WSWS: செய்திகள் & ஆய்வுகள் : ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Former intelligence officer
Bunel jailed
பிரான்ஸ்: முன்னாள் உளவுத்துறை அதிகாரி பூனெல் சிறை வைக்கப்பட்டுள்ளார்
By Francis Dubois & Paul Stuart
21 December 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
முன்னாள் பிரெஞ்சு இராணுவ உளவுத்துறை அதிகாரியான
Pierre Henri Bunel, நேட்டோவின் (NATO)
யுத்த திட்டங்களை 1998 இல் சேர்பியன் உளவுத்துறையிடம் கையளித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். டிசம்பர்
15 இல், நாட்டுக்குத் துரோகக் குற்றம் இழைத்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதால் இராணுவ நீதிமன்றத்தினால்
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் Bunel,
அவருக்கு மேல் சுமத்தப்பட்ட துரோக குற்றச்சாட்டையும், பிரான்சை அவமானப்படுத்தியதையும் கடுமையாக
மறுத்தார். எப்படியிருந்தபோதும், மூன்றுவருட வேலை நீக்கத்துடன், 5 வருட சிறைத்தண்டனை அவருக்கு எதிராக
விதிக்கப்படுவதானது தண்டனையினை தெளிவாக வரையறுக்க தவறியுள்ளது. பத்துமாதங்கள் வழக்குக்காக காத்திருந்ததால்,
பூனெல் 'நிபந்தனையின் கீழ் விடுதலை'' என அழைக்கப்படும் ஒரு முன்கூட்டிய விடுதலைக்கு வேண்டுகோள் விடுக்க இருக்கிறார்.
அவரது வழக்கறிஞரின் கூற்றின் படி, பூனெல் ஒரு வாரங்களுக்குள் விடுதலை செய்யப்படலாம். 1981 ம் ஆண்டு வரையிலிருந்து,
இவர் முகம் கொடுத்த இந்தக் குற்றச்சாட்டுகளானது மரணதண்டனை வரை செல்லக்கூடியது.
விதிக்கப்பட்ட தண்டனையும், வழக்கின் விசாரணையும் ஒரு உயர்மட்டத்திலான ஆழமான
சந்தேகத்தை உருவாக்குகின்றது. இதை வெளிப்படுத்துவதற்கான அச்சத்தின் காரணம், பூனெல் மட்டும் தனியே இதில் செயற்படவில்லை
மாறாக பிரெஞ்சு அரச இயந்திரத்தின் ஒரு கன்னையின் பாகமாக செயற்பட்டார் என்ற உண்மையால் ஆகும்.
Bunel க்கு எதிரான வழக்கானது
இரண்டு வருடங்களாக தயாரிக்கப்பட்டதுடன், அதன்பின்னர் ஒரு குற்றத்தண்டனையுடன் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான்
முடிவடைந்தது. பிரெஞ்சு மக்களிடம் இருந்து வழக்கு விசாரணையை மறைப்பதற்காகத்தான், இந்த வழக்கானது ஒரு
பொது நீதிமன்றத்தில் இருந்து இராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஐக்கிய அமெரிக்க உளவுத்துறையின் முயற்சியினால் முதலில் கைதுசெய்யப்பட்டபோது,
பூனெல் தான் ''மனித அழிவுகளை'' தடுப்பதன் பாகமாகவே நேட்டோவின் யுத்த திட்டத்தை சேர்பியன்
உளவுத்துறையிடம் கையளித்ததாக கூறினார். எப்படியிருந்தபோதும், வழக்கு நெருங்கியவுடன், பூனெல் பிரெஞ்சு இராணுப்பிரிவின்
ஒரு பகுதியின் கட்டளையத்தான் நிறைவேற்றினார் என அவரது வழக்கறிஞர் பிரகடனம் செய்தார். வழக்கின்போது
பூனெல் அதில் ஈடுபட்ட பிரிவான இராணுவ உளவு நிறுவனமான
DST (Defense et securite du territoire)
இன் பெயரைக் குறிப்பிட்டார்.
புரூஷலில், Colonel
Jovan Milanovic யிடம் பூனெல் கையளித்த ஆவணங்கள்,
நேட்டோவின் அடிப்படையான நோக்கத்தையும், அதனது யுத்தத்தின் ஒவ்வொரு திட்டங்களினதும் ''ஒரு தெளிவான படத்தை''
மிலோசோவிக்கின் சேர்பிய அரசுக்கு கொடுத்தது, ஆகையால் இது பிரான்சின் நலன்களுக்கு அச்சுறுத்தலாகும் என
அரச வழக்கறிஞர் பிரகடனம் செய்தார். ''நான் ஒரு துரோகியல்ல.... மிலோசோவிக், கொசோவோவில்
இருந்து வெளியேறுவது மட்டும்தான் ஒரு பாரிய குண்டுத்தாக்குதலை தவிர்ப்பதற்கான ஒரேவழி என்பதை சேர்பிய
உளவுத்துறையிடம் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன்.'' என பூனெல் பதிலளித்தார்.
எப்படியிருந்தபோதும், பூனெலின் கூற்று ''நம்பமுடியாத கட்டுக்கதை'' என பிரகடனம்
செய்த அரச வழக்கறிஞரின் தூண்டுதலின் கீழ், பூனெல் மீண்டும் தனது கதையை மாற்றிக்கொண்டதுடன், இராணுவத்துடன்
தொடர்புபடாத அந்நியப்பட்ட ஒரு தனிமனிதனது நடவடிக்கை போன்றுதான் தனது நடவடிக்கை இருந்தது என சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.
அவரது சாட்சியத்தின் இந்த மாற்றம், பூனெல் தனித்துமட்டும் இயங்கவில்லை மாறாக
உளரீதியாக உறுதியற்றவராக இருந்தார் என்ற அரச வழக்கறிஞரின் வாதத்திற்கு ஆதாரத்தை உருவாக்கியது.
பூனெல் இதையிட்டு எரிச்சல் அடைந்ததுடன், அவரது இராணுவ தொழிலின் மீது ஏமாற்றமடைந்தார். 1975
Saint Cyr
இராணுவ பாடசாலையின் அவருடைய சக அதிகாரிகள் அனைவரும் உயர் அல்லது
துணைத்தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் அளிக்கப்பட்டிருந்தன. பூனெலின் மன குழப்பத்திற்காகத்தான்
''ஒரு உண்மையான இராணுவ தொழிலின் புகழ்'' குற்றம்சாட்டும் வகையில் கொடுக்கப்படுகிறதே ஒழிய அனுபவத்தை
பெற்றுக்கொண்டதற்காக அல்ல.
இந்த நிகழ்வின் கூற்றினை பிரெஞ்சு பத்திரிகைகள் சவால் செய்யாததுடன், பூனெலின்
நடவடிக்கைகளுக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான தொடர்பை தெளிவாக அம்பலப்படுத்திக்காட்டுவதற்கு
எந்தவொரு அக்கறையுடைய விசாரணையையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் அவரை ஒரு கேளிக்கையான
நபராக நடாத்தினர்.
எப்படியிருந்தபோதும், பூனெல் பிரெஞ்சு இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நபர்
ஆவார். அவரது கைதுக்கும் வழக்குக்கும் முன்னர், DST
இன் அடுத்த தலைவராக பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். பிரான்சின்
உயர் பதக்கத்தை பெற்றவரும், சோமாலியா, ஈராக், ருவாண்டா, பொஸ்னியா மற்றும் யூகோஸ்லாவியா மீதான
பிரெஞ்சு மற்றும் நேட்டோவின் இராணுவ நடவடிக்கையில் அனுபவமிக்க மூத்த அதிகாரியாக இருந்தார்.
1990-91வளைகுடா யுத்தத்தின் பின்னர், ஐக்கிய அமெரிக்க தளபதி
Norman Schwarzkopf
யினால் கெளரவிக்கப்பட்ட நான்கு பிரெஞ்சு அதிகாரிகளில் ஒருவருமாவார். அத்துடன்,
ஐரோப்பிய விரைவு நடவடிக்கைப்படை நிறுவப்பட்டபோது இவர் ஒரு உயர் அதிகாரியாக அதில் பங்குகொண்டிருந்தார்.
ஒரு வெறுப்படைந்த தனிநபராக தனியாக செயற்பட்டார் என நீதிமன்றத்தில் வரையப்பட்ட
படத்திற்கு இந்தவகையான சாதனைப் பதிவுகள் ஒத்துவரவில்லை.
அவரது சாட்சியத்தை அவர் உண்மையில் மாற்றியிருந்தபோதும், அது ஒரு இலகுவான
தண்டனையை பெற்றுக்கொள்வதற்காக இருந்திருக்கலாம். பூனெல், தான் ஒரு துரோகியாக இருந்தார் என்பதை தொடர்ச்சியாக
நிராகரித்தார். அதற்கு பதிலாக, தனது நடவடிக்கை ஒரு தொழில்ரீதியான தவறு என அழைத்தார். வழக்கின்
போது, பூனெலின் வழக்கறிஞர் பூனெலுடன் நெருக்கமாக பணிபுரிந்த ஓய்வபெற்ற மூன்று பிரெஞ்சு தளபதிகளை சாட்சியத்திற்காக
அழைத்திருந்தார்.
''பூனெல், குற்றம்சாட்டப்பட்ட விடயத்தை செய்யும் ஆற்றல் கொண்ட ஒரு
நபர் என நான் கருதவில்லை.' என சவுதி அரேபிய பிரெஞ்சு படையினதும் மற்றும் வளைகுடா யுத்தத்தின் பிரெஞ்சு
படையின் மாஜி தலைவராக இருந்த தளபதி Michel
Roquejoffre கூறினார். ''பூனெல் பிரான்சின் சேவைக்கு பற்றுள்வராக
இருந்த ஒரு பாரம்பரிய அதிகாரி... நான் கருதுகிறேன் அவர், விடயங்களானது மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றன
என்பதை சேர்பியர்களுக்கு காட்ட விரும்பியிருக்கலாம்'' என ஓய்வு பெற்ற தளபதியான
Guy le Pichon
தெரிவித்தார். தளபதி Rideau
க்கு
கீழ்தான் பூனெல் பொஸ்னியாவில் பணிபுரிந்தார். இவர், பூனெலின் ''மாபெரும்
கலாச்சாரத்தை'' சுட்டிக்காட்டியதுடன், ''மிகத்திறமை வாய்ந்த ஒரு உளவு அதிகாரியாக இருந்தார்'' எனக் குறிப்பிட்டார்.
பூனெலின் மீது சுமத்தப்பட்ட சேர்பியர்களுக்கு ஆதரவான உணர்வு பற்றி குறிப்பிட்டபோது, ''இப்படியான
குற்றச்சாட்டு திட்டவட்டமான முறையில் யூகோஸ்லாவியாவில் பணிபுரிந்த அனைத்து பிரெஞ்சு படைகளுக்கும் நேரடியாக
சமப்படுத்தபடுகிறது'' என Rideau
குறிப்பிட்டார்.
றிடோ இங்கே உண்மையைச் சொல்கிறார். பூனெல் சேர்பிய ஆதரவு உணர்வாலோ
அல்லது மனிதாபிமானத்தை ஏற்றுக்கொண்டதாலோ இதைச்செய்யவில்லை. பூனெல் அண்மைய ஞாபகத்தில் இருக்கும் சில
--ஈராக்கின் அழிப்பு, றுவான்டா படுகொலை, பொஸ்னிய இனச் சுத்திகரிப்பு-- கொடூரமான மக்கள் படுகொலைகளில்
பங்கெடுத்தவர் ஆவார். பூனெல் தெளிவான முறையில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாகமாக பணியாற்றியவர். அவர்,
சேர்பிய உளவுத்துறையை சந்திக்கும்படி பிரெஞ்சு உளவுத்துறையினால் கேட்டுக்கொள்ளப்பட்டார் என்பது உயர்ந்த முறையில்
சாத்தியமான ஒன்றே, அவரின் நடவடிக்கை அமெரிக்க உளவுத்துறையினால் கண்டுபிக்கப்பட்டதனால் மட்டுமே அவர்
கைதுசெய்யப்பட்டார்.
பால்கனில் அமெரிக்க செல்வாக்கை கீழ்மைப்படுத்த முயன்ற தடயங்களின் பதிவுகளை
பிரெஞ்சு இராணுவ உளவுத்துறை கொண்டிருக்கின்றது. 1998 அக்டோபரில் பூனெலின் கைதைத் தொடர்ந்து, நேட்டோ
குண்டுத்தாக்குதல் நடவடிக்கை மார்ச் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதன் முதல் நடவடிக்கையாய்,
அமெரிக்க குண்டுவிமானங்கள் பெல்கிராட்டில் இருந்த சீன தூதரகத்தை அழித்தது. அமெரிக்கா, தூதரகத்தை வேண்டும்
என்றே தாக்கியது என்பதற்கு தம்மிடம் சாட்சியம் இருப்பதாக பிரெஞ்சு இராணுவ உளவுத்துறையினுள் பெயர் குறிப்பிடாத
ஒரு செய்தி இருந்துவந்தது.
பிரான்சின் சர்வதேச விடயங்களுக்கான மையத்தின் பிரதிநிதியான
Jacques Rupnik
ஐ 1999 டிசம்பரில் பேட்டி கண்டதில், ''பால்கனில் அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாய் இருக்கிறது என்ற
சித்தப்பிரைமயை பிரான்ஸ் உணர்கிறது... அமெரிக்கா பால்கனில் ஒரு ஆளுமையான சக்தியாய் தன்னை ஸ்தாபித்துவிட்டதுடன்,
பால்கனில் பிரெஞ்சு நிலைப்பாடானது பலவீனப்பட்டுள்ளது என பிரான்ஸ் உணர்கிறது. ''இன்னொரு பிரெஞ்சு வெளிநாட்டுக்
கொள்கையின் முன்னணி நிபுணரான Dominique Moisi
கருத்து தெரிவிக்கையில், ''பல எண்ணிக்கையாலானதாக இருக்கின்ற
சேர்பியர்களுடனான பிரெஞ்சின் உடந்தையின் நிகழ்வுகள் ஒரு வகைப்பட்ட போக்காகத்தான் வரையறை செய்யப்படவேண்டும்...
உண்மையில் பிரெஞ்சு ஒரு தேசம் என்ற முறையில் சேர்பிய தேசத்தை கட்ட உதவிசெய்ய வேண்டும் என உணர்வதுடன்,
சேர்பியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஒரு சிறப்புரிமை வாய்ந்த உறவு இருந்து வருகின்றது.''
பால்கனிலான அவரது நடவடிக்கைகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல்
பிரெஞ்சு இராணுவ அதிகாரி பூனெல் ஆவார். அத்துடன், 1997 கோடையில் யுத்தக் குற்றத்திற்காக பொஸ்னியன் சேர்பிய
தலைவர் Radovan Karadzic
கைது செய்வதற்கான நேட்டோவின் ஒரு திட்டம் இருந்தது. இதனை மேஜர்
Hervé Gourmillon, Karadzic
இக்கு அவர் ஆபத்தில் இருக்கிறார் என
எச்சரித்ததால் தான் தடைப்பட்டுப்போனது என்ற குற்றச்சாட்டும் கூட இருந்து
வந்தது.
ஆகையால், பூனெல் DST
இன் கட்டளையின் கீழ்தான் உண்மையில் அந்த ஆவணங்களை சேர்பிய
அதிகாரியிடம் கையளித்தார் அல்லது இதை அமெரிக்க மேலாதிக்கத்தின் பலப்படுத்தல் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்
நலனுக்கு ஒரு ஆபத்தானது என்ற தமது வெறுப்பைக் காட்டவே அரசின் சில ஏனைய பிரிவு கட்டளையிட்டிருக்கலாம்
என்பதும் முற்றாக சாத்தியமானதே.
|