Letters and replies on anthrax attacks in the US
ஐக்கிய அமெரிக்க அரசுகளில் அந்த்ராக்ஸ் தாக்குதல் பற்றிய கடிதங்களும்
பதில்களும்
21 January 2002
Use
this version to print |
Send this link by email
| Email the author
"அமெரிக்க
அந்த்ராக்ஸ் தாக்குதல்களுக்கு இராணுவ உயிரி ஆயுத தொழிற்சாலையுடன் தொடர்பு" என்ற கட்டுரை
பற்றி, பல வாசகர்கள் விமர்சனங்களையும் கேள்விகளையும் அனுப்பியுள்ளனர். இது டிசம்பர்28, 2001 அன்று வெளியானது.
எமக்கு வந்த கடிதங்களையும் அதற்கு ஆசிரியர் அளித்த பதில்களையும் கீழே தருகிறோம்.
உங்களது சமீபத்திய கட்டுரையில், கடந்த 25 ஆண்டுகளாக எந்த நாடும் ஆயுத தர
அந்த்ராக்ஸ் தயாரித்ததாக ஒப்புக்கொள்ளவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள்.
ஒருவேளை இல்லாது இருக்கலாம். ஆனால் (Ken
Alibek) கென் அலிபெக் என்பவர் தனது
உயிரி ஆபத்து (Biohazard) என்ற
புத்தகத்தில் அவர் ரஷ்யாவில் அத்தகைய உற்பத்தியில் தன் சொந்த பங்கை பற்றியும் மற்ற பல நாடுகளும் இத்தகைய
தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
இப்படிக்கு
JM
28 டிசம்பர் 2001
இதற்கு பட்ரிக் மார்ட்டின் பின்வருமாறு பதிலளிக்கிறார்:
என்னுடைய கட்டுரையும் அலிபெக் புத்தகத்தின் கூற்றும் ஒன்றை ஒன்று முரண்படவில்லை.
1975-ம் ஆண்டு அமலுக்கு வந்த சர்வதேச கிருமிப்போர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அதில் கையெழுத்திட்ட
நாடுகள் ஆயுத தர அந்த்ராக்ஸ் -ஐ தயாரிக்கக்கூடாது என சர்வதேச சட்டதிட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
வல்லரசுகள் மற்ற அணுஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களை மீறி நடந்துள்ள விஷயங்கள் இருக்கிற அதேவேளை-- உதாரணத்திற்கு
இந்தியாவும் இஸ்ரேலும் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அல்லது கட்டுப்பட மறுக்கின்றன-- ஆனால்
கிருமி யுத்தத்துக்கு எதிராக உயிரியல் ஆயுதத்தை தயாரிக்க வல்ல அனைத்து நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
மற்றும் எந்த நாடும் இதை மறுக்கவில்லை.
அதன் காரணமாக அத்தகைய பொருட்களை "எந்த நாடும் தயாரிப்பதாக ஒப்புக்கொள்வதில்லை."
என்பது உண்மை. சந்தேகத்துக்கு இடமின்றி அத்தகைய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கவில்லை என்று நீண்டகாலமாய்
கூறப்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தின் எழுத்துக்களும் அதன் சாரமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்று அமெரிக்கா
கூறுவதில், டிசம்பரில் வெளியான பத்திரிகைச் செய்திகள் அமெரிக்க அரசாங்கம் பல ஆண்டுகளாக உலகத்திற்கு பொய்
சொல்லி வந்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.
சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சி சட்டவிரோதமான உயிரியல் ஆயுத ஆராய்ச்சியை
குறைந்த பட்சம் 1980களின் மத்தி வரை நடத்தியுள்ளது என அலிபெக்கின் புத்தகம் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும்
கோர்பசேவின் இறுதி ஆண்டுகளில் இந்த ஆய்வு நீடித்தது என்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை. சோவியத் ராணுவ
தொழில்நுட்பத் திறமை வேகமாக சரிந்து வந்துள்ளது. கடைசியில் சோவியத் யூனியன் 1991-ல் பொறிந்தது. அலிபெக்
தாமே முன்னாள் ஸ்ராலினிச அதிகாரியாக இருந்து, முதலாளியாக மாறி, பெரும் செல்வத்தை ஈட்டியவர்களுள் ஒருவராக
இருக்கிறார்.
அலிபெக் அமெரிக்காவில் குடியேறினார். அவருடைய புத்தகம்
Biohazard அதிகமாக விற்பனையாயிற்று. மேலும் வெர்ஜீனியாவில்
உள்ள அலெக்சாண்டிரியாவில் உள்ள உயிரியியல் ஆயுத ஆலோசனை வர்த்தகத்தை இலாபகரமாக நடத்தி வருகிறார்.
உலக சோசலிச வலைத்தள
கட்டுரையின் முடிவு சரியாய் இருக்கிறது: கேப்பிடல் ஹில்லுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தர அந்தராக்ஸ்
தாக்குதலுக்கு அமெரிக்க இராணுவ சோதனைக் கூடங்களே பெரிய அளவில் பெரும்பாலும் மூல காரணமாக இருக்கின்றன.
இது ஜனநாய கட்சியின் முக்கிய தலைவர்களை கொலை செய்வதற்கு அமெரிக்க இராணுவத்துக்குள் அல்லது அதைச்சுற்றி
மூலமாகக் கொண்டு எழுந்த ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
WSWS- க்கு,
டக்வே வேலைத்திட்டம் முதலில் பால்டிமோர் சன் (Baltimore
Sun) இதழில் டிசம்பர் 12-ல் வெளியிடப்பட்டது என்று உங்களது
கட்டுரை கூறுகிறது. உண்மை என்னவெனில் ஜுடித் மில்லர் (Judith
Miller அவரும் கூட அந்தராக்ஸ் கடிதத்தைப் பெற்றார்) இதனை
நியூயோர்க் டைம்ஸில் செப்டம்பர் 4 மற்றும் 5-ல் அறிவித்தார்.
DP
1 ஜனவரி 2002
பட்ரிக் மார்ட்டின் பதில்:
ஜுடித் மில்லரும் மற்றவர்களும் நியூயோர்க டைம்ஸில் வெளியிட்டிருந்த கட்டுரைகளில்
பல முக்கிய தகவல்கள் வெளியாயிருந்தன. ஆனால் டக்வே திட்டம் குறித்து இவை பல முக்கிய தகவல்களை மறைத்துவிட்டன.
செப்டம்பர் 4-ல் வெளியான மில்லரின் முதல் கட்டுரையில் அதிகாரிகள் அந்த "தொழிற்சாலையில் அந்த்ராக்ஸோ
மற்ற விஷ கிருமியோ ஒருபோதும் உற்பத்தி செய்யப்படவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்". இது முற்றிலும்
பொய்யானது என்று இப்போது நமக்குத் தெரியும்: டக்வே
தொழிற்சாலை விஷத்தன்மையுள்ள அந்த்ராக்ஸை உற்பத்தி செய்து அந்த அபாயகரமான பொருளை மெரிலாண்டில் உள்ள
டெட்ரிக் கோட்டைக்கு சுத்தப்படுத்தலுக்காக அனுப்பிவைத்தது. அப்பொழுதுதான் அந்த பாக்டீரியாவை அங்குள்ள
விஞ்ஞானிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் ஆய்வு செய்ய முடியும்.
டைம்ஸ் கட்டுரைகள் முன்னாள் டக்வே இயக்குநர் ஜேய்.சி.டேவிஸ் (Jay.C.Davis)
தந்த நேர்முகத்தை அடிப்படையாக கொண்டது. இவர் மில்லருக்கும்
ABC News நிருபர்களுக்கும் அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஒப்புதலோடு டக்வேயை
சுற்றிக் காண்பித்தார். மில்லர் அமெரிக்கப் பாதுகாப்பு துறையின் கூற்றையே கடமைதவறாமல் குறிப்பிட்டு
எழுதினார்: "டாக்கடர் டேவிஸூம் ஏனைய அதிகாரிகளும் பாதுகாப்புத் துறையின் சட்ட வல்லுநர்கள் இந்த செயல்திட்டம்
உயிரி ஆயுத ஒப்பந்தத்தையோ அமெரிக்க சட்டத்தையோ மீறவில்லை என உறுதிப்படுத்த கவனமாக மதிப்பீடு செய்திருந்தனர்.
அது முற்றிலும் பாதுகாப்புக்காகத்தான் என்றபடியாலும், விஷக் கிருமிகளை ஒருபோதும் தயாரிக்கவில்லை என்பதாலும்,
அது சட்ட பூர்வமானது மற்றும் பொருத்தமானது என்று, அவரும் ஏனையோரும் கூறினர்.
மேற்கூறிய சட்ட ஆலோசனைக்கான வாத மூலக்கூறு முற்றிலும் தவறானது. டக்வே
ஆய்வு பயங்கர விஷக் கிருமிகளை உற்பத்தி செய்தது. ஆகையால் உயிரியியல் ஆயுத ஒப்பந்தத்தை இது மீறியது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை Times & ABC செய்தியாளர்களை
அழைத்து அவர்களிடம் சம்பவங்களின் வடிகட்டப்பட்ட செய்தியை வழங்கியது. அது தவறான செய்தியை அளிப்பதற்கான
திட்டமிட்ட முயற்சியாகத் தெரிகிறது. அதனைப் பயன்படுத்தி இரு செய்தி ஊடகங்களும் அமெரிக்க அரசாங்கத்தின் பிரச்சார
வடிகுழாய் ஆக அவர்களின் நம்பிக்கைத்தன்மையை நிரூபித்தன.
அத்தகைய தவறான தகவல்கள் அனைத்திலும் பொய்யும் மெய்யும் கலந்திருக்கின்றன, அது
உண்மையில் மூடிமறைப்பாகும்பொழுது மற்றும் அதனை திறந்த நிலையில் வைத்திருப்பதுபோல் காட்டுதற்கு புதிய செய்திகள்
போதுமான அளவுக்கு சேர்க்கப்படுகின்றன. ஆகிய மூவரும் அன்றே வெளியான இரண்டாவது கட்டுரையில் மில்லர்,
வில்லியம்.எஸ்.புராட், ஸ்டீபன் எங்கெல்பேர்க் வெளிப்படுத்திய பிரதான புதுச் செய்திகள் வந்தன. அதில் முக்கிய பகுதிகள்
பின்வருமாறு:
"கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்கா உயிரியல் ஆயுதங்களை பற்றிய ஒரு ரகசிய ஆய்வுத்
திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இது சர்வதேச உடன்படிக்கையின் வரையறைகளை சோதிப்பதாக உள்ளது
என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர்."
"இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்த்ராக்ஸை விளைவிக்கும் மிக சக்திவாய்ந்த பாக்டீரியாவை
உள்ளுறை ஆற்றல் மிக்கதாகவும் மரபியல்ரீதியாகவும் வடிவமைக்க பென்டகன் திட்டங்களைத் தீட்டியதாக அதிகாரிகள்
கூறினர். இது கிருமிப் போருக்கு ஏற்றதாகும்.
"இலட்சக் கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டு
அத்தகைய பாக்டீரியாவுக்கு எதிராக சக்திமிக்கதாக இருக்கிறதா என விவரம் பெறக்கூடிய வகையில் பரிசோதனை
திட்டமிடப்பட்டிருக்கிறது. இது முதலில் ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. தேசியப் பாதுகாப்புச் சபை இந்த
மாதம் இறுதியில் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்ப்பதாக புஷ்ஷின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.
"போலிக் குண்டும் தொழிற்சாலையும் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் கிருமிகளைப்
போன்றே ஒத்து உள்ள தீங்கு விளைவிக்காத பொருட்களால் சோதனை செய்யப்பட்டன என்று அதிகாரிகள் கூறினார்..
"143 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச கிருமி ஆயுத உடன்படிக்கையை பலப்படுத்தும்
வரைவு ஒப்பந்தத்தை ஜனாதிபதி புஷ் நிராகரித்ததன் பின்னே உள்ள குறிப்படத்தக்க காரணம், இத்தகைய செயல் திட்டங்களை
இரகசியமாக வைத்துக் கொள்வதற்கான தேவை என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரை ஆசிரியர்கள், கிருமி யுத்த ஒப்பந்தத்தை நீடித்தலை புஷ் தடுத்தலுக்கும்
அமெரிக்க பென்டகனின் அந்த்ராக்ஸ் பாக்டீரியா பற்றிய மரபியல் பொறியியல் ரகசிய திட்டத்துக்கும் உள்ள அரசியல்
ரீதியான முக்கியத் தொடர்பை சுட்டிக்காட்டுகின்றனர். அந்த்ராக்ஸ் பாக்டீரியா பற்றிய மரபியல் பொறியியலை
மேலும் தொடர்வது பற்றிய முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என இவர்கள் கூறுகின்றனர். இது உண்மையாயும் இருக்கலாம்,
ஆனால் அது அதிக சக்தி வாய்ந்த மரபு தொழில்நுட்ப வழியில்லாத, ஆயுதத் தர பாக்டீரியாவை உருவாக்குதற்கான
சமமான அளவில் முக்கியத்துவமுடைய நடவடிக்கையில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகும். செனட்டர்கள்
டாஷ்லே மற்றும் லெஹி ஆகியோரின் (Daschle & Leahy)
அலுவலங்களுக்கு அனுப்பட்ட கடிதங்களில் இந்த பாக்டீரியாவே அடங்கியிருந்தது.
செப்டம்பர் 5-ந் தேதி அன்று மில்லர் அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு கட்டுரையில்
பின்வருமாறு Spurgeon.M.Kenney Jr. என்பவர்
நிர்வாகத்தை விமர்சிப்பதை மேற்கோள் காட்டுகிறார். இவர் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு அமைப்புக்கும்
1970 முதல் 1981 வரை துணை இயக்குநராக இருந்தார் மற்றும் அவர் ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் தலைவரும்
ஆவார். "நாம் செய்தோம் என்று கூறப்படுவதுபோல் வேறு எந்த நாடாவது செய்ததாகக் கண்டறியப்படுமானால்,
அனைவரும் அதை பயங்கரமான உடன்படிக்கை மீறல் என்றே கூறுவர், மற்றும் அது பொதுவான அர்த்தத்தில் உடன்படிக்கை
மீறலே ஆகும்" என்று அவர் கூறுகிறார்.
கீனியோ மில்லரோ "மற்றொரு நாட்டை" ப் பற்றி பெயர் கூறவில்லை. புஷ் நிர்வாகம்
சதாம் ஹூசைன்-ஐ சாத்தானாகவும், ஈராக் அரசு உயிரியியல் ஆயுதங்களை அபிவிருத்தி செய்ய முயல்வதாகவும்
பெருப்பித்துக் காட்டும் அமெரிக்கக் கொள்கையைத் தொடர்கின்ற அதேவேளையில், அமெரிக்க இராணுவமானது அத்தகைய
ஆயுதங்களைத் தயார் செய்யும் வெளிப்படையான சட்டவிரோதத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது என்பது இந்த
சான்றிலிருந்து தெளிவாகிறது.
முதலாவதாக இந்தக் கிருமி ஆயுதம் அயல்நாட்டு "எதிரி"க்கு எதிராகப் பயன்படுத்தப்படவில்லை,
மாறாக உள்நாட்டு அரசியல் இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
|