WSWS
:செய்திகள்
& ஆய்வுகள் :
நான்காம் அகிலம்
Ernest Mandel, 1923-1995
A critical assessment of his role in the history of the
Fourth International
ஏர்னஸ்ட் மண்டேல் 1923-1995
நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது பாத்திரம் பற்றிய ஒரு விமர்சன
ரீதியான மதிப்பீடு
23 October 1995
By David North
Use
this version to print |
Send this link by email
| Email the author
Part 1 |
Part 2 |
Part 3 |
Part 4
பப்பிலோவாதத்தின் தோற்றம்
THE EMERGENCE OF PABLOISM
நான்காம் அகிலத்தினுள்ளான மாற்றங்கள்
Shifts in the Fourth International
இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் ஏர்ணஸ்ட் மண்டேலினது நிலைப்பாட்டில்
மட்டுமல்லாது நான்காம் அகிலத்தின் பாரிய பகுதியினரிடையேயும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்தது.
1946-47ல் மண்டேலால் முட்டாள்தனமானது என குறிப்பிடப்பட்ட கருத்துக்களுக்கு அடுத்து வந்த வருடங்களில் அவரே
அடிபணிந்து போனார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் 1940 இறுதிக்காலப் பகுதியில்
நான்காம் அகிலத்தினுள் தோன்றிய நெருக்கடிகளின் பிரதிபலிப்பாகும்.
நான்காம் அகிலத்தின் உள்ளேயான அரசியல் நெருக்கடிகளுக்கான காரணத்தை உலக
நிலைமையின் பொது வளர்ச்சியின் தொடர்புகளுக்கு வெளியே காணமுடியாது. முதலாவதாக 1948ல் ஆரம்பத்தில் இரண்டாம்
உலக யுத்தத்தின் பின்னர் மேற்கு ஐரோப்பாவை பயமுறுத்திக் கொண்டிருந்த சோசலிசப் புரட்சியின் அபாயத்தின்போது
இது தெளிவாக வெளிவந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழுமையின் கீழும் அதன் மார்ஷல் திட்டத்தின் கீழும் முதலாளித்துவம்
ஒருவகை சமநிலையை அடைந்தது. தொழிலாள இயக்கம் பின்னடைந்ததுடன், அதன் அரசியல் முன்னெடுப்புக்கள் அனைத்தும்
ஸ்ராலினிசத்தினதும் சமூக ஜனநாயகத்தினதும் உதவியுடன் முதலாளித்துவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
தொழிலாள வர்க்கத்திற்கு துரோகங்களை செய்தபோதிலும், நாசி ஜேர்மனிக்கு எதிரான
வெற்றியானது சோவியத் அதிகாரத்துவத்திற்கு மதிப்பையும் தொழிலாள வர்க்கத்தின் ஆதரவையும் பெற்றுக்கொடுத்தது.
அது பிரான்சிலும், இத்தாலியிலும், பாசிச எதிர்ப்பு இயக்கங்களின் முன்னணியில் இவர்கள் இருந்ததுடன், சோவியத் யூனியன்
மீதான நாசிப்படையெடுப்பு தாக்குதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் ஸ்ராலினிஸ்ட்டுக்கள்
தொழிலாள வர்க்கத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாகினர். மார்ஷல் திட்டத்தின் நடைமுறைப்படுத்தலால்
கிழக்கு ஐரோப்பாவில் தொழிற்துறைகளின் தேசியமயமாக்கல் தீவிரமயமாக்கப்பட்டது. யூகோஸ்லாவியாவில்
டிட்டோவின் அரசு ஏற்கனவே தொழிற்துறைகளை தேசியமயமாக்கலில் ஈடுபட்டிருந்தது. அதேவேளை ஆசியாவில் முக்கியமாக
சீனாவிலும், பிரான்சிலும், இந்தோனேசியாவிலும் ஸ்ராலினிசக் கட்சிகளின் அரசியல் ஆழுமை வேகமாக வளர்ந்தன.
டிட்டோவின் யூகோஸ்லாவியாவிற்கும் கிரெம்ளினுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு
1948ல் ஒரு வித்தியாசமான வழியில் நான்காம் அகிலத்தினுள் அரசியல் நெருக்கடிக்கான காரணமாகியது. ஆரம்பத்தில்
சரியாக நான்காம் அகிலம் டிட்டோவின் அரசை விமர்சனத்துடன், கிரெம்ளினின் ஆத்திரமூட்டல்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும்
எதிராக அதனை பாதுகாத்தது. அதேவேளை ஒரு தேசிய முன்னோக்கின் மூலமாகவோ அல்லது யூகோஸ்லாவிய பாணியிலான
தனி ஒரு நாட்டு சோசலிசம் மூலமாகவோ கிரெம்ளினின் பயங்கர ஆட்சிக்கு எதிராக போராட முடியாது எனவும்,
ஒரு நீண்டகாலப் போக்கில் தேசிய நலன்களைக் கொண்ட முன்னோக்கினால் சோவியத் யூனியனுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும்
இடையேயான சூழ்ச்சிகளை தொடர்ந்து செய்யமுடியாது எனவும் எச்சரித்தது. ஒரு சர்வதேசப் புரட்சி முன்னோக்கு
இல்லாது யூகோஸ்லாவிய அரசின் நலன்களை சோவியத்தின் அழுத்தங்களுக்கும், சதிகளுக்கும் எதிராக பாதுகாக்க
முயல்வது தவிர்க்கமுடியாதபடி ஏகாதிபத்திய அரசுகளுடன் ஓர் கொள்கையற்ற பாதிப்பு மிகுந்த உடன்பாட்டிற்கே
இட்டுசெல்லும் எனவும் குறிப்பிடப்பட்டது.
ஸ்ராலினிஸ்டுகளுக்கு இடையேயான முதலாவது பாரிய பிளவினுள் நான்காம் அகிலத்தின் தலையீடு
நெருக்கடியான நிலையில் சரியானதாயும் கொள்கையடிப்படையிலும் இருந்தது. இந்நெருக்கடி 1923ல் இருந்து ஸ்ராலினிசத்துக்கு
எதிரான இவ்வியக்கத்தின் போராட்டத்தின் அடிப்படைகளை சர்வதேசரீதியாக எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பத்தை
வழங்கியது. அதற்கு மேலாக டிட்டோவால் செய்ய இயலாததையும், முடியாததையும் நான்காம் அகிலத்தால் செய்யமுடியும்
என்பதை அதாவது ஸ்ராலினிசத்தினதும், கிரெம்ளின் அதிகாரத்துவத்தினதும் எதிர்ப்புரட்சி தன்மைதான் சோவியத் யூனியனில்
யூகோஸ்லாவியா மீதான தாக்குதற்கு காரணம் என்பதையும் விளங்க வைக்க கூடியதாக இருந்தது.
எப்படியிருந்தபோதும் யூகோஸ்லாவியாவின் அபிவிருத்திகள் நான்காம் அகிலத்தினுள் சந்தர்ப்பவாத
போக்குகள் தலையெடுக்கும் நிலைமைகளை தோற்றுவித்தது. நான்காம் அகிலத்தினுள் கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த
தேசியமயமாக்கல், ஸ்ராலினிசம் தொழிலாளர் அரசுகளை உருவாக்கும் என்ற ஊகங்கள் ஏற்கனவே இருந்து வந்தது. இப்போது
யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி கிரெம்ளினுக்கு அடிபணிய மறுத்தமை ஸ்ராலினிச கட்சிகள் சுயசீர்திருத்தங்களுக்கு உள்ளாகும்
என்பதற்கு அடையாளமாகும் என்ற நிலைமை தோன்றியது. இது ஸ்ராலினிஸ்டுக்களால் உருவாக்கப்பட்ட அரசுகளின்
தன்மை தொடர்பாக நான்காம் அகிலத்தினுள் ஒரு விவாதத்திற்கு வழியை திறந்தது. ஒரு நீண்ட விவாதத்தின் பின்னர்,
நான்காம் அகிலம் கிழக்கு ஐரோப்பிய அரசுகளை "உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்"
(Deformed Workers States) என வரையறுப்பது
என்ற உடன்பாட்டிற்கு வந்தது.
கிழக்கு ஐரோப்பிய அரசுகளின் தன்மைகள்
The nature of the Eastern European states
இந்த புதிய பதத்தின் அர்த்தம் என்ன? பல வருடங்களாக நான்காம் அகிலம் சோவியத்
யூனியனை சீர் குலைந்த தொழிலாள வர்க்க (Degenerated
Workers State) அரசு என வரையறுத்து வந்தது. அதாவது வெற்றிகரமான தொழிலாள வர்க்கப்
புரட்சியின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட அரசு எனவும், அதன் அரசியல் கட்டமைப்பும் சோவியத் அரசின் அமைப்புக்களும்
மிகவும் மோசமான சீரழிவுக்குள் சென்றது. அரசும் கட்சியும் அதிகார மயமாக்கப்பட்டதனால் தொழிலாள வர்க்கத்தின்
ஜனநாயக தன்மைகள் ஒடுக்கப்பட்டன. அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட புதிய தேசியமயமாக்கப்பட்ட
சொத்துடமை முறையை அரசு பாதுகாக்கும்வரை சோவியத் யூனியன் ஒரு தொழிலாளர் அரசாக இருக்கும். எப்படியிருந்தபோதும்
அரசியல் அதிகாரம் அதிகாரத்துவத்தினால் பறிக்கப்பட்டமையானது, சமூக சமத்துவம் இன்மையின் வளர்ச்சியை மீண்டும்
கொண்டுவந்தது. தமது சடத்துவ வளங்களை பாதுகாக்கும் ஆளும் அதிகாரத்துவத்திற்கும் திட்டமிட்ட விஞ்ஞானபூர்வமான
பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கும் இடையேயான முரண்பாடு அதிகரித்து இவைகள் அனைத்தும் சீரழிவின்
போக்கையும் சோவியத்தின் உடைவிற்கும் முதலாளித்துவ மறுசீரமைப்புக்குமான நிலைமைகளை எடுத்துக்காட்டின.
இந்த வரையறுப்பினூடாக எடுத்துக்காட்டப்பட்ட அரசியல் கடமை என்னவென்றால், சோவியத்
அரசின் இந்த சீரழிவை நிறுத்துவதும், அதனை எதிர்த் திசையில் கொண்டு செல்வதும் ஆகும். அதாவது ஒரு அரசியல்
புரட்சி மூலம் கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் ஆட்சியினை தூக்கிவீச ஒழுங்கமைப்பதும் அதனை முன்கொண்டு செல்வதும் இதன்
மூலம் சர்வாதிகார ஒடுக்குமுறை அமைப்புக்களை இல்லாது செய்வதும் இதன் அடிப்படையில் 1917க்கு பின் தோன்றிய
தேசியமயமாக்கப்பட்ட சொத்துடமை முறையை உண்மையான சோசலிச சர்வதேச அடித்தளத்தில் பாதுகாத்தலும் அபிவிருத்தி
செய்வதும் ஆகும்.
உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள் என்ற பதம் இயற்கையாகவே வித்தியாசமான
அர்த்தங்களை கொண்டுள்ளது. இதுவரை தொழிலாளர் அரசு என்ற கருத்து அதன் பின்விளைவுகள் என்னவாக
இருந்தபோதும், சோசலிசப் புரட்சியால் உருவாக்கப்பட்ட அரசு என்பதாகும். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள எந்த
ஒரு அரசும் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றிகொண்டதால் உருவாகியது அல்ல. யூகோஸ்லாவியாவில்
கூட பாட்டிசன் இயக்கம் கிராமப்புற குட்டி முதலாளித்துவத்தை அடித்தளமாகக் கொண்டதாகும்.
சோசலிச தொழிலாளர் கட்சியின்
(SWP) ஏனைய தலைவர்களுக்கும் அல்லது ஜேம்ஸ் பீ கனனுக்கும் (James
P Cannon) ஸ்ராலினிஸ்டுகளால் பால்கனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் உருவாக்கப்பட்ட அரசுகளை எவ்வாறு
பொருத்தமாக வரையறுப்பது என்ற கவனம், எவ்வகையிலும் அடிப்படை மார்க்சிச கொள்கைகளையோ அல்லது
நான்காம் அகிலத்தின் வரலாற்று முன்னோக்கையோ மறுதலிப்பதற்கான ஆரம்பமாக இருக்கவில்லை.
இறுதியாக சோசலிச தொழிலாளர் கட்சி இப் புதிய அரசுகளை உருக்குலைந்த
தொழிலாளர் அரசு என வரையறுப்பது என்ற முடிவிற்கு வந்தனர். கனனுக்கும் ஏனையவர்களுக்கும் கிழக்கைரோப்பாவின்
அபிவிருத்திகள் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சித்தன்மை தொடர்பான ட்ரொட்ஸ்கிச ஆய்வுகளை முரண்பாடடைய செய்யவில்லை.
இப் புதிய வரைவிலக்கணம் சரியாகவும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயேயும் பிரயோகிக்கவேண்டும். அரசினால் செய்யப்பட்ட
தேசிய மயமாக்கல்கள் தனித்த பொருளாதார வழியில் பார்த்தால் முற்போக்குத் தன்மை உள்ளது எனவும் உற்பத்தியில்
தனியார் சொத்துடமையை புனரமைப்பதற்கு எதிராக பாதுகாக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டனர். அதற்கு
மேலாக இவ்வரையறுப்பு ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தாக்குதலில் இருந்து இவ்வரசுகளை பாதுகாக்கும் பொறுப்பை
நான்காம் அகிலத்திற்கு கொடுத்தது. இந்நிலைப்பாடு, சட்மனின் (Shachtmann)
தொழிலாளர் கட்சியால் (Workers Party) முன்வைக்கப்பட்ட
''தேசிய ஜனநாயக அரசியல் புரட்சி'' என்ற கோசத்தின் கீழ் "சுதந்திர போலந்து நீடூடி வாழ்க'' என்பதற்கு
முழு எதிரானதாகும்.
அதேவேளை "உருக்குலைந்த" என்ற சொற்பிரயேகமானது சோவியத் யூனியனுக்கும், ஏனைய
கிழக்கைரோப்பிய அரசுகளுக்கும் இடையேயான முக்கிய அடிப்படையான வித்தியாசங்களை வெளிப்படுத்தவும் வழியாக
இருந்தது. சோவியத்யூனியன் தொழிலாள வர்க்கத்தின் புரட்சியின் விளைவாகும், ஏனையவை அப்படியானவையல்ல அவற்றின்
தோற்றத்தில் இருந்தே அவை உருக்குலைந்து இருந்தமையும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகாரத்துவத்தின்
குரல்வளைப் பிடியும் இந்த அரசுகளுக்கு ஒரு உறுதியற்ற வரலாற்று தன்மையை வழங்கியிருந்தது. நான் இதனை "The
Heritage We Defend" என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறேன்.
"அதாவது இவ்வரசுகளுக்கு ஒரு புதிய வரலாற்றுத் தோற்றத்தை வழங்குவதை விட்டு
உருக்குலைந்தது என்ற வரையறுப்பானது, ஸ்ராலினிசத்தின் வரலாற்று ரீதியான இயலாமையைக் காட்டுவதும், ஒரு உண்மையான
மார்க்சிச தலைமையை கட்டியெழுப்பவேண்டியதன் தேவையையும், அரசியல் புரட்சியின் அடித்தளத்தில் ஆளும் அதிகாரத்துவத்திற்கு
எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும், ஒரு உண்மையான தொழிலாளர்களின் அதிகாரத்துக்கான அமைப்புக்களை
உருவாக்குவதும், அரச அமைப்பினுள்ளும், பொருளாதாரத்திலும் பழைய முதலாளித்துவம் விட்டுச்சென்றுள்ள மிச்சசொச்சங்களை
அழிப்பதும் ஆகும். (The Heritage We Defend [Detroit:
Labor Publications, 1988], p. 179).
கிழக்கு ஐரோப்பிய அரசுகளை எவ்வாறு சரியாக வரையறுப்பது என்பது, வெறும்
சொற்கள் சம்பந்தப்பட்ட விவாதம் அல்ல. ட்ரொட்ஸ்கி ஒரு தடவை அவதானித்தது போல் அரசியலில் ஒவ்வொரு
சொற்பிரயேகத்திற்கு பின்னும் ஒரு வரலாற்று உள்ளடக்கம் உள்ளது. நான்காம் அகிலத்துடன் பரீட்சயமான அனைவருக்கும்,
கிழக்கு ஐரோப்பாவில் ஏதோ ஒருவகையில் உருவாக்கப்பட்ட தொழிலாள அரசுகளின் போக்கு, நான்காம்
அகிலத்தினுள் சந்தர்ப்பவாதப் போக்குகளையும் அதற்கு அடிபணிவையும் உருவாக்கியது என்பது தெரிந்திருக்கும். கிழக்கு
ஐரோப்பிய அரசுகள் தொடர்பான புதிய வரையறுப்பானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினது முற்போக்கினையும் அடிப்படையினையும்
திரிபுபடுத்தும் போக்கிற்கான ஆரம்ப புள்ளியாக இருந்தது.
பப்லோவாத முன்னோக்கு
The Pabloite Perspective
இந்தப் புதிய முன்னோக்கின் வரைபுகள் நான்காம் அகிலத்தின் செயலாளரான மைக்கல்
பப்லோவால் (Michel Pablo) 1949 செப்டம்பர்
மாதம் எழுதப்பட்ட கட்டுரையில் வெளிவந்தது. அவர் "சோசலிசமானது, பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த மற்றும்
அரசியல் இயக்கம் என்ற ரீதியிலும், அதேபோல ஒரு சமூக அமைப்பு என்றரீதியிலும் அது இயல்பாகவே சர்வதேச
மயமானதும், பிரிக்கமுடியாத ஒன்றும் ஆகும். இந்தக் கருத்துரு எமது இயக்கத்தின் அத்திவாரத்தில் உள்ளது. இந்த
ஒன்றின் அடிப்படையில் மட்டுமே மனித இனத்தின் சோசலிச வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்யும் நனவான பரந்த மக்கள்
இயக்கத்தை கட்ட முடியும்.
ஆனால் இதனை மனதில் கொண்டிருந்த பொழுதும், எது உண்மையாக இருப்பதென்றால் முதலாளித்துவத்திலிருந்து
சோசலிசத்திற்கு இடைமருவும் வரலாற்றுக் காலப்பகுதி முழுவதும், நமது ஆசான்கள் எதிர்பார்த்தை விட நாம் மிகவும்
வளைவு நெளிவு மிக்க மற்றும் சிக்கல் மிக்க வளர்ச்சியை எதிர்கொள்வோம் என்பதும், இது நூற்றாண்டுகளுக்கு
நீடிக்கக்கூடிய ஒரு காலப்பகுதி யாக இருக்கலாம் என்பது உண்மையாக உள்ளது. தொழிலாளர் அரசுகள் வழமையானது
அல்லாமல் தவிர்க்கமுடியாது கணிசமான அளவு உருக்குலைந்ததாகவும் இருக்கும்.
(SWP International Information Bulletin,
December 1949, p. 3).
இந்த முன்னோக்கானது முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு வரலாற்று ரீதியான
மாறுதலுக்கு ஒரு புதிய கொள்கையை வழங்கியதுடன், இதற்கு காரணமாகிய ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு சுயாதீனமான
முற்போக்கான பாத்திரத்தை வழங்கியது. இதேமாதிரியான நிலைப்பாடு வேறொரு வித்தியாசமான முறையில்
1939-40 களில் சட்மன், பேர்ன்ஹாம் இனால் நான்காம் அகிலத்தினுள் முன்வைக்கப்பட்டது. இதுவும் கூட அதிகாரத்துவத்திற்கு
உலக வரலாற்றுப் பங்கு உள்ளதெனவும் ஒரு புதிய அதிகாரத்துவ கூட்டு சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற
அணுகு முறையை உருவாக்கியது. இப்போது பப்லோ கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவாக்கப்பட்ட உருக்குலைந்த
தொழிலாளர் அரசுகள் பல பத்துவருடங்கள் உயிர்வாழும் எனவும் இது முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு
வரலாற்று ரீதியாக மாறிச்செல்லும் தன்மையைக் கொண்டிருக்கும் எனவும் கருதுகிறார்.
சோவியத் அரசு தொடர்பாக ட்ரொட்ஸ்கி ஆய்வு செய்கையில், அவர் எப்போதுமே
அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறிச்செல்லும் உள்ளார்ந்த போக்குகளின்
வெளிப்பாடுதான் காரணம் அல்ல என்றும் மாறாக இது அக்டோபர் புரட்சியின் பின் சோவியத் யூனியன் எதிர்நோக்கிய
பிரத்தியேக நிலைமையின் காரணமாகவே என வலியுறுத்திவந்தார். அதாவது
1) ரஷ்ய பொருளாதாரத்தின் மிக பின்தங்கிய நிலைமை.
2) 1918-21 உள்நாட்டு நிலைமைகள் உருவாக்கிய அழிவுமிக்க நிலைமைகள்.
3) மேற்கு ஐரோப்பாவிலும், சீனாவிலும் சோசலிச புரட்சி தோல்வியடைந்து போனதனால்,
சோவியத் அரசின் மீதான முதலாளித்துவ சுற்றி வளைப்பு மேலும் விஸ்த்தரிக்கப்பட்டது.
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி
இருக்குமானால் அது பயங்கரமான ஸ்ராலினிசம் உருவாகுவதற்கான நிலைமையை எதிர்கொள்ளவேண்டியிருந்திராது.
பப்லோவின் புதிய ஆய்வுகள் இதற்கு மாறாக ஸ்ராலினிசம் வரலாற்று ரீதியாக சோசலிச மாற்றத்திற்கான உலக
ரீதியான தன்மைகளைக் கொண்டிருந்தது என கூறிப்பிடுகின்றது.
இசாக் டொச்சரின் பங்களிப்பு
The Contribution of Isak Deutscher
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல, நான்காம் அகிலத்தினுள்ளே விவாதம்
நடைபெற்ற காலகட்டம், சோவியத் யூனியனின் ஆளுமையும் மதிப்பும் பாரியளவில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த காலப்பகுதியாகும்.
புத்திஜீவிகள் மத்தியில் முக்கியமாக ஐரோப்பாவில், ஸ்ராலினிச அரசுகள் தொடர்பாக ஒரு புது அணுகுமுறை தோன்றியது.
எவ்வளவு குற்றச்செயல்களை இவ் அரசுகள் செய்திருந்தாலும், சோவியத் யூனியனின் பாரிய வெற்றி, ஸ்ராலினின் முக்கிய
வரலாற்று முடிவை நோக்கி சிக்கலான வழியில் செல்லும் ஒரு கருவியாக இருக்கவில்லையா? எவ்வளவுக்கு மோசமான
முரட்டுத்தனமான வழிமுறைகளை ஸ்ராலின் கையாண்டாலும் அவைகள் சோவியத் யூனியனை சோசலிசத்தை நோக்கி
கொண்டுசெல்லவில்லையா? பாரிய கொலைகளும், பொய் வழக்குகளும் உண்மையாக இருந்தபோதும் சோவியத் அரசு,
தனது சமூகத்தை ஒன்றிணைத்து, இது ஸ்ராலின்கிராட்டின் வெற்றி நோக்கி செல்லவில்லையா? முட்டைகளை உடைக்காமல்
பொரியல் செய்ய முடியாது என்பது உண்மையல்லவா? இவற்றில் இசாக் டொச்சரால் 1949ல் எழுதப்பட்ட ஸ்ராலினின்
சுயசரிதை இந்த அரசியல் குணநலரீதியான சார்புரீதியான உண்மையை திரித்த ஆதிக்கம் மிகுந்த உதாரணமாக
இருந்தது.
டொச்சர் 1930 காலப்பகுதியில் போலந்தில், ட்ரொஸ்கிச இயக்கத்தில்
இணைந்திருந்தார். அவர் நான்காம் அகிலம் அமைக்கப்படுவதை உறுதியாக எதிர்த்ததுடன் 1938ம் ஆண்டு செப்டம்பரில்
நான்காம் அகில நிறுவன மாநாட்டில், போலந்து பிரதிநிதிகள் அதற்கு எதிராக வாக்களிப்பதற்கான விவாதங்களை
உருவாக்கியதில் முக்கிய பங்குவகித்தார். யுத்தம் ஆரம்பமானதும் டொச்சர் இங்கிலாந்திற்கு தப்பிச்சென்று அங்கு
ஆங்கிலம் கற்று, அவரது சகதேசத்தவரான யோசப் கொண்ராட்
(Joseph Conrad) இற்கு சமமான பட்டம் பெற்றார். அங்கு அவர் பல ஆங்கிலப் பத்திரிகைகள்,
சஞ்சிகைகளுக்கு கட்டுரை எழுதலானார். அவரது ஸ்ராலினின் புத்தகம், திடீரென ஒரு முக்கிய புத்தகமாக
புகழ்ந்துரைக்கப்பட்டது.
டொச்சர் எழுதிய ஸ்ராலின் புத்தகம் உள்ளடக்கத்தில் அதன் தலைமைக்கு அரசியல்
வக்காலத்துவாங்கும் உண்மையைத் திரித்ததாகும். அவர் ஸ்ராலின் மார்க்சிசத்தை பாரியளவு திரிபுபடுத்தியதையும்,
அக்டோபர் புரட்சியின் கருத்துக்களை காட்டிக்கொடுத்ததையும், போல்ஷிவிக் கட்சியின் தலைவர்களை கொலை செய்ததையும்
மறுத்துரைக்கவில்லை. இவை அனைத்திற்கும் மேலாக டொச்சர், ஸ்ராலின் புரட்சியை குழிதோன்றிப் புதைத்தவர் என
ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதை நிராகரித்தார். இது ஒரு மிகைப்படுத்தல் என டொச்சர் கூறினார். ஸ்ராலின் வரலாறு
முரண்பாட்டினால் காட்டப்பட்டுகின்றது. போல்ஷிவிசத்திற்கு எதிராக எவ்வளவு குற்றச்செயல்களை அவர் செய்திருந்தாலும்
புறநிலைத் தேவையால் அதன் வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டு செல்ல நிரப்பந்திக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு
எதேச்சாதிகாரியாக இருந்தாலும் குறொம்வெல், ரொபஸ்பியர், நெப்போலியனின் பாரம்பரியத்தில் "ஒரு புரட்சிகர
எதேச்சாதிகாரியாகும்" என டொச்சர் எழுதிய பின்னர் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஸ்ராலினால் கடைப்பிடிக்கப்பட்ட
கொள்கைகளை டொச்சர் பின்வருமாறு விளங்கப்படுத்துகின்றார்.
"நாங்கள் இங்கு இரண்டு அரசியலை பார்க்கின்றோம். தேசிய, புரட்சிகர அரசியல்
இவை இரண்டும் சிக்கலான கால கட்டத்தில் மோதிக்கொண்டன. ஸ்ராலின், இவையிரண்டிற்கும் இடையே ஒரு சரியான
தெரிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கடைப்பிடித்தார். ஆனால் யுத்த காலத்தில் தேசியவாதிகளின்
கை ஓங்கியிருந்தபோது யுத்தத்தின் பின்னர் புரட்சிகர வாதிகளின் பலம்பெருகியது.
இந்த அபிவிருத்தியானது ஸ்ராலினின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய முரண்பாடுகளாக மிக
அதிக அளவில் முரண்பாடுகளை தொடர்ந்துகொண்டிருந்தது. 20 வருடங்களாக அவர் தனி ஒரு நாட்டின் சோசலிசத்தின்
மதிப்பு தொடர்பாக புகழ்ந்துரைத்து வந்ததுடன், சோசலிசத்தின் சுயபூர்த்தி குறித்து தீவிரமாக வற்புறுத்தி வந்தார்.
நடைமுறையில் அதை அனுசரித்து காட்டாவிடிலும் உலகப் புரட்சியை நோக்கி ரஷ்யாவினுடைய முதுகை காட்ட செய்தார்.
அல்லது ரஷ்யா அவரை புறமுதுகு காட்டச்சொல்லியதா? இப்போது அவரின் வெற்றியின் உயர்வில் நடைமுறையிலும் ஏறி,
அனுசரித்துகாட்டுவதிலும் அவரின் புகழ்ந்துரைக்கு அடிபணிய மறுத்தார். அவர் அவரின் சொந்த ஆயுதமாகிய ரஷ்யாவின்
சுயபூர்த்தியை கைவிட்டதுடன், சர்வதேச புரட்சிக்காக தனது நலன்களை புத்துயிர்ப்படைய செய்தார். போல்ஷிவிசம்
ஒரு சுற்று ஓடிமுடிந்துவிட்டு அதன் ஆரம்ப புள்ளிக்கு வந்து நிற்பதாக தோன்றியது. இதுதான் ஸ்ராலினின் வெற்றியின்
வித்தியாசமான இயங்கியலின் காரணமும் இது ட்ரொட்ஸ்கி இறந்த பின்னான நிகழ்ந்த வெற்றிக்கு காரணமுமாகும். ஸ்ராலின்
அவரது உழைப்பிலும், கடின வேலையிலும் அதாவது அவரின் சகல சதிகளும், கொள்கைகளும் அவரின் புகழை சேர்த்து
கொண்டபோதும் அவரின் இறந்த எதிர்ப்பாளரால் எதிர்பார்க்கப்படாத நிரூபணமாகும்"
(Stalin: A Political Biography [New York:
Oxford University Press, 1966], p. 552).
முரண்பட்டதுபோலிருந்ததும் இவ் உண்மைக்கு மாறான கண்டுபிடிப்புக்களை அழுத்திக் கூறுதல்
பிழையாக இயங்கியல் என கூறப்படுகின்றது. இது போலியானவைகட்கு குதர்க்கம் மட்டுமல்லாது, ஒரு கையிலுள்ளதை
மற்றகைக்கு எதிராக எடுத்துக்காட்டும் முட்டாள்தனமான திறமையே தவிர வேறொன்றும் அல்ல. மேலே விபரிக்கப்பட்ட
யுத்தத்திற்கு பின்னான ஸ்ராலினால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் ட்ரொட்ஸ்கியால் எடுத்துக்காட்டப்பட்டது போல்
மார்க்சிசத்தை பாரிய அளவில் திரிபுபடுத்தியது மட்டுமல்லாது உண்மை தகவல்களையும் திரிபுபடுத்தியதாகும். ஸ்ராலினின்
யுத்தத்திற்கு பின்னான கொள்கைகள் சோவியத் யூனியனின் எல்லைக்கு மட்டுமல்லாது வெளியேயும் கூட தொழிலாள வர்க்கத்தின்
எழுச்சிகளை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டதாகும். டொச்சர் இச் சுயசரிதையை எழுதுகையில், ஸ்ராலின் கிரீசில்
(Greek) புரட்சியை தோற்கடிக்க அவரால் செய்யக்
கூடிய அனைத்தையும் செய்ததைக்கூட கவனத்திற்கு எடுக்கவில்லைப்போல் இருக்கின்றது. எவ்வாறு இருந்தபோதும் யுத்தத்திற்கு
பின்னே சோவியத் யூனியனின் கொள்கை தேசிய நோக்கங்களுக்குள்ளாகவும், பெரிய சக்திகளுக்கு
(Great Powers) இடையான உடன்பாடுகளாலுமே ஆளுமைப்படுத்தப்பட்டிருந்ததுடன்,
இது போல்ஷிவிக்குகளின் சோசலிச சர்வதேசவாதத்திற்கு முற்றுமுழுதாக விரோதமானதாகும்.
டொச்சரின் எழுத்துக்கள், பப்பிலோவிற்கும், மண்டேலுக்கும் மேல் தனது ஆதிக்கத்தை
செலுத்தியிருந்து. ஸ்ராலினின் சுயசரிதையில் டொச்சரின் கருத்துக்களுக்கும் 1949-53க்கு இடையில் பப்லோ மண்டேலினால்
எழுதப்பட்ட ஆவணங்களுக்கும் இடையே ஒத்தகருத்துக்கள் இருந்ததை கவனிக்காமல் விடமுடியாது. உதாரணமாக டொச்சரின்,
ஸ்ராலினின் சுயசரிதையில் பின்வருமாறு கூறுகின்றது.
"ஸ்ராலினிச கருத்து -இதனை ஸ்ராலினின் கொள்கை என்றே அனுமானிக்க முடியும். சர்வதேசப்
புரட்சி என்பது ஒரு உலகளாவியது எனவும், இது முன்னைய முதலாளித்துவத்திற்கும், நிலப்பிரவுத்துவத்திற்கும் இடையேயான
முரண்பாடுபோல், முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாடாகும். அத்துடன் இது சகல புதிய
சமுதாயத்தில் இயற்கையாகவே உள்ளடங்கியுள்ளது. ஆனால் அவர்களின் போராட்டம் பரந்த வரலாற்று தத்துவார்த்த
அடித்தளத்தில் மட்டுமே தொடர்ந்து நடக்கும் ஒன்றாகும். இது இரண்டு எதிரெதிரான அமைப்புகளுக்கு இடையிலான யுத்த
மோதல் போல் அல்லது இரண்டு முரண்பாடான அமைப்புக்களும் சமாதானமான எதிரிகள் என்ற தன்மையைக்
கொண்டிருக்கும் ஒரு நீடித்த சமாதான உடன்படிக்கை போல் பல தலைமுறைகளை கடந்து வருடங்களுக்கு நீடிக்கக்
கூடும். (பக்-553)
பப்லோவின் "பலநூறுவருடங்கள் வாழக்கூடிய உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்"
என்பது முன்னர் கூறப்பட்ட அலங்காரமாக எடுத்துக்காட்டப்பட்ட முன்னோக்கின் கருநிலையான வெளிப்பாடாகும்.
டொச்சரின் கருத்துப்படி முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு செல்ல பலதலைமுறை நீடிக்கும் என்பதாகும்
இந்த மாற்றம் எல்லாவகை சாத்தியப்பாடுகளாலும், சோவியத் யூனியனுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையேயான நீடித்த
போராட்டத்தினால் ஒழுங்கமைக்கப்படும் என்பதாகும். டொச்சரின் ஸ்ராலின் சுயசரிதை வெளிவந்த அடுத்த மாதங்களில்
பப்லோவும் மண்டேலும் இந்தக் கருத்தை அடித்தளமாக கொண்டு தமது யுத்தமும் புரட்சியும் என்ற தத்துவம் என்று கூறிக்கொண்டதன்
கீழ் ட்ரொட்ஸ்கிசத்தின் உண்மையான திரிபுக்கு வழிவகுத்தனர்.
தொடரும்........
|