World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

Was the US government alerted to September 11 attack?

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?

பகுதி 1: முன்கூட்டிய எச்சரிக்கைகள்

By Patrick Martin
16 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

பார்க்க: பகுதி2: விமானக் கடத்தல்காரர்களைக் கண்காணித்தல் , பகுதி3: அமெரிக்க ஐக்கிய அரசுகளும் மத்திய கிழக்கு பயங்கரவாதமும் , பகுதி 4: விசாரணை செய்ய மறுப்பு

வெள்ளை மாளிகையில் இருந்து ஆயுதம் தாங்கிய கடத்தல்காரர்களை விமானங்களுக்குள் ஏறவிட்ட விமான சேவைபாதுகாப்பு அதிகாரிகள் வரை பின்பற்றிய, செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி அமெரிக்க மக்களுக்கு இதுவரை கூறப்பட்டிருப்பதை விட அதிகம் கூறப்பட இருக்கிறதாக நம்பப்படும், அனைவரும் பின்பற்றிய சதியை அடிப்படையாகக் கொள்ளவேண்டிய தேவை இல்லை. விமானக் கடத்தல்காரர்கள் உலக வர்த்தக மையக் கட்டிடத்தையும் பென்டகனையும் விமானங்களைக் கொண்டு மோதும் வரைக்கும் அமெரிக்க தேசியப் பாதுகாப்புத்துறையின் பரந்த பகுதியினர் முழுவதுமாக அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி அறியாமல் இருந்தனர் என்ற அந்த நாளின் சம்பவத்தைப் பற்றிய விளக்கம் நிச்சயமாக குறைந்த அளவிலே நம்பக் கூடியதாக மற்றும் குறைந்த அளவிலே பொருத்தமுடையதாக இருக்கிறது.
சம்பவம் நடைபெற்றவுடன் அடுத்து உடனடியாக எப்.பி.ஐ இயக்குநர் றொபேர்ட் முல்லர் மிகவும் முரட்டுத்தனமாக கூறிய, உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அவர்கள் பின்பற்றப்போகும் வழிமுறைகள் அல்லது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் இலக்குகள் தொடர்பாகவும், செப்டம்பர் 11 கடத்தல்காரர்களின் அடையாளம் பற்றியும் அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஒருவர்கூட சிறிதளவு எண்ணமுமின்றி இருந்தனர். செப்டம்பர் 11க்குப் பின்னர் துண்டு துணுக்குகளாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிற தகவல்களைக் கவனமாக ஆராய்ந்தால், இந்த கூற்றுக்கள் வேறுபாடுவகையில் நுட்பமானவை என்பது மட்டுமல்ல, தெளிவாகவும், உண்மையாகவும் மற்றும் வேண்டுமென்றே இட்டுக்கட்டிய பொய்யாகவும் இருக்கின்றன.

சக்காரியாஸ் மொஸ்ஸோயி (சக்காரியாஸ் மொஸ்ஸோயி இன் வித்தியாசமான வழக்கு: செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கு பொறுப்பானவர் மீதான விசாரணையை FBI மறுத்துள்ளது) விவகாரமானது, செப்டம்பர் 11 தாக்குதல்கள் எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ- யின் பகுதியில் பெரும் தோல்வியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தெளிவான சான்றுமட்டுமல்ல, செயல்பட மறுப்பதற்கான சரியான விளக்கமில்லாததற்குமான சான்றாக இருக்கிறது. அங்கு தற்கொலை பணயக்கடத்தல் போன்ற கடத்தல்கள் பற்றி பொதுவான எச்சரிக்கைகள் இருந்தது மட்டுமல்லாமல், இதற்கு பிரதான ஒழுங்கமைப்பாளர் எனக் கூறப்படும் மொகம்மது அட்டா உள்ளடங்கலான பல விமானக் கடத்தல்காரர்கள் அமெரிக்க ஏஜண்டுகளால் தீவிரமாகக் கண்காணிப்பின் கீழ் இருந்தனர். அமெரிக்க உளவு நிறுவனங்கள் திரும்பத்திரும்ப வந்த எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததன் காரணமாக, அடிப்படைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்ததன் காரணமாக பயங்கரவாதிகள் அவர்களின் கொலைகாரத்தனமான மற்றும் அழிவுகரமான பணிகளை நிறைவேற்ற முடிந்தது மற்றும் இது அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கருத்தின் முரண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

அமெரிக்க வரலாற்றிலேயே எந்தவிதமான வன்முறையிலும் ஒரேநாளிலேயே அதிக அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட தாக்குதலின் சூழ்நிலைமைகள் பற்றி எந்தவிதமாகவும் ஆய்வு செய்ய அமெரிக்க அரசாங்கத்தின் எந்த பிரிவினரும் மறுப்பதை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். செப்டம்பர் 11 க்குப் பின்னர் நான்கு மாதங்களில் அதுபற்றி புலனாய்வு செய்ய, பாடங்களைப் படிக்க மற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அங்கு எந்தவிதமான அக்கறை கொண்ட முயற்சியும் இருக்கவில்லை. இதுவே வாஷிங்டனில் உள்ள உயர்மட்டத்து மனிதர்கள் அதனை மறைப்பதில் பெரிதும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

வெளிநாட்டு அரசாங்கங்களில் இருந்து வந்த எச்சரிக்கைகள்

ஜேர்மனி, எகிப்து, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய குறைந்தபட்சம் நான்கு நாடுகளின் அரசாங்கங்கள் செப்டம்பர் 11க்கு முந்திய மாதங்களில் வர இருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி குறிப்பிடத்தக்க எச்சரிக்கைகளை வழங்கின. இந்த எச்சரிக்கைகள், துண்டுதுணுக்குகளாக இருந்த அதேவேளை, தாக்குதலின் அளவையும் அதன் பிரதான இலக்கையும் முன்கூட்டி ஒருங்கிணைந்து சொன்னது மட்டுமல்லாமல், கடத்தப்பட்ட பயணிகள் விமானம் அவர்களின் ஆயுதத் தேர்வாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியது.

உலக வர்த்தக மையக் கட்டிட அழிவுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட, ஜேர்மனியின் பிரதான பத்திரிகைகளுள் ஒன்றில் இடம்பெற்ற கட்டுரைகளின்படி, ஜேர்மனின் உளவு அமைப்பான பி.என்.டி (B.N.D) அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு ஸ்தாபனங்கள் இரண்டிடமும் ஜூன் மாதம் மத்திய கிழக்கு பயங்கரவாதிகள் "பயணிகள் விமானத்தைக் கடத்தி ஆயுதமாகப் பயன்படுத்தி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கலாச்சாரத்தின் முக்கியமான அடையாளங்களைத் தாக்கத் திட்டமிட்டு இருப்பதாக" கூறினர்.

பத்திரிகையானது, பெயர் குறிப்பிடா ஜேர்மன் உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டியது. இத்தகவல் உலகெங்கும் உள்ள மின்னணுவியல் தொடர்புகளை கண்காணித்துவரும் 120 செயற்கைக் கோள்களின் அமெரிக்கக் கட்டுப்பாட்டு முறையான, எச்செலோன் (Echelon) வழியாக வந்ததாக அது குறிப்பிட்டது. எச்செலோன் இருப்பு பற்றி உத்தியோக ரீதியில் ஒப்புக்கொள்ளப்படா விட்டாலும் அவ் அமைப்பானது அமெரிக்க ஐக்கிய அரசுகள், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளால் கூட்டாக இயக்கப்படுகிறது. (Source: Frankfurter Allgemeine Zeitung, September 14, 2001)

ஒசாமா பின் லேடனால் வெளியிடப்பட்ட ஒளிப்பேழையை அடிப்படையாகக் கொண்டு எகிப்து அரசாங்கம் ஜூன் 13-ம் தேதி அன்று அமெரிக்காவிற்கு ஒரு அவசர எச்சரிக்கையை அனுப்பியது. எகிப்திய ஜனாதிபதி ஹஸ்னி முபாரக் பிரெஞ்சுப் பத்திரிகையான லு பிகாரோ (Le Figaro) விடம் இந்த எச்சரிக்கையானது ஜெனோவாவில் ஜி-8 உச்சி மாநாட்டுக்கு முன்னர் உண்மையில் விடுக்கப்பட்டது என்று கூறினார். இத்தாலிய நகரத்தில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் விமான நிலையத்தைச் சுற்றிலும் விமான எதிர்ப்பு கருவிகள் வைக்கப்பட்டதாக போதுமான அளவு கவனத்தில் எடுக்கப்பட்டது. முபாரக்கின்படி, பின் லேடன் " ஜெனோவாவில் புஷ் மற்றும் ஏனைய முக்கிய அரசுத் தலைவர்களை படுகொலை செய்வது பற்றி பேசினார். அது வெடிமருந்துகள் கொண்ட விமானம் பற்றியதாக இருந்தது. இந்த எச்சரிக்கைகள் அப்பொழுது எடுக்கப்பட்டிருந்தன." (Source: New York Times, September 26, 2001, "2 Leaders Tell of Plotto Kill Bush in Genoa," by David Sanger)

ரஷ்ய பத்திரிகைகளின்படி, கோடைக்காலத்தின் பொழுது 25 பயங்கரவாதிகள் விமான ஓட்டிகள் தற்கொலைப் பணிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக சி.ஐ.ஏ க்கு குறிப்பிட்டிருந்தது. செப்டம்பர் 15 அன்று MSNBC தொலைக்காட்சியுடனான பேட்டியில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் ஆகஸ்டு மாதத்தில், விமான நிலையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்களின் மீது உடனடித் தாக்குதல்களின் "சாத்தியமிக்க உறுதியான வார்த்தைகளில்" அமெரிக்க அரசாங்கத்தை எச்சரிக்கும்படி, ரஷ்ய உளவு நிறுவனத்திற்குக் கட்டளை இட்டதாகக் குறிப்பிட்டார். (Source: From TheWilderness web site; MSNBC).

புஷ் நிர்வாகத்துக்கு வழக்கமாய் அதிக ஆதரவு கொடுக்கும் பழமைவாத செய்தித்தாளான லண்டனை தளமாகக் கொண்ட சண்டே டெலிகிராப் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத், "அமெரிக்கா மீது பெரும் தாக்குதலை" நடத்தத் திட்டமிட்டு ஒசாமா பின் லேடனின் 200 ஆதரவாளர்கள் அளவில் நாட்டுக்குள் புகுந்திருப்பதாக எப்.பி.ஐ -க்கும் சி.ஐ.ஏ க்கும் எச்சரிக்கையை விடுத்திருந்தது என்று செய்தி அறிவித்தது. "பெரிய அளவிலான இலக்கு" பற்றிய அறிவுறுத்திப் பேசியது, அதில் அமெரிக்கர்கள் "மிகவும் பாதிப்படையக் கூடியதாக" இருக்கும். ெலாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் இந்த மொசாட் எச்சரிக்கை, பெறப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தியதாக மேற்கோள் காட்டியது. (Source: Sunday Telegraph, September 16, 2001, "Israeli security issuedurgent warning to CIA of large-scale terror attacks," by David Wastell andPhilip Jacobson; Los Angeles Times, September 20, 2001, "OfficialsTold of ‘Major Assault' Plans," by Richard A. Serrano and John-ThorDahlburg)

பிரிட்டனில் தாராண்மைப் பத்திரிகையான இண்டிப்பெண்டென்ட் "அமெரிக்க அரசாங்கம் அமெரிக்காவில் அழிவுகரமான தாக்குதல் நடைபெறப் போவதாக திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்யப்பட்டது" என்று உறுதிப்படுத்தும் கட்டுரையை வெளியிட்டது. ஆகஸ்ட்டு இறுதியில் ஒசாமா பின் லேடன் லண்டனைத் தளமாகக் கொண்ட அராபிய மொழி செய்தித்தாளான அல்-குட்ஸ் அல்-அரபிக்கு அளித்த பேட்டியை இண்டிப்பெண்டன்ட் மேற்கோள் காட்டியது. அதேநேரத்தில், கூறப்படாத காரணங்களுக்காக உலக வர்த்தக மையத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆணையிடப்பட்டிருந்தது. (Source: Independent, September 17, 2001, "Bush did not heed several warnings of attack,"by Andrew Gumbel)

இந்த அடுக்கடுக்கான எச்சரிக்கைகள் இருப்பினும், செப்டம்பர் 11க்கு வரவிருந்த மாதங்களில் அமெரிக்க எல்லையில் உள்ள இலக்குகள் மீதான சாத்தியமான தாக்குதல் பற்றி எந்த அமெரிக்க நிறுவனமும் எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. சி.ஐ.ஏ யும் எப்.பி.ஐ.யும் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அல்லது தூதரகங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தன. செப்டம்பர் 7 அன்று அமெரிக்க அரசுத்துறை பின் லேடன் ஆதரவாளர்களால் வரவிருக்கும் தாக்குதல் பற்றி உலகரீதியாக எச்சரிக்கையை விடுத்திருந்தது. இருப்பினும் அது அமெரிக்காவினுள் அல்லாமல், ஆசியாவில், குறிப்பாக ஜப்பானில் உள்ள அமெரிக்கா தொடர்பான இலக்குகளை மையப்படுத்தியது. செனட் உளவுத்துறை குழுவினது பொறுப்பான பதவியில் உள்ள குடியரசுக்கட்சி செனட்டர் ரிச்சர்ட் ஷெல்பி, "இது மிகப் பெரிய அமைப்பினது தோல்வி ஆகும். அமெரிக்கா தாக்கப்படுவது பற்றிய குறிப்பான எச்சரிக்கையை நாம் கொண்டிருக்கவில்லை" என்று ஒப்புக் கொண்டார்.

மேலும், சக்காரியாஸ் மொஸ்ஸாவி மீது நடவடிக்கை எடுக்காத எப்.பி.ஐ முடிவு வெளிநாடுகளில் இருந்துவந்த தொடர் எச்சரிக்கைகளின் வெளிச்சத்தில் கட்டாயம் எண்ணிப் பார்க்கப்பட வேண்டும். அமெரிக்க அரசாங்கமானது கடத்தப்பட்ட வர்த்தக ரீதியிலான விமானத்தைப் பயன்படுத்தி அழிவுகரமான தாக்குதல் பற்றிய ஆபத்து பற்றி அமெரிக்காவுக்கு திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்யப்பட்டது, இருப்பினும் எப்.பி.ஐ ஆனது பிரெஞ்சு உளவு நிறுவனத்தால் ஒசாமா பின் லேடனுடன் தொடர்பு உள்ளதாகக் கருதப்படும் மனிதனிடம் அக்கறை கொண்ட விசாரணையை நடத்தாதிருக்க முடிவு செய்தது. அம் மனிதன் 747 ஜம்போ ஜெட் விமானத்தை மேலே எழுப்பவோ அல்லது கீழே இறக்கவோ அல்லாமல் வானத்தில் செலுத்த மட்டும் கற்றுக்கொள்ள விரும்பினான். மொஸ்ஸாவி செப்டம்பர் 11 க்குப் பின்னர் வரைக்கும் குடிவரவு குடியகல்வு துறை மற்றும் குடியுரிமை அலுவலகத்தால் எப்.பி.ஐ க்கு ஒப்படைக்கப்படவும் கூட இல்லை.

அமெரிக்க விசாரணைகளும் அக்கறைகளும்

அமெரிக்க உளவுநிறுவனங்கள் செப்டம்பர் 11க்கு முன்னர் வர்த்தக விமானங்கள் சம்பந்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் சாத்தியம் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை என்ற கூற்றுக்கள் இருப்பினும், அமெரிக்க அரசாங்கத்தின் பக்கத்தில் எட்டு ஆண்டுகளாக அத்தகைய அக்கறைகள் பற்றிய பல குறிகாட்டல்கள் அங்கு இருந்தன.

1993ல் பென்டகனால் அமைக்கப்பட்ட வல்லுநர்குழு தேசிய தரைகுறிகளின் மீது எப்படி ஒரு விமானம் குண்டாகப் பயன்படுத்தப்படமுடியும் என்பது பற்றி விவாதித்தது. "அது தீவிரமான சிந்தனையாக, அந்த நேரம் சற்றே அளவுக்கு அதிகமான பீதியாகக் கருதப்பட்டது" என்று ஓய்வு பெற்ற விமானப்படை கேர்ணல் டொக் மெனார்ச்சிக் குறிப்பிட்டார். அவர் பாதுகாப்புத் துறையின் சிறப்பு நடவடிக்கை மற்றும் குறைந்த வன்முறை கொண்ட மோதல் பற்றிய ஆய்வுக்காக 1,50,000 டொலர்கள் செலவில் ஆய்வை ஏற்பாடு செய்தார். "நான் பதவிவிலகிப்போன பிறகு, அது சந்தடி இல்லாமல் இறந்து போனது என்றார் அவர். "அதில் பங்கேற்றவர்கள் அங்கு செய்யப்பட்ட விவரமான காட்சிகள் பயங்கரவாதிகளுக்கு யோசனைகளை வழங்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஒரு பகுதி பிரசுரிக்கப்பட வேண்டாம் என முடிவுசெய்யப்பட்டது. இம்முடிவின் பிரதி ஒன்று பென்டகன், நீதித்துறை மற்றும் மத்திய அவசரகால நிர்வாகத் துறை முழுவதும் விநியோகிக்கப்பட்டது, ஆனால் மூத்த துறை அதிகாரிகள் இறுதியில் அதனை பகிரங்கமாக வெளியிடுவதற்கு எதிராக முடிவெடுத்தனர். (Source: WashingtonPost, October 2, 2001, "Before Attack, U.S. Expected Different Hit, Chemical,Germ Agents Focus of Preparations," by Jo Warrick and Joe Stephens)

1994ன் பொழுது விமானங்களைப் பயன்படுத்தி கட்டிடங்களைத் தாக்குவதற்கு முயற்சித்த மூன்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த ஆண்டு ஏப்ரலில், முதலாவது நிகழ்ச்சியில் பணிநீக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெடரல் எக்ஸ்பிரஸ் பொறியாளர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார். அவர் DC-10 விமானத்தில் பயணியாக ஏறி, மெம்பிஸில் உள்ள நிறுவனத்தின் கட்டிடத்தை விமானத்தைக் கொண்டு மோதுதற்கு விமான ஓட்டிகளின் அறைக்குள் புகுந்தார், ஆனால் அவர் விமானப் பணியாளர்களால் பிடித்து கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டார். இரண்டாவது செப்டம்பரில் நிகழ்ந்தது. தனி ஒரு விமான ஓட்டி, தனி ஒரு எஞ்சினைக் கொண்ட திருடப்பட்ட செஸ்னாவை (Cessna) வெள்ளை மாளிகை வளாகத்தினுள் ஜனாதிபதியின் படுக்கை அறைக்கு அருகே உள்ள மரத்தின் மீது மோதினார். மூன்றாவது, அல்ஜீரியாவில் இருந்து எயர் பிரான்ஸ் விமானம் ஆயுதமேந்திய இஸ்லாமியக் குழு டிசம்பரில் கடத்திய நிகழ்ச்சி ஆகும். இதில் விமானக் கடத்தல்காரர்கள் விமானத்தை மார்செயில்ஸில் இறக்கி 27 தொன் எரிபொருளை நிரப்ப ஆணையிட்டனர். அது பாரிசுக்குப் போவதற்கு செலவாகும் எரிபொருளைப் போன்று மூன்று மடங்கு ஆகும். அவர்களது நோக்கம் அதனை ஈஃபெல் கோபுரத்தின் (Eiffel Tower) மீது மோதவைப்பதாக இருந்தது. பிரெஞ்சு அதிரடிப்படையினர் அதனை நிலத்திலேயே நிர்மூலமாக்கினர். (Source: New York Times, October 3, 2001, "Earlier Hijackings OfferedSignals That Were Missed," by Matthew Wald)

1995 ஜனவரியில், பிலிப்பைன்ஸ் போலீசார் மணிலாவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வெடிகுண்டு செய்யும் சாதனத்தைக் கண்டெடுத்ததால், அப்துல்ஹக்கீம் முராட் எனும் இளைஞனைக் கைதுசெய்து சித்திரவதை செய்தனர். 11 அமெரிக்க விமானங்களை அடுத்தடுத்து நேரத்தே வெடிக்கும் வெடிமருந்து சாதனத்தை வைக்க இருந்த திட்டத்தையும், வெர்ஜீனியாவில் உள்ள, லாங்லியில் உள்ள சி.ஐ.ஏ தலைமையகத்தை விமானங்களை வைத்து தரையில் மோதி இடிக்கச் செய்ய இருந்த திட்டத்தையும் அவன் அவர்களிடம் தெரிவித்தான். சிறப்பாகக் குறிவைக்கப்பட்ட விமானங்களில், பெரும்பாலானவை டிரான்ஸ் பசிபிக் விமானங்களாக இருந்தன. அவை கடல் மேல் பறக்கும்போது வெடிக்க கூடியவையாக இருக்கும் என்று முராட் விவரித்தார். அந்த அளவுக்கு தயாரிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முராட் அமெரிக்காவில் உள்ள விமானப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, வணிக ரீதியான விமான ஓட்டி பத்திரத்தை பெற்றார். மற்றும் அவர்தான் விமானத்தை சி.ஐ.ஏ தலைமையகத்தின்மீது மோதவிருந்ததைப் பற்றி விசாரணை அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். இன்னொரு இஸ்லாமிய அடிப்படை வாதியும் பென்டகனின் மீது இரண்டாவது விமானத்தை மோத இருந்தார். (Source: Washington Post, September 23,"Borderless Network of Terror, Bin Laden Followers Reach Across Globe,"by Doug Struck, Howard Schneider, Karl Vick and Peter Baker)

அந்த ஆண்டின் பின்பகுதியில், உலக வர்த்தக மையத்தில் குண்டு வீச்சை ஏற்பாடு செய்தவர் என்று கூறப்படும் ரம்ஜி அஹ்மது ஜோசப் பாக்கிஸ்தானில் பிடிக்கப்பட்டு, அமெரிக்க ஏஜண்டுகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்காக அமெரிக்கா கொண்டுவரப்பட்டார். விமானத்தில், அவரைப் பாதுகாத்து வந்த எப்.பி.ஐ ஏஜண்ட் பிரையன் பாரிடமும் (Brain Parr) மற்றைய ஏஜண்டுகளிடமும் ஒரேநாளில் பசிபிக் மீதாக டஜன் கணக்கான விமானங்களை வெடிக்கச் செய்வதற்கான பல சந்தர்ப்பங்களை மயிரிழையில் நழுவவிட்டதாக ஜோசப் குறிப்பிட்டார். மற்றும் வெர்ஜீனியாவில் உள்ள லாங்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகத்தின் மீது கமிகாஸ் வகையிலான (kamikaze-type) தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததையும் அவர் கூறினார். ஜோசப் குறிப்பிட்டிருந்த அதே திட்டத்தை பிலிப்பைன்சில் கைது செய்யப்பட்டிருந்த அப்துல் ஹக்கீம் முராடும் குறிப்பிட்டிருந்தார். முராட் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் அளித்த சாட்சியங்கள் ஜோசப் வழக்கு விசாரணையிலும் ஒப்புக் கொள்ளலிலும் பெரும்பங்காற்றியது. (Source: John Cooley, UnholyWars, New York, NY, 2000, p. 247)

1996ன் ஆரம்பத்தில், அமெரிக்க அதிகாரிகள் கிருமிநாசினிகளை தெளிக்கும் (Crop-dusters) மற்றும் தற்கொலை விமானங்கள் ஆகியனவற்றை சக்திமிக்க பயங்கரவாத ஆயுதங்களாக அடையாளங் கண்டிருந்ததுடன், மேலும் அட்லாண்டா கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது தாக்குதல் நடைபெறாது தடுப்பதற்கு நடவடிகைகளை விரிவாக்கி இருந்தது. ஒலிம்பிக் அரங்குகளின் மேலாக சந்தேகப் படும்படியான விமானங்கள் பறப்பதைக் கண்டுபிடிப்பதற்காக பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் (Black Hawk helicopters) மற்றும் சுங்கத்துறை ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏஜண்டுகள் அட்லாண்டாவிலிருந்து நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவிற்குள் கிருமிநாசினிகளை தெளிக்கும் (Crop-duster) விமானங்களைக் கண்டுபிடித்தனர். "ஒருவரும் சிறிய விமானத்தைக் கடத்தி விளையாட்டரங்கைத் தாக்க முயற்சிக்கவில்லை" என்பதை சட்ட ஒழுங்குத்துறை அதிகாரிகள் வட ஜோர்ஜியா முழுவதும் உள்ள பிராந்திய விமானத் தளங்களை சரிபார்த்தனர்" என்று அந்நேரம் அட்லாண்டா அலுவலகத்துக்குப் பொறுப்பாய் இருந்த எப்.பி.ஐ ஏஜண்ட் வூடி ஜோன்சன் (Woody Johnson) குறிப்பிட்டார். ஜூலை 6 லிருந்து ஆகஸ்ட் 11ல் விளையாட்டுக்கள் முடிவடைந்ததுவரை, விளையாட்டு வீரர்களைத்தங்க வைத்திருந்த ஒலிம்பிக் கிராமத்தைச் சுற்றிலும் ஒரு மைல் சுற்றளவில் FAA (கூட்டரசு வான்வெளி நிர்வாகம்) எல்லா விமானங்கள் பறப்பதையும் தடைசெய்திருந்தது. அது மற்றைய பகுதியில் விளையாட்டு தொடங்குவதற்கு மூன்றுமணி நேரங்கள் முன்னதாகவும் போட்டி முடிந்து மூன்று மணிநேரம் பின்னதாகவும் ஒவ்வொரு விமானமும் குறைந்த பட்சம் மூன்று மைல்கள் தள்ளி பறக்குமாறு கூறப்பட்டது.

1996 ஆரம்பத்தில் எப்.பி.ஐ அமெரிக்க விமானப் பயிற்சிப் பள்ளியில் அரபு மாணவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரணை செய்ய ஆரம்பித்த அரசாங்க அதிகாரிகள் "சட்டம் ஒழுங்குக்கான அதிகாரிகள் பின் லேடனுடன் தொடர்புடைய டஜனுக்கும் குறைவான பேர்கள் அமெரிக்க விமானப்பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருந்தனர் என்பதை அறிந்திருந்தனர்" என்று ஒப்புக் கொண்டனர். 1996ல் எப்.பி.ஐ ஏஜண்டுகள் பல அரபு விமான ஓட்டிகள் பயிற்சி பெற்ற விமானப் பயிற்சிப் பாடசாலையை இரு எப்.பி.ஐ அதிகாரிகள் பார்வையிட்டனர். இரு பாடசாலைகளும், சி.ஐ.ஏ தலைமையகத்தை கடத்தப்பட்ட விமானத்தை வைத்து மோதத்திட்டமிருந்ததை அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் போலீசாரிடம் கூறிய அப்துல் ஹக்கீம் முராட் பயிற்சி எடுத்த பள்ளிகளுள் அடங்குவன. 1998ல் எப்.பி.ஐ ஏஜண்டுகள் ஓக்லஹோமாவில், நோர்மன் (Norman) என்னும் இடத்தில் உள்ள விமான ஓட்டி பயிற்சிப் பாடசாலையில் உள்ள அதிகாரிகளிடம் ஒசாமா பின் லேடனுக்கு விமான ஓட்டி என்று வழக்கில் சான்றுரைக்கப்பட்ட பட்டதாரி பற்றி கேள்வி கேட்டனர். இந்தப் பாடசாலையில்தான் பின்னர் சக்காரியாஸ் மொஸ்ஸூவியால் கல்விகற்றார். வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை பின்வருமாறு முடிக்கிறது: 1996 லிருந்து, எப். பி. ஐ ஏஜண்டுகள் சர்வதேச பயங்கரவாதிகள் ஜம்போ ஜெட் விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்க பயிற்சிப் பள்ளிகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகளை அபிவிருத்தி செய்து வைத்திருந்தது. மணிலாவில் விமானங்களைத் தகர்ப்பதற்கான திட்டம் முறியடிப்பு மற்றும் பின்னர் பின் லேடனின் சகாவால் அளிக்கப்பட்ட சாட்சியம் ஆகியன எப்.பி.ஐ ஏஜண்டுகளின் விசாரணைகள் பல விமானப் பயிற்சிப் பாடசாலைகளைத் தொடவைத்தன, என அதிகாரிகள் கூறுகிறார்கள்." (Source: Washington Post, September 23, 2001, "FBI Knew Terrorists Were Using Flight Schools," by Steve Fainaru and James V. Grimaldi)

2000- ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கின்போது, முன்னாள் சிட்னி போலீஸ் அதிகாரி, போல் மாக்கின்னோன் (Paul McKinnon) இன்படி, "உலகரீதியான தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் கண்கள்முன் தொடக்க விழாவினுள் முழுதும் நிரப்பப்பட்ட, எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் மோதுவது" பற்றிய ஆபத்து பற்றிய தீவிரமாய் எண்ணிப்பார்த்தல் இங்கு இருந்தது. "ஒசாமா பின் லேடன் முதலாவது அச்சுறுத்தலாகக் கருதப்பட்டார் என்று அவர் கூறினார். சர்வதேச ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் 1972 லிருந்து ஒவ்வொரு ஒலிம்பிக்கிற்குமான பாதுகாப்புத் திட்டமிடலில் விமானத்தை மோதி அழிவை உண்டாக்கல் நோக்கப்பட்டிருந்தது என்று கூறினர். "அது எம்மை அச்சுறுத்தும் காட்சியாக இருந்தது" என்று ஒரு சர்வதேச ஒலிம்பிக் சங்க அதிகாரி கூறினார். சால்ட்லேக் சிட்டியில் (Salt Lake City) 2002 குளிர்கால ஒலிம்பிக்கிற்கான பாதுகாப்புத் திட்டமிடல் பற்றி 2001ல் எப்.பி.ஐ- உடன் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஆழமான விவாதங்களிருந்தன. (Source: Sydney Morning Herald, September 20, 2001, "Jet crash onstadium was Olympics nightmare," by Jacquelin Magnay)

2001-ல் வெளியிடப்பட்ட விமானங்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் பற்றிய மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் 2000-ம் ஆண்டு பதிப்பு, ''பின் லேடன் பயணிகள் விமானத்தை தாக்குவது பற்றிய நோக்கமிருப்பதாக தெரிந்திராவிட்டாலும், அவர் அவ்வாறு செய்வதற்கு ஆதார அடிப்படை மற்றும் உள்நோக்கம் இரண்டினையும் அவர் கொண்டிருக்கிறார்", மேலும் பின் லேடனின் அமெரிக்க எதிர்ப்பு மற்றும் மேற்கு எதிர்ப்பு மனப்பாங்கு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் விமான சேவைக்கு, குறிப்பாக அமெரிக்க விமான சேவைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக ஆக்கி உள்ளது" என்று கூறுகிறது. (Source: FAA)

2001 இன் ஆரம்பத்தில், கென்யாவிலும் தன்ஸானியாவிலும் 1998 இல் அமெரிக்க தூதுவராலயங்களை தாக்கிதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை நியூயோர்க்கில் இடம்பெற்றது. இவ்விசாரணையில் பில் லேடனுடைய கையாட்கள் ஒக்கலகாமாவிலும் ரைக்சாசிலும் (Texas) விமானப்பயிற்சி பெற்றதாகவும், இன்னொருவர் அப்பாடசாலையில் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டதாக வெளிவந்தது. பின் லேடனுடைய கையாளான L'Houssaine Kherchtou அரசதரப்பு சாட்சியாக மாறியதுடன் தான் 1993 இல் விமானப்பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார். இன்னுமொரு பின் லேடனுடைய உதவுயாளரான Essam al-Ridi பின் லேடனுக்கு இராணுவ விமானம் ஒன்றை வாங்கி சூடானுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். இவரும் 1998 இல் அரசதரப்பு சாட்சியாக மாறி செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே இவ் விமானிப் பயிற்சித் திட்டம் தொடர்பாக எவ்.பி.ஐ இற்கு தகவல் தெரிவித்திருந்தார். இவ்வழக்கு 2001 பெப்பிரவரி இல் இருந்து ஜூலை வரை நீடிக்கப்பட்டிருந்தபோதும், அவர்கள் அமெரிக்க வர்த்தக போக்குவரத்து குறித்து எவ்வித உயர் எச்சரிக்கையையும் வழங்கவில்லை. (Source: Court transcript available at www.cryptome.org)

தொடரும்.......

பார்க்க:

சக்காரியாஸ் மொஸ்ஸோயி இன் வித்தியாசமான வழக்கு: செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கு பொறுப்பானவர் மீதான விசாரணையை FBI மறுத்துள்ளது
[ 5 January 2002 ]

செப்டம்பர் 11க்கு நீண்டகாலம் முன்னரே ஆப்கானிஸ்தானில் போருக்கு அமெரிக்கா திட்டமிருந்தது
[ 20 November 2001]