WSWS
:செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா
: இந்தியா
War crisis continues
India rejects Pakistani pleas for talks
யுத்த நெருக்கடி தொடர்கிறது
பேச்சுவார்த்தைகளுக்கான பாக்கிஸ்தானிய வேண்டுகோளை இந்தியா நிராகரிக்கிறது
By Keith Jones
9 January 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
பேச்சுவார்த்தைகளுக்கு பாக்கிஸ்தான் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்ததை புதுதில்லி
நிராகரித்ததுடனும் இந்திய-எதிர்ப்பு இஸ்லாமிய படைகளுக்கு எதிராக இஸ்லாமாபாத் எடுத்துள்ள நடவடிக்கைகளை "ஒப்பனை"
என்று அது தள்ளுபடி செய்ததுடனும், இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கொதிக்கும் நிலையில்தான்
இன்னும் இருக்கின்றன. பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் அமைச்சரவைக் குழுவின் திங்கட்கிழமைக் கூட்டத்தைத்
தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த்சிங் பாக்கிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை பொருத்தமற்றது என
விலக்கினார். "மனப்பாங்கில் மாற்றம் இல்லை எனும்பொழுது பேச்சுவார்த்தை பற்றிய எந்த கேள்வியும்" இருக்க
முடியாது என சிங் கூறினார்.
இஸ்லாமாபாத்தின் முன்னுதாரணத்தைப் பின்பற்றவும் பாக்கிஸ்தானின் கிழக்கு எல்லையில் குவித்துள்ள
சுமார் பத்துலட்சம் பேர்படை பலம் கொண்ட இராணுவத்தைத் திரும்பப் பெறவும் பாக்கிஸ்தானிய ஜனாதிபதி ஜெனரல்
பர்வெஸ் முஷாரப்பிடம் இருந்துவந்த வேண்டுகோளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ் பின்னர்
ஏளனப்படுத்தினார். "எங்களை பின்னுக்கு இழுத்துக்கொள்ளச் சொல்வதற்கு இவர் யார்" என்று கேட்டார். "எங்கள்
துருப்புக்கள் முன்னணியில் இருக்கின்றனர்..... அவர்கள் நிலத்தின் கீழான பதுங்கு குழிகளில் இருக்கின்றனர்... அவர்கள்
எங்கு இருக்கிறார்களோ அங்குதான் தொடர்ந்து இருப்பார்கள்" என்றார்.
தீவிர பாக்கிஸ்தான் எதிர்ப்பு கொள்கையாளரான பெர்னாண்டஸ் இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும்
இடையிலான யுத்தம் பரஸ்பர அணு ஆயுதத்தாக்குதலை விளைவிக்கக் கூடும் என்ற பொதுவான அச்சத்தை நிராகரித்தார்.
இந்தியாவின் பதிலடிக்குப் பயந்து அணு ஆயுதத்தாக்குதலை நடத்த பாக்கிஸ்தானுக்கு ஒருபோதும் துணிவில்லை என்று பெர்னாண்டஸ்
வலியுறுத்தினார். "அவர்கள் (பாக்கிஸ்தானியர்) அவர்களின் அணு ஆயுதத்தேர்வை எப்போதும் பயன்படுத்துவார்கள்
என்று என்னால் நம்ப முடியாது" என்று கடந்த வாரம் பெர்னாண்டஸ் கூறினார். "அது இருக்கின்ற பாக்கிஸ்தானின்
அளவை பேரழிவுக்குள்ளாக்கக்கூடிய, இரண்டாவது தாக்குதலுக்கு அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்ற காரணத்தால்"
என்று குறிப்பிட்டார்.
1999-ன் இராணுவ சதியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முஷாரப் மற்றும் இந்தியப்
பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி ஆகிய இருவரும் கடந்த வார இறுதியின் சார்க் (பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய
அமைப்பு) மாநாட்டில் பங்கேற்றனர். இருப்பினும் வாஜ்பாயி 1971 இந்தோ பாக்கிஸ்தான் யுத்தத்திற்குப் பின்னர் தெற்காசியாவில்
பெரிய இராணுவ அணிதிரட்டலை விளைவித்துள்ள, யுத்த நெருக்கடியைப் பற்றிப் பேசுவதற்கு மறுத்தார். இருவரும்
மாநாட்டு அரங்கின் இடைப்பாதையில் பத்து நிமிட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் உதவியாளர்கள்
அவர்களின் பரிவர்த்தனையில் வெளிப்பட்டவை பற்றி மிகவும் வேறுபட்ட விவரங்களை வழங்கினர். முஷாரப் உட்பட பாக்கிஸ்தானிய
அதிகாரிகள் எதிர்பாரா சந்திப்பு "உடைத்துச் செல்ல" மற்றும் சம்பிரதாயமான பேச்சுக்கும் வழிவகுத்தது என்று
கூறுகின்ற அதேவேளையில், இந்திய அரசாங்கப் பேச்சாளர் கலந்துரையாடலானது எந்தவிதமான பதட்டத்தையும் குறைப்பதை
பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று ஒரேயடியாக மறுத்தார். வாஜ்பாயி தன்னும் கூட இச்சந்திப்பை "ஒரு மரியாதை
நிமித்தமான அழைப்பு" என்று விவரித்தார், "முக்கியமான எதுவும் விவாதிக்கப்படவில்லை" என்று மேலும் உதைவிட்டார்.
இரு அரசாங்கங்களும் சார்க் மாநாட்டின் பொழுது, இந்திய வெளிவிவகார அமைச்சர்
சிங்கும் பாக்கிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் அப்துல் சத்தாரும் நடத்திய 45 நிமிட சந்திப்பு பற்றி இதேவிதமான
வேறுபட்ட கண்ணோட்டத்தை எடுத்தன. அச்சந்திப்பு அமெரிக்க அரசு செயலாளர் கொலின் பாவெலது தனிப்பட்ட
வேண்டுதலிலேயே இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில், முஷாராப் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய
போரில் ஈடுபடாமல் எல்லையில் நின்று ஊடாடுதலை முடிவுக்கு கொண்டுவர தாம் ஆர்வம் கொண்டுள்ளதாக சர்வதேச
பார்வையாளர்களை நம்பச்செய்யும் குறிக்கோளுடன் திடீரென சைகை காட்டினார். சார்க் கூட்டத்தின் திறப்புவிழா
நிகழ்ச்சியின் பொழுது, ஜெனரல் இந்திய பிரதமர் அருகே நடந்து சென்று அவரது கையைக்குலுக்கினார், இந்நடவடிக்கையின்
முக்கியத்துவத்தை, பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு நட்புறவுக் கரத்தை நீட்டுகிறது என்று அவரது தொடக்க உரையில் குறிப்பிட்டதில்
கோடிட்டுக் காட்டினார்.
தனது முன்னாள் கூட்டாளியான தலிபான் தோற்று நிலைகுலைந்து ஓடச் செய்யப்பட்டதிலிருந்து
உள்ளம் தடுமாறி இருக்கும் பாக்கிஸ்தானிய ஆட்சியானது, எந்தவிதமான இராணுவ மோதலிலும் இந்தியா தோல்வியாளராக
இருக்கும் என்று பெருமையுடன் கூறி இந்திய அரசாங்கத்தின் போர் அச்சுறுத்தலுக்கு திரும்பத் திரும்ப பதில் கூறியது.
ஆனால் இந்தியாவுடனான முழுவேக யுத்தம் அல்லது நீண்டகாலமாய் விலக்கி வைக்கும் இராணுவ நிலைப்பாடு, பாக்கிஸ்தான்
தனது துருப்புக்களை யுத்தத்துக்கு தயாரான நிலையில் வைத்திருக்க பெருந்தொகையைச் செலவிடுமாறு பாக்கிஸ்தானை
நிர்ப்பந்திக்கும் என முஷாரப் அஞ்சுகிறார் என்பது தெளிவானது. இந்தியா அதனைவிட ஏழு மடங்கு மக்கள்
தொகையைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அது பலமான பொருளாதாரத்தையும் சிறந்த அளவில் வசதிகளைக்
கொண்டிருக்கும் இராணுவத்தையும் கொண்டிருக்கிறது. பாக்கிஸ்தான் பாதிக்கப்படும் நிலையை எடுத்துக் கொண்டால்
-அது அணு ஆயுதத்தை துணையாக நாடும் என்ற கட்டத்தில் --பொதுவாக அதன் அணு ஆயுத இரண்டும் கெட்டான்
நிலை என பொதுவாக அனுமானிக்கப்படுகிறது-- அது இந்தியாவினதை விட மிகக் குறைந்த நிலையில் உள்ளது. உண்மையில்,
இந்தியா போல் அல்லாமல், அணுஆயுத மூலோபாய முதல் தாக்குதல் பற்றி பகிரங்கமாக முன்கூட்டிய உறுதிமொழியைக்
கொடுக்கவில்லை.
பேரினவாதமும் ஆத்திரமூட்டலும்
இந்து பேரினவாத பாரதிய ஜனதாக்கட்சி (பி.ஜே.பி) மேலாதிக்க சக்தியாக
இருக்கும் இந்தியாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் உள்நாட்டை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள வலியுறுத்துவதில்
ஆர்வமாயிருக்கிறது.
செப்டம்பர்11-ன் பொழுது புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை போலியாகப் பாவனை
செய்து, அது பாக்கிஸ்தானை பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு என முத்திரை குத்தியது மற்றும் முடிவில்லாத மற்றும்
அதிகரிக்கும் இறுதிக்கெடுக்களை விடுத்துள்ளது.
வாஜ்பாயி, உள்துறை அமைச்சர் எல். கே. அத்வானி மற்றும் ஏனைய அமைச்சர்களின்
அறிக்கைகள் இந்திய பத்திரிகைகளில் கணிசமான பகுதியினர் வெளிப்படையாகக் கண்டனம் செய்யக்கூடிய அளவுக்கு
ஆத்திரமூட்டலையும் போர்நாட்டத்தையும் கொண்டிருந்தன. மேலும், அவை எதிர்க்கட்சி அரசியல் வாதிகளாலும் கூடபரவலாக
உறுதிப்படுததப்பட்டன. பி.ஜே.பி- இன் பாக்கிஸ்தான் எதிர்ப்பு கூச்சல்கள், அரசாங்கம் பாக்கிஸ்தானுடனான
மோதலை எரியூட்டி வளர்ப்பது உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக என்று அவர்கள் எதிரொலித்தனர்: அதாவது
பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அளவில் அதிகாரம் வழங்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு பொதுமக்களின்
எதிர்ப்பை வெல்வதற்கும் வரவிருக்கும் தேர்தல்களில் இந்திய தேசியவாத/இந்து பேரினவாத அடித்தளத்தில் வெற்றிக்கு
இட்டுச்செல்லவும் ஆகும்.
பி.ஜே.பி. ஆதரவாளர்களை அதிகம் பெற்ற இராணுவ உயர்தட்டின் முக்கிய பகுதிகள்
கூட யுத்தத்துக்கான உணர்வைக் கிளறிவிடுவதாகக் கூறப்படுகிறது. நியூயோர்க் டைம்ஸ் அறிவித்ததாவது: "சில
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூலோபாய வல்லுநர்கள் பாக்கிஸ்தானின் அணு ஆயுத முரட்டுத்தனமான பேச்சு மற்றும்
இந்தியாவை ஒருவகை முடமாக்கப்பட்ட இராட்சதனாக ஆக்கிய வழிமுறை, அதன் பெரிய மரபு ரீதியான இராணுவ பலத்தை
பாக்கிஸ்தானுக்கு எதிராகப் பயன்டுத்தமுடியாது செய்துள்ளது, அது தற்கொலை செய்யும் யுத்த அதிகரிப்புக்கு வழிவகுக்கும்
என்ற அச்சத்தால், என்று பார்ப்பதுடன்... அங்கு ஆழ்ந்த விரக்தி இருக்கிறது."
சமீப நாட்களாக, இந்திய அரசாங்க பிரச்சாரமானது பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள்
என குறிப்பிடப்படும் 20 பேர்களை அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைமீது குவிமையப்படுத்தப்பட்டுள்ளது.
புதுதில்லியின் ஒப்படைக்கப்பட வேண்டியோர் பட்டியலானது சட்ட வேலையின் இழிவான எடுத்துக்காட்டு என்று இந்தியாவிலேயே
விமர்சிக்கப்பட்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் படி, அது "குறைந்த அளவான அல்லது சட்டரீதியான பத்திரங்களினால்
சான்றளிக்கப்படாததுடன் துல்லியமில்லாத மற்றும் தொளதொளப்பான ஒன்று"... ஆகும், அது மோதலை மேலும்
அதிகரிப்பதை நியாயப்படுத்துமாறு பாக்கிஸ்தானின் எதிர்மறை பதிலை புதுதில்லி வரவேற்குமாறு ஆலோசனை கூறும்.
எந்த சம்பவத்திலும், இந்திய அரசாங்கம் எழுப்பும் கோரிக்கை காஷ்மீர் பற்றிய பாக்கிஸ்தானின்
உரிமைக் கோரிக்கையை சீர்குலைக்கும். பாக்கிஸ்தானிய உயர்தட்டினர் கடந்த ஐந்து தசாப்தமாக நாட்டின் குறைந்த
வளத்திலும் கணிசமான பங்கினை அதற்காக செலவிட்டுவந்தது மற்றும் அது பாக்கிஸ்தானிய தேசியவாத சித்தாந்தத்திற்கு
தீர்க்கமானதாக ஆனது. யுத்த அச்சுறுத்தலின்கீழ், 1980 களில் இருந்து இந்திய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரை
நடுங்கவைத்துக் கொண்டிருக்கும் கிளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் பாக்கிஸ்தானிய அரசாங்கம் திரும்பப்
பெறவேண்டும் என்று மட்டும் இந்தியா கோருகிறது. கிளர்ச்சியானது எந்த தனித்தன்மையான வேர்களையும்
கொண்டிருக்கவில்லை, அது ஆரம்பத்தில் இருந்தே குற்றவகையிலானது என்ற இந்து பேரினவாத வலதுசாரிகளின்
கோரக்கையை இஸ்லாமாபாத் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூட அது விரும்புகிறது.
மின்கம்பியின் மேல் முஷாரப்
கடந்த இருவாரங்களாக, டிசம்பர் 13ல் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான
தாக்குதலுக்கு பொறுப்பு என்று புதுதில்லி குற்றம்சாட்டிய இஸ்லாமிய குழுக்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரும்
இந்தியாவின் கோரிக்கையை சாந்தப்படுத்தும் விதமாக இஸ்லாமாபாத் பல நடவடிக்கைகளை எடுத்தது. இஸ்லாமாபாத்
பல நூறு இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைவர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.
முஷாரப் காஷ்மீரிகளைக் கொண்டிராத இந்திய-எதிர்ப்பு கொரில்லா குழுக்களுக்கு
எல்லா உதவிகளையும் நிறுத்துமாறு பாக்கிஸ்தானிய உளவு நிறுவனத்திற்கு அறிவித்து இருக்கிறார் என நியூயோர்க் டைம்ஸ்
மேலும் அறிவித்தது. இருப்பினும், பாக்கிஸ்தானிய செல்வந்தத் தட்டாலும் இராணுவத்தாலும் ஊட்டி வளர்க்கப்பட்டு வந்த
இந்திய- எதிர்ப்பு பகையை, பொதுமக்கள் முன்னர் செல்வாக்கு இழக்காத அளவுக்கு, இஸ்லாமாபாத்தின் கைது நடவடிக்கைகளுக்கும்
இந்தியாவின் கோரிக்கைகளுக்கும் ஒன்றும் தொடர்பில்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அக்கறையின் நோக்கங்
கொண்டது அது என்று கூறியது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்கிஸ்தான் மேலும் நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க
ஜனாதிபதி புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரிடமிருந்து வந்த பகிரங்க அழைப்புகளுக்கு பதிலிறுக்குமுகமாக,
பிளேருடனான சந்திப்பின் முடிவில் திங்கள் அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், பாக்கிஸ்தான் "பயங்கரவாதத்தின்
அனைத்துவடிவங்கள் மற்றும் வெளிப்படுத்தல்களுடன்" பயங்கரவாதத்தை நிராகரிக்கிறது என்று கூறினார். ஆயுதம் தாங்கிய
இஸ்லாமியக் குழுக்களை ஒடுக்குதற்கும் "நமது சமூகத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு இயல்பு நிலைமையை, பொறுமையை
மற்றும் சமநிலையைக் கொண்டுவர" அவரது அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கைகளை விவரித்து அவர் தேசியரீதியான
தொலைக்காட்சி உரையில் குறிப்பிடப் போவதாக அறிவித்தார்.
அதேநேரத்தில், காஷ்மீரில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் ஆயுதக்
குழுக்களின் எந்தவிதமான மற்றும் எப்பொழுதுமான நடவடிக்கைக்கு பாக்கிஸ்தான் பொறுப்பேற்க முடியாது மற்றும்
அவ்வாறு செய்வது இந்திய அரசாங்கத்திற்கு இராணுவ நடவடிக்கைக்கு சைகை காட்டுவதாக இருக்கும் என்பதை அமெரிக்கா
அங்கீகரிக்க வேண்டும் என்று திரும்பத்திரும்ப அமெரிக்காவிற்கு முஷாரப் வேண்டுகோள் விடுத்தார்.
செப்டம்பர் 11க்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் தொடக்க எதிர்வினையானது,
ஆப்கானிஸ்தானுக்கு எந்தவிதமான முன்பின் ஆராயாத அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் ஆபத்தானவகையில் இப்பிராந்தியத்தை
சீர்குலையச்செய்யும் என்பதை தெளிவுபடுத்திய போதும், தெற்கு ஆசியாவில் தற்போதைய நெருக்கடி, வாஷிங்டன்
மற்றும் பிரிட்டனை எச்சரிக்கைகொள்ளச் செய்துள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான டிசம்பர் 13
தாக்குதலுக்குப் பின்னர், புஷ் மற்றும் பிளேயர் அரசாங்கங்கள் இந்திய உபகண்டத்தில் முழுஅளவிலான யுத்தத்தைத்
தவிர்ப்பதற்கு முயற்சிக்கும் ஆற்றொணா நிலையில் உள்ளன, அதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களின் செயல்நோக்கங்கொண்ட
உலக ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு ஆரம்பத்தில் புஷ் நிர்வாகமானது பாக்கிஸ்தான் எல்லையில் ஏதோ ஒருவகை
இராணுவ நடவடிக்கையை எடுக்க இந்தியாவுக்கு ஆதரவு வழங்குவது போல்காணப்பட்டது. பின்னர் பி.ஜே.பி தலைமையிலான
அரசாங்கம் பெரிய அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கலாம் என்று அது உணர்ந்தபொழுது, வாஷிங்டன் அமைதிகாக்க அழைப்பு
விடும் அறிக்கைகளை விட்டது மற்றும் முஷாரப்பைப் புகழ்ந்தது. இப்பொழுது அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் இந்தியா
பக்கம் சாய்ந்து, முஷாரப் காஷ்மீரி கிளர்ச்சியை ஒடுக்கவும் ஒரேயடியான யுத்தத்தைத் தவிர்க்க வேண்டுமானால்
அவர் இந்தியாவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் வேண்டும் என்றும் சொல்வதாக அவர்கள் புதுதில்லிக்கு உறுதி
கொடுத்தனர். கடந்த வாரம் தனது இந்திய விஜயத்தின்போது, பிளேயர் ஐ.நா பாதுபகாப்புச் சபையில் இந்தியாவிற்கு
நிரந்தர இருக்கைக்கான அதன் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்தார் மற்றும் உள்துறை அமைச்சர்
அத்வானி அமெரிக்க-இந்திய உளவு மற்றும் இராணுவ ஒத்துழைப்பினை அதிகரிக்க வாஷிங்டன் சென்றிருக்கிறார்.
இந்த சாய்வுக்குப் பின்னால், புஷ் நிர்வாகத்தின் சிலபிரிவுகள் இந்தியாவுடனான பங்குதாரர்
உறவானது மத்திய மற்றும் தெற்காசியாவில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு தீர்க்கமானது
என்று நம்புகின்றன.
|