ஜெனரல் அஷ்கிராப்ட், சி.ஐ.ஏ இயக்குநர் டெனெட், எப்.பி.ஐ இயக்குநர் முல்லர் - அரசாங்கம் பயிற்சி
அளித்த இராணுவக் கொலைகாரனைப் பாதுகாக்கும் குற்றச் சதிச்செயலில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்.
மற்றும் செவ்வாய்க்கிழமை காலையில் காங்கிரஸில் உறுப்பினர்களும் செனட்டர்களும் டைம்ஸ் பத்தியை வாசிக்கையில்
காங்கிரஸ் கட்டிடத்தில் தனிப்பட்ட கலந்துரையாடல் பற்றி ஒருவர் கற்பனை செய்ய முடிந்த போதிலும், கொலைகாரனின்
தெளிவான இலக்குகளை, அவர்களின் ஜனநாயகக் கட்சி எதிராளிகள் கூட எதனையும் பகிரங்கமாகக் கூறுவதற்கு கோழையாக
இருக்கின்றனர். இது கோஸ்டா-காவ்ரா (Costa-Gavras)
திரைப்படம் அல்ல, மாறாக 2002ன் அமெரிக்காவில் உண்மையான
அரச விவகாரங்களாக இருக்கிறது. |