WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
PLO leader bows to Bush
பி.எல்.ஓ தலைவர் புஷ்ஷூக்கு சிரம் சாய்த்தார்
By Bill Vann
27 June 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
"அமைதி நிகழ்ச்சிப்போக்குகளை முன்னெடுப்பதைத் திணிக்க சீரிய முயற்சி" ஒன்று எடுக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு நெருக்கடி மீதான அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் ஜூன் 24 பேச்சை விவரிக்கும் இந்த வார்த்தைகளுடன்,
யாசிர் அரபாத் தனது சொந்த அரசியல் திவாலையும் அவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை வகித்து நடத்தி
வந்த இயக்கத்தின் திவாலையும் முழுதாய் வெளிப்படுத்தினார்.
இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகள் அதே பேச்சை பாலஸ்தீனிய தலைவரின் "உத்தியோக
ரீதியான அரசியல் மரணம்" என விளக்கினர், அதேவேளை ஏனையோர் ரோஜா தோட்டத்திலிருந்து வந்த வார்த்தைகளை
அரபாத்தை படுகொலை செய்வதற்கோ அல்லது அவரது நாடு கடத்தலுக்கோ ஆன பச்சைவிளக்கு எனப் பார்த்தனர்.
அமெரிக்கா ஆசீர்வதித்தருளும் சுதந்திர அரசுக்கு
கணிசமான அளவு சற்று குறைந்த ஒன்றுக்கான முன்நிபந்தனையாக பாலஸ்தீனியர்கள் மேல் புஷ் வைக்கும் பல
கோரிக்கைகளுள் முதலாவது, வாஷிங்டன் அல்லது டெல்அவிவால் "பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டதாக" கருதப்படும்
அரபாத் மற்றும் ஏனைய தலைவர்களை அகற்றுவதாக இருக்கின்றது.
முடியாது என சொல்ல திராணி அற்றவராக அரபாத் ஏன் இருக்கிறார்? ஏன் அவரால்,
ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதிக்கு, பாலஸ்தீன மக்களை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது,
யார் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என்ற எதையும் அறிவிப்பதற்கு உரிமை இல்லை என உண்மை நிலையை
சொல்ல முடியாதுள்ளார். மேலும் புஷ் இன் திட்டமானது, வாஷிங்டன், ஷெரோனின் நிபந்தனையற்ற கூட்டாளியாகையால்
மத்திய கிழக்கில் மத்தியஸ்தர் பாத்திரம் எதனையும் வகிப்பதற்கு திராணியற்றது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
1967 யுத்தத்தில் இஸ்ரேலிய இராணுவத்தின் முன் ஆண்மையற்றவை என்பதை அரபு முதலாளித்துவ
அரசுகள் நிரூபித்தவேளையில், ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதம் தாங்கிய எதிர்ப்பையும் மற்றும் அரபு முதலாளித்துவ
அரசுகளிடமிருந்து சுதந்திரத்தையும் ஆதரிக்கும் தேசிய விடுதலைக்கான ஒரு இயக்கமாக, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை
அமைத்தவர்களுள் அரபாத்தும் ஒருவராவர்.
இஸ்ரேலால் செய்யப்பட்ட எண்ணற்ற சதிகள், கொலைச்சதி முயற்சிகள் மற்றும் முற்றுகைகள்
இவற்றிலிருந்து தப்பியவராக, மற்றும் அவரது முன்னாள் அரபு கூட்டாளிகள் போலவே, அல் ஃபத்தாவின் சக நிறுவனர்
அபு ஜிகாத் போன்ற, தனது நெருங்கிய கூட்டாளிகளான பல தோழர்கள் இஸ்ரேலிய ஏஜண்டுகளால் படுகொலை செய்யப்பட்டதை
அரபாத் பார்த்திருக்கிறார். சுயதியாகம் செய்து கொள்ளும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பி.எல்.ஓ பதாகையின்
கீழ், போராட்டத்திற்காக தங்களின் வாழ்க்கைகளை அர்ப்பணித்திருக்கின்றனர், அதேவேளை பலபேர் இஸ்ரேலிய சிறைகளில்
பல வருடங்களைக் கழித்திருக்கின்றனர்.
வரலாறானது பி,எல்,ஓ தலைவரின் தற்போதைய நிலைக்கு இரக்கப் பண்பின் பலமான
அம்சத்தை இரவல் தருகின்றது. அவரது நொருக்கப்பட்ட ரமல்லா தலைமையகத்தில் இஸ்ரேலிய டாங்கிகளால் சூழப்பட்டு,
அவரது சொந்த அப்புறப்படுத்தலையும் பாலஸ்தீன மக்களை அமெரிக்க அடிமைகளாய் குறைப்பதற்கும் அழைப்பு
விடுக்கும் அமெரிக்கத் திட்டத்தில் "சாதக சுழற்சியை" வைக்க அவர் முயற்சிக்கிறார். பேச்சுக்கு முன்னர் புஷ் நிர்வாகம்
ஆலோசித்த எகிப்து, ஜோர்டான் மற்றும் செளதி அரேபியா ஆட்சிகள் போல, பாலஸ்தீனியர்களுக்கு தலைமையேற்க
யார் பொருத்தம் என்பதைத் தான் தீர்மானிக்கும் வாஷிங்டனின் வரம்பு மீறிய நடத்தையை சர்வசாதாரணமாய் அலட்சியம்
செய்வதை அரபாத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
ஜோர்ஜ்.டபிள்யு. புஷ் இன் முன்னால் தற்போதைய அஞ்சி நடத்தல் (மண்டியிடல்), அதன்
1970 ன் செல்வாக்கு நாட்களின் பொழுதான பி,எல்.ஓ- இன் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடாலிலிருந்து நெடுந்தொலைவாய்
காணப்படுகின்ற அதேவேளையில், இது இந்த இயக்கத்தின் அரசியல் பரிணாமத்தின் கடினமான தர்க்கம் மட்டுமல்லாமல்,
ஆயுதப் போராட்டம் மூலமாக தேசிய விடுதலைக்கு வாக்குறுதி அளிக்கும் ஏனைய பலவற்றினதுமாக இருக்கின்றது.
தென்னாபிரிக்காவில் உள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், எல்சால்வடோரில் உள்ள
எப்.எம்.எல்.என், அங்கோலாவில் உள்ள எம்.பி.எல்.ஏ மற்றும் பல, முதலாளித்துவத்தைப் பாதுகாக்க ஈடுபடுத்திக்கொள்ளும்
முதலாளித்துவக் கட்சிகளாக தங்களை மாற்றிக்கொண்டும் அரசாங்கத்திற்கு தலைமை வகித்துக் கொண்டும் அதேபோன்ற
சரணாகதியை மேற்கொண்டன.
பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டம், அரபுஉலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள்
தொழிலாளர்கள் ஆகியோரது தலைமுறைகளின் கற்பனைகளை வென்றது, ஆனால் பி.எல். ஓ இந்த வெகுஜனங்களை தனது
நோக்கத்திற்கு பின்னால் அணிதிரட்டவும் முடியவில்லை மற்றும் விருப்பமும் இல்லாது இருந்தது. எகிப்து, ஜோர்டான்,
லெபனான் மற்றும் எங்காவது அது ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட முயற்சிகளுக்கு உண்மையான அழைப்பை விடுக்கவில்லை,
திட்டவட்டமாக ஏனெனில் அது இந்நாடுகளின் பிற்போக்கு ஆட்சிகளின் மீது சார்ந்து இருந்தமையே ஆகும்.
அதன் முன்னோக்கு, முதலாளித்துவ தேசியவாத குறுகிய எல்லைகளுக்குள்ளே தங்கி இருக்கிறது,
ஆனால் சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்கும் கருத்துருவானது இஸ்ரேலது ஆக்கிரமிப்பின் கீழ் புண்படுத்தப்படும்
மற்றும் பாலஸ்தீனிய தாயகத்திலிருந்து வெளியேறி சிதறிக்கிடக்கும் பல பத்துலட்சக் கண்க்கானோர் எதிர்
கொண்டிருக்கும் ஆழமான பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும்.
1968 ல் கராமே சண்டையிலிருந்து 1982 பெய்ரூட் முற்றுகை ஊடாக - பி.எல்.ஓ-ன்
கெரில்லா போராளிகள் அடிக்கடி வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திய அதேவேளை, அவ்வியக்கத்தின் தலைமையானது
ஒரு புறம் ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் அதிகாரத்துவத்துக்கும் இடையிலும் மறுபுறம் பல்வேறு அரபு ஆட்சிகளுக்கு
இடையிலும் சூழ்ச்சிகளைக் கையாளுவதன் மூலம் தனது குறிக்கோள்களை அடையவிழைந்தது.
கடந்த 1980ல் இரண்டு அபிவிருத்திகள் பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் வர்க்க இயல்பை
தெளிவாகவே அம்பலப்படுத்தின. முதலாவது சோவியத் ஒன்றியத்தை கலைப்பதற்கான ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின்
முடிவும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையுடன் தன்னையே சேர்த்துக் கொண்டதும் பி.எல்.ஓ வளைந்து நெளிந்து
போவதுக்கு இடமில்லாமற் செய்தது.
அதேவேளை, மேற்குக் கரையிலும் காசா நிலத்திலும் இண்டிபாடா வின் அபிவிருத்தி,
அல்லது பரந்த மக்களின் எழுச்சியானது இஸ்ரேலை விட பெரும் அச்சுறுத்தலை பி.எல்.ஓ வுக்கு முன்வைத்தது. அதிருப்தி
கண்ட பாலஸ்தீனிய இளைஞர், வெகுஜனங்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைக்கு எதிராக சமமற்ற போராட்டத்தில்
நுழைந்தது கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை உண்டு பண்ணும் அச்சுறுத்தலைச் செய்தது. அது, இந்த எல்லைப் பகுதிகளில்
தங்களின் சொந்த அரசையும் பொருளாதாரத்தையும் உருவாக்குவதற்கான பாலஸ்தீனிய செல்வந்தத் தட்டின் அபிலாஷைகளை
கடினமானதாக ஆக்கும்.
இந்த அழுத்தங்கள் தான், அரபாத்தையும் பி.எல்.ஓவையும் 1988ல் வாஷிங்டனுக்கு
கொண்டு வந்ததுடன் ஐந்தாண்டுகளுக்கு பின்னால் ஒஸ்லோ உடன்பாடுகளை விளைவித்த மற்றும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை
(பி.ஏ) உருவாக்கிய தொடரான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவைத்தது. இந்த ஆட்சியானது பாலஸ்தீனிய மக்களுக்கு
கசப்பான ஏமாற்றமென நிரூபித்தது, தங்களின் ஏழ்மை பீடித்த சமூக நிலைமைகள் மேலும் சீரழிவதையும் மற்றும் ஆழமான
சியோனிச குடியேற்றங்களின் பெரும் விரிவாக்கத்தையும் இஸ்ரேலிய ஒடுக்குமுறையையும் மட்டுமே அவர்கள் கண்டனர்.
அதே நேரத்தில், பரந்த மக்கள் கடும் வறுமையுடன் இருக்க, வேலையின்மை 50
சதவீதத்தினை விட அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்படக் கூடிய நிலையில், பாலஸ்தீனிய நிர்வாகப் பணித்துறைவர்
குழுவுடன் தொடர்புடைய மெல்லிய தட்டினர் ஊழல் மூலம் தங்களை செல்வர்களாக்கிக் கொள்ளும் நிலையுடனும் இப்பிராந்தியத்தில்
சமூக துருவமுனைப்படல் பரந்து விரிந்து இருக்கிறது.
மேற்க்குக்கரை மற்றும் காசா நிலப்பகுதிகளில் கூட்டம் நிறைந்த அகதிகள்
முகாம்களுக்குள்ளே நிலைகொண்டிருக்கும் சமூக வெடிமருந்தைக் கண்டு பாலஸ்தீனிய நிர்வாக தலைமை அஞ்சுகிறது. அதன்
இலக்கு தனிச்சொத்துடைமையைப் பாதுகாக்கும் நிலையான அரசை உருவாக்குவதாகும். ஆகையால், அது தீர்வுக்காக
அமெரிக்காவைப் பார்க்கிறது.
பாலஸ்தீனியத் தலைமையினுள்ளே உள்ள பாலஸ்தீன நிர்வாகத் தலைமை பேச்சுவார்த்தையாளர்
சாயெப் எரெக்காத் மற்றும் ஏனையோர், பொஸ்னியா மற்றும் கொசோவாவில் நேட்டோ ஆக்கிரமிப்புடன் அதனை
ஒப்பிட்டு, மேற்குக் கரைக்கும் காசாவுக்கும் அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவதற்கு வேண்டுகோள் விடுத்தனர். இது
பாலஸ்தீன சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை, காலனித்துவ பாணியிலான ஆட்சிக்குட்பட்ட எல்லைப் பகுதியை நிறுவுதற்கு
வாஷிங்டனுக்கான அழைப்பாக திருப்பியது.
அரபாத்தும் அவர்களும் செய்ய இயலாதது எதுவெனில் புஷ் மற்றும் அவரது அரபு கூட்டாளிகளின்
தலைகளுக்கு மேலாக அரபு உலகம் மற்றும் அமெரிக்காதன்னிலே உள்ள உழைக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலோட்டமான ஆற்றலால் வசியப்பட்ட, அவர்களால் வாஷிங்டனின் முயற்சிகளைக் கீழறுக்கும்
மற்றும் சமூக எழுச்சிகளுக்கான சூழல்களை உருவாக்கும் ஆழமான முரண்பாடுகளைப் பார்க்க முடியாது.
பாலஸ்தீனிய நிர்வாகத் தலைமையானது அடுத்த ஆண்டு தேர்தலுக்கான திட்டத்தை ஏற்கனவே
அறிவித்துள்ளது மற்றும் அது சீர்திருத்தப் பாதையில் செல்கிறது என புஷ் நிர்வாகத்தை நம்பச் செய்வதை இலக்காகக்
கொண்ட ஏனைய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதுவரை, இஸ்ரேலில் ஷெரோன் அரசாங்கத்தைப்
போலவே வாஷிங்டனானது, இந்த முயற்சிகளை "ஒப்பனை" என்று விலக்கியது. பாலஸ்தீனிய தலைமையானது இன்னும்
மேலே சென்று வெள்ளை மாளிகையில் சலுகைகளைப் பெறுவதற்காக அரபாத்தையும் ஓரம் தள்ளிவைக்கும்.
1988ல், மத்திய கிழக்கு தீர்வு மீதான றேகன் நிர்வாகத்துடன் சம்பிரதாயப் பூர்வமான
பேச்சுக்களை அரபாத் ஆரம்பித்த பொழுது, "அனைத்து வகையான பயங்கரவாதம்" என கண்டிக்கும் (அமெரிக்க)
அரசுத்துறை வரைவு பிரகடனத்தை வழங்குவதற்கு அவர் சம்மதித்தார். இஸ்ரேல் அரசுக்கு அவரது ஆதரவின் உறுதி
பற்றி மேலும் கூறுமாறு, செய்தியாளர்களால் வலியுறுத்திக் கேட்கப்படுகையில், அவர் கசப்புடன், "நான் ஆடை அவிழ்க்கும்
நடனமாட நீங்கள் விரும்புகிறீர்களா?" எனக் கேட்டார். இப்பொழுது கேள்வியானது, "நான் என்னையே மாய்த்துக்
கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?" என்பதாக இருக்கக் கூடும்.
See Also :
இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு புஷ் பகிரங்க அனுமதி வழங்கியுள்ளார்
Top of page
|