World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The case of Robert Kerrey: war crimes and their supporters in Vietnam and Afghanistan

றொபேர்ட் கெர்ரியின் வழக்கு: யுத்தக் குற்றங்களும், ஆப்கான் மற்றும் வியட்னாமில்அவர்களது ஆதரவாளர்களும்

By Peter Daniels
4 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

தலிபான் யுத்தக் கைதிகளின் படுகொலையின் அறிக்கைகள் ஆறு வாரங்களுக்கு முன்னர்தான் வெளியாகியிருந்தன. Mazar-i-Sharif இன் நகரத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, குண்டுஸ் நகரத்தில் சரணடைந்த நூற்றுக்கணக்கான கைதிகள் ஒரு சிறைச்சாலை இடமாற்றத்தின் போது பொதிகலங்களுக்குள் (Cargo containers) வைத்து மூச்சுத்திணறடிக்கப்பட்டதுடன், மற்றும் ஆப்கானை சேராத தலிபான் கைதிகள் கொலைசெய்யப்படுவதற்காக தனிப்படுத்தப்பட்டு பிரித்துவைக்கப்பட்டார்கள்.

யுத்தக் கைதிகளை நடத்தும் முறைபற்றிய 1949ம் ஆண்டின் ஜெனிவா உடன்படிக்கையினை படுமோசமான முறையில் மீறியதையிட்டு ஒரு விசாரணையை செய்யும்படி, ஐரோப்பிய செய்தி நிறுவனங்களின் ஒரு பிரிவுகளிடம் இருந்தும், மனித உரிமை மற்றும் சர்வதேச மனித உரிமைகளை கவனிக்கும் இயக்கம் போன்ற அமைப்புகளும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பின் பேச்சாள பெண்மணியான மேரி றொபின்சன் (Mary Robinson) இடம் இருந்தும் அழைப்புகள் வந்துள்ளன. எப்படியிருந்தபோதும், பிரதான அமெரிக்க செய்தியூடக அமைப்புக்கள் புஷ் நிர்வாகத்திடம் இருந்து சமிக்கையை பெற்றுக்கொண்டதுடன் இந்த அழைப்புகளையிட்டு கடினமான முறையில் அக்கறை செலுத்தினார்கள். ஒரு சில கிழமைகளுக்கு முன்னரான ஒரு சுருக்கமான கட்டுரைகளின் பின்னர் அந்த விடயமானது கைவிடப்பட்டது. தாராளவாத பத்திரிகைகளான வாஷிங்கடன் போஸ்ட் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைகள் இந்த விடயத்தை மறைப்பதற்காக ஒன்றிணைந்ததுடன், இந்தக் கொடூரங்களுக்கு தமது பின்னணி ஆதரவையும் கொடுத்தன.

தாராளவாத பத்திரிகைகளின் குற்றச் செயல்களுக்கான உடந்தையானது எதிர்பார்க்கப்படாததாக இருக்கவில்லை மாறாக அது வெளிப்படையாக அறியப்பட்ட ஒன்றாகவே இருந்தது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னர், ஏகாதிபத்திய யுத்தக் குற்றங்களினை பற்றிய சிடுமூஞ்சித்தனமான அவர்களது அலட்சிய போக்கு முன்கூட்டியே வெளிப்படையாகி இருந்தது .

கடந்த ஏப்ரல் 29 இல் வெளியான நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகையின் ஒரு கட்டுரை மற்றும் CBS தொலைக்காட்சி நிகழ்ச்சியான, ''60 நிமிடங்கள் II'' இன் ஒரு அறிக்கை முன்னாள் ஜனநாயாகவாத சட்டமன்ற மேலவை உறுப்பினரும் தற்போது மதிப்புமிக்க New School University இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள றொபேர்ட் கெர்ரி (Robert Kerrey), 1969 இல் தான் பொங் (Thanh Phong) இன் வியட்னாமிய கிராமத்தில் அமெரிக்க கடற்படையின் SEALS குழுவின் தாக்குதலில் பங்குபற்றியிருந்தார் என அம்பலப்படுத்தியிருந்தன. அந்தநேரம், கடற்படை அதிரடிப்படைப் பிரிவின் ஒரு கமாண்டராக கெர்ரி இருந்ததுடன், 21 பெண்களையும், வயதுபோன ஆண்களையும், குழந்தைகளையும் கொலை செய்ததில் பொறுப்பு வகித்தார் என குற்றம் சாட்டப்பட்டார்.

1992 இற்கு முன்னரே கெர்ரியின் பங்கு பற்றிய அறிக்கைகளை பத்திரிகைகள் பெற்றுக்கொண்டிருந்தபோதும், அவை அதை மறைத்து வைத்திருந்தன என்பதும் மிகவிரைவிலே அம்பலப்படுத்தப்பட்டது. இந்த முன்னணி அரசியல் வாதியின் யுத்தக் குற்றங்களின் ஈடுபாட்டின் அம்பலப்படுத்தலானது இறுதியாக வெளிவந்தபோது அது நரம்பை பாதிக்கும் செயலாக இருந்தது. அதற்கு தெளிவற்ற முறையிலும், தவிர்ப்பு மனப்பான்மையுடனும் கெர்ரி பதிலளித்ததுடன் குற்றம் செய்ததை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார், அதேநேரம் நினைவு தவறிவிட்டதாக அறிக்கை விட்டார். அத்துடன் அவர் வியட்னாமிலான அமெரிக்காவின் நோக்கங்களை பேணியதுடன், அந்த நிகழ்வை பற்றிய எந்தவிதமானதொரு விசாரணையையும் இகழ்ச்சியான வகையில் நிராகரித்தார்.

''இடதுசாரி'' மற்றும் வலதுசாரி ஆசிரிய தலையங்கங்களும், முன்னாள் சட்டசபை மேலவை உறுப்பினரின் ஜனநாயக மற்றும் குடியரசு இரு பிரிவினதும் கூட்டாளிகள் உடனடியாக கெர்ரியினை பாதுகாக்க முன்வந்தனர். ஜனநாயக சட்டசபை மேலவை உறுப்பினரும் வியட்னாமிய யுத்தத்தில் பங்குபற்றிய பழைய இராணுவப்படை சேர்ந்தவர்களுமான மக்ஸ் க்லேலான்ட் (Max Cleland) மற்றும் ஜோன் கெர்ரி (John Kerry) இவர்கள் இருவரும் யுத்தக் குற்றத்திற்கான ஒரு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இது ''யுத்தத்தைவிட இராணுவப் படையினரை'' தான் குறைகூறுவதாக இருக்கும் என கூறினார்கள். சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் பூரணமான முறையில் யுத்தத்தின் குற்றம் மிகுந்த பாத்திரத்தினை ஏற்றுக்கொண்டதுடன், ஆனால் அதை மறைப்பதற்காக மட்டுமே இதையொத்த வகையிலான வாதங்களை முன்னெடுத்தார்கள். இந்த வாதத்தின் பிரகாரம், அரசின் செயலாளாரான ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger) மற்றும் ஏனைய அதிகாரிகள், மற்றும் ஜனாதிபதி றிச்சார்ட நிக்சன் போன்றவர்களின் கட்டளைகளைத்தான் ஒரு இளைஞராக இருந்த கெர்ரி பின்பற்றினார், ஆகையால் அவரை குற்றங்களுக்கு பொறுப்பெடுக்கும்படி தூண்டுவதில் எந்தவிதமான காரணமும் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும். கெர்ரியினை குற்றமற்றவர் என விடுவிப்பதில் இருந்து உயர் பதவியில் உள்ளவர்களையும், முழு அமெரிக்க ஆழும் வர்க்கத்தையும் விடுவிப்பதே, இப்படியான முறையிலான ஒரு காரணவிளக்கத்தின் உண்மையான நோக்கமாகும்

உலக சோசலிச வலைத்தளம் கடந்த மே மாதம் 4ம் திகதி கெர்ரியின் பாதுகாப்பானது வியட்னாமில் அமெரிக்கா செய்த குற்றச்செயல்களை நியாயப்படுத்துவதாகும் என குறிப்பிட்டிருந்தது. [ரொபேர்ட் கெர்ரியும் இரத்தம் தோய்ந்த வியட்னாம் மரபு வழியும்]

''வியட்னாமில் கெர்ரியின் பாத்திரம் மீதான பத்திரிகை பாராட்டுமொழி இப்போது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. இப்பொழுது விலக்கி வைப்பதானது ஆளும் வட்டாரங்கள் இதன் மீதான பொதுக்கருத்தை பரிசோதித்துப் பார்க்கின்றன. யுத்தக் குற்றவாளியை அமெரிக்காவின் புகழ்பெற்ற புத்திஜீவித மையம் ஒன்றின் தலைமையில் தக்கவைப்பதில் அவர்கள் வெற்றி பெற்றால், வியட்னாம் யுத்தம் மற்றும் ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையை ஒட்டுமொத்தமாக புதுப்பித்தலில் பலமான தாக்கத்தை கொடுக்கும் '' என நாம் குறிப்பிட்டிருந்தோம்.

''பழைய குற்றங்களில் தான் உடந்தையாக இருந்ததை மூடி மறைக்கவும், புதிய குற்றங்களுக்க வழி அமைக்கவும் ஆகிய இரண்டுக்கும் ஆளும் தட்டு இவ் வரலாற்றை குழிதோண்டிப் புதைக்க முயல்கின்றது. ஏற்கனவே புஷ் நிர்வாகம் சீனாவை மிரட்டி இருக்கிறது, ஈராக்கில் குண்டு வீசி இருக்கிறது, கொலம்பியாவில் தலையீட்டுக்கு அடி எடுத்து வைத்துள்ளது, அணு ஆயுத ஏவுகணை எதிர்ப்பு உடன்பாட்டினை முறித்துள்ளது, மற்றும் வர்த்தகம், சுற்றுச்சூழல் மீதான தன்னிச்சையான நடவடிக்கைகளால் எங்கும் உள்ள தனது சொந்த கூட்டாளிகளை ஆத்திரமூட்டல் செய்து வருகின்றது.'' என கடந்த மே மாதம் 4ம் திகதி உலக சோசலிச வலைத்தளம் விளங்கப்படுத்தியிருந்தது.

கெர்ரியின் பாத்திரம் பற்றிய விடயமானது, ''அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கிறது, நியூயோர்க் தாராளவாதிகள் மத்தியில் இருந்து வந்த பதிலான அமைதி அல்லது அக்கறையின்மையின் பண்பாக்கமானது அமெரிக்க தாராளவாதத்தின் சீரழிவை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றில் ஒரு யுத்தக் குற்றவாளியை உயர் பதவியில் அமர்த்த ஏற்றுக்கொள்வதற்கு தயாரிப்பு செய்துகொண்டுள்ளவர்கள் அனைவரும் நடைமுறையில் எவ்வித கொடூரங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாரிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள்'' எனவும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த எச்சரிக்கையினை உறுதிப்படுத்தலை நாம் காண்பதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. மத்திய ஆசியாவையும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலும் தனது நலன்களை முன்னெடுப்பதற்கான நீண்ட கால இராணுவ திட்டங்களை முன்தள்ளுவதற்கு செப்டம்பர் 11ன் நிகழ்வினை அமெரிக்க ஆளும் வர்க்கம் சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. உலக சோசலிச வலைத்தளம் எச்சரித்தது போல், கெர்ரியினை பாதுகாத்தலானது உண்மையில் புதிய குற்றங்களுக்கான பாதையை திறப்பதற்கே பயன்படுத்தப்பட்டது. இவை இன்று ஆப்கான் நகரங்களான கந்தகார், குண்டுஸ், மாசார்-இ-சாரிப்பில் நடந்தேறின. ஜனநாயகவாதிகளும் மற்றும் தற்கால அமெரிக்க தாராளவாதிகளும் இந்தக் குற்றங்களில் ஆழமான முறையில் பங்கெடுத்திருக்கின்றனர்.

எப்படியிருந்தபோதும், இறுதி ஆய்வுகளில் வியட்னாமிய பாடங்கள் இலகுவாக மறந்துவிடக்கூடியதாக இருக்கவில்லை. ஆளும் வர்க்கமானது அதனது சொந்த ''வியட்னாம் நோய் அறிகுறி'' (Vietnam syndrome), தயக்கத்தை கடந்துவர முடிந்துள்ளதுடன், அதேநேரம் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான ஆதரவையும் கட்டவிழ்துவிட்டுள்ளது. எப்படியிருந்தபோதும், உலக சோசலிச வலைத்தளம் விளங்கப்படுத்தியதுபோல் கெர்ரியின் பாத்திரத்தினை மூடிமறைப்பதுடனான தொடர்பானது, ஒரு ஆரம்பமாகவே இருக்கிறது. யுத்தக் குற்றவாளிகளை மூடிமறைப்பதும், ''தேசிய ஐக்கிய'' த்திற்கான முழக்கமும் அமெரிக்காவினுள்ளே இருந்து வரும் ஆழமான சமூக முரண்பாடுகளை மறைப்பதற்கான திட்டமாக இருக்கின்றன. வெளியில் யுத்தத்தை தொடர்வதும், உள்நாட்டின் பொருளாதார நெருக்கடியும் வியட்னாம் யுத்தகாலத்தினை விட ஒரு பரந்த மட்டத்திலான அரசியல் போராட்டங்களை உருவாக்கும். இதன் விளைவு ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களுக்கு எதிராக நிஜமான போராட்டத்தை முன்னெடுக்கும் சமூக சக்தியை உருவாக்கும்.